Category: திவிக

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

சந்தாக்களை விரைந்து அனுப்புங்கள்!

சந்தாக்களை விரைந்து அனுப்புங்கள்!

2024 ஜனவரி 15 முதல் அடுத்த ஆண்டுக்கான “பெரியார் முழக்கம்” சந்தா புதுப்பிக்கப்பட உள்ளதால், கழகத் தோழர்கள் மாவட்ட வாரியாக புதிய சந்தாக்களை விரைவாக 8973341377 என்ற எண்ணிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். விடுதலை இராசேந்திரன், ஆசிரியர் புரட்சிப் பெரியார் முழக்கம் பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

நாட்காட்டி தயார்!

நாட்காட்டி தயார்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் 2024 ஆண்டிற்கான நாட்காட்டி தயார்! விலை : ரூ.70 (ரூபாய் எழுபது மட்டும்) + அஞ்சல் செலவு தனி குறைந்த எண்ணிக்கையிலேயே நாட்காட்டி அச்சிடப்படுவதால் தேவைப்படும் தோழர்கள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முன்பதிவிற்கு, தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், 9941759641 பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

கழகத் தலைவரிடம் வாழ்த்து

கழகத் தலைவரிடம் வாழ்த்து

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்திருக்கும் தோழர் லாவண்யா 21.12.2023 வியாழனன்று கழகத் தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதன் மகிழ்வாக கழக ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.2000/- வழங்கினார். பெரியார் முழக்கம் 28.12.2023 இதழ்

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

கழக வெளியீடுகளுக்கு ரூ.3 லட்சம் நன்கொடை ; கோபி இராம.இளங்கோவன் வழங்கினார்

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் பெரியாரின் 50-வது நினைவு நாள் பொதுக்கூட்டம், 24.12.2023 அன்று மாலை 6.00 மணிக்கு குருவரெட்டியூர் பெரியார் திடல், தோழர் பிரகலாதன் நினைவரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகசோதி கூட்டத்திற்கு தலைமை வகிக்க, வேல்முருகன் வரவேற்புரையாற்றினார். மறைந்த தோழர் பிரகலாதன் படத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். நிகழ்வின் தொடக்கத்தில் கோபி யாழ் திலீபன், அறிவுக்கனல் ஆகியோர் பாடல்கள் பாடினர். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமிக்கு அடுத்ததாகப் பேசிய, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், திராவிடம் – சனாதனம் குறித்து உரையாற்றினார். அப்போது, தோழர்கள் கழக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொண்ட இராம. இளங்கோவன், அதற்கு முன்னுதாரணமாக கழக நூல் வெளியீட்டு திட்டங்களுக்காக தனது தனிப்பட்ட நிதியாக ரூ. 3,00,000. (மூன்று இலட்சம் ) வழங்குவதாக அறிவித்து, தலைவர் கொளத்தூர்...

இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

இராசிபுரம் – கொளத்தூரில் திராவிட இயக்க சாதனை விளக்கக் கூட்டங்கள்

கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. கொளத்தூர் : கொளத்தூர் ஒன்றியக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் 11-12-2023 அன்று மாலை 5மணிக்கு 9வது தெருமுனைக் கூட்டம் கோவிந்தப்பாடியிலும், 10வது தெருமுனைக் கூட்டம் கத்திரிப்பட்டி மலையாள தெருவிலும் நடைபெற்றது. டி.கே.ஆர் இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. திமுக கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார், மாணவர் அணி துணை அமைப்பாளர் சதாசிவம், முன்னாள் தலைவர் முனுசாமி, கிளைச் செயலாளர் கணேசன், செட்டிப்பட்டி கிளைச் செயலாளர் பழனிச்சாமி, குள்ளவீரன்பட்டி ஈஸ்வரன், கண்ணன் நெசவாளர் அணி, சுப்பிரமணி, தேவராஜ், பரத், இளங்கோ, கார்த்தி, குமார், கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் நகரத் தலைவர் இராமமூர்த்தி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், வழக்கறிஞர் கண்ணகி,...

பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

பெரியார் நினைவுநாள் : கழகம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகள்

ஈரோடு வடக்கு : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்ட நிறைவுப் பொதுக்கூட்டம் 24.12.2023, ஞாயிறு மாலை 6 மணியளவில் குருவரெட்டியூர் பிரகலாதன் நினைவரங்கத்தில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். சேலம் : சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 119 தெருமுனைக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்தி முடித்துள்ளது. 120வது கூட்டம் பொதுக்கூட்டமாக 23.12.2023 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொளத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெறுகிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்வில் டி.கே.ஆர் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெறும். தஞ்சாவூர் : பேராவூரணி கழகம் சார்பில் பெரியார் 50வது நினைவு நாள் – வைக்கம் நூற்றாண்டு – அம்பேத்கரின் 67வது நினைவுநாள் – எது திராவிடம்? எது சனாதனம்? கொள்கை...

கழக ஏட்டுக்கு அன்பு தனசேகர் நன்கொடை

கழக ஏட்டுக்கு அன்பு தனசேகர் நன்கொடை

கழகத் தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகரின் தந்தை தே. குப்புசாமி அவர்களின் 90வது பிறந்தநாள் விழா மற்றும் சந்திரா – குப்புசாமி ஆகியோரின் 60வது மணிவிழா, 17.12.2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை புனித தோமையர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.   இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மக்கள் நல்வாழ்வு  மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். தொடர்ந்து அன்பு தனசேகர் “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 – யை கழகத் தலைவரிடம் வழங்கினார். இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசு, குகன், சேத்துபட்டு இராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

கழக நாட்காட்டி தயார்!

