Category: குடி அரசு 1933

மாரியம்மன்  வரவேற்கின்றோம்

மாரியம்மன் வரவேற்கின்றோம்

  மக்கள் மாரியம்மன் பண்டிகையின் பேரால் காட்டுமிராண்டித்தனமாக தப்புகளைக் கொட்டிக் கொண்டும் மலைவாச லம்பாடிகள் ஆடுவதுபோன்ற ஆட்டங்களையும் ஆடிக்கொண்டும் கீழ் மக்கள் நடப்பதுபோன்ற வேஷங் களைப் போட்டுக்கொண்டும், ஆபாசமான பேச்சுகளைப் பேசிக்கொண்டும், ஆயிரக்கணக்கான ரூபாய்களை பாழாக்கிக்கொண்டும் செய்துவரும் அக்கிரமம் இந்த நாட்டில் அறியாதார் யாரும் இல்லை. இது நாளாக நாளாக அதிகமாகின்றதே தவிர மக்களுக்கு அறிவு வந்து, இந்த பழயகால நிலைமை சிறிதாவது மாறி இருக்கின்ற தென்று சொல்லு வதற்கே இல்லை.                         முழுமுதற் கடவுளென்று சொல்லப்பட்ட விஷ்ணு, சிவன் என்கின்ற கடவுள்களின் “பாடல் பெற்ற ஸ்தல” உற்சவம் பூசை முதலியவைகள் எல்லாம் கூட இப்பொழுது பெரிதும் குறைந்து வருகின்றன. இந்த உற்சவ வரும்படிகளும் சரி பகுதிக்கு குறைந்தும் வருகின்றன. ஒரே கடவுள் என்று சொல்லுகின்ற அல்லாசாமியின் உற்சவமும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ஆனால் இந்தமாரிகருப்பன், காத்த வராயன் என்று சொல்லப்பட்ட “கீழ்த்தர பரிவார தேவதைகள், என்று சொல்லப்படும் சாமிகளின்...

சைனா – ஜப்பான் யுத்தம்

சைனா – ஜப்பான் யுத்தம்

சைனாவுக்கும், ஜப்பானுக்கும் சுமார் ஒன்றரை வருஷ காலமாக யுத்தம் நடைபெற்றுவருகின்றது. இதுவரை யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்து விட்டார்கள். பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிந்தும் விட்டன. இந்த யுத்தத்தின் தத்துவம் “வலுத்தவன் இளைத்தவனை உதைத்து அவனிடமிருப்பதை பிடுங்கிக்கொள்ளலாம்” என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. நம்மைப் பொருத்தவரையில் சீனாவை சீனாக்காரனாண்டாலும்சரி, ஜப்பான்காரனாண்டாலும் சரி இதில் ஒன்றும் நமக்கு பிரமாதமான கவலை யில்லை. ஆனால் இதில் நடைபெறும் சூழ்ச்சிகள் ஒழிக்கப்படவேண்டிய தாகும். சர்வதேச சங்கம் என்று ஒன்றிருப்பது யாவருக்கும் தெரியும். அது “உலக சமாதானத்துக்காக இருந்து வருகிறது” என்று சொல்லப்படுவதாகும். எப்படியென்றால் 1914ல் ஏற்பட்ட பெரிய யுத்தத்தின் பயனாய் அநேக உயிர்ச் சேதங்கள் பொருள் சேதங்கள் ஏற்பட்டு உலக பொதுஜனங்களுக்கும் அதிக மான கஷ்டங்களைக் கொடுத்து விட்டதால் “இனி ஒருவருக்கொருவர் நாடு பிடிக்கும் ஆசைகொண்டு யுத்தம் செய்து கொள்ளக் கூடாது” என்பதற் காகவே ஏற்பட்டதாகும். ஆனால் இதை நாம் ஒரு நாளும் சரி...

செட்டிநாட்டில் தோழர் ஈ. வெ. இராமசாமி  கடவுளுக்கு ஒரு வார நோட்டீஸ்

செட்டிநாட்டில் தோழர் ஈ. வெ. இராமசாமி கடவுளுக்கு ஒரு வார நோட்டீஸ்

  தலைவரவர்களே! தோழர்களே! சமதர்மம் என்பது நமக்கொரு புதிய வார்த்தை அல்ல, எல்லாச் சமூகத்தாரும் எல்லா மதஸ்தர்களும் விரும்புவதும் அந்தப்படியே யாவரும் நடக்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பதும், ஒவ் வொரு சமூகத்தானும், ஒவ்வொரு மதஸ்த்தனும் தங்கள் தங்கள் சமூகங் களிலும், மதங்களிலும் இருக்கின்றதென்று சொல்லி பெருமை பாராட்டிக் கொள்ளுவதுமான வார்த்தையேயாகும். ஆனால் காரியத்தில் மாத்திரம் உண்மையான சமதர்ம தத்துவங்களை எடுத்துச்சொன்னால் ‘இது சாத்தியப் படுமா’ என்று பேசுவதாகவும் இது நாஸ்திகமென்றும், துவேஷமென்றும் சொல்லுவதாகவே இருக்கிறது. எச்சமதர்மக் காரனையாவது அழைத்து உங்கள் சமூகத்தில் மதத்தில் சமதர்மம் இருக்கிறது என்றாயே நீ ஏன் இப்படி யிருக்கிறாய், அவன் ஏன் அப்படியிருக்கிறான், நீ ஏன் எஜமானனாயிருக் கிறாய், அவன் ஏன் அடிமையாயிருக்கிறான், நீ ஏன் பிரபுவாய், செல்வந்தனா யிருக்கிறாய், அவன் ஏன் ஏழையாய், தரித்திரனாய், பிச்சைக்காரனாய், பட்டினிகிடப்பவனாயிருக்கிறான்? உனக்கு ஏன் மூன்றடுக்கு மாளிகை? அவனுக்கு ஏன் ஓட்டைக் குடிசை கூட இல்லை? நீ ஏன் வருஷம் 10000...

காரைக்குடியில் போலீஸ் அட்டூழியம்

காரைக்குடியில் போலீஸ் அட்டூழியம்

காரைக்குடியில் இம்மாதம் 3-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலையில் கல்லுக்கட்டு என்கின்ற ஒரு ஒதுக்கு இடத்தின் வேலிக்கு உட்புரமாக தோழர் ஜீவானந்தம் அவர்கள் தீண்டாமை என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் சில பார்ப்பனர்களின் ஏவுதலின் பேரில் ஒரு போலீசு சப் இன்ஸ்பெக்டர் கூட்டத்துள் புகுந்து திடீரென்று தோன்றி தோழர் ஜீவனாந்தத்தை யாதொரு முகாந்திரமும் இல்லாமல் கண்ணத்தில் அடித்த தாகவும் காரணம் சொல்லி அடித்தால் நலம் என்று தோழர் ஜீவானந்தம் மரியாதையாய்ச் சொல்லியும் மறுபடியும் பலமாக பல தடவை அடித்ததாகவும் உடனே கூட்டம் கலைந்து விட்டதாகவும், அந்த சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந் தத்தை அடித்தது மாத்திரம் போதாமல் தோழர் கணபதி என்பவரையும் தெருவில் வழிமறித்து அடித்ததாகவும், பிறகு மறுபடியும் கொஞ்ச தூரத்தில் சென்று கொண்டிருந்த தோழர் ராமசுப்பையா அவர்களையும் ஓடி வழிமறித்து பல அடிகள் கன்னத்தில் அடித்ததாகவும், ஏனய்யா? என்ன காரணமய்யா? சொல்லிவிட்டு அடியுங்களையா என்று கேட்டும் சிறிதும் லட்சியமில்லாமலும் ஈவு இரக்கமில்லாமலும் கண்டபடி அடித்ததாகவும்...

குடி அரசு “குபேர” பட்டணத்தின்                சிறப்பா? சிரிப்பா?

குடி அரசு “குபேர” பட்டணத்தின்                சிறப்பா? சிரிப்பா?

அமெரிக்கா தேசத்தை இந்திய மக்கள் குபேர பட்டணமென்று சொல்வதுண்டு. குபேரபட்டணமென்றால் செல்வம் தாண்டவமாடும் பட்டண மென்று பெயர். உண்மையிலேயே அங்கு மற்ற நாடுகளைவிட செல்வம் அதிகந்தான். உலகில் பல பாகங்களிலுள்ள செல்வங்களும் பல வழிகளில் அமெரிக்காவுக்குப் போய்ச் சேருகின்றன. அமெரிக்கா செல்வம் மற்ற நாடுகளுக்கு வியாபார மூலமாகவும், லேவாதேவி மூலமாகவும் முதலாக அனுப்பப்பட்டு வட்டியும் லாபமும் ஏராளமாய் அடைகின்றது. மகா யுத்தத்திற்காக மற்ற தேசங்கள் பட்ட கடன்களில் பெரும்பகுதி இன்னமும் கட்டுவளியாகாமல் எல்லா தேசமும் அமெரிக்காவுக்குக் கடனாளி யாகவேயிருக்கின்றது. இது மாத்திரமா, அமெரிக்கா என்றால் அது ஒரு பெரிய பழமையான “குடியரசு நாடு” சக்கிரவர்த்தியில்லாமல், அரசன் இல்லாமல் “பிரஜைகளால் பிரஜைகளுக்காக” ஆளப்படும் “ஜனநாயக” ஆட்சியுள்ள நாடு என்றும் சொல்லப்படுவதாகும். அதன் (குடியரசு–ஜனநாயக) தலைவர் தேர்தலுக்கு பத்து லட்சக் கணக்கான நபர்கள் ஏழைகள், தொழிலாளிகள் ஆகிய மக்கள் ஓட்டுச் செய்துதான் தலைவர் (தேர்தல் நடந்து) நியமிக்கப்படுவது “கண்டிப்பான” சட்ட முறையாகும். இப்படியெல்லாம் இருந்தும்...

அரசியல் சீர்திருத்தம்

அரசியல் சீர்திருத்தம்

அரசியல் சீர்திருத்தத்தின் குறிப்புகள் “வெள்ளைக் காகித” அறிக்கை என்னும் பேரால் வெளிவந்து இருக்கிறது. அதைப்பற்றிய வாதப்பிரதிவாதங் கள் இந்தியப் பத்திரிகைகளின் பக்கங்கள் பூராவையுமே கவர்ந்து கொண்டு தினமும் சேதிகள், பிரசங்கங்கள், அபிப்பிராயங்கள், தீர்மானங்கள் என்கின்ற ரூபங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்றாலும் இதைப்பார்த்து நமக்குப் பதினைந்தடுக்குள்ள ஒரு மாளிகையில் நெருப்புப் பிடித்துக் கொளுந்து விட்டெறியும்போது அந்த வீட்டைக்கட்ட வேலை செய்தவனும், குடியிருக்க வீடில்லாமல் சமீபத்தில் ஒரு மரத்து நிழலில் பொங்கிச் சாப்பிட்டு விட்டு வேலையில்லாமல் தலைக்குக் கையை வைத்துத் தரையில் நாளையச் சாப்பாட்டிற்கு வழி என்ன என்று ஏங்கிப் படுத்துக்கிடக்கும் ஒருவனுக்கு எவ்வளவு கவலையிருக்குமோ அவ்வளவு தான் இன்றைய சீர்திருத்த முயற்சியிலோ, வெள்ளைக்காகித அறிக்கை யிலோ நமக்குக் கவலையுண்டு. ஏனெனில் அந்த வீட்டை நெருப்புப்பற்றி எறிவதிலிருந்து காப்பாற்றப் படுவதில் இந்த மரத்தடியில் பொங்கித் தின்று கிடப்பவனுக்கு யாதொரு பயனுமில்லை. மற்றும் அந்த வீடு அடியோடு வெந்து சாம்பலாகுமானால் அதை மறுபடியும் புதுப்பித்துக் கட்டுவதன்...

