Category: குடி அரசு 1929

திருவல்லிக்கேணியில் யதீந்திரதாஸ்  வாசக சாலை திறப்பு விழா 0

திருவல்லிக்கேணியில் யதீந்திரதாஸ் வாசக சாலை திறப்பு விழா

தலைவரவர்களே! அன்புள்ள நண்பர் அவர்களே! இன்று திறப்பு விழா கொண்டாடும்படி இந்த பல பாஷை சொல்லிக் கொடுக்கும் முதலிய காரியங்கள் செய்யும் வாசக சாலையை நான் திறந்து வைக்கவேண்டும் என்று எனது பழைய நண்பர்கள் பலர் கேட்டுக் கொண்டதை நான் ஒரு பெருமையாய்க் கருதி அத் தொண்டாற்றவே இங்கு வந்துள்ளேன். எனினும் இத்திறப்புக் கொண்டாட் டத்தை நான் நடத்துவதின் மூலம் எனக்குக் கிடைத்த பெருமையைவிட நான் இங்கு வந்து எனது பழைய நண்பர்களை சந்தித்து அளவளாவ சந்தர்ப்பம் கிடைத்ததே எனக்கு மிகுதியும் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கத்தக்கதாகும். இந்த விழாவிற்கு இன்னார் வந்து சொற்பொழிவாற்றுவார்கள் என்று சொன்னவுடன், யான் எவ்வித யோசனையும் செய்யாமல் உடனே வருவதாக ஒப்புக் கொண்டேன். இந்தப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமே என்கின்ற ஆசை எனக்கு வெகு நாளாகவே இருந்து வந்தது. என்னுடைய ஆசையும் அக்கிராசனர் ஆசையும் இவ்விழாவுக்கு முக்கியஸ்தர்களான திருவாளர்கள் ராமச்சந்திர சர்மா, மதுரை சுப்பிரமணிய அய்யர் ஆகியவர்கள்...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அதிக்கிரம – நெறி தவறிய, வரம்பு மீறிய அவிபக்தம் – பிரியாதது ( கூட்டுக்குடும்பம் ) அனந்தம் – அளவற்றது, எல்லையற்றது அனுஷ்டானம் – நடைமுறை, ஒழுக்கம், வழக்கம் ஆப்புக்கடாவின – ஆப்பு வைத்தல், ஆப்பு அடித்தல் இஷ்ட சித்தி – விரும்பியது கைகூடல், எண்ணிய வண்ணம் நடைபெறல் ஓதா ( ஹோதா ) – அமைவு, இருப்பு, நிலைமை குமரி இருட்டு – கன்னி இருட்டு, விடியற்கு முன் உள்ள இருள் கெம்பு – சிவப்பு இரத்தினக்கல் சங்காத்தம் – தோழமை, இணக்கம் சிட்சை – தண்டனை சிஷ்ட பரிபாலனம் – நல்லோரைக் காத்தல் சீதோஷ்ண ஸ்திதி – தட்பவெப்ப நிலை சுவாதந்திரியம் – சுதந்திரம், தன்விருப்பம், விடுதலை, விடுபாடு தங்கடங்கள் – தங்கள் தங்கள் தர்க்காஸ்து – தரிசு தாரதம்மியம் – ஏற்றத் தாழ்வு தர்ப்பீத் – பயிற்சி துராக்கிருதம் – வல்லாந்த கற்பழிப்பு, பலாத்கார கற்பழிப்பு துவஜ...

0

திரு.வேணுகோபால் நாயுடுவின் மரணம் பட்டுக்கோட்டையில் திரு, வேணுகோபால் நாயுடு அவர்கள் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் எமது மனம் துடித்த துடிப்பைச் சொல்லிவிட முடியாது. சில நிமிஷங்கள் வரை நிம்மதியில்லாமல் மனது தத்தளித்துக் கொண்டிருந்தது. இப்போதும் இச்சம்பவத்தை நினைக்குந் தோறும் மனம் திடுக்கிடுகிறது. திரு.வேணுகோபால் நாயுடு அவர்கள் பார்ப்பனீயம் நிறைந்த பட்டுக்கோட்டையில், நமது மக்களுக்கு, அதுவும் முக்கியமாக இளைஞர்களுக்கு எவ்வளவு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்தார்கள் என்பது அவ்விடத்தில் இன்று இளைஞர்கள் படும் துயரத்தை நேரில் பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும். மாணவர்களுக்கு நற்புத்தி புகட்டக்கூடிய பிதாவும், ஏழைமக்களுக்கு வேண்டுவன அளித்து அவரது துயர்நீக்கி வந்த அண்ணலும், பார்ப்பனீயமும் புரோகிதப்புரட்டு கண்டு அஞ்சும்படியான சுயமரியாதை வீரரும், வக்கீல் தொழிலில் ஒரு பிரபலஸ் தரும், பொதுவாக, பார்ப்பனரல்லாதார்களுக்கே தஞ்சை ஜில்லாவிற்கு ஒரு தலைவருமாக விளங்கிய திரு. வேணுகோபால் அவர்களை இழந்தது நமக்கு ஒரு பெரிய நஷ்டம் என்றே சொல்வோம். அவர்களது முற்போக்கான கொள் கைகளும்,...

விவாகரத்து 0

விவாகரத்து

சமீபத்தில் சென்னையில் நடந்த ஸ்திரீகள் மகாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவைகளில் முக்கியமாக இரண்டு தீர்மானங்கள் மாத்திரம் அதிகமான விவாதத்திற்குக் காரணமாயிருந் தன. “ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சரிசமானமான ஒழுக்க முறைகள் ஏற்படுத்த வேண்டும்” என்பது ஒன்று. “கலியாணமானப் பெண்கள் தகுந்த காரணமிருப்பின் தங்களுக்கிஷ்டமான போது தங்கள் விவாகத்தை ரத்து செய்து கொள்ளலாம்” என்பது இரண்டு. இந்த இரண்டு தீர்மானங்களும் பெரிய படித்த மனிதர்கள் என்பவர்களையும் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுகிற வர்கள் என்பவர்களையும் சரியான பரீட்சை பார்த்துவிட்டது என்றே சொல் வோம். நமது தென்னிந்தியாவிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் ஒன்றுவிடாமல் “விவாகரத்து” தீர்மானத்தை கண்டித்துவிட்டன. இத்தீர்மானம் சம்பந்தமாக பத்திரிகைகளில் நடந்த வாக்குவாதங்களும், மறுப்புகளும், கண்டனங்களும் அவைகளுக்கு எழுதப்பட்ட பதில்களும் நமது வாசகர்கள் நன்கு அறிந்திருப்பார்கள். வயது சென்ற ஸ்திரீகள் என்று சொல்லக்கூடியவர்களில் சிலர் தீர்மானத்தின் உண்மையை உணராமல் இதை எதிர்த்த விஷயம் நமக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது. ஸ்திரீகள் மகாநாடு...

மேயோ கூற்று மெய்யா- பொய்யா? 0

மேயோ கூற்று மெய்யா- பொய்யா?

கோவை திருவாளர் அ.அய்யாமுத்து அவர்களால் இயற்றப் பெற்ற மேற்கண்ட நூலின் பிரதி ஒன்று வரப் பெற்றோம். கன்னி மேயோ கருத்தைப் பற்றியோ, அவர் கூறியது இன்சொல்லா புன்சொல்லா என்பது பற்றியே நமக்கு கவலையில்லை. கூறிய கூற்று மெய்க்கூற்றா பொய்க்கூற்றா என்பதை நாம் அறிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கின்றோம். சிலர் மேயோ ஆதிக்க வெறி கொண்ட வெள்ளையர்களால் கூலிக்கு வேலை செய்ய வந்த குப்பைக்காரி என்கின்றனர். குப்பைக்காரி என்றால் என்ன? மேயோவின் கூடையில் குப்பை நிறைந்ததா? இல்லையா? குப்பை திரட்ட வந்து வெறுங்கூடையுடன் சென்றாளா? வெறுங்கூடையுடன் சென்றுதான் நிறை கூடையுடன் இந்தியாவிலிருந்து திரும்பி வந்ததாகத் திரித்துக் கூறினளா? என்பன நமது கடா. இக்கடாவிற்கு, வைக்கம் வீரர், மாசற்ற நெஞ்சுடையார், தூய வாழ்க்கையினர், துகளிலாப் பொது நோக்குடையார், தேசத் தொண்டில் திளைத்த திண்மையினார், அத்தேசத் தொண்டை கதர்தொண்டில் ஈடுபடுத்தித் திகழும் திருவுடையார், திராவிடன், குடியரசு பத்திரிகைகளில் பழந்தமிழ் மக்களிடை பாரறிய மெய்ஞ்ஞானக் கட்டுரைகள் வரைந்த...

“தீண்டப்படாதார்”கள் நிலைமை 0

“தீண்டப்படாதார்”கள் நிலைமை

“இந்து மதத்தில்” தீண்டப்படாதவர்கள் என்பவர்களின் பரிதாபகரமான நிலமையைப் பற்றி நாம் அடிக்கடி எழுதி வந்திருக்கிறோம். இன்றைய தினம் நமது நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது கேவலமான நிலையை உணர்ந்து தாங்கள் பார்க்கக் கூடாதவர்களாகவும் நெருங்கக் கூடாதவர்களாகவும், தொடக் கூடாதவர்களாகவும் இதர “இந்திய” மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருவதிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் பூனாவில் கோயில் பிரவேசம் சம்பந்தமாக சத்தியாக்கிரகம் நடைபெற்று அதன் வேகம் இன்னும் குறையாமல் அவ்விடத்திய மக்களது உணர்ச்சியைத் தட்டி யெழுப்பியிருக்கிறது. வட இந்தியாவில் காசி முதலிய பல இடங்களிலும் இதே மாதிரியாக தாழ்த்தப்பட்டவர்களின் கிளர்ச்சி அதிகமாகும் அடையாளங்களும் காணப்படுகின்றன. தென் இந்தியாவில், அதிலும் முக்கியமாக தமிழ் நாட்டில் நமது சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்து வேரூன் றிய சில வருஷங்களுக்குள்ளாகவே, சிறிது காலமாக தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் பொது ஜனங்களுக்கு சிறிது கவலை ஏற்பட்டிருப்பதோடு கூட அவர்களுக்கும் தங்கள் கேவலமான...

துன்பத்தில் துயருறும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் 0

துன்பத்தில் துயருறும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்

சகோதரிகளே! சகோதரர்களே! சீர்திருத்தம் என்பது பற்றி இதற்குமுன் நண்பர்கள் பேசினார்கள். அவர்கள் பிரசங்கத்தில் உற்சாக மிகுதியினால் சொன்ன மிக உயர்ந்த பொருள்களையெல்லாம் பெரும்பாலும் நீங்கள் விளையாட்டாக எண்ணக் கூடும். இதுவரையில் அவர்கள் நமதியக்கத்தின் முற் போக்கின் பொருட்டு பட்ட கஷ்டங்களையும் எடுத்துக் கொண்ட சிரமங்க ளையும் அவர்கள் எண்ணி இன்றைய சீர்திருத்த மண வைபவத்தின் உற்சாகத் தில் பேசினார்கள். அவர்கள் ஒவ்வொருவர் கூறிய சொற்பொழிவுகளிலும் மிக உயர்ந்த பொருள்கள் விளங்கியது. இவைகளை எல்லாம் கேட்ட நீங்கள் சில மாறுதல்களை அடையக்கூடும். இதுவரையில் பார்ப்பனனையும், அவன் கொள்கைகளையும், அவனது பழக்கவழக்கங்களையும் கண்டித்து வந்தோம். நீங்களும் பார்ப்பனனை திட்டுகிறவர்கள் என்று எங்களை எண்ணி இருந்தீர்கள். பார்ப்பனனை திட்டிய காலம் மலையேறி போய்விட்டது. ஏனெனில் முதலில் பார்ப்பனனை திட்டிய பின்பே புத்தி சொல்லக் கூடிய நிலையில் இருந்தீர்கள். பார்ப்பான் இன்னின் னவை செய்கிறான், அதில் தீது இவைகள் என்பதை எடுத்துக் காட்டி பின்பு நீங்கள் அவனது...

