புதுச்சேரியில் சுயமரியாதை கிருகப் பிரவேசம்

சகோதரர்களே! பெரியோர்களே!
இப்புதுவை முத்தியால் பேட்டையிலுள்ள உயர்திரு. கி. இராஜ கோபால் செட்டியார் அவர்களின் அழைப்புக்கு இணங்கி இப்புதுமனை திறப்பு விழாவிற்கு வருவதற்கு ஒப்புக் கொண்டேன். இப்பிராஞ்சு தேசத் திலுள்ள நீங்கள் என் வேலையின் அவசியத்தை நன்குணர்ந்து பின்பற்றி ஆதரித்து செய்கையிலும் செய்து காட்ட முன் வந்தது பற்றி மகிழ்கிறேன். திரு.கி.இராஜகோபால் செட்டியார் அவர்களின் புதுமனை திறப்பில் கலந்து கொள்ள வந்த பெரியார்களாகிய தாங்கள் எனக்கு இத்தகைய சந்தர்ப்பத்தைக் கொடுத்ததற்கு உங்கள் அனைவர்க்கும் எனது நன்றியுடையது. இன்று மாலை நடக்கும் பொதுக் கூட்டத்தில் நமது சுயமரியாதை இயக்கம் என்பது பற்றி விவரமாய் பேசுகின்றேன்.

குறிப்பு : 21-01-1929 திங்கள் காலை திரு.கி.இராஜகோபால் செட்டியார் புதுவை முத்தியால் பேட்டை புதுமனை திறப்பு விழாச் சொற்பொழிவு.

குடி அரசு – சொற்பொழிவு- 27.01.1929

You may also like...

Leave a Reply