Author: admin

‘வந்தேமாதரம்’-வரலாறு

‘வந்தேமாதரம்’-வரலாறு

ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க. பரிவாரங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் இப்போது தேசிய கீதம் பாடப்படுவது இல்லை. அதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுகிறார்கள். ‘வந்தே மாதரம்’ பாடலின் கருத்தும் -வரலாறும் என்ன? பக்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 1880 -ல் ஆனந்த மடம் என்று ஒரு நாவலை வங்காள மொழியில்எழுதினார். அந்தநாவலில் வரும் வங்காள மொழிப் பாடல் தான் ‘வந்தே மாதரம்’ அந்த நாவல் உருவான காலக்கட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம் மன்னர் அநுமன். ஆங்கி லேயக் கிழக்கிந்திய கம்பெனியினர் சில சமாதான ஒப்பந்தங்களை செய்து கொண்டு சென்னை -பம்பாய் -கல்கத்தா போன்ற நகரங்களில் காலூன்ற முயன்று கொண்டிருந்தனர். அப்போது -இந்த‘ஆனந்தமடம்’நாவலில் சொல்லப்பட்ட செய்தி, ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்பது அல்ல; மாறாக முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி யை- ஆயுதப் போர் நடத்தி ஒழித்துவிட்டு இந்து-ஆங்கிலேயர்களின் கூட்டணிஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே இந்த நாவலின் மய்யக்...

ஆழ் மனதுடன் ஓர் உரையாடல்- பழநிவேல் கோமதிநாயகம்

ஆழ் மனதுடன் ஓர் உரையாடல்- பழநிவேல் கோமதிநாயகம்

‘மஞ்சள்’ நாடகம் மற்றும் அதனுடன் இணைந்த பிரச்சாரத்தை அறிந்த சில நாட்களில் பெசவடா வில்சன் பற்றியும், கையால் மலம் அள்ளுதல் பற்றியும் விரிவாகத் தேடி அறிய ஆரம்பித்தேன். இதன் ஒரு கட்டமாக பாஷா சிங் இந்தியில் எழுதி ரீனுதல்வார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘unseen’ புத்தகத்தை வந்தடைந்தேன். பாஷா சிங் ஓர் ஊடகவியலாளர். சமூக செயற்பாட்டாளர்.. ஓர் ஊடகவியலாளரின் முதன்மைப் பணி என்பது தரவுகளின் அடிப் படையில் சார்பற்ற தகவல்களை அளிப்பது. இந்தப் புத்தகத்தில் முக்கியத் தரவுகளையும் தகவல்களையும் பாஷா சிங் கட்டமைத்துள்ள விதமே இந்த நூலை ஒரு முக்கிய ஆவணமாக என்னை கருத வைக்கிறது. இங்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. பலரால் சொல்லப்படுகிறது. மீண்டும் மீண்டும் சொல்லப் படுகிறது. கற்பனையிலும் நான் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு வாழ்க்கை அவலத்தை பற்றி லக்ஷ்மானியஹாரியும், பல்லவியும், இந்திராவும், ரபீக்காவும், நாராயணம்மாவும் மற்றும் இன்னும் பல பெண்களும் என்னிடம் என்ஆழ் மனதிடம் மிக அந்தரங்கமாக பேசுகிறார்கள்....

ஜாதி ஒழிப்பு கற்பனை வாதம் அல்ல – ஜெயராணியுடன் நேர்காணல்

ஜாதி ஒழிப்பு கற்பனை வாதம் அல்ல – ஜெயராணியுடன் நேர்காணல்

(மஞ்சள் நாடகத்துக்கு உரையாடல்களை எழுதிய ஜெயராணி நாடகம் உருவானதன் பின்னணி ஜாதி ஒழிப்புக்கான இயக்கத்தின் தேவையை விளக்கி“நிமிர்வோம்” இதழுக்கு அளித்த பேட்டி) ஒரு எழுத்தாளரான நீங்கள் ஜெய்பீம் மன்றம் என்ற ஓர் அமைப்பைக் கட்டமைக்க வேண்டிய சூழல் எவ்வாறு ஏற்பட்டது? முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஓர் அமைப்பையோ இயக்கத் தையோ உருவாக்க வேண்டுமென்பது எனது எதிர்கால செயல்திட்டங்களில் ஒன்றாகக் கூட இருக்கவில்லை. எழுத்தாளர் என்று சொல்வது கூட பரந்துபட்ட அடையாளம். பத்திரிகையாளர் என்ற அடையாளமே எனக்கு சரியானதாக இருக்கும். நான் எழுத வந்த 18 ஆண்டுகளில் ஒரு செய்தியாளராக எத்தனையோ அமைப்புகளோடு பயணப்பட்டிருக்கிறேன். போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என அப்போதெல்லாம் சிறிய பெரிய அளவுகளில் என்ன செயல்பாடுகள் நடந்தாலும் என்னுடைய எஸ். எல். ஆர் கேமராவோடு என்னை பார்க்க முடியும். என் சக பத்திரிகையாளர்கள், தோழிகள் வெவ்வேறு அமைப்புகளோடு இணைந்திருந்த காலகட்டம் அது. ஆனாலும் எனக்கு எந்த அமைப்பிலும்...

கண்களைக் குளமாக்கிய ‘மஞ்சள்’ – பூங்குழலி

கண்களைக் குளமாக்கிய ‘மஞ்சள்’ – பூங்குழலி

‘எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்லன். அதுபோலவே எவனும் எனக்கு மேலானவனும்அல்லன். ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும், சமத்துவமாகவும் இருக்கவேண்டும். இந்தநிலை ஏற்படச் சாதி ஒழிய வேண்டும்.’  –பெரியார்   கையால் மலம் அள்ளும் இழிவு என்பது இந்த நாடெங்கும் நம் கண் முன்னால் நடைபெறக் கூடிய ஒரு வன்கொடுமை. ஆனால் சமூகத்தின் அகக் கண்களில் என்றும் படாத ஓர் இழிவாகவே அது இன்று வரைத் தொடர்கிறது. அன்றாடம் கடந்து போகும் ஒரு சாதாரண நிகழ்வைப் போலவே, ரயில்வே பாதைகளில் மலத்தை அள்ளும் ஒரு பெண்ணையோ, மலக் குழிகளில் இறங்கும் ஓர் ஆணையோ இச்சமூகம் துளி அளவும் சலனமின்றி கடந்துப் போகிறது. ஒரு நாய்க்குட்டிக்கு அடிபட்டால் பொங்கி எழும் இச் சமூகம், சக மனிதனின் மாண்புக்கும் உயிருக்கும் கேடாய் இருக்கும் ஓர் இழிவு கண் முன் நடந்தாலும் அப்படி ஒன்று நடக்கவே நடக்காததுபோல கடந்து செல்வதற்கு காரணமாக இருப்பது இச்சமூகத்தின் ஆகப் பெரிய...

