ஓர் விஞ்ஞாபனம்
செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானப்படி, பெயர்களுக்குப் பின்னால் சேர்க்கப்படும் நாயக் கர், நாயுடு, செட்டியார், முதலியார் போன்ற ஜாதிப் பட்டப் பெயர்களையும், ராமம், விபூதி, பூணூல் முதலிய மதச்சின்னங்களையும் நீக்கிவிட்டவர்களின் ஜாபிதாவையும் இனி “குடி அரசு”ப் பத்திரிகையில் வெளியிட உத்தேசித் திருப்பதால் ஜாதிப் பட்டங்களை நீக்கிவிட்டவர்களும், மதக்குறியை விட்டவர்களும், தம் தம் விலாசத்தை அவ்வப்போது தெரியப்படுத்தினால் பிரசுரிப்பதற்கு மிகவும் உபகாரமாயிருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளு கின்றோம்.
நிற்க, இனி எமக்கு எழுதும் கடிதங்களிலும் எமது பெயரைக் குறிப்பிடும் சமயங்களிலும் எமது பெயருக்குப் பின்னால் நாயக்கர் என்று குறிப்பிடாமல் இருக்க வேண்டுகின்றோம்.
( ப – ர் .)
குடி அரசு – அறிவிப்பு – 24.02.1929