“தொழிலாளர் நிலைமை”

“தொழிலாளர் நிலைமை”

தோழர்களே! இது பரியந்தம் தோழர் பொன்னம்பலனார் “வாலிபர் கடமை என்ன?” என்பது பற்றி விபரமாக உங்களுக்கு எடுத்துச் சொன்னார். அவர் சங்கராச் சாரியாரின் விஷயத்தைப் பற்றிப் பேசும்போதும் மத சம்பந்தமான அக் கிரமங்களைக் கூறும் போதும் கடுமையாகப் பேசியதாக நீங்கள் கருதலாம். சகிக்க முடியாத அக்கிரமங்கள் மதத்தின் பேரால் நடைபெறும் பொழுது அதை மேல் பூச்சாகப் பேசிப்போவதற்கு சாத்தியப்படாததாகவே இருக்கிறது. சென்னையில் கொள்ளையடித்தது போன்று மக்களிடம் மூடத்தனத்தைப் புகட்டி கொள்ளையடிப்பதை நேரில் சென்னையில் போய்ப் பார்த்திருந் தீர்களானால் தெரியும். இவ்விஷயத்தில் அவர் வாலிபரும் உணர்ச்சியுள்ள வருமாதலால் மிக்க ஆவேசத்துடனே தான் பேசினார். இன்னும் கவனித்தால் இன்றையதினம் கேவலமாக மக்களை மதிக்கப்படுகிற தீண்டாமை விலக்குக் கிளர்ச்சிக்கும் காங்கிரசில் பிரபல தேச பக்தர்கள் என்பவர்களும், ஏன் தோழர் காந்தியாரும்கூட உண்மையில் மத சாஸ்திர சம்மந்தமான அபிப்பிராயங் களைக் காட்டுவதன் மூலம் தீண்டாமை விலக்குக்குத் தடைசெய்து வரு கிறார்கள். சங்கராச்சாரி பிரசங்கமும் மதசம்பந்தமானதுதான். மத சம்பிரதாயப்...

தோழர். சு. மு. ஷண்முகம்.

தோழர். சு. மு. ஷண்முகம்.

தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்கள்  இந்தியா சட்டசபைக்குத் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பது கேட்டு பார்ப்பனர்களும், அவர்களது அடிமையாயிருந்து வயிறு வளர்த்துத் தீர வேண்டிய பேறுபெற்ற பார்ப்பனரல்லாதாரும், அவ்விருகூட்டத்தினது பத்திரிகைகளும் தவிர்த்து மற்றைய எல்லோருமே ஆனந்தக்கடலில் மூழ்குவார்கள் என்பதிலைய மில்லை. தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்கள் ஒரு பார்ப்பனராயிருந்திருந் தால் இன்று அரசியல் உலகில் மகாகனம் என்னும் பட்டம் பெற்ற சீனிவாச சாஸ்திரி பார்ப்பனரும், சர். பட்டம் பெற்று மற்றும் பல போக போக்கியங் களையும், மாதம்  20 ஆயிரம் 30ஆயிரம் வரும்படியையும் உடைய சர். சி. பி. ராமசாமி அய்யர்ப் பார்ப்பனரும் ஷண்முகத்திற்குப் பின்னால் 5-வது  6-வது ஸ்தானங்களில் இருப்பதற்குக்கூட தகுதி உடையவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்பட மாட்டார்கள். மகாகனம் சாஸ்திரிக்கு தோழர்கள் கோக்கேல், காந்தி ஆகியவர்கள் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் ஆதரவு கொடுத்தும் அரசாங்கத்திற்கு சிபார்சு செய்தும் இந்தியாவிலுள்ள “முக்கிய” பத்திரிகைகள் என்பனவெல்லாம்  (பார்ப்பனர்களை ஆசிரியராகவும், நிருபர்களாகவும் கொண்டிருக்கும் காரணத்தால்)...

இராணுவம்

இராணுவம்

இந்திய சட்டசபை வரவு செலவு திட்டத்தின் விவாதத்தின் போது ராணுவ சம்மந்தமாய் பேசிய பல இந்திய பிரதிநிதிகள் என்னும் கனவான்கள் ராணுவத்தை இந்திய மயமாக்கவேண்டும் என்றும் இந்தியர்களையே ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் வாதம் செய்திருக் கிறார்கள். ஒவ்வொரு தேச மக்களையும் அடிமைகளாக்கி அத்தேச சரீர உழைப்பாளிகளினுடைய உழைப்பின் பயன்களை யெல்லாம் சோம்பேரி களும், சூட்சிக்காரர்களும் அனுபவித்துக் கொண்டிருப்பதற்கும், மனிதர் களுக்கு சுயமரியாதை உணர்ச்சியில்லாமல் மதம், கடவுள், அரசன் என்னும் பெயர்களால் வேதம், விதி சட்டம் என்பவைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணமாயிருப்பது இந்த ராணுவ ஸ்தாபனமேயாகும்.  எப்படி யெனில் கடவுள் கட்டளையால் ஏற்பட்ட வேதத்தின் கொள்கையை அனுசரித் துச் செய்யப்பட்ட சட்டத்தை நிர்வகித்து வரும் அரச ஆட்சிக்கு எதிராக ஏற்படும் கிளர்ச்சிகளையும், சாதனங்களையும் அடக்கி, ஒடுக்கி அழிக்கவே ராணுவம் என்பது வெகு காலமாக இருந்து வருகின்றது. இந்த ராணுவத்திற்கு ஏற்படும் செலவுகள் அவ்வளவும் சரீரத்தால் பாடுபட்டுழைக்கும் மக்களின் உழைப்பின் பயனிலிருந்தே கொடுக்கப்படு...

பார்ப்பனர்களின் தேசியம்  – சித்திரபுத்திரன்

பார்ப்பனர்களின் தேசியம் – சித்திரபுத்திரன்

  பார்ப்பனர்கள் என்ன நோக்கத்துடன் தேசியம் தேசியம் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்பதைப் பற்றி பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக்கிறேன். தேசியம் என்ற சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு காரணமே பார்ப்பனீயமான சனாதன தர்மங்களை பலப்படுத்தவே ஒழிய வேறில்லை. தேசியம் என்கின்ற வார்த்தைக்கு அநேகமாய் மக்கள் மனதில் இத்தேசத்திய பழைய நாகரீகம் சனாதனதர்மம் பழக்க வழக்கம் என்பவை களையே பிரதானமாகக் கொள்ளும்படி பிரசாரம் செய்து வந்ததும் அதற்காக இந்தியபுராண இதிகாசங்களை ஆதாரமாக எடுத்துக் காட்டி பிரசாரம் செய்து வந்ததும் வாசகர்கள் அறிந்ததே. இக்கருத்தைக் கொண்டேதான் கராச்சி காங்கிரஸ் சுயராஜ்ய திட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது. மற்றும் இந்திய நாட்டை “பாரத மாதா” (பூமிதேவி) என்று அழைப்பதும் “பாரததேசம்” என்று சொல்லு வதும் எல்லாம் இக்கருத்தை ஆதாரமாய்க்கொண்டதே ஒழிய வேறில்லை. தேசீயம் என்பதற்கு அரசியலை சம்பந்தப்படுத்திய கருத்தும் இந்தியாவின் பழைய நாகரீகத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் ஏற்ற அரசியலை ஸ்தாபிக்கச் செய்த சூழ்ச்சியே தவிர வேறல்ல....

ஸ்தல ஸ்தாபன சுயாக்ஷிகளின் மோசம்  ஐ

ஸ்தல ஸ்தாபன சுயாக்ஷிகளின் மோசம் ஐ

இன்று இந்தியாவில் சுய ஆட்சியின் பேரால் நடைபெறும் அக் கிரமங்கள் – அயோக்கியத்தனங்கள் – ஒழுக்க ஈனங்கள் – நாணையக் குறைவு கள் ஆகியவைகளில் எல்லாம் தலைசிறந்து விளங்குவது ஸ்தல சுயாட்சியென்று சொல்லப்படும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களேயாகும் என்று வெற்றி முரசுடன் கூறலாம்.                         நம்நாட்டு ஸ்தல ஸ்தாபன உலகத்தை எடுத்துக்கொண்டோமே யானால் அதன் தலைப்பு முதல் கடைசி வரையில் உள்ள ஒவ்வொரு நிலை மையும் தீவத்திக்கொள்ளை போலவே நடந்து வருகின்றனவே அல்லாமல் மற்றபடி அவை யாருக்காக – யாது காரணத்திற்காக ஏற்பட்டதோ அந்த தத்து வம் சிறிதும் இல்லாததை ஸ்தல ஸ்தாபன வாழ்வில் கலந்துள்ள அனுபவ முள்ள எவரும் சுலபத்தில் அறியலாம். மற்றும் இந்தியாவுக்காக கேட்கப்படும் சுயாட்சியும் இந்தியாவுக்காக அளிக்கப்படும் சுயாட்சியும் ஏழை மக்களையும், பாமர மக்களையும் ஏமாற்றி வதைத்து பணக்காரரும், சோம்பேரிகளும், காலிகளும் வாழ்வதற்கும் கொள்ளை அடிப்பதற்கும் ஏற்றதே ஒழிய வேறில்லை என்பதும் நன்றாய் விளங்கும். இன்றைய ஸ்தல...

ஈரோடு பெண் பாடசாலையில்              பெற்றோர்கள் தினம்

ஈரோடு பெண் பாடசாலையில்              பெற்றோர்கள் தினம்

ஈரோடு கவர்ன்மெண்ட் பெண்கள் பாடசாலையின் பெற்றோர்கள் தினவிழாவானது ஈரோடு மகாஜன ஹைஸ்கூல் சரஸ்வதி ஹாலில் தோழர் இ,எஸ். கணபதி அய்யரவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது கொண்டாட்டத்திற்கு பெரியவர்களும் குழந்தைகளுமாக சுமார் 1000 பேருக்கு மேலாகவே கூடி இருந்தார்கள், பெண்கள் அதிகமாகக் காணப்பட்டார்கள். விழாவானது கும்மி, கோலாட்டம் சிறு விளையாட்டு முதலியவை களுடன் நடந்த தென்றாலும் அவற்றுள் சாவித்திரி சத்தியவான் என்கின்ற ஒரு புராணக்கதையை நாடகரூபமாக நடத்திக் காட்டப்பட்டதானது மிகவும் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. நாடக பாத்திரங்கள் எல்லாம் சுமார் 10 வயது முதல் 16 வயதுக்குள்பட்ட அப்பள்ளிக்கூட மாணவப் பெண்களாகவே இருந் தார்கள். நாடகமானது கூடியவரை மிகவும் அருமையாக நடித்துக் காட்டப் பட்டது. இம்மாதிரியாக ஒரு நாடகம் நடித்துக் காட்ட அம்மாணவிகளை தர்ப்பித்து செய்த பெண் பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயரும், மற்றும் உதவி உபாத்தியாயர்களும் பாராட்டப் படத்தக்கவர்களே ஆவார்கள். மாணவர்களுடைய அறிவும் சுபாவ ஞானமும் சிலாகிக்கத் தக்கவையாகும். ஆனால் ஒரு விஷயம் குறிப்பிடாமல் இருக்க...