‘காலச்சுவடு’ கட்டுரைக்கு மறுப்பு நீதிக்கட்சி தலித் மக்களுக்கு எதிரானதா? வாலாஜா வல்லவன்

‘காலச்சுவடு’ கட்டுரைக்கு மறுப்பு நீதிக்கட்சி தலித் மக்களுக்கு எதிரானதா? வாலாஜா வல்லவன்

காலச்சுவடு இதழ் 11 சூலை 2017 இதழில் திராவிட இயக்க நூற்றாண்டு‘அம்பு எய்யாத வில்’என்ற தலைப்பில் க.திருநாவுக்கரசு என்பவர் (இவர் திராவிடர் இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அல்ல) நீதிக்கட்சியின் மீதும், பெரியாரின் மீதும் அபத்தமான உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். பார்ப்பனர்களுக்கே உரிய வழக்கமான, தலித்துகளை பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது மோதவிடும் போக்கிலேயே இக்கட்டுரை அமைந்துள்ளது. இக்கட்டுரை ஆசிரியர் எம்.சி.ராஜா நீதிக்கட்சியில் ஒரு பெரிய தலைவராக இருந்தார் என்கிறார். அதுவே உண்மையல்ல. 1916 நவம்பரில் நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதை இக்கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். 1917 இல் எம்.சி.ராஜா ஆதி திராவிட மகா சபையை புதுப்பித்தவர் என்ற வரலாற்றை மறைத்துள்ளார். எம்.சி.ராஜா நீதிக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தால் ஆதிதிராவிட மகாசபையை ஏன் தொடங்கவேண்டும். இரட்டைமலை சீனிவாசன், மதுரைப்பிள்ளை, என்.சிவராஜ், எல்.சி.குருசாமி, தர்மலிங்கம் பிள்ளை போன்றவர்கள் நீதிக்கட்சி ஆதரவாளர்கள். எம்.சி.ராஜா, ஜெ.சிவசண்முகம் பிள்ளை, முனுசாமி பிள்ளை போன்றவர்கள் நீதிக்கட்சி எதிர்ப்பாளர்கள். 1920 முதலே இரண்டு குழுக்...

கடவுள்-மதம் குறித்து காமராசர்

தலைவர் காமராஜ் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அந்தக் கோவில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. ஆங்காங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோவில் கோபுரத்திலெல்லாம் மரம்,செடி,கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோவில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து கொண்டிருப்பார். சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோவிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோவில் வாசலில் இருந்த கல்வெட்டுகளையெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்து விட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோவிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப் போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர். ஆனால், எனக்கு...

கலைஞரின்‘பராசக்தி’உருவாக்கிய புயல்2 தணிக்கைக் குழுவினர் மீது சீறிப் பாய்ந்த பார்ப்பனர்கள்!

பராசக்தி திரைப்படம் வெளிவந்தவுடன், கடும் எதிர்ப்பையும், தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்கொண்டது. அத்திரைப்படத்திற்கு எதிரான கண்டனக் கடிதங்கள், சென்னைக் காங்கிரஸ் அரசாங்கத்திடம் குவிந்தன. பார்ப்பனர்களின் கட்டுப் பாட்டில் இருந்த பத்திரிகைகள், பராசக்தியைக் கடுமையாக விமர்சித்தன. பராசக்தி படத்தைத் திரையிட அனுமதித்த திரைப்பட தணிக்கைக் குழுவும், தாக்கு தலுக்கு இலக்கானது. கடித முகப்பில் (letter Head) ) ‘கொச்சி உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி, கொச்சி மாகாணத்தின் முன்னாள் அமைச்சர், கோயம்புத்தூர் இந்தியக் கத்தோலிக்கர் சங்கத்தின் தலைவர், சென்னை மற்றும் கொச்சி மாகாண உயர்நீதிமன்றங்களின் வழக்கறிஞர்” எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட பரம்பிலோனப்பன், பராசக்தி திரைப்படம் வெளியானதும், சென்னை மாகாண முதல்வர் ராஜகோபாலாச்சாரிக்கு ‘முற்றிலும் ரகசியம்” என்ற குறிப்பிட்ட கடிதமொன்றை அனுப்பினார்: ‘எனது தட்டச்சு எழுத்தருக்குக்கூடத் தகவல்கள் கசிந்து விடுவதைத் தவிர்ப்பதற்காக நான் என் கைப்படவே எழுதுகிறேன். கடந்த சில நாட்களாகக் கோயம்புத்தூர் ‘டைமண்ட்” திரையரங்கில் பராசக்தி திரைப்படம்...

ஜி எஸ் டி பெரும் பேரமா? சரணாகதியா? – பேராசிரியர் ஜெ ஜெயரஞ்சன்

ஜி.எஸ்.டி. 1.7.2017 தேதி முதல் இந்தியாவில் ஜி.எஸ்.டி. (GST) எனும் வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. goods and service tax  என்பதன் சுருக்கமே GST (ஜி.எஸ்.டி) என்பது நாம் அறிந்ததே. வரிகளில் நேர்முக வரி, மறைமுக வரி என இரண்டு வகைகள் உள்ளன. நேர்முக வரி என்பவை நாட்டின் குடிமக்களின் வருவாய்மீது விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரி வகையைச் சார்ந்தவை. ஒரு நபரின் வரி செலுத்தும் திறனைக் கணக்கில்கொண்டு வசூலிக்கப்படும் வரிகள் நேர்முக வரிகள் ஆகும். மறைமுக வரிகள் என்பவை தராதரம் பார்ப்பதில்லை. ஒருவன் ஏழையா, பரம ஏழையா, நடுத்தர வர்க்கத் தினனா, பணக்காரனா, பெரும் பொருள் படைத்தவனா என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. எவராயிருந்தாலும் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து பெற்றால் அரசுக்கு (மாநில/ஒன்றிய) வரி செலுத்த வேண்டும். இத்தகைய வரிகள் மறைமுக வரிகள் ஆகும். ஒருவரின் வரி செலுத்தும் திறனைக் கணக்கில் கொள்ளாமல் விதிக்கப்படும் வரிகள்...

