Category: சென்னை

19ஆம் ஆண்டு தமிழர் திருநாள். பொங்கல் விழா சென்னை 13012019

19ஆம் ஆண்டு தமிழர் திருநாள். பொங்கல் விழா சென்னை 13012019

*திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழாக் குழு சார்பில்….* *திருவல்லிக்கேணியில் 19ஆம் ஆண்டு தமிழர் திருநாள்., பொங்கல் விழா…வரும் (13.01.2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வி.எம்.தெரு, இராயப்பேட்டை (பெரியார் சிலை அருகில்)* *புதுவை பிரகாசின் “அதிர்வு” கலைக்குழுவினரின்* பறையிசை, சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் *அருண் ரிதம்ஸ்* வழங்கும் சென்னை கானா, நாட்புறப் பாடல்கள் நிகழ்ச்சிகளோடு நடைபெறும் *கடந்த 06.01.2019 அன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்* பரிசளிப்பு வாழ்த்துரை : *விடுதலை இராசேந்திரன்* பொதுச் செயலாளர், திவிக *திருமுருகன் காந்தி* ஒருங்கிணைப்பாளர்., மே17 இயக்கம் *ஆர்.என்.துரை* சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர், திமுக *பேராசிரியர்.சரசுவதி* *அனுஸ்ரீ* திருநர்காண உரிமை மீட்பு இயக்கம் தொடர்புக்கு : 7299230363

பெரியார்  தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்

பெரியார் தொண்டர் உணவகத்தில் நெகிழிப் பயன்பாடு நிறுத்தம்

நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்), நெகிழி பைகள் ஜனவரி 1, 2019 முதல் தமிழகத்தில் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மந்தைவெளி பகுதியில் பெரியாரிய தொண்டர் சுரேஷ் நடத்தி வரும் ‘அய்யா உணவகத்தில்’ டிசம்பர் 31 முதல் வாழை இலை, துணிப்பை, பாக்குமட்டை தட்டு போன்றவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் மாரிமுத்து மற்றும் கழகத் தோழர்கள் நேரில்  சென்று வாழ்த்தி வரவேற்றனர். பெரியார் முழக்கம் 03012019 இதழ்

பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள்  பொதுக் கூட்டம்

பெரியார்-அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பெரியார் –  அம்பேத்கர் நினைவு நாள் பொதுக் கூட்டம் 2018, டிசம்பர் 13ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு பெரியார் திடலில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் நடைபெற்றது. பா. ராஜன் தலைமை தாங்கினார். கோ. இளங்கோ (விடுதலை சிறுத்தைகள்), புவன் (மக்கள் அதிகாரம்) ஆகியோர் உரையாற்றியதைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், முனைவர் சுந்தரவள்ளி உரையாற்றினர். வடசென்னை மாவட்டக் கழகத் தோழர் சா. ராஜீ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடக்கத்தில் சமர்கலைக் குழுவினரின் பறை இசை நிகழ்வு நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி குழுவினருக்கு நூல்களை வழங்கி பாராட்டினார். பெரியார் முழக்கம் 20122018 இதழ்

மேதகு பிரபாகரன் பிறந்த நாளில் மாணவர்களுக்கு கல்வி உதவி

மேதகு பிரபாகரன் பிறந்த நாளில் மாணவர்களுக்கு கல்வி உதவி

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழீழத் தேசிய தலைவர் வே. பிரபாகரன் 64ஆவது பிறந்த நாள் விழா மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் விழா சென்னை மேடவாக்கம்  தமிழ் வழிப் பள்ளியில்  கரு அண்ணாமலை தலைமை யில் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கி இனமான நடிகர் சத்யராஜ், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, பொழிலன் (த.வி.க. தலைவர்) உரையாற்றினர். தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழாவில் மாணவர்கள் தமிழில் பிறந்த நாள் வாழ்த்து பாடல்கள் பாடி கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடினர்.  உமாபதி, சுப்பிரமணி பொற்கோவன், பெரியார் மணிமொழியன் கண்ணன், சிலம்பம் சிவாஜி, கரிகாலன் சுரேஷ், மூவேந்தன், மதன்குமார் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், கற்க கற்க கல்வி அறக்கட்டளை தோழர்கள், பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20122018 இதழ்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

அம்பேத்கர் நினைவு நாளில் கழகத்தினர் சூளுரை ஜாதி அடையாளம் அல்ல; அவமானம்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பேரணியாக வந்து மு.நாகராஜ் (அறிவியல் மன்ற அமைப்பாளர்) தலைமையில்  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு சூளுரை எடுத்தனர். இந்நிகழ்வில் கழகத்தின் மாவட்ட அமைப் பாளர் சி.சாமிதுரை முன்னிலை வகித்தார். ஜாதி ஒழிப்பு, ஆணவப் படுகொலைக்கு தனி சட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இரா.துளசிராஜா, குமார், பாரதிதாசன், ராமச்சந்திரன் கார்மேகம், நீதிபதி மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். சேலம் : திவிக சேலம் மாநகரம் சார்பாக 6.12.2018 அன்று சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் மற்றும் சேலம் மாநகர செயலாளர் பரமேஸ்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு  மாலை அணிவித்து ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்றனர். நிகழ்வில் மாநகர தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை: இந்திய...

புரட்சியாளர் அம்பேத்கர் & தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை 13122018

புரட்சியாளர் அம்பேத்கர் & தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை 13122018

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக #புரட்சியாளர்_அம்பேத்கர் & #தந்தை_பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம்…. வரும் டிசம்பர் 13, 2018 (வியாழக்கிழமை)மாலை 6 மணிக்கு, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில்… #சிறுநகர்_இசை_சமர்_கலைக்குழுவினரின்_பறை_இசை நிகழ்ச்சி நடைபெறும்… #சிறப்புரை : தோழர்.கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் முனைவர்.சுந்தரவள்ளி தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் அனைவரும் வாரீர் தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

கழகக் கலந்துரையாடல்

கழகக் கலந்துரையாடல்

சென்னை : சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் 11.11.2018 மாலை 6 மணிக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது. குகன் – கடவுள் மறுப்பு கூறினார். கழகப் பொறுப்பாளர்கள் அன்பு தனசேகர், தபசி குமரன். சுகுமார், கருஅண்ணாமலை, எட்வின் பிரபாகரன், ஜெயபிரகாஷ், செந்தில்குமார், ஏசுகுமார், அருண்குமார், தேன்ராஜ் ஆகியோர் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர். புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் இதழ்களுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும், தெருமுனைப் பிரச்சாரங்கள் நடத்துதல் மற்றும் தலைமை செயலவை முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. நிறைவாக தோழர்களிடம் கழக ஏடுகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க சந்தா புத்தகங்களை தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் மா. வேழவேந்தன் ஒப்படைத்து டிசம்பர் மாதம் வரவிருக்கும் பயணக்குழுவிடம் கழக இதழ்களுக்கான சந்தாக்களை ஒப்படைக்கக் கோரி, கூட்டத்தை நிறைவு செய்தார். விருதுநகர் : விருதுநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் கலந்துரையாடல்...