விருதுநகரில் சுயமரியாதைப் பொதுக்கூட்டம்

விருதுநகரில் சுயமரியாதைப் பொதுக்கூட்டம்

தோழர்களே! எனது ஐரோப்பிய யாத்திரையிலோ குறிப்பாக ரஷிய யாத்திரையிலோ நான் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை.  ஆனால் நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும் அக்கொள்கைகளால் தான் உலகமே விடுதலையும் சாந்தியும் சமாதானமும் அடையக்கூடும்  என்று தெரிந்தேன்.  இதுதான் உங்களுக்கு ஐரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என் கின்ற முறையில் சொல்லும் சேதியாகும்.  நாம் இந்த 7,  8 வருஷ காலமாகவே படிப்படியாய் முன்னேறி வந்திருக் கின்றோம் என்பதை நமது இயக்க வேலையை முதலில் இருந்து கவனித்து வந்திருப்பவர்களுக்கு நன்றாய்த் தெரியும்.  சுமார் 15,  20 வருஷங்களுக்கு முன்பாக நாம் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று கருதினாலும் எது மக்களுக்கு நன்மையானது என்று கருதினாலும் அதையெல்லாம் அரசாங்கத்தைக் கொண்டே செய்யச் சொல்லி கெஞ்சுவோம்.  அதற்கு பார்ப்பனர்களையே தரகர்களாய் வைத்து அவர்கள் சொன்னபடி யெல்லாம் கேட்டு அவர்கள் பின்னால் திரிவோம்,  அவர்கள் சொல்லுவதையே நன்மை என்று...

ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை

ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை

 ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை அதிகரித்து விட்டதென்றும் இதன் பயனாய் காலித்தனங்களும், பொதுஜன சாவதானத்துக்கு அசௌகரி யங்களும் ஏற்பட்டு பல திருட்டு, ரகளை, அடிதடி, ஆபாசப் பேச்சுவார்த்தை கள் முதலியவைகளும் ஏற்படுகின்றன என்று 29-1-33 தேதி “குடி அரசு”ப் பத்திரிகையில் எழுதியிருந்ததுடன் இவற்றைச் சீக்கிரத்தில் ஒழிக்கபோலீசார் தக்க முயற்சிகள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும், விபசாரத் தடுப்பு சட்டத்தின் அமுல் ஈரோட்டிற்கும் கொண்டுவர வேண்டுமென்றும் தெரிவித் துக்கொண்டோம்.  சமீபத்தில் ஈரோடு போலீசு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவர்கள்  சிறிது கவலை கொண்டு ஏதோ சில எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்ட தாகவும் தெரிகின்றது.  ஆனால் காரியத்தில் தக்க மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டதாய் தெரியவில்லை.  ஆகையால் இப்போதும் பல தோழர்கள் முயற்சி எடுத்து போலீசு சூப்ரண்ட்டெண்ட் அவர்களுக்கு இக்கஷ்டங்களைக் குறித்து விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதாகத் தெரிகின்றது.  அதில் தோழர்கள், மு.ச. முத்துக்கருப்பஞ் செட்டியார், ஆர். பழனியப்ப செட்டியார். ஈ. என். குப்புசாமி ஆச்சாரி, எ. கோவிந்தசாமி...

உண்மைத் தோழர் மறைந்தார்

உண்மைத் தோழர் மறைந்தார்

சுயமரியாதை இயக்கத்தின் உண்மைத் தோழர் எஸ். ராமச்சந்திரன் அவர்கள் 26-2-33 ந் தேதி மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் நாம் திடுக்கிட்டுப் போய் விட்டோம்.  நாம் மாத்திரமல்ல, சுயமரியாதை இயக்கத்தில் கடுகளவு ஆர்வமுள்ள எவரும் இச்சேதி கேட்டவுடன் திடுக் கிட்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.  தோழர் ராமச்சந்திரனை இழந்தது சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரு நஷ்டமேயாகும். தோழர் ராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும் மனதில் உள்ளதை சிறிதும் எவ்விதி தாட்சண்யத் திற்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது என்பது மிக மிக அரிதேயாகும். பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக என்ற கிளர்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் வீறு கொண்டிருந்த காலத்தில் தோழர் ராமச்சந்திரன் அவர்கள் தாலூக்கா போர்டு முதலிய பல ஸ்தாபனங்களில் தலைவராய் இருந்த சமயம் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது “இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தி...

காங்கிரசும் ஒத்துழைப்பும்

காங்கிரசும் ஒத்துழைப்பும்

சுயமரியாதை இயக்கத்திற்குள்ளாக சுயமரியாதை சமதர்மக்கட்சி என்ப தாக ஒருகிளை தோன்றி அது சட்டசபை ஸ்தல ஸ்தாபனங்கள் முதலியவை களைக் கைப்பற்றவேண்டும் என்ற ஏற்பாடுகளைச் செய்தவுடன் காங்கிரஸ் தலைவர்கள் என்போர்கள் சிலருக்குள்ளும் சட்டசபைக்குச் செல்லவேண்டும் என்கின்ற ஆசை தோன்றி அதை வெளிப்படுத்த சமயம் பார்த்துக்கொண்டே இருந்து அதற்கு சில சாக்குகள் ஏற்பாடு செய்து இப்போது மெள்ள மெள்ள வெளியாக்கிவிட்டார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “காங்கிரசுக்காரர்கள் வைதீகர்களைப்போல் பிடிவாதக் காரர்கள் அல்ல.  அவர்களுக்கு சட்டசபைகளின் மூலம் பலன் ஏற்படும் என்று தோன்றினால் உடனே சட்ட சபைகளுக்குச் செல்வார்கள்” என்று குறிப்பிட்டி ருந்ததை வாசகர்கள் படித்திருக்கலாம். இந்த அறிக்கையின் கருத்தானது காங்கிரஸ் சட்டசபை நுழைவை அனுமதிக்கப்போகின்றதென்றும், ஆகை யால் சட்டசபை செல்ல ஆசையுள்ளவர்கள் காங்கிரசை விட்டு விட்டு வேறு கட்சியில் சேர்ந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளுவதேயாகும்.  அன்றியும் அதற்கேற்றாற்போல் சட்டசபைகளை லக்ஷியம் செய்தும் ஆதரித்தும் தோழர் காந்தியவர்கள் “அநேக...

சேலத்தில்                                                            ஈ. வெ. ராமசாமி, முத்துச்சாமி வல்லத்தரசு  வரவேற்புப்பத்திரங்கள் – பொதுக்கூட்டம்          

சேலத்தில்                                                            ஈ. வெ. ராமசாமி, முத்துச்சாமி வல்லத்தரசு வரவேற்புப்பத்திரங்கள் – பொதுக்கூட்டம்          

தலைவரவர்களே! தோழர்களே! ! தலைவரவர்கள் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியதில் நான் மேல் நாட்டிற்குச் சென்றதில் ஏதோ பல அறிய விஷயங்களை அறிந்து கொண்டு வந்திருப்பதாக கூறி நான் ஏதோ பல அரிய விஷயங்களை சாதித்து இருப்ப தாகவும் கூறினார்.  நான் எனது மேல் நாட்டு சுற்றுப்பிராயணத்தில் ஒன்றும் புதிதாக கற்றுக்கொண்டு வரவில்லை. என்னுடைய அபிப்பிராயங்களும், எண்ணங்களும், ஆசைகளும் எனது மேல்நாட்டு சுற்றுப் பிரயாணத்தால் பலப்பட்டன, அசைக்க முடியாத அளவு உறுதி கொண்டு விட்டன. மற்றும் எனது ஆசை வெறும் கனவு ஆசை அல்லவென்றும், எனது அபிப்பிராயம் நடைமுறையில் சாத்தியமில்லாத ஆகாயக்கோட்டை அபிப்பிராயம் அல்ல என்றும், நான் எதையும் அமிதமாக எண்ணி மனப்பால் குடிக்கவில்லை என்றும் உணர்ந்தேன். அதற்கு ஆதாரமாக அநேக விஷயங்களை பிரத்தி யக்ஷத்தில் பார்த்து எனது கொள்கையும் ஆசையும் சாத்தியமே என்றும், சர்வ சாதாரணமே என்றும் அறிந்தேன். இது தான் எனது மேல் நாட்டுச் சுற்றுப் பிராயணச்சேதியென்றும் சுற்றுப்பிரயாண அனுபவமென்றும்...

காந்தியின் ஆலயப் பிரவேச நோக்கம்

காந்தியின் ஆலயப் பிரவேச நோக்கம்

தோழர் காந்தியவர்கள் தாழ்த்தப்பட்ட தலைவர் ஒருவருக்கு ஆலயப் பிரவேச நோக்கத்தைப் பற்றி எழுதிய நோக்கத்தில் அடியில் கண்டகுறிப்புகள் காணப்படுகின்றன. அவையாவன:- “ஆலயப்பிரவேசத்தால் மட்டும் தீண்டாமை தீர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை” “ஆனால் பிறருடன் சரிசமமாக ஆலயப்பிரவேச உரிமை பெறாதவரை தீண்டாமை தீராது” “ஆலயப் பிரவேசத்தால் பொருளாதாரம் கல்வி முன்னேற்றம் ஏற்படும்” என்ற குறிப்புகள் இருக்கின்றன. இவைகளில் ஏதாவது இன்றைய அநுபவத்திற்கு ஒத்து இருக்கின்றதா என்பதை யோசிக்கவேண்டும். இந்து மதத்தில் தீண்டாத ஜாதியார் என்கின்ற கூட்டமல்லாமல் தீண்டக்கூடிய மக்கள் பல கோடிக்கணக்கான பேர்கள் ஆலயப்பிரவேச சம உரிமையை தாராளமாய் அனுபவித்து வருபவர்களாகவே இருந்தும் பல வகுப்புகளில் இன்று நூற் றுக்கு தொண்ணூற்றேழு பேர்கள் தற்குறிகளாகவும், நூற்றுக்கு தொண்ணூற் றொன்பது பேர் போதிய இடமும் துணியும் உடையும் இல்லாமலும் அவர் களது பிள்ளை குட்டிகளுக்கு கல்வி கொடுக்கவோ நோய்க்கு மருந்து கொடுக்கவோ முடியாமலும் இருப்பதின் காரணம் என்னவென்று கேட் கின்றோம். இன்று மக்களுக்கு...