எனக்குப் பெருமை வேண்டாம்

எனக்குப் பெருமை வேண்டாம்

காங்கரஸில் சேருவதற்கு முந்தியும், சேர்ந்த பிறகும், இப்போதும், நாளைக்கும் சரிதான் பொதுவாழ்வினால் வயிறு வளர்க்க வேண்டிய அவசியமெனக்கில்லை. அப்படி வயிறு வளர்க்க வேண்டிய அவசியமிருந்தால் இம்மாதிரி அதாவது நீங்கள் உயர்வாகவும், மிகவும் விசேஷமாகவும், உயிராகவும் கருதியிருப்பவைகளை யெல்லாம் அது தப்பு, சூழ்ச்சி, இது கொடுமை என்றெல்லாம் சொல்வதைப் போன்ற ஒரு எதிர்நீச்சு வேலையிலே இறங்கியிருப்பேனா? என்று யோசித்துப் பாருங்கள். சுலபமாக “தென்னாட்டு மகாத்மா” ஆக, எனக்கு வழி தெரியுமே. “வந்தே மாதரம்! அல்லாஹ¨ அக்பர்!! பாரதத்தாய் அலறுகிறாள்!!! வெள்ளைக்காரன் சுரண்டுகின்றான். சுயராஜ்யம் வேண்டாமா?” என்றெல்லாம் சொன்னால், நான் பெரிய தேசீயவாதியாக ஆகிவிடுவேன். நீங்களும் எனக்கு காணிக்கை கொடுத்து, ஓட் கூட போடுவீர்களே. ஆனால் அந்த மாதிரி தேசீய வேலையில் நாங்கள் பட்டபாடு பார்த்துவிட்டோம். எவ்வளவோ கஷ்ட நஷ்டமடைந்தும் பார்த்தோம். அதில் எனக்கு மாத்திரம் பெருமை ஏற்பட்டு விட்டது. பயன் ஒன்றும் ஏற்படவில்லை. எதிரிகள் ஆதிக்கம் செலுத்த இடமேற்பட்டது. குடி அரசு /...

‘வந்தே மாதரம்’ வேண்டாம்!

‘வந்தே மாதரம்’ வேண்டாம்!

நீதிமன்றங்கள் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் போல கருத்துகளை தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது. தங்கள் முன்வரும் வழக்கு விசாரணையின் வரம்புகளைக் கடந்து கருத்துகளை வழங்கும் ‘உபதேச மேடைகளாக’ நீதிமன்றத்தை மாற்றி விடுகிறார்கள். மண்டல் பரிந்துரை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் பட்டியல் இனப்பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டைத் தடை செய்து, வழக்குக்கு தொடர்பில்லாத பிரச்சனையில் தலையிட்டு தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் ஒரு உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கோயிலுக்கு வரக் கூடிய பக்தர்களின் “ஆடை ஒழுங்கு” குறித்து தீர்ப்பளித்தது. வழக்கு விசாரணைக்கும் இந்தத் தீர்ப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கல்வி நிலையங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வாரம் ஒரு நாள் “வந்தேமாதரம்“ பாடலைப் பாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு வந்த வழக்கு “வந்தே மாதரம்“ எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது என்பதாகும். ஒரு தேசத்தில் தேசபக்தியை வளர்ப்பதாகக் கருதப்படும் ஒரு பாடல். எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதற்கே நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்து...

வாசகர்களிடமிருந்து

வாசகர்களிடமிருந்து

சுயநிர்ணய உரிமை “ இந்தியாவில் சுயநிர்ணய உரிமை கோருவது குற்றமா?” என்ற கட்டுரை பல உண்மைகளை வெளிச்சப்படுத்தியுள்ளது; இந்தியாவின்அரசியல் சட்டம் இது குறித்து மவுனம் சாதித்தாலும் உச்சநீதிமன்றம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலங்களைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கில் வழங்கிய தீர்ப்பின்படி இந்தியாவின் ஒரு பகுதியை பிரித்துக் கொள்வதற்கான உரிமையையும் உறுதிப்படுத்தியிருப்பதை கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. உண்மையில் பிரிட்டிஷ் ஆட்சியில் தான் இந்தியா என்பதே உருவானது. இந்தியாவின் பெரும்பகுதி பிரதேசங்களை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்தது முகலாயமன்னர் அவுரங்கசீப் தான். கி.பி.1707ல் அவர் இறந்தவுடன் மொகலாயப் பேரரசில் அடங்கியிருந்த அனைத்து நாடுகளும் சுதந்திரநாடுகளாகி விட்டன. அனைத்து இந்தியத் தலைமை ஒன்று இல்லாத நிலையில் அந்த வெறுமையை பிரிட்டிஷார்தந்திரமாகப் பயன்படுத்தி நாடு பிடிக்கத் தொடங்கினர். இதைத்தான் “18ம் நூற்றாண்டில்உருவானஅகில இந்திய தேசியம் ஆங்கிலேயேரின் துப்பாக்கி முனையில் உருவாக்கப்பட்டதாகும்“ என்று வரலாற்றுப் பேராசிரியர் கே.எம்.பணிக்கர் கூறுகிறார். உண்மையில் இந்தியாவும் அதற்கு “மத்திய அரசு” என்று...

நான் படித்த சில பக்கங்கள் மட்டும்  -சாக்கோட்டைஇளங்கோவன்.

நான் படித்த சில பக்கங்கள் மட்டும் -சாக்கோட்டைஇளங்கோவன்.

(நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் டி.எம்.நாயர் நிகழ்த்திய சிறப்புமிக்க பேருரையிலிருந்து சில பகுதிகள்)   கடவுள் என்ற கற்பனைக் கருத்தை நிலைநாட்டித் தம் வஞ்சக சூழ்ச்சிகளில் வெற்றி கண்ட ஆரியர்கள், தம்முடைய வெண்ணிறத்தைக் காட்டித் தாம் உயர்ந்தவர் என்றும், திராவிடர்களின் கருப்பு நிறத்தைக் காட்டி அவர்களெல்லாம் தாழ்ந்தவர்கள் என்றும் கடவுளின் தலையிலிருந்து வெடித்து வந்தவன் தான் ‘பார்ப்பனர்’ என்றும் கடவுளின் தோளிலிருந்து பிளந்து கொண்டு வெளிவந்தவன் தான் ‘சத்திரியன்’ என்றும் கடவுளின் வயிற்றிலிருந்து வெடித்து வெளிவந்தவன் தான் ‘வைசியன்’ என்றும் கடவுளின் காலிலிருந்து பிளந்து வெளிவந்தவன் தான் சூத்திரன் என்றும் கூறித் திராவிட அப்பாவிகள் பலரையும் நம்பவைத்தனர். ”நான் 30 ஆண்டுகளுக்கு மேல் இங்கிலாந்திலும் இங்கும் மருத்துவப் பணிசெய்து அனுபவம் பெற்றவன். ஆனால் இம்மாதிரியாக உடலின் பல பகுதிகளில் பிள்ளைப் பேறு மருத்துவங்களை நான் என் வாழ்நாளில் கண்டதுமில்லை கேட்டதுமில்லை. (சிரிப்பு) ஆனால் ஆரியக் கடவுளின் உடல் அமைப்பே அலாதியாகத்...

ஆச்சாரியார் அரசுக்கு குவிந்த புகார் மனுக்கள் கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்! எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (தமிழில் வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்)

(கலைஞர் -சட்ட மன்றத்தில் 60 ஆண்டுகள் பணியாற்றியுள்ள சாதனை 94ம் அகவையில் அடி எடுத்து வைக்கும் அவரது நீண்ட பொதுவாழ்வு குறித்து தமிழினம் பாராட்டி மகிழும் நிலையில் கலைஞரின் திரைக்கதை வடிவத்தில் உருவாகிய 1952ல் வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படம் சந்தித்த எதிர்ப்புகளை ஆழமாக பதிவு செய்யும் கட்டுரை இது. இளைய தலைமுறைகளுக்கு திராவிடர் இயக்கங்கள் சந்தித்த எதிர் நீச்சல் களையும் அக்காலத்தில் நிலவிய சமூக சூழலையும் உணர்த்துகிறது இந்த ஆய்வு கட்டுரை; கட்டுரையின் முதல்பகுதி.) 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் பிரதமர் சி.ராஜகோபாலாச்சாரிக்குத் ‘தமிழன்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து நாளிடப்படாத கடிதம் ஒன்று வந்தது. கவனமாகத் தேர்வு செய்யப்பட்ட ‘தமிழன்” என்னும் புனை பெயரில், கடிதம் எழுதியவர் தன் நிஜ உலக அடையாளத்தை மறைத்துத் தமிழினத்தின் பிரதிநிதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அக்கடிதம் அக்டோபர் 17, 1952 தீபாவளி தினத்தன்று தி.மு.க கொள்கைகளின்...

ஆதாரங்களுடன் அம்பலமாகிறது அதானி குழுமத்தின் கொள்ளைக்குத் துணைபோகும் மோடி ஆட்சி!

2017ஜூன் முதல் வாரத்தில், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதாதளம் உறுப்பினர் பவன் வர்மா முக்கியமான கேள்வியை எழுப்பியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையாகாது. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை 72,000 கோடி ரூபாய் என்றும் இந்த தொகை நாட்டின் உள்ள மொத்த விவசாயிகள் செலுத்த வேண்டிய கடன் தொகைக்கு சமமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசு வங்கிக ளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை மொத்தம் 1.5 லட்சம் கோடி ரூபாய். அதுமட்டுமல்ல. விஜய் மல்லையா செலுத்த வேண்டிய கடன் தொகையை போன்று இது எட்டு மடங்கு அதிகம் ஆகும். பெரும் தொழிலதிபர்கள் கடன் கேட்கும் பொழுது உடனடியாக கொடுக்க அரசு வங்கிகள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இந்த தகவலை கூறி விட்டு, பவன் வர்மா, இந்த அரசுக்கு இந்த விவரங்கள் தெரியுமா...

இராமன் சுவைத்த மாட்டுக்கறி

இவர் பிறப்பால் வேதியர்; ஒழுக்கம் குன்றி வேடருடன் கூடிக் களவு செய்து வாழ்ந்தவர். இவரே இராமாயணம் இயற்றிய வால்மீகி. அயோத்தியா கண்டம் அதில் தசரதர் ராமருக்கு முடி சூட்ட நினைத்தது; கைகேயி அதனை மறுத்தது; வரம் கேட்டது; இராமன் காடு சென்றது; அங்கு சித்திரக் கூடத்தில் தங்கியிருந்தது; பாரத்து வாசமுனிவரிடம் விருந்துண்டது போன்ற விவரங்களைத் தருவது அயோத்தியா கண்டமாகும். முல்லக்குடி எம்.ஆர். ஸ¨ந்தரேச சாஸ்திரி பிரபல – ராமாயண பிரச்சாரர் முல்லக் குடி எம்.ஆர்.! ஸ¨ந்தரேச சாஸ்திரிகள் மொழிபெயர்த்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் நூல் தரும் செய்தி இதோ: ‘அஸ்தமனஸமயத்தில்கங்கையும், யமுனையும் சேருமிடத்தில் பரத்வாஜருடைய ஆசிரமத்திற்குச் சென்றார்கள். வேற்று மனிதர்களைக் கண்டு ஆசிரம மிருகங்களும் பசஷிகளும் (பறவைகளும்) ஓடின. மஹரிஷியை தரிசிக்க விரும்பி, ஸாயங்காலம் (மாலைநேரம்) அக்னிஹோத்ர வேளையானதால் அது முடியும் வரையில் ஆசிரமத்திற்குச் சற்று தூரத்தில் நின்றார்கள். பிறகு ஆசிரமத்திலிருந்து ஓர் சிஷ்யன் தீடீரென வெளியில் வர,...