திரு. குருசாமி – குஞ்சிதம் திருமணம் 0

திரு. குருசாமி – குஞ்சிதம் திருமணம்

சென்ற ஞாயிற்றுக்கிழமை 8-ம் தேதியன்று ஈரோட்டில் எமது இல்லத்தில் நடைபெற்ற ‘ரிவோல்ட்’ உதவி ஆசிரியர் திரு.குருசாமியின் திருமணத்தைப் பற்றிய முழு விவரங்களை மற்றொரு பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம். இந்தத் திருமணமானது பல வழிகளிலும், ஏனைய திருமணங்களைவிட சிறந்தது என்பதற்கு சற்றும் சந்தேகமில்லை. முதலாவதாக இது ஒரு காதல் மணம். மணமகனும் மணமகளும் ஒத்த கல்வியும், ஒத்த அன்பும், ஒத்த குணமும், ஒத்த உடல் நலனும் உடையவர்களாகையால் அவ்விருவரும் ஒருவரையொருவர் காதலித்து செய்து கொண்ட திருமணமாகையால் இதைக் காதல் திருமணம் என்றோம். இரண்டாவதாக ஒரு வகுப்பிலுள்ள மணமகன் மற்றொரு வகுப்பைச் சார்ந்த மணமகளை மணந்து கொண்டதால் இது ஒரு கலப்பு மணமாகும். இந்தச் சீர்திருத்த மணத்திற்கு முக்கியமாய் மணமகன் திரு.குருசாமி அவர்களுக்கு பல இடையூறுகள் நேர்ந்தன. இந்தத் திருமணத் தின் சிறப்பைக் கூறுமுன் மண மகனது சாதியாராகிய “முதலியார்” எனப்படு வோர்கள் இவ்விதக் காதல் மணங் களுக்கு எவ்வளவு இடையூறாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றி...

நமது மலாய் நாட்டு விஜயம் 0

நமது மலாய் நாட்டு விஜயம்

நாம் இவ்வாரம் மலாய் நாடு போகும் விஷயம் பத்திரிகைகள் மூலம் வெளிவந்திருப்பதை வாசகர்கள் அறியலாம். மலாய் நாட்டிலுள்ள சுயமரியாதை இயக்கத்திலீடுபட்ட அன்பர்களும் தொண்டர்களும் வெகு நாட்களாக விரும் பியதற்கும் நாமும் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகள் உலகிலுள்ள எல்லா மக்களிடையிலும் பரவி நன்மை பயக்க வேண்டுமென எதிர்பார்த்திருந்ததற்கும் ஏற்ப, நாம் மலாய் நாடு செல்கிறோம். நாம் இப்போது அங்கே போவது நமது நாட்டிலுள்ள வேலைகளையெல்லாம் நாம் முடித்து விட்டோம் என்ற கருத்திலல்ல. பின் என்னவெனில், இந்த 5, 6 ஆண்டுகளாக சுயமரியாதை இயக்கத்தின் மூலமாய், மக்களிடையிலிருக்கின்ற புரட்டு களையும் மூடநம்பிக்கைகளையும் எப்படி இங்கு எடுத்துரைத்தோமோ அதே போல், மலாய் நாட்டில் குடியேறியுள்ள தமிழ் மக்களிடத்திலும் நமது இயக்கத்தின் கொள்கைகளை நேரில் எடுத்துச் சொல்ல வேண்டுமென்னும் ஆசையினால்தான் நாம் இப்போது மலாய் நாடு செல்கின்றோம். தாய் நாட்டி லிருந்து இதர இடங்களாகிய மலேயா, தென் ஆப்பிரிக்கா முதலான அயல் நாடுகளுக்கு ஜீவனத்திற்காகக் குடியேறிய...

சோமசுந்திரம் செட்டியார் 0

சோமசுந்திரம் செட்டியார்

கோயமுத்தூர் காளிஸ்வர மில்லை ஏற்படுத்தினவரும், மற்றும் பல பெரிய மில்லுகளையும் நிர்வாகம் செய்து வந்தவருமான திருவாளர் தேவ கோட்டை திவான் பகதூர் பி.சோமசுந்திரம் செட்டியார் அவர்கள் திடீரென்று மரண மடைந்ததைக் கேட்டு நாம் மிகுதியும் துயர் உறுகின்றோம். திரு.சோம சுந்தரம் அவர்கள் தென் இந்தியாவில் ஒரு ஒப்பற்ற மனிதராவார். அவருக் குள்ள நிருவாக சக்தி வேறு ஒருவரிடமும் காணமுடியாது. மேல்நாட்டு நிருவாக நிபுணர்களை விட சிறந்தவர் என்றே சொல்லலாம். ஒரு இந்தியர் எவ்வளவு பெரிய தொழில் வேண்டுமானாலும் செய்ய சக்தி உள்ளவர் என்பதை தென்னிந் தியாவுக்கு அவரே வெளிப்படுத்தினார். ஆகவே, அவரது பிரிவால் தென் இந்தியா ஒரு பெரிய வியாபார நிர்வாக நிபுணரை இழந்ததென்றே சொல்ல வேண்டும். அவரது குமாரரான திரு.சாத்தப்ப செட்டியாருக்கு நமது ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். குடி அரசு – இரங்கல் செய்தி – 08.12.1929

சுயநல வெறியர்கள் மகாநாடு 0

சுயநல வெறியர்கள் மகாநாடு

சென்னை ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் சென்ற மாதம் 30-ந் தேதியன்று சனாதன தர்மிகள் மகாநாடு என்பதாக சுயநல வெறியர்கள் மகாநாடு ஒன்று கூட்டப்பட்ட விஷயத்தை யாவரும் தெரிந்திருக்கலாம். அதில் முக்கிய மாய் மனு தர்ம சாஸ்திரத்தை நிலைநாட்டுவதையே கவலையாகக் கொண்டு அதற்கு வேண்டிய முயற்சிகளும் செய்யப்பட்டு அதை அனுசரித்த பல தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இதை நினைக்கும் போது இன்றைய தினம் நாம் வெள்ளைக்காரர்களுடைய அரசாட்சியிலும் அவர்களுடைய ராணுவக் காப்பிலும் இருப்பதற்கு நம்மை நாமே பாராட்டிக் கொள்ள கடமைப் பட்டவர்கள் ஆவோம். இந்தப்படி நாம் சொல்லுவதைப் பற்றி பொறுப்பும் கவலையுமற்ற சிலர் நம்மீது ஆத்திரப்பட்டாலும் படுவார்கள். ஆனால், உண்மையிலேயே துணிந்தவர்கள் யாரோ சில பொறுப்பற்றவர்களுடைய ஆத்திரத்துக்குப் பயப்படுவார்களேயானால் அது முன்னுக்குப் பின் முரணாகத் தான் முடியும். ஆகையால், அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நிற்க; மேற்படி மகாநாட்டுக்குத் தலைமை வகித்த கல்கத்தாவிலுள்ள ஒரு “தேசியவாதி” யாகிய திரு.சியாம்சந்திர சக்கரவர்த்தி என்னும் ஒரு வங்காளத்துப்...

திருவல்லிக்கேணியில் யதீந்திரதாஸ்  வாசக சாலை திறப்பு விழா 0

திருவல்லிக்கேணியில் யதீந்திரதாஸ் வாசக சாலை திறப்பு விழா

தலைவரவர்களே! அன்புள்ள நண்பர் அவர்களே! இன்று திறப்பு விழா கொண்டாடும்படி இந்த பல பாஷை சொல்லிக் கொடுக்கும் முதலிய காரியங்கள் செய்யும் வாசக சாலையை நான் திறந்து வைக்கவேண்டும் என்று எனது பழைய நண்பர்கள் பலர் கேட்டுக் கொண்டதை நான் ஒரு பெருமையாய்க் கருதி அத் தொண்டாற்றவே இங்கு வந்துள்ளேன். எனினும் இத்திறப்புக் கொண்டாட் டத்தை நான் நடத்துவதின் மூலம் எனக்குக் கிடைத்த பெருமையைவிட நான் இங்கு வந்து எனது பழைய நண்பர்களை சந்தித்து அளவளாவ சந்தர்ப்பம் கிடைத்ததே எனக்கு மிகுதியும் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கத்தக்கதாகும். இந்த விழாவிற்கு இன்னார் வந்து சொற்பொழிவாற்றுவார்கள் என்று சொன்னவுடன், யான் எவ்வித யோசனையும் செய்யாமல் உடனே வருவதாக ஒப்புக் கொண்டேன். இந்தப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமே என்கின்ற ஆசை எனக்கு வெகு நாளாகவே இருந்து வந்தது. என்னுடைய ஆசையும் அக்கிராசனர் ஆசையும் இவ்விழாவுக்கு முக்கியஸ்தர்களான திருவாளர்கள் ராமச்சந்திர சர்மா, மதுரை சுப்பிரமணிய அய்யர் ஆகியவர்கள்...

இந்திய ராஜாக்களும் மடாதிபதிகளும் 0

இந்திய ராஜாக்களும் மடாதிபதிகளும்

சென்ற வாரத்திற்கு முந்திய வாரத்தில் “இந்தியக் கடவுள்கள்” என்ப தைத் தலையங்கப் பெயராகக் கொண்டு ஒரு தலையங்கம் எழுதியிருந்தோம். அதாவது இந்தியாவில் உள்ள பதினாயிரக்கணக்கான கோயில்களில் ஒன்றாகிய திருப்பதி கோயில் என்கின்ற ஒரு கோயிலுக்கு மாத்திரம் வருடம் ஒன்றுக்கு 20 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட வரும்படி உள்ளதென்றும், இந்த வருமானம் பெரிதும் யாத்திரைக்காரர்களால், அதாவது, இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலிருந்து செலவு செய்து வரும் யாத்திரைக்காரர்களால், காணிக்கையா கவும் வேண்டுதலை என்னும் பெயரால், தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் ஆகிய நகைகள் முதலிய அரும் பொருள்களாகவும் மற்றும் பலவாறாய் கொடுக்கப் படுகின்றதென்றும், மேலும் திருப்பதி என்கிற இந்த ஒரு வேதஸ்தானத்திற்கு மாத்திரம் கட்டிடம், நகை, வாகனம், சாமான், பூமி ஆகியவைகளில் ஏழு கோடி ரூபாய்க்கு மேல்பட்டும் மதிப்பிடக்கூடிய சொத்துக்கள் முடக்கமாய் இருக்கின்ற தென்றும், இவைகளால் மொத்தத்தில் கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றுக்கு ஒருகோடி ரூபாய் போல் திருப்பதி வெங்கிடாசலபதி சாமியால் மாத்திரம் ஏழை இந்திய...

இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும் 0

இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும்

முதலாவது திரு.ஆச்சாரியார் இராமாயணத்தை ஒரு மத சம்பந்தமான புஸ்தகமாய் கருதுகின்றாரா? அல்லது இலக்கிய சம்பந்தமான ஒரு பொது கதை புஸ்தகமாய் கருதுகின்றாரா? என்பதே நமது கேள்வி. ஒரு சமயம் அவர் அதை இலக்கிய நூலாகக் கருதுவதாயிருந்தால் அந்தப்படி கம்பராமாயணத்தை மாத்திரம் கருதுகிறாரா? அல்லது வால்மீகி இராமாயணத்தையும் சேர்த்து கருதுகிறாரா? அல்லது இரண்டையுமே கருதுகின்றாரா என்பதே இரண்டாவது கேள்வியாகும். நிற்க, திரு.ஆச்சாரியார் தனது பிரசங்கத்தில் “இராமாயணம் நடந்த கதை அல்ல” என்று ஒப்புக் கொண்டுவிட்டார். ஆனால் அதைப் பற்றி மற்றவர்கள் விவகரிப்பது தப்பு, மூடத்தனம் என்கின்றார். இந்த புத்தி இவர்களுக்கு இவ்வளவு நாளாக எங்கு போயிற்று என்று கேட்கின்றோம். இராமாயணம் பொய் என்று நாம் சொன்ன காலத்தில் நம்மை நாஸ்திகர்கள் என்று சொன்ன இந்தக் கூட்டத்தார்கள் இப்போது தாங்களாகவே இராமாயணம் பொய், அதைப்பற்றி ஒன்றும் பேசாதீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியம் இப்போது இவர்களுக்கு ஏன் வந்தது? என்று பார்ப்போமானால். இராமாயணக் கதை...

திருப்பதி வெங்கிடாசலபதியின்  நன்றி கெட்ட தன்மை 0

திருப்பதி வெங்கிடாசலபதியின் நன்றி கெட்ட தன்மை

திருப்பதி வெங்கிடாசலபதி என்னும் கடவுளால் நமது நாட்டிற்கு உள்ள நஷ்டத்தைப் பற்றி சென்ற வாரம் தெரியப்படுத்தி இருந்தோம். அதாவது, மக்களுக்கு வருஷத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் போல் செலவு ஆவதைப் பற்றியும் சுமார் 7,8 கோடி ரூபாய் சொத்து வீணாகிறது என்பது பற்றியும் எழுதி இருந்தோம். தேசத்துக்கு இவ்வளவு நாசத்தை உண்டாக்கி இவ்வளவு பூசையும், உற்சவத்தையும், நகையையும், வாகனங்களையும், பூமியையும், கட்டிடங் களையும், ஜமீன்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் கடவுள் சற்றாவது யோக்கியப் பொறுப்பின்றியும் நன்றி அறிதலின்றியும் நடந்து கொள்வதைக் கண்டால் அந்த மாதிரிக் கடவுளை நமது நாட்டில் வைத்திருப்பது முட்டாள் தனமும் பேடித்தனமும் ஆகும் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில், இவ்வளவு போக, போக்கியத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்தக் கடவுளின் வேலையை பார்த்து வருபவரும், கடவுளுக்கே தந்தை என்றும், மகன் என்றும் சொல்லத் தகுந்தவருமான மகந்து என்பவருக்கு பைத்தியம் பிடிக் கச் செய்து அவருடைய சிஷ்யர்களையும் ஜெயிலில் அடைக்கச் செய்து...

மணமுறையும் புரோகிதமும் 0

மணமுறையும் புரோகிதமும்

ஆண்பெண் வாழ்க்கை இன்பத்திற்கு இவ்விருபாலார்க்கும் இயற்கை ஒப்பந்தம் ஒன்று, என்று மனித சமூகம் உற்பத்தியானதோ அன்று முதல் தானாகவே இருந்து வருகின்றது. மனித சமூகம் பரவி விரிந்து நெருக்கமானதும், பெண்கள் கருப்பவதிகளாய் இருக்கும் காலத்து அவர்கட்கு ஒரு பாதுகாப்பு ஏற்படவேண்டும் என்ற முறையிலும், மனித சமூகத்தில் சிக்கன நெருக்கடி ஏற்பட்டு அதனால் பேராசை, வஞ்சகம், சோம்பேறித்தனம் முதலியவைகள் உட்புகுந்துவிட்டமையாலும் பொதுசனங்கள் அறிய இவ்விருபாலர்க்கும் மணவினை ஏற்படுதல் அவசியமாயிற்று. இன்றேல், பெண்கள் ஏமாற்றப் படுவார்கள் என்பது திண்ணம். மேலும் குழந்தைகள் சதிபதிகட்கும் பொது வாதலால், குழந்தைகளைப் பொறுத்தவரையிலாவது தந்தையின் பொறுப்பு விளக்கமாகத் தெரிய வேண்டிய அளவிலும் மணவினை பொது சனங்கள் அறிய நிகழ்த்தப்பட வேண்டியது அவசியமாயிற்று. எனவே, உலகத்தில் மிகச் சாதாரணமானதும் அதே சமயத்தில் மிகப் பெரியதுமான இவ்வாண் பெண் இணக்கம் மணம் என்ற பெயருடனும், பொது நிகழ்ச்சி என்ற நிபந்தனையுடனும் நாகரிகம் முதிர்ந்த சமூகங்களால் கையாளப்பட்டு வருகின்றன. ஆதித்தமிழர் கள் தங்கள்...

கார்ப்பொரேஷன் தலைவர் தேர்தல் 0

கார்ப்பொரேஷன் தலைவர் தேர்தல்

சென்னை கார்ப்பொரேஷனுக்கு இம்மாதம் 12-ந் தேதி நடந்த தலைவர் தேர்தலில் திருவாளர் ஏ.இராமசாமி முதலியார் அவர்கள் பெருவாரியான ஓட்டுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது கேட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். சென்ற வருஷத்தேர்தல் போலவே இவ்வருஷமும் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ளாகவே இரு கனவான்கள் போட்டி போட்டு ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குள்ளும் பிரிவினை ஏற்பட்டு அவர்களில் இரு கட்சிக்கு வேலை செய்யப்பட்டு தேர்தல் நடந்தேறியதை குறித்து விசனப்படாமலிருக்க நம்மால் முடியவில்லை. தேர்தலுக்கு இரண்டு வாரத்திற்கு முன்னால் நாம் எழுதியது போல ஜஸ்டிஸ் கட்சிக்கு நெல்லூரில் புதியதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இவ்விஷயத் தில் சிறிது தலையிட்டு யாராவது ஒருவர் தான் நிற்க வேண்டுமென்பதாக முடிவு செய்தோ அல்லது மற்ற பிரமுகர்களையும் சேர்த்து ஒரு முடிவு செய்தோ இருப்பாரானால் இச்சம்பவம் நேர்ந்திருக்காதென்பது நமது துணிபு. அபேட்சகர் கள் இருவரும் தலைவருடைய தீர்ப்பை எதிர்பார்க்கவில்லை என்பதற்காக தலைவர் தனது முடிவை தெரியப்படுத்தவில்லை என்பதாக சொல்லப்படு வதானாலும் இம்மாதிரியான முக்கிய விஷயங்களில் நெருக்கடியான நிலைமை யைக்...

சென்னை மந்திரிகளை பின் பற்றுதல் 0

சென்னை மந்திரிகளை பின் பற்றுதல்

சென்னை மாகாண சுகாதார மந்திரி திரு.எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுவிலக்கு விஷயமாய் கவர்ன்மெண்டாரின் கொள்கையை திட்டப்படுத்தவும் மக்களுக்கு மதுவிலக்கில் அதிக முயற்சி உண்டாக்கவும் வருஷம் ஒன்றுக்கு நாலு லட்ச ரூபாய் போல் செலவு செய்து நாட்டில் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தது யாவருக்கும் தெரிந்ததாகும். அதை இந்நாட்டுப் பார்ப்பனர்கள் கண்டு உண்மையில் நமது நாட்டில் மதுவிலக்கு ஏற்பட்டுவிட்டால் எங்கு அதனால் பிழைக்கும் தங்களது உத்தியோகத் தொழிலும் வக்கீல் தொழிலும் மற்றும் மதுபானத்தின் பலனாய் ஏற்படும் பலவிதத் தொழிலும் நின்றுவிடுமோ எனக்கருதி பலவித தந்திரத்தாலும் மந்திரி கனம் முத்தையா முதலியாருக்குக் கெட்ட எண்ணம் கற்பித்தும், கவர்ன்மெண்டை தூண்டி முத்தையா முதலியாரின் கொள்கையை ஒப்புக்கொள்ளாமல் இருக்கச் செய்ய முயற்சித்தும் பயன்படாமல் போய் இப்போது சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு பிரசாரம் நடை பெறுவதும் யாவருக்கும் தெரிந்ததாகும். தவிர, காந்தி மடத்தின் சட்டாம் பிள்ளையாகிய திரு. இராஜகோபாலாச்சாரியார் தினமும் இந்தக் கொள்கை யையும் பிரசாரத்தையும்...

பெண்கள் விடுதலைக்கு  ஜே! ஜே!! ஜே!!!  பஞ்சரத்தினம் 0

பெண்கள் விடுதலைக்கு ஜே! ஜே!! ஜே!!! பஞ்சரத்தினம்

உலகத்தில் எங்குமே பெண்கள் தாழ்த்தப்பட்டிருக்கின்றார்கள். நமது நாட்டில் அவர்கள் மனிதப் பிறவியாயிருந்தும் மிருகங்களிலும் கேவலமாய் நடத்தப்படுவதும் அவர்கள் ஆண்களின் காம இச்சை தணிக்கும் கருவி யாகவும், பிள்ளைபெறும் யந்திரமாகவும், ஆண்களுடைய சொத்துக்களில் ஒன்றாகவும், தகப்பன் என்பவனாலும் சகோதரன் என்பவனாலும் புருஷன் என்பவனாலும் பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கவோ விற்கவோ வாடகைக்கு விடவோ தனது சுயநலத்துக்காக மற்றவர்களுக்குக் கூட்டிக் கொடுக்கவோ கூட சுவாதந்தரியமுள்ள வஸ்துக்களாகவும் பாவிக்கப் பட்டு வருகின்றனர். அவர்களை விலைக்கு வாங்கியவர்கள் மற்றவர்க்கு கூலிக்கு விபசாரத்திற்கு விட்டு பணம் சம்பாதிக்கும் ஒரு யந்திரமாகவும் உபயோகப்படுத்தி வருகின்றனர். இத்தகைய கொடுமைகள் அநேகமாய் மதத்தின் பேராலும் தர்ம சாஸ்திரத்தின் பேராலும் கடவுள் பேராலும் நடை பெற்றுவருவதும் மிகவும் கவனிக்கத்தக்கதாகும். ஆனால் நமது நாட்டைத் தவிர மேல் நாடுகளில் இக்கொடுமைகள் வரவரக்குறைந்து அவர்களுக்குச் சுதந்திரம் வளர்ந்து வருகின்றது. உதாரணமாக அமெரிக்க நாட்டில் பெண்கள் ஆண் களைப்போலவே கோடிக்கணக்கான ரூபாய்கள் சொத்துக்களுடனும் சுதந்திரத் துடனும் ஆயிரக்கணக்காக வாழ்கின்றார்கள்....

இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும் 0

இராமாயணமும் பார்ப்பனீய தந்திரமும்

இராமாயணம் என்னும், ஒரு பார்ப்பனீயத்திற்கு ஆதாரமான புராணத்தை பார்ப்பனர்கள் சர்வ வல்லமையுள்ள “கடவுளாகிய” மகாவிஷ்ணு என்பவரின் அவதாரமாகிய ராமன் என்னும் ஒரு கடவுளின் சரித்திரமென்றும், அதில் கண்ட விஷயங்கள் எல்லாம் அப்படியே நிகழ்ந்தது என்றும், அந்த ராமன் நடந்து கொண்டதாக அப்புராணத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாம் கடவுளால் உலக நன்மையின் பொருட்டு துஷ்ட நிக்கிரகம் சிஷ்ட பரிபாலனத்திற்காக நடத்தப்பட்ட உண்மையான நடவடிக்கைகள் என்றும், இந்திய மக்களுக்குப் பார்ப்பனர்களால் போதிக்கப்பட்டு பழைய காலத்தில், ஒரு பார்ப்பனரல்லாத வித்துவானைக் கொண்டு அந்த புராணத்தை அதுபோலவே, அதாவது ராமன் கடவுள் அவதாரம் என்ற கொள்கைப் படியே, ஒரு காவியம் பாடச்செய்து, அதை வழக்கத்திலும், நித்திய வாழ்க்கையிலும் இராமாயணம் படிப்பதும் கேட்பதும் “புண்ணியம்” என்றும், “மோட்சம்” தரத்தக்கதென்றும் சொல்லி ஏமாற்றி, இந்திய மக்களைத் திண்ணைகள்தோறும் இராமாயண காலட்சேபமும், சீதா கல்யாண உற்சவமும், பட்டாபிஷேக உற்சவமும் செய்யச் செய்து, அதனால் ஏற்படும் வருமானம் எல்லாம் பார்ப்பனக் குதிருக்கே போய்ச்...

இந்தியாவின் பிரதிநிதிகள் யார்? 0

இந்தியாவின் பிரதிநிதிகள் யார்?

மேன்மைதங்கிய ராஜப்பிரதிநிதியாகிய லார்ட் இர்வின் அறிக்கை யானது இந்தியாவுக்கு முதன் முதல் செய்த நன்மை என்னவென்றால், இந்தியாவின் உண்மையான பிரநிதிதித்துவம் பொருந்திய தலைவர் யாரும் இல்லை என்பதை நன்றாய் வெளிப்படுத்தி விட்டமையே. லார்ட் இர்வின் அறிக்கை வெளியாகாதிருந்திருக்குமானால், இந்தியா வின் கவுரவம், (இல்லையானாலும்), சற்றாவது காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், அது வெளியான பிறகு இப்போது மிகவும் கேவல நிலைமைக்கு வந்துவிட்டது. அறிக்கை வெளியானவுடன் வெகு அவசர அவசரமாய் ‘தலைவர்’ ஒன்று கூடி அதை பாராட்டுவதாகவும், ஒப்புக் கொண்டதாகவும் தீர்மானித்து பல ‘தலைவர்’களிடம் அவசர அவசரமாக கையெழுத்தும் வாங்கி ஆய்விட்டது. இவ்வறிக்கையை லண்டனுக்கு அனுப்பி இருந்தாலும் அவர்களும் குப்பைத் தொட்டியில்தான் போட்டிருப்பார்கள். ஆனால், நல்ல சம்பவமாய், அது இந்தியக் குப்பைத் தொட்டிக்கே போய்ச் சேரும்படி ஆகி விட்டது. என்னவென்றால், வழக்கம்போல் அறிக்கைக்கு கையெழுத்தான மறு நாளிலிருந்தே ஒவ்வொரு தலைவர்களும் வியாக்கியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். திரு.காந்தி, நான் இன்ன கருத்தின் மேல்தான் அறிக்கையை தயார்...

இந்தியக் கடவுள்கள் 0

இந்தியக் கடவுள்கள்

இந்த வாரம் அதாவது நவம்பர் மாதம் 11-ம் தேதி வெளியான “சுதேசமித்திர”னின் பதினோராவது பக்கத்தில் “திருப்பதி வெங்கிடாசலபதி” என்கின்ற கடவுளின் தேவஸ்தான வருஷாந்திர வரவு செலவு (பாலன்ஸ் ஷீட்) கணக்கு வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது. அதில் இந்த ஒரு வருஷத்திற்கு, அதாவது, 1337ம் பசலிக்கு மேற்படி தேவஸ்தானத்திற்கு ஒட்டு மொத்தம் இருபத்திரண்டே முக்காலே அரைக்கால் லட்ச ரூபாய் வசூலாயிருக்கின்றது. இந்த ரூ.22,82,695 – 8-9 பைசாவுக்கும் செலவும் காட்டப்பட்டிருக்கின்ற விவரமென்ன வென்றால், ஆறு லட்சத்துச் சில்லறை ரூபாய் நிலுவை மொத்தம் என்று காட்டப்பட்டிருப்பது போக மீதி பதினாறு லட்சத்து சில்லறை ரூபாய்க்கும் காட்டப்பட்டிருக்கும் செலவுகளைப் பார்த்தால், இந்து மதமும், இந்துமதக் கடவுள்களும் நமது இரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றது என்பது முழு மூடர்களுக்கும் எளிதில் விளங்கும். அதாவது :- கோயில்களுக்குக் கொடுத்தது              ரூ. 23,515 படித்தர சாமான் வாங்க              ரூ. 1,38,932 பழுதுகள்              ரூ. 4,55,701 சமஸ்கிருத ஆங்கில வித்யாசாலை              ரூ. 1,07,941 சிப்பந்திகள்             ...

புதிய சகாப்தம் 0

புதிய சகாப்தம்

திரு.கோகலே, ரானடே, தாதாபாய் நௌரோஜி முதலிய தலைவர்கள் நம் இந்தியாவில் ஒரு சுதந்திர தாகத்தை உண்டுபண்ணிவிட்டார்கள் என்று பொதுவாக நாமறிவோம். இது முதற்கொண்டுதான் நம் நாட்டில் சுதந்திர கிளர்ச்சியும் ஒரு பொது உணர்ச்சியும் ஏற்பட்டது என்பதையும் மறக்கமுடியாது. ஆனால் அது செயற்கைக் கிளர்ச்சியாகவும், இயற்கைக்கு மாறுபாடானதாகவும் இருந்ததனாற்றான், இருப்பதனாற்றான் இன்று வரையில் இவ்விந்தியா சுதந்திரம் அடையமுடியாமல், பெர்க்கன் ஹெட் பிரபுவின் இழிதகையான பழிச் சொற்கட்கும், ஆதிக்க வெறிச் சொல்லுக்கும் இலக்காய் இருக்கிறது. ஏனெனில், நம்மிடை பிரசாரத்தின் பயனாய் பரவுதல் செய்யப்பட்ட சுதந்திர உணர்ச்சியானது ‘தேசியம்’ என்று கூறப்பட்ட போதிலும்கூட ஒரு மிகக் குறுகிய வகையில் இயக்கப்பட்டு வந்தது உண்மையானதாகும். என்னை? இதுவரையில் நடைபெற்ற கிளர்ச்சி, சுதந்திரப் போராட்டம், ஒத்துழையாமை, வரிகொடாமை, பகிஷ்காரம் இவைகட்கு எல்லாம் அடிப்படையாய் இருந்தது நிறவேற்றுமை என்பதில் ஐயமில்லை. எப்பொழுது வெள்ளையர்கள் நம்மை அதிக ஈனமாய் நடாத்துகின்றார்கள் என்று நாம் நினைக்கின்றோமோ, அப்பொழுதெல்லாம் ஒரு கிளர்ச்சி செய்வதும், பின்னர்...

இர்வின் பிரசங்கம் 0

இர்வின் பிரசங்கம்

ராஜப் பிரதிநிதியாகிய லார்ட் இர்வின் அவர்கள் சீமைக்குப் போய்விட்டு வந்து வெளியிட்ட அரசியல் அறிக்கையை இந்தியாவில் உள்ள எல்லா அரசியல் வாதிகளும் ஒப்புக்கொண்டு பாராட்டி இருப்பதோடு, பலர் அதற்காக தங்களுடைய நன்றியறிதலையும் காட்டிவிட்டார்கள்; காட்டிக் கொண்டும் இருக்கிறார்கள் என்றாலும் இதிலிருந்து முக்கியமாக இரண்டு காரியங்கள் நிறுத்தப்பட்டுவிடும் என்பது உறுதியான செய்தியாகும். அதாவது 1929 வது வருஷம் டிசம்பர் மாதம் 31-ந் தேதி இரவு ஒரு மணிக்கு திரு.காந்தியாhர் மறுபடியும் துவக்கப்படத் “தயாராயிருந்திருக்கும்” ஒத்துழையாமையையும் அதற்கொரு மூன்று நாளைக்கு முன் அதாவது டிசம்பர் 28-ந் தேதி லாகூர் காங்கிரசில் திரு.ஜவகரிலால் நேருவால் வெளிப்படுத்த இருக்கும் பூரண சுயேச்சை விளம்பரமும் நிறுத்தப்பட்டு போகும் என்பதேயாகும். எனவே, வைசிராய் அறிக்கை அவ்விரு கனவான்களுக்கும் பெரிய விடுதலையையும் வெற்றியையும் கொடுத்தது என்பதில் நமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. மற்றபடி அவ்வறிக்கையில் உள்ள விஷயம் என்னவென்று நிதானமாய் நடுநிலையிலிருந்து பார்ப்போமானால், எவ்வளவு சிறுகண் உள்ள சல்லடை யைப் போட்டு சலித்துத்...

விமல போதம் 0

விமல போதம்

ஸ்வாமி விமால நந்தா அவர்களால் தொகுக்கப்பெற்ற ‘விமல போதம்’ என்னும் நூலொன்று கிடைக்கப் பெற்றோம். இந்நூலின்கண் சித்த மதத்தை விளக்கி உரைப்பதற்கு, நூலாசிரியர் அவர்கள் அரும்பாடு பட்டிருப்பர் என்றே யாம் கருத வேண்டி இருக்கின்றது. இதிற் காயசித்தி, மனோசித்தி, அறிவு சித்தி என்னும் மூவகைச் சித்தியின் தன்மைகளையும் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஒட்டிய பல ஆராய்ச்சிகளையும் தெள்ளத் தெளிய, மந்த தரத்தாரும் உணரும் வண்ணம் ஆசிரியரவர்கள் பரந்த விஷயங்களை சுருங்க விளக்கியிருப்பது பாராட்டற்பாலதாம். நூலிற் கூறும் உண்மைகள் உண்மைகளா என்பதைப் பற்றி நூலை வாங்கிப் படிப்பவர்களே தங்கடங்கள் அறிவைச் செலுத்திப் படித்துத் துணி புறுதல் சிறப்புடைமையாதலால், இவ்விடயத்தைப் படிப்பவர்கட்கே விட்டு விடுகின்றோம். நூல் மிகத் தெளிவாகப் பதிக்கப் பெற்றுள்ளது என்றும் நூலைப் பதிப்பிக்க ஆசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சி சிறிதன்று என்றும், இதன் விலை அணா இரண்டே என்றும் மட்டும் வாசகர்கட்கு எடுத்துரைக்க விழை கின்றோம். நூல் சென்னை கோல்டன்...

