அண்ணாவின் அற்புத குணம்

நான் திமுகவுக்கு – அது தேர்தலில் வெற்றி பெரும் வரை அக் கழகத்திற்கு படு எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து மிக்கப் பெருந்தன்மையோடு நட்பு கொள்ள ஆசைப்பட்டு – என்னை அவர் பிரிவதற்கு முன் இருந்த மரியாதையுடன் நண்பராகவே நடத்தினார். அதன் பயனாக எனக்கும் மக்களிடையே அதிக மதிப்பு ஏற்பட்டதுடன், என் அந்தஸ்தும் அதிகமாயிற்று என்றுகூட சொல்லலாம். அதற்கு நான் கடமைப்பட்டவனாக இருக்க வேண்டியதும் என் கடமையாகிவிட்டது.

இதன் பயன் திமுகவை பகுத்தறிவுக் கழகமாகவே இருக்க உதவும் என்று நினைப்பதோடு, அண்ணா என்னிடம் காட்டிய அன்பும், ஆதரவும், அளித்த பெருமையும் திமுகவுக்குள் எந்தவிதக் கருத்து வேற்றுமையோ, கட்சி மனப்பான்மையையோ கழகத்திற்குள் புகுத்தி விடாமல் கழகம் பெருமையோடு விளங்கவும், மக்களுக்கு தொண்டாற்றவும் பயன்படும் என்று உறுதி கொண்டிருக்கிறேன். அதற்கேற்ற தன்மை களை அண்ணா தம்பிமார்களுக்கு ஊட்டியும் இருக்கிறார் என்பதில் அய்யமில்லை.

இப்படிப்பட்ட ஒரு அற்புத குணம் படைத்த அண்ணா முடிவானது தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் பரிகாரம் செய்ய முடியாத நட்டமேயாகும்.  – விடுதலை 03.02.1969

 

பெரியார் முழக்கம் 10032022 இதழ்

You may also like...