Category: தலைமை அறிக்கை

‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ – மாவீரர் நாளில் நூல் வெளியீடு

‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ – மாவீரர் நாளில் நூல் வெளியீடு

புலியூரில் நடந்த மாவீரர் நாளில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ நூல் வெளி யீட்டு நிகழ்வு நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல் முருகன் வெளியிட கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். ‘நன்செய் பிரசுரம்’ குறைந்த விலையில் ரூ.10/-க்கு நூலை வெளியிட்டுள்ளது. நிகழ்வுக்கு 800 பிரதிகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. அனைத்து நூல்களுமே விற்றுத் தீர்ந்து விட்டன. வெளியீட்டாளர் கவிஞர் தம்பி நிகழ்வில் பங்கேற்றார். நூலைப் பெற : 9566331195 / 7373684049 பெரியார் முழக்கம் 02122021 இதழ்

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மூன்றாம் கட்டப்பயண விவரம்

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மூன்றாம் கட்டப்பயண விவரம்

கழகப் பணிகளை தீவிரப்படுத்தவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆராயவும், கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களை சந்திக்க சுற்றுப் பயணம் வருகிறார்கள். 01.12.2021 புதன்கிழமை : காலை 10.00 மணி: தர்மபுரி மாவட்டம் – மதிய உணவு, மாலை 4.00 மணி: கிருட்டிணகிரி இரவு தங்கல் 02.12.2021 வியாழக்கிழமை : காலை 10.00 மணி வேலூர் மாவட்டம் மதிய உணவு மணல் 06.00 மணி: சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்.) 03.12.2021 – வெள்ளிக்கிழமை : காலை 10.00 மணி: விழுப்புரம் மாவட்டம். மூன்றாம் கட்ட பயணம் நிறைவு. நான்காம் கட்ட பயண விபரம். 12.12.2021 – ஞாயிறு : காலை 10.00 மணி ஈரோடு தெற்கு மாவட்டம் – மதிய உணவு, மாலை 4.00 மணி: கரூர் மாவட்டம் தூத்துக்குடி. திருநெல்வேலி. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும் பெரியார் முழக்கம் 25112021...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ஜாதிவெறி சக்திகளுக்கு எதிராக நடிகர் சூர்யாவுக்கு கழகம் துணை நிற்கும்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ஜாதிவெறி சக்திகளுக்கு எதிராக நடிகர் சூர்யாவுக்கு கழகம் துணை நிற்கும்

சூர்யாவுக்கு எதிராக ஜாதி வெறியை தூண்டி வன்னிய மக்களை அவருக்கு எதிராக நிறுத்த முயல்கிறார்கள் சனாதன சக்திகள். உண்மையில் இது பழங்குடியின மக்களின் வலிகளை சொல்லும் ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஆதரவாக நிற்கும் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு எதிராக வன்னிய மக்களை திருப்பிவிட வேண்டும் என்ற பூநூல்கள் பின்புலத்திலிருந்து இயக்கும் வேலை. இதில் அன்புமணியும் தன் சுய நல அரசியலை செய்கிறார். நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் மூலம் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை வன்னிய சமுதாய மக்களின் ஆதரவு இல்லை என்கிற உண்மை நிலையால் எதையாவது செய்து தன்னை அரசியலில் முன்னிலைப்படுத்த முனையும் தந்திர முயற்சியே இது. தியேட்டரை கொளுத்துவேன் என்று சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் காடுவெட்டி குருவின் மருமகனுக்கு அக்னியில் பிறந்ததாக சொல்லப்படும் புராணக்கதை என்னவென்றுகூடத் தெரியவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லுவார் “ஜாதி என்பது ஒரு மனநோய்”. இவர்கள் மனநோயால் பிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை இயக்குவது பார்ப்பன...

கழகப் பொறுப்பாளர்கள் சுற்றுப் பயணம் தோழர்களுடன் சந்திப்பு – உரையாடல்

கழகப் பொறுப்பாளர்கள் சுற்றுப் பயணம் தோழர்களுடன் சந்திப்பு – உரையாடல்

கழகப் பணிகளை தீவிரப்படுத்தவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆராயவும், கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களை சந்திக்க சுற்றுப் பயணம் வருகிறார்கள். திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களின் கவனத்திற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020, 2021) கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் இணைய வழியில் மட்டும் நடைபெற்று வந்தன. ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இயக்க பணிகள் சுணக்கமாகி விட்டது. இதனைப் போக்கும் வகையில் மாவட்டம் தோறும் கழகப் பொருளாளர் மற்றும் அமைப்புச் செயலாளர், பரப்புரைச் செயலாளர், தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டத்தில் இயக்க செயல்பாடு மற்றும் கழக ஏடுகள் (புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம்) குறித்தும் தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். பொறுப்பாளர்களின் சுற்றுப்பயண நிகழ்வின் முதல் பட்டியல் வெளியிடப்படுகிறது. வரும் வாரங்களில்...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

*திராவிடர்* *விடுதலைக்* *கழக* *தோழர்களின்* *கவனத்திற்கு* தோழர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020 , 2021) கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் இணைய வழியில் மட்டும் நடைபெற்று வந்தன. ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இயக்க பணிகள் சுணக்கமாகி விட்டது. இதனை போக்கும் வகையில் மாவட்டம் தோறும் கழக பொருளாளர் , மற்றும் அமைப்பாளர் , பரப்புரை செயலாளர், தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் இயக்க செயல்பாடு மற்றும் கழக ஏடுகள் (புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம்) குறித்தும் தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். பொறுப்பாளர்களின் சுற்றுப்பயண நிகழ்வின் முதல் பட்டியல் வெளிடப்படுகிறது. வரும் வாரங்களில் மீதம் உள்ள மாவட்டத்திற்கான சுற்றுப்பயண விவர அறிக்கை வெளியாகும் *தலைமைகழக* *பொறுப்பாளர்கள்* *கலந்து* *கொள்ளும்* *கலந்துரையாடல்* *கூட்ட* *பயண* *விபரம்* *18.11.2021* . *வியாழக்கிழமை*...

“தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்”  – கழகப் பொதுச் செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அறிக்கை.

“தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்” – கழகப் பொதுச் செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அறிக்கை.

“தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்” – கழகப் பொதுச் செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அறிக்கை. இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மரக்காணத்தில் தொடங்கி வைத்திருக்கிறார். முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் மட்டும் இப்போது அமல்படுத்தப்பட இருக்கிறது. பிறகு மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையோடு இணைத்து மதச் சாயம் பூச நினைப்பது முற்றிலும் தவறான பார்வை. இரண்டு திட்டங்களிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்காக இதுவும் மற்றொரு புதிய கல்வி கொள்கை என்பது சரியான கருத்து அல்ல. இரண்டிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகிற நோக்கங்களே வேறு. புதிய கல்வி கொள்கையின் கீழ் தன்னார்வலர்கள் என்பவர்கள், பள்ளி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவதற்கு உரிமை வழங்கப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி பள்ளிகளுக்கு வெளியே முறை சாரா கல்வியை கற்பிக்கிற உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தன்னார்வலர்கள்...

