கழக செயல்வீரர் போரூர் விக்னேஷ் மறைவு

சென்னை மாவட்டக் கழக செயல்வீரர் போரூர் ‌‌‍விக்னேஷ் கடந்த ஆண்டு கழகத்தில் இணைந்த நாள் முதலே கழகம் நடத்திய ஒவ்வொரு நிகழ்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஐடி ஊழியர், வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தோழர் விக்னேஷ். அவர் 16.04.2024 அன்று முடிவெய்தினார்.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தோழர் விக்னேஷின் உடலுக்கு கழகத்தின் சார்பில் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தோழர் உமாபதி, எட்வின் பிரபாகரன், இரண்யா, அருண்குமார், அன்னூர் விஷ்ணு, அட்டி அருண், புகழ் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். சொந்த ஊரான திண்டிவனத்தில் தோழர் விக்னேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

You may also like...