கழக நாட்காட்டி தயார்!

2024ம் ஆண்டுக்கான திராவிடர் விடுதலைக் கழக நாள்காட்டி தயாராக உள்ளது. தமிழுக்கும், தமிழர்களுக்காகவும் உழைத்த வெளிநாட்டு அறிஞர்களின் வண்ணப் புகைப்படங்கள் அடங்கிய நாள்காட்டி. தொடர்புக்கு : தபசி குமரன் – 99417 59641 தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 21.12.2023 இதழ்

மதுரையில் சட்ட எரிப்பு நாள் – கழகத் தலைவர் பங்கேற்பு

மதுரையில் சட்ட எரிப்பு நாள் – கழகத் தலைவர் பங்கேற்பு

1957ல் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகள் எரித்து சிறை சென்ற – உயிர்நீத்த பெரியார் தொண்டர்களின் வீரஞ்செறிந்த வரலாற்றை நினைவுகூறும் சிறப்புக் கருத்தரங்கம் 10.12.2023 ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு மதுரை மணியம்மை பள்ளியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்டக் கழக காப்பாளர் தளபதி தலைமை தாங்கினார், வாசுகி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார்.புரட்சிக் கவிஞர் பேரவை நாகபாலன், புரட்சிக் கவிஞர் மன்றம் பொறுப்பாளரும், மணியம்மை பள்ளி தாளாளருமான வரதராசன் ஆகியோர் தொடக்கவுரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவு எரிப்பு போராட்டத்திற்கான காரணங்களையும், பெரியார் தொண்டர்களின் வீரஞ் செறிந்த போராட்ட வரலாற்றையும் நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார். முன்னதாக கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய “அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு” நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் திருவெறும்பூர் அரசெழிலன்...

நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்

நம்பியூரில் சனாதன மோசடிகள் விளக்கம்

ஈரோடு வடக்கு : ஈரோடு வடக்கு மாவட்டக் கழக சார்பாக  03.12.2023  ஞாயிறு மாலை 04.30 மணியளவில் நம்பியூர் அஞ்சானூர் சமத்துவபுரத்தில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூடக்கரை கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக அமைப்பாளர் கோபி நிவாசு, நம்பியூர் ரமேசு ஆகியோர் தொடக்க  உரையாற்றினார். தொடர்ந்து தலைமைக் கழக பேச்சாளர் கா.சு.வேலுச்சாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அடுத்தக் கூட்டம் கூடக்கரையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடக்கரை பகுதி திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பு (எ) சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வக்குமார், கோபி அருளானந்தம், சத்தி முத்து, சித்தா பழனிச்சாமி, சின்னதம்பி, நம்பியூர் ஒன்றியச் செயலாளர் இரமேஷ், சிவராஜ், கூடக்கரை செல்வன், வழக்குரைஞர் தமிழரசன், பன்னீர் செல்வம், இராவணன், ராஜன் பாபு, குட்டி, புலவன்சிறை நடராஜன்,...

நங்கவள்ளியில் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம்

நங்கவள்ளியில் அம்பேத்கர் நினைவுநாள் கூட்டம்

சேலம் : நங்கவள்ளி ஒன்றியக் கழக சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் 06.12.2023 அன்று புதன் மாலை 4 மணியளவில் வனவாசி மேல் ரோடில் நடைபெற்றது. டி.கே.ஆர் குழுவின் இசை நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றியப் பொறுப்பாளர் பொ.கிருஷ்ணன் தலைமை வகித்தார், ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், வனவாசி நகர தலைவர் செந்தில்குமார், நங்கவள்ளி அ.செ. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நங்கவள்ளி நகரச் செயலாளர் சு.பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், தலைமைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சக்திவேல், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ், CPI நங்கவள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், திராவிடத் தமிழர் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சீ.செல்வமுருகேசன், வனவாசி நகர செயலாளர் பழ.உமாசங்கர் ஆகியோர்...

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க திருவல்லிக்கேணி பகுதித் தோழர்கள் முடிவு

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க திருவல்லிக்கேணி பகுதித் தோழர்கள் முடிவு

திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி பகுதிக் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.11.2023 வியாழன் மாலை 6 மணிக்கு வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் தோழர் இராஜேசு தலைமையில் நடைபெற்றது.. கூட்டத்தில் கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” இதழுக்கு 500 சந்தா திரட்டுவது எனவும், வருகிற 2024ம் ஆண்டிற்கான பொங்கல் விழா சிறப்பாக நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, பகுதிச் செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட பகுதிக் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

கழகப் பொறுப்பாளர் விஜயகுமார் தந்தை முடிவெய்தினார்.

கழகப் பொறுப்பாளர் விஜயகுமார் தந்தை முடிவெய்தினார்.

கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமாரின் தந்தை இராம. கண்ணதாசன் (வயது 68) 09.12.2023 அதிகாலை 4 மணியளவில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் உள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார். பேராசிரியர் சரஸ்வதி, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன் மற்றும் கடலூர், சேலம், சென்னை மாவட்டத் தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினார்கள். பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

சென்னை வெள்ளம் : கழகத் தோழர்கள் உணவு வழங்கினர்

சென்னை வெள்ளம் : கழகத் தோழர்கள் உணவு வழங்கினர்

திருவல்லிக்கேணி பகுதிக் கழக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர் கணேசபுரம்,  ரூதர்புரம், சைவ முத்தையா தெரு, செல்லம்மாள் தோட்டம் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. திருவல்லிக்கேணி பகுதிக் கழகத் தோழர்கள் இதற்கான பணிகளை காலை முதலே தொடங்கி இரவு வரை செய்தனர். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் ரூ.5000, கவிப்பிரியா ரூ.2000, பாலாஜி ரூ.500, திண்டுக்கல் மாக்சிம் கார்கி ரூ.600 வழங்கினார்கள். மயிலைப் பகுதிக் கழக சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சத்தியவாணி முத்து நகர், சுப்புராயன் சாலை, விசாலாட்சி தோட்டம், கணேசபுரம், முண்டக்கன்னியம்மன் கோவில் அருகிலுள்ள ஆகிய பகுதியில் உணவு வழங்கப்பட்டது. மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், பிரவின், பார்த்திபன், சிவா, கார்த்திக், பாஸ்கர், வினோத், மனோகர், சுகுமார், சபரி, சுரேஷ், மாரிமுத்து, மணிகண்டன் இப்பணிகளை மேற்கொண்டனர். பெரியார் முழக்கம் 07122023 இதழ்

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டத் துணைத் தலைவர் சுகுமார், இராஜேசு, அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர். மயிலாப்பூர் : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி மயிலைப் பகுதிக் கழகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், அய்யா உணவகம் சுரேஷ், பிரவீன், உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டில் ராஜேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் மேற்கு : புரட்சியாளர் அம்பேத்கர் 67வது நினைவுநாளை ஒட்டி 06.12.23 காலை 10 மணியளவில் சேலம் மேற்கு...

புலியூரில் ‘மாவீரர் நாள்’

புலியூரில் ‘மாவீரர் நாள்’

சேலம் : கொளத்தூர் ஈழ ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் “மாவீரர் நாள்” நிகழ்ச்சி 27.11.2023 திங்கள் மாலை 5.30 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் கடைப்பிடி க்கப்பட்டது. நிகழ்விற்கு தார்க்காடு செ. தர்மலிங்கம் தலைமை தாங்கினார். புலியூரைச் சேர்ந்த தோழர்கள் சரவணன், வாசு, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளத்தூர் திவிக நகரச் செயலாளர் அறிவுச்செல்வன் வரவேற்புரையாற்றினர். மாலை 6.05 மணிக்கு தமிழீழ விடுதலைக்காக போர்க்களத்தில் வீரச் சாவடைந்த விடுதலைப் புலி மாவீரர்கள் – பொதுமக்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் “மாவீரர் பாடல்” ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவீரர் பாடல் ஒளிபரப்பிற்கு பிறகு “மாவீரர் உரை” நிகழ்த்தும் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் கோபி இராம இளங்கோவன், மூத்த வழக்கறிஞர் இரத்தினம் ஆகியோர் உரையாற்றினார்கள். நிறைவாக கழகத்...

சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்

சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்

கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் கடந்த 30.12.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு புவனகிரியில் தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் மாணிக்.முருகேசன் தலைமை தாங்கினார். பெரியார் பிஞ்சு திராவிட மகிழன், மற்றும் வெங்கடேசன் ஆகியோரின் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. அ.மதன்குமார் வரவேற்றார், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.ராமர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சதானந்தம், கழக கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் ந.கொளஞ்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி, தியாகி பாலா பேரவையின் பொதுச்செயலாளர் கார்ல் மார்க்ஸ், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்ட கழகச் செயலாளர் அ.சதிசு நன்றி கூறினார். சென்னை :  தந்தை பெரியாரின் 50வது நினைவுநாள் பொதுக்கூட்டம், 20.12.2023, புதன்கிழமை...

எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

ஜனவரி: பொங்கல் விழா அழைப்பிதழில் “தமிழ்நாடு” என குறிப்பிட மறுத்தது, தமிழ்நாடு அரசின் இலச்சினையை பயன்படுத்த மறுத்தது,  பின்னர் எதிர்ப்புகளுக்கு அடிபணிந்தது என ஆளுநரின் அதிகார மீறல்களோடுதான் 2023 தொடங்கியது. சட்டப்பேரவையில் ஜனவரி 9-ஆம் தேதி ஆளுநர் உரையை வாசித்த ஆர்.என்.ரவி, சில முக்கியப் பகுதிகளை வெட்டியும் ஒட்டியும் திரித்தும் வாசித்தார். திராவிட மாடல், சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், காமாராசர் ஆகிய வார்த்தைகளை உச்சரிக்க மறுத்துவிட்டார். ஆனால் அரசு தயாரித்த உரைதான் பதிவேட்டில் இடம்பெறும் என முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்ததால், வேறு வழியின்றி சட்டமன்றத்தை விட்டு ஓட்டம்பிடித்தார் ஆர்.என். ரவி. ஆணவம் பிடித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி மேட்டூர், சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கழகத்தின் சார்பில் உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜனவரி 13-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் மாவட்டக் கழகம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...