வருணாச்சிரமம்

வருணாச்சிரமம்

சென்றவாரக் “குடியரசு” பத்திரிகையின் தலையங்கத்தில் “இரகசியம் வெளிப் பட்டதா? என்ற தலைப்பில் காந்தியவர்களினுடையவும், காங்கிர சினுடையவும், அரசியல், சட்டமறுப்புக் கிளர்ச்சியின் தத்துவம் இன்னது என்பதை ஒருவாறு விளக்கினோம். ஆனால் அத்தலையங்கத்தின் இறுதியில் காந்தியின் வருணாச்சிரமத்தைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவதாக எழுதியிருந்தோம். அந்தப்படியே இவ்வாரம் “வருணாச்சிரமம்” என்பது பற்றி சில விஷயங்கள் எழுதுகின்றோம். வருணாச்சிரமம் என்பதைப்பற்றி இதற்கு முன் பல தடவை எழுதி இருக்கிறோம். ஆதியில் நாம் வருணாச் சிரமத்தைப் பற்றி எழுதிய காலத்தில் சில தேசீய வாதிகள் காந்தியின் வருணாச்சிரமம் இன்னது என்பதை நாம் அறியாமையால் குற்றம் சொல்லுவதாக பல “தேசியவாதிகளும்” “தேசீயப்பத்திரிகைகளும்” நம் மீது பழி சுமத்தி வந்தன. ஆனால், தோழர் காந்தியவர்களே தனது வருணாச் சிரமத்துக்கு நன்றாய் வெளிப்படையான வியாக்கியானம் செய்த பிறகு, அதாவது தேசிய வாதிகள் வேதத்தைப் போல் வாசித்து வந்த “யங் இந்தியா” என்ற பத்திரிகையில் எழுதிய பிறகு “இந்த ஒரு விஷயத்தில் (வருணாச்...

திருவாங்கூரில் சமதர்ம முழக்கம்

திருவாங்கூரில் சமதர்ம முழக்கம்

தோழர்களே! இன்று நான் பேசப்போவது உங்களுக்கு சந்தோஷமாக இருக்காது. ஏனெனில் நீங்கள் அநேகமாய் இன்று இங்கு நடக்கும் உற்சவத் திற்காக வந்தவர்கள். மிகுந்த பக்திவான்கள். நானோ அவற்றையெல்லாம் வீண் தெண்டம் என்றும், புரட்டு என்றும் சொல்லுகிறவன். அதுமாத்திரமல் லாமல் உங்களது கடவுள் உணர்ச்சி, மத உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, தேச உணர்ச்சி ஆகியவைகளையும், உங்களது சமூகத்தில் வெகுகாலமாய் இருந்துவரும் பழக்க வழக்கங்களையும் குற்றம் சொல்வதோடல்லாமல் அடியோடு அழித்து ஒழித்துவிட வேண்டுமென்றும் சொல்லுகின்றவன். இதை நீங்கள் பொறுத்துக் கொண்டிருப்பீர்களா என்பது எனது முதல் சந்தேகமாகும். நீங்கள் பொறுத்தாலும் சரி பொறுக்காவிட்டாலும் சரி அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால் உங்களிடம் நான் முதலிலேயே என்னிஷ்டப் படி பேச அனுமதி வாங்கிவிட்டேன். ஆனால் நீங்கள் நான் பேசப்போவதைப் பற்றி வருத்தப்படுவதற்குமுன் ஒரு விஷயத்தை மாத்திரம் கவனித்துப்பார்க் கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். அதென்னவென்றால் நான் ஏன் இப்படிப் பேசுகிறேன். இதனால் எனக்கு என்ன லாபம்? இந்தப்படி பேசுவதனால் யாராவது...

எதை நம்புவது!  – சித்திரபுத்திரன்

எதை நம்புவது! – சித்திரபுத்திரன்

    தீண்டாமையை ஒழிக்கப்பட்டினி கிடக்கும்படி கடவுள் கட்டளை இட்டிருப்பதாக காந்தி சொல்லுகிறார். தீண்டாமையை நிலை நிறுத்துவதற்காக யானை குதிரைகளுடன் பல்லக்கு சவாரி செய்யும்படி கடவுள் கட்டளையிட்டிருப்பதாக சங்கராச்சாரி யார் சொல்லுகிறார். அவனன்றி ஓரணுவும் அசையாது.  ஆதலால் மேற்கண்ட இரண்டு காரியங்களும் கடவுள் திருவிளையாடல் என்று கடவுள் பக்தர்களான ஆஸ்தி கர்கள் சொல்லுகிறார்கள். இந்த மூன்றும் முட்டாள் தனமும், சுயநலம் கொண்ட போக்கிரித் தனமும், பித்தலாட்டமும், ஏமாற்றலும் அல்லது இதில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய வேறில்லை என்றும் ரஷியர்கள் சொல்லுகிறார்கள். இவற்றுள் எதை நம்புவது, எதை நம்பினால் உண்மையில் தீண்டாமை ஒழிய முடியும்? குடி அரசு – கட்டுரை – 26.2.1933

“மாமாங்கத்தின் அற்புதம்”  – சித்திரபுத்திரன்

“மாமாங்கத்தின் அற்புதம்” – சித்திரபுத்திரன்

  புராணமரியாதைக்காரன் கேள்வி:- ஐயா, சுயமரியாதைக்காரரே கும்ப கோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம். சுயமரியாதைக்காரன் பதில்:- என்ன அற்புதமய்யா? பு–ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேராய் இருந்தபோதிலும், கூழாயிருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை.  இதற்கு பதில் சொல் பார்ப்போம். சு–ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான்.  இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவுசெய்து கேள்க்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத் தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும். அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள் தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேரு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிரமாக ஆகிவிடும். குளிக்கிர ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்று வேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த...

மாமாங்கத்தில் பார்ப்பன கும்மாளம்

மாமாங்கத்தில் பார்ப்பன கும்மாளம்

கும்பகோண மாமாங்கம் பார்ப்பனர்கள் புரட்டு என்றும், அவர்களது விளம்பரங்களுக்கும் பெருமைக்கும், லாபத்துக்கும் ஆதாரம் என்றும் நாம் சொன்னோம்.  இப்போது அது சரியா? இல்லையா? பாருங்கள். “தோழர்கள் ரங்கசாமி ஐயங்கார் பொருட்காட்சியை திறந்தார். சி. ஆர். சீனிவாசய்யங்கார் சங்கீத மகாநாட்டைத் திறந்தார், விசாலாட்சி பாடினார். முத்தையா பாகவதர் கதை செய்தார். டி.பி. கல்யாணராம சாஸ்திரிகள் வரவேற்பு தலைவர். ராமசாமி அய்யர், டைகர் வரதாச்சாரியார், கணபதி சாஸ்திரி, அலமேலு ஜெயராமய்யர், மற்றும் குமரய்யர், சுப்பைய்யர், ராமசாமி சாஸ்திரி, ரங்காச்சாரி, சுந்தரகனபாடி, சிங்கார கனபாடி, ஆச்சாரிய ஸ்வாமிகள் என்றெல்லாம் பார்ப்பன நபர்களே எங்கும் தோன்றுவதும் ஏதோ இரண்டொரு பார்ப்பனரல்லா முண்டங்கள் இவர்களுக்கு வால்பிடிப்பதுமாய் இருப்பதை அவர்களது (பார்ப்பனர்களது) பத்திரிகைகளிலேயே காணலாம். ஆகவே மாமாங்கம் பார்ப்பனர் சூட்சி என்றும், அவர்களது வாழ்வுக்கே ஏற்பட்டதென்றும் சொல்லுவதில் என்ன பிழை இருக்கிறது. இதை பார்ப்பனரல்லாத சோணகிரிகள் உணர வேண்டாமா? குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு – 19.02.1933

‘மெயில்’ பத்திரிகையின் கூற்று

‘மெயில்’ பத்திரிகையின் கூற்று

சென்னை “மெயில்” பத்திரிகையானது தனது 11-2-33 தேதி தலையங் கத்தில் எழுதுவதாவது:- “சுயமரியாதை இயக்கமானது எல்லா மதங்களையும் துணிகரமாகத் தாக்கி வருவதுடன் மதங்களை அழிக்க வேண்டுமென்று பலமான பிரசாரம் செய்து வருகிறது. இதற்குக் காரணம் சர்க்கார் மத நடுநிலைமை வகித்தி ருக்கிறது என்ற ஒரே சாக்குத்தான். இதன் பயனாய் இப்பொழுது மத விஷய மான பிரசாரங்களுக்கு பொது மேடைகளில் இடமில்லாமல் போய் விட்டது. கோவிலிலும், பள்ளிவாசல்களிலும், சர்ச்சுகளிலும் மாத்திரம் தான் தனியாய் பேச முடிகின்றது. இதனால் சோவியத் ரஷியாவில் மதம் அழிந்தது அத் தேசம் நாசமுற்றது போல் இங்கும் நேரலாம் என்று கருத இடமேற்படுகின்றது. மத விஷயம் மறுபடியும் பொது மேடைகளுக்கு தாராளமாய் வரவேண்டு மானால் பள்ளிக்கூடங்களில் மதத்தைப் புகுத்தியாக வேண்டும்.  தோழர் காந்தியையும் தீண்டாமை விலக்குப் பிரசாரம் செய்வதை விட்டு விட்டு சுயமரியாதைக் கட்சியை ஒழித்து அதன் பிரசாரத்தை அடக்கும் விஷயத்தில் பாடுபட்டால் அது மிகவும் பயனளிக்கும்” என்பது விளங்க...

மாமாங்கம்

மாமாங்கம்

கும்பகோணத்தில் நடைபெறப்போகும் மாமாங்க விஷயமாய் சென்ற வாரம் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். மாமாங்கம் என்பது இந்து மதத்தில் சம்மந்தப்பட்ட ஒரு புண்ணிய (நல்ல) காரியமாக பாவிக்கப்படு கின்றது என்றாலும், அது பெரிதும் சுயநலக்காரர்களாகிய முதலாளிமார்கள், சோம்பேரி வாழ்க்கைக்காரர்கள் ஆகிய இருகூட்டத்தாரின் விளம்பரங்களின் மூலமாகவே அது பிரபலப்பட்டு மக்கள் அதில் ஈடுபடுகின்றார்கள். மாமாங்கத்தை விளம்பரம் செய்யும் இவர்கள் மூன்று வகையாவார்கள். ஒன்று பார்ப்பனர்கள், இரண்டு வியாபாரிகள், மூன்று ரயில்வேக்காரர்கள். இம் மூவருக்கும் அனுகூலக்காரராகவும் கூலிக்காரராகவும் இருக்கும் சில பத்திரிகைக்காரர்கள் மூலமே அதிக விளம்பரமாகின்றது. இதன் பயனாய் மாமாங்கத்திற்கு பல ஜனங்கள் வருவார்கள் என்று நாடகக்காரர்கள், சினிமாக்காரர்கள், சூதாட்டக்காரர்கள், விபசாரக் குச்சிக் காரிகள் மற்றும் முடிச்சவிழ்க்கும் (சட்டைப் பை) திருடர், தந்தித்திருடர், கத்திரிக் கோல் திருடர் முதலிய திருட்டுவகைக்காரர்களும் ஏராளமாய் வந்து, தங்கள் தங்கள் தொழில்களை நடத்துவார்கள். அங்கு ஏற்கனவே உள்ள சாராயக்கடைகளிலும் வெகு நெருக்கடியாய் வியாபாரம் நடக்கும். இவைகள் தவிர அரிசி, பருப்பு, உப்பு,...

ரகசியம் வெளிப்பட்டதா?

ரகசியம் வெளிப்பட்டதா?

