Category: பெரியார் முழக்கம்

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக! 0

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக!

மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ள நடுவண் அரசு- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை மட்டும் வெளியிடாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது. இந்த உண்மைகள் வெளியே வந்தால் பார்ப்பன உயர்ஜாதி – ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி நிற்கும் உண்மை அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் உண்மையான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைகள் வெளிவரும் போதுதான் அவர்களுக்கு சமூக நீதிக்கான இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றிட முடியும் என்பதால், ஜாதிவாரி கணக்கீட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்த செயற்குழு வற்புறுத்துகிறது. – செயலவைத் தீர்மானம் பெரியார் முழக்கம் 23072015 இதழ்

எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்! மீண்டும் தொடங்குகிறது, பரப்புரை இயக்கம்! 0

எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்! மீண்டும் தொடங்குகிறது, பரப்புரை இயக்கம்!

தர்மபுரி செயலவையில் ஜாதி எதிர்ப்பு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை வலியுறுத்தி பரப்புரை இயக்கத்தைத் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. தீர்மான விவரம்: தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. அவர்களின் வேலை வாய்ப்புகள், அரசுத் துறைகளில் வெகுவாகக் குறைந்து விட்டன. தாராளமயக் கொள்கையால் பெருகிவரும் பெரும் தொழில் நிறுவனங்களில் இவர்களின் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் சட்டங்கள் வர வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த கால அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, அதன் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் ஏற்றுக் கொண்டிருந்தாலும் செயல்படுத் தாமல் புறந்தள்ளிவிட்டது. பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுதான் நிலம் வழங்குகிறது.தண்ணீர், மின்சாரம் இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த விலையிலோ வழங்கப்படு கின்றன. பங்கு மூலதனங்கள் வழியாக மக்கள் பணம் மூலதனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு இந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்ய அரசு சட்டம் இயற்றுவதற்கு முழுமையான அதிகாரமும் நியாயமும் இருக்கிறது....

காவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள் 0

காவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள்

தமிழ்நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகள் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, ஜாதிவெறி சங்கங்கள் இதைத் தூண்டிவிட்டு, நியாயப்படுத்தியும் வருகின்றன. நடுவண் ஆட்சி, இந்த ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் ஒன்றை இயற்றிட – மாநில அரசுகளிடம் கருத்துகள் கேட்டுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இது குறித்து ஏதும் கருத்து கூறாது அலட்சியம் காட்டுகிறது.தமிழ்நாடு அரசே, ஒரு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை. அண்மையில் கோகுல்ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரி, தலை துண்டிக்கப்பட்டு ஜாதி ஆணவக் கொலைக்கு பலியாகியுள்ளார். இந்தக் கொலையில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான யுவராஜ் என்பவர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், அவர் தலைமறைவாக இருந்துகொண்டு, தனது குற்றச் செயலை நியாயப்படுத்தி காவல்துறைக்கு சவால்விட்டு பேசியது, ‘வாட்ஸ் அப்’ வழியாக பரப்பப்பட்டு வருகிறது.ஜாதி ஆணவக் கொலைகளில் காவல்துறையின் இந்த அலட்சியத்துக்குக் காரணம், அதில் ஊடுருவி நிற்கும் ஜாதிய மனநிலைதான் என்பதை வருத்தத்துடன் சுட்டிக்...

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை 0

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 19.7.2015 காலை 11 மணியளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்தது.கழகத் தோழர் கிணத்துக்கடவு நிர்மல் குமார்,கடவுள்,ஆன்மா மறுப்பு கூற, மாவட்டக் கழக சார்பில் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்த பரமசிவம் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டக் கழகத் தோழர் சரவணன்,நெல்லை மாவட்டத் தலைவர் குறும்பலபேரிசு. வடிவேலு (3.11.2014), தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் க.மதன் (16.4.2015), மதுரை கைவண்டி கருப்பு, கழக ஓவியர் மேட்டூர் சாதகப் பறவை சேகர், கரூர் இராஜா ஆகியோர் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், செயலவை முன் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள், கழக செயல் பாடுகளை விளக்கி தொடக்க உரையாற்றினார்.பின்னர், மாவட்ட வாரியாக தோழர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஈரோடு வடக்கு – நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு – சண்முகபிரியன், சேலம்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