இந்திய அரசியலும் பார்ப்பனியமும் – திருப்பூரில் கருத்தரங்கம்

இந்திய அரசியலும் பார்ப்பனியமும் – திருப்பூரில் கருத்தரங்கம்

திருப்பூர் : திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மூத்த மகன் வெற்றிமாறனின்  4 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் இளைய மகன் பெயர் சூட்டும் விழா 07.01.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பூர் கிருஷ்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது.   முதல் நிகழ்வாக வெற்றிமாறனின் பிறந்தநாள் கழகத் தலைவர் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக வசந்தி – முத்து இணையரின் இரண்டாவது மகனுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் “மகிழ் மாறன்” என்று பெயர் சூட்டினார். பெயர் சூட்டு விழாவைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முத்துலட்சுமி தலைமை தாங்கினார்,  சக்தி முன்னிலை வகித்தார், வசந்தி வரவேற்புரையாற்றினார். கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் பா.இராமச்சந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப்...

சென்னை, திருப்பூரில் பொங்கல் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை, திருப்பூரில் பொங்கல் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

_திருவல்லிக்கேணி பகுதி 24ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் இளைஞர் – பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 13.01.2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றவுள்ளனர். மயிலாப்பூர் : மயிலாப்பூர் பகுதியில் 8ஆம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 07ம் தேதி சுப்பராயன் சாலையில் நடைபெற்றது. பரிசளிப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும். வட சென்னை : தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் மற்றும்...

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

எழுத்தாளர் விஜயபாஸ்கர் புதிதாக எழுதியுள்ள “பாலஸ்தீனம் முதல் இஸ்ரேல் வரை – ஒரு வரலாற்றுச் சுருக்கம்” நூலை சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் புக்ஸ்.காம் அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட கருப்புப் பிரதிகள் நீலகண்டன், பத்திரிகையாளர் நீரை.மகேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் விஜயபாஸ்கர் “உயர்ஜாதியினருக்கு EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?” என்ற நூலை தொகுத்து  கவனம் ஈர்த்தவர். நிகழ்வில் அற்புதம்மாள், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ர.பிரகாசு, அன்னூர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

2014ஆம் ஆண்டில் “முழக்கம்” உமாபதி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட வழக்கு! குற்றமிழைத்த போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2014ஆம் ஆண்டில் “முழக்கம்” உமாபதி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட வழக்கு! குற்றமிழைத்த போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிராபகரன் அவர்களின் 60-வது பிறந்தநாளையொட்டி, 2014-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்களும், பொதுமக்களும் இணைந்து கொண்டாட்ட நிகழ்வுக்கு தயாராகினர்.  E-4 அபிராமபுர காவல் நிலைய அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மயிலாப்பூர் பகுதி மக்கள் காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். தகவல் அறிந்து செய்தி சேகரிக்க அங்கு சென்ற “பெரியார் முழக்கம்” நிருபர் உமாபதி. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதை தன்னுடைய கைபேசியில் படம் பிடித்துக்கொண்டிருந்தார். காவல் நிலைய அதிகாரிகள் இளையராஜா, வடிவேலு, கலைச்செல்வி ஆகியோர் கைபேசியை பிடுங்க முற்பட்டனர். பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்ட போலீசாரின் அராஜகப் போக்கை நிருபர் உமாபதி கேள்வி கேட்டார். அப்போது நிருபர் என்றும் பாராமல் முழக்கம் உமாபதியை போலீசார் லத்தியால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி, காவல்நிலையத்திற்கு தூக்கிச்சென்று அடித்துத் துன்புறுத்தி...

குடும்ப விழாக்கள் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

குடும்ப விழாக்கள் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.01.2024, வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை அசோக் அலுவலகத்தில் நடைபெற்றது. கழக மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற மார்ச் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் கருத்தரங்கம், தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது, கோவை மாவட்டக் கழகத்திற்கு மாவட்ட அலுவலகம் அமைப்பது, ஆண்டிற்கு ஒருமுறை கோவை மாவட்டத் தோழர்கள் ஒன்றிணைந்து குடும்ப விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவில் புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா தொகையாக ரூ.25,000 வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 18012024  இதழ்

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 24-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் 07.01.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திமுக இளைஞரணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் 13.01.2024, சனிக்கிழமை நடைபெற்றது. “மாணவக் கலைஞர்கள் குழுவின்” பறையிசை – ஒயிலாட்டம் – மரக்கால் ஆட்டம் – தீச்சிலம்பம் – மயிலாட்டம் – மாடாட்டம் – புலி ஆட்டம், Dude’z in Madras குழுவின் ராப் இசை, U Won Dance Crewe பகுதி மாணவிகளின் நடனம், கானா சுதாகர்‌ – புரட்சிமணியின் மக்களிசை சங்கமம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். இராஜேசு வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, 119வது வார்டு மாமன்ற...

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

மயிலைப்பகுதி 8ம் ஆண்டு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா பரிசளிப்பு – கலை நிகழ்ச்சிகள் 15.01.2024 அன்று சுப்பராயன் சாலை பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்றது. நடனம் – சிலம்பாட்டம் – குத்துச்சண்டை – மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தென்சென்னை மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் சரவணன், விசிக 126வது வட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மயிலாப்பூர் கிழக்கு பகுதிச் செயலாளர் முரளி, மயிலாப்பூர் மேற்கு பகுதிச் செயலாளர் நந்தனம் கி.மதி ஆகியோர் பரிசளித்து சிறப்பு செய்தனர்.. Arun Ace Dance குழு, ஆசான் ஆதி கேசவன் சிலம்பம் குழு, VS Boxing Club குழு மற்றும் SS மயிலாட்டம் குழுவினருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். மயிலைப் பகுதி பொங்கல் விழாக்குழு மயிலைப்பகுதி : தி.இராவணன், க.சுகுமாறன், ம.மனோகர்,...

