Category: குடி அரசு 1929

தேவர்களின் முறை – சித்திரபுத்திரன் 0

தேவர்களின் முறை – சித்திரபுத்திரன்

லண்டன் மாநகரமாகிய வைகுண்டத்திலே ஜார்ஜ் மன்னராகிய மகா விஷ்ணுவானவர் பார்லிமெண்டு என்னும் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கின்றார்:- ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கே.நடராஜன், சி. ராஜகோபாலாச்சாரி, வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, எஸ். சீனிவாசய்யங்கார், சிவசாமி அய்யர், வெங்கிட்டரமண சாஸ்திரி, சி.பி.ராமசாமி அய்யர், டி.ரங்காச்சாரி, டி.ஆர். ராமச்சந்திரய்யர், எம்.கே. ஆச்சாரி, சத்தியமூர்த்தி முதலாகிய அநேக பூதேவர்கள் போய் கால்மாட்டில் நின்று கொண்டு தவம் செய்கின்றார்கள். மகாவிஷ்ணு :- (தேவர்கள் தவத்திற்கிரங்கி) ஹே பூதேவர்களே! எங்கு வந்தீர்கள்? பூதேவர்கள் :- ஆபத்பாந்தவா! அனாதரக்ஷகா! தங்களிடம்தான் வந்தோம். ம.வி.:- என்ன விசேஷம்? பூ.தே:- தேவர்களுக்கு ஏதாவது இடுக்கண் வந்தால் அதைத் தடுக்கத் தங்களையன்றி இந்த உலகத்தில் யார் இருக்கின்றார்கள்? எனவே தங்களிடம் வந்தோம். ம.வி.:- என்ன விசேஷம்? பூ.தே :- மகாப்பிரபூ. பழையபடி ராக்ஷதர்களுடைய ஆதிக்கம் வலுத்துவிட்டது. பூதேவர்களாகிய எங்கள் நிலை இருப்பதா? இறப்பதா? என ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றது இந்தச் சமயம் தாங்கள் அருள்புரிய வில்லையானால்...

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்களும் ஜஸ்டிஸ் பத்திரிகையும் 0

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்களும் ஜஸ்டிஸ் பத்திரிகையும்

செங்கற்பட்டுத் தீர்மானங்களைக் குறித்து ஜஸ்டிஸ் பத்திரிகை எழுதிய அபிப்பிராயத்தைப் பற்றி, சிறிது சென்றவாரம் அதாவது கடவுள் வணக்கத் திற்கு பணம் செலவு செய்ய வேண்டுமா என்பதைப் பற்றி எழுதிவிட்டு, கல்யாணம், கல்யாண ஒப்பந்தவிலக்கு என்கின்ற விஷயங்களைப் பற்றி இவ்வாரம் எழுதுவதாய்க் குறிப்பிட்டிருந்தோம். கல்யாணம் கல்யாணம் என்பது என்ன? அது மக்களின் வாழ்விற்கும் இயற்கை உணர்ச்சிகளுக்கும் அவசியமான ஒரு சாதனமே ஒழிய மற்றபடி வேறு ஏதாவதான அதாவது “தெய்வீகத்தன்மை” கற்பிக்கக் கூடியதான விஷயங் கள் அதில் என்ன இருக்கின்றது என்பதை நாம் அறிய முடியவில்லை. ஒரு மனிதன் தன் வாழ்க்கைக்கும் திருப்திக்கும் இன்பம் அனுபவிப்பதற்கும் என்று எப்படி சொத்து, உத்தியோகம், கீர்த்தி, நல்ல துணிமணிகள், அழகும் அறிவும் உள்ள குழந்தைகள், அதிகமான சவுகரியமும் பெருமையும் தரத்தக்க வீடுகள், மனமொத்த நண்பர்கள் ஆகியவைகளை அடைய விரும்புகின்றானோ அதுபோலவே ஒரு ஆண் ஒரு பெண்ணையும் ஒரு பெண் ஒரு ஆணையும் வாழ்க்கைத் துணையாக விரும்புவதும், அவ்...

மதிப்புரை 0

மதிப்புரை

“முன்னேற்றம்” என்னும் பத்திரிகை திரு.வெ.சி. நாராயணசாமியவர் களை ஆசிரியராகவும் திரு.ஜி.எஸ். சாரங்கபாணியவர்களை வெளியிடுவோ ராகவும் கொண்டு மலாய் நாட்டில் சிங்கப்பூரிலிருந்து வெளிவருவதாகும். இப்பத்திரிகையின் ஐந்து மலர்களைப் பார்த்ததில் இதன் கொள்கைகள் முற்றிலும், மக்களைத் தொன்று தொட்டுள்ள மூடப்பழக்க வழக்கங்களாகிய படுகுழியினின்றும் ஜாதி மதங்கள் என்கின்ற கொடிய விலங்குகளினின்றும், பார்ப்பனீயக் கொள்ளைக்காரர்களின் பெருந்துன்பங்களினின்றும் மீட்டு வாழ்விக்கும்படியானதும் ஒப்பற்ற சுயமரியாதைத் தத்துவங்களையும் கொண்டதாகவே இருக்கின்றன. இப்பத்திரிகையானது தன் பெயருக்கேற்ப மக்களின் முன்னேற்றத்திற்கான விஷயங்களையே கொண்டு விளங்குவதால் இப்பத்திரிகையானது நம்மக்களுக்கு இன்றியமையாதவோர் நற்றுணை யாகும் என்பது எமதபிப்பிராயம். ஆனால், தற்காலத்தில் நாட்டில் எங்கு பார்த்தாலும் ஜனங்களெல்லாம் பத்திரிகை பத்திரிகை என்பதாக ஏற்படுத்திக் கொண்டு மக்களை உபத்ரவிக் கிறார்கள் என்று சிலர் எண்ணவோ சொல்லவோ செய்யலாம். ஆனால் நாம் அதை புத்திசாலித்தனமானவைகளென்று மதிக்க மாட்டோம். ஏனெனில், ஒரு நாடோ ஒரு சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் அதன் பரப்பெங்கும் பத்திரிகைகளும் பாடசாலைகளுமாகவே மிளிர வேண்டும். இதை யுத்தேசித்தே தான்...

செங்கல்பட்டு மகாநாட்டின்   தீர்மானங்கள் 0

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்

ஜாதி வகுப்பு வித்தியாசத்தைக் காட்டும் பட்டங்களையும் சமய வித்தியாசத்தைக் காட்டும் குறிகளையும் விட்டுவிடவேண்டும் என்று செய்த தீர்மானம் நாட்டின் ஒற்றுமைக்கு மிகுதியும் அத்தியாவசியமானது என்பதைப் பற்றி முன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். இத்தீர்மானத்தில் பொறாமை கொண்ட சில விஷமக்காரர்கள் வகுப்புப் பட்டம் நீக்க வேண்டும் என்கின்றவர்கள் வகுப்பு மகாநாடுகளில் கலந்து கொள்ளலாமா என்கின்ற ஒரு பிரசினையை கிளப்பிவிட்டிருக் கின்றார்கள். இதற்கு நாம் சொல்லும் சமாதானம் என்னவென்றால் ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் தங்கள் வகுப்பு மகாநாடுகள் கூட்டி அவற்றில் இவ்விதத் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றி அவற்றை முதலில் தங்கள் தங்கள் வகுப்புகள் என்பவைகளுக்குள் அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் வகுப்பு வித்தியாசங்களை ஒழியுங்கள் என்றுதான் கேட்கின்றோம். அதற்காகத்தான் வகுப்பு மகாநாடுகள் கூட்டுங்கள் என்கின்றோமே ஒழிய வேறில்லை. உதாரணமாக ஒரு வாணிய வைசிய மகாநாட்டில் நாம் பேசும் போது அவர்களுடைய பூணூலை எடுத்து விடும்படியும் தங்களை வைசியர் கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம்...

“இராமனுக்கு சீதை தங்கை” “இராவணனுக்கு சீதை மகள்” “இராமனுக்கு பல பெண்டாட்டிகள்” 0

“இராமனுக்கு சீதை தங்கை” “இராவணனுக்கு சீதை மகள்” “இராமனுக்கு பல பெண்டாட்டிகள்”

இராமாயணம் என்பது சூரியகுல அரசர்களின் சரித்திரங்களில் ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், இராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக் கணக்கான சுலோகங்கள் இருந்ததாகவும், அவைகள் காலப் போக்கில் பல தெய்வீகக் காரணங்களால் மறைந்து போய் விட்டன வென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை திரு.கோவிந்ததாஸ் அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தாம் எழுதிய “இந்துமதம்” என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் “இராமாயண விலாசம்” என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுர கர்த்தாவாகிய திரு.சி.ஆர்.சீனிவாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928-ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கும் “இதர இராமாயணங்கள்” என்னும் புஸ்தகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப் பட்டிருக்கின்றன. (அப்புஸ்தகத்தின் விலை ரூ.1) அவையாவன :- ஜைன ராமாயணம், பௌத்த ராமாயணம், யவன ராமாயணம், கிறைஸ்த...