10000 ஆயிரம் கோடியில் பாஜகவுடன் பதஞ்சலி நடத்தும் வணிகம்

10000 ஆயிரம் கோடியில் பாஜகவுடன் பதஞ்சலி நடத்தும் வணிகம்

(பா.ஜ.க– ஆர்.எஸ்.எஸ் ஆதரவோடு வர்த்தகம் நடத்துகிறது. பாபாராம் தேவ் நடத்திவரும் “பதஞ்சலி” நிறுவனம் “ஆன்மீகம்” “சுதேசி” என்ற போர்வையில் “பதஞ்சலி” அடிக்கும் கொள்ளைகள் மூடிமறைக்கப் படுகின்றன.) “பதஞ்சலி பொருட்களை பயன்படுத் தாதவர்கள் இந்த தேசத்தின் வளர்ச்சியை தடுக்கிறார்கள்.’’ இப்படியான பத்திரிகை விளம்பரங்களையோ, செய்திகளையோ மிக விரைவில் எதிர்பார்க்கலாம். அந்த அளவுக்கு பதஞ்சலியின் விளம்பரங்கள் மிக சமீபகாலமாக வரத் தொடங்கி உள்ளன. விளம்பரம் மாத்திரமல்ல, அதன் விற்பனை தந்திரங்களும் அதை நோக்கியே உள்ளன. இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு நுகர் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் சிறியதும், பெரியதுமாக இயங்கினாலும் தங்கள் தயாரிப்புகளின் தரத்தை மட்டுமே நம்பி அவை வியாபார உத்திகளை அமைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் பதஞ்சாலியின் பாதையோ தேசபக்தி, சுதேசிஎண்ணம் கொண்டவர்கள் பதஞ்சலியை வாங்குவார்கள் என்கிற நூதனமான உத்தியை கையாளுவதாக உள்ளது. 2008-ம் ஆண்டு யோகக் கலை குரு பாபா ராம்தேவால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு விற்பனை ரூ.10,000கோடி. நிறுவனத்தின்விற்பனைஆண்டுக்கு 150சதவீதம்...

தமிழ்நாடு கண்ட இந்தி எதிர்ப்புக் களங்கள் – புலவர் செந்தாழை ந கவுதமன்

தேளுக்கு அதிகாரம் சேர்ந்து விட்டால் தன் கொடுக்கால் வேளைக்கு வேளை விளையாடும் என் தமிழா!  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உரிமைத் தொடக்கம்: மொழி உரிமைப் போராட்டத்தில் முன்னோடி யாகத் திகழ்வது தமிழ்நாடு! பிற மாநிலங்கள் தமிழ்நாட்டிற்கு வழிகாட்டும் நிலை இப்போது வந்துவிட்டது. பள்ளிக் கல்வியில் கூட, தமிழைக் கட்டாயப் பாடமாக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருகிறது தமிழகம். கேரளமும், மேற்குவங்கமும் பள்ளிக்கல்வியில் தாய் மொழியைக் கட்டாயப் பாடமாக்கி விட்டன. அதற்கான சட்டத்தையும் அண்மையில் பிறப்பித்து விட்டன. இதற்கு எதிரான திசையில் இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது நடுவண் அரசு! பள்ளிகளில் இனி இந்தி கட்டாயப் பாடமாம். அரசுத்துறைச் செயல்பாடுகள் அனைத்தும் இனி இந்தியிலேயே இருக்குமாம். நாடாளுமன்ற நடை முறைகளிலும் இனி இந்திக்குத் தான் முதல் இடமாம். வெறி பிடித்ததுபோல் இந்தித் திணிப்பு அறிவிப்புகளை வீசியபடி உள்ளது நடுவண் (பா.ச.க)அரசு!ஆதிக்கம் கிடைத்து விட்ட மமதை உள்ளவர்கள் திணிப்பார்கள். உரிமையை ஒப் படைக்காத மானம் உள்ளவர்கள் எதிர்ப்பார்கள். திணிக்கப்படும்...

மோடி ஆட்சியில் பறிபோகும் உரிமைகள்

“நாடாளுமன்ற ஜனநாயகத்தை தவறாகப் பயன்படுத்தி இறுதியில் அதை ஒழித்துக் கட்டினர் பாசிஸ்டுகள்” என்றார் ஜெர்மானிய சிந்தனையாளர் ஹன்னா அரெண்ட். உலகம் முழுவதும்உள்ளபாசிஸ்டுகள்ஆட்சிஅதிகாரம் என்ற வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் போதெல்லாம் ஜனநாயகத்தை ஒழிப்பதில் முனைப்பாகஉள்ளனர்என்பதற்குதற்போதைய இந்திய அரசாங்கம் மற்றுமொரு சாட்சி. ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி என்ற வார்த்தை ஜாலங்களில் மக்களை மயக்கி, கார்பரேட்களின் உதவியுடன் 2014 மே மாதம் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி இந்திய ஜனநாயகத்தை கேலிப் பொருளாக்கி வருகிறது. கார்பரேட்களுக்கான தங்குதடையற்ற உதவிகள், மக்கள் விரோத கொள்கைகள், அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம், வளர்ந்து வரும் வகுப்புவாதம் , அறிவிப்புடன் நின்றுவிடும் திட்டங்கள், அதிகரிக்கும் உள்நாட்டு குழப்பங்கள் என முதல் இரண்டு வருட ஆட்சியில் என்னவெல்லாம் இருந்ததோ அவை அனைத்தும் இவர்களின் மூன்றாவது ஆண்டு ஆட்சியில் அதிகரித்தன. அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வும் ஜனநாயக பாதையில் இருந்து சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா வேகமாக மாறி வருவதை தெளிவாக உணர்த்துகின்றன. நவம்பர் 8...

மரியாதை பெற்றோம்! – -கவிக்கோ அப்துல்ரகுமான்

மரியாதை பெற்றோம்! – -கவிக்கோ அப்துல்ரகுமான்

இடியாகப் பெரியார் இறங்காதிருந்தால் அடியோடு ஒழிந்திருப்போம் எங்கள் அடிச்சுவடும் அழிந்திருக்கும். மதம்பிடித்தால் யானைக்கு வலிமை அதிகரிக்கும் ஆனால் மதம் பிடிக்க வைத்தே எம் வலிமையெல்லாம் அழித்துவிட்ட பாதகரைப் பெரியார் படையன்றோ ஒழித்தது! அவர் தன்மானம் என்ற முதுகெலும்பைத் தந்திரா விட்டால் நிமிர்ந்து தமிழினம் நின்றிருக்க முடியாது ! அவரால்தான் ‘காலில் பிறந்தவன்’ தலைமைக்கு வந்தான் அவரால்தான் ‘மனிதர்கள்’ என்ற மரியாதை பெற்றோம்’’  