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளான ஜனவரி 25ஆம் தேதி அன்று சென்னை மூலக்கொத்தலத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து – தருமாம்பாள் அம்மையார் ஆகியோரின் நினைவு இடங்களில் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவி பாரதி, வடசென்னை துரை உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

சேலம் : கோவில் வெள்ளாரை சேர்ந்த கழகத் தோழர் K. நாகராஜ் 22.01.2024 அன்று சாலை விபத்தில் முடிவெய்தினார். அவரது உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் தானமாக வழங்கப்பட்டது.  உடலுறுப்பு தானம் செய்வோரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தோழர் நாகராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தோழரின் உடலுக்கு கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் சேலம் மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜி, நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, தங்கமாபுரிப்பட்டினம் ராமச்சந்திரன், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன், மூலப்பாதை கவியரசு, கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். வெள்ளார் சுற்றுவட்டாரப் பகுதியில் உடல் உறுப்பு தானம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

திருவல்லிக்கேணி : கழக திருவல்லிக்கேணி பகுதிக் கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில்  பகுதிச் செயலாளர் ப.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடந்து முடிந்த 24ஆம் ஆண்டு பொங்கல் விழா வரவு – செலவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பகுதி கழக செயல்வீரர்களுக்கு பயிலரங்கம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடுத்தகட்டப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர் பழனி அ.கலையம்புத்தூர் ஊராட்சி வண்டிவாய்க்காலில் அமைந்துள்ள தந்தை பெரியார் படிப்பகத்தை பார்வையிட்டனர். இதில் மாக்சிம் கார்க்கி, ராஜா, பெரியார், நாச்சிமுத்து, கபாலி, சங்கர், ஆயுதன், உஷாராணி, இம்ரான்...

கழகத் தோழர் நித்தியானந்தம் காலமானார்!

கழகத் தோழர் நித்தியானந்தம் காலமானார்!

கோவை மாவட்டம், பனப்பட்டியை சேர்ந்த கழகத் தோழர் நித்தியானந்தம் (37) 25.01.2024 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த நித்தியானந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஜாதி ஒழிப்பு இயக்கத்தில் இணைந்ததற்காக தனது குடும்பத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட இவர். இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக எந்தவித சமரசமின்றி போராடி வந்தார். ஊரின் எதிர்ப்பையும் மீறி கழகப் பரப்புரைக் கூட்டங்களை பனப்பட்டியில் கழகத் தோழர் முருகேசனுடன் இணைந்து நடத்தியவர். தொடர்ந்து தனது நண்பர்களுக்கு தனது சொந்த பணத்தை செலுத்தி புரட்சிப் பெரியார் முழக்கம் இதழை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

ஆகம உருட்டு

ஆகம உருட்டு

குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி திணிக்க முயன்றபோது, வருணாசிரம தர்மத்தை வேரறுக்க பிள்ளையார் பொம்மையை உடைக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 27.05.1953 அன்று திராவிடர் கழகத்தினரால் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிள்ளையார் பொம்மைகள் உடைக்கப்பட்டன. “கடவுள் பொம்மையை உடைக்கிறார்களே” என்று ராஜாஜியிடம் சிலர் கேட்க, “அது ஆகம விதிப்படி வைக்கப்பட்ட சிலை அல்ல, களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மை” என்றார். ஆனால் சேலத்தில் 1971-இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டதோ அட்டையால் செய்யப்பட்ட ராமன் படம். அப்போதும் ராஜாஜியிடம் கேட்டார்கள், “அது பரங்கிமலை போன்ற சின்ன விஷயம், இது இமயமலை போன்ற பெரிய விஷயம். இரண்டையும் ஒப்பிடக் கூடாது” என்றாராம் ராஜாஜி. ஆக இடத்திற்கேற்றால் போல் மாற்றிக்கொள்ளும் பார்ப்பன ‘உருட்டு’தான் ஆகமம் என்பதை அப்போதே தெளிவுபடுத்திவிட்டார் ராஜாஜி. பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

இந்தியா கூட்டணியை ஆதரித்து கோபியில் பரப்புரை

இந்தியா கூட்டணியை ஆதரித்து கோபியில் பரப்புரை

ஈரோடு வடக்கு மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 28.01.2024 அன்று கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோபி ஈசுவரமூர்த்தி தலைமை தாங்கினார். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு மற்றும் மேட்டூர் ராஜா அகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தாவை விரைந்து அனுப்புவது, பரப்புரைக் கூட்டங்கள் நடத்துவது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடர் விடுதலைக் கழகம் I.N.D.I.A கூட்டணியை ஆதரிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட செயல்பாடுகளுக்கு கட்டுப்படாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் சதுமுகை பழனிச்சாமி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்பது தோழர்கள் அனைவரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டது. கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, மாவட்ட அமைப்பாளர் கோபி நிவாசு, மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்...

