சுயமரியாதை
‘சுதந்திரம்’ , ‘சுயராஜ்யம்’, ‘உரிமை’ என்கின்ற வார்த்தைகள் தேச ஜனங்களுக்குப் பெரிய இழிவுக்கும், கொடுமைக்கும் ஆதாரமானவை தான். ஆதலால், நமது தேசம் உண்மையான உரிமை அடையப் பாடுபட வேண்டுமானால், மக்களின் சுயமரியாதைக்காகத்தான் முதலில் பாடுபட வேண்டும்.
குடி அரசு – 24.01.1926
இந்த உலகத்திலுள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு, ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தாலும் அழகும் பொருளும் சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய ‘சுய மரியாதை’ என்கிற வார்த்தைக்கு மேலானதாகவோ, ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த வார்த்தையானது, நமது நண்பர்களிலேயே சிலர், ‘கொள்கைகளிலெல்லாம் நமக்குப் பிடிக்கின்றன. ஆனால், சுயமரியாதை என்ற சொல் மாத்திரம் பிடிக்கவில்லை’ என்று சொல்லும் மேதாவிகளுக்குத் தக்க பதிலாகும்.
குடி அரசு – 01.06.1930
பெரியார் முழக்கம் 18082022 இதழ்