“இராமாயணத்தின் ஆபாசம்” 0

“இராமாயணத்தின் ஆபாசம்”

உலகத்தில், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் ஆழ்த்தி வைப்பதற்குரிய சான்றுகள் ஆழ்த்தும் சமூகத்திற்றான் காணப்படுவது வழக்கம். ஆனால் தமிழ் மக்களை மிருகங்கள், குரங்குகள், பேய்கள், இராக்கதர்கள், கொடியவர்கள், குடிகாரர்கள், சோரம் புரிபவர்கள், கொலை நிகழ்த்துபவர்கள், அநாகரிகர்கள், வரன்முறையற்றவர்கள், தாசி மக்கள், அடிமைகள், குரூபிகள் என்ற வகையில் திரித்துக் கூற ஆரியர்கள் இராமாயணம் என்னும் ஒரு கட்டுக் கதையை வரைந்து, அது ஒரு மதியின்மிக்க ஆரிய முனிவனால் எழுதப்பட்டது என்று அதனைப் போற்றி, அண்டமுகடு முட்டும் வரையிற் புகழ்ந்து, அதற்கோர் மொழி பெயர்ப்பு போன்ற கம்பராமாயணத்தையும் வரைந்து இத் தென்னிந்தி யாவில் புதுக்கியதும், இத்தென்னிந்திய மக்கள் தம் இழிவையே அடிப்படை யாகக் கொண்டு வரையப் பெற்ற இராமாயணத்தை ஒரு இதிகாசம் என ஏற்று அதனை மெய் என்று நம்பி அவ்விதிகாச கதாநாயக, நாயகிகளை தெய்வங்களாக ஏற்றதும் வருந்தத்தக்கதோர் உண்மையாகும். அறிவுடைய திராவிட மக்கள் சூழ்ச்சியில் மிகுந்த ஆரியக் கதையாம் இராமாயணத்தை நம்பி பார்ப்பனர்...

சுயமரியாதை இயக்கத்தின் பலன் 0

சுயமரியாதை இயக்கத்தின் பலன்

சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு பார்ப்பனர்களும் புராணப் பண்டிதர்களும், புஸ்தகக் கடைக்காரர்களும், புரோகிதக் கூட்டத்தார்களும் எவ்வளவுதான் பழிகள் கூறி விஷமப் பிரசாரம் செய்து வந்தும் நாட்டில் தோன்றியிருக்கும் உணர்ச்சிகளையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பலன்களை யும் பற்றி, இரண்டொரு நிகழ்ச்சிகளை குறிப்பிடுகின்றோம். பார்ப்பனர்களை எந்தக் காரணங்கொண்டும் நம்புவதென்பதோ, அவர்களோடு ஒத்துழைப்பதென்பதோ, அவர்கள் கலந்துள்ள கூட்டங்களில் சேர்வதென்பதோ, தேர்தல்களில் அவர்களுக்கு ஓட்டுச் செய்வதென்பதோ முதலாகிய காரியங்கள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றது. கோயில்கள் சம்பந்தமான விஷயங்களில் பூஜைகள் அபிஷேகங்கள் உற்சவங்கள், புதுக்கோயில்கள் கட்டுதல் ஆகிய காரியங்களில் அலக்ஷியம் காட்டப்பட்டு வருவதுடன், பல கோயில்கள் அரைகுறை வேலையில் இருந்தவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. பண்டிகைகள், விரதங்கள், சடங்குகள் முதலியவைகள் அநேகமாக, சில இடங்களில் அடியோடு விடப்பட்டும், சில இடங்களில் மிக்க அலக்ஷியமாக ஏதோ நிர்பந்தத்திற்கு நடத்துபவைகளாகவும் காணப்படுகின்றன. விதவைகள் மணம் என்பதும், கலப்பு மணம் என்பதும், தினம் தினம் நடக்கும் விஷயங்களும், நடத்தத் தேவை விளம்பரங்களும் வெளியான வண்ணமாய் இருந்து...

மதப்பித்து 0

மதப்பித்து

நமது நாட்டில் ஒரு மனிதனுக்கு எப்படி பிறவியின் காரணமாகவே, ஜாதி கற்பிக்கப்பட்டு, அந்த ஜாதியின் பேரால் அவன் அழைக்கவும் பட்டு அந்த மனிதனும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன ஜாதியான் என்று எண்ணிக் கொள்கின்றானோ, அதுபோலவே மதமும் ஒரு மனிதனுக்கும் பிறவி காரணமாகவே கற்பிக்கப்பட்டு, அவனும் அந்த மதத்தின் பேரால் அழைக்கப்பட்டு தானும் அதை ஒப்புக் கொண்டு தன்னை இன்ன மதத்தான் என்றே எண்ணிக்கொண்டு வருகின்றான். ஆனால், ஜாதியானது பிறவியின் காரணமாக ஏற்படுகின்றதென்று, ஜாதியைக் கற்பிக்கும் சாஸ்திரங்கள் என்பவைகளால் சொல்லப்பட்டு வருவ தால், பிறவியின் காரணமாக ஜாதி நிர்ணயிக்கிறவர்களுக்கு மேல்கண்ட ஆதாரங்களை சொல்லிக் கொள்ள இடமுண்டு. ஆனால் மதமானது பிறவியின் காரணமாக ஏற்படுவதாக இன்றுவரை எந்த மதமும் அது சம்பந்தப்பட்ட சாஸ்திரமும் சொல்லவே இல்லை. மதம் என்பது கொள்கை என்றும், அந்தக் கொள்கையானது எந்த மனிதனாலும், எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளவும், தள்ளவும் உரிமையுடையது என்றுமே தான் சொல்லப்பட்டு வருவதுடன்,...

இந்தியாவில் மிஷனெரி உலகம் 0

இந்தியாவில் மிஷனெரி உலகம்

திருவாளர் ஏ.ஜே.அன்பையன் அவர்களால் வெளியிடப்பெற்ற இந்தியாவில் ‘மிஷனெரி உலகம்’ என்னும் பெயரிய நூலொன்று எம் மதிப்புரைக்கு அனுப்பப் பெற்றோம். மிகப்பரந்த நோக்கத்துடன் வரையப் பெற்ற இந்நூலின் கண், இந்தியா விலுள்ள மேனாட்டுக் கிறிஸ்துவப் பிரசாரகர்களின் நிலைமையைப் பற்றித் தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவர்கள் செந்நெறியில் செல்லாது, தீநெறியாம் சூழ்ச்சியிலும், சுயநலத்திலும், பிரித்தாளும் வழியிலு மேயே செல்லுகின்றனர் என்று, இம்மேனாட்டு மதப் பிரசாரகர்களின் புரட்டை திரு. அன்பையன் பிறர் மனதில் எளிதிற் பதியுமாறு கூறியிருக்கின்றார். ஆங்காங்கே எல்லா மனிதர்களும் வேறுபாடின்றி பாராட்டற்குரிய அரிய உண்மைகள் மிளிர்கின்றன. ஒரு உண்மையை ஒரு மதம் என்று பெயரிட்டு வரையறுக்கும் போதே, அம்மதம் பொது மதமாய் இருப்பதற்குரிய இலக்கணத்தை இழந்து விடுதலால், எம்மதத்திற்கும் புரோகிதப்புரட்டு வேண்டுவது அவசியமாயிருக்கின்றது. இதுபோலவே வரையறுக்கப்பட்ட இக்கிறிஸ்துவ மதத்திலும் இப்புரோகிதர்கள் செய்யும் புரட்டை திரு. அன்பையன் வெளிப்படுத்துவதனால், மிஷெனரி களைத் தெய்வங்கள் என்று கருதி ஏமாற்றமடையும் அநேகர் நல்வழிப்படுதல் கூடும் என்று...

விதவா விவாகம் 0

விதவா விவாகம்

சகோதரிகளே! சகோதரர்களே!! உலகமானது இப்போது எம்மாதிரியான முன்னேற்றத்தில் போய்க் கொண்டிருக்கின்றதென்பதை நாம் பார்த்து வருகின்றோம். மனிதனது புத்திக்குப்படாத அற்புத சக்திகளெல்லாம் மனிதனிடமிருந்து வெளியாகிக் கொண்டு வருகின்றது. சையன்ஸ் அதாவது வஸ்து தத்துவ சாஸ்திர ஆராய்ச்சியின் பயனாக மகா அதிசயங்களை யெல்லாம் மனிதன் செய்கின்றான். சமீப முயற்சி என்னவென்றால், சந்திர மண்டலத்திற்குப் போக முயற்சிக்கத் தொடங்கி செவ்வாய் மண்டலத்திலிருந்து சமாச்சாரப் போக்குவரத்துகள் நடத்தப்பட்டு விட்டன. மற்றும் அடுத்த 500 வருடத்தில் மனிதன் அடையக்கூடிய முற்போக்கை இப்போதே நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே, நம்மைச் சுற்றியுள்ள உலகம் இந்நிலையிலிருக்க நாமோ நமது ஆராய்ச்சிக்காரர்களால் 3000 வருஷத்திற்கு முன்னால் நாம் இருந்த நிலையை அடைய வேண்டுமென்று தொல்காப்பிய ஆராய்ச்சி செய்யப்பட்டு பெருமைப் படுகின்றோம். அப்படிப்பட்ட தொல்காப்பியம் 2000 வருஷத்திற்கு முந்தியதா 3000 வருஷத்திற்கு முந்தியதா என்கின்ற ஆராய்ச்சி இன்னமும் நமக்குள் முடியவில்லை. ஆராய்ச்சிக்காரர்கள் யோக்கியதை இப்படி என்றால், நமது பண்டிதர்களுடைய யோக்கியதையோ சமணர்கள் கழுவேறப்பட்டார்களா அல்லது தானாக கழுவேறினார்களா...

இராஜகோபாலாச்சாரியின் தேசீயம் 0

இராஜகோபாலாச்சாரியின் தேசீயம்

சென்ற வாரம் பார்ப்பனர்களின் தேசியம் என்று தலையங்கமிட்டு திரு.சத்தியமூர்த்தி அய்யர் முதலிய பூரண சுயேச்சைவாதிகளுடையவும், காங்கிரஸ் வாதிகளுடையவும் தேசியத்தின் யோக்கியதையைப் பற்றி எழுதி இருந்தோம். இந்த வாரம் திரு.சி.இராஜகோபாலாச்சாரி போன்ற “ஒத்துழையா தியாகிகளின்” தேசியத்தைப் பற்றி எழுத வேண்டி நேரிட்டுவிட்டது. அதாவது, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூக்கா காங்கிரஸ் மகாநாட்டிற்கு அக்கிராசனம் வகித்த திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் தமது தலைமை உபன்யாசத்தில் வழக்கம் போல் தேசியப் புரட்டு பரிபாஷையாகிய தீண்டாமை, கதர், மதுவிலக்கு ஆகிய மூன்று வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, பார்ப்பன தேசிய சூழ்ச்சி பரிபாஷை யாகிய சாதித் துவேஷத்தை ஒழிக்க வேண்டும் என்னும் வார்த்தையைச் சொல்லிவிட்டு சுயமரியாதை இயக்கம் தெய்வங்களையும், அவதாரங்களையும், புண்ணிய ஸ்தலங்களையும், பெரியோர் சாஸ்திரங்களையும் நிந்திப்பதாகச் சொல்லி பாமர மக்களை கிளப்பிவிடப் பார்த்து இருக்கின்றார். சமீபத்தில் இவரால் வடநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட திரு.பட்டேல் அவர்களுக்கு இவர் எதைச் சொல்லிக் கொடுத்து நம்மையும் சுயமரியாதை இயக்கத்தையும் வையச் சொன்னாரோ அதே வார்த்தைகளை அப்படியே, சற்று மெருகு கொடுத்து...