அசைவ உணவுக்கு அனுமதித்து பூஜைகளை தடை செய்யும் அய்.அய்.டி.கள் இந்து மதத்துக்கு எதிராக செயல்படுகின்றன.- ஆர்.எஸ்.எஸ். குற்றச்சாட்டு அப்ப, அய்.அய்.டி.களை இந்து அறநிலையத் துறை அதிகாரத்துக்குக் கீழே கொண்டுவந்து, ஓர் அவசர சட்டம் போட்டுடுங்க. கோயில் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை எதிர்த்து இராம. கோபாலன் போராட்டம். – செய்தி புரோகிதர்கள் ‘தட்சணை’ வாங்குவதையும் இதுல சேர்த்துக்குங்க… பா.ம.க., பா.ஜ.க. கூட்டணிக்கு வர வேண்டும்.- பா.ஜ.க. தலைவர் தமிழிசை இது என்ன பிரமாதம்! நாளைக்கே அன்புமணிதான் முதல்வர்ன்னு அறிவியுங்கள்; ஓடி வந்துடுவாங்க. முஸ்லிம்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளில் கட்சிகள், பிற அமைப்புகள் பங்கேற்க ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு. – செய்தி ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம் பிரிவான ‘ராஷ்டிரிய மஞ்சின்’ நடத்திய நோன்பு திறப்பில் டில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பங்கேற்றார்களே, அநேகமாக அந்த நிகழ்ச்சியில்தான் இப்படிப் பேசியிருப்பாங்கபோல! உப்பிலியப்பன் கோயிலில் உரிய மரியாதை தரவில்லை என்று தரிசனம் செய்யாமல் வெளியேறிய வானமாமலை ஜீயரிடம் அதிகாரிகள் மன்னிப்பு....

மேட்டூரில் தொடர் கூட்டங்கள்.

மேட்டூரில் தொடர் கூட்டங்கள்.

மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழக சார்பில் மேட்டூர் அணைப் பகுதியில் ஜூலை 4 முதல் 19ஆம் தேதி வரை பெரியார் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன. ஜூலை 4 – காவேரி பாலம் (தலைமை – பிரகாசு) 5 – குள்ள வீரன்பட்டி (தலைமை – பெ. சக்திவேல்) 7 – பொன்னகர் ( தலைமை – இர. பூவழகன்) 9 – ஆஸ்பத்திரி காலனி (தலைமை – பொன்.தேவராசு) 11 – பாரதி நகர் (தலைமை – மே.கா.கிட்டு) 12 – வீரபாண்டிய கட்டபொம்மன் (தலைமை – மா.கதிரேசன்) 14 – நேரு நகர் (தலைமை – அ. அண்ணாதுரை) 16 – மசூதித் தெரு (தலைமை – மார்ட்டின்) 18 – காவேரி நகர் (தலைமை – சி. கோவிந்தராசு) 19 – மாதையன்குட்டை (தலைமை – மா. பழனிச்சாமி) கூட்டங்களில் கோபி....

மேட்டூர் கழக மூத்த ஓவியர் சேகர் முடிவெய்தினார்.

மேட்டூர் கழக மூத்த ஓவியர் சேகர் முடிவெய்தினார்.

மேட்டூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மூத்த ஓவியர் சந்திரசேகர் (எ) சேகர் கடந்த 1.7.2015 அன்று உடல்நலம் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் முடிவெய்தினார். இவருக்கு வயது (54). மேட்டூரில் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு, வளர்ந்து வந்த நிலையில் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கழகம் வளர்வதற்கு இவரின் சுவரெழுத்தும், தட்டி விளம்பரமும் முழு வீச்சாக அன்று இருந்தது. குறிப்பாக கடவுள் கதைகள், வேதங்களில் வரும் கடவுள் தொடர்பான கடவுள் கதைகளுக்கேற்ப கார்ட்டூன்கள் வரைவதில் திறமையானவர். அந்த காலகட்டங்களில் இவர் வரையும் கடவுள் கார்ட்டூன்கள் அடங்கிய தட்டி பிரச்சாரம் மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு பரபரப்பை உண்டாக்கும். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், தமிழ் பிரபா, தமிழ் நிலா என்ற இரு மகள்களும் உண்டு. கழகப் பொறுப்பாளர்களும், கழகத் தோழர்களும் கழகச் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 16072015 இதழ்

கைவண்டி கருப்பு முடிவெய்தினார்.

கைவண்டி கருப்பு முடிவெய்தினார்.