சாக்கடைக் குழியில் இறங்கும் அவலம்: தடுத்து நிறுத்தினர் கழகத் தோழர்கள்

சாக்கடைக் குழியில் இறங்கும் அவலம்: தடுத்து நிறுத்தினர் கழகத் தோழர்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருவான்மியூர் பகுதியைச் சார்ந்த தோழர்கள் தேன்ராஜ், தமிழ்தாசன் 13.11.2018  அன்று சென்னை அடையாறு பகுதியில் வடிகால் வாய் குழிக்குள் இறங்கி எந்த ஒரு பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் வேலை பார்த்து கொண்டிருந்த 2 தொழிலாளர்களை தடுதது, குழியிலிருந்து வெளியேற்றினர். உடனே எந்த பாதுகாப்பு கருவிகளும் தராமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்திய பொறுப்பாளரையும், சென்னை மாநகராட்சி அடையாறு உதவி பொறியாளரையும் நேரில் சந்தித்து எச்சரித்தனர். அவர்களும் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்படும் என்றும்… உடனடியாக பாதுகாப்புக் கருவிகளை தொழிலாளர்களுக்கு வழங்கி, குழிக்குள் இறங்கி வேலையில் ஈடுபட்ட செயலுக்கு வருத்தத்தையும் தெரிவித்து கொண்டனர். பெரியார் முழக்கம் 06122018 இதழ்

30க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியாய் கருஞ்சட்டையுடன் திரளுகிறார்கள் டிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி

30க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியாய் கருஞ்சட்டையுடன் திரளுகிறார்கள் டிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி

திருச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கருஞ்சட்டைப் பேரணி யும், மாநாடும் திட்டமிடப்பட்டுள்ளது. பெரியாரை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய அமைப்புகள் – முற்போக்கு அமைப்புகள் – பெரியாரிய அமைப்புகள் இணைந்து பெரியாரே தமிழர்களின் ஒற்றை அடையாளம் என்று பார்ப்பனிய இந்துத்துவ வாதிகளுக்கு பிரகடனப்படுத்துவதே இந்தப் பேரணியின் நோக்கம். கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுதுமிருந்தும் திருச்சி நோக்கி தனிப் பேருந்து வாகனங்களில் திரண்டு வர தயாராகி வருகிறார்கள். அண்மையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்,  தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள் வழியாக தோழர்களை சந்தித்து வருகின்றனர். அப்போது திருச்சி கருஞ் சட்டைப் பேரணியில் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள். கழகத் தோழர்கள்...

சென்னையில் மாவீரர் நாள் – சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்

சென்னையில் மாவீரர் நாள் – சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலாப்பூர் பகுதிக் கழகம் சார்பில் நவம்பர் 25ஆம் நாள் மாவீரர் நாள் சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம் நவம்பர் 26 மாலை சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. மயிலைப் பகுதி கழகப் பொறுப்பாளர் இராவணன் தலைமை தாங்கினார். நாத்திகன், பெரியார்-அம்பேத்கர்-ஈழப் போராளிகள் குறித்துப் பாடல்களைப் பாடினார். ஈழப் போரில் இன்னுயிர் ஈத்த மாவீரர்களின் நினைவாக நினைவுச் சுடரை மருத்துவர் தாயப்பன் ஏற்றினார். இரண்டு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர் தாயப்பன், ‘ஈழம் நமது கடமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் ஜாதி ஒழிப்புப் போராளிகள் நினைவாக ஜாதி ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர். ‘பெரியாரின் இன்றைய தேவை’ எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரனும், ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ குறித்து கொளத்தூர் மணியும் விரிவாகப் பேசினர். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைவருக்கும் மயிலைப் பகுதி தோழர்கள் மாட்டுக்கறியுடன் இரவு உணவு...

மருத்துவர் தாயப்பன் பேச்சு ஈழத்தமிழர் உரிமைகளைத் தடுப்பது இந்திய ஆளும் பார்ப்பன வர்க்கம்

மருத்துவர் தாயப்பன் பேச்சு ஈழத்தமிழர் உரிமைகளைத் தடுப்பது இந்திய ஆளும் பார்ப்பன வர்க்கம்

26.11.2018 இல் சென்னையில் கழகக் கருத்தரங்கில் மருத்துவர் தாயப்பன் உரையிலிருந்து: ஈழத் தமிழர்களுக்கு இரண்டு வகையில் நாம் ஆதரவினைக் காட்டுகிறோம். ஒன்று நமது தொப்புள் கொடியான தமிழர் என்ற ஆதரவு; மற்றொன்று இனம் என்ற எல்லையைக் கடந்து மனிதர் என்ற கண்ணோட்டத்தில் அவர்களுக்கான உரிமைகளுக்கு ஆதரவு. இன அழிப்புப் போரில் இனப்படு கொலைக்குள்ளான அவர்களுக்கு இதுவரை எந்த நிவாரண நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 40 ஆண்டுகளாக எவரையும் விசாரணையின்றி சிறையிலடைக்கும் பயங்கரவாத சட்டம் அங்கே அமுலில் இருக்கிறது. அது ஒரு இராணுவச் சட்டம். எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு காலம் ஒரு பயங்கரவாதச் சட்டம் நீடித்து இருந்தது இல்லை. இராணுவம் ஆக்கிரமித்த நிலங்கள் அவர்களிடம் முழுமையாக திருப்பித் தரப்படவில்லை. உளவியல் ரீதியாக அழுத்தத்திற்கும் தோற்கடிக்கப்பட்டோம் என்ற மனநிலைக்கும் உள்ளான அம்மக்களின் படைப்பாற்றல் திறன் முழுமையாக முடங்கி விட்டது. ஈழத் தமிழர்களின் திறன், படைப்பாற்றலுக்கு உதாரணம் கூற வேண்டுமானால் சுனாமி பேரழிவை இரண்டே மாதங்களில்...

ஜாதிவெறியே! இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்? கொடூரக் கொலைக்கு நீதி கேட்டு பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம்

ஜாதிவெறியே! இன்னும் எத்தனை உயிர் குடிப்பாய்? கொடூரக் கொலைக்கு நீதி கேட்டு பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம்

நந்தீஷ்-சுவாதியின் கொடூரமான ஜாதிவெறி ஆணவப் படுகொலையைக் கண்டித்து கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் (நவம்.19, 2018) சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்த் தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக்க கழகம், இளந்தமிழகம் ஒருங்கிணைத்த இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து செய்தியாளர்களுக்கு தரப்பட்ட அறிக்கை விவரம்: கடந்த 16-11-2018 இல் நந்தீசு-சுவாதி என்ற காதல் இணையர் கொல்லப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது. சுவாதியின் தந்தை, சித்தப்பா உள்ளிட்ட மூவரின் ஒப்புதல் வாக்குமூலமும் இவர்களின் பின்னணியும் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை உறுதிசெய்துள்ளது. நந்தீசு தலித் சமூகப் பிரிவை சேர்ந்தவர். சுவாதி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கொலை நடந்த விதம், அதை மறைப்பதற்காக நந்தீசின் முகம் சிதைக்கப்பட்டதும் சுவாதியின் தலைக்கு மொட்டையடிக்கப்பட்டதும் கொலையின் தொழில்முறைத் தன்மையைப் புரிந்துகொள்ள...