கலப்பு திருமணம் ஜாதி சான்றிதழ் – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி. க்களுக்கு கொளத்தூர் மணி கோரிக்கை

கலப்பு திருமணம் ஜாதி சான்றிதழ் – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி. க்களுக்கு கொளத்தூர் மணி கோரிக்கை

கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் ஜாதி அல்லது தாயின் ஜாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு ஜாதி சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் கூட அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற உத்தரவுகள் நாடு முழுவதும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் கலப்புத் திருமணம் புரிந்தோர் தங்கள் வாரிசுகளுக்கு ஏதேனும் ஒரு ஜாதி சான்றிதழ் பெற்று வருகின்றனர். ஆனால் மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு செல்லும் இடங்களில் ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பின் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சார்ந்த அஞ்சன் குமார் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, அவருடைய சான்றிதழ் சரிபார்ப்பில் அவருடைய தாயாரின் ஜாதி அடிப்படையில் எஸ்டி ஜான்றிதழ் பெற்றிருந்தபோதும், அவருடைய தந்தை பிற்படுத்தப்பட்டவர் என்பதால் இந்த ஜான்றிதழ் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 2006...

பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை

பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை

० பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ० தமிழ்நாட்டு அரசின் கவனத்திற்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அறவியலுக்குரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் ०००० இரண்டு நாட்களாக மயிலாடுதுறையில் நிகழ்ந்திடும் சம்பவங்கள்தாம் அவை.. தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? என்ற தலைப்பில் 19 9 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் உரையாற்றியவர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் அவர்கள் ஆவார்கள் அந்த உரையில் தமிழ்த்தேசியம் என்ற பெயரால் திராவிட எதிர்ப்பு என்பதையும், பெரியார் எதிர்ப்பு என்பதையும் ஓங்கிப் பேசியவர்களில் முதன்மையானவர்களான தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ மணியரசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் ஆகியோரது உரைகளுக்கு விடையளித்தும் மேலும் தேவையான விளக்கங்களளித்தும் உரையாற்றியிருந்தார்.. வட இந்தியாவில் சங்கிகள் நடத்தையை அப்படியே மறு வார்ப்பாக இங்கு செய்து...

பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி

பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி

கழகத் தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு : பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்து அமையப் போகும் எதிர்கால தமிழ்நாட்டின் இலக்கினை அடையாளம் காட்டிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி செலுத்துகிறோம். —– பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழியைக் கீழே கொடுத்துள்ளோம். —– “ஜாதி, மத அடையாளங்களைக் காட்டி பாகுபாடு காட்டுவது, பெண்களின் உரிமைகளை மறுத்து அடக்கி ஒடுக்குவது, அறிவியலுக்கு எதிரான சடங்குகளை, நம்பிக்கைகளை – பண்பாட்டுப் பெருமைகளாக பேசி வளர்ச்சிக்கான சிந்தனைகளை முடக்குவது, ஒன்றியத்தை ஒற்றை ஆட்சியாக மாற்றி அமைப்பதற்கு தமிழ்நாட்டின் கல்வி, பொருளாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல், அரசியல் உரிமைகளை பறிப்பது, சமஸ்கிருத பண்பாட்டைத் தேசிய பண்பாடாக மாற்றுவது” உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைளும் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைப்பதே ஆகும். இம்முயற்சிகளை முறியடிக்க பெண்கள் ஆண்கள் அடங்கிய இளைய சமூகத்தை அணிதிரட்டி சமூக நீதியை நோக்கி...

கறுப்பு ஜூலை ! தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு !

கறுப்பு ஜூலை ! தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு !

*கறுப்பு ஜூலை !* தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு ! – திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் *கொளத்தூர் மணி அறிக்கை !* இலங்கையில் 1983-ல் நடைபெற்ற இந்த மறக்கவியலா வரலாற்று பேரவலமான தமிழர்கள் மீதான அழிப்பு நடவடிக்கையின் 37 ம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஆண்டுகள் இத்தனை கடந்தாலும் அன்று தமிழர்கள் மீது நடந்தப்பட்ட கொடூர தாக்குதல்கள்,ஈவு இரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் நினைவுகள் ஆறாத வடுக்களாக இன்னமும் உலகத் தமிழர் மனதில் ஆழமாய் பதிந்து இருக்கிறது. ஒவ்வொரு வருடம் ஜூலை மாதமும் கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் அளவிற்கு இலங்கையின் சிங்கள பேரினவாதத்தின் கோர தாக்குதல் குறித்து இத்தலைமுறையும் அறிந்து கொள்வது அவசியம். தற்போதைய சூழலை மட்டும் கருத்தில் கொண்டு ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மேலோட்டமாக பார்க்காமல் அதன் வரலாற்று பின்னணி, விடுதலைப் போராட்டத்தின் தேவை, ஆயுதம் தாங்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை...

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் !  – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் ! – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் ! – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !* RSS தலைவர் மோகன் பகவத் என்பவர் 22.07.2021 அன்று மதுரை வருவதையொட்டி மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சார்பில் சில முன்னேற்பாடுகளுக்காக பிறப்பித்த குறிப்பாணை  ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது. அரசு அதிகாரியின் இந்த செயல் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்குள்ளானது. பெரியாரிய, முற்போக்கு இயக்கங்கள் இந்த குறிப்பாணையைப் பிறப்பித்த அதிகாரியை மிக வன்மையாக கண்டித்தன. கடும் எதிர்ப்பின் காரணமாக உடனடியாக மதுரை மாநகராட்சியின் சார்பில் ஆணைக்கான ஒரு அவசர விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆணை தமிழ்நாட்டு முதல்வர் நேரடி பார்வையின் கீழ் பிறப்பிக்கப்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்றாலும் இந்த ஆணைக்கு எதிரான கொந்தளிப்பான சூழலை உடனடியாக கவனத்தில் கொண்ட தமிழ்நாட்டு அரசு உடனடியாக தலையிட்டு இந்த ஆணையைப் பிறப்பித்த...

*சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…*  *இட ஒதுக்கீடு மீறல்கள்…*  *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்*  *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்*

*சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…* *இட ஒதுக்கீடு மீறல்கள்…* *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்* *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்*

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைந்து ஐஐடியில் கடைப்பிடிக்கப்படுகின்ற சாதிய தீண்டாமை கொடுமைகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகமும் பங்கேற்கின்றது. தோழர்கள் வாய்ப்புள்ள இடங்களில் தவறாது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொறுப்பாளர்களின் தொடர்பு எண்கள் இணைக்கப் பட்டுள்ளன. விவரங்களுக்கு தோழர்கள் அந்தந்த பகுதி பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொளத்துர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். *சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…* *இட ஒதுக்கீடு மீறல்கள்…* *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்* *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்* ஐ. ஐ. டி யை சனாதனத்தின் பிடியில் இருந்த மீட்க 5.7.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை உள்ளிட்ட இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து ஐ. ஐ. டி களிலும் இட ஒதுக்கீட்டை முறையாக...

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு !

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு !

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு ! நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளது. அக்குழு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளது.கருத்துக்கள் சென்று சேர கடைசி நாள் நாளை 22.06.2021 நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினரிடம் கருத்து தெரிவிக்க விரும்புவோர் கீழ்காணும் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : neetimpact2021@gmail.com – திராவிடர் விடுதலைக் கழகம், 21.06.2021 ——————————————— நீட் தேர்வு ஏன் வேண்டாம்? 12 ஆண்டுகளாக பள்ளிகளில் பயின்று ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்துள்ள மாணவர்களின் எந்த ஒரு தேர்வும் மதிக்கப்படாமல் நீட் என்ற பெயரால் எழுதும் வடிகட்டும் ஒற்றை தேர்வை மட்டும் அளவீடாக கொண்டு முடிவு செய்வது நியாயமானதல்ல. பள்ளிகளில்...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு

தலைமைக் குழு – 20.06.2021. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம் 20.06.2021 ஞாயிறு மாலை 5 மணிக்கு இணையம் வழியாக நடைபெற்றது. தலைமை குழுவிற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள், இணையதள செயல்பாடுகள் குறித்து பொதுச் செயலாளர் அவர்கள் அறிமுக உரையாற்றினார். நடைபெற்ற தலைமைக் குழுவில் திமுக அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திமுக அரசு நடைமுறைப் படுத்த முயற்சிக்கும் சமூக நீதி திட்டங்களான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், தமிழர் வேலைவாய்ப்பு உரிமை, 7 தமிழர் விடுதலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு இவற்றிற்கு ஒன்றிய பாஜக அரசும், ஆதிக்க பார்ப்பன சக்திகளும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இடையூறுகள் குறித்து பேசப்பட்டது. கோயில் நிலங்கள் மீட்பு நடவடிக்கை. ஈழத்தமிழ் ஏதிலியர்களுக்கான கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கியமை, நீட் பாதிப்புகளை ஆய்வு செய்ய...

அரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !

அரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !

*அரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை !* *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம் !* *குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வடியுறுத்தல் !* இது குறித்து *கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை :* அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் 08.04.2021 அன்று சாதிவெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் தலித் இளைஞர்கள் அர்ஜுனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்றுபேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலை ஒட்டிய பரப்புரையில் நடந்த தகராறுகளை காரணம் காட்டியும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்த காரணத்திற்காகவும் பாமக மற்றும் அதிமுகவினர் இணைந்து தலித் இளைஞர்கள் மீது நடத்திய இந்த கொடூர தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தலித் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று தங்களுக்கான அதிகாரத்தை நோக்கி பயணிப்பதை சகிக்க முடியாத ஆதிக்க மனநிலை கொண்ட ஜாதி வெறியர்கள் சனாதன ஜாதி அமைப்பின் கொடூர வன்ம மனநிலையுடன் இக் கொலையை...

திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருச்சி 06032021

திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருச்சி 06032021

06.03.2021 சனிக்கிழமை, திருச்சி மாநகர் இரவி மினி அரங்கில் காலை 10 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1) தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வழமையாக வந்து போகும் தேர்தலாக இல்லை ! ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டின் திராவிட அடையாளத்தையும் அழித்து மதவெறி- மனுவாத மண்ணாக மாற்றுவதற்கு தனது சகல அதிகாரங்களையும் – சூழ்ச்சிகளையும் பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு படை எடுப்பையே நடத்தி வருகிறது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் தொடங்கி படிப்படியாக வளர்த்தெடுத்த சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவுக் கொள்கைகளை அழிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன; தமிழ்நாட்டையும் வடமாநிலங்களைப் போல் ஆக்கிவிட்டால், இந்துத்துவம் என்ற மனுவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்றி விட முடியும் என்பதே அவர்களின் திட்டம் ; இந்த ஆபத்தான படை எடுப்புக்கு, ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் துடிக்கும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி தமிழினத்திற்கு துரோகம்...

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு !

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு !

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு ! 06.03.2021 – திருச்சி கழகத் தோழர்களுக்கு, வணக்கம். எதிர்வரும் 06.03.2021 சனிக்கிழமை காலை சரியாக 10-00 மணிக்கு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினிஹால் அரங்கில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவை, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலும், பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. பொருள்: 1) கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு 2) இயக்க ஏடுகள் பரப்பல் 3) அடுத்த காலாண்டு செயல்திட்டங்கள் 4) மாவட்ட பயிற்சி வகுப்புகள் செயலவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல், உரிய நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் 01.03.2021

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக! நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் அவ்வாறே தீர்மானம் நிறைவேற்ற வழிவகுத்திடுக! தமிழக, இந்திய அரசுகளுக்கு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கோரிக்கை ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் பிப்ரவரி 22 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் 23இல் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. சிறிலங்காவில் அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகள், சமய அமைப்புகள், சிவில் சமூகம், குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் ஆகியவை இணைந்து சனவரி 15ஆம் நாள் உறுப்பரசுகளுக்கு எழுதிய கூட்டு மடலில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. சிறிலங்கா செய்த இன அழிப்புக் குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், போர்க்குற்றங்கள் மீதான புலனாய்வு செய்வதற்கு உள்நாட்டுப் புலனாய்வை ஏற்க முடியாதென்று அறிவித்து, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்ய புதிய தீர்மானமொன்றை உறுப்பரசுகள் நிறைவேற்ற  வேண்டும்...

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்.. தோழர் தா.பா முடிவெய்திவிட்டார். தா.பாண்டியன் அவர்களின் கம்பீரமான குரல் இன்று மவுனித்துவிட்டது. கடந்தகாலத் தலைமுறையில் மிக மூத்த பொதுவுடமைத் தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். தன்னுடைய 88 ஆவது வயதில் முழுவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக சிறுநீரக தொற்றால் அவதிக்குள்ளாகி, டையாலிசிஸ் சிகிச்சையில் இருந்தார். ஆனாலும் அவர் பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவே இல்லை. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பெரியார் இயக்கம், பொதுவுடமை இயக்கம் இரண்டும் சேர்ந்து பயணிக்க வேண்டும். வர்க்க பேதம், வர்ண பேதம் இரண்டுக்கும் எதிரான ஒரு மக்கள் அணி திரட்டல் இந்த நாட்டில் உருவாக்க வேண்டும் என்று அவர் பொதுவுடமை மேடைகளிலும் பேசினார், பெரியார் இயக்க மேடைகளிலும் பேசினார். இட ஒதுக்கீட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், முதன்முதலில் பிற்படுத்தப்பட்டோர்...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றாலே ‘ஊபா’ சட்டத்தை ஏவுவதா? கழகத் தலைவர் கண்டனம்

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றாலே ‘ஊபா’ சட்டத்தை ஏவுவதா? கழகத் தலைவர் கண்டனம்

கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே வனப்பகுதியில் கேரள போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்ப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகம் என்பவர் கொல்லப்பட்டார். அவரது உடல் சொந்த ஊரான கணவாய்புதூரில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது.  அந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக தோழர்கள் சிலர் மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் தமிழக அரசு வழக்குப் பதிவு செய்தது. அவர்கள் மீது மாவோயிஸ்ட்டுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது. இந்நிலையில் சேலத்தில் 07.02.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் பாலன் (41), தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட தலைவர் சீனிவாசன் (66) இருவரும் தீவட்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகளால் அடக்குமுறை ‘ஊபா’...