எப்போதும் கருஞ்சட்டையுடன் காட்சியளிக்கும் உழைக்கும் தோழர் மதுரை கைவண்டி கருப்பு (75), 12.7.2015 அன்று காலை முடிவெய்தினார். திராவிடர் கழகத்தில் தொடங்கி, திராவிடர் விடுதலைக் கழகம் வரை பெரியார் தொண்டராகவே வாழ்ந்தவர். அவர் பொள்ளாச்சியில் வாழ்ந்த காலத்தில் எப்போதும் சுமை இழுக்கும் கைவண்டியுடன் உழைத்ததால் கைவண்டி கருப்பு என்று பெரியாரால் அழைக்கப்பட்டவர். கழக நிகழ்ச்சிகளில் தமது துணைவியாரோடு பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் மதுரை மஞ்சள்மேடு குடியிருப்பில் தனது இல்லத்தில் முடிவெய்தினார். கழக சார்பில் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 16072015 இதழ்

சிறப்பு கட்டுரை-சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம் என்ன நடக்கிறது, ‘அய்.அய்.டி.’களில்? – விடுதலை இராசேந்திரன் 0

சிறப்பு கட்டுரை-சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம் என்ன நடக்கிறது, ‘அய்.அய்.டி.’களில்? – விடுதலை இராசேந்திரன்

‘சூத்திரர்’ கல்வி உரிமையைப் பறித்தது ‘மனுசாஸ்திரம்’. எனவே, அம்பேத்கரும் பெரியாரும் அதை எதிர்த்தனர். மக்கள் வரிப் பணத்தில் இயங்கும்- அய்.அய்.டி.கள். இந்தத் தலைவர்களின் சிந்தனை களுக்கே அய்.அய்.டி. வளாகத்துக்குள் தடை போட்டன. ‘மனுதர்மமே’ அய்.அய்.டி. ஏற்றுக் கொண்ட தத்துவம் என்பதே இதற்கான அர்த்தம். இதுகூட ஒரு கண்ணோட்டத்தில் வரவேற்க வேண்டியது தான். இல்லையேல் தமிழ்நாட்டில் அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள், மார்க் சிஸ்டுகள், மாவோயிஸ்டுகள் ஒரே களத்தில் கரம் கோர்க்க நல்ல வாய்ப்பை உருவாக்கியிருக்குமா? ‘அய்.அய்.டி.’ என்பதற்கு மற்றொரு பெயர் எப்போதும் வலம் வந்து கொண்டிருக்கும் – “அய்யர், அய்யங்கார், உயர்கல்வி நிறுவனம்”. வசிஷ்டர் படிப்பு வட்டம், வந்தே மாதரம் படிப்பு வட்டம், இராமாயண படிப்பு வட்டம், விவேகானந்தர் படிப்பு வட்டம், துர்வாசர் படிப்பு வட்டம் என்று வளாகத்தை வேத மயமாக்குவதற்கு அனுமதித்தவர்கள் – அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டத்தை மட்டும் அனுமதிக்க மறுத்தது. சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் மீது...

‘பூப்பெய்தும்’ சடங்குக்கு மாற்றாக…

‘பூப்பெய்தும்’ சடங்குக்கு மாற்றாக…

இந்து ‘கலாச்சாரம்’ திணித்த பெண்ணடிமை பண்பாடுகளில் ஒன்று வயதுவந்துவிட்ட பெண்களுக்காக நடத்தப்படும்‘பூப்பெய்தும்’ விழா என்பதாகும். ஒரு பெண் வயதுக்குரிய பருவத்தை எட்டுவது, இயல்பாக ஏற்படும் உடலியல் மாற்றம். இதை ஏன் ஊருக்கு அறிவிக்கும் விழாக்களாக நடத்த வேண்டும்? இதேபோல் ஆண் பிள்ளைகளுக்கு ஏன் நடத்து வது இல்லை? சென்னையில் பல பகுதிகளில் இதற்காக பெண்ணின் படத்தோடு விளம்பரப் பதாகைகள்கூட வைக்கப்படுகின்றன. புவனேசுவரி என்ற மென்பொருள் பொறியாளர், தனது மகள் பூப்பெய்தும் விழாவை சடங்குகளாக மாற்றாமல், அறிவியல் நிகழ்வாக மாற்றி நடத்தியிருக்கிறார். மகப்பேறு மருத்துவர், ஊட்டச் சத்து நிபுணர், உளவியல் மருத்துவர் களை அழைத்து, அறிவியல் விளக்கம் தரும் நிகழ்ச்சியாக அதை மாற்றியமைத்துள்ளார். “எனக்கு இது போன்று நிகழ்ந்தபோது என்னுள் பல கேள்விகள் எழுந்தன. உடல் மற்றும் உளரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து என் அய்யங்களுக்கு எவரும் விடை தரவில்லை. இந்த நிலை என் மகளுக்கும் வந்துவிடக் கூடாது என்பதாகவே, இளம் பெண்களும்,...