காங்கிரசினுடையவும், காந்தியினுடையவும், கொள்கைகளும் அது சம்பந்தமான கிளர்ச்சிகளும்,  முதலாளிமார்களுக்கும், உயர்ந்த ஜாதிக் காரர்கள் என்பவர்களுக்கும் மாத்திரமே நன்மை பயக்கத் தக்கதென்றும், காங்கிரசும், காந்தியும், பணக்கார முதலாளிகளுடையவும், ‘படிப்பாளி’ களாகிய சோம்பேரிகளுடையவும் ஆயுதங்களே என்றும் இந்த 7, 8 வருஷ காலமாகவே நாம் தெரிவித்துக்கொண்டு வந்திருக்கின்றோம். இதன் பயனாய் தேசியப்புலிகள்-தேசபக்த வீரர்கள் என்பவர்கள் நம்மீது சீறிப்பாய்ந்து  நம்மை தேசத்துரோகி என்றும், மதத்துரோகி என்றும்  பட்டம் சூட்டி கண்டபடி வைததோடல்லாமல் குத்திவிடுவதாகவும், சுட்டு விடுவதாகவும் வீரம் பேசி ரத்தத்தில் (தோய்த்து) கையெழுத்துச் செய்த பல எச்சரிக்கைக் கடிதங்களையும் அனுப்பினார்கள். இவை மாத்திரமல்லாமல் தேசியப்பத்திரிகை என்பவைகளும்  மதப் பத்திரிகை என்பவைகளும் நமக்கு இழைத்த  தீங்குகளுக்கும்  கொடுத்த தொல்லைகளுக்கும்  அளவேயில்லை. ராமசாமியையும் சுயமரியாதை இயக்கத்தையும் அடியோடு ஒழித்தாலொழிய தேசியம் வெற்றிபெறாது என்றும், இவற்றை ஒழிப்பதே ஒரு பெரிய  தேசிய வேலை என்றும் பேசி னார்கள், எழுதினார்கள். சோம்பேரிகளையும் காலிகளையும் ஏவியும் விட்டார்கள். மற்றும் மேடையில் ஏறிப்பேச சௌகரியம்...

காங்கிரஸ் ஸ்தம்பித்து விட்டது

காங்கிரஸ் ஸ்தம்பித்து விட்டது

‘சுதேசமித்ரன்’ ‘தமிழ் நாடு’ ‘இந்து’ அபிப்பிராயம் தற்கால காங்கிரஸ் நிலமையை பற்றி  “சுதேசமித்திரன்” பத்திரிகையில் நாளது மாதம் 11-ந் தேதி தலையங்கத்தில் காணப்படும் சில குறிப்புகளாவன:- “இந்தியாவில் தற்கால நிலையில் சீர்திருத்தங்களுக்காகப் போராடி வற்புறுத்தும் சக்திகள் குறைந்து கொண்டிருக்கின்றன. சீர்திருத்தங்களுக்காக  வெகுவாக பிரயாசைப்பட்ட தேசீய உணர்ச்சியானது தலைவரிழந்து சக்தி குறைந்து வருகிறது”. “இந்நிலையை எவ்விதம் பரிகரிப்பது?  சோர்வடைந்திருக்கும் ராஜிய கிளர்ச்சிக்கு எவ்விதம் புத்துயிரளிப்பது”. “காங்கிரஸ் ஸ்தாபனமானது, தனது சக்திகளை, பல துறைகளில், பல பிரச்சனைகளில் திருப்பி வலுவற்றதாகச் செய்துக்கொள்ளக்கூடாது. இதர பிரச்சனைகள் சமுதாய வாழ்விற்கு எவ்வளவு முக்கியமானதாயினும், இந்த சமயத்தில்  ராஜிய பிரச்சனையே முதல் பெறவேண்டும். சட்ட மறுப்பு கொள்கை வெற்றி பெறுவதற்கு, ஆதியில் எவ்வளவு சௌகரியங்களிருந்த போதிலும் தற்காலம் அது பயன்படாதென்றோ அல்லது அதற்குத் தேவையான உணர்ச்சி தேசத்தில் இல்லையென்றோ அவர்கள் கருதுவார் களானால், உடனே தேசத்தின் நலத்தை உத்தேசித்து தங்கள் திட்டத்தை திருத்தி அமைத்து விடவேண்டும்”. என்ற குறிப்புகள்...

ஈ.வெ.ராவுக்கு சென்னிமலை யூனியன் போர்டார் வரவேற்பு

ஈ.வெ.ராவுக்கு சென்னிமலை யூனியன் போர்டார் வரவேற்பு

தோழர்களே! இன்று இவ்வூர் யூனியன் போர்டார் அழைப்புக்கு இணங்கி வந்த சமயம் உற்சவக் கூட்டத்திற்காக ஒரு பொதுக்கூட்டம் கூட்ட வேண்டுமென்று சொன்னதால் இங்கு பேச ஒப்புக்கொண்டேன். ஆனால் இங்கு கூடியிருக்கும் நீங்கள் பெரிதும் இந்த உற்சவத்திற்காக வந்தவர்கள். நான் பேசும் விஷயம் உங்கள் மனத்திற்கு திருப்தியாய் இருக்காது, ஆனாலும் உங்கள் மனதை புண்படுத்தவேண்டும் என்று நான் பேசவர வில்லை. ஆனால் இதன் பயன் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளவே நான் சில விஷயங்களைப் பேசுகிறேன். இன்றைய உற்சவமும், கொண்டாட்டமும் என்ன கருத்தைக் கொண் டது? சுப்பிரமணியசாமிக்கு கல்யாணம். கல்யாணம்  செய்து கொண்ட சாமி தேர்மீது ஊர்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு வாசல், வேலை வியாபாரம் முதலியவைகளை விட்டு விட்டு வந்து இன்று இங்கு கூட்டத்தில் நெருக்கப்படுகிறார்கள். பலர் காவடி தூக்கி ஆடுகிறார்கள்.  சாமிக்குக் கல்யாணம் என்பதில் ஏதாவது அறிவு இருக்கிறதா? வருஷந்தோறுமா கல்யாணம் செய்வது? இந்த...

ரஷியாவும் அட்வெகோட் ஜெனரலும்

ரஷியாவும் அட்வெகோட் ஜெனரலும்

ருஷ்ய (பொது உடமை)க் கொள்கைளைப் பற்றி பேசுவதோ, பிரசாரம் செய்வதோ குற்றமான தென்பதாகப் பல நண்பர்கள்  பயந்து அடிக்கடி புத்தி கூறி வருகின்றார்கள். பலர் இதை எடுத்துக்காட்டி பாமர ஜனங்களை மிரட்டி வருகின்றார்கள். ஆனால்  இவர்களை யெல்லாம் பைத்தியக்காரர்களாக்கத் தக்க வண்ணமும், வீண் பூச்சாண்டி காட்டி. பயப்படுத்துகின்றவர்களாக்கும் வண்ண மும், சென்னை மாகாண சட்ட நிபுணரும், அட்வொகேட் ஜெனரலும் (சர்க்கா ருக்கு சட்ட சம்பந்தமான யோசனை சொல்லு பவரும்) ஆன தோழர் அல் லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் சென்னை ஓரியண்டல் யூனிவர்சிடி சங்கத்தின் ஆண்டு விழாவில் மாணவர்களிடையும் மற்றும் பண்டிதர் களிடையும் பேசும் போது நன்றாய் விளக்கிக்காட்டி இருக்கிறார். அதாவது, “ருஷியாவில் ஒரு திட்டம் ஏற்படுத்தி இருக்கிறார்கள், அதில் சில கெடுதல்கள் இருந்தாலும் மேலான நன்மைகளும் இருக்கின்றன. ருஷிய திட்டம் உலக முழுதுக்குமே நல்ல பாடம் கற்பிக்கக் கூடியதாய் இருக் கின்றது. கைத்தொழில் அபிவிர்த்தி விஷயத்தில் ருஷியா இப்போது உலகத்...

மகாமகம்

மகாமகம்

மகாமகம் அல்லது மாமாங்கம் என்பதாக ஒரு பெரிய திருவிழா அடுத்த மாதம்(மார்ச்சு மாதம்) 10 தேதியில் கும்பகோணத்தில் நடத்த ஏற்பாடு கள் வெகு துரிதமாக நடைபெற்று வருகின்றது. சுமார் ஒரு லட்சம் ஜனங்க ளுக்கு மேலாகவே வந்து கூடுவார்கள் என்று கணக்கிடப்பட்டு, ரயில்வேக் காரர்கள் பல பிளாட்டுப்பாரங்களையும், கொட்டகைகளையும் போடுகிறார் கள். அதற்குத் தகுந்தபடி கூட்டங்களை வரவழைக்க அநேகவித சித்திரப் படங்களை அச்சடித்து ரயில்வே ஸ்டேஷன்களின் மேடைகளில் எல்லாம் கட்டித் தொங்கவிட்டும், பத்திரிகைகளுக்குப் பணங்கொடுத்துப் பிரசுரிக்கும் படி செய்தும் மற்றும் பல வழிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள். சாதாரணமாகக் கும்பகோணமானது ஒரு அழகான பட்டணம் என்றோ, சுகாதார வசதியான பட்டணமென்றோ, வேறு ஏதாவது ஒரு வழியில் மக்கள் அறிவுக்கோ, தொழிலுக்கோ, பயன்படத் தகுந்த விசேஷம் பொருந் திய பட்டணமென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. அது ஒரு புராதனமான பட்டணம் என்பதோடு, நாளுக்குநாள் க்ஷீண திசை அடைந்துவரும் தோற்ற முடைய பழங்காலமுறைக் கட்டடங்களையும் உடைய...

“காருண்ய” சர்க்கார் கவனிக்குமா?

“காருண்ய” சர்க்கார் கவனிக்குமா?

விபசாரத் தடுப்பு மசோதா சென்னையிலும், மதுரையிலும், சீரங்கத் திலும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டாய்விட்டது. மற்றும் பல ஊர்களிலும் அமுலுக்குக் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாய் தெரிய வருகிறது. விபசாரத் தடுப்பு மசோதா அமுலுக்கு கொண்டுவர அவசியமாகின்ற பட்டணங்கள் எது எது என்று ஒருவர் அறிய விரும்பினால் அதற்காக கஷ்டப்பட்டு தகவல் தேடவேண்டிய அவசியமே இல்லை. ஒரே ஒரு சுருக்கமான வழியில் கண்டுபிடித்து விடலாம். எப்படி யென்றால் “இந்துமத” ஐதீகப்படி புராண சாஸ்த்திர நிச்சயப்படி, எந்த எந்த ஸ்தலங்கள் புண்ணிய nக்ஷத்திரங்களோ, அதாவது கண்ணால் பார்க்க முக்தி, காதால் கேட்க்க முக்தி, காலால் மிதிக்க முக்தி, நெஞ்சால் நினைக்க முக்தி, அதுமாத்திரமல்லாமல் எந்த எந்த nக்ஷத்திரங்களை கண்டவரைக் கண்டால் முக்தி, கேட்டவரைக் கேட்டால் முக்தி, நினைத்த வரை நினைத்தால் முக்தி, மிதித்த வரை மிதித்தால் முக்தி என்று இருக்கின்றனவோ அந்தந்த nக்ஷத்திரங்களையெல்லாம் குறித்து பட்டியல் போட்டோமேயானால் உடனே விபசாரத்தடுப்பு சட்டம் அமுலுக்கு வர வேண்டிய ஊர்கள் இவ்வளவுதான்...