நாகாலாந்து காட்டும் வழியில் தமிழ்நாட்டுக்கு தனிச் சட்டம் வரவேண்டும்

நாகாலாந்து காட்டும் வழியில் தமிழ்நாட்டுக்கு தனிச் சட்டம் வரவேண்டும்

பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட மக்களை உள்ளடக்கிய இந்திய உபகண்டத்தில் “தேசம்“ என்ற ஒன்றே இன்னும் முழுமையாக முகிழ்த்திடவில்லை. குவித்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற அதிகாரங்கள் மக்கள் வரிப் பணத்தில் பெரும் தொகையை விழுங்கிக் கொண்டிருக்கிற ‘ராணுவக்’ கட்டமைப்புகளைக் கொண்டு “இந்தியா” என்ற நாடு – உலக அரங்கில் தன்னை அடையாளப்படுத்தி வருகிறது. இதுவே உண்மை. தங்களது சமூக, பண்பாடாக பார்ப்பனர்களின் பாரம்பரியப் பண்பாட்டை திணிக்கவும், அவர்கள் மேலாதிக்கத்துக்கான பொருளியல், அரசியல், கொள்கைகளை உருவாக்குவதற்கும்தான். “இந்தியா” என்ற கட்டமைக்கப்பட்ட தேசம் பயன்படுத்தப்படுகிறதே தவிர, மக்களின் வாழ்வுரிமை, தனித்துவம், சமூக சமத்துவங்களை அங்கீகரிப்பதற்காக அல்ல. குறிப்பாக -பார்ப்பனிய ஒடுக்கு முறை பண்பாட்டிலிருந்து முற்றிலும் முரண்பட்ட தமிழ்நாடு “சுதந்திரம்’’ பெற்றதாக அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தே புறக்கணிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றது. கோயில் கர்ப்ப கிரகத்துக்குள் “சூத்திரர்கள்” என்ற மனுதர்மம் திணிக்கும் இழிவை அசைக்கவே முடியவில்லை. இந்திமொழித் திணிப்பு ஒரு பக்கம். தமிழகத்தில் தனித்துவ மான சமூகநீதிக் கொள்கைகளை அழித்தொழிக்கும்...

பொதுத் தொண்டு ஒன்றே பெருமையைச் சேர்க்கும்

பொதுத் தொண்டு ஒன்றே பெருமையைச் சேர்க்கும்

ஒருவன் தனக்காக என்று ஏதேனும் காரியம் செய்து கொள்வதென்றால் அக்காரியம் பொதுமக்களுக்கான நற்காரியத்தைச் செய்து, அவர்களுடைய அன்புக்கும் பாராட்டுதலுக்கும் பாத்திரமாவதுதான்; இம்மாதிரிப் பலர் கூடி தன் மறைவுக்காக வருத்தப்படும் அளவுக்குப் பொதுத் தொண்டு ஆற்றுவது தான்.இதுவே ஒருவன் தனக்கெனச் செய்து கொள்ளும் காரியமாகும். மற்ற காரியமெல்லாம் தன் மனைவி மக்களுக்காகச் செய்யப்பட்டதாகக் கொள்ளப்பட்ட போதிலும் அவை ஊருக்குச் செய்யப்பட்டதாகத்தான் கண்டவர்களுக்குச் செய்ததாகத்தான் போய்விடும். ஒருவன் எவ்வளவு தான் சொத்துச் சேர்த்து வைத்துவிட்டுப் போனாலும் அது அவனுக்குப் பெருமை அளிக்காது; அதற்காக அவனுக்கு யாரும் மரியாதை செய்யவும் மாட்டார்கள். அச் சொத்து, மறைவின் போது அவனுடன் செல்வது இல்லை. ஒவ்வொருவரும் எந்த வகையில் இருந்தாலும், தங்கள் நேரத்தின் ஒரு பகுதியை, உழைப்பின் ஒரு பகுதியை, ஊதியத்தின் ஒரு பகுதியை , பொதுத் தொண்டிற்காக, ஏனைய மக்களுக்காகச் செலவிட வேண்டும். அதுதான் தனக்கென்று செய்து கொள்வதாகும்; மறைந்த பிறகும் தன் பெயர் நிலைத்து நிற்கச்...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேச்சு நீட் ஆதரவாளரின் புரட்டு வாதங்கள்

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக செப்.13ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் கா. ரசினிகாந்த் தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பிற்பகல் நிகழ்வில் பங்கேற்று பேசினார். அவரது உரையிலிருந்து: “வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பனப் பெண், தனது 37ஆவது வயதில் உயர்நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடாமல் தனக்கு மருத்துவ கல்லூரியில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று வழக்கு தொடர்ந்தார். அரசியல் சட்ட நிர்ணய வரைவுக் குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே வழக்கறிஞராக நின்று வாதிட்டபோது, “சென்னை மாகாண மக்கள், புதிய சகாப்தத்திற்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர வகுப்புரிமை நீதி போன்ற பிற்போக்கான பிரச்சினையை பேசிக் கொண்டிருக்கக் கூடாது”...

துணைவர் தேவை

துணைவர் தேவை

எம்.எஸ்.சி., பி.எட்., படித்து ஆசிரியர் பணியில் உள்ள பெண்ணுக்குத் துணைவர் தேவை. வயது 32. மணமுறிவு பெற்றவர். 8 வயதுப் பெண் குழந்தைக்குத் தாய். சாதி, மதம் தடையில்லை. தொடர்புக்கு தோழர் சரவணன்: 98949 25226 பெரியார் முழக்கம் 21092017 இதழ்

நாகர்கோயிலில் கழகம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோயிலில் கழகம் ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்கை அனிதா நினைவேந்தல்,  நீட் தேர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில், வடசேரி, அண்ணாச் சிலை அருகில் 05.09.2017 செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிக்கு கொட்டும் மழையில் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சதா தலைமையில் நடைப்பெற்றது. நீதி அரசர் (மாவட்டத் தலைவர்-பெ.தொ.க) முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ் மதி கண்டன முழக்கங்கள் எழுப்பினார். தோழர்கள் விஷ்ணு, சூசையப்பா, மஞ்சுகுமார், சஜீவ், போஸ், ரசல் இராஜ், சுகுமார், குமரேசன், மணிகண்டன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பெரியார் முழக்கம் 21092017 இதழ்