செங்கற்பட்டு மகாநாட்டு தீர்மானங்களும் ஜஸ்டிஸ் பத்திரிகையும் 0

செங்கற்பட்டு மகாநாட்டு தீர்மானங்களும் ஜஸ்டிஸ் பத்திரிகையும்

செங்கற்பட்டு சுயமரியாதை மகாநாட்டைப் பற்றி சென்னை ஜஸ்டிஸ் பத்திரிகை ஒருவாறு புகழ்ந்து எழுதியிருப்பதாகக் காணப்பட்டாலும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி தனது அபிப்பிராயத்தை தெரிவித் திருப்பதில் மிக முக்கியமான தீர்மானங்கள் என்று பொது ஜனங்களால் கருதப்படும் தீர்மானங்கள் விஷயத்தில் அது தனக்கு உள்ள அபிப்பிராய பேதத்தை காட்டியிருக்கின்றதை நாம் மனப்பூர்வமாக வரவேற்று சமாதானம் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். ஏனெனில் அவரவர்களுக்குத் தோன்றும் எந்த விஷயங்களைப் பற்றியானாலும் அபிப்பிராய பேதங் களையும் அதனால் ஏற்படக் கூடிய சாதக பாதகங்களையும் எடுத்துச் சொல்ல யாவருக்கும் உரிமை உண்டு என்பதையும் ஒவ்வொரு அபிப்பிராய பேதத்தையும் கண்ணியமாய் வரவேற்று சமாதானம் சொல்ல வேண்டியது மிகவும் நியாயமானது என்பதையும் நாம் எப்போதும் வலியுறுத்தி வந்திருக் கின்றோம். ஆதலால் அம்முறையிலேயே ஜஸ்டிசின் சில தீர்மானங்களைப் பற்றிய அபிப்பிராய பேதத்தையும் அதன் நியாய விளக்கத்தையும் கவனிப் போம். அதாவது, கலியாண சம்மந்தமாகவும் பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள உரிமை சம்மந்தமாகவும் செய்த ஒரு தீர்மானத்தைப்...

ஓர் விஞ்ஞாபனம் 0

ஓர் விஞ்ஞாபனம்

செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானப்படி, பெயர்களுக்குப் பின்னால் சேர்க்கப்படும் நாயக் கர், நாயுடு, செட்டியார், முதலியார் போன்ற ஜாதிப் பட்டப் பெயர்களையும், ராமம், விபூதி, பூணூல் முதலிய மதச்சின்னங்களையும் நீக்கிவிட்டவர்களின் ஜாபிதாவையும் இனி “குடி அரசு”ப் பத்திரிகையில் வெளியிட உத்தேசித் திருப்பதால் ஜாதிப் பட்டங்களை நீக்கிவிட்டவர்களும், மதக்குறியை விட்டவர்களும், தம் தம் விலாசத்தை அவ்வப்போது தெரியப்படுத்தினால் பிரசுரிப்பதற்கு மிகவும் உபகாரமாயிருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளு கின்றோம். நிற்க, இனி எமக்கு எழுதும் கடிதங்களிலும் எமது பெயரைக் குறிப்பிடும் சமயங்களிலும் எமது பெயருக்குப் பின்னால் நாயக்கர் என்று குறிப்பிடாமல் இருக்க வேண்டுகின்றோம். ( ப – ர் .) குடி அரசு – அறிவிப்பு – 24.02.1929

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள் 0

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள்

இரண்டு மூன்று மாத காலமாய் தென்னிந்தியா முழுவதும் ஒரே பேச்சாயிருந்த முதலாவது சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கற்பட்டில் இம்மாதம் 17,18ஆம் தேதிகளில் வெகுவிமரிசையாகவும் மிக்க ஆடம்பர மாகவும் கூடி பல தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கலைந்துவிட்டது. வெகு சொற்ப நாட்களுக்குள்ளாகவே செங்கல்பட்டில் இந்த மாகாண மகாநாடு நடத்த தீர்மானித்ததால் போதுமான சாவகாசமில்லாதிருந்தும்கூட செங்கற்பட்டு ஜில்லா போர்டு தலைவர் ராவ்பகதூர் கே.கிருஷ்ணசாமி யவர்கள் முயற்சியாலும் செங்கற்பட்டு சேர்மன் திரு.வேதாசலனாரவர்கள் ஊக்கத்தாலும் செங்கற்பட்டு பிரபுவும் ஜமீன்தாரருமான அப்பாசாமி வள்ளலாரின் வள்ளல் தன்மையாலும் ‘திராவிடன்’ பத்திராதிபர் திரு. கண்ணப்பரின் இடையறா உழைப்பாலும் மற்றும் அநேக கனதனவான்களின் உதவியாலும் தென்னிந்தியாவில் இதுவரை எங்கும் நடந்திராத மகாநாடு போல் இம்மகாநாடு நடந்தேறிவிட்டதும் மகாநாட்டின் பிரதிநிதிகளிலும் இதுவரை எந்த மகாநாட்டிலும் கூடாதமாதிரி எல்லா தரத்தவர்களும் ஏராளமாக வந்து கூடியிருந்ததும் குறிப்பிடத்தக்கதேயாகும். முதலாவதாக வைதீகர்கள் கூட்டமும் இரண்டாவதாக பண்டிதர்கள் கூட்டமும் மூன்றாவதாக ராஜாக்கள், மந்திரிகள், ஜமீன்தார்கள், உத்தியோ கஸ்தர்கள், ஆங்கிலம் படித்தவர்கள், செல்வந்தர்கள்,...

சென்னையில் சைமன் கமீஷனுக்கு ஆடம்பரமான வரவேற்பு. பகிஷ்காரம் ‘பொஸ்ஸ்’ என்று போய்விட்டது. 0

சென்னையில் சைமன் கமீஷனுக்கு ஆடம்பரமான வரவேற்பு. பகிஷ்காரம் ‘பொஸ்ஸ்’ என்று போய்விட்டது.

ராயல் கமிஷனுக்கு பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட சைமன் கமிஷன் அங்கத்தினர்களும் இந்திய பிரதிநிதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட சென்ட்ரல் கமிட்டி அங்கத்தினர்களும் ரங்கூனிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு 18-தேதி காலை 6-மணிக்கு “டிறா” என்னும் கப்பலில் சுகமே வந்து சேர்ந்தார்கள். அவர்களை சென்னை மாகாண மக்களின் பிரதி நிதிகளால் சைமன் மாகாணக் கூட்டுக் கமிட்டிக்கு தெரிந்தெடுத்த பொது ஜனப் பிரதிநிதி அங்கத்தினர்களும் சென்னை அரசாங்க பிரமுகர்களும் கப்பலிலிருந்து இறக்கி துறைமுக மேடையில் வெகு அலங்காரமாய்ப் போடப்பட்டிருந்த பந்தல்களுக்கு அழைத்துச் சென்றார்கள். பந்தலில் சென்னை நகர மக்கள் சார்பாக சென்னை கார்ப்பரேஷன் சபைத் தலைவரும் கார்ப்பரேஷன் அங்கத்தினர்களும் மற்றும் சென்னைப் பிரமுகர்களும் தென் இந்திய மிராசுதாரர்களின் பிரதிநிதிகளாகிய மிராஸ்தார் சங்க அங்கத்தினர்களும், ஜமீன்தார்களும், ராஜாக்களும் மற்றும் வெளி ஜில்லா மக்களின் பிரதிநிதிகளாக ஜில்லா போர்டு மெம்பர்களும், மகமதிய சமூகப் பிரதிநிதிகளும், ஆதிதிராவிட சங்கப் பிரதிநிதிகளும், வர்த்தக சங்கப் பிரதிநிதிகளும், மாகாண இளைஞர் சங்கப் பிரதிநிதிகளும், பொது ஜனங்கள் சார்பாக...

ஓர் புதிய கோயில் 0

ஓர் புதிய கோயில்

மேட்டூரில் ஓர் புதுக்கோவில் கட்டி, அங்கு பிள்ளையாரையும் ஆஞ்சனேயரையும் பிரதிஷ்டை செய்யும் நோக்கத்தோடு 11-2-29 காலை 10 மணிக்கு அஸ்திவாரம் நாட்டினார்கள். இக்கோஷ்டிக்குத் தலைவர் திரு. மகா தேவய்யரவர்கள் பி.ஏ. பி.இ. எக்ஸிக்யூடிவ் இஞ்சினீர். ஆராய்ச்சித்திறமுள்ள இஞ்சினீர்களுக்கு கோவில்களைப் பெருக்கக் கருத்தோடியதின் அர்த்த மென்ன? ஏழைக்கூலிகளுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் உபயோகப் படும் இராப்பள்ளிக்கூடம் வைக்க ஏற்பாடு செய்யக்கூடாதா? கோவில் கட்டு வது பார்ப்பனரல்லாத ஏழைப் பாமர மக்களைப் பிரித்து வைத்து ஏமாற்றித் தம்மினத்தவர்கள் பார்ப்பனரல்லாதார் செலவில் உண்டு கொழுப்பதற் கல்லவா? குடி அரசு – செய்தி விளக்கம் – 17.02.1929

இனிச் செய்ய வேண்டிய வேலை                “ரிவோல்ட்” தலையங்கத்தின்                    மொழி பெயர்ப்பு 0