புதுமை! புதுமை!!                                        என்றும் கேட்டிராத புதுமை!!!  – சித்திரபுத்திரன்

புதுமை! புதுமை!!                                        என்றும் கேட்டிராத புதுமை!!! – சித்திரபுத்திரன்

  புதுமை! புதுமை!! என்றும் கேட்டிராத புதுமை!!! என்றால் என்ன? முதலாவது:- வெகுநாளாய் மறைந்திருந்த சித்திரபுத்திரன் திடீரென்று தோன்றியது ஒரு புதுமை. இரண்டாவது:- சித்திரபுத்திரன் வெளியிடப் போகும் சேதி ஒரு புதுமை. மூன்றாவது:- வேடிக்கை புதுமை என்ன வென்றால், தோழர்களே! கும்பகோணத்தில் நடைபெறப்போகும் மகாமக விசேஷத்தில் ஒரு புதுமையான வியாபாரம் நடைபெறப் போகின்றது. தேசத்தில் பஞ்சம்! பஞ்சம்!! பணப்பஞ்சம்!!! நில்லு நில்லு யாருக்கு பஞ்சம்? சோற்றுக்கு இருந்தால் மாத்திரம் போதாது. நாடகத்துக்கு பணம் வேண்டாமா? குடிக்கிறதுக்கு பணம் வேண்டாமா? கூத்தியாளுக்கு பணம் வேண்டாமா? மோட்டாருக்கு பணம் வேண்டாமா? இந்த இழவுகள் எல்லாம் எப்படியோ போகட்டும் என்றால் எலக்ஷனுக்காவது பணம் வேண்டாமா? நில்லு நில்லு ஒரு சங்கதி என்னவென்றால் எலக்ஷனுக்கு பணம் என்னத் துக்கு? செலவு செய்த பணம் மெம்பர்-பிரசிடெண்ட் உத்தியோகம் கிடைத்த வுடன் சம்பாதித்து ஆன செலவும் போக மீதியும் ஏற்படுமே அதை ஏன் இதில் சேர்க்கிறாய் என்று கேட்பீர்கள்.  அது...

உள்ள கோவில்கள் போறாதா ?

உள்ள கோவில்கள் போறாதா ?

இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின் றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாக மாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒண்ணரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஓர் புதுக்கோயில் கட்டி அதில் ஆதிதிராவிடர்களை அனுமதித்திருக்கிறார்களாம். இதை தேசியப்பத்திரிகைகள் போற்றுகின்றன. இது என்ன அக்கிரமம்? எவ்வளவு முட்டாள்தனம்? என்பதையோ சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். பழய கோவில்களில் ஆதித்திராவிடர்களை விட வில்லையானால் அதற்காக புதுக்கோவில்கள் கட்டுவது பித்தலாட்டமான காரியமா? அல்லவா? தீண்டப்படாதவர்களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக்கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக்கோவில் கட்டி அவர்களுக்குப் பிரவேச மளித்துவிட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா என்று கேள்க்கின்றோம். தேசீயம் என்ற பித்தலாட்ட சூழ்ச்சி என்று ஆரம்பமானதோ அன்று முதல் இன்றுவரை தேசீயத்தலைவர் முதல், வாலர்கள் வரையில் ஒவ்வொரு விஷயத்திலும்...

“காந்தியின் மிரட்டல்”

“காந்தியின் மிரட்டல்”

காந்தியவர்கள் “உயிர் விடுகிறேன்! உயிர் விடுகிறேன்” என்று சர்க்காரை மிரட்டலாம், தாழ்த்தப்பட்ட வகுப்பாராகிய தீண்டப்படாதார் என்பவர்களை மிரட்டலாம்.  ஆனால் பார்ப்பனர்களை மாத்திரம் மிரட்ட முடியாது. ஏனென்றால் இந்த ‘மகாத்மா’ உயிர்விட்டால் அவருக்கு சமாதி கட்டி, குருபூஜை, உற்சவம் செய்யச் செய்து விட்டு அதன் பேராலும் பலருக்கு பிழைப்பு ஏற்படுத்திக் கொண்டு மற்றொரு மகாத்மாவையும் சிருஷ்டி செய்து கொள்ள அவர்களால் முடியும்.  ஆதலால் காந்தி மிரட்டல் பார்ப்பனர்களிடம் மாத்திரம் செல்லாது. ஆகையால் காந்தி மகாத்மா பட்டம் நிலைக்க வேண்டு மானால் ஹரிஜன சேவையை விட்டு விட்டு “மதத்திற்காகத்தான் சுயராஜியம் கேட்கின்றேன்” என்று உப்புக் காய்ச்சும் வேலைக்கோ, ராட்டினம் சுத்தும்படி செய்யும் வேலைக்கோ, ஏழைகள் பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப் படக் கூடாது என்ற உபதேசம் செய்யும் வேலைக்கோ திரும்புவது தான் நல்ல யோசனையாகும். இல்லா விட்டால் எப்படியாவது ராஜி செய்து கொள்ளுவது எல்லாவற்றையும் விட நல்லதாகும். குடி அரசு – கட்டுரை – 05.02.1933

வருந்துகிறோம்

வருந்துகிறோம்

சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு சதா உழைத்துவரும் மாயவரம் தோழர் சி. நடராஜன் அவர்களது அருமைத் தாயாரும் நாளது 1-2-33 தேதி காலை மரணமடைந்த சேதி கேட்டு வருந்துகிறோம். சென்ற 7, 8 மாதங்க ளுக்கு முன்புதான் தோழர் நடராஜனது தந்தையாரும், அவரது சகோதரியும் காலஞ்சென்றார்கள். அம்மையாரவர்கள் அன்று முதல் தனது கணவன் இறந்த துக்கத்தாலும், குமாரத்தி இறந்த துக்கத்தாலும் ஆழ்ந்தவராகி அதே கவலையாய் இருந்து இம்மாதம் முதல் தேதி காலமாகி விட்டார். இதெல்லாம் அதிசயமற்ற காரியமாயினும், இயற்கையேயாயினும் தந்தையையும், தாயை யும் 8 மாத காலத்தில் பரி கொடுக்க நேர்ந்த தோழர் நடராஜனவர்களைப் பற்றியும், அவரது இளைய சகோதரரான சப் ரிஜிஸ்டரார் தோழர். சி. சுப்பையா பி. ஏ. அவர்களைப் பற்றியும் அனுதாபப்படாமல் எவரும் இரா. அம்மை யாரவர்கள் கடைசிவரையிலும் மாயவரம் செல்லும் சுயமரியாதைத் தொண்டர் களுக்கும், அன்பர்களுக்கும் பொங்கிப் பொங்கிப் போடுவதில் சிறிதும் சலிப்பில்லாமல் சந்தோஷத்துடனேயே உபசரிப்பார்கள். பெரும்பான்மை யான...

தீண்டாமை விலக்கு இரகசியம்

தீண்டாமை விலக்கு இரகசியம்

இது சமயம் இந்தியாவில் நடைபெற்று வரும் “தீண்டாமை விலக்கு” வேலையானது தீண்டாதாரெனக் கருதப்படும் மக்களுக்கு சமூக வாழ்வி லுள்ள சகலவித கஷ்டத்தையும் ஒழிப்பதற்காக ஏற்பட்டதல்லவென்றும் அதுவெரும் இந்து மத பிரசாரத்திற்காகவே துவக்கப்பட்டு, அந்த முறை யிலேயே நடந்து வருகின்ற தென்றும் இதற்கு முன் பல தடவைகளில் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். உண்மையான தீண்டாமை விலக்கு என்பது மனித சமூக ஜீவ காருண்யத்தையும் எத்துறையிலும் சமதர்ம தத்துவத்தையும் கொண்டதே ஒழிய அது எந்த விதமான மத சம்பந்தத்தையும் கொண்டதல்ல வென்பதே நமது துணிபு. அன்றியும் அது பெரிதும் பகுத்தறிவையும், சுகாதாரத்தையும், சமதிருஷ்டியையும் மாத்திரமே கொண்டு யோசிக்கப்பட வேண்டியதே தவிர, மற்றபடி வேறு எந்த விஷயத்தையும் பற்றி கவனிக்க அதில் சிறிதும் இட மில்லை என்பதும் நமது துணிபாகும். ஆனால், இன்று நடைபெறும் தீண்டாமை விலக்கு பிரசாரம் என்ன கருத்தின் மீது என்ன ஆதாரத்தின் மீது நடைபெறுகின்றது என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். முதலாவதாக, இந்தப்...

கோவை உபசாரப் பத்திரங்கள்

கோவை உபசாரப் பத்திரங்கள்

தலைவரவர்களே! கோவை சுயமரியாதை இயக்கத் தலைவரே!! வாலிபத் தோழர்களே!!! மற்றும் இங்கு கூடியுள்ள தோழர்களே!!!! உங்கள் பத்திரங்களின் மூலம் உங்களுக்குள்ள ஆவேசம் இன்ன தென்று நன்றாய் விளங்குகின்றது.  அவற்றையெல்லாம் என்னைப் புகழும் வழியில் காட்டி விட்டீர்கள். நான் அப்புகழ்ச்சிகளை ஒப்புக் கொள்ளக்கூடுமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். ஆனால் ஒன்றை மட்டும் ஒப்புக் கொள்ளு கிறேன். அதாவது என்னென்ன காரியம் நான் சாதித்து விட்டதாகக் குறிப் பிட்டிருக்கிறீர்களோ, அந்த காரியங்கள் எல்லாம் அவசியம் நடந்தாக வேண்டும் என்றும், அதற்காக நாம் எல்லோரும் பாடுபட வேண்டும் என்றும் ஒப்புக் கொள்ளுகிறேன். சீர்திருத்தம் தவிர அப்பத்திரங்களின் இரண்டொரு இடங்களில் நமது இயக்கம் சீர்திருத்த இயக்கமென்றும், பொது நல இயக்கமென்றும், குறிப்பிட்டிருக் கிறீர்கள், அவைகளை நான் ஒப்புக் கொள்வதில்லை.  நமது இயக்கம் சீர்திருத்த இயக்கமல்ல. ஆனால் அழிவு வேலை இயக்கம் என்றே சொல்லு வேன். சீர்திருத்தம் என்றால் எதை சீர்திருத்துவது? இன்றைய நிலைமையில் மனித வாழ்க்கைக்கு,...

இந்தியாவில் பெண்கள் நிலை

இந்தியாவில் பெண்கள் நிலை

தோழர்களே! இந்தியப் பெண்கள் நிலைமையைப் பற்றி பேசுவ தென்றால் அது மிகவும் பரிதாபகரமான விஷயமாகும். அங்குள்ள ஆண், பெண், வித்தியாசமானது முதலாளி தொழிலாளிக்கு உள்ள வித்தியாசத் தைவிட மிகக் கடினமானது. ஒரு தொழிலாளியானவன் எப்படியாவது பணம் சம்பாதித்துக் கொண்டானேயானால் அவன் மெள்ள மெள்ள முதலாளி கூட்டத் தில் கலந்து கொள்ளக்கூடியவனாகி விடுவான். ஆனால் இந்தியப் பெண்களோ அப்படியில்லை. அவர்கள் எந்த நிலையிலும் ஆண்களுக்கு அடிமையாகவும், அவர்களுடைய அனுபவப் பொருளாகவும், ஆண் களையே தெய்வமாகக் கருதி பூஜித்து தொண்டு செய்து கொண்டிருக்க வேண்டியவர்களாகவும் இருப்பார்கள். பெண் இழிவான பிறவி இந்தியாவில் இந்து பெண்கள் இந்துமத சம்பிரதாயப்படி பாப ஜன்மங் களாகக் கருதப்படும். அதாவது சென்ற ஜன்மத்தில் அவர்கள் செய்த பாப காரியங்களால் இந்த ஜன்மத்தில் பெண்களாய்ப் பிறக்கிறார்கள் என்பது ஒரு சாஸ்திர விதி. ஒரு குடும்பத்தில் எத்தனை பெண் குழந்தை இருந்தாலும் அக்குடும்பத்திற்கு ஆண் குழந்தை இல்லாவிட்டால் அதை பிள்ளையில்லாத குடும்பம் என்றே...