முள்ளிவாய்க்கால் நினைவகம் இடிப்பு:  கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவகம் இடிப்பு: கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட் டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக ஆணையிட்டு இரவோடு இரவாக இடித்துத் தள்ளியதை  திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பல்லாயிரம் தமிழர்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்து முடித்தது. போராளிகள் மட்டுமல்ல பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் படுகொலைக்கு உள்ளானார்கள். சொந்த மக்களை பலி கொடுத்ததன் நினைவாக தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தைக் கூட சட்ட விரோதமானது என்று அறிவிக்கிறது இலங்கை அரசு. தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, தாயக உரிமை, தமிழ்தேச உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி 2008இல் மாபெரும் நிகழ்வாய் நடந்த  பொங்கு தமிழ் பிரகடன நினைவு கல்வெட்டு 2018இல் நினைவுத் தூணாக மாற்றி அமைக்கப்பட்டு அன்றைய துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது....

கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள் தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்

கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள் தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்

தமிழ்நாட்டை உ.பி., ம.பி., இராஜஸ்தான் போன்ற மற்றொரு மாநிலமாக்க பா.ஜ.க. சூழ்ச்சிகரமான திட்டங்களை தேர்தல் களத்தில் உருவாக்கி வருவதை கழகத் தலைமைக் குழு கவலையுடன் பரிசீலித்தது. உள்ளூர் மட்டத்தில் மக்களை நேரடியாக சந்தித்தும் துண்டறிக்கை வெளியீடுகள் வழியாக கருத்துகளைப் பரப்புவதுமான பரப்புரைத் திட்டங்களை வகுப்பது குறித்தும் தலைமைக்குழு பரிசீலித்தது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைமைக் குழுக்கூட்டம் 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ஈஸ்வரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். இயக்கத்தின் ஏடுகள், போராட்ட திட்டங்கள், அரசியல் நிலவரங்கள், துணை அமைப்புகளின் செயல் பாடுகள், மாவட்ட நிர்வாக அமைப்புகளில மாறுதல்கள், கழகத் தோழர்களை சந்திக்கும் நிகழ்வுகள், சமூக வலைத் தளங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது. 1)    கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் காரணமாக வேறு வழியின்றி இடைநிறுத்தம்...

தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன்,மற்றும் தோழர் கோ.சீனிவாசன் ஆகியோர் ஊபா (UAPA) வழக்கில் கைது !  கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன்,மற்றும் தோழர் கோ.சீனிவாசன் ஆகியோர் ஊபா (UAPA) வழக்கில் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் *பாலன்*,மற்றும் தோழர் *கோ.சீனிவாசன்* ஆகியோர் *ஊபா (UAPA) வழக்கில் கைது !* கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்!* பாஜக – அதிமுக அரசுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து ஆள்தூக்கி சட்டங்களை கொண்டு பொய் வழக்குகளை புனைந்து கைது செய்து சிறையில் அடைக்கும் அதே வேளையில், சமூக விரோதச் செயல்களில், பெரும் வன்முறைகள், கொலைக் குற்றங்களில தொடர்ந்து ஈடுபட்டுவரும் சங்பரிவார தீவிரவாதிகளைக் கண்டும் காணாமலும் இருந்து வருவதாக குற்றச்சாட்டு ! கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே வனப்பகுதியில் கேரள போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்ப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகம் என்பவர் கொல்லப்பட்டார். அவரது உடல் சொந்த ஊரான கணவாய்புதூரில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தகனம் செய்யப்பட்டது அந்த...

தோழர் பொழிலன் நூலுக்குத் தடை ! கிரிமினல் வழக்குகள் பதிவு ! திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம்

தோழர் பொழிலன் நூலுக்குத் தடை ! கிரிமினல் வழக்குகள் பதிவு ! திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம்

*தோழர் பொழிலன் நூலுக்குத் தடை !* கிரிமினல் வழக்குகள் பதிவு ! *திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !* நூலின் மீதான தடையை நீக்கவும், தோழர் பொழிலன் மீதான வழக்குகளை திரும்ப பெற தமிழக அரசை வலியுறுத்தி கழக *பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அறிக்கை !* தோழர் பொழிலன் அவர்கள் எழுதிய வேத வெறி இந்தியா எனும் நூலுக்கு தமிழக அரசு தடை விதித்து பொழிலன் மீது பல வேறு கிரிமினல் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அஇஅதிமுக ஆட்சியா? அல்லது ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்களின் வேத ஆட்சியா ?என்று சொல்லுகிற அளவிற்கு மிக மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது.இது மிகச்சிறந்த ஒரு ஆய்வு நூல். வேதங்களின் காலம், வேதங்களின் உள்ளடக்கம், பழந்தமிழ் இலக்கியங்களில் வேதங்கள், சைவர்கள் வேதத்தை எதிர்த்தது ஏன் ?, ஆரியச் சார்பு ஆய்வாளர்களாக இருந்த பரிமேலழகர்,பாரதியார் சித்பவானந்தர் போன்றவர்கள் வேதம்...

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !*  – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !* – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !* – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !* தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு விழாவாகக் கொண்டாட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. ஏற்கனவே தமிழ்நாடு அரசும் கடந்த ஆண்டு தனது தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு நாளைக் கொண்டாட முடிவு செய்து அரசாணை வெளியிட்டு இருந்தது. கர்நாடகம், காஷ்மீரம், ஆந்திரம் போன்ற பல மாநிலங்கள் இப்படிப்பட்ட விழாவை தங்கள் மாநிலத்திற்கு என்று தனிக்கொடி அமைத்துக்கொண்டு கொண்டாடுவதைப் போல தமிழ்நாடும் கொண்டாடவேண்டும் என்று விரும்பி அதற்கென தமிழ்நாட்டின் ‘வரைபடத்தைக் கொண்ட ஒரு தற்காலிக கொடியினையும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அறிமுகம் செய்திருந்தது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை சுட்டிக்காட்டியும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படவும், தங்கள் மாநிலத்தின் சமூகம்,...

தமிழ்நாடு விழா – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

அனைவருக்கும் வணக்கம். ஒரு சில செய்திகளை உங்கள் அனைவரின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இவ்வறிக்கையை  எழுதுகிறோம். தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் ஒன்றாம் தேதியை ‘தமிழ்நாடு விழா’வாகக் கொண்டாட வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தீர்மானித்து அதன் அடிப்படையில் அதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு அரசும், கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் எழுச்சியோடு கொண்டாடுவது போல தமிழ்நாட்டிலும் கொண்டாட வேண்டும் என்று கருதி அதற்கென்று தமிழ் பண்பாட்டு துறையின் சார்பில்  தமிழ்நாடு விழா நடத்துவதற்காக 10,00, 000 ரூபாய்களை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டிருந்தது. அவ்வரசாணையைக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசுக்கு, மாநில உரிமை பற்றிய சிந்தனையோடு இவ்வாறான ஆணையை பிறப்பித்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்திருந்தோம். பாராட்டு தெரிவித்தும், தமிழ்நாடு விழாவை கொண்டாடுவதற்கு ஒரு தற்காலிக கொடியினை உருவாக்கி இருக்கிறோம் என்பதையும், தமிழ்நாடு அரசு ஏதேனும் ஒரு புதிய கொடியினை அறிமுகப்படுத்தினால் அதனை ஏற்று செயல்பட அணியமாய் இருக்கிறோம் என்பதையும்...

மனுசாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஆதரவு !

*விடுதலை சிறுத்தைகள்* நாளை (24.10.2020) நடத்தும் *மனுசாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஆதரவு !* *கழகத்தோழர்கள்* இந்த ஆர்ப்பாட்டத்தில் *கலந்து கொள்ள* வேண்டுமாய் கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி வேண்டுகோள் !* அன்பு தோழர்களுக்கு, வணக்கம். தற்போதைய அரசியல் சூழலில் நாம் முன்னெடுக்க வேண்டிய பல போராட்டங்களுக்கு பாரதிய ஜனதா கட்சிக்காரர்களும், பார்ப்பனிய, பார்ப்பனிய அடிமை இந்துத்துவாதிகளும் வழியமைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் *மதிப்பிற்குரிய தோழர் திருமாவளவன்* அவர்கள் மனுசாஸ்திரம் குறித்து ஆற்றிய உரையின் ஒரு பகுதியை வெட்டி உருவி எடுத்து, அதை வைத்துக்கொண்டு கேவலமான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார்கள். மனு சாஸ்திரத்தில் இல்லாத எது ஒன்றையும் அவர் பேசி விடவும் இல்லை.அவர் எவ்வகையிலும் பெண்களை இழிவுபடுத்தி பேசி விடவும் இல்லை.என்றபோதிலும் இந்த ஆணவக் கூட்டம் ஆடை அவிழ்வதும் தெரியாமல் ஆட்டம் போடுகிறார்கள். இந்த ஒரு நல்வாய்ப்பை முன்வைத்து...

இணையம் வழியாக கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல்கள்

இணையம் வழியாக கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத சூழ்நிலையால், தலைமைக் குழு மற்றும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் ‘Team Link’ வாயிலாகவே நடைபெற்றது.  30.06.2020 அன்று காலை 10:30 மணியளவில் தலைமைக் குழு நடைபெற்றது.  அதைத் தொடர்ந்து மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்,  12.07.2020 –  ஈரோடு தெற்கு மாவட்டம், 14.07.2020 –   சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு மாவட்டங்கள், 19.07.2020 –  திருப்பூர் மற்றும் கோவை, 21.07.2020 –  தர்மபுரி மற்றும் கிருட்டிணகிரி, 23.07.2020 –  வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, 26.07.2020 –  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், 28.07.2020 –   திருச்சி, பெரம்பலூர், அரியலூர், 29.07.2020 –  தஞ்சாவூர், நாகை, 30.07.202 –  மதுரை, சிவகங்கை மாவட்டங்கள், 31.07.2020 –  நாமக்கல், ஈரோடு வடக்கு மாவட்டம், 02.08.2020 –   தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி, 09.08.2020 –  தென் சென்னை, வடசென்னை ஆகிய தேதிகளில் கழகத் தலைவர்,...

வாசகர்களுக்கு

வாசகர்களுக்கு

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 19, 2020-க்குப் பிறகு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளிவர இயலவில்லை. 8.10.2020 முதல் மீண்டும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தனது பயணத்தைத் தொடங்குகிறது.                         – ஆசிரியர்

சுயமரியாதை வீரர் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார் !*  *திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

சுயமரியாதை வீரர் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார் !* *திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

*சுயமரியாதை வீரர் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார் !* *திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !* கோபி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிநாள் தொண்டரும், அழுத்தமான சுயமரியாதைக்காரருமாகிய மதிப்பிற்குரிய *அண்ணன் கோபி வெங்கிடு அவர்கள் முடிவெய்தினார்* என்ற செய்தி தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் வேதனை தரும் ஒன்றாகும். தன்னுடைய நகைச்சுவை நிறைந்த பேச்சுக்களாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தும் உரைகளாலும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்களை இசை தவறாமல் பாடும் ஆற்றலினாலும் திராவிட இயக்கக் கொள்கைகளை தமிழகமெங்கும் பரப்பிய சிறப்பு அவருக்கு உண்டு. தனது சட்டமன்ற உறுப்பினர் பதவிக் காலம் முடிந்த பின்னால் தன்னுடைய சிறிய கடையில் அமர்ந்து வணிகம் செய்யவும் தயங்காத ஒரு மாமனிதர், எளிமையின் அடையாளமான அம் மானமிகு சுயமரியாதைக்காரருக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புகழ் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறோம். தனது அனைத்து குடும்ப...

விநாயகர்சதுர்த்தி – தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும் தடையை மீறும்இந்து முன்னணி ! தடுத்து நிறுத்த கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி வேண்டுகோள்!

#விநாயகர்_சதுர்த்தி – தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும் #தடையை_மீறும்_இந்து_முன்னணி ! #தடுத்து_நிறுத்த கழகத் தலைவர் தோழர் #கொளத்தூர்_மணி_வேண்டுகோள்! —————————————————– அன்பு தோழர்களுக்கு, வணக்கம். நம் முன் உள்ள ஒரு உடனடிக் கடமையினை சுட்டிக்காட்டவே இந்த அறிக்கையை எழுதலானேன். கடந்த 13.08.2020 அன்று அரசின் செய்தி வெளியீடு 583 இன் வழியாக நாட்டில் நிலவும் கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டும், தடுப்பு நடவடிக்கையாய் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டியும் 22.08.2020 சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி எனும் நிகழ்வையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதையோ, விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்துவதையோ, நீர்நிலைகளில் கரைப்பதையோ அனுமதிக்க இயலாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளதோடு, வீடுகளிலேயே இந்நிகழ்வினை நிகழ்த்திக் கொள்ளுமாறு தமிழக அரசு சமூக அக்கறையோடு அறிவித்திருந்தது. ஆனால் அறிவிப்பு வந்தவுடன் அதற்கு எதிர்வினையாக இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்பிரமணியம் என்பவர் “நாங்கள் தடை ஆணையை மீறி ஒன்றரை இலட்சம் சிலைகளை...

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் ! ___________________________________ அன்பார்ந்த தோழர்களே! வணக்கம். நேற்று (22-7-2020) கோவை மாவட்டம், அன்னூரில் பெரியாரிய இயக்கத் தோழர்களும், ஜனாயக சக்திகளும் இணைந்து முன்னெடுத்த ஒரு போராட்டம், நம்மைப் போன்ற முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த தோழர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது. என்னதான் நடந்தது? அன்னூருக்கு அருகிலுள்ள நல்லி செட்டிப் பாளையம் எனும் ஊரைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் சண்முகநாதன் என்பவர் மோடி குறித்தும் கந்தசஷ்டிக் கவச சிக்கல் குறித்தும் முகநூலில் பதிவிட்டிருந்தார் என்பதற்காக இந்து அமைப்பினர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனே, அன்னூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்றினைப் பதிவு செய்து 21.07. 2020 அன்று மாலை அத்தோழரைக் கைது செய்துள்ளனர். அதேவேளையில் பெரியார் குறித்து மிகக்கேவலமாக முகநூலில் பதிவுகளைப் போட்டுள்ள அன்னூர்...