இனிச் செய்ய வேண்டிய வேலை “ரிவோல்ட்” தலையங்கத்தின் மொழி பெயர்ப்பு

சுயமரியாதை இயக்கமானது, பன்னெடுங்காலமாக இந்திய சமூகத் தைப் பாழ்படுத்தி அதன் இரத்தத்தை கொஞ்சங் கொஞ்சமாக உறிஞ்சி உயிரை வாங்கிக் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளையும் குருட்டுப் பழக்க வழக்கங்களையும் அடியோடு ஒழித்துவிடுவான் வேண்டி தங்கள் உயிர் பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்யக்கூடிய பலரைத் தன்னிடம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. மக்களின் அறியாமையை அனுகூலப்படுத்திக் கொண்டு அவர்களைப் பல வகைகளில் அடிமைப்படுத்தலை ஒழித்து பகுத் தறிவை வளரச் செய்வதற்காகவே இவ்வியக்கம் பாடுபட்டு வருகிறது. அதன் பலன்களும் திருப்திகரமானவைகளாகவே யிருக்கின்றன. வெகுகாலமாக சுயநலவாதிகளால் அழுத்தப்பட்டு அறியாமையில் ஆழ்ந்திருந்த பாமர மக்கள் மனித உரிமையை உணர ஆரம்பித்து விட்டார்கள். பரம்பரை வழக் கம் என்பதற்காகவோ “பெரியோர் வாக்கு” என்பதற்காகவோ விசேஷ மதிப் புக் கொடுப்பதில்லை. சுயநலமிகள் கொஞ்சங்கொஞ்சமாக ஒழிந்து கொண்டி ருக்கிறார்கள். இந்தியமக்கள் தமது நிலையை உணர்ந்து கொண்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது. காலப்போக்கும் சீர்திருத்தக்காரர்களுக்கே ஆதரவாயிருக்கிறது, பகுத்தறிவுக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாயிருப் பவைகளெல்லாம் மடிந்துகொண்டே இருக்கின்றன....

சுயமரியாதை மகாநாடு 0

சுயமரியாதை மகாநாடு

சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கல்பட்டில் இந்த வாரம் இன்றைய தினம் நடைபெறுகின்றது. அதைப் பற்றிப் பலவாறாக பழிப்புரை களும் விஷமக் கருத்துக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. அதாவது அரசாங்கத்தார் ஆதரவில் இம்மகாநாடு நடத்தப்படுவதாகவும் பார்ப்பன துவேஷத்தின் மீது நடத்தப்படுவதாகவும், மற்றும் போல்ஷ்விசம் பரப்ப அவர்கள் உதவிக் கொண்டு நடத்தப்படுவதாகவும், இதைப் பற்றி அரசாங்கத்திற்கும் சிலர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுவதுடன் சிலர் கவர்னரிடம் தூது சென்றதாகவும் தெரிகின்றது. அரசாங்கத்தாரும் இவற்றிற்கு காது கொடுத்து சற்று துடிக்கின்ற தாகவும் தெரிய வருகின்றது. எப்படி இருந்தாலும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. நமக்கு வேண்டியது சுயமரியாதை என்பதுதான். உலகத் திலே உயிரையுங் கூட கொடுத்துப் பெற வேண்டியதாக அவ்வளவு மதிப்பும் விலையும் பெறுமானமுள்ளது சுயமரியாதையே ஆகும். என்றாலும் சிலர் தங்களுக்கு அவ்வார்த்தையே பிடிக்கவில்லை என்றும், சிலர் ஜஸ்டிஸ் கக்ஷி இருக்கும் போது சுயமரியாதை இயக்கம் ஒன்று தனியாக எதற்கென்றும் மதத்திலும் மனிதனுடைய நம்பிக்கை உணர்ச்சியிலும் கை வைப்பது தங்களுக்குப்...

* தீண்டாமை விலக்குத் தீர்மானம் 0

* தீண்டாமை விலக்குத் தீர்மானம்

“மனித வாழ்க்கையின் நன்மைகளை உத்தேசித்தும் ஜீவகாருண் யத்தை முன்னிட்டும் தேசமுன்னேற்றத்தைப் பொறுத்தும், நம் நாட்டின் பெரும்பகுதியினர் மீதும் சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை உடனே விலக்க வேண்டுமென்று இம்மகாநாட்டார் அபிப்பிராயப் படுவதால் சமுதாய ஊழியர்களும் தேசபக்தர்களும் சங்கங்களை ஸ்தாபித்து தீண்டாமையை ஒழிக்கும் நோக்கத்தில் வெற்றி பெறும் பொருட்டு பொது ஜனங்களிடை இடைவிடாத பிரசாரம் செய்து அவர்களைக் கண்விழிக்கச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றனர்.”

இரண்டாவது சென்னை மாகாண  தீண்டாமை விலக்கு மகாநாடு 0

இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்கு மகாநாடு

வெகுகாலமாகவே தீண்டாமை என்பது நியாயமானதல்ல என்பதை எடுத்துக் காட்டி அக்கிரமமானதென்பதையும் விளக்கிப் போராடி வந்திருக் கின்றோம். ஆயினும் இத்தொல்லை காரியத்தில் நீங்கியதாய்த் தெரிய வில்லை. எங்கு நிர்ப்பந்தமிருக்கின்றதோ, அங்கு கொஞ்சம் நீங்கியிருக்கின் றது. அதாவது உதை கொடுக்குமிடத்தில் தீண்டாமை நீங்குகிறது (நகைப்பு). மனிதத் தன்மையினாலும் ஜீவகாருண்யத்தை முன்னிட்டும் இத்தீமையை ஒழிக்க வேண்டுமென்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும்போது இத்தீண்டாமை பலமாய் உட்கார்ந்து கொள்வதைக் காண்கிறோம். (நகைப்பு). இத்தகைய தீண்டாமை என்னும் தீமைக்கு யாதொரு ஆதாரமும் கிடையாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு நாம் ஒரு சிறிதும் யாரையும்விட இளைத்தவர்களல்ல. நம் நாட்டில் தீண்டாமைக்கு இடம் கொடுத்துக் கொண்டிருப்பது ஒரு வகையில் சாமியும் மதமும் தான் என்று சொல்லவேண்டும். “சொல்லுவ தெல்லாம் நியாயம் தான், கடவுள் அல்லவா அப்படி படைத்துவிட்டார்,. அதற்கு என்ன செய்வது?” என்று சிலர் கடவுள் மீது பழியைச் சுமத்து கின்றனர். மற்றும் சிலர், “என்ன செய்வது? மதம் இதற்கு இடம் கொடுக்க...

கும்பகோணத்தில் பார்ப்பனாதிக்கமும்  கிறிஸ்தவர்கள்  சுயமரியாதையும், 0

கும்பகோணத்தில் பார்ப்பனாதிக்கமும் கிறிஸ்தவர்கள் சுயமரியாதையும்,

கும்பகோணத்தில் சங்கராச்சாரியார் என்கின்ற ஒரு பார்ப்பன மடாதிபதி குடியிருக்கின்ற வீதியில் கிறிஸ்தவர்கள் பஜனை செய்து கொண்டு போகக் கூடாது என்று தடுத்துவிட்டார்களாம். ராயல் கமீஷனை வரவேற்பது இந்தியாவின் சுயமரியாதைக்குக் குறைவு என்று நினைக்கும் திரு. குழந்தை போன்ற ‘தேசீய வீரர்களுக்கு’ கும்பகோணத்து சந்நியாசிப் பார்ப்பான் குடியிருக்கும் ஒரு வீதியில் அதுவும் நாய், கழுதை, பன்றி, மலம், மூத்திரம் தாராளமாய் நடமாடும் வீதியில் தன் இனத்தார்கள் பஜனை பாடிக் கொண்டு நடக்கக் கூடாது என்று சொன்னது தன் சமூகத்தின் சுயமரியாதைக்குக் குறைவு என்று தோன்றவில்லையா? அல்லது தோன்றினாலும் வயிற்றுக் கொடுமை அதை மறைத்துவிட்டு, சைமன் கமிஷனிடமும் இதைச் சொல்ல வேண்டாம் என்று அடக்கி “சைமன் பஹிஷ்காரக்” கூச்சல் போடும்படி செய்கின்றதா? என்று கேட்கின்றோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 10.02.1929

சர்க்காரின் மனப்பான்மையும்  நமது நோக்கமும் 0

சர்க்காரின் மனப்பான்மையும் நமது நோக்கமும்

இவ்வார சட்டசபைக் கூட்டத்தில் திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரியார், “திரு. ராமசாமி நாயக்கர் மதத்தையும் சமூகத்தையும் தூஷித்து, பிரசாரம் செய்தது, சர்க்காருக்குத் தெரியுமா? அந்தப்படி அவரைப் பிரசாரம் செய்ய விடலாமா” என்பதாக சர்க்காரை ஒரு கேள்வி கேட்டிருப்பதாய் தெரிய வருகின்றது. அதற்கு சர்க்கார் “திரு. நாயக்கர் மதத்தையும், சமூகத்தையும் தூஷித்து பிரசாரம் செய்தது எங்களுக்குத் தெரியாது” என்பதாகப் பதில் சொல்லி இருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்த விஷயத்தில் சர்க்கார், உண்டு அல்லது இல்லை என்ற இரண்டில் ஒன்றைச் சொல்லாமல் தங்களுக்குத் தெரியாது என்று சொல்லியிருப்பது சர்க்காரின் தந்திரத்தன்மையைக் காட்டுகின்றது. ஏனெனில், திரு.நாயக்கர் சென்ற மாதத்தில் வேலூரில் சுமார் 5, 6 கூட்டங்களில் பேசி இருக்கின்றார். வேலூர் மகாநாட்டிலும், சுமார் 15, 20 தீர்மானங்களுக்கு மேலாகவே நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இவ்வளவு சங்கதிகளையும் சர்க்கார் உத்தியோகஸ்தர் களான சுமார், 4, 5 தமிழ் சுருக்கெழுத்துப் போலீஸ் அதிகாரிகள் ஒன்று விடாமல் எழுதிக் கொண்டு போயிருக்கின்றார்கள். அவைகள்...