சுயமரியாதையைப் பற்றி காந்தி அபிப்பிராயம்

சுயமரியாதையைப் பற்றி காந்தி அபிப்பிராயம்

சென்றவாரம் வெளியான தினசரி பத்திரிகைகளில் தோழர் காந்திய வர்களால் கலப்புமணத்தையும், சமபந்தி போஜனத்தையும் ஆதரிப்பதில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால் இந்த வாரம் வந்த தினசரிகளில் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட ஆகாரத்தையும் சுயமரியாதையை லட்சியமாய் கொண்ட கலப்பு மணத்தையும் தான் ஆதரிப்பதாகச் சொன்ன தாய் காணப்படுகின்றது. இதைப் பார்க்கும்போது ஒரு கேள்வி புறப்படுகின்றது.  அதாவது சம ஜாதி மக்களால் சமைக்கப்பட்ட ஆகாரம் சம ஜாதி மக்களுடன் கூட இருந்து உண்ணும் ஆகாரம் ஆகியவைகள் சுகாதார முறைப்படி சமைக்கப் பட வேண்டிய அவசியமில்லையா என்ற கேள்வி பிறக்கின்றது.  ஒரு சமயம் இரண்டு வித மக்களுடனும் கலந்து உட்கார்ந்து உண்ணும் ஆகாரத்துக்கும் சுகாதாரமுறை பக்குவம் வேண்டுமானால் அதை இந்த சமயத்தில் தனியாய் குறிப்பிடக் காரணம் என்ன? என்கின்ற கேள்வி பிறக்கின்றது. அதுபோலவே சுயஜாதி மணம் செய்து கொள்வதானாலும் சுய மரியாதை இலட்சியம் இருக்க வேண்டியது அவசியம் என்றால் கலப்பு மணத்தைப் பற்றிச் சொல்லும் போது மாத்திரம்...

இந்தியப் பெண்களுக்கும் இடம்                 நளபாக அடுப்பும், சப்ரமஞ்சக்கட்டிலும்                        பிரசவ ஆஸ்பத்திரியுமா?

இந்தியப் பெண்களுக்கும் இடம்                 நளபாக அடுப்பும், சப்ரமஞ்சக்கட்டிலும்                        பிரசவ ஆஸ்பத்திரியுமா?

சென்னையில் கூடியபெண்கள் சங்கத்தில், பெண்கள் நலனுக்கென்று, சில பெண்கள் கூடி, சில தீர்மானங்கள் செய்திருக்கிறார்கள் என்பதாகத்தெரிய வருகிறது.  அவற்றின் ஒரு தீர்மானமானது இந்திய ஸ்திரீ ரத்தினங்கள் நளபாக அடுப்பும், சப்ர மஞ்சக்கட்டிலும், பிரசவ ஆஸ்பத்திரியும் தவிர வேறு இடத்திற்குத் தகுதியானவர்கள் அல்ல என்கின்ற மனப்பான்மையைக் காட்டுவதாய் இருக்கின்றது. அதாவது, “சிறுவர் பாடசாலைகளில் சிறுமிகளுக்கு அவசியமாக வேண்டப்படும் சங்கீதம், கோலாட்டம், பின்னல், குடித்தன சாஸ்திரம் இவை களைப்போதிக்க வேண்டியதிருப்பதால் சிறுவர் பாடசாலைகளையும், சிறுமி கள் பாடசாலைகளையும் ஒன்றாகச் சேர்க்கக் கூடாது” என்று தீர்மானித்திருக்கிறார்கள். இந்தியப் பெண்கள் தாம் ஐரோப்பிய நாடுகளிலுள்ள மிருகங்களை விட கேவலமான நிலையில் இருப்பதைப்பற்றி சிறிதாவது கவலையோ, வெட்கமோ அடைந்ததாகத் தெரியவில்லை. “கல்வியறிவுள்ள மேதாவிப்” பெண்களான ஸ்திரீ ரத்தினங்களைப் பற்றியே நாம் பேசுகின்றோம். இவர்கள் நிலையே இப்படியானால், பிள்ளை பெரும் யந்திரங்களான மற்ற ‘வநிதாரத்தனங்களை’ப் பற்றிப் பேசவும் வேண்டுமா? மேல் நாட்டுப் பெண்களின் இன்றைய யோக்கியதையை எடுத்துக்கொண்டால் அவர்கள் எந்நாட்டு...

ஈ.வெ.ராவுக்கு கோவை முனிசிபல் சங்கத்தார் வாசித்த                          உபசாரப் பத்திரமும் பதிலும்

ஈ.வெ.ராவுக்கு கோவை முனிசிபல் சங்கத்தார் வாசித்த                          உபசாரப் பத்திரமும் பதிலும்

அன்பு கொண்ட நகரசபை தலைவரவர்களே! அங்கத்தினர்களே!! மற்றும் இங்கு கூடியுள்ள தோழர்களே!!! கோவை நகரசபையின் சார்பாக எனக்கு வாசித்தளித்த உபசாரப் பத்திரத்திற்கு நான் மிகுதியும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டவனேயாவேன்.  ஆனால் அவ்வுபசாரப் பத்திரத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்று சொல்லுவேனேயானால் நான் உண்மையற்ற புகழை ஏற்றுக் கொண்டவன் என்னும் குற்றத்திற்காளானவனாவேன்.  ஏனெனில் தீண்டாமை விலக்கிலும், பொது நல சேவையிலும், அரசியலிலும், ஸ்தல ஸ்தாபனங் களிலும் நான் ஏதோ பெரிய வேலைகள் செய்திருப்பதாக உங்கள்  உபசாரப் பத்திரத்தில் புகழ்ந்து இருக்கிறீர்கள். உண்மையில் பார்ப்போமானால் அத் துரையில் பொது மக்களுக்கு என்ன காரியம் செய்திருக்கிறேன் என்று இன்று உங்கள் முன்னிலையில் நான் சொல்லக் கூடும்? தோழர்களே! இந்தியாவில் பார்ப்பனர்களும் படித்த கூட்டத்தாரும் செல்வவான்களுமாகிய ஊரார் சரீர உழைப்பில் வாழ்வதற்கென்றே உயிர் வாழும் கூட்டங்களை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாதாருக்கு பாடு பட்டிருக்கின்றேன், ஏழைகளுக்கு பாடுபட்டிருக்கின்றேன், தொழிலாளிக்கு பாடுபட்டிருக்கின்றேன் என்று ஒருவர் ஒப்புக் கொள்ளுவதானால்...

விபசாரத் தடை

விபசாரத் தடை

மதுரையில் விபசாரத் தடை மசோதா அமுலுக்கு வந்திருப்பதாக தெரிய வருகின்றது. சென்னையிலும் அது முன்னமேயே அமுலுக்கு வந்துவிட்டது.  மற்ற ஜில்லாக்களுக்கும் அது உடனே அமுலுக்கு வரவேண்டி யதாகும். குறைந்த அளவு 30 ஆயிரம் ஜனங்கள் உள்ள ஈரோட்டில் 300 பேர்களுக்கு குறையாத விபசாரிகள் என்போர்கள் அதாவது ஒரு அணா இரண்டு அணா ரேட்டு முதல் விபசாரித்தனம் செய்து ஜீவிக்க வேண்டிய பெண்கள் இருந்து வருகின்றார்கள் என்றால் மற்ற பெரிய பட்டணங்களைப் பற்றி கேள்க்கவும் வேண்டுமா? விபசாரத்தடை மசோதா வருவது என்பது சற்று தாமதானாலும் ஆங்காங்குள்ள போலீஸ் அதிகாரிகளாவது இவ்விஷயங்களில் சற்று கவலை செலுத்தி அவர்கள் (விபசாரிகள்) தெருவில் நின்று மக்களை அழைப்ப தையும், தெருக்களில் சில்லரைக் கலகங்களை ஏற்படுவதையும், இவர்கள் பயனாய் ஆபாச பேச்சுவார்த்தைகள் நடப்பதையும் மற்றும் சில வாலிபர்கள் காலித்தனமாய் நடக்க ஏற்படுவதையும் ஒருவாறு தடுக்கலாம் என்றே கருதுகின்றோம். இப்படிப்பட்ட காரியங்களில் சின்ன சிப்பந்திகள் பிரவேசிக்க இடம் கொடுக்காமல் சற்று...

கான்சாகிப் சேக்தாவுத் அவர்கட்குப் பாராட்டு

கான்சாகிப் சேக்தாவுத் அவர்கட்குப் பாராட்டு

தோழர்களே! இன்றுதோழர் சேக்தாவுத் அவர்கட்கு கான்சாயபு பட்டம் கிடைத்ததைப் பாராட்டுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டதற்கு நன்றி செலுத்துகிறேன். இம்மாதிரியான பட்டங்களை சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன்பு கருதியதைப் போல் இதுசமயம் மக்கள் அவ்வளவு மேன்மையாகக் கருதுவதில்லை. உதாரணமாக இரண்டொரு வருஷங்களுக்கு முன் ஒரு நண்பருக்கு கிடைத்த ஒரு பட்டத்திற்கு பெருத்த பாராட்டுதல்கள் நடக்கும்போது நான் அவரைப் பார்த்து “பட்ட சம்பந்தமான பாராட்டுவிழா தொந்திரவு உங்களுக்கு இனி கொஞ்சநாளைக்கு இருக்கும்.  உங்கள் மனமும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கும்” என்று சொன்னேன்.  “பட்டங்களால் பிரமாதமான பலன் இல்லாவிட்டாலும் இந்த சந்தோஷத்திற்காவது இடமிருக்கிறதே” என்று சொன்னேன்.  அதற்கு அவர் அப்படிக்கூட இதில் ஒன்றும் பெருமைப்பட இடமில்லை  என்றார்.  உடனே நான் ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் இதோ இவ்வருஷம் பட்டம் வழங்கி இருக்கும் லிஸ்ட்டைப் பாருங்கள். எனக்கும் பட்டம் கிடைத்திருக்கிறது.  இன்னொரு வருக்கும் பட்டம் கிடைத்திருக்கிறது. ...

ஏன் வரி குறைக்க வேண்டும்?

ஏன் வரி குறைக்க வேண்டும்?