மாவீரர் நாள் கருத்தரங்கம் 01122018 சென்னை

மாவீரர் நாள் கருத்தரங்கம் 01122018 சென்னை

இன்று டிச.1. மாலை சென்னையில் மாவீரர் நாள் கருத்தங்கம். “இலங்கை : அரசியல் குழப்பமும், தமிழீழ விடுதலையும்” கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன் உரையாற்றுகிறார். தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். நாள் : 01.12.218. சனிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : ரிப்போ டர்ஸ் கில்ட், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் சென்னை. நிகழ்ச்சி ஏற்பாடு : இளந்தமிழகம் அமைப்பு .

அரசியல் சட்ட எரிப்பு நாள் மற்றும் மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 25112018

அரசியல் சட்ட எரிப்பு நாள் மற்றும் மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 25112018

*அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம்…. நாளை (நவம்பர் 26, 2018 திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு,சென்னை, சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் சங்கத்தில்..* *கருத்துரை :* தோழர்.கொளத்தூர் மணி தலைவர், திவிக *(தலைப்பு : சட்ட எரிப்பும், ஜாதி ஒழிப்பும்)* தோழர்.மருத்துவர்.தாயப்பன் *(தலைப்பு : ஈழம் – நமது கடமை)* தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக *(தலைப்பு : பெரியாரியம் இன்றைய தேவை)* *அரசியல் சட்ட எரிப்பு ஏன்? தெரிந்து கொள்வோம்…* *அனைவரும் வாரீர்.!* *தொடர்புக்கு : 7299230363*

அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 26112018

அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 26112018

நவம்பர் 26, 2018 (திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு,சென்னை, சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் சங்கத்தில் அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம் தலைமை : தி.இராவணன் வரவேற்புரை : மனோகர் முன்னிலை : இரா.மாரிமுத்து,ஆ.சிவக்குமார் கருத்துரை : தோழர்.கொளத்தூர் மணி தலைவர், திவிக (தலைப்பு : சட்ட எரிப்பும், ஜாதி ஒழிப்பும்) தோழர்.மருத்துவர்.தாயப்பன் (தலைப்பு : ஈழம் – நமது கடமை) தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக (தலைப்பு : பெரியாரியம் இன்றைய தேவை) நன்றியுரை : பிரவீன் குமார் அரசியல் சட்ட எரிப்பு ஏன்? தெரிந்து கொள்வோம்… அனைவரும் வாரீர்.! தொடர்புக்கு : 7299230363  

ஆணவப் படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.! சென்னை 19112018

ஆணவப் படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.! சென்னை 19112018

திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் நாளை (19.11.2018)மாலை 3 மணிக்கு சிம்சன் பாலம் பெரியார் சிலை அருகே தொடரும் ஆணவப் படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.! காதல் இணையர் “நந்தீஷ் – சுவாதி” இருவரும் சாதி ஆணவப் படுகொலை.! தமிழகமே! ஒன்றிணைந்து போராடுவோம்! சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிராக…. தொடர்புக்கு : 7299230363

மா.செங்குட்டுவன் துணைவியார் மறைவு

மா.செங்குட்டுவன் துணைவியார் மறைவு

திராவிடர் இயக்க எழுத்தாளர் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் இணையர் செ.தாமரைச் செல்வி 17.10.2018 மாலை முடிவெய்தினார்.  இராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மையாரின் இல்லத்திற்கு 18.09.2018 கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள் இல்லம் சென்று இறுதி மரியாதையைச் செலுத்தினர். பெரியார் முழக்கம் 25102018 இதழ்

போலி சுவரொட்டிகளுக்குக் கழகம் மறுப்பு

போலி சுவரொட்டிகளுக்குக் கழகம் மறுப்பு

திராவிடர் விடுதலைக் கழகம் வெளியிட்டதாக சில சமூக விரோத சக்திகள் போலியாக ஒரு சுவ ரொட்டியை முகநூலில் வடிவமைப்பு செய்து வெளியிட்டு, அதைக் காரணமாக வைத்து கழகத் தோழர்களை அலைப்பேசி வழியாக ஆபாசமாக பேசி வருகின்றனர். இதற்கு கழக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுப்பு விவரம்: இங்கு பதிவிடப்பட்டுள்ள சுவரொட்டி படங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சுவரொட்டிகள் அல்ல. திவிக-விற்கு களங்கம் கற்பிக்கும் நோக்கோடு சமூக வலைத் தளங்களில் சமூக விரோதி களால் போலியாக தயாரிக்கப்பட்டு இது பரப்பப்பட்டுள்ளது. மயிலாடு துறை,சென்னை ஆகிய ஊர்களின் பெயரில் இந்த போலி சுவரொட்டிகள் இணையதளங்களில்  பரப்பப்படுவதாக அறிகிறோம். எமது இயக்கத்தை கருத்தியலாய் சந்திக்க இயலாத காவிகளும், இந்துத்துவவாதிகளும்  வழக்கமாக காவிகளின் கீழ்த்தரமான பிரச்சார பாணியில் பரப்பி தங்கள் சுய அரிப்பை சொறிந்து கொள்கிறார்கள். திவிக விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கோடு இவ்வாறு அவதூறு பரப்பும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கழகத்தின் சார்பில் காவல்துறையிடம்...

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ 7ஆவது வாசகர் வட்டம்

தலைமைக் கழகத்தில் ‘நிமிர்வோம்’ 7ஆவது வாசகர் வட்டம்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் 7ஆவது சந்திப்பு தலைமை அலுவலகத்தில் 21.10.2018 மாலை 6 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வை எட்வின் பிரபாகரன் ஒருங்கிணைத்தார். கடந்த மார்ச், ஏப்ரல் மாத இதழ்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஸ்கர் ‘டார்வினின் பரிணாமக் கோட்பாடு’ என்ற தலைப்பிலும், செந்தில்குமார் (குனுடு) ‘ஆர்.எஸ்.எஸ். பிடியில் அம்பேத்கர் பல்கலைக் கழகம்’ என்ற தலைப்பிலும், ஜெயபிரகாஷ் ‘தமிழ் சினிமாவில் சாதிய ஊடுறுவல்கள்’ என்ற தலைப்பிலும் தங்களது பார்வையையும், கருத்துகளையும் சிறப்பாக எடுத்துரைத்தனர். இமானுவேல் துரை ‘நிமிர்வோம் இதழைக் குறித்தும் அதன் தேவையை குறித்தும்’ பேசினார். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் இதழ்களைக் குறித்து தோழர்களின் கருத்துகளுக்கும், வெளியிடப்படும் கட்டுரைகளின் நோக்கத்தைக் குறித்தும் சிறப்பாக கருத்துரையாற்றி கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற “சீரடி சாய்பாபாவின் பின்னணி என்ன?” என்ற கட்டுரையைக் விளக்கியும் உரையாற்றினார்.  வாசகர் வட்டத்தில் மே 17 இயக்கத்தைச் சார்ந்த...