சென்னையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறது

சென்னையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறது

சென்னை மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 – நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 10, 2024, மாலை 6 மணிக்கு வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட முன்னேற்றக் கழக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சென்னை தெற்கு மாவட்டத் துணை அமைப்பாளர் தடா ஓ.சுந்தரம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் உமா ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றவுள்ளனர். திண்டுக்கல் : பழனியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் பிப்ரவரி 10, 2024, காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பெரியார் முழக்கம் 08022024 இதழ்

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!

“சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்!" "சமூக ஒற்றுமையைக் காப்போம்!" 1. பத்தாண்டு மோடி ஆட்சியில் என்ன நடந்தது? சட்டங்கள் சீர்குலைக்கப்பட்டன. மதவெறி தூண்டப்பட்டது. மாநில அடையாளங்கள் அழிக்கப்பட்டன. 2. நீட் தேர்வால் நமது அனிதாக்களை இழந்தோம். ஜி.எஸ்.டி-யால் தமிழ்நாட்டின் வருவாயை இழந்தோம். வரலாறு காணாத மழை வெள்ளத்தை நமது மாநிலம் சந்தித்த போதும் ஈவுஇரக்கமின்றி நிவாரண நிதியே இல்லை போ என்று இறுமாப்புடன் பேசியது ஒன்றிய மோடி ஆட்சி. 3. ஆளுநர் ரவி சனாதனப் பெருமை பேசுகிறார். தமிழ்மறை தந்த வள்ளுவருக்கு காவி சாயம் பூசுகிறார். தலித்மக்களுக்கு பூணூல் அணிவிக்கிறார். தீட்சிதர்கள் நடத்தும் குழந்தைத் திருமணங்களை ஆதரிக்கிறார். தேசத்தந்தை காந்தியை அவமதிக்கிறார். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமறுக்கிறார். அண்ணா சூட்டிய தமிழ்நாடு என்ற பெயரை ஏற்க முடியாது என்கிறார். ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ் தலைமையிடமாக மாற்றிவிட்டார். உச்சநீதிமன்றமே தலையில் குட்டிய பிறகும் பாஜக ஆட்சிதரும் இறுமாப்பில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை காலில் போட்டு...

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில்  மக்கள்  பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் மக்கள் பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர்: ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் மங்கலம் நான்கு வழி சந்திப்பு, சுல்தான் பேட்டை, பெரியாண்டிபாளையம் பிரிவு, குமரன் கல்லூரி, ஊத்துக்குளி ஆர்.எஸ், கூழிபாளையம், மன்னரை, காங்கேயம் பேருந்து நிலையம், நத்தக்காடையூர், படியூர், பொங்கலூர், அருள்புரம், வீரபாண்டி பிரிவு, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 21,22 ஆகிய தேதிகளில் பல்லடம் பகுதிகளுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், வடுகபாளையம், கேத்தனூர், காமநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், காரணம்பேட்டை, அனுப்பட்டி, எம்.ஜி.ஆர் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 22 அன்று பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் 50வது தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அதனையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சுப்பிரமணியம், திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு ஒன்றிய தலைவர் முஜிபுர் ரகுமான், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர...

கொலைகார சாமியாரை  கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

கொலைகார சாமியாரை கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

சென்னை : “டெங்கு, மலேரியா, காலரா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி நிர்ணயித்த அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைக்க கோரி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் இராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, சனாதன சக்திகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது, சனாதனத்திற்கு எதிரான கருத்தில் உறுதியாக நிற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் துணை நிற்கும் என்று கூறினார். கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் காட்டூர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கழக அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் திண்டுக்கல் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது....

ஆளுநரே திரும்பி போ திண்டுக்கல் மாவட்ட கழகம் கருப்புகொடி

ஆளுநரே திரும்பி போ திண்டுக்கல் மாவட்ட கழகம் கருப்புகொடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை மதர்தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் 10க்கும் மேற்பட்ட இயக்கத் தோழர்கள் ஒன்றாக இணைந்து பல்கலைக்கழகம் அருகே கருப்புக் கொடிகாட்டி போராட முயன்ற நிலையில் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து பழனி அழைத்து வரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து தமிழக கவர்னர் R.N.ரவியே திரும்பிப்போ சனாதானத்தின் மறு உருவமே வராதே உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பெரியார்முழக்கம் 07092023

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

காலை சிற்றுண்டி வழங்குவதன் காரணமாக பள்ளிக் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன என்ற வர்ணாசிரம திமிரோடு தலைப்பு செய்தி வெளியிட்ட தினமலம் நாளேட்டை கழகத் தோழர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். சென்னை : பள்ளி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தினமலம் நாளேடு அலுவலகம் அருகே இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலம் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை...

மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்

மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்

சென்னை : சென்னை மாவட்டக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் 28.08.2023 திங்கள் அன்று சிந்தாதிரிப்பேட்டை, சாமி நாயக்கன் தெருவில் மாலை 5 மணிக்கும், மாலை 7:30 மணியளவில் கலவைத் தெருவிலும் நடைபெற்றது. அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தமிழ்நாடு மாணவர் கழகம் தேன்மொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன் ஆகியோர் உரையாற்றினர். 29.08.2023 செவ்வாய் மாலை 6 மணிக்கு தரமணி நூறடி சாலையிலும், அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு பெருங்குடி நூறாடி சாலையில் நடைப்பெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, பெரியார் நம்பி, இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், இரண்யா ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்கள்.. கூட்டத்தில் பங்கேற்ற கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கருத்துரையாற்றிய தோழர்களுக்கு நூல்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்....