சென்னைக் கார்ப்பரேஷனில் சண்டித்தனமும் காலித்தனமும் 0

சென்னைக் கார்ப்பரேஷனில் சண்டித்தனமும் காலித்தனமும்

நமது நாட்டில் பார்ப்பனர்கள் சம்மந்தப்பட்ட எந்த ஸ்தாபனமானா லும் அதில் அவர்களிஷ்டப்படி ஏதாவதொரு காரியம் நடைபெற முடியாது என்பதாக அவர்களுக்குப் பட்டால் உடனே சண்டித்தனமும் காலித்தனமும் செய்வதன் மூலமாகவும் செய்விப்பதன் மூலமாகவும் வெற்றி பெற முயற்சிப்பது சரித்திரக்காலம் தொட்டு அவர்களது பரம்பரை வழக்கம் என்பது உலகானுபவமுள்ள யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். அதே காரியத்தை சைமன் கமீஷன் பஹிஷ்கார விஷயமாய் சமீபத்தில் நடந்த சென்னை கார்ப்பரேஷன் கூட்டத்திலும் காட்டி தங்கள் கையாலானவரை முயற்சித்துப் பார்த்தும் முடிவில் வெற்றியில்லாமல் அவமானமடைந்து வெளியேறினது பத்திரிகைகளில் இருக்கின்றது. சில சமயங்களில் சிறு பிள்ளைகள் எங்காவது சிக்கிக் கொண்டு அடிபட நேர்ந்தால் நன்றாய் அடிபட்டுவிட்டு அழுதுகொண்டு வீட்டுக்குப் போகும்போது, தங்களுடைய போலி மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி தூரத்தில் போய் நின்று கொண்டு உதைத்தவர்களைப் பார்த்து “எங்கள் வீதிக்கு வந்துபார்! உன்னை அங்கு பேசிக் கொள்ளுகிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடுவதுண்டு. அது போலவே சென்னைப் பார்ப்பனர்களது சண்டித்தனமும் காலித்தனமும்...

நாம் பொறுப்பாளியல்ல 0

நாம் பொறுப்பாளியல்ல

கதர் இயக்கம் நாட்டின் பொருளாதார நிலைமைக்கு போதியதாகாது என்பதோடு அது வெற்றி பெறுவதும் மிகக் கஷ்டமானது என்கிற அபிப்பிராயம் கொண்டிருந்தாலும், கதர் கட்டக்கூடாது என்பதோ கதரைக் கொளுத்த வேண்டும் என்பதோ சுயமரியாதை இயக்கக் கொள்கையில் பட்டதல்ல என்பதையும், திருச்சியில் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் யாரோ கதரைக் கொளுத்தினதாகச் சொல்லப்படும் சங்கதி உண்மை யாயிருந்தால் நாம் அதற்குப் பொறுப்பாளியல்ல வென்றும் அச்செய்கையை வெறுக்கின்றோம் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ( ப – ர் ) குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 10.02.1929

பார்ப்பனர்களும் சர்க்காரும் பங்காளிகளே யாவார்கள் 0

பார்ப்பனர்களும் சர்க்காரும் பங்காளிகளே யாவார்கள்

டில்லியில் நடந்து கொண்டிருக்கும் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு வந்த “சாரதா பில்” என்னும் கல்யாண வயது நிர்ணய மசோதா நிறைவேறாமல் இருப்பதற்கு சர்க்கார் சூழ்ச்சி செய்தது மிகவும் அருவருக்கத் தக்கதும் இழி தன்மை பொருந்தியதுமான செய்கையாகும். சீர்திருத்த சம்மந்தமாக ஏதாவது ஒரு மசோதா கொண்டு வந்து சட்டசபைகளில் நிறைவேற்றப்படவேண்டுமானால் சாதாரணமாகவே அதில் அநேக விதமான கஷ்டங்களுண்டு. சர்க்காராவது அல்லது பார்ப்பனர்களாவது ஏதாவது ஒரு சிறு விஷமம் செய்ய ஆரம்பித்து விட்டாலோ அதன் கஷ்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இந்த நிலைமையில் இந்துக்களின் கல்யாண நிர்ணய வயதைப் பற்றி சட்டம் கொண்டு வருவதற்கு எத்தனை காலமாக எத்தனை பேர்கள் கஷ்டப் பட்டு வந்திருக்கிறார்கள் என்பது சீர்திருத்த உலகில் இருப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. திரு. சாரதா அவர்கள் இந்த பில் கொண்டு வந்து அதற்கு செய்யவேண்டிய சடங்குகள் எல்லாம் செய்து அதற்காக எவ்வளவோ பணம் செலவும் செய்து கடைசியாக அது நிறைவேற்றப்படத் தக்க...

பாரதிப் பாடல் புரட்டு பார்ப்பனர்களின்அயோக்கியத் தனத்திற்கு ஒரு உதாரணம் 0

பாரதிப் பாடல் புரட்டு பார்ப்பனர்களின்அயோக்கியத் தனத்திற்கு ஒரு உதாரணம்

பாரதி பாடல் என்பதாக சில பாட்டுகள் காலம் சென்ற திரு. சுப்ர மணிய பாரதி என்கின்ற ஒரு பார்ப்பனரால் பாடப்பட்டிருந்தது. அவர் இறந்தவுடன் அவர் குடும்பத்தாருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு ஆதாரமாக அந்தப் பாடல்களைப் பற்றி பிரமாதமாக விளம்பரப்படுத்தி பொதுப் பணமாகிய காங்கிரஸ் பணத்திலிருந்து சுமார் ஆயிரம் ரூபாய் பாரதியின் பெண் ஜாதிக்கு தர்மமாகக் கொடுத்து அந்தப் புத்தகத்தை அச்சுப் போடும்படி சொல்லி ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் அந்தப் பாட்டுகளை விளம்பரப்படுத்தி ஒவ்வொருவரையும் அதை வாங்கும்படி செய்யப்பட்டது. அந்தப் புத்தகம் சாதாரணமாய் இரண்டரையணா அல்லது மூன்று அணாவுக்குள் அடங்கக் கூடியதாயிருந்தும் புஸ்தகம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் விலை போட்டு ஏழைகள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. அது மாத்திரமல்லாமல் முதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம், நான்காம் பாகம் என்பதாக அவர் கள் பணத்தாசைக்குத் தக்கபடியும் நம்மவர்கள் மூடத்தனத்திற்குத் தக்க படியும் புதுப்புது பாகங்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. இவ்வளவு கொள்ளையையும்...

‘சுதேசமித்திரனின்’ போக்கிரித்தனம் 0

‘சுதேசமித்திரனின்’ போக்கிரித்தனம்

திரு.முத்துலட்சுமி அம்மையாரின் தேவதாசி மசோதாவைப் பற்றி சென்னை சட்ட சபையில் விவாதம் நடக்கும் போது, திரு.சத்தியமூர்த்தி அய்யர் பேசிய பேச்சுக்களை ‘திராவிடனி’ல் பார்த்திருக்கலாம். பிறகு அந்த மசோதாவிற்குப் பலமான ஆதரவுகள் இருப்பதைப் பார்த்து திரு.மூர்த்தியும் அவரது சகாக்களும் வாலை அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டார்கள். அம்மசோதாவும் எதிர்ப்பில்லாமல் நிறைவேறிவிட்டது. இதை ஒழிக்கவோ, இதற்கு பதில் சொல்லவோ வேறு மார்க்கம் இல்லாததால் சுதேசமித்திரன், தனது ஆத்திரத்தைக் காட்டிக் கொள்வதற்கு அந்த அம்மை யாரைக் கேவலப்படுத்தக் கருதி, தனது அயோக்கியத்தனத்தைக் காட்டி யிருக்கிறது. அதாவது, 2-2-29 தேதி ‘மித்திரன்’ தலையங்கத்தில் ‘தேவதாசிச் சட்டம்’ என்று பெயர் கொடுத்து மனதில் கேலியாக நினைத்துக் கொண்டு எழுதுவதாவது:- ‘டாக்டர். முத்துலட்சுமி அம்மாள் தாம் பிறந்த குலத்திற்குப் பெரிய உபகாரத்தை செய்துவிட்டார் என்றும், அது என்ன குலம் என்று தெரிவதற் காக அடுத்த வார்த்தையாகவே ‘தேவதாசி என்று சொல்லப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மசோதா நிறைவேற்றப்பட்டதற்குச் சாதகமோ பாதகமோ சொல்ல...