கற்க கல்வி அறக்கட்டளை சார்பில்  முப்பெரும் விழா

கற்க கல்வி அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா

எம்.ஜி.ஆர். நகல் கழக செயல் பாட்டாளர் கரு. அண்ணாமலை, தோழர்களுடன் இணைந்து நடத்தி வரும் அமைப்பு ‘கற்க கல்வி அறக் கட்டளை’. கரு. அண்ணாமலை மற்றும் சக தோழர்கள் வீ.பொற் கோவன், குமணன், விருகை செல்வம், மூவேந்தன்,குன்றத்தூர் சசிக்குமார், விநாயகமூர்த்தி, மணி மொழியன், சு,துரைராசு, இராமபுரம்  க,சுப்பிரமணி, கரிகாலன், சிலம்பம் சிவாஜி, மதன்குமார், சட்டக் கல்லூரி மாணவர்கள் சுரேசு, அன்பரசன், அம்பேத்கர் துரை மற்றும் தோழர்களின் கடுமையான உழைப்பில் கிட்டத்தட்ட 8 இலட்ச ரூபாய் செலவில் “கற்க” கல்வி அறக்கட்டளை சார்பில், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, கல்வித்தந்தை காமராசர் நினைவுநாள், தமிழ்வழிக் கல்வி பயிலும் 1000 மாணவர்களுக்கு உதவி வழங்கும் விழா ஆகிய “முப்பெரும் விழா” 2.10.2018 அன்று சிறப்பாக நடந்தது. முகநூலில் பார்த்து கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடைகள் வழங்கிய தோழர்கள், எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் கடைகள் வைத்திருக்கும் வணிகர்கள் (இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முக்கிய காரணமானவர்கள்), விழாவில் கலந்துகொண்டு...

கழக ஏட்டுக்கு 100 சந்தா;  கால்பந்து போட்டிகள்  மயிலைப் பகுதி கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் எழுச்சி

கழக ஏட்டுக்கு 100 சந்தா; கால்பந்து போட்டிகள் மயிலைப் பகுதி கழகம் எடுத்த பெரியார் பிறந்த நாள் எழுச்சி

27.09.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்மேரீஸ் பாலம் அருகே திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி சார்பாக மாநில சுயாட்சியின் நாயகன் டாக்டர் கலைஞர் நினைவரங்கில் பெரியாரின் 140வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் கால்போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வை த.குமரன் தலைமையில், தோழர்கள் பி.அருண், து.அரவிந்தன், இரா.பரணிதரன் ஆகியோர் முன்னிலை யில் சீ.பிரவீன் குமார் வரவேற்புரையாற்ற தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாறன் ஒருங்கிணைத்தார். முதல் நிகழ்வாக புதுகை பூபாளம் குழுவினரின் பகுத்தறிவு, நையாண்டி கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பகுதி மக்கள் ஓரணியாகத் திரண்டு வந்து பகுத்தறிவு கருத்துகளைக் கேட்டு சிந்தித்தனர். அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள் அருண்,  திருமூர்த்தி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி ஆகியோர் உரையாற்றினர். தொடர்ச்சியாக ஆதித் தமிழர் பேரவை தலைவர் அதியமான், கழகத் தலைவர் கொளத்தூர் மணி...

மயிலை கழகம் நடத்திய கால்பந்து போட்டி

மயிலை கழகம் நடத்திய கால்பந்து போட்டி

சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி நடத்தும் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் 6ஆம் ஆண்டு கால்பந்து போட்டி 23.09.2018 அன்று காலை 8.00மணிக்கு குருபுரம் விளையாட்டு திடலில் தொடங்கப்பட்டது. போட்டியை காங்கிரசை சார்ந்த ஐடீஊ பாலு தொடங்கி வைத்து சுயமரியாதை கால்பந்து கழகத்திற்கும், கழகத் தோழர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கால்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். மாலை 6.00 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வருகை தந்து சுயமரியாதை கால்பந்து கழகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து, இறுதி சுற்றுக்கு தகுதியான அணிகளுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து இறுதிச் சுற்றை தொடங்கி வைத்தார். பெரியார் முழக்கம் 27092018 இதழ்

ஈரோடு-சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

ஈரோடு-சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

ஈரோட்டில் : ஈரோட்டில் செப்.15 அன்று மாலை 5 மணி யளவில் விநாயகன் சிலை அரசியல் ஊர்வலத்தில் நடக்கும் ஒழுங்கு மீறல்களைக் கண்டித்து காளை மாடு சிலை அருகிலிருந்து பெரியார் கைத்தடி ஊர்வலம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் புறப்பட்டது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடங்கி வைத்தார். கழகத் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, இரவு 8 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். அமைப்புச் செய லாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட 100 தோழர்கள் கைதானார்கள். ஆதித் தமிழர் பேரவை நாகராஜன், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் மற்றும் அக்கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் : மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம் தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் 16.09.2018 அன்று மாலை 4 மணிக்கு ஐஸ் அவுஸ் மசூதி அருகில்...

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கழகச் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை

பேராவூரணி: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பேராவூரணி ஆவணம் சாலை முகத்தில் அமைந் துள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம்,  நகர அமைப்பாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா, மதிமுக பொறுப்பாளர்கள் குமார், கண்ணன், மணிவாசன், தேனி ஆல்பர்ட், தமிழக மக்கள் புரட்சி கழகப் பொறுப்பாளர்கள் பைங்கால் மதியழகன், வீரக்குடி ராஜா, சத்துணவு ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் முத்துராமன், அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர்கள் வனராணி, ஜேம்ஸ்,   முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கீ.ரே. பழனிவேல், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், பேராசிரியர் ச.கணேஷ்குமார், திரைப்படப் பாடலாசிரியர் செங்கை நிலவன், பெரியார் அரும்புகள் அறிவுச் செல்வன், அரும்புச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு : தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளான...