கோவையில் ஆளுநருக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்

கோவையில் ஆளுநருக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்

கோவை : பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொள்ள வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், கோவை மாவட்ட தலைவர் இராமச்சந்திரன், திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு திண்டுக்கல் மாவட்ட தலைவர் மருதமூர்த்தி, திராவிடத் தமிழர் விடுதலை இயக்க நந்தன் தம்பி உட்பட 37 தோழர்கள் கைதாகினர். கைதான தோழர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உக்கடம் கண்ணன், கல்லூரி மாணவர் தொண்டாமுத்தூர் நவீன் ஆகியோர் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். பெரியார்முழக்கம் 31082023

கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை கோரி நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை கோரி நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

நங்கவள்ளி கிளைக் கழக சார்பில் எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் 26.07.2023 அன்று மாலை 5 மணியளவில் தானாபதியூர் பகுதியில் காவல் துறை அனுமதியுடன் நடைபெற்ற போது, திட்டமிட்டு தெருமுனைக் கூட்டத்தை தடுத்து நிறுத்தி கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்ட இந்து முன்னணியினர் மீது கழக தோழர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு மாத காலம் ஆகியும், வழக்கு பதிவு செய்யாத நங்கவள்ளி காவல் துறையை கண்டித்து. 24.08.2023 (வியாழன்) மாலை 4 மணிக்கு நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூர்யகுமார், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் இராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி...

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை : சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக 21.08.2023 திங்கள் மாலை 5 மணிக்கு கோடம்பாக்கம் மார்கெட் அருகிலும், மாலை 7 மணிக்கு தர்மாபுரம் மாரியம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 செவ்வாய் மாலை 5 மணிக்கு, மடுவாங்கரை புதியத் தெருவிலும் இரவு 7:30 மணிக்கு, பழைய பூந்தமல்லி சாலை, கங்கை அம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஜாபர்கான்பேட்டை, கங்கையம்மன் கோயில் அருகிலும், மாலை 7 மணி ஜோன்ஸ் சாலை சாரதி நகர் சந்திப்பிலும், 24.08.2023 வியாழன் அன்று மாலை 5.30 மணிக்கு ஜோன்ஸ் சாலை கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவிலும், மாலை 7.30 மணிக்கு சைதாப்பேட்டை, குயவர் வீதியிலும், 25/08/2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகிலும், மாலை 7.30 மணிக்கு அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகிலும், 26.08.2023 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையிலும்,...

மணிப்பூர் கலவரம்; பாஜக ஆட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரம்; பாஜக ஆட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் : ஜூலை 23- ஆம் தேதியன்று கொளத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப் புலிகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளை தடுக்கத் தவறிய ஆளும் பாஜக மற்றும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர் பன்னீர்செல்வம், கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கொளத்தூர் நகரத் தலைவர் சி.இராமமூர்த்தி, கொளத்தூர் வி.சி.க மாணவரணி ஜீவா, வி.சி.க. கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் சேட்டுகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.வி.சி.க. நகர து.செயலாளர் பழனி நன்றி கூறினார்.

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட ஆய்வு

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட ஆய்வு

மதுரை மாவட்டக் கழக சார்பில் சமத்துவ சமுதாயத்தை நோக்கிய கலைப் படைப்பான “கழுவேத்தி மூர்க்கன்” திரைப்படத்திற்கு பாராட்டு விழா, ஜூலை 21, மாலை 5 மணிக்கு மதுரை பிரசிடென்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலூர் சத்யமூர்த்தி வரவேற்புரையாற்றினார், மாவட்ட செயலாளர்.மா.பா.மணி அமுதன் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார், மாவட்ட கழக காப்பாளர் தளபதி வாழ்த்துரை வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட இயக்குநர் சை.கெளதமராஜ் ஏற்புரையாற்றினார். வாசுகி நன்றி கூறினார்.

மதுரையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம்

மதுரையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம்

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூலை 1 அன்று மெஜஸ்டிக் ஹோட்டலில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் யோகேஸ் வரவேற்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமை தாங்கினார், சத்தியமூர்த்தி – முருகேசன் முன்னிலை வகித்தனர். சேரன் மாதேவி போராட்டம் குறித்து மாவட்ட கழக காப்பாளர் தளபதியும், திராவிடமும் சமூக நீதியும் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணித் தலைவர் ராஜிவ் காந்தியும், வைக்கம் போராட்டத்தின் தேவை நேற்றும் இன்றும் எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் கருத்துரையாற்றினார்கள். அழகர் பிரபாகரன், வாசுகி, வேங்கைமாறன், விஜய், வீரலட்சுமி, கண்ணன், காமாட்சி உள்ளிட்ட கழகத் தோழர்களும், பல்வேறு தோழமை அமைப்பு தோழர்களும் மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளும் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டங்கள் சென்னை மாவட்டக் கழகம் சார்பாக இரண்டாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது பின்வருமாறு :- ஜுலை 15-ஆம் தேதியன்று ராயப்பேட்டை இலாயிட்ஸ் காலனி மற்றும் வி.எம்.தெருவிலும், ஜுலை 17-ஆம் தேதியன்று இராயபேட்டை பகுதிகளில் உள்ள கொலைகாரப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பெருமாள் கோயில் வீதியிலும், ஜுலை 18-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் NKT பள்ளி அருகில் மற்றும் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் சாலையிலும், ஜுலை 19-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் இஸ்ஸபா தெரு மற்றும் ஷேக் தாவூத் தெருவிலும் ஜூலை 20-ஆம் தேதியன்று மீசார்பேட்டை மார்கெட் மற்றும் ஜாம் பஜார் சிட்டிபாபு சாலையிலும், ஜுலை 21-ஆம் தேதியன்று திருவல்லிக்கேணி மாணிக்கவாசகம் தெரு மற்றும் தேவராஜ் தெருவிலும் ஜுலை 22-ஆம் தேதியன்று ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி அருகில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள மக்கிஸ் கார்டனிலும் நடைபெற்றது. நாத்திகன் – உமாபதி குழுவின் அரசியல்...