திரு. சாமி                                   வெளியாக்கப்பட்டார் 0

திரு. சாமி வெளியாக்கப்பட்டார்

சென்னைக் காங்கிரஸ் கட்சிக்கும் சுயராஜ்யக் கட்சிக்கும் சட்டசபைத் தலைவராக திரு.சாமி வெங்கடாசலம் செட்டியாரை வைத்திருந்தார்கள். ஆனால், திரு.செட்டியார் பார்ப்பனரின் கைக்களிமண் உருண்டையா யிருந்தவரையில் தங்களுக்கு வேண்டிய மாதிரி எந்தவித பொம்மை வேண்டு மானாலும் செய்து கொள்ளலாம் என்கின்ற தைரியத்தில் அவரைத் ‘தலைவர்!’, ‘தலைவர்!’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், திருவாளர் செட்டியார், முத்துரங்கம், குழந்தை, அமீத்கான் கம்பெனி யார்களைப் போல் இல்லாமல் கொஞ்சம் தமது சுயபுத்தியைக் காட்ட ஆரம்பித்தவுடன் அவரைக் கீழே தள்ளிவிட்டார்கள். இது வெகுநாளாகவே நாம் எதிர்பார்த்ததுதான். திரு சாமியும் தயாராகவே இருந்ததாகத்தான் தெரிகின்றது. கடைசியாக திரு. சாமியைத் தள்ளியதற்குக் காரணம், திரு.சாமி, திரு. பனகால் ராஜாவிடம் அடிக்கடிபேசியதுதானாம். பிள்ளையாரைப் பிடித்த சனியன் அரச மரத்தையும் பிடித்தது என்பது போல் திரு. சத்தியமூர்த்தியின் உதவித் தலைவர் பதவியும் பிடுங்கப்பட்டி ருக்கிறது. ஆனால், இதற்கு ஏதாவது உள்இரகசியம் இருக்கலாம். அதாவது, திரு.ஸ்ரீனிவாசய்யங்கார், திரு.மூர்த்திக்கு ஏதாவது கொஞ்சம் பணம் கூட்டிக் கொடுத்திருக்கலாம் அல்லது...

இது ஒரு அதிசயமா? பகுத்தறிவும் அதன் விரோதிகளும் – சித்திரபுத்திரன் 0

இது ஒரு அதிசயமா? பகுத்தறிவும் அதன் விரோதிகளும் – சித்திரபுத்திரன்

மதம், சமயம், கடவுள், குரு, புரோகிதன், வேதம், சாஸ்திரம், புராணம், ஆகமம், சிவன், விஷ்ணு, பிர்மா, சில்லரைத் தெய்வங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ரிஷிகள், முனிவர்கள், இன்னமும் அநேக சங்கங்கள் பகுத்தறிவுக்கு விரோதிகளாகும். உதாரணமாக, மேல் நாட்டில் ஒரு பெரிய கூட்டத்தில் ஒரு பெரிய பாதிரியார் (பிஷப்) பேசும் போது, ‘ஒவ்வொருவனும் தன் தன் பகுத்தறிவைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டுமே ஒழிய குருட்டு நம்பிக்கைக்கூடாது’ என்று உபதேசம் செய்து கொண்டு வரும்போது ஒரு குட்டிப் பாதிரியார் எழுந்து “இந்த பிஷப் நாஸ்திகம் பேசுகின்றார், இவர் பெரிய பாதிரியார் வேலைக்கே லாயக்கில்லை” என்று சொன்னாராம். கூட்டத்திலிருந்தவர்கள் ‘ஏன், எதனால் இப்படிச் சொல்லுகின்றீர்கள்?’ என்று கேட்டதற்கு, “குருட்டு நம்பிக்கை வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அல்லது பகுத்தறிவை உபயோகித்துவிட்டால் கிறிஸ்துவ மதமோ ஆண்ட வனோ இருக்க முடியுமா? நம்பிக்கையை விட்டு பகுத்தறிவை உபயோ கித்துப் பார்ப்பதனால் வேதத்தின் அஸ்திவாரமே ஆடிப்போகாதா? ஆதலால் மதமோ...

இதற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள்? 0

இதற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள்?

உலகத்தின் நாலா பக்கங்களிலும் உள்ள மக்கள் அறிவு வளர்ச்சியும், முன்னேற்றமும் பெற்று, பூரண விடுதலை மார்க்கத்தில் விரைந்து சென்று கொண்டிருக்கும் காலத்தில் நமது தேசத்தில் சிறப்பாக நமது நாட்டில் உள்ள மக்கள் மாத்திரம் இன்னமும் மிருகப் பிராயத்திலேயே இருந்து வர பலமான முயற்சிகள் செய்யப்பட்டு வருவதானது மிகவும் கேலிக்கும் இழிவுக்கும் இடமானது என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதமிருக்காதென்றே எண்ணுகின்றோம். சுமார் இரண்டு மூன்று மாதத்திற்குள்ளாக தமிழ் நாட்டில் சோழ மண்டலத்தில் 2 மகாநாடுகள் பிராமண மகாநாடு என்னும் பேரால் நடைபெற்றிருக்கின்றன. இம்மகாநாட்டில் வெறும் அன்னக்காவடிகளான அல்லது வயிற்றுப் பிழைப்பு பஞ்சாங்கப் பிச்சை ஜீவனக்காரர்களான, பொறுப்பற்ற சில பார்ப்பனர்கள் கூடி மகாநாட்டை நடத்தினார்கள் என்று சுலபத்தில் சொல்லி விட முடியாது. படித்தவர்கள் என்றும் பொறுப்புள்ளவர்கள் என்றும் நாட்டின் முக்கிய பகுதியார் என்றும் சொல்லிக் கொள்ளும்படியான உத்தியோகஸ்தர்களும், உபாத்தியாயர்களும், வக்கீல்களும், மிராசுதாரர்களும் மற்றும் பல பொறுப் புள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியான பார்ப்பனர்களே பெரிதும்...

பார்ப்பனப் பட்டங்களின் இரகசியம் – சித்திரபுத்திரன் 0

பார்ப்பனப் பட்டங்களின் இரகசியம் – சித்திரபுத்திரன்

பார்ப்பனப் புரட்டுகளின் வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் ஆகியவைகளில் மிகுதியும் பொதிந்து கிடப்பது பட்டங்களே ஆகும். அதாவது தேவர், சுரர், அசுரர், ரிஷி, முனி, ராக்ஷதர், ஆழ்வார், நாயனார் போன்ற வார்த்தைகளேயாகும். இவ்வார்த்தைகள் கொண்ட பட்டமுடை யவர்கள் தான் இப்போதும் மக்களுடைய நீதிக்கும் வாழ்க்கைக்கும் ஆதார மானவைகள் என்று எழுதி வைத்திருக்கும் அநேக விஷயங்களுக்கும் கர்த்தாக்களாய் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லுவது பெருத்த தோஷங்களாகக் கற்பிக்கப்பட்டும் இருக்கின்றன. எனவே இப்பட்டங்கள் யாருக்கு எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கின்றது என்று பார்த்தால், பார்ப்பனர்களுடைய நன்மைக்கு ஆளாயிருக்கின்றவர்களுக் கெல்லாம் சாதாரணமாய்க் கிடைத்து விடுகின்றது. அவர்களுக்கு விரோத மாய் இருக்கின்றவர்களுக்கும் அசுரன், ராக்ஷதன் என்கின்ற பெயர்கள் கிடைத்து விடுகின்றன. ஆனால் இவர்களால் உயர்ந்த பட்டங்களாகிய தேவர், முனிவர், ரிஷி போன்ற பட்டம் பெற்றவர்களுக்கும் தாழ்ந்த பட்டங்களாகிய ராக்ஷதர் அசுரர் போன்ற பட்டம் பெற்றவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா என்று பார்த்தால் நடவடிக்கையில் ஒழுக்கத்தில் உயர்ந்த...

தென்னிந்திய செங்குந்தர் மகாநாடு 0

தென்னிந்திய செங்குந்தர் மகாநாடு

தென்னிந்திய செங்குந்தர் முதலாவது மகாநாடு ஈரோட்டில் இம்மாதம் 19, 20-ந் தேதிகளில் வெகு சிறப்பாய் நடந்தேறியது. அதோடு கூடவே வர்த்தக மகாநாடும் வாலிப மகாநாடும் நடந்தேறி இருக்கின்றன. மேல்கண்ட மகாநாடுகளைத் திறந்து வைத்த கனவான்களும் மகாநாட்டு வரவேற்புக் கமிட்டி அக்கிராசனர்களும் மகாநாடுகளின் தலைவர்களும் செய்த சொற் பொழிவுகள் நீண்ட வியாசங்கள் ஆனதால் அவற்றைக் ‘குடி அரசி’ல் பிரசு ரிப்பது சாத்தியமற்றதாய் இருந்ததால் பிரசுரிக்க முடியவில்லை, என்றாலும் மகாநாட்டுக்கொடியை உயர்த்திய காஞ்சீபுரம் மாஜிசேர்மென். திரு. ம.த. சாமிநாத முதலியார் அவர்களது உபந்யாசம் செங்குந்த சமூகத்தின் பெருமை யை எடுத்துக்காட்டும் முறையில் கந்த புராணத்தில் உள்ள முருகன் உற்பவக் கதையாகவே இருந்தது. மகாநாட்டைத் திறந்து வைத்த திரு.திவான் பகதூர் எம். கிருஷ்ணன் நாயர் அவர்கள் சொற்பொழிவில் விவசாயமும் கைத் தொழிலும் நாட்டுக்கு முக்கியமென்று சொல்லி “கைத் தொழிலை விர்த்தி செய்ய வேண்டும், உலக வியாபார பாஷையாகிய ஆங்கிலத்தை விர்த்தி செய்ய வேண்டும், பெண்களுக்குச் சுதந்திரம்...