சென்னையில், பெரியார் கைத்தடி ஊர்வலம்! 16092018

சென்னையில், பெரியார் கைத்தடி ஊர்வலம்! 16092018

சென்னையில், பெரியார் கைத்தடி ஊர்வலம் ! தென்சென்னை மாவட்டச்செயலாளர் தோழர் இரா.உமாபதி அவர்கள் தலைமையில், மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் விநாயகர் ஊர்வலத்தை எதிர்த்து. நாள் :16.09.2018(ஞாயிற்றுக்கிழமை) நேரம் : மாலை 4 மணிக்கு இடம் : திருவல்லிக்கேணி,ஐஸ்அவுஸ் மசூதி அருகில். மதத்தை அரசியலாக்கும் மதவாதத்திற்கு எதிராக அணிதிரள்வோம்… வாரீர் தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சென்னை பயணக் குழுவுக்கு பக்தர்கள் பொது மக்கள் பேராதரவு

சென்னை பயணக் குழுவுக்கு பக்தர்கள் பொது மக்கள் பேராதரவு

கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் மேற்கொண்ட சென்னைக் குழுவினருக்கு மக்கள் பேராதரவை வெளிப்படுத்தினர். தோழர்கள் இராவணன், முரளி, அருண், இரண்யா, தேன்ராஜ், செந்தில், பிரியா, ஓவியா – வெயில், மழை என்று பாராமல் கழக துண்டறிக்கையைக் கொடுதது கடைகளில் நிதி வசூல் செய்தனர். ஏழு நாளில் 16,000 துண்டறிக்கையை மக்களிடையே கொடுத்தனர். மக்களும் தாமாக முன் வந்து துண்டறிக்கை வாங்கி படித்தது மிகச் சிறப்பு. பயணத்தில் கடை வசூல் மட்டும் ரூ.60,000/- கிடைத்தது. இதில் சிறு வியாபாரிகளே அதிக ஆதரவு தந்தனர். கூடுவாஞ்சேரியைச் சார்ந்த நாடி ஜோதிடர் பழனிச்சாமி என்பவர், பயணச் செலவுக்கு ரூ.2000 நிதியளித்தார். கண்டிகையில் பிரச்சாரத்தைக் கேட்ட பக்தர் ஒருவர் ரூ.500 நன்கொடை வழங்கினார். இப்படி பயணத்தில் ஏராளமான பக்தர்கள் நிதி உதவி தந்தும், பழம், குளிர் பானம், தேநீர் என்று அவர்களால் இயன்ற அளவில் வழங்கி ஆதரவு தந்தனர். பெரியார் இயக்கத்தைச் சார்ந்த வர்கள் நம்...

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

பயண அனுபவங்கள் : தோழர்களின் பகிர்வு

ஆகஸ்ட் 21 முதல் 26 வரை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘தமிழர் கல்வி உரிமை மீட்பு’ப் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பயண அனுவபங்கள். சென்னை குழுவின் அனுபவங்கள் பற்றி உமாபதி கல்வி உரிமைகள் குறித்த பரப்புரைப் பயணம் என்பதால் கலைக்குழுவுக்கு அதிக நேரத்தை எல்லா இடத்திலும் வழங்கினோம். எங்களுடன் வந்த விரட்டு கலைக் குழுவின் நாடகம் பரப்புரையின் நோக்கத்தை மக்களிடம் மிக எளிமையாக விளக்கியது. தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்து எல்லா இடங்களிலும் மக்கள் தங்களது பேராதரவைத் தந்தனர். சென்ற இடங்களில் கடை வைத்திருந்த ஏழை, எளிய உழைக்கும் மக்கள், நம் நிகழ்ச்சியை முடித்த பிறகு குளிர்பானங்கள், பழங்கள் வாங்கிக் கொடுத்து பல இடங்களில் எங்களை உற்சாகப்படுத்தினர். ஒரு இடத்தில் தோழர்கள் பரப்புரையில் புத்தகம் விற்றுக்கொண்டிருந்தபோது நாடகத்தைப் பார்த்துவிட்டு, “எனக்குப் படிக்கத் தெரியாது, நீங்கள் ஏதோ நல்லது செய்கிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது” என்றுகூறி தனது...

‘விநாயகன்’ ஊர்வலம் :  சென்னை மாவட்டக் கழகம் காவல் துறையிடம் மனு

‘விநாயகன்’ ஊர்வலம் : சென்னை மாவட்டக் கழகம் காவல் துறையிடம் மனு

விநாயகன் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச் சூழல் பாதிக்கும் வகையில் விநாயகர் சிலைகளை இரசாயன பொருட்களைக் கொண்டு தயார் செய்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் நடவடிக்கைகளை தடுக்கக் கோரியும் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் 03.09.2018 காலை 11 மணிக்கு காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கழகத் தோழர்கள் மனுவை அளித்தனர். பெரியார் முழக்கம் 06092018 இதழ்

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு !

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு !

தோழர் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு ! தமிழர் உயிர் காக்க தன்னுயிர் மாய்த்த மக்கள் மன்ற தோழர்.செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வான 28.08.2018 அன்று கழக பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள தோழர்.செங்கொடி நினைவிடத்தில் வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு !

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு !

சிறை மீண்ட தோழர் வளர்மதிக்கு கழகத்தோழர்கள் வரவேற்பு ! கேரளாவின் மழை வெள்ளத்திற்காக நிவாரண நன்கொடைகளை மக்களிடம் பெறும்போது இரயில் நிலையத்தில் காவல்துறை அநாகரீகமான செயலை கண்டித்தற்காக தோழர்.வளர்மதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட தோழர்.வளர்மதி 01.09.2018 காலை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி மற்றும் கழகத் தோழர்கள், பல்வேறு அமைப்பை சார்ந்த தோழர்கள் அவரை வரவேற்றனர். தோழர்.வளர்மதி புழல் சிறை அருகே உள்ள டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கும், இராயப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாள் – சென்னை – ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை மனு

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாள் – சென்னை – ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை மனு

ஆகஸ்ட் 30- அனைத்துலக காணாமற் போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில் காணாமற் ஆக்கப்பட்டோர் நிலை குறித்து ஐ.நா விடம் இன்று ஆகஸ்ட் 31 அன்று கோரிக்கை விடப்பட்டது To: ஆகஸ்ட் 30 – அனைத்துலக காணாமற்போனோர் நாளை முன்னிட்டு இலங்கையில்  காணாலாக்கப்பட்ட 20000 க்கும் மேலான ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி அடையாறு யுனிசெப் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இன்று ஆகஸ்ட் 31 வெள்ளி அன்று காலை 11 மணி அளவில் அடையாறில் காந்தி கஸ்தூரி பாய் ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள யுனிசெப் அலுவலகத்தில் உள்ள கள அதிகாரியிடம்  ஐ.நா. பொதுச் செயலாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையருக்குமான கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக ஒழுங்குசெய்யப்பட்டிந்த இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன்,...

தோழர் செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் 28082018

தோழர் செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் 28082018

தமிழர் உயிர் காக்க தன்னுயிர் மாய்த்த மக்கள் மன்ற தோழர்.செங்கொடி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வான இன்று (28.08.2018)… கழக பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் அமைந்துள்ள தோழர்.செங்கொடி நினைவிடத்தில் வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.