“விளை பொருள்களுக்கு விலை குறைந்து போனதால் வரிகளைக் குறைக்க வேண்டு” மென்று மிராசுதாரர்கள் கூக்குரல் இடுகின்றார்கள்.  விலை குறைந்த காரணத்தைக் கொண்டு வரியைக் குறைக்கும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டதா என்பதை வாசகர்கள் ஊன்றிக் கவனிக்க வேண் டும் என்று ஆசைப்படுகின்றோம்.  வரிவசூல் செய்வதானது விளை பொருள்களின் விலையை உத்தேசித்தா அல்லது “அரசாங்கம் நடைபெற வேண்டும்” என்கின்ற காரணத்துக்காகவா என்பதை முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும். அந்தப்படி யோசித்துப் பார்த்தால் அரசாங்கம் நடைபெறுவதற்காகத் தான் வரி வசூலிக்கப்படுகின்றது என்பது யாவருக்கும் விளங்கும்.  ஆகவே இது வரையில் பூமி மீதோ, வியாபாரத்தின் மீதோ மற்றும் பலவற்றின் மீதோ போடப்பட்ட வரி யெல்லாம் அரசாங்கம் நடைபெறுவதற்காகவே அரசாங்க செலவை உத்தேசித்து அதற்கு ஏற்றபடி வரி வசூல் செய்யப் பட்டு வருகின்றது. ஆதலால் இப்போது வரியைக் குறைக்க வேண்டுமானால் அரசாங்கம் நடைபெறுவதற்கு என்று ஏற்பாடு செய்திருக்கும் செலவைக் குறைத்தால் ஒழிய வரியைக் குறைக்கமுடியாது.  அப்படி இருந்தும்...

வரவேற்கின்றோம்

வரவேற்கின்றோம்

45 மாத காலமாய் விசாரணை நடந்துவந்த “மீரத் சதிவழக்கு”  கேசு ஒரு வழியில் முடிவடைந்துவிட்டது,  அதாவது 27 எதிரிகளுக்கு, 3 வருஷ முதல் ஆயுள் பரியந்தம் சிறைக்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தண்டனையைப்பற்றி நாம் சிறிதும் கவலைப் படவில்லை. இந்த 27 பேர் மாத்திரம் அல்ல இன்னும் ஒரு 270 பேர்களும் சேர்த்து தூக்கில்போடப்பட்டி ருந்தாலும் சரி நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை.  ஏனென்றால் இந்தத் தோழர்கள் சிறையிலிருப்பதாலோ, தூக்கில் கொல்லப்படுவதாலோ அவர்களது கொள்கையாகிய பொதுவுடமைக் கொள்கை என்பது, அதாவது முதலாளிகளின் ஆதிக்க ஆட்சியை சிதைத்து, நசுக்கி சரீரத்தினால் பாடுபடுகின்ற மக்களுடைய ஆட்சிக்கு உலக அரசாங்கங்களையெல்லாம் திருத்தி அமைக்க வேண்டும் என்கின்ற கொள்கையோ, உணர்ச்சியோ, அருகிப் போய்விடும்  என்கின்ற பயம் நமக்கு இல்லை. அல்லது இன்று தண்டனை அடைந்த தோழர்கள் தான் இக்கொள்கைக்கு கர்த்தாக்கள் ஆவார் கள், கர்மவீரர்கள் ஆவார்கள்.  ஆதலால் இவர்கள் போய்விட்டால் இந்தக் கொள்கையைக் கொண்டு செலுத்த உலகில்வேறு...

எது நல்ல ஜோடி ?

எது நல்ல ஜோடி ?

வருணாச்சிரம தரும தோழர் ராமச்சந்திரய்யர் “ஹரிஜனங்கள்” என்பவர்களை ஹிந்துக்கள் அல்ல என்று சொன்ன விஷயத்தைச் சுயமரியாதை இயக்கத்தோர் ராமசாமியும் ஆமோதித்து விட்டாராகையால் ராமச்சந்திர அய்யரும் ராமசாமியும் ‘நல்ல ஜோடி’ என்று சுதந்திரச் சங்கு என்னும் பத்திரிகை எழுதி இருக்கிறது. என்றாலும் அதே பத்திரிகையின் வேறொரு இடத்தில் அந்த ஜோடிக்கு உவமை சொன்னதில் உண்மையைச் சொல்லி விட்டது. எப்படி எனில் இரண்டும் சரியான ஜோடி அல்ல வென்றும் சிறிது கூட பொருந்தாத ஜோடி என்றும் மக்கள் நன்றாய் உணரும்படி தன் மனதிலுள்ள உண்மையை தன்னை அறியாமலே வெளிப்படுத்தி விட்டது. அதாவது, “இருவரும் சேர்ந்த நல்ல ஜோடி என்பது காராம் பசுவும் காளை எருமையும் ஒரு வண்டியில் கட்டப்பட்டு ஓட்டப்படுவது போலிருக் கிறது” என்று உவமை காட்டி எழுதி இருக்கிறது. ஆகவே காராம் பசுவும் காளை எருமையும் சரியான ஜோடி என்று யாராவது ஒப்புக் கொள்ளுவார் களா? ஒரு நாளும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்....

எலெக்ஷன் கூத்து  – சித்திரபுத்தன்

எலெக்ஷன் கூத்து – சித்திரபுத்தன்

  தமிழ் நாட்டில் ஸ்தல ஸ்தாபனங்களில் புதிய சீர்திருத்தத்தின்படி என்று நடைபெறும் எலக்ஷன்கள் (தேர்தல்) சம்பந்தப்பட்ட காரியங்களில் எல்லாம் ஏதாவது குழப்பமும், சண்டையும், கலகமும், அடிதடியும், கொலைகளுமான காரியங்கள் அவ்வளவுமோ அல்லது ஏதாவது ஒன்றோ நடந்த வண்ண மாகவே இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக் கைகளும் மிக மிக மோசமாகவே இருக்கின்றன. இனிமேல் தேர்தல்கள்-எலக்ஷன்கள் ஏற்பட்டவுடன் அதன் அபேக்ஷ கர்களை காவலில் வைத்து விட்டு எலக்ஷன்கள் நடத்தப்பட்டால் ஒழிய கலக மும், கொலையும் நடக்காமல் இருக்குமா என்கின்ற விஷயம் சந்தேகமாகவே இருந்து வருகின்றது.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலையோ மிக மிக மோசமாயிருக்கின்றது. பெரிய பொறுப்புள்ள அதிகாரிகள் முதல் சாதாரண போலிங் ஆபீஸர்கள் என்பவர்கள் வரை மோசமாகவே நடந்துகொள்ளு கின்றார்கள். ஒரு சிறு கதை சொல்லுகின்றோம். ஒரே ஒரு ஊரில் ஒரு எலக்ஷன் நடந்தது அதற்கு நின்ற இரண்டு அபேட்சகர்களும் “எலக்ஷன் அதிகாரி யிடம் சென்று எலக்ஷன் எப்படி இருந்தாலும்...

மதிப்புரை

மதிப்புரை

“ இளைஞர் பாடல்கள்” என்ற தமிழ் நூலொன்று வரப்பெற்றோம். அஃது கோவைத் தமிழ்ச்சங்க அமைச்சரும், பொதுநல உழைப்பாளரும், தமிழ் மொழி வல்லுனருமான தோழர். ராவ்சாஹிப் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார் பி.ஏ.பி.எல். அவர்களால் இயற்றப் பெற்று கோவைத் தமிழ்ச் சங்கத் தாரால் வெளியிடப்பட்டது. இந்நூல் எளிய நடையில் புதியமுறையில் இளைஞர்களுக்கு உணர்வு ஊட்டும் நோக்குடன் கடவுள், ஞாயிறு ஒழுக்கம், நிலா, மறை, யாறு, கல்விளையாட்டு, ஆகாயவிமானத்தில் முதல் அநுபவம், நாட்டுப்பற்று அல்லது தாய்நாடு முதலிய பல்வேறு பொருள்களைப் பற்றியும் மலையும் அணியும். ஹாதிம்தாய் என்னும் சிறுகதைகளை விளக்கியும் செய்யுள் ரூபமாக சாதாரண மக்களும் அறியும் வண்ணம், எழுதப்பட் டுள்ளது. கடவுளுணர்ச்சியையும், சோதிடப்பெருமையையும், இயற்கைக் காட்சியின் தன்மையையும், தேசீய உணர்ச்சியையும் கார்த்திகைத் திருநாள் முதலிய பல விழாக்களின் அருமையையும் பற்றிய நம்பிக்கை உடையோருக் கும் தமிழின் பெருமையையும் கவிச் சுவையை அறிய விரும்புபவர்களுக் கும் இந்நூல் மகிழ்ச்சியைத் தரத்தக்கதாகும் என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழ்...

நேற்றும், இன்றும்  – சுமைதாங்கி

நேற்றும், இன்றும் – சுமைதாங்கி

  ஓ தேசியவாதிகளே! தேசியப் பத்திராதிபர்களே!! சுயமரியாதைப் பிரசாரங்கள் நடக்கின்ற பக்கங்களில் கலகங்கள் நடப்பதாகவும், அடிதடிகள் நடப்பதாகவும் கற்பனைகள் செய்தும் இழிபிறப்பு ரிபோர்ட்டர்களின் நிரூபங்களை நம்பியும் நடவாத சங்கதிகளை பத்திரிகை களில் போட்டு “நேற்று” மகிழ்ந்தீர்கள். சுயமரியாதை இயக்கம் செத்தது என்று பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்தால் உலகத்தார் கண்களும் மூடப்பட்டிருக்கும் என்று கருதிய திருட்டுப் பூனைகள் போல் நடித்தீர்கள்.  முடிவில் என்ன நடந்தது? என்று பார்த்திருப்பீர்கள். அதாவது உங்கள் வயிர் வளர்ப்புக்கு ஆதாரமாயிருக்கும் காங்கிரசின் யோக்கியதை – ஹரிஜன சேவையின் யோக்கியதை “இன்று” எப்படி இருக் கின்றது? எத்தனை பக்கம் கலகம்? எத்தனை பக்கம் தடியடி? எத்தனை பக்கம் கல்லடி?  எத்தனை பக்கம் ரத்தக்காயம்? எத்தனை பக்கம் மண்டை உடை? எத்தனை பக்கம் விரட்டி அடித்தல்? எத்தனை பக்கம் காங்கிரஸ்காரரே கூட்டத்தை கலைத்துக் கொண்டு வாலை இடுக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தல்? எத்தனை பக்கம் புரட்டு? இவைகள்...

வருந்துகிறோம்  ராவ்பகதூர் அப்பாசாமி முதலியார் மரணம்

வருந்துகிறோம் ராவ்பகதூர் அப்பாசாமி முதலியார் மரணம்

  9-1-33 இரவு செங்கற்பட்டு பிரபல வியாபாரியும், ஜமீன்தாரும், நிலச்சுவான்தாருமான தோழர் ராவ்பகதூர் அப்பாசாமி முதலியார் அவர்கள் சென்னையில் உயிர் துரந்தார் என்ற சேதியைக் கேட்டு மிக வருந்துகிறோம். இவர் செங்கற்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மகாநாட்டிற்கு மூல புருஷராயிருந்து நடத்தினவர். சீர்திருத்தத் துறையில் வெகு தூரம் முற்போக்கு டையவர். ஏழைகளிடத்தில் மிகுதியும் அன்பும் இரக்கமும் உடையவர். இவர் இறந்தது அந்த ஜில்லாவாசிகளுக்கு ஒரு பெருங்குறைவேயாகும். குடி அரசு – இரங்கல் செய்தி – 15.01.1933