புதுச்சேரியில்                                       சுயமரியாதை கிருகப் பிரவேசம் 0

புதுச்சேரியில் சுயமரியாதை கிருகப் பிரவேசம்

சகோதரர்களே! பெரியோர்களே! இப்புதுவை முத்தியால் பேட்டையிலுள்ள உயர்திரு. கி. இராஜ கோபால் செட்டியார் அவர்களின் அழைப்புக்கு இணங்கி இப்புதுமனை திறப்பு விழாவிற்கு வருவதற்கு ஒப்புக் கொண்டேன். இப்பிராஞ்சு தேசத் திலுள்ள நீங்கள் என் வேலையின் அவசியத்தை நன்குணர்ந்து பின்பற்றி ஆதரித்து செய்கையிலும் செய்து காட்ட முன் வந்தது பற்றி மகிழ்கிறேன். திரு.கி.இராஜகோபால் செட்டியார் அவர்களின் புதுமனை திறப்பில் கலந்து கொள்ள வந்த பெரியார்களாகிய தாங்கள் எனக்கு இத்தகைய சந்தர்ப்பத்தைக் கொடுத்ததற்கு உங்கள் அனைவர்க்கும் எனது நன்றியுடையது. இன்று மாலை நடக்கும் பொதுக் கூட்டத்தில் நமது சுயமரியாதை இயக்கம் என்பது பற்றி விவரமாய் பேசுகின்றேன். குறிப்பு : 21-01-1929 திங்கள் காலை திரு.கி.இராஜகோபால் செட்டியார் புதுவை முத்தியால் பேட்டை புதுமனை திறப்பு விழாச் சொற்பொழிவு. குடி அரசு – சொற்பொழிவு- 27.01.1929

புதுச்சேரி – பொதுக்கூட்டச் சொற்பொழிவு 0

புதுச்சேரி – பொதுக்கூட்டச் சொற்பொழிவு

பெருமைமிக்க அக்கிராசனாதிபதி அவர்களே! பெரியோர்களே! இப்பொதுக் கூட்டமானது, இப்பிராஞ்சு தேசத்தில் இவ்வளவு சிறப்புடனும் முயற்சியுடனும் கூடுமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இங்கு கூடியுள்ள உங்களின் பூரண மகிழ்ச்சிக் குறிப்பைப் பார்க்கும்போதும், எனக்குக் கொடுத்த வரவேற்புப் பத்திரத்தில் குறிப்பிட்டிருப்பவைகளைப் பார்க்கும் போதும், உங்கள் பெருமுயற்சி நன்கு தெரிகின்றது. நீங்கள் எனக்குக் கொடுத்த பத்திரத்தில் சிறப்பித்துக் கூறும் வார்த்தைகளுக்கு நான் தகுதியுடை யவனல்ல என்றே நான் நினைக்கின்றேன். ஆனால் என்னுடைய நோக்கத் தையும் எனது வேலையின் போக்கையும் இயக்க உண்மையையும் தெரிந்து கொண்டுள்ள உங்கள் கடமைக்கும் வந்தனம் அளிக்கின்றேன். நமது இயக்க எதிரிகளால் கடவுள் துரோகி, பிராமண துரோகி, மதத் துரோகி, சமயத்துரோகி, நாஸ்திகன் என்பன போன்ற பூச்சாண்டிகளால் பயமுறுத்தும் முதுகெலும்பு ஒடிந்த வாய்வேதாந்த சீலர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பொருட்படுத்தாதீர்கள்! என்னைப் பொருத்தமட்டில் நான் ஒரு நாஸ்திகன் அதுவும் நன்றாய் கொழுத்த நாஸ்திகன் என்றும் ஒப்புக் கொண்டேதான் இங்குகூட நாஸ்திகப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கின்றேன்....

செங்குந்தர் சமூக மகாநாடு பொருட்காட்சி திறப்பு 0

செங்குந்தர் சமூக மகாநாடு பொருட்காட்சி திறப்பு

அன்புள்ள சகோதரர்களே! இன்று தென்னிந்திய செங்குந்தர் முதலாவது சமூக மகாநாட்டின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்பொருள் காட்சி சாலையைத் திறந்து வைக்கும் பெருமையை எனக்கு அளித்ததற்காக என் மனப்பூர்வமான நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். வெகு சொற்ப கால முன்னறிவிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொருட் காட்சியானாலும், இதில் ஏராளமான சாமான்கள் காட்சிக்கு வந்து குவிந்திருப்பது போற்றத்தக்கதாகும். பொருள் காட்சிகள் என்பன மக்களின் முன்னேற்றத்திற்குரிய சாதனமாகும். வியாபாரம், கைத்தொழில், சிக்கனம் ஆகியவைகளின் முன்னேற்றம் பெரிதும் பொருள்காட்சியினாலேயே ஏற்படும். ஒவ்வொரு நாட்டாருடையவும் கைத்தொழில், பொருள் வரவு, மனோபாவம், தொழில் திறம், செய்யும் மாதிரி ஆகியவைகள் தெரியவும் மற்றவர்கள் அதைப் பின்பற்றவும் இன்னும் இம்மாதிரி எத்தனையோ விஷயங்களுக்கு இப்பொருள் காட்சிகள் பயன்படுகின்றன. எவ்வளவோ கைத் தொழில்களுக்கு நமது நாடு மிகப் பழமை யானதும் பெயர் போனதுமாயிருந்தாலும், நாம் கைத் தொழில் முறையில் ஒரு சிறிதும் முற்போக்கடையவில்லை என்பதை தெரிவிப்பதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது. பொருள்காட்சி என்பது (இன்வென்ஷன்)...

வேலூரில் பொதுக்கூட்டம் 0

வேலூரில் பொதுக்கூட்டம்

“சகோதரர்களே! எவனோ ஒரு பைத்தியக்காரன் எங்கோ இருந்து சத்தம் போட்டுவிட்டால் அதற்காக நீங்கள் இத்தனை பேரும் எழுந்து அவன் மீது பாய்வது கொஞ்சமும் சரியான காரியமல்ல. யார் எந்தக் கேள்வி கேட் டாலும், என்ன ஆட்சேபனை சொன்னாலும், அவற்றிற்குப் பதில் சொல்லவும் ஆட்சேபனைகளை சமாளிக்கவும் எங்களுக்கு ஆற்றலிருக்கிறது என்று நீங்கள் கருத வேண்டுமேயொழிய எங்களுக்குச் சிபார்சுக்காக இத்தனை பேரும் சத்தம் போடுவது எங்களை அவமானப் படுத்தியதாகும் என்றும் அன்றியும் நமது எதிரிகளும் பார்ப்பனக் கூலிகளும் தங்கள் பத்திரிகையில் ‘வேலூர் கூட்டத்தில் பெரிய கலவரம்’ என்று பெரிய தலைப்பு கொடுத்து அற்பத் தனமாகவும் இழிதனமாகவும் பத்திரிகையில் எழுதுவதற்கு இடம் கொடுத்த தாகும் என்றும் எந்தக் கேள்வி யார் கேட்டாலும் என்ன விதமான காலித்தனம் யார் செய்தாலும் நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம். நீங்கள் அமைதி யாயிருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கூட்டத்தைக் கலைக்கும்படி அக்கிராசனரைக் கேட்டுக் கொள்ளுவேன்” என்றும் அதட்டியிட்டு உட்கார்ந் தார். உடனே...

திருவள்ளுவரின் பெண்ணுரிமை – சித்திரபுத்திரன் 0

திருவள்ளுவரின் பெண்ணுரிமை – சித்திரபுத்திரன்

தற்காலம் நமது தமிழ் நாட்டில் வழங்கப்பெறும் நீதி நூற்களிலெல்லாம் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது என்று சொல்லப்படும் குறள் என்னும் நீதி நூலே மிகவும் மேலானது என்று சொல்லப்படுகிறதானாலும் அதையும் பார்ப்பனர்களோ சைவர்களோ வைணவர்களோ மற்றும் எந்த பிரிவினர் களோ அடியோடு காரியத்தில் ஒப்புக் கொள்ளுவதென்றால் முடியாத காரியமாகவே இருக்கும். என்றாலும் திருவள்ளுவரைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லிவிட்டால் பண்டிதர்களும் பெரும்பாலும் சைவர்களும் சண்டைக்கு மாத்திரம் வந்து விடுவார்கள். பார்ப்பனர்களென்றாலோ திருவள் ளுவரின் பெயரைச் சொன்னாலே சண்டைக்கு வந்துவிடுவார்கள். இவ்வளவும் இருந்தாலும், திருவள்ளுவர் யார்? என்ன ஜாதி? என்ன மதம்? அவரது கொள்கை என்ன? என்பதில் இன்னமும் எல்லோருக்கும் சந்தேகமாகவே இருக்கிறது. சைவர்கள் திருவள்ளுவரை தம் சமயத்தலைவர் என்று பாத்தியதை கொண்டாடிக் கொள்கிறார்கள். வைணவர்களில் சிலர் அவரை வைணவர் என்று கொண்டாடுகிறார்கள். சமணர்கள் அவரை தம் சமயத்தவர் என்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பார்களில் ஒரு சாரராகிய பறையர் என்று சொல்லப்படுபவர்கள் திருவள்ளுவரை தம் இனத்தவர் என்று...