ஐ.நா அலுவலகம் முன்பு ஒன்றுகூடல் சென்னை 31082018

ஐ.நா அலுவலகம் முன்பு ஒன்றுகூடல் சென்னை 31082018

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக நாளை (31.08.2018)காலை 10 மணிக்கு ஐ.நா அலுவலகம் முன்பு, கஸ்தூரிபாய் ரயில் நிலையம் அருகில்… #ஒன்றுகூடல்….. இலங்கை அரசால் ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 20,000க்கும் மேலான தமிழர்கள் எங்கே? திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

சென்னையில் பரப்புரைப் பயண தொடக்க நிகழ்வு

சென்னையில் பரப்புரைப் பயண தொடக்க நிகழ்வு

“தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணத்தின்” சென்னை மாவட்ட பரப்புரைக் குழு 20.08.2018 அன்று காலை 9.30 மணிக்கு இராயப்பேட்டை பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்து பரப்புரைப் பயண முழக்கத்தோடு பயணத்தைத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து கிண்டி கத்திபாரா பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மா.வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்) மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பயணத்தின் முதல் பரப்புரைப் பயணக் கூட்டம் நங்கநல்லூர் சுரங்க பாதை அருகே காலை 11 மணிக்கு “விரட்டு” கலைக் குழுவினரின் பறையிசை முழக்கத் தோடு தொடங்கப்பட்டது. அருள்தாஸ், தமிழர் உரிமை பாடல்களைப் பாடினார். இரண்டாவது கூட்டம் மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் மதியம் 12.30 மணிக்கு பரப்புரைப் பயணம் தொடங்கியது. பரப்புரைப் பயண தோழர்களுக்கு நங்கநல்லூர் பகுதியை சார்ந்த குகனாந்தன் மதிய உணவை தோழர்களுக்கு  ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்பு, மாலை 3 மணிக்கு பரப்புரைப் பயணம் கோவிலம்பாக்கம் பேருந்து...

பயணத்துக்கு பக்தர்கள் இன உணர்வாளர்கள் பேராதரவு

பயணத்துக்கு பக்தர்கள் இன உணர்வாளர்கள் பேராதரவு

பரப்புரைப் பயணத்தில் ‘நீட்’ பாதிப்புகளையும் தமிழ்நாட்டின் மத்திய அரசுத் துறைகளில் வடநாட்டார் குவிக்கப்படுவதையும் மக்கள் பேராதரவுடன் வரவேற்கிறார்கள். துண்டறிக்கைகளை, நூல்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் சென்னைக் குழு பரப்புரை செய்தபோது நெற்றி முழுதும் விபூதி-குங்குமம் அணிந்த தோழர், ஆர்வத்துடன் சைக்கிளில் வந்து இறங்கி கழக வெளியீடுகளை வாங்கி தோழர்களின் கரங்களைப் பிடித்து பாராட்டினார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகையில் பரப்புரை முடிந்து தோழர்கள் பயணப்பட்ட பிறகு, ஒரு தோழர் மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பின் தொடர்ந்து வந்து வாகனத்தை நிறுத்தி ரூ.500 நன்கொடை வழங்கினார். பெரியார் முழக்கம் 23082018 இதழ்

தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரை கழக அணிகளின் பயணம் புறப்பாடு!

தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரை கழக அணிகளின் பயணம் புறப்பாடு!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழர் கல்வி உரிமை மீட்புப் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் தொடங்கியது. 20ஆம் தேதி சென்னை, மேட்டூர், மயிலாடுதுறை குழுக்கள் பயணத்தைத் தொடங்கின. 21ஆம் தேதி குடியாத்தம், திருப்பூர், சங்கரன்கோயில் பயணக் குழுக்கள் பயணத்தைத் தொடங்கின. முன்னதாக சென்னை பயணக் குழுவின் தொடக்க விழா பொதுக் கூட்டம் ஆகஸ்டு 19 ஆம் தேதி மாலை 6 மணியளவில் திருவல்லிக்கேணி சேக்தாவூது தெருவில் அருண்குமார் தலைமையில் சி.இலட்சு மணன் முன்னிலையில் ப. பிரபாகரன் வரவேற்புரையுடன் தொடங்கியது. கலைஞர் நினைவு அரங்கம் என்று மேடைக்கு பெயர் சூட்டப்ப்டடிருந்தது. கலைஞர் உருவப் படத்தைப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தொடக்க உரையைத் தொடர்ந்து ‘விரட்டு’ கலை பண்பாட்டுக் குழுவினரின் பறை இசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. சமூக நீதி காத்த தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் பாடல்கள், கல்வி உரிமைப் பயண நோக்கங்களை விளக்கம் பாடல்களைத் தொடர்ந்து...

கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!

கலைஞருக்கு கழக சார்பில் சென்னையில் வீரவணக்கப் பேரணிகள்!

கலைஞர் மறைவுக்கு கழக சார்பில் சென்னையில் வீர வணக்கப்பேரணி நடத்தப்பட்டது. பல்வேறு ஊர்களில் வீர வணக்க நாள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை : திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் டாக்டர் கலைஞருக்கு 08.08.2018 காலை 11 மணிக்கு அண்ணாசிலையி லிருந்து இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை நோக்கி தோழர்கள் வீரவணக்க முழக்கத்தோடு நடந்து வந்து இறுதி வீரவணக்கத்தை செலுத்தினார்கள். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகரன் ஆகியோர் டாக்டர் கலைஞரின் உருவப்படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வீர வணக்க உரையாற்றினர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நாமக்கல் : கலைஞருக்கு, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் ஞாயிறு (12.8.2018) காலை 10 மணியளவில் திருச்செங்கோடு நகரத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகிக்க, மாவட்ட...

பரப்புரைப் பயணத்துக்கு  கழகத் தோழர்கள் தயாராகிறார்கள்

பரப்புரைப் பயணத்துக்கு கழகத் தோழர்கள் தயாராகிறார்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 03.08.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை யில் நடைபெற்றது. இதில் வரும் ஆக°ட் 20 முதல் 26 வரை நடைபெறவிருக்கும் “கல்வி உரிமை பரப்புரைப் பயணத்தின்” நோக்கத்தை குறித்தும், பயணத்தை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்வை இரா. உமாபதி (தென்சென்னை மாவட்டச் செய லாளர்) ஒருங்கிணைத்தார். ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்), அன்பு தனசேகர் (தலைமை செயற்குழு உறுப்பினர்) மற்றும் கழகத் தோழர்கள் தங்களுடைய கருத்துகளை கூறினர். இறுதியாக தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்) நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

சென்னையில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் தோழர்கள் ஆய்வுரை

சென்னையில் ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தில் தோழர்கள் ஆய்வுரை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக ‘நிமிர்வோம்’ வாசகர் வட்டத்தின் ஆறாவது சந்திப்பு, 30.07.2018 அன்று மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பெரியார் யுவராஜ் நிகழ்வை ஒருங்கிணைத்தார். அதைத் தொடர்ந்து ‘பெண்ணியம்’ என்ற தலைப்பில் இமானுவேல் துரை, ‘யோகக் கலை’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரன் மற்றும் ‘திராவிடர் இயக்க சாதனைகள்’ குறித்து ஜெயபிரகாஷ் ஆகியோர் விரிவாகப் பேசினர். ‘நிமிர்வோம்’ டிசம்பர் 2017 மற்றும் சனவரி 2018 மாத இதழ்களை குறித்தும் தங்களது கருத்துகளையும் எடுத்துரைத்தனர். தொடர்ச்சியாக இந்த நிகழ்வுக்கு சிறப்புரையாற்ற வந்திருந்த கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “கலைஞரின் 50 ஆண்டு கால வரலாறு” குறித்து தனது ஆழமான கருத்துகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 09082018 இதழ்