பூனாவில் ஆலயப்பிரவேசம் தமிழ்நாட்டிலும் சத்தியாக்கிரகம் துவக்க யோசனை 0

பூனாவில் ஆலயப்பிரவேசம் தமிழ்நாட்டிலும் சத்தியாக்கிரகம் துவக்க யோசனை

சகோதரர்களே! நமது தமிழ் நாட்டில் சுயமரியாதை மகாநாடு நடந்து 8, 9 மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்த பம்பாயில் சுயமரியாதை மகாநாடு நடந்து 3, 4 மாதமே ஆயின. ஆனால் பம்பாய்காரர்கள் இதற்குள் சத்தியாக்கிரகம் துவக்கிவிட்டார்கள். சத்தியாக்கிரகம் அன்றியும் வடநாட்டில் இல்லாமலும் பல கோயில்கள் எல்லோருக்கும் திறந்து விடப்பட்டுவிட்டன. நாமோ மற்றொருவர் செய்த சத்தியாக்கிரகத்தைப் பாராட்டுவதில் முனைந்திருக்கின்றோம். இதை நினைக்கும்போது நம்மை நாம் வாய்ப்பேச்சு வீரர்கள் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும். நிற்க, சிலர் நம்மை “உங்களுக்குத் தான் இந்தமாதிரி கடவுள்களிடத்தில் நம்பிக்கையே இல்லையே, அப்படி இருக்க எதற்காக கோயிலுக்குள் போக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும்” என்று கேட்கின்றார் கள். ஆனால் சகோதரர்களே! நாம் மாத்திரமல்ல; இப்போது எங்கு பார்த்தாலும் ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட நம்மைப்போலவேதான். அதாவது, கோயில் இருப்பது கல்லும் செம்புமே ஒழிய அவை கடவுள்கள் அல்லவென்பதை தாராளமாய் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆனால் கடவுளை மனிதன் நினைக்க ஞாபகம் வருவதற்காகவே கோயிலும்...

தீபாவளி பண்டிகை பார்ப்பன சூக்ஷி 0

தீபாவளி பண்டிகை பார்ப்பன சூக்ஷி

தீபாவளிப் பண்டிகை என்பது அர்த்தமற்றதென்றும், அதற்கு ஆதாரமான கதைகள் பொய்யும் புளுகும் ஆபாசமுமானதென்றும், அதற்காக பண்டிகை கொண்டாடுவது பார்ப்பனனுக்கு நம்மை அடிமை ஆக்கவும் பார்ப்பனனின் ஆதிக்கத்தை பலப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டதென்று சொல்லி வந்திருக்கின் றோம். அன்றியும் புராணங்களை பொய்யென்றும் ஆபாசமென்றும், பார்ப்பன சூக்ஷி என்றும் தீர்மானித்துவிட்ட மக்கள் மறுபடியும் அதே புராணக் கதையாகிய தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதென்பதும், பட்டாசு வாங்கி சுடுவதென் பதும், அறியாமையும் மூட நம்பிக்கையும், சுயமரியாதைக் கொள்கைகளுக்கு விரோதமுமாகும். உஷார்! உஷார்!! உஷார்!!! குடி அரசு – அறிவிப்பு – 20.10.1929

கார்ப்பொரேஷன் தேர்தல் 0

கார்ப்பொரேஷன் தேர்தல்

ஜஸ்டிஸ் கட்சி முனிசிபல் கவுன்சில் பார்ட்டியின் கூட்டம் ஒன்று 16.10..29 தேதி இரவு 8 மணிக்கு தியாகராய மெமோரியல் கட்டிட மேல் மாடியில் கூடிற்று. 19 அங்கத்தினர்கள் விஜயமாயிருந்தார்கள். திருவாளர்கள் ஜி.நாராயண சாமி செட்டியாரும், அவர் குமாரரும் மற்றுமிரண்டொருவரும் வரவில்லை, என்பதாகத் தெரிகின்றது. கூட்டத்தில் இரகசியமாய் ஓட்டு எடுத்ததில் திரு.ராம சாமி முதலியாருக்கு 15 ஓட்டும், டாக்டர் நடேச முதலியாருக்கு 2 ஓட்டும் கிடைத்தன. அப்படி இருந்தும் இருவரும் தேர்தலை போட்டிபோடப் போவ தாகவே முடிவு செய்து கொண்டு போயிருக்கிறார்கள். ஏறக்குறைய இருவருமே சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்களின் ஓட்டுகளை நம்பிக் கொண்டிருப்பதோடு சுயராஜ்ஜியக் கட்சி கவுன்சிலர்கள் வீட்டுக்கும் தலைவர்கள் வீட்டுக்கும் இரு அபேட்சகர்களும் நடந்த வண்ணமாய் இருக்கின்றார்கள். வெள்ளைக்காரர்கள் ஓட்டுகளையும் இருவரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஜஸ்டிஸ் கட்சி கவுன்சிலர்கள் ஓட்டு அநேகமாய் சரிசமமாய்ப் பிரியாவிட்டாலும் இரண்டு பேருக்குமாகத்தான் பிரியக் கூடும் போல் தெரிகின்றது. சுயராஜ்ஜியக் கட்சி ஓட்டுகளும் அதேமாதிரிதான் பிரியும் போல்...

பார்ப்பனரின் தேசீயம் 0

பார்ப்பனரின் தேசீயம்

குழந்தை விவாகத்தை தடைப்படுத்தும் சாரதா மசோதா இந்திய சட்டசபைக்கு வந்தது முதல் அது நிறைவேறும் வரை நமது பார்ப்பனர்கள் செய்த தடைகளும் சூழ்ச்சிகளும் கொஞ்ச நஞ்சமல்ல என்பது யாவரும் அறிந்ததாகும். இவ்வளவு தடைகளையும் சமாளித்து சர்க்கார் தயவினாலேயே அது நிறைவேற்றப்பட்டு ராஜப் பிரதிநிதி அனுமதியும் பெற்று சட்டமான பிறகு மறுபடியும் நமது பார்ப்பனர்கள் ஊர் ஊராய் கூட்டங் கூடி அச்சட்டத்தைக் கண்டித்து கூட்டம் போட்டு பேசி வருகின்றார்கள். நூற்றுக்கு தொண்ணூறு பார்ப்பனர்களுக்கு இனிமேல் தாங்கள் இவ்விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்பது தெரிந்திருந்தும் கூட அடுத்த தேர்தலில் பார்ப்பனர்கள் ஒன்று சேர்வதற்கும் தேர்தல் கிளர்ச்சிக்கு ஒரு வழிகண்டுபிடிப்பதற்கும் இதை உபயோகித்துக் கொள்ளலாமா என்கின்ற சூழ்ச்சியின் பேரிலேயே இந்த சாரதா மசோதா கண்டனம் என்னும் செத்த பாம்பை ஆட்டி வருகின்றார்கள். தங்க ளுக்கு உதவியாக மகமதியர்களையும் கிளப்பிவிட்டு அடுத்த தேர்தலுக்கு அவர்களை தங்களுடன் சேர்த்துக் கொள்ளலாமா என்றும் சூழ்ச்சி செய்கின் றார்கள். இதுகடைசியாக...

ஈரோடு உண்மை நாடுவோர் சங்கம்                மதம் மாறுதல்  சரஸ்வதி பூஜை 0

ஈரோடு உண்மை நாடுவோர் சங்கம் மதம் மாறுதல் சரஸ்வதி பூஜை

தலைவரவர்களே! சகோதரர்களே! இன்று மூன்று விஷயங்களைப் பற்றி பேச நான் தலைவரால் கட்டளை இடப்பட்டிருக்கின்றேன். ஒன்று சீலையம் பட்டியில் 69 பேர்கள் மகம்மதியரானது, இரண்டு சரஸ்வதி பூஜை, மூன்று நெல்லூர் மகாநாடு. முதலாவது விஷயமாகிய ஆதிதிராவிடர்கள் மதம் மாறி மகம்மதியரான விஷயத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல விரும்புகின்றேன். முதலில் மத சம்பந்தமான என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால், எந்த மதமானாலும் அதன் கொள்கைகள் எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராய முடையவையானாலும் அம் மதமும் கொள்கைகளும் மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கைக்கு அவனுடைய பிரத்தியட்ச அனுபவத்திற்காக வகுக்கப்பட்ட கொள்கைகளுடையவைகள் என்றால் அதைப்பற்றி யோசிக்க நான் எப்போதும் தயாராயிருக்கின்றேன். அப்படிக்கின்றி மதமும் அதன் கொள்கைகளும் “மேல் லோகத்திலோ” அல்லது “கீழ் லோகத்திலோ” அல்லது செத்த பிறகு “சூட்சும” சரீரத்துடனேயோ அனுபவிக்கும் அனுபவத்திற்காகவே ஏற்படுத்தப்பட்டது என்றால், அது எப்படிப்பட்ட மதமானாலும் யார் செய்ததானாலும் அதற்கு என்ன ஆதாரம் சொல்லுவதானாலும் அதனால் என்ன விளைவதானாலும் நான் அதைக் கடின நேரம்...

எனது தோல்வி 0

எனது தோல்வி

நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டசபைக்கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் என்கின்ற தீர்மானம் தென் இந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக்கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்துவிட்டது. ஒரு ஓட்டில் தோல்வியடைந்தாலும் அது சரியான தோல்வியே என்பதில் யாதொரு ஆட்சேபனையுமில்லை. ஓட்டு சேகரித்த முறை எவ்வளவு ஒழுங்கற்றதென்று சொல்லுவதானாலும் முடிவை மாற்றிக் கொள்வதற்கு அந்த சமாதானம் சிறிதும் பயன்படாதாகையால் அது உபயோகமற்ற சமாதானமாகும். அன்றியும், ஒரு கட்சியார் மாத்திரம் தான் ஓட்டு சேகரிக்கும் முறையில் சரியாக நடக்கவில்லை என்று சொல்லவும் முடியாது. தீர்மானம் ஒரு சமயம் வெற்றி பெற்றிருந்தாலும் தோல்வியுற்றவர்களும் இதே சமாதானத்தைத்தான் சொல்லக்கூடும்; ஆதலால் தோல்விக்கு சரியான சமாதானம் சொல்ல வேண்டியது எமது கடமையாகும். முதலாவது இந்தத் தீர்மானமானது அவசியமில்லாததும் அர்த்த மற்றதுமான தீர்மானமாகும். எப்படியெனில் இத்தீர்மானம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் தீர்மானத்தின் உண்மையான தத்துவம் அமுலில் தானாகவே நடந்துதான் தீரும். அதாவது, இது நிறைவேறினால்தான் பார்ப்பனர்...

நெல்லூர் மகாநாடு 0

நெல்லூர் மகாநாடு

இம்மாதம் 5, 6-ந் தேதிகளில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நெல்லூரில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு என்னும் தென் இந்திய நல உரிமைச்சங்க இயக்கத்தின் 11-வது மாகாண மகாநாடு, கூடிக்கலைந்து விட்டது. இந்த மகாநாடானது 1927வது வருடம் ஜனவரியில் மதுரையில் கூடிய 10-வது மகாநாட்டுக்குப் பிறகும், அதையடுத்து கோயமுத்தூரில் கூடிய மாகாண விசேஷ மகாநாட்டிற்கு பிறகும், இரண்டு வருஷ காலம் பொறுத்து நெல்லூரில் கூட்டப்பட்டதாகும் என்றாலும் இந்த இரண்டு வருஷம் பொறுத்தாவது இம்மகாநாடு இப்போது கூட்ட வேண்டிய அவசிய மேற்பட்டதின் காரணம் முக்கியமாக இரண்டு விஷயத்தைப் பொறுத்ததாகும். அதாவது ஒன்று; பார்ப்பனரல்லாதார்களுக்குள் பிரிந்து நிற்கும் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துக் கொண்டு மந்திரி கட்சியாராகிய இன்டிபெண்டெண்டு என்னும் சுயேச்சைக் கட்சியையும், கான்ஸ்டிடியூஷனிலிஸ்ட் என்னும் டாக்டர் நடேசன் கட்சியாரையும் ஒன்று சேர்க்கவும்; இரண்டாவதாக:- கட்சிக்குத் தலைவராய் இருந்த பனகால் அரசர் இறந்து போய்விட்டதால் அவருக்கு பதிலாக ஒரு தகுதியான...