காக்கை குருவி  சம்பாஷணை – சித்திரபுத்திரன் 0

காக்கை குருவி சம்பாஷணை – சித்திரபுத்திரன்

குருவி:- ஓ, காக்கையே! நீ எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் பார்ப்பனர்களை ஜெயித்து விடலாம் என்றோ அல்லது அவர்களுடைய புரட்டுகளை வெளியாக்கிவிடலாம் என்றோ நினைப்பாயே யானால் அது அவ்வளவும் பகற்கனவுதான். காரியத்தில் சுலபத்தில் முடியும் காரியம் அல்ல. அடியோடு தடியடியாய் அடித்தால் அதுவும் ஒரு சமயம் முடியும். காக்கை :- என்ன குருவியே! நீ இப்படிச் சொல்கின்றாய்? பார்ப்பான் சங்கதி எடுத்ததெல்லாம் புரட்டாயிருக்கின்றது. அவன் சொல்வதெல்லாம் புழுகாயிருக்கின்றது. இதை வெளிப்படுத்த முடியாது என்கின்றாயே, உனக்கு என்ன அவனிடத்தில் அவ்வளவு பயம்? குருவி :- எனக்கு பயம் ஒன்றுமில்லை, நீ பார்ப்பன தந்திரத்தை சரியாய் உணரவில்லை. தெரிந்திருந்தால் இவ்வளவு லேசாக அவனை மதித்திருக்க மாட்டாய். காக்கை :- சரி, நீ உணர்ந்த விஷயத்தைத் தான் சொல்லு பார்ப்போம். குருவி :- சொல்லட்டுமா? காக்கை :- சொல்லு, சொல்லு. குருவி :- முதலாவது, பார்ப்பான் எந்த விஷயத்தைச் சொல்ல வந்தாலும் ‘அது உன் கண்ணுக்கும் மனதுக்கும்...

ஹிந்திப் புரட்டு 0

ஹிந்திப் புரட்டு

சமீபத்தில் சென்னை மாகாணத்திற்கு சென்னைப் பார்ப்பனர்கள் வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களை ஹிந்திப் பிரசாரம் என்னும் பேரால் பார்ப்பனப் பிரசாரம் செய்ய அழைத்துவரப் போகின்றதாகத் தெரிய வருகின்றது. இந்த வழியில் பார்ப்பனப் பிரசாரம் செய்வதோடு மாத்திர மல்லாமல் பார்ப்பனரல்லாத மூடர்களிடமிருந்து சுமார் ஒரு லக்ஷம் ரூபா யாவது கொள்ளை அடிக்கக் கருதியிருக்கின்றார்கள் என்பதாகத் தெரிய வருகின்றது. கதரின் பேரால் அடித்த கொள்ளையாகிய ஐந்து லக்ஷம் ரூபாய் இன்னும் ஜீரணம் ஆகாமல் அப்படியே கல்லுப் போல் பார்ப்பார்கள் வயிற்றில் கிடக்க, சென்ற வருட காங்கிரசின் பேரால் கொள்ளை அடித்த சுமார் 20, 30 ஆயிரம் ரூபாயும் அப்படியே கிடக்க இப்போது இன்னும் ஒரு லக்ஷம் ரூபாய்க்கு திட்டம் போட்டு சில பார்ப்பனர் வெளிக்கிளம்பியிருப்பது பார்ப்பனர்களின் சாமர்த்தியமா அல்லது பார்ப்பனரல்லாதார்களின் முட்டாள் தனமா என்பது நமக்கு பூரணமாய் விளங்கவில்லை யானாலும் ஒருவாறு இது பார்ப்பனரல்லாதார்களின் முட்டாள் தனமான இளிச்சவாய்த்தன்மை என்றே சொல்லவேண்டும். பார்ப்பனர்கள் வந்து எதற்காகப்...

எது நாஸ்திகமல்லாதது? 0

எது நாஸ்திகமல்லாதது?

ருஷ்யா தேசத்தில் கொஞ்ச நாளைக்கு முன்பிருந்தே கடவுளைப் பற்றி பிரசங்கங்களோ, உபதேசங்களோ, வணக்கங்களோ அவசியமில்லை என்பதாக ஒரு சங்கம் ஏற்பட்டு அது தாராளமாய் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த வருஷத்திய கிறிஸ்து பிறந்த நாளை உற்சவமாகக் கொண்டாடக் கூடாதென்று வெகு பலமான பிரசாரம் செய்யப்பட்டு வந்ததில் முழுதும் வெற்றியடைய முடியாமல் போனதால் அடுத்துவரும் ஈஸ்டர் உற்சவத்தை அதாவது “கிறிஸ்து மறுபடியும் உயிர் பெற்றெழுந்த நாள்” உற்சவத்தை யாரும் கொண்டாடாமல் இருக்கும்படி இப்பொழுதிருந்தே வேண்டிய பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்கு அங்குள்ள சர்க் காராரும் இந்த இயக்கக்காரர்களை அனுசரித்து உத்திரவு போட்டு சர்க்கார் மூலமாகவும் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றதாம். இதற்காக அநேக பிரபுக்கள் லட்சக்கணக்காக ரூபாய்கள் கொடுத்து உதவியிருக்கின்றார் களாம்.எனவே, கடவுள் பிறந்த நாளையும் மறுபடியும் உயிர்த்து எழுந்த நாளையும் கொண்டாடக் கூடாது என்று சொல்லுவதும் சர்க்கார் மூலமாகவே அவற்றை பிரசாரம் செய்வதும் அங்கு நாஸ்திகம் என்று கருதப்படுவதில்லை. நமது நாட்டிலோ, சாமி...

தமிழ் மாகாண  சுயமரியாதை மகாநாடு 0

தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு

சுயமரியாதை இயக்கம் தோன்றிய சுமார் மூன்று வருஷ காலத்திற்குள் தமிழ்நாட்டில் அது அநேகமாக ஒவ்வொருவருடைய கவனத்தையும் இழுத்திருப்பதோடு இவ்வியக்க விஷயமாய் அநேகரை கூர்ந்து கவனிக்கும் படிக்கும் கவலைப்படும் படிக்கும் செய்து வந்திருக்கின்றது என்று சொல்லு வது மிகையாகாது. இவ்வியக்கம் ஆரம்பமானது முதல் இதற்கு அநேக தத்துக்கள் ஒன்றின்பின் ஒன்றாய் வந்து கொண்டே இருந்தாலும் ஒருவாறு அவ்வ ளவையும் சமாளித்து வளர்ந்து கொண்டு வருவதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு உதாரணம், இவ்வியக்க ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் துவேஷமென்றும், பிறகு பார்ப்பன துவேஷ இயக்கமென்றும், பின்னால் தேசத்துரோக இயக்கமென்றும், பிறகு சர்க்கார் பிரசார இயக்கமென்றும், பிறகு வைணவ துவேஷ இயக்கமென்றும், பிறகு சைவத் துவேஷ இயக்கமென்றும், பிறகு நாஸ்திக இயக்கமென்றும், பிறகு நிரீச்சுவரவாத இயக்கமென்றும் மற்றும் அநேகர் அநேக விதமாய் அதன்மீது பழி சுமத்தி அதற்கு பொது ஜனங்களிடம் எவ்வளவு தூரம் வெறுப்பும் துவேஷமும் ஏற்படச் செய்ய வேண்டுமோ அவ்வளவு தூரம் ஏற்பட...

வடஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள்  முதலாவது மகாநாடு 0

வடஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மகாநாடு

சகோதரி சகோதரர்களே! இந்த மகாநாட்டின் திறப்பு விழா நடத்த என்று நான் இங்கு வந்தவன். இந்தச் சமயத்தில் என்னைப் பற்றி இவ்வளவு காரியங்கள் நடக்குமென்றும் இவ்வளவு தூரம் புகழ்ந்து பேசப்படும் என்றும் நான் நினைக்கவில்லை. ஊர்வல மூலமாகவும், வரவேற்புப் பத்திர மூலமாகவும், எனது படத்திறப்பு மூலமாகவும், அளவுக்கு மீறிய உற்சாகமும் வரவேற்பும், புகழ்ச்சி உரைகளும் காணவும் கேட்கவும் நான் மிகுதியும் சந்தோஷமடைகிறேன். எனது தொண்டில் உள்ள இடையராத கஷ்டங்களிடையே இம்மாதிரியான சில வைப வங்கள் ஏற்படுவதால் சிலசமயங்களில் பரிகாசமாகவும் சில சமயங்களில் உற்சாகமாகவும் இருக்கச் செய்கின்றது. என்னைப் பற்றிய ஆடம்பர வரவேற்பும் புகழுரைகளும் நான் உங்களிடம் ஒரு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நீங்களும் இத்துடன் உங்கள் கடமை தீர்ந்து விட்டதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள். நாம் பிரவாகமான எதிர் வெள்ளத்தில் நீந்துகின்றோம் என்பதையும், நமக்கு எதிரிகளும் எதிர்ப்பிரசாரங்களும் வெளிப்படையாயும், திரை மறைவிலும் சூழ்ச்சிகளுடனும் நடைபெற்று வருகின்றதை கருத்தில் வையுங்கள். அவற்றிற்குத் தலைகொடுக்கத்...