கறுப்பர் கூட்டம் கைது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

கறுப்பர் கூட்டம் கைது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

கறுப்பர் கூட்டம் கைது குறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை ! கருத்துரிமைக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசுக்குக் கடும் கண்டனம் ! இந்துத்துவவாதிகள்,கருத்துரிமைக்கு எதிராக தொடர்ந்து நடத்திவரும் ஆபத்தான அராஜகப் போக்கை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் ! திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை ! இந்திய ஒன்றியத்தின் ஆட்சிப் பொறுப்பில் பாஜக அமர்ந்த பின்பு பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவும் ஒரே நோக்கோடு பல்வேறு வகைகளில் மாநில உரிமைகளைப் பறிப்பது, பார்ப்பனரல்லாத மக்களின் கல்வி உரிமை வேலைவாய்ப்புரிமை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு உரிமை என ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. அந்தவகையில் மிக முக்கியமாக கருத்துரிமைக்கு எதிராக இந்துத்துவவாதிகளின் கடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அரசியல் சட்டப் பிரிவு 51A (h) வழியாக அடிப்படை கடமையாகக் கூறியுள்ள அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், ஆய்வு...

பெரியார் சிலை அவமதிப்பு -கழகத் தலைவர் நாளிதழ் பேட்டி

பெரியார் சிலை அவமதிப்பு -கழகத் தலைவர் நாளிதழ் பேட்டி

பெரியார்_சிலை_அவமதிப்பு, #கந்த_சஷ்டி_கவசம் குறித்த சர்ச்சை குறித்து கழகத் தலைவர் #தோழர்_கொளத்தூர்_மணி அவர்கள் 18.07.2020 அன்று நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள #பேட்டி : “தமிழகத்தில் அண்மைக்காலங்களில் திருவள்ளுவர் சிலைக்கு காவி துணி கட்டுவது, பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பத்திரிக்கையில் பணிபுரியும் பெண்களை இழிவு படுத்தி பேசுவது, ஹைகோர்ட்டாவது மயிராவது என்று கோர்ட்டை அவமதிப்பது ஆகியவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவர்கள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்வதில்லை; செய்தாலும் கைது செய்வதில்லை. ஆனால் கடந்த ஜனவரி மாதம் கந்தசஷ்டி கவசத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தை படித்து வீடியோ பதிவிட்ட வரை ஆறு மாதங்கள் கழித்து தேடிப்பிடித்து கைது செய்கிறார்கள். இதன் நோக்கம்தான் என்ன? நடவடிக்கை எடுத்தால் அனைவர் மீதும் சரிசமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்த சஷ்டியைப் படித்தவர் ஒன்றும் அதில் இல்லாததை படிக்கவில்லையே? அதிலுள்ள ஆபாச வார்த்தைகளை மதம் என்ற பெயரில் மக்கள் மீது திணிக்கப்படுவதைத்...

இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

18-7-2020 இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை கொரோனாவின் வருகை. வரலாற்று வளர்ச்சிப் போக்கை விரைவுபடுத்தியுள்ளது. அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டியவர்களாக தமிழ் மக்களாகிய நாமும் உள்ளோம். கொரோனா ஏற்படுத்தும் அரசியல் பொருளியல் சங்கிலித் தொடர் நிகழ்வுகளால் எழப்போகும் போராட்டங்களும் கொரோனா போலவே உலகெங்கும் பரவுவது திண்ணம். மென்மேலும் மக்கள்திரளின் காலமாக எதிர்காலம் விரிகிறது. ஆயினும் அந்த மக்கள்திரளின் கருத்தை அறிவதற்குத் தேர்தல் வழியாக அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெயராளர்களின் கருத்தையே இன்றைய பன்னாட்டுலக அரசுகள் கோரி நிற்கின்றன. இது அரசியலில் ஒரு குடியாட்சிய மரபாக வளர்ந்து வந்திருக்கக் காண்கிறோம். ஒற்றையாட்சி அரசமைப்புக்கு உட்பட்ட நாடாளுமன்றத்திற்கான இடங்களைப் பிடிப்பதால் இலங்கைத் தீவுக்குள் ஈழத் தமிழர்களுக்கு பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், இலங்கைத் தீவுக்கு வெளியே பன்னாட்டரங்கில் தமிழர்களின் வேணவாக்களை...

கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு

கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு

“கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு பற்றி #திராவிடர்_விடுதலைக்_கழகப் #பொதுச்செயலாளர் #விடுதலை_இராசேந்திரன்” “YouTube channel ஒன்றின் மீது, பாஜக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது. “இந்த channel ஹிந்து கடவுள்களின் புனிதத்தை கெடுக்கிறது; கடவுள்களுக்கு பாலியல் விளக்கங்களை அளிக்கிறது; இது மதத்தின் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குகிறது” என்று அந்த புகார் கூறுகிறது. தமிழ்நாடு காவல்துறையின் cyber crime, இது குறித்து விசாரித்து, 5 பிரிவுகளின் கீழ், அந்த youtube channel மீது வழக்குகளை பதிவு செய்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஜாதி, மதம், இனம், மொழி சம்மந்தமாக விரோத உணர்வை தூண்டுகின்ற 5 பிரிவுகள் இந்த வழக்குகளாகும். உண்மையில் இந்த youtube channel என்ன செய்திருக்கிறது? ஹிந்து கடவுள்களுக்கான பல்வேறு புராணங்களில், 1. ஹிந்து கடவுள்களின் பிறப்புகள், 2. அவர்களின் அவதார மகிமைகள், 3. சடங்கு ஆச்சாரங்களுக்கு ஹிந்து புராண நூல்களில் கூறப்படுகின்ற விளக்கங்கள் இவற்றை அந்த நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்… – – – – – – – – – – – – – முதல் அமர்வு – – – – – – – – – – – – – சூலை 17, 18, 19 (வெள்ளி, காரி, ஞாயிறு – மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 வரை) கருத்தரங்கம் 1 (சூலை 17) ————————- தலைப்பு: மநு நூலும் வேத புராண சாஸ்திரங்களும் தமிழருக்கு எதிரானவை.. தலைமை: தோழர் கோவை கு. இராமக்கிருட்டிணன் கருத்துரையாளர்கள்: பேராசிரியர் வீ அரசு தோழர் குடந்தை அரசன் தோழர் நிலவழகன் கருத்தரங்கம் 2 (சூலை 18) ————————- தலைப்பு: ஆரியப் பார்ப்பனியம் ஏன் எதிர்க்கப்பட வேண்டியது.. தலைமை: தோழர் வாலாசா வல்லவன் கருத்துரையாளர்கள்: தோழர் இரா.அதியமான் பேராசிரியர் கருணானந்தம் வழக்கறிஞர் அருள்மொழி கருத்தரங்கம் 3...

