தமிழகத்தில் இரயில் பெட்டி தொழிற்சாலை தனியார் துறைக்குப் போகிறது
இரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்), சென்னையில் இருக்கிறது. இங்கே, கடந்த சில வாரங்களாக அமைதியற்றச் சூழல் நிலவுகிறது. கார்ப்பரேஷனாக மாற்றப் போகிறோம் என்ற பெயரில் தனியார் மயமாக்குவதற்கான முயற்சி நடப்பதாக தி.மு.க. அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வின் தொழிற் சங்கங்கள் உட்பட அத்தனை தொழிற் சங்கங்களும் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன. தனியார் ரயில்களுக்கு அனுமதி அளிப்பது, ஐ.சி.எஃப் உள்ளிட்ட ரயில்வேயின் முக்கிய உற்பத்திக் கேந்திரங்களை கார்ப்பரேஷனாக மாற்றுவது என்ற முடிவானது, மத்திய அரசின் 100 நாள் செயல்திட்டத்தின் முக்கியமான அம்சம். அதன்படி, டெல்லி – லக்னோ இடையே தனியார் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கி யுள்ளது. அடுத்து, டெல்லி – அகமதாபாத் இடையே தனியார் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது. இதையடுத்து உற்பத்திக் கேந்திரங்களை கார்ப்ப ரேஷனாக மாற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருவதாகவும் தகவல் வருவதால், பதறிக்கிடக்கிறார்கள் தொழிலாளர்கள். ‘‘தமிழகத்தின் பெருமையை தனியாருக்குத் தாரைவார்க்கத் துடிக்கிறார்கள்!’’ மேற்கு...