வட ஆற்காடு ஜில்லா  பார்ப்பனரல்லாத வாலிபர்கள்  முதலாவது மகாநாடு 0

வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மகாநாடு

சகோதர சகோதரிகளே, நமது நண்பரும் சகோதரருமான திரு. ஆரியா அவர்களால் துவக்கப்பட்ட இந்த பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கமானது இப்போது நமது நாடு முழுவதும் ஏற்பட்டு பெருத்த கிளர்ச்சி செய்து வருகின்றது. எனது இயக்கத்தையும் தொண்டையும், எனது உடல் நலிவும் சரீரத் தளர்ச்சியும் எதிரிகள் தொல்லையும் ஒரு சிறிதும் தடை செய்ய முடியாமல் என்னை மேலு மேலும் உற்சாகப்படுத்தி வெற்றிக் கொடியை நாட்டி வருவதற்குப் பெரிதும் உதவியாய் இருந்து வருவது இந்த வாலிப இயக்கமே யாகும். உண்மையிலேயே இப்போதைய வாலிபர்களிடம் எனக்கு அளவுக்கு மேற்பட்ட நம்பிக்கை இல்லாதிருந்திருக்குமானால் என்னுடைய கடையை வெகுநாளைக்கு முன்பே சுருட்டிக் கட்டிக் கொண்டு வேறு ஏதாவது ஒரு துறையில் மூழ்கி இருப்பேன். ஆதலால் இந்த வாலிப இயக்கம்தான் நமது நாட்டிற்கு மாத்திரமல்லாமல் வெளிநாட்டிற்கும் சுதந்திரமும் விடுதலையும் சுயமரியாதையும் வாங்கிக் கொடுக்கப் போகின்றது. எப்படி எனில், எந்த ஒரு நாட்டிற்கும் அரசியல் தலைவனோ, தேசீயத் தலைவனோ, மதத் தலைவனோ, பாஷைப்...

நமது நாடு 0

நமது நாடு

உலகமெல்லாம் சமூக சீர்திருத்தமும், அபேதவாதமும், சமதர்மமும், சமசொத்துரிமையுமான துறைகளில் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது நமது நாட்டில் வருணாச்சிரம தர்ம மகாநாடுகள் நடந்து கொண்டி ருக்கிறது. உலகமெல்லாம் சந்திரமண்டலத்துக்கு போய்வரவும், ஆகாயத்தில் பறக்கவும், மணிக்கு 100, 200, 300 மைல் வேகம் போகவும், பேசும் யந்திரங் களை உண்டாக்கவும், மழையை வருவிக்கவும், ஆணைப் பெண்ணாக்கவும் பெண்ணை ஆணாக்கவும், செத்தவனைப் பிழைக்க வைக்கவும், ஐயாயிரம் பத்தாயிரம் மையிலுக்கப்பால் நடப்பதையும் பேசுவதையும் காணவும் கேட் கவும் செய்யவும் மற்றும் இதுபோன்ற அற்புதங்களிலும் ஆராய்ச்சிகளிலும் புத்தி செலுத்திக் கொண்டிருக்கும்போது நமது நாட்டில் “இந்தக் குளத்தில் ‘பறையன்’ தண்ணீர் மொள்ளலாமா? இந்தக் கோவிலுக்குள் நாடார் போகலாமா? இந்தப் பள்ளிக்கூடத்தில் நாயக்கர் படிக்கலாமா?” என்கின்ற விவாதமும் “சூரியனுக்கு 8 குதிரையா 16 குதிரையா? தீபாவளி புரட்டாசி மாதத்திலா அற்பிசி மாதத்திலா? சாமிக்கு நெற்றியில் நாமம் வடகலையா தென்கலையா? விபூதியை குழைத்துப் பூசுவதா அப்படியே அடித்துக் கொள்வதா? சீதையை...

சந்தேகம்                                  பார்ப்பனரல்லாதார் இயக்கம் 0

சந்தேகம் பார்ப்பனரல்லாதார் இயக்கம்

1. தங்களை பார்ப்பனர்களில் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆச்சார அனுஷ்டானங்களில் எவ்வித வித்தியாச முமில்லை என்றும் தங்களுக்கும் பார்ப்பன உரிமை உண்டென்றும் கருதிக் கொண்டு இருப்பவர்களுக்கும், பார்ப்பன மதத்தையும், வேதத்தையும், புராணத்தையும், பார்ப்பன தெய்வங்களையும் காப்பாற்ற முயலுகின்ற வர்களுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ அல்லது தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஏதாவது உரிமைபெற அரு கதையோ உண்டா? 2. யாராவது ஒருவர் தன்னை மற்றவர்களை விட உயர்ந்த ஜாதி என்றோ அல்லது க்ஷத்திரியன் என்றோ, வைசியனென்றோ, சூத்திர னென்றோ, பஞ்சமன் என்றோ சொல்லிக் கொண்டு தன்னுடைய தனி ஜாதிக்கென்று தனி சின்னமோ, ஆச்சார அனுஷ்டானமோ உண்டு என்று சொல்லிக் கொள்பவனுக்கு பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ பார்ப்பனர்களிடமிருந்து கைப்பற்றும் உரிமைகளில் பங்கு பெற பாத்தியமோ உண்டா? 3. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது பார்ப்பனீயத்தை நீக்கிய இயக்கமா? அல்லது பார்ப்பனர்களை நீக்கிய இயக்கமா? 4. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றால் பார்ப்பனர்களிடம் உள்ள உத்தியோகத்தையும்...

வாருங்கள்!                                           வாருங்கள்!! சுயமரியாதை மகாநாடு 0

வாருங்கள்! வாருங்கள்!! சுயமரியாதை மகாநாடு

செங்கற்பட்டில் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் நடக்கப் போகின்றது! சைமன் கமீஷனுக்கு என்ன சொல்லுவது என்பதை அங்குதான் தீர்மானிக்கப் போகின்றது. எல்லாரும் வாருங்கள். பதினா யிரக்கணக்கான மக்கள் கூடத் தகுந்த ஆடம்பரமான பலத்த ஏற்பாடுகள் இப்பொழுதிருந்தே நடைபெற்று வருகின்றன. வரத் தவறாதீர்கள். குடி அரசு – வேண்டுகோள் – 06.01.1929

காங்கிரஸ் ஏமாற்றுத் திருவிழா  முடிவு பெற்றுவிட்டது 0

காங்கிரஸ் ஏமாற்றுத் திருவிழா முடிவு பெற்றுவிட்டது

ஒற்றுமைத் தீர்மானத்தின் யோக்கிதை 43-ம் வருஷத்திய காங்கிரஸ் என்னும் இவ்வருஷத்திய ஏமாற்றுத் திருவிழா ஒருவாறு முடிவு பெற்று விட்டது. இந்நாடகம் இந்நிலையில் முடிவு பெற முக்கிய வேஷதாரியாய் திரு. காந்தியே நடித்திருப்பது மிகுதியும் குறிப்பிடத்தக்கது. எனவே அம்முக்கிய நடிகராகிய திரு.காந்தி இந்நாடகத்தில் கலந்து கொண்டதற்கு அவர் (திரு.காந்தி) சொல்லும் முக்கிய காரணம் என்ன வென்றால்:- ‘ஒற்றுமையின் அவசியத்தைக் கோரியே’ இம்மாதிரி கலந்து கொண்டாராம். உண்மையில் ஒற்றுமை ஏற்பட்டதா? அல்லது ஒற்றுமை வாசனை சிறிதாவது அங்கு ஏற்பட்டதா? திரு. காந்தியின் ஒற்றுமைத் தீர்மானத்திற்கு முன்னும் சர்வ கட்சி மகாநாட்டின் ஒற்றுமைத் தீர்மானத்திற்கு முன்னும் நாட்டில் எத்தனை கட்சியும் வகுப்புப் பிரிவும் இருந்ததோ அதைவிட அதிகமான கட்சியும் பிரிவினைகளும் தீர்மானத்திற்குப்பின் ஏற்பட்டிருப்பது காங்கிரஸ் நடவடிக்கையைக் கவனித்தவர்களுக்கு தெள்ளென விளங்காமல் போகாது. இந்த இடத்தில் நமது (இந்தியர்களின்) லட்சியம் என்ன என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது, நமது லட்சியம் ஒற்றுமையா, விடுதலையா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படாமல்...