ஊடகத்துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்! #SaveJournalismfromBrahmanism

ஊடகத்துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்! தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டுகால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர்கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான்.  பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலைபற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்…. “வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவைப் பற்றிய செய்திகளைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி தான் ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாகத் திகழ்கிறது என்று தான் எண்ணுவார்கள். தலித் மக்கள் உட்பட அனைவரின் பிரதிநிதியாக காங்கிரஸ் கட்சியைத்தான் கருதுவார்கள். இதற்கு முக்கியக் காரணம் தலித் மக்களுக்கென்று தனியாக ஒரு ஊடகம் இல்லை. காங்கிரஸின் கருத்துக்களுக்கு மாற்றான உண்மைகளை எழுத பட்டியலின மக்களிடம் பத்திரிகைகள் எதுவுமே...

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

*திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு தீர்மானங்கள் :* திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழுக் கூட்டம் 30.06.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் டீம் லிங்க் செயலி வழியாக நடைபெற்றது. தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழுக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன், அன்பு தனசேகர், சூலூர் பன்னீர்செல்வம், உமாபதி, மடத்துக்குளம் மோகன், அய்யனார், இளையராஜா, காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைக் குழுக் கூட்டம் காலை 10.30 மணி அளவில் துவங்கி மதியம் 2 30 மணி வரை நடைபெற்றது. கழக அமைப்பின் இணையதள செயல்பாடுகள், கருத்தரங்குகள், கொரோனா பேரிடர் காலத்தில்...

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் ! மக்கள் பணியில் உயிர்நீத்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் அளித்துள்ள இரங்கல் செய்தி : திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவருமான ஜெ.அன்பழகன் இன்று மரணமடைந்துவிட்டார்.கொரானோ தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். கடந்த சில வாரங்களாக கட்சியின் தலைமை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உணவுப் பொருள்களை வழங்குகிற உதவிகளை செய்துவந்தது. “ஒன்றிணைவோம் வா” என்ற பெயரில் செயல்பட்ட அத்திட்டத்தில் தீவிரமாக பங்கேற்று செயலாற்றி வந்தார் ஜெ.அன்பழகன். 1995ம் ஆண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அவர். மருத்துவர்கள் ஆலோசனையை மீறி பொது தொண்டாற்ற வந்தார் அவர். பொதுத்தொண்டின் வழியாக கிடைக்கின்ற மரணம் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய மரணம்தான். இந்த மரணம் அவருக்கும்...

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம் – கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கடும் கண்டனம்

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம் – கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கடும் கண்டனம்

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம், திராவிடர்விடுதலைக் கழகம் கடும் கண்டனம். இந்த சட்டவிரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களுக்கு திவிக முழு ஆதரவு ! இது குறித்து திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை : விகடன் பத்திரிக்கை குழுமம் 170 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. கொரோனா காலத்தில் வாழ்க்கை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு இப்படி ஒரு பேரதிர்ச்சியை விகடன் குழு கொடுப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. 1947ம் ஆண்டு தொழில் தகராறு சட்டப்படி இது சட்ட விரோத நடவடிக்கையாகும். கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு ஒரு தாக்கீதை பிறப்பித்திருந்தது இந்த ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு நிறுவனமும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கக் கூடாது என்பதோடு அவர்களை...

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!

“புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!” – கூட்டறிக்கை – 16.05.2020 புலம்பெயர்தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தக் கூடாது! சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்! தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலத்தை ஏற்படுத்தக் கூடாது! சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள்,கட்சிகளின் கூட்டறிக்கை! பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொணா துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.கடந்த 50 நாட்களாக அவர்கள் கைக்குழந்தைகளுடன் வெறுங்கால்களிலும் சொந்த ஊர் நோக்கி நடந்தே செல்லும் காட்சிகளைப் பார்த்து வருகிறோம். கொரோனா பேரிடரின் போதும் பெருமுதலாளிகளுக்கு 68,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்யும் நடுவண் அரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்வதற்கு போக்குவரத்தைக்கூட ஏற்பாடு செய்யாமல் மிக மோசமாக புறக்கணித்தது. முதல்சுற்று ஊரடங்கு அறிவிப்பின்போதே தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே செல்லும் தொழிலாளர்களைக் காப்பாற்ற நடவடிக்கை...

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க! – கூட்டறிக்கை – 16-5-2020

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க! – கூட்டறிக்கை – 16-5-2020

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க! – கூட்டறிக்கை – 16-5-2020 புலம்பெயர்தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தக் கூடாது! சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்! தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலத்தை ஏற்படுத்தக் கூடாது! சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள், கட்சிகளின் கூட்டறிக்கை பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொணா துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 50 நாட்களாக அவர்கள் கைக்குழந்தைகளுடன் வெறுங் கால்களிலும் சொந்த ஊர் நோக்கி நடந்தே செல்லும் காட்சிகளைப் பார்த்துவருகிறோம். கொரோனா பேரிடரின் போதும் பெருமுதலாளிகளுக்கு 68,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்யும் நடுவண் அரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்வதற்கு போக்குவரத்தைக்கூட ஏற்பாடு செய்யாமல் மிக மோசமாக புறக்கணித்தது. முதல்சுற்று ஊரடங்கு அறிவிப்பின்போதே தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே செல்லும் தொழிலாளர்களைக்...

அய்யா பெ.மணியரசன் அவர்களுக்கு, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பதில்

அய்யா பெ.மணியரசன் அவர்களுக்கு, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பதில்

*அய்யா பெ.மணியரசன் அவர்களுக்கு, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பதில் !* கடந்த மே மூன்றாம் நாள், புலிகள் – திராவிட முன்னேற்ற கழகம் என்ற எதிரெதிர் விவாதங்கள் குறித்து, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இப்படிப்பட்ட தேவையற்ற தரம் தாழ்ந்த விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று கூறி விடுக்கப்பட்ட அறிக்கையின் சில வரிகள் மீதான கேள்விகளை எழுப்பி, தோழர் – மன்னியுங்கள் – அய்யா மணியரசன் அவர்கள், “கொளத்தூர் மணியும், சுப.வீ.யும் பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா?” என்ற தலைப்பில் நீண்டதொரு அறிக்கையை எழுதியுள்ளார். இறுதிப்பகுதியில் சில கேள்விகளையும் நம்மை நோக்கி வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை எதிர்க்கின்ற அளவுக்காவது மோடி ஆட்சியை, இதுவரை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆவேசத்தோடு எதிர்த்ததுண்டா? அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது. இதுதான் பாஜக எதிர்ப்பு கூட்டணியா? தோழர் கொளத்தூர் மணி கட்சி, பாஜக மதவாத எதிர்ப்பு வேலைத்...