கழக சார்பில் போராளி இமானுவேல் சேகரின் நினைவு நாள் கூட்டம்

கழக சார்பில் போராளி இமானுவேல் சேகரின் நினைவு நாள் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதி சார்பாக, ஜாதி ஒழிப்பு போராளி  இமானுவேல் சேகரின் நினைவு நாள் பெரியாரின் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம் ஜா.உமாபதி தலைமையில் 11.09.2017 மாலை 6 மணிக்கு நடைபெற்றது. தோழர்கள் நாத்திகன் மற்றும் கீர்த்தி ஜாதி ஒழிப்பு பாடல் களையும், பகுத்தறிவு பாடல்களையும் பாடினர். இமானுவேல் சேகரின் ஜாதி ஒழிப்பு போராட்டங்களையும், அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், அவரது படுகொலை குறித்தும்  இரா. உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்), ந.அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்),  வழக்கறிஞர் துரை அருண் (சென்னை உயர்நீதிமன்றம்) மற்றும் அன்பு தனசேகரன் (தலைமைக் குழு உறுப்பினர்) சிறப்புரை யாற்றினார்கள். சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவுச் செய்தார். பெரியார் முழக்கம் 21092017 இதழ்

மயிலைப் பகுதி கழகம் நடத்தும் கால்பந்து போட்டி – பெரியார் விழா

மயிலைப் பகுதி கழகத் தோழர்கள் சென்னையில் சுயமரியாதை கால்பந்து கழகத்தின் வழியாக 5 ஆண்டுகளாக கால்பந்து போட்டியையும் பெரியார் பிறந்த நாள் விழாவையும் இணைத்து நடத்தி வருகிறார்கள். இவ்வாண்டு செப்.26ஆம் தேதி பெரியார் பிறந்த நாள்விழா பொதுக் கூட்டம், கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழாவை மந்தைவெளி இரயில் நிலையம் அருகே செயின்ட் மேரீஸ் பாலம் பகுதியில் தோழர்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். கழகத் தலைவர், பொதுச் செயலாளரோடு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் சிறப்புரையாற்றுகிறார். ‘விரட்டு’ கலைக் குழுவினரின் வீதி நாடகம், பறையிசை நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. பெரியார் முழக்கம் 21092017 இதழ்

கழக தலைமையகத்தில் கவுரி லங்கேஷ் படத் திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக 17.09.2017 மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் பெரியார் யுவராஜ் தலைமையில் மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் படத்திறப்பு உணர்ச்சி மயமாக நடந்தது. எட்வின் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்வை இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) ஒருங்கிணைத்தார்.  கார்த்திக் இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். கவுரி லங்கேஷ் படத்தை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்வில் ஜெயநேசன் (அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு), மனிதி இயக்கத்தின் செல்வி,  இளந்தமிழகத்தின் செந்தில், மே17 இயக்கத்தின் பிரவீன்  சிறப்புரையாற்றினார்கள். மா.தேன்ராஜ் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 21092017 இதழ்

திருமணங்களே தேவையில்லை: மூத்த எழுத்தாளர் ‘கி.ரா.’ பேச்சு

திருமணங்களே தேவையில்லை: மூத்த எழுத்தாளர் ‘கி.ரா.’ பேச்சு

‘திருமணங்களையே கிரிமினல் குற்றமாக்கிட வேண்டும்’ என்று பெரியார் கூறியபோது சமூகமே அதிர்ச்சி அடைந்தது. இப்போது விடுதலையை கோரி நிற்கும் பெண்கள், திருமணஅமைப்புகளிலிருந்து விலகி நிற்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டின் கரிசல் மண் எழுத்தாளர் கி.ராஜ்நாராயணன், தனது 95ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வில் புதுவையில் பேசியபோது, “சொந்த ஜாதி திருமணமே ஜாதியை காப்பாற்றுகிறது; திருமணம் செய்வதையே ஒழிப்பதுதான் இதற்கு தீர்வு” என்று பேசியிருக்கிறார். கரிசல் இலக்கியத்தின் தந்தையும் ‘கி.ரா.’ என்று அழைக்கப்படுபவருமான கி. ராஜ நாராயணனின் 95-வது பிறந்த நாளையொட்டி, ‘எழுத்தாளர் கி.ரா. 95 விழா’ புதுச்சேரியில் சனிக்கிழமையன்று துவங்கியது. 2017ஆம் ஆண்டுக்கான கி. ராஜநாராயணனின் ‘கரிசல் இலக்கிய விருதுகளும்’ வழங்கப் பட்டன. இதில், ‘தளம்’ இலக்கியக் காலாண்டிதழுக்கு, சிறந்த சிற்றிதழுக்கான விருதையும், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனுக்கு, சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் வழங்கிய கி. ராஜநாராயணன், ‘வாகை முற்றம்’ என்ற தலைப்பில் வாசகர் களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: “உயர்...

‘பெங்களூரு பேருந்து நிலையத்துக்கு பெரியார் பெயர்’ : அரசுஅறிவிப்பு!

‘பெங்களூரு பேருந்து நிலையத்துக்கு பெரியார் பெயர்’ : அரசுஅறிவிப்பு!

பெங்களூருவிலுள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு, தந்தை பெரியாரின் பெயர் சூட்டப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமும் விரைவில் கொண்டுவரப்படும் என்று அவர் கூறியுள்ளார். தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழா, தலித் சங்கர்ஷ சமிதியின் சார்பில் பெங்களூரு அரசு ஊழியர்கள் மாளிகையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கலந்து கொண்டு, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டதலைவர்களின் உருவப் படங்களுக்கு மலர் தூவி மரி யாதை செலுத்தினார். பின்னர் விழாவில் அவர் பேசினார். அப்போது ராமலிங்க ரெட்டி கூறியதாவது:“சமூக நீதிக்காகவும், திராவிடக் கலாச்சாரம் வளர வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் தந்தை பெரியார்; அவர் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கான பலனை தற்போது நாம் அனுபவித்து வருகிறோம்; அவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடியவர்; அவரின் கொள்கைகளை இளைஞர்கள் தொடர்ந்து பின்பற்றி நடக்க வேண்டும்; அவரின் போராட்டங்களால்...

அக் 7 சென்னையில் பெண் போராளிகள் ஒரே மேடையில் போர் முழக்கம்!

