அந்த இமயமும் பசிபிக்கும் எமக்குச் சொந்தம்!
மேல்கோடி பலூச்சி முதல் கீழ் முனையின் பர்மா வரை படர்ந்து, அகன்று, பாரின் உச்சி என உயர்ந்து நிற்கும் இமயத்தை பற்றி என்ன தோன்றும்? அதன் ஒப்பிலாக் குளிர் உறை பேரூர்களான ஸ்ரீநகர், சிம்லா, முசௌரி, நைனிடால், டார்ஜிலிங், ஷில்லாங் பற்றி எல்லாம் என்ன உணர்வு ஏற்படும்? வியப்பு – இனிய பூரிப்பு – அமைதியான ஆனந்தம் – இந்த இமயம் எமது என்ற பெருமை – எந்த நினைவை எப்படி அளந்து எப்படித்தான் சொல்ல முடியும்? அது அளவையில் அடங்காப் பேருணர்வு! பசிபிக் பெருங்கடல் நான்கில் மூன்று பகுதி நீர் சூழ் உலகில் – கடலில் பெருங் கடலாய் இருக்கும் பசிபிக் கடலைப் பற்றி என்ன தோன்றும்? ஆழ்கடல்! இமயம் அளவு உயரம் தலைகீழாகப் போவது போன்ற பள்ளங்களை – படுபாதாளங்களை, ஆழ அகலங்களைக் கொண்ட கடல்! இந்தக் கடலினுள்ளேயே எரிமலைகளாம், மூழ்கி மூழ்கிப் போன கோடிக்கணக்கான கப்பல்களாம், நாகரிகத்தின்...