பட்டியல் தயாரிப்பு ; வழிகாட்டுகிறது திண்டுக்கல் மாவட்டம்

பட்டியல் தயாரிப்பு ; வழிகாட்டுகிறது திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 9.7.2023 அன்றுகாலை 10 மணியளவில் பழனியில் உள்ள பூம்புகார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார், மாவட்ட அமைப்பாளர் மருத மூர்த்தி முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர்.துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் செயற்குழு உறுப்பினர் இரா.உமாபதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் “வைக்கம் போர் இன்னும் முடியவில்லை” என்கிற தலைப்பில் சேகரிக்கப்பட்ட ஜாதித் தீண்டாமை குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலை தலைமைக் குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர்.பட்டியல் தயாரிப்புக்கு தனிப் படிவங்களை அச்சிட்டு நூறு கிராமங்களுக்கு மேள் நேரில் சென்று தீண்டாமைக் கொடுமைகளை திரட்டியுள்ளனர். 1. எது திராவிடம்? எது சனாதனம்? என்னும் தலைப்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 50 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது. 2 ஐம்பது புரட்சிபெரியார் முழக்கம் இதழுக்கு ஒரு மாதத்திற்குள் சந்தா சேர்த்து...

சமூக வலைதளங்களில் இயங்கும் தோழர்களின் கவனத்திற்கு…

சமூக வலைதளங்களில் இயங்கும் தோழர்களின் கவனத்திற்கு…

தோழர்களுக்கு வணக்கம் தற்போதைய நேரத்தில் எந்த ஒரு கட்சியையோ அமைப்புகளையோ தனி மனிதரையோ கொச்சையாக விமர்சனம் செய்துவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். நம்மீது பாயும் சட்டங்களை சட்டரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் நாம் எதிர்கொள்வோம். இவற்றால் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமே தவிர தொடர்ந்து பிரச்சனைகளை எதிர்கொள்ள ஏதுவாக எதுவும் அமைய வேண்டாம் என்ற நோக்கத்தோடு கேட்டுக்கொள்கிறோம். நம்மை வெறுப்பு ஏற்றவும் பல சிக்கல்களில் ஆளாகவும் நமக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சில சிக்கல்களை உருவாக்க சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர் அவற்றில் தோழர்கள் கவனமுடன் செயல்பட கேட்டுக்கொள்கின்றோம். அவரவர் வயதிற்கேற்ப கோபமோ, ஆத்திரங்களோ இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் நாம் கண்ணியமாக செயல்படவும் விமர்சிக்கவும் வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பாடுகளையும், அடுத்தடுத்த செயல்களையும் மாவட்ட பொறுப்பாளர்களை கலந்துகொள்ளாமல் சமூக வலைதளத்தில் செய்தியை பதிய வேண்டாம். பொறுப்பாளர்கள் தி.வி.க. சேலம் மாவட்டம்

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் இரண்டு நாள் மாநாடு தோழர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. ‘இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு’ என்ற தலைப்பு தோழர்களை ஈர்த்துள்ளது. சேலத்தில் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் கூடி மாநாட்டுப் பணிகளை ஆலோசித்தது. 20.02.2023 திங்கள் மாலை 4.00 மணியளவில் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29, 30 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் திராhவிடர் விடுதலைக் கழக மாநில மாநாடு குறித்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரை யாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களும், பொறுப்பாளர் களும் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் மாநாட்டினை குறித்து பொதுமக்களிடம் சுவரெழுத்து மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக...

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் கூட்டம்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் கூட்டம்

01.06.2023 காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாவட்ட திவிக சார்பாக மறைந்த கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் நிகழ்வு மடத்து குளம் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மடத்து குளம் திவிக ஒன்றியத் தலைவர் த.கணக்கன் தலைமையில் நடைபெற்றது. மோகன் குடும்பத்தினர் ஜோதி  – அறிவுமதி முன்னிலை வகித்தனர்.   பன்னீர்செல்வம், CITU தாலுகா செயலாளர். வீ.சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். முகில் ராசு, மாவட்ட தலைவர் , திவிக. முருகேசன், வழக்கறிஞர் பிரிவு, திராவிட தமிழர் பேரவை. தங்கவேல், மாவட்ட  அமைப்பாளர், திராவிட தமிழர் கட்சி, ஜின்னா ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.   சபரி, சரசுவதி, ஜெயந்தி, சிரிஜா, ரூபா, மாரிமுத்து, தாராபுரம் செல்வம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் யாழிசை,யாழினி, அறிவுமதி, முத்தமிழ், காரைக்குடி கனல் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.   நிகழ்வினை மடத்துக்குளம் திவிக ஒன்றியச் செயலாளர் சிவானந்தம்...