எதை நம்புவது! – சித்திரபுத்திரன்

 

 

தீண்டாமையை ஒழிக்கப்பட்டினி கிடக்கும்படி கடவுள் கட்டளை இட்டிருப்பதாக காந்தி சொல்லுகிறார்.

தீண்டாமையை நிலை நிறுத்துவதற்காக யானை குதிரைகளுடன் பல்லக்கு சவாரி செய்யும்படி கடவுள் கட்டளையிட்டிருப்பதாக சங்கராச்சாரி யார் சொல்லுகிறார்.

அவனன்றி ஓரணுவும் அசையாதுஆதலால் மேற்கண்ட இரண்டு காரியங்களும் கடவுள் திருவிளையாடல் என்று கடவுள் பக்தர்களான ஆஸ்தி கர்கள் சொல்லுகிறார்கள்.

இந்த மூன்றும் முட்டாள் தனமும், சுயநலம் கொண்ட போக்கிரித் தனமும், பித்தலாட்டமும், ஏமாற்றலும் அல்லது இதில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய வேறில்லை என்றும் ரஷியர்கள் சொல்லுகிறார்கள்.

இவற்றுள் எதை நம்புவது, எதை நம்பினால் உண்மையில் தீண்டாமை ஒழிய முடியும்?

குடி அரசுகட்டுரை – 26.2.1933

You may also like...