தோழர்களே தலைநகர் நோக்கி திரளுவீர்! ஜாதி ஒழிப்புக்களம் – தமிழ்நாட்டில் சூடேறி வருகிறது. இளம் பெண் தோழர்கள் பெண்ணுரிமையோடு ஜாதி ஒழிப்பையும் இணைத்து களமிறங்கியிருப்பது மகத்தான திருப்பம். தமிழ்நாட்டின் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை மதவெறி எதிர்ப்பு, சமூகநீதிப் போராட்டக் களம், இளைஞர்களிடம் வந்து சேர்ந்து விட்டது.அவர்களால்தான் அதை சாதித்துக் காட்டவும் முடியும். தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்புக்கு எதிர்நீச்சல் போட்டு களம் இறங்கியிருக்கும் பெண் போராளிகளை ஒரே மேடையில் பங்கேற்கவிருக்கும் நிகழ்வினை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது – இது காலத்தின் தேவை! அக். 7ஆம் தேதி மாலை சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே நிகழவிருக்கும் இந்த சங்கமம், ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமைக்கான போராட்டக் களத்துக்கு அறைகூவல் விடுக்கும் ஒரு திருப்பு முனையான நிகழ்வு. ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலாசிரியர் ‘மஞ்சள்’ நாடகத்துக்கு கூர்மையான உரையாடல்களைத் தீட்டியவருமான – – போராளி ஜெயராணி ‘கக்கூஸ்’ ஆவணப் படத்தை உருவாக்கி, மலம்...

என்னை விடுதலைப் பெண்ணாக்கியவர் -பெரியார்

அனைவருக்கும் அன்பு வணக்கம். நாம் ஒவ்வொருவரும் இரு கண்களைக் கொண் டுள்ளோம். கண்கள் என்பது நம் எதிரிலே இருக்கும் பொருட்களை மனிதர்களை நிகழ்வுகளை பார்ப்பதற்கு கருவியாகப் பயன்படுகிறது. ஆனால் பேருந்து நிலையத்தில் நமை நோக்கி நெருங்கி வந்து ஒரு இளைஞர் இந்த பஸ் எங்க போகுதுனு கொஞ்சம் பாத்து சொல்லுங்க எனக் கேட்டால் நாம் உடனே சொல்வோம் அல்லது மனதுக்குள்ளாவது நினைத்துக் கொள்வோம் ஏன் இவனுக்குக் கண்ணில்லையா என்று. அவனுக்குக் கண்கள் இருக்கிறது. ஆனால் கல்விக்கண் இல்லையானால் கண்ணிருந்தும் அவனைக் குருடனாகத்தான் இந்த சமூகம் பார்க்கும். கல்விக்கண் இல்லையானால் அவர் கண்ணுடைய வராக இருந்தாலும் வெறும் புண்ணுடையவர் என்று வள்ளுவர் சொல்கிறார். இதேபோல் நான் என் பெற்றோர் மூலம் இந்த மண்ணுக்கு வந்தேன். என் மனம் எந்த இலக்கும் இல்லாமல் நோக்கமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அடுத்த மனிதன் வலி அறியாது எனக்கான வாழ்வை மட்டுமே ஒரு காலம் வரை வாழ்ந்தேன்....

மதவாத சக்திகளை முறியடிக்க சூளுரை பெரியார் பிறந்த நாள் எழுச்சி கம்பீரமாக எழுகிறார் பெரியார்

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழாக்கள் முன் எப்போதும் இல்லாத உணர்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வழிந்தன. ராகுல் காந்தி, கருநாடக முதல்வர் சித்தராமய்யா, லாலு பிரசாத், தலைசிறந்த ஆய்வாளர் இராமச்சந்திர குகா என்று அனைத்து தரப்பினரும் பெரியாருக்கு வாழ்த்துக் கூறினர். பெரியார் வரலாற்றுத் தேவையாகி யிருக்கிறார். சமூகத்தில் பீடு நடை போடுகிறார். பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா இதுவரை காணாத அளவுக்கு தமிழகம் முழுதும் கொண்டாடப் பட்டது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தோழர்கள் இணைந்து பேரணியாகச் சென்று பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. பெரியார் இயக்கங்களைத் தவிர, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மாணவர் அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மே 17 உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் பெரியார்...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை 17092017

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா…  17-09-2017 மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் நேருதாஸ் தலைமையில்  துவங்கியது மாவட்ட அமைப்பாளர் ஜெயந்த் வரவேற்புரை நிகழ்த்த தோழர்கள் மருத்துவர் அனிதா, மதவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் ஆகியோர் படத்திறப்பும் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது தோழர்கள் கருத்துரை நிகழ்த்தினர் கே.எஸ்.கனகராஜ் dyfi மாவட்ட செயலாளர்  சிவகாமி தமிழ்நாடு அறிவியல் மன்றம் ச.பாலமுருகன் பி. யூ. சி. எல் சிறப்புரையாக- தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தோழர் கொளத்தூர் மணி தொடர் மழையிலும் புதியவர்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில் பெரியார் பிஞ்சுகள் திருப்பூர் சங்கீதா அவர்களின் குழந்தைகள் மற்றும் இசைமதி கிருஷ்ணன் சங்கீதா ஆகியோர் பாடல்கள் பாடினார் நிகழ்ச்சியில் திருப்பூர்துரைசாமி, முகில்ராசு, இணையதள பொறுப்பாளர் விஜய், கனல்மதி, சூலூர்பன்னீர்செல்வம், விக்னேஷ், லோகு, கணேஷ் கோவை மாநகர தோழர்கள் கலந்துகொண்டனர் இறுதியாக  நன்றியுரை தோழர் நிர்மல் கூறி நிகழ்ச்சியை நிறைவுற்றது மேலும் படங்களுக்கு

பெரியாரின் விடுதலைப் பெண் தோழர் கௌசல்யா கடிதம்

அனைவருக்கும் அன்பு வணக்கம். நாம் ஒவ்வொருவரும் இரு கண்களைக் கொண்டுள்ளோம். கண்கள் என்பது நம் எதிரிலே இருக்கும் பொருட்களை மனிதர்களை நிகழ்வுகளை பார்ப்பதற்கு கருவியாகப் பயன்படுகிறது. ஆனால் பேருந்து நிலையத்தில் நமை நோக்கி நெருங்கி வந்து ஒரு இளைஞர் இந்த பஸ் எங்க போகுதுனு கொஞ்சம் பாத்து சொல்லுங்க எனக் கேட்டால் நாம் உடனே சொல்வோம் அல்லது மனதுக்குள்ளாவது நினைத்துக் கொள்வோம் ஏன் இவனுக்குக் கண்ணில்லையா என்று. அவனுக்குக் கண்கள் இருக்கிறது. ஆனால் கல்விக்கண் இல