ஜூலை 15 இல் விசாரணை தொடங்குகிறது: 7 தமிழர் விடுதலையில் சட்டச் சிக்கல் என்ன?–தியாகு

ஜூலை 15 இல் விசாரணை தொடங்குகிறது: 7 தமிழர் விடுதலையில் சட்டச் சிக்கல் என்ன?–தியாகு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்து, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அடுத்த நாளே மத்திய காங்கிரஸ் ஆட்சி, அந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை வாங்கியது. வழக்கு மாநிலம் தொடர்பானது என்பதால் கலந்தாலோசனைக்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.மத்திய அரசோ கலந்தாலோசனை என்றாலே மத்திய அரசின் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்று வாதிடுகிறது. இரண்டும் ஒன்று என்றால், இரண்டுக்கும் வெவ்வேறு பிரிவுகளை சட்டம் உள்ளடக்கியிருப்பது ஏன் என்ற கேள்வியை தோழர் தியாகு எழுப்புகிறார். உச்சநீதிமன்றத்தில் ஜூலை 18இல் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் வழக்கு குறித்த விளக்கங்களை முன் வைக்கிறது இந்த கட்டுரை. திருப்பெரும்புதூரில் கடந்த 1991 மே 21ஆம் நாள் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதும், இது தொடர்பான கொலை வழக்கில் தடா சிறப்பு நீதிமன்றம் மொத்தமாக 26 தமிழர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்ததும், உச்ச நீதிமன்றம் அவர்களில் 19 பேரை விடுதலை செய்து, மூவருக்குத்...

வளர்ச்சியும் பார்ப்பனியமும்

வளர்ச்சியும் பார்ப்பனியமும்

இந்தியாவில் வறுமை கணிசமாக குறைந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். அதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆனால், மக்களிடையே சமத்துவம் உருவாகியிருக்கிறதா? அதாவது, ஏற்றத்தாழ்வுகள் குறைந்திருக்கிறதா என்பதே முக்கிய கேள்வி! ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமூக சமுத்துவம் தான் – பெரியாரின் இலட்சியம். பெரியார் வாழ்நாள் முழுதும் போராடிய வகுப்புவாரி பிரதி நிதித்துவம் என்ற கொள்கையின் அடிநாதமே அனைத்து சமூகப் பிரிவினரையும் சமப்படுத்துவது தான். இந்தியாவின் உயர் அதிகார மட்டத்தில், பார்ப்பனர்களே கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்கள் கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்துக் கொண்டு,வெகு மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளின் இடைவெளிகளை மேலும் மேலும் அதிகப்படுத்தும் திட்டங்களையே உருவாக்குகிறார்கள். இந்தியாவில் “பொருளாதாரசீர்திருத்தம்” என்ற பெயரில், கடந்த 30 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட கொள்கைகள் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்துவிட்டது என்பதை புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. 2000ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்தியாவின் மொத்த சொத்து – செல்வங்களில் 66 சதவீதம், 10 குடும்பங்களிடமே தங்கியிருந்தது. இப்போது, இது 66-லிருந்து 74 சதவீதமாக அதிகரித்துவிட்டது. இதேபோல்...

தலையங்கம்-பெண்களும் நீதிமன்றங்களும்

தலையங்கம்-பெண்களும் நீதிமன்றங்களும்

பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுக்குள்ளான ஒரு நபரை சிறையிலிருந்து விடுவித்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சமரசம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடர்ந்திட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் பிறப்பித்த ஆணை பலரையும் வியப்படையச் செய்தது. இந்த ஆணை கடும் விமர்சனங்களை எதிர் கொண்டது. இதைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து வந்த ஒரு பாலியல் வன்முறை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு நேர் எதிராக இருந்தது. இத்தகைய வழக்குகளை சமரசத் தீர்வு மய்யங்களுக்கு அனுப்பக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது உச்சநீதிமன்றம். இதனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தான் பிறப்பித்த ஆணையைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி, மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்டார். இதேபோன்று, உயர்நீதிமன்றத்தில் மற்றொரு நிகழ்வு கடும் எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. ஆம்பூரைச் சார்ந்த பவித்ரா என்ற பெண், காணாமல் போனார் என்பதால், ஆம்பூரில் இஸ்லாமியர்களுக்கும் காவல்துறைக்குமிடையே பெரும் கலவரமே நடந்து முடிந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் தந்த...