‘பட்ஜெட்’டில் சமூக நலத் திட்டங்கள் புறக்கணிப்பு
நாட்டின் பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்புகள் குறித்து எந்தத் திட்டமும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. குறிப்பாக மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. கிராமப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதற்கான திட்டங்களை முன் வைக்காமல் கார்ப்பரேட் நலன்களையே குறி வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சமூக நலத் துறைக்கான நிதிகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற ஏழை மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் ரேஷன் கடைகள் வழியாக உணவு விநியோகம் என்ற இரண்டு திட்டங்களும் கடும் நெருக்கடி நிலையிலும் கிராமப்புற ஏழை மக்களைப் பாதுகாத்து வந்தன. இத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இப்போது குறைக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு 61,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் (2019-20) இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.71,000 கோடி தேவை என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் 10,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 60,000...