திருப்பூரில் கருத்துகளை விதைத்த பெரியாரியல் பயிலரங்கம்
திருப்பூரில் கோவை-திருப்பூர் மாவட்டக் கழகங்களின் தோழர்களுக்காக மார்ச் 3ஆம் தேதி ஒருநாள் பெரியார் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. தேர்தல் ஆணையம், தேர்தல் அரசியலில் பங்கேற்காத திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பயிற்சி முகாம்களுக்கும் ‘கெடுபிடி’ காட்டுகிறது. மேட்டுப்பாளை யத்தில் பயிற்சி முகாம் நடத்த திட்ட மிடப்பட்டது. கோவை மாவட்டக் கழகத் தலைவர் இராமச்சந்திரன், இதற்காக மண்டபங்களை அணுகியபோது, “தேர்தல் ஆணையம் அனுமதியின்றி மண்டபத்தில் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. இது தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப் பாடு” என்று கூறி விட்டார்கள்.
இரண்டு நாள் பயிற்சி முகாமில் தோழர்கள் தங்குவதற்கும் அங்கே உணவு வழங்குவதற்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் கழகப் பொருளாளர் துரைசாமி தமது இல்லத் தோட்டத்திலேயே பந்தல் அமைத்து பயிலரங்கம் நடத்த முன் வந்தார். திட்டமிட்டபடி பயிலரங்கம் நடந்தது. பயிலரங்கத்தில் பெண்கள் உள்பட 70 தோழர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில் ராசு வரவேற்புரையாற்ற, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் பயிலரங்கின் நோக்கத்தை விளக்கினார். தொடர்ந்து காலை நிகழ்வில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘இந்துத்துவா’ எனும் தலைப்பில் விரிவாக 3 மணி நேரம் பேசினார். தோழர்கள் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையில் விரிவான விவாதங்கள் நடந்தன.
மதியம் அனைவருக்கும் மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. பிற்பகல் 3.30 மணியளவில் பரப்புரைச் செயலாளர் பிரபாகரன், ‘திராவிட இயக்கத்தின் தோற்றம்’ குறித்து பேசினார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘பெரியார் ஓர் அறிமுகம்’ எனும் தலைப்பில் 3 மணி நேரத்துக்கும் மேலாக வகுப்பு எடுத் தார். தோழர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான விளக்கங்களை அளித்தார்.
கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு 5 ஆண்டு சந்தாக் களுக்கான தொகை ரூ.10 ஆயிரத்தை விடுதலை இராசேந்திரனிடம் தோழர்கள் முகில் ராசு, நீதிராசன் ஆகியோர் வழங்கினர். பயிலரங்கத்தின் வரவு-செலவு கணக்குகளை சூலூர் பன்னீர் செல்வம் படித்தார். கழக அமைப்புச் செய லாளர் ஈரோடு இரத்தினசாமி, அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவசாமி ஆகியோரும் நிகழ்வில் பங் கேற்றனர்.
7 மணியளவில் பயிலரங்கம் நிறைவடைந் தது. இந்த ஒரு நாள் பயிலரங்கம், பல வரலாற்றுச் செய்திகளையும் கொள்கை எதிரிகள் முன் வைக்கும் விமர்சனங் களுக்கு தெளிவான விளக்கங்களையும் தந்ததாக பயிலரங்கத்தில் பங்கேற்ற தோழர்கள் தெரிவித்தனர்.
பெரியார் முழக்கம் 07042016 இதழ்