சென்னை, மதுரை, கோவையில் கழகம் பரப்புரை

சென்னை : இந்தியா கூட்டணியின் தென் சென்னை மக்களவைத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது.
இதில் உமாபதி – கார்மேகம் – பொன்ராஜ் குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சி நடைபெற்றது. கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், அன்னூர் விஷ்ணு ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
மதுரை : இந்தியா கூட்டணியின் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை மாவட்டக் கழக சார்பாக 16.04.2024 அன்று அழகர் கோவில், கிடாரிப்பட்டி, வள்ளாலபட்டி, சாணிப்பட்டி, கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி, தும்பைப்பட்டி, சந்தைப் பேட்டை, நொண்டிகோவில் பட்டி, மேலூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் பரப்புரை செய்தனர்.
இதில் மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, முருகேசன், ஆசிரியர் நடராசன், பிரகாஷ், சந்துரு உள்ளிட்ட கழகத் தோழர்களும், பவானி, அழகர், CPM உள்ளிட்ட தோழமை இயக்கத்தினர் பங்கேற்றனர்.
கோவை : இந்தியா கூட்டணியின் கோவை மக்களவைத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கோவை மாநகர் மாவட்டக் கழக சார்பில் பாப்பநாயக்கன் பாளையம், பழையூர் பேருந்து நிறுத்தம், நியூ சித்தாபுதூர் ஜெயா பேக்கரி, காந்திபுரம் பிரசன்ன லட்சுமி பேக்கரி, காந்திபுரம், விஜயா பதிப்பகம் முன்பு, சிவானந்த காலனி கிருஷ்ணா பேக்கரி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை செய்தனர்.
இதில் கோவை மாவட்டக் கழகச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம், மாநகரத் தலைவர் நிர்மல் குமார், மாநகரச் செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் உள்ளிட்டோர் உரையாற்றினார்கள்.

பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

You may also like...