காந்தி ஜயந்தி புரட்டு 0

காந்தி ஜயந்தி புரட்டு

இவ்வாரம் 2-10-29 தேதி புதன்கிழமை தமிழ்நாட்டில் பல இடங்களில் திரு.காந்தியின் சஷ்ட்டி பூர்த்தி தின திருவிழா என்னும் காந்தி ஜயந்தி புரட்டு ஒன்று பார்ப்பனர்களால் வெகு அக்கரை உள்ளவர்கள் போல் கொண்டாடப் பட்டது. அவைகளை ஒன்றுக்கு இரண்டு பத்து வீதம் பத்திரிகைகளில் விளம்பரமும் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் இரகசியம் என்ன வென்று பார்த்தால் கடுகளவு அறிவுள்ளவர்களுக்கும் உண்மை விளங்காமல் போகாது. அதாவது இந்தப் பார்ப்பனர்கள் காந்தி ஜயந்தியை திரு.காந்தி மீதுள்ள அன்புக்கும் பக்திக்கும் மரியாதைக்கும் அறிகுறியாக கொண்டாடினார்களா அல்லது திரு.காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் ஆதிக்கத்திற்கு ஆதாரமாக பார்ப்பன விஷயத்தை பாராட்டக் கொண்டாடினார்களா? என்பது விளங்காமல் போகாது. தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு எப்போதாவது திரு.காந்தியிடம் மரியாதையோ பக்தியோ இருந்ததாக யாராவது சொல்ல முடியுமா? எந்தப் பார்ப்பனர் திரு. காந்தியைப் பிடித்து சிறையில் அடைக்கும் படிக்கும் அந்தப்படி அடைக்காவிட்டால் அராஜகம் பெருகி நாடும் சர்க்காரும் அழிந்துபோகும் என்று சர்க்காருக்குச் சொல்லி சர்க்காரிடம் மகாப்பட்டம்...

கதர் புரட்டு 0

கதர் புரட்டு

கதர் துணியின் விலை விஷயமாகவும், கதர் போர்டார் அதிக விலை வைத்துக் கொள்ளை லாபம் சம்பாதிப்பதின் மூலமாகவும் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் ஒரு கதர் தொண்டருக்கும், திரு.ஸி.ராஜகோபாலாச்சாரிக்கும் வாதம் நடந்து வருவதை, ஒரு நண்பர் நமக்கு அனுப்பி நமது அபிப்பிராயத்தை கேட்டிருக்கின்றார். நமக்குத் தெரிந்த வரையில் மேற்படி இரு கனவான்கள் கணக்கிலும் பிசகு இருக்கின்றதென்பதே நமது அபிப்பிராயம். அதாவது இரண்டு பேர்களுக்கும் உண்மையான அசலுக்கு மேல் அதிகப்படுத்தி கணக்கு போடப்பட்டிருக்கின்றது. அதாவது பஞ்சு நூல் நூற்பதற்கு ராத்தல் ஒன்றுக்கு 5 அணா தான் கூலி கொடுக்கப்பட்டு வருகின்றது. சில இடங்களில் 4 அணாவும் கொடுக்கப்பட்டு வருகின்றது. நெய்வதற்கும் 54 இஞ்சுக்கு கெஜம் ஒன்றுக்கு 2 3/4 முதல் 3 அணாவே கொடுக்கப்பட்டு வருகின்றது. கெஜத்திற்கு 21/2 அணாவும் கொடுக்கப்பட்டு வருகின்றது. 21/2 அணா அல்லது 2 3/4 அணா வீதம் கொடுப்பதாயிருந்தால் இப்பொழுது ஈரோட்டைச் சுற்றிலும் கோபியைச் சுற்றிலும் சுமார் 1000, 2000...

சுயமரியாதை 0

சுயமரியாதை

ராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார் சகோதரர்களின் நிர்வாகத்திலும் அவர்களது பொதுப் பணத்திலும், வெகு காலமாக ஒரு உயர்தரப் பாடசாலை நடந்துவரும் விபரம் அனேகருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அப்பள்ளியில் இதுவரை ஆதிதிராவிடர் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை என்ற நிர்ப்பந்தம் இருந்து வந்ததுடன் அந்தப் படிக்கே சேர்க்காமலும் இருந்துவந்தார் கள். சில மாதங்களுக்கு முன்பு திரு. சௌந்திரபாண்டியன் அவர்களுக்கு ஜில்லா போர்ட் தலைவர் பதவி கிடைத்ததற்காக அருப்புக்கோட்டை மகாஜனங்களும் மற்றும் பல தனித் தனி வகுப்பாரும் அவரை பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் அருப்புக் கோட்டை நாடார் சமூகத்தாரும் ஒரு தனியான விருந்தும் பாராட்டுக் கூட்டமும் செய்து உபசாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்தார்கள். அவ் வுபசாரப் பத்திரங்களுக்கு திரு.சௌந்திரபாண்டியன் பதிலளிக்கையில் மனித சமூகத்தில் சில வகுப்பாரைத் தாழ்த்தி கொடுமைப்படுத்தி வரப்படுவதை அடியோடு ஒழிக்க வேண்டியதே இது சமயம் மனிதனின் முதல் கடமை என்றும் அந்த வேலைக்கே பெரிதும் தனது எல்லாப் பதவிகளையும் உபயோகிக்கப் போவதாயும், ஆனால் அதில்...

நமது மாபெருந்தலைவர்களின்                உருவப்படத் திறப்பு விழா                         தியாகராயர் ஞாபகக் கட்டிடத்தில் பெருங்கூட்டம் 0

நமது மாபெருந்தலைவர்களின் உருவப்படத் திறப்பு விழா தியாகராயர் ஞாபகக் கட்டிடத்தில் பெருங்கூட்டம்

தலைவரவர்களே! சகோதரர்களே! பெரியோர்களின் கட்டளையை ஏற்று கௌரவமடைய மனம் ஆசைப்படுகிறது. சர். தியாகராயருடன் நான் நட்பு பாராட்டியிருக்கவில்லை. ஆயினும் அவரையே தக்க பெரியார் எனக் கொண்டு அவர்பால் பக்தி கொண்டுள்ளேன். அவரை உண்மைத் தியாகி, வீரர் என்றே கூறுதல் பொருந்தும். உண்மையான தலைவர் என்று ஒருவரை குறிக்கவேண்டுமானால் அது செட்டியாரையே குறிக்கும் என்று நான் சொல்லுவேன். உண்மைத் தியாகி, தேசத் தொண்டர், தலைவர் என்று கூறுவதற்கு என்ன அடையாளம் என்றால், சாபங்களையும், வைதல்களையும், இழிவுரைகளையும் பார்த்து பயப்படாமலும் தங்கள் கொள்கைகளை வாபஸ் வாங்காமலும் தைரியத்துடன் தங்கள் காரியங்களை நடத்துபவர்களே உண்மைத் தலைவர்கள். சர். தியாகராயரை இங்கு தமிழ்நாட்டு ‘டயர்’ என்று கூட எதிரிகளால் கூறப்பட்டது. அவரை தேசத்துரோகி என்றெல்லாம் கூறினர். அவரின் வீடு புகுந்தும் அடிக்கத் தலைப்பட்டனர். இவ்வளவு கஷ்டங்களை யும் அவர் நேரில் அனுபவித்தனர். தேசத்துரோகி, டயர் என்ற இழிவுரை கட்கும், அடித்தல் போன்றவைகட்கும் சர். தியாகராயர் பயப்படாமல், பின்...

சர்க்காருக்கு ஜே! சீர்திருத்தம் வாழ்க! பார்ப்பனீயம் வீழ்க! 0

சர்க்காருக்கு ஜே! சீர்திருத்தம் வாழ்க! பார்ப்பனீயம் வீழ்க!

இந்திய நாட்டில் சற்றேறக் குறைய ஐம்பது வருட காலமாக சீர்திருத்தக் காரர்கள் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்ததும் அந்நிய நாட்டு மக்களால் இந்திய சமூகத்தையே ஏளனம் செய்துகொண்டிருக்க இடம் தந்து கொண்டிருந்ததுமான “குழந்தை மணம்” என்னும் நகரும் பொம்மைக் கலியாணக் கொடுமையானது கடைசியாக இந்தியாவை “ஏக போகமாய் ஆட்சி புரியும் அந்நிய அரசாங்கமாகிய” பிரிட்டிஷ் அரசாங்க உதவியாலேயே அதுவும் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு விட்டதற்கு பிரிட்டிஷ் சர்க்காருக்கு சந்தோஷத்தோடு மனப்பூர்வமாய் ஜே! சொல்லித் தீர வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். எனவே இந்திய சர்க்கார் நீடூழி வாழ விரும்புகின்றோம். சர்க்காரின் ஒத்துழைப்பும் அவர்களது மனப்பூர்வமான ஆதரவும் உதவியும் இல்லாதிருக்குமானால் சாரதா மசோதாவானது கண்டிப்பாய் நிறைவேறி இருக்காது என்று உறுதியாய்ச் சொல்லுவோம். ஆனால் சிலர் தேசியம் சுயராச்சியம் என்பவைகளின் பேரால் சர்க்காருடன் ஒத்துழைக்கக்கூடாது என்றும்; சர்க்கார் தயவை எதிர்பார்க்கக் கூடாது என்றும்; சீர்த்திருத்தங்களுக்கு சட்டம் செய்யக் கூடாது என்றும்; வெகுசுலபமாய் பேசி மக்களை ஏமாற்றி வீரர்கள்...

மீண்டும் படேல் 0

மீண்டும் படேல்

திரு.படேல் அவர்கள் தமிழ்நாட்டிற்குள் வந்து செய்துவந்த பார்ப்பனப் பிரசாரத்தைப் பற்றி ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ ‘குடி அரசு’ ‘குமரன்’ ‘தமிழ்நாடு’ ‘தமிழன்’ ‘சென்னை வர்த்தமானி’ ‘நாடார் குலமித்திரன்’ முதலிய பல பத்திரிகைகள் கண்டித்தெழுதி இருந்தது வாசகர்களுக்குத் தெரிந்த விஷய மாகும். ஏறக்குறைய இவைகளெல்லாம் நமது பார்ப்பனர்கள் திரு.படேல் தகவலுக்குக் கொண்டு போகப்படாமல் சூழ்ச்சிகள் செய்திருந்தாலும் ஆங்காங்கு சென்ற இடங்களிலெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகளாலும் ஆங்காங்கு இவருக்கு விநியோகிக்கப்பட்ட பத்திரிகைகளாலும் ஒருவாறு அறிந்துதான் இருக்க முடியுமென்று சொல்லுவோம். எப்படியெனில் திரு.படேல் மேற்கண்ட பத்திரிகைகள் மீது பாய்ந்து தனது முழு விஷத்தையும் கக்கி அவைகளை யாரும் படிக்கக் கூடாதென்று சொல்லி வருவதால் அவற்றிலுள் ளது இன்னது என்பதை உணராமல் இப்படிச் சொல்லியிருப்பாரென்று நினைப்பதற்கில்லை. தவிரவும் தமிழ்நாட்டில் பல இடங்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சமாதானம் சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டு தனது வருத் தத்தை தெரியப்படுத்தியிருப்பதாலும் ஒருவாறு விஷயங்கள் தெரிந்திருக்கலாம். தவிரவும் மதுரையில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த பல நண்பர்களைக்...