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் – கழகத் தலைவர் கோரிக்கை

தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களின் அறிக்கையை முழுதுமாக நானும் ஏற்றுக் கொள்கிறேன் தமிழ் நாட்டினை வன்கொடுமை மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு எனது ஒப்புதலை அளிக்கிறேன். வன்கொடுமைப் புகார்களை அளிப்பதற்கு வாய்ப்பாக ஓர் புகார் எண்ணை அறிவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன். கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் 11-5-2020   தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களுடைய அறிக்கையோடு நானும் கீழ்க்கண்ட செய்தியினை அரசின் கவனத்திற்கும், காவல்துறைத் தலைமையின் கவனத்திற்கும், பொதுமக்களின் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன். பவானியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளமதி என்ற பெண்ணும் கவுந்தப்பாடி யைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த செல்வன் என்பவரும் அவர்கள் இருவரின் முழு சம்மதத்தோடு கொளத்தூரை அடுத்த காவலாண்டியூரைச் சேர்ந்த திரு ஈஸ்வரன் அவர்கள் தலைமையில் 9-3-2020 அன்று திருமணம் செய்து கொண்டார்கள். செய்தியறிந்த பெண்ணின் குடும்பத்தினரும் அவர்களுக்குத் துணையாக ஏறத்தாழ நாற்பது ஐம்பது அடியாட்களும் வந்து திருமணத்தை...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இணையவழியில் ஆர்ப்பரித்து முழக்கமிடத் திட்டம்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு இணையவழியில் ஆர்ப்பரித்து முழக்கமிடத் திட்டம்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – 2 – 5 – 2020 -அன்று இணையவழி நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் நடுவக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: கொரானா நோய்த்தொற்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற நெருக்கடிச் சூழலில், எரிகிற வீட்டில் பறிப்பது ஊதியம் எனக் கொள்ளை அடிக்கிற கொடூரனைப் போல இந்திய அரசு மொழித் தேச மாநில உரிமைகளையெல்லாம் பறித்துக் கொண்டு போவதைப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வகையில் எல்லாம் இந்திய அரசின் மாநில உரிமைகளைப் பறிக்கும் போக்கைக் கண்டித்து எதிர்வரும் 9-5-2020 -ஆம் நாள் `பறிக்காதே! பறிக்காதே! மாநில உரிமைகளைப் பறிக்காதே!! கொரானா தாக்கிடும்...

புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர்  எதிர்விவாதங்கள் குறித்து…….

புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர் எதிர்விவாதங்கள் குறித்து…….

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அறிக்கை……. புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர்  எதிர்விவாதங்கள் குறித்து……. அன்பார்ந்த தோழர்களே, வணக்கம். கடந்த சில நாட்களாக புலிகள் – திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிர் எதிர் விவாதங்கள் சமூக வலைதளங்களில் மிகுந்து காணப்படுகின்றன. ஒரு பக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் இறுதிப்போரின் போது ஈழத் தமிழர்களை வஞ்சித்து விட்டது என்பதான புலிகள் ஆதரவு வாதங்களும்,இன்னொரு பக்கம் புலிகள் தான் அநியாயமாக ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்பதாக ஒரு பக்கமும் செயற்கையான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விவாதங்களில் சில கடுஞ் சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.இரு தரப்பாரும் தங்கள் நிலையை அல்லது தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்வதற்காக வரம்பு கடந்து சில வாதங்களை வலிந்து முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரின்போது இந்திய அரசே நினைத்திருந்தாலும் போரினை நிறுத்தியிருக்க முடியாது.மேற்கத்திய வல்லரசுகள் நடத்திய போர்...

ஈழச்சொந்தங்களுக்கு உதவுங்கள்.

ஈழச்சொந்தங்களுக்கு உதவுங்கள்.

அன்புடையீர் வணக்கம். ஈழச்சொந்தங்களுக்கு உதவுங்கள். “இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள” கும்மிடிபூண்டி, புழல் ஆகிய இடங்களில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் வாடி வரும் சொந்தங்களின் பசியாற்றுவதற்கான வேண்டுகோளை முன்வைக்கிறோம். தங்களின் நாட்டிற்கும் செல்ல இயலாமல், முகாமில் வாழும் மக்கள் இந்திய, தமிழக அரசினால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் சூழலில் பேரிடியாக வந்த கொரோனா தொற்றால் மேலும் நிலைகுலைந்துள்ளனர். 80 சதத்திற்கு மேலானவர்கள் தினக்கூலிக்கு செல்லும் தொழிலாளர்களாக இருப்பதாலும், கடந்த 36 நாட்களுக்கு மேலாக வருமானமில்லாத தாலும் அவர்களின் மிகவும் இக்கட்டான சூழலை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர். கும்மிடிப்பூண்டி முகாமில் பதிவு செய்யப்பட்ட 900 குடும்பங்களும், பதிவு செய்யப்படாமல் 170 குடும்பங்களும், புழல் முகாமில் பதிவு செய்யப்பட்ட 215 குடும்பங்களும், பதிவு செய்யப்படாமல் 125 குடும்பங்களும் இருக்கின்றன. பதிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டைக்கு உள்ள பொருட்களை அரசு கொடுத்தாலும் அது முழுமையாக பற்றாததும், காய்கறிகள் வாங்குவதற்கு பணம்...

பட்டியலின மக்களுக்கு மட்டுமான தலைவரா #அம்பேத்கர்? – தோழர் கொளத்தூர் மணி

பட்டியலின மக்களுக்கு மட்டுமான தலைவரா #அம்பேத்கர்? – தோழர் கொளத்தூர் மணி

#அவசியம்படியுங்கள்.. பட்டியலின மக்களுக்கு மட்டுமான தலைவரா #அம்பேத்கர்? – #தோழர்_கொளத்தூர்மணி தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசே அறிவித்தப்பின்னாலும், இன்று தமிழ் புத்தாண்டு என்று அனைத்து தொலைக் காட்சிகளிலும் அறிமுகபடுத்திக் கொண்டிருக்கிற இந்த ஏப்ரல் 14 இல், அம்பேத்கரை நினைவு படுத்தி பேசுவதற்காக அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கூடியிருக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறாந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளார் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஓர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிற வாய்ப்பினை பெற்றார். அங்குபோய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங்களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத்துறையில் பட்டங்களை பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக அல்ல. இந்த இந்திய சமுதாதாயத்தை திருத்த...

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் !  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து …..

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் ! கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து …..

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி* அவர்கள் *தமிழக முதலமைச்சருக்கு கடிதம் !* *கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ………..* *10.04.2020* மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக சில செய்திகளை உங்கள் பரிசீலனைக்கு முன்வைக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறோம். கொடூரமான கொரோனோ தொற்றுக்காக மக்களுக்கு சிகிச்சை அளிக்க, நோய்ப் பரவலைத் தடுக்க, பாதுகாக்க அரசு முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு எமது பாராட்டுகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம். நோய்த் தொற்றுப் பரவாமல் இருக்க, உள்ளடங்கி இருப்பதுவும் பாதுகாப்பு இடைவெளியோடு இருப்பதுவும் தேவை என்பதைப் பரவலாக பரப்பி அதற்காக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது முடியும் நிலையில் நாம் இருக்கிறோம். ஒருவேளை நடப்பு நிலை கருதி மேலும் ஒருமுறையோ, சிலமுறையோ இந்த ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்ற நிலையில்தான் அதுகுறித்த சில முன்மொழிவுகளை உங்கள் முன் வைப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறோம். ஊரடங்கு காலத்தில் உணவுப்...