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் மீது வழக்கு

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் மீது வழக்கு

“பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் மீது வழக்கு” இன்றைய வாட்ஸ் அப்(12.08.2018)செய்தி அரசியல் பதவி வேட்டை லாபங்களுக்காக துணை போகாமல் எந்த பதவியும் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் பெரியாரின் சமுதாய தொண்டை மக்களுக்கு ஆற்றப் போகிறோம் என்று சொந்த செலவில், சொந்த உழைப்பில் சமூகத்தில் கல்வி உரிமை, சுயமரியாதைக்காக பகுத்தறிவுக்காக பாடுபடுகின்ற பெரியார் தொண்டர்களை காவல் துறை ஏன் இப்படி அலைக்கழிக்கிறது. ஏன் இப்படி பொய் வழக்குகளை போடுகிறது என்பது நமக்கு புரியவில்லை. அதுவும் தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தமிழ் இன கொள்கைகளை மக்களிடையே கொண்டு சொல்வதற்கும், பறிக்கப்படுகின்ற கல்வி உரிமைகளை, தமிழ்நாட்டை மதவெறி பூமியாக மாற்றுகிற ஆபத்துகளை எதிர்த்தும், போராடி கொண்டிருக்கிற, களமாடி கொண்டிருக்கிற ஒரு சமுதாய புரட்சி இயக்கத்தை சார்ந்த தொண்டர்களை ஏன் காவல்துறை சமூக விரோதிகளாக பார்க்கிறது. பொய் வழக்குகளை புணைகிறது என்ற கேள்வியை இப்போது கேட்க வேண்டியிருக்கிறது....

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி! சென்னை 08082018

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி! சென்னை 08082018

கலைஞர் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்ச்சி ! சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விடை பெற்ற திராவிட அரசியலின் பெருமைக்குரிய அடையாளம் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு 08.08.2018) காலை 11 மணிக்கு இராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலையை நோக்கி தோழர்கள் வீரவணக்க முழக்கத்தோடு நடந்து வந்து இறுதி வீரவணக்கத்தை செலுத்தினார்கள். கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் தோழர்.அன்பு தனசேகரன் ஆகியோர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு இறுதி மரியாதை செலுத்தி வீரவணக்க உரையாற்றினார்கள். தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி நிகழ்வை ஒருங்கிணைத்தார். இறுதியாக ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! சென்னை 05082018

தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! சென்னை 05082018

தோழர் அல்லி – தோழர் இரமேசு பெரியார் இணையரின் மகன் A.R..அம்பேத்கரின் முதல் பிறந்த நாள் விழா ! கழகத்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு ”பெரியார் பிற்படுத்தப்ப்ட்டவர்களுக்கான தலைவர் என்பது சரியா?” எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். மேலும் புத்தர் கலைக்குழு மணிமாறன் மகிழினி,சங்கர் சமூகநீதி அறக்கட்டளை தோழர் கவுசல்யா,ஊடகவியலாளர் தோழர் ஆசீப் ஆகியோரும் உரையாற்றுகிறார்கள். நாள் : 05.08.2018 ஞாயிறு நேரம் : மாலை 5.00 மணி. இடம் : இக்சா மையம்,பாந்தியன் சாலை,அருங்காட்சியகம் எதிரில்,எழும்பூர்,சென்னை.

தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! சென்னை 01082018

தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! சென்னை 01082018

ஆகஸ்ட் 1ல், தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! ஜனநாயக போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பை கண்டித்தும், போராடுவோர் மீது போடப்படும் பொய் வழக்குகளை நிறுத்த வலியுறுத்தியும், 8 வழிச்சாலை பிரச்சனையில் போராடும் மக்கள்,விவசாயிகள் உணர்வுகளை மதிக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு நீதி கோரியும் தலைமைச் செயலகம் முற்றுகைப்போராட்டம் ! நாள் : 01.08.2018 புதன் கிழமை. நேரம் : மாலை 3.00 மணி. இடம் : சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில். பல்வேறு அரசியல்கட்சிகள்,சமுதாய அமைப்புகள், ஜனநாயக சக்திகள் பங்கேற்கும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழர் வாழ்வுரிமைக்கூட்டமைப்பு.

மலக்குழியில் இறங்கிய மனிதரை தடுத்து மயிலை தோழர்கள் போராட்டம்

மலக்குழியில் இறங்கிய மனிதரை தடுத்து மயிலை தோழர்கள் போராட்டம்

மந்தவெளி சென்ட் மேரிஸ் பாலத்திற்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று மலக்குழியில் இறங்கி எந்த ஒரு பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல் இரண்டு பேர் வேலை பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட மயிலாப்பூர் பகுதித் தலைவர் இராவணன், பகுதி செயலாளர் மாரி மற்றும் மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி வெளியே மீட்டுள்ளனர். மேலும், மலக்குழியில் மனிதர்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது என்று அவர்களை வேலைக்கு அனுப்பிய ஒப்பந்ததாரர்களை எச்சரித்து வந்துள்ளனர். இப்பகுதியில் இதுபோன்ற சம்பவத்தால் ஏற்கெனவே இரண்டு பேர் இறந்துள்ள நிலையில், பொறுப்பற்ற முறையில் மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் மீண்டும் மனிதர்களை மலக்குழியில் இறக்கி வேலை செய்ய கட்டாயப் படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மலக்குழியில் மனிதர்களை இறக்குவதை முற்றிலுமாக தடுத்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்கள் திட்டமிட்டுள்ளனர். பெரியார் முழக்கம்...

சென்னை, ஈரோட்டில்  காமராஜர் பிறந்தநாள் விழா

சென்னை, ஈரோட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா

திராவிடர் விடுதலைக் கழகம் தென்சென்னை மாவட்டம், திருவான்மியூர் பகுதியில் கடந்த 18.07.2018 (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு “சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் ந.விவேக் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் மு.தமிழ்தாசன், சே.கந்தன், பா.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கூட்டத்தின் தொடக்கமாக ‘யாழ்’ பறையிசை முழக்கத்தோடு, வீதி நாடகங்களை நடத்தினர். ந. அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் இரா. உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் காமராசரின் வரலாற்றை குறித்து எடுத்துரைத்தனர். சிறப்புரையாற்றிய பேராசிரியர் சுந்தரவள்ளி, காமராசரின் சமூகநீதி வரலாற்றை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பெரம்பலூர் துரை தாமோதரனின் ‘மந்திரமல்ல.! தந்திரமே!’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை பகுதி மக்களிடையே ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிகழ்த்தினார். பகுதி மக்களும் அறிவியல் விளக்கத்தை ஆர்வமுடன் கவனித்தனர். பகுதிவாழ் பெண்கள் பெருமளவில் திரண்டு, முன்வரிசையில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டனர். இறுதியாக...