நெல்லூர் மகாநாடு 0

நெல்லூர் மகாநாடு

தென் இந்திய நல உரிமைச் சங்க, அதாவது ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகாநாடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அக்டோபர் மாதம் 5,6 தேதிகளில் சனி, ஞாயிறு கிழமைகளில்) நெல்லூரில் நடத்தப்படப்போகின்றது. இம்மகா நாடானது 1927-ம் வருஷம் ஜனவரி மாதத்தில் மதுரையில் கூட்டப்பட்ட பிறகும், அதே வருஷம் மத்தியில் கோயமுத்தூரில் விசேஷ மகாநாடாகக் கூட்டப்பட்ட பிறகும், சுமார் இரண்டு வருஷம் கழித்து இப்போது கூட்டப்படுகின்ற தென்றாலும், இவ்வியக்கத்தலைவர் திரு.பனகல் அரசர் காலமாகி சுமார் 9 மாதத்திற்குப் பிறகு தலைவர் தேர்தலையே முக்கியக் காரியமாய்க் கொண்டு கூட்டப்படுகின்றதாகும். தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் ஜஸ்டிஸ் இயக்கமானது ஆதியில் மக்களின் எல்லா சமூக சமத்துவத்தையும், சம உரிமையையும் சம சந்தர்ப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு துவக்கப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும். எனினும் இவ்வியக்கம் வெற்றி பெற்றால் இந்தியாவில் சமூகத்துறையிலும், அரசியல் துறையிலும் உயர்வு பெற்று ஏகபோக ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு...

ஐய வினாவுக்கு விடை மோட்சம், நரகம் என்பன யாவை? 0

ஐய வினாவுக்கு விடை மோட்சம், நரகம் என்பன யாவை?

ஸ்ரீரெங்கநாதபுரம் அ.வெ.சுப்பையா அவர்கள் மோட்சம் நரகங்களைப் பற்றிக் கூறுவதின் உண்மையை அறிய விரும்புகின்றார். மோட்சம் என்பது இன்ப வீடும், நரகம் என்பது துன்ப வீடுமாம். இவைகளை இவ்வுலகத்தில் இவ்வாழ்க்கையில் நாம் என்றும் அநுபவிக்கின்றோம். இதற்கு மாறுபாடாக எங்காயினும் மோட்சம் நரகம் உளவோயின், அவைகளை அநுபவிக்க விரும்புபவர்கட்கும் நமக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. நாளை கிரகம் என்று ஒன்றுள்ளது என்று ஒரு நூலில் நாம் காண்போமாயின், அது எங்குள்ளது என்று தேடப் புறப்படுவது, கிரகம் என்ற ஒன்றை புகுத்திய அறிவிலாச் செயலிலும் தேடப்புறப்படுவோர் செயல்மிக்க அறிவிலாததாகும். ( ப-ர்.) குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 15.09.1929

சுயமரியாதைத் திருமணங்கள் 0

சுயமரியாதைத் திருமணங்கள்

சமீப காலத்தில் எங்கும் சுயமரியாதைத் திருமணங்கள் நூற்றுக்கணக் காய் நடந்ததாக செய்திகள் வந்து கொண்டிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி யடைகின்றோம். அவைகளைப் பூரணமாய்ப் பிரசுரிக்கமுடியா மைக்கும் வருந்துவதுடன் அனேக திருமணங்களுக்குப் போகமுடியாமைக் கும் விசனிக்கின்றோம். ஒவ்வொரு திருமணத்திற்கும் நம்மை அழைத்த தற்காக நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருந்தாலும் அவ்வளவுக்கும் நம்மால் போகக்கூடியது சாத்தியமின்மையால், வராமைக்கு மன்னிக்கும்படி யும் கேட்டுக்கொள்ளுகின்றோம். இவ்வியக்கம் தோன்றிய இவ்வளவு சீக்கிரத்தில் பார்ப்பனர்களை நீக்கிய திருமணங்களும், மூடச்சடங்கை நீக்கிய செய்கைகளும் சந்தோஷமடையத்தக்க அளவு நடந்து வந்தாலும், விதவா விவாகம், கலப்பு மணம் முதலியவைகள் நாம் எதிர்பார்த்த அளவுக்கு 100 ற்கு 1 – பங்கு கூட நடத்தப்பட்டதாய் சொல்வதற்கில்லை. ஆதலால், நமது நண்பர்கள் ஆங்காங்கு முயற்சித்து விதவைகளுக்கு மணம் செய்விக்க முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டிக்கொள்ளுகின்றோம். மணமக்களுக்கு உத்தியோகங்கள் சம்பாதித்துக்கொடுக்கக் கூட பல நண்பர்கள் முன்வந்தி ருக்கின்றார்கள். சுயமரியாதைத் தொண்டார்கள் இந்தாண்டில் சற்று கவலை செலுத்த விரும்புகின்றோம். குடி அரசு...

‘சித்தாந்தம்’  ஆசிரியரின் சூன்ய நிலை 0

‘சித்தாந்தம்’ ஆசிரியரின் சூன்ய நிலை

மணலி விடுதியில் தருமச் சோறு உண்ணும் ஒரு பார்ப்பனரல்லாத மாணவர் குற்றம் செய்ததாகக் கருதி, அத்தகைய குற்றத்திற்குக் கசை கொண்டு தாக்கிய சைவம் பழுத்த ‘சித்தாந்தம்’ ஆசிரியனார் பாலசுப்ரஹ்மண்யம் “சைவக் குறும்பு” என்னும் தலைப்பொடு தம் அழகிய ‘சித்தாந்தம்’ என்னும் மாசிகையில் ஓர் கட்டுரை வரைந்திருக்கின்றார். இவ்வாசிரியனார் மரக்கறி தின்று மகாதேவனைத் தினம் இறைஞ்சி நிற்கும் ஓர் சைவம் பழுத்த திருமேனியுடையார். சீவகாருண்ய வள்ளல். பிறரை தன்வழிப்படுத்த அருனெறியில் தண்டனை புரிவதில் சிறிதும் பின்னடையார். சட்டம் கற்றவர்; பி.ஏ.பி.எல்,. பட்டம் பெற்றவர்; மரக்கறி உண்டு உடல் பருத்தவர்; அறச்சாலையை மேல் பார்த்தும், உள்பார்த்தும் வருபவர். இவர் கட்டுரையை ஆராய்வோம்:- (1) ‘‘ ‘திராவிடன்’ ‘குடி அரசு’ பத்திரிகைகளில் வெளிவரும்…………. பொருந்தாமை பொய்மை முதலியவற்றை ஆராய்ந்து நாம் (சித்தாந்தம்) வெளியிடத் தொடங்கிய நாள்தொட்டு நமது பத்திரிகை தமிழ் நாட்டுக்குச் செய்துவரும் பணியைப் போற்றி நூற்றுக்கணக்கான சந்தாதாரர்கள் நமது பத்திரிகையை வாங்கத் தொடங்கி ஆதர...

பார்ப்பனப் புதிய தந்திரம் உஷார்!                                                         உஷார்!! 0

பார்ப்பனப் புதிய தந்திரம் உஷார்! உஷார்!!

பார்ப்பனர்கள் பொது ஜனங்களை ஏமாற்றி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக பொது ஜன நன்மைக்குப் பாடுபடுகின்றவர்கள் போல் வேஷம் போட்டு, பொதுமக்களுக்குப் பயன்படாத அற்ப காரியங்களை பிரமாதப்படுத்திப் பேசி, அதுவே மகா முக்கியமானதென்று நம்பும்படி செய்து, அது தங்களால்தான் முடியுமே தவிர மற்றவர்களால் முடியாதென்றும், கடவுள் தங்களை அதற்காகவே படைத்திருக்கிறாரென்றும் சொல்லிக் கொண்டு, அந்த “பொதுத் தொண்டு” தொழிலையே தங்கள் ஜீவனத்திற்கும் ஆதிக்கத்திற்கும் உபயோகப்படுத்திக்கொண்டு, நகத்தில் சிறிதுகூட அழுக்குப் படாமல் சௌக்கி யமாயிருந்து வாழ்ந்து வருவது யாவரும் அறிந்த விஷயமாகும். மேலும், இம்மாதிரியான ஏமாற்றும் பிழைப்பை யாராவது தெரிந்து அதை வெளிப்படுத்தி ஒழிக்க முயற்சி எடுத்துக் கொண்டால் உடனே நமது பார்ப்பனர்கள் அவர்கள் மீது சற்றும் ஈவு இரக்கமில்லாமல் பாய்ந்து கடுமையான பழிகளைச் சுமத்தி அவர்களை இராட்சதரென்றும், நாத்திகரென்றும், தேசத்துரோகி என்றும் சொல்லி, பொதுமக்களிடம் அவர்கள் மீது வெறுப்புண்டாகும்படி செய்து எப் பாடு பட்டாவது அவர்களது செல்வாக்கையும் ஒழித்துத் தங்கள்...

கதர் புரட்டு இராட்டின் இரகசியம் 0

கதர் புரட்டு இராட்டின் இரகசியம்

கதர் இயக்கம் என்பது பார்ப்பனர்கள் தங்கள் பிழைப்புக்கும் ஆதிக்கத்திற்கும் மோட்சம் என்றும், சுயராஜ்ஜியமென்றும், தேசியம் என்றும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்து வாழ்ந்து வருவது போலவே, ஏழைகளுக்கு மொத்த உதவி செய்கின்றவர்கள் போல் வேஷம் போட்டுக் கதர் என்னும் பெயரால் பாமரமக்களை ஏமாற்றி வருகின்றதற்கு உபயோகப் படக்கூடியதே தவிர அதனால் உண்மையான பலன் ஒன்றும் கிடைக்காதென்று பலதடவை புள்ளி விவரங்களுடன் எழுதியும் பேசியும், மெய்ப்பித்தும் வந்திருக்கின்றோம். ஆனால் பார்ப்பனரல்லாதார்களிலேயே பலர் நாம் எழுதி வந்ததைச் சரிவர பகுத்தறிவை உபயோகித்துக் கவனித்துப் பார்க்காமல் மேலாக நுனிப் புல்லை மேய்வதுபோல் அலட்சியமாய் இருந்து கொண்டு பார்ப்பனர் களும் அவர்களது பத்திரிகைகளும் சொல்லுவதையே கிளிப்பிள்ளைபோல் திருப்பிச் சொல்லிக் கொண்டு மிக்க பொதுநலக் கவலை இருப்பவர்கள்போல் வேஷம் போட்டு நம்மைக் கண்டித்து வந்தார்கள். இப்பொழுது வேதாரண்யம் மகாநாட்டில் திரு.ராஜகோபாலாச்சாரியார் கதர் கண்காட்சியை திறந்து வைக்கும் போது அவர் செய்த பிரசங்கத்தில் நமது அபிப்பிராயம் முழுதினையும் தாராளமாய்...