சென்னைக் கருத்தரங்கில் ஆய்வாளர்கள் தெளிவுரை எட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே!

சென்னைக் கருத்தரங்கில் ஆய்வாளர்கள் தெளிவுரை எட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே!

‘பூவுலகின் நண்பர்கள்’ சென்னையில் நடத்திய கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர்கள் எட்டு வழிச் சாலை சட்டத்துக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்கினர். ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் ‘புதிய எட்டு வழிச் சாலை’, ‘அறிவியல் – சூழலியல் சட்டரீதியான பார்வை’ என்ற தலைப்பில் 22.7.2018 மாலை 5.30 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் ஆய்வரங்கம் நடந்தது. பேராசிரியர் கே.பி.சுப்ரமணியன் (ஓய்வு – நகர கட்டமைப்பு பொறியியல் துறை, அண்ணா பல்கலைக் கழகம், பேராசிரியர் ஜனகராஜன் (தலைவர், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம்), வெற்றிச் செல்வன் (வழக்கறிஞர்) ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள். பொறியாளர் சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) நிகழ்வை ஒருங்கிணைத்தார். பொறியாளர் சுந்தர்ராஜன் தனது தொடக்க உரையில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத் துக்கு அனுமதிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் இந்த எட்டு வழிச் சாலை பற்றிய எந்தக்...

பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை பெரியார் பேச்சு – எழுத்துக்கள் –  86 மணி நேர – ஒலி புத்தகமாகியது

பார்வையற்ற சிந்தனையாளர்களின் சாதனை பெரியார் பேச்சு – எழுத்துக்கள் – 86 மணி நேர – ஒலி புத்தகமாகியது

‘விடியல் பதிப்பகம்’, மலிவுப் பதிப்பாக வெளியிட்ட பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட நூல் ‘பெரியார் – இன்றும், என்றும்’. 1000 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை மலிவுப் பதிப்பாக ரூ.300க்கு ‘விடியல் பதிப்பகம்’ வெளியிட்டது. பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் இந்த நூலை வாங்கினார்கள். இந்த நூலில் பெரியார் கட்டுரைகளை பார்வையற்றோர் அறியும்  நோக்கத்தில் ஒலி வடிவில் பதிவேற்றப்பட்டு ஒலிப் புத்தகமாக (குறுவட்டு) கடந்த ஜூலை 14ஆம் தேதி பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை சார்பில் வெளியிடப் பட்டது. 86 மணி நேரம் பெரியார் எழுத்துகள் குரலாக ஒலிக்கிறது. பெண்கள் பலரும் தாமாக ஆர்வத்துடன் முன் வந்து பெரியார் எழுத்துகளை தங்கள் குரலில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத் தக்கது. சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி அரங்கில் காலை 10 மணியளவில் நடந்த இந்த நிகழ்வில் பார்வையற்ற தோழர்களோடு 300 கல்லூரி மாணவிகளும் பங்கேற்றனர். கல்லூரி முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொண்டனர். ‘ஒலிப்பதிவு குறுவட்டு’வுக்கு...

“சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் – சென்னை 18072018

“சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் – சென்னை 18072018

  திராவிடர் விடுதலைக் கழகம் தென்சென்னை மாவட்டம், திருவான்மியூர் பகுதியில் கடந்த 18.07.2018 (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு…. “சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் தோழர்.ந.விவேக்(தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் மு.தமிழ்தாசன், சே.கந்தன், பா.இராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்.இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கூட்டத்தின் தொடக்கமாக “யாழ்” பறையிசை முழக்கத்தோடு, வீதி நாடகங்களை நடத்தினர். தோழர்.ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்) மற்றும் தோழர்.இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) ஆகியோர் காமராசரின் வரலாற்றை குறித்து எடுத்துரைத்தார். பின்பு இந்த கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற பேராசிரியர்.சுந்தரவள்ளி அவர்கள் காமராசரின் சமூகநீதி வரலாற்றை நினைவு கூர்ந்து பகுதி மக்களிடையே எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ச்சியாக, பெரம்பலூர் துரை தாமோதரனின் மந்திரமல்ல.! தந்திரமே.! அறிவியல் விளக்க நிகழ்ச்சியை பகுதி மக்களிடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்தினார். பகுதி மக்களும் அறிவியல் விளக்கத்தை ஆர்வமுடன் கவனித்தனர். இறுதியாக தோழர்.மா.தேன்ராஜ்(திருவான்மியூர் பகுதி...

முகநூலில் அவதூறு கழகம் சார்பாக சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்

முகநூலில் அவதூறு கழகம் சார்பாக சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்

முகநூலில் கழகத்தின் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக சென்னை, மாநகர காவல் ஆணையாளரிடம் புகார்.! 19.07.2018 மாலை 5 மணிக்கு கழக தென்சென்னை மாவட்ட தலைவர் தோழர்.வேழவேந்தன், வடசென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.செந்தில் FDL மற்றும் கழகத் தோழர்கள் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர். சென்னை அயனாவரம் பகுதியில் 11 வயதுள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை 17 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த ஒருவரும் இருப்பதாக பொய்யான ஒரு செய்தி சமூக வலைத்தளத்தில் பரவப்பட்டு வந்தது. கழகத்தின் மீது அவதூறு பரப்பும் தீயுள்நோக்கத்தோடு அவதூறு பரப்பும் வீரமணி என்பவரால் உருவாக்கப்பட்ட செய்தியினை பாலசுப்பிரமணியம், ராமலிங்கம், வெங்கட்ராஜூ மற்றும் பலரால் பகிரப்பட்டுள்ளது. குற்றவாளிக்கும் திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் வேண்டுமென்றே கழகத்திற்கு கெட்ட...

சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் சென்னை 18072018

சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் சென்னை 18072018

“சமூக நீதியின் சரித்திரம்” பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கூட்டம் வரும் 18.07.2018 மாலை 6 மணிக்கு திருவான்மியூர், லட்சுமிபுரம் காந்திசிலை அருகில்…. “யாழ்” குழுவினரின் பறையிசை, வீதி நாடகம் மற்றும் *பெரம்பலூர் தாமோதரனின் மந்திரமல்ல தந்திரமே.! அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும்…. சிறப்புரை : *பேராசிரியர்.சுந்தரவள்ளி* *தோழர்.தபசி.குமரன்* தலைமை நிலையச் செயலாளர் *தோழர்.கு.அன்புதனசேகர்* தலைமைக் செயற்குழு உறுப்பினர் *தோழர்.ந.அய்யனார்* தலைமைக் குழு உறுப்பினர் *தோழர்.மா.வேழவேந்தன்* தென்சென்னை மாவட்டத் தலைவர் *தோழர்.இரா.உமாபதி* தென்சென்னை மாவட்டச் செயலாளர் *தோழர்.கரு.அண்ணாமலை* திவிக *கல்வி வள்ளல் காமராருக்கு தமிழர்கள் முன்னெடுக்கும் நன்றிப் பெருவிழா….* *அனைவரும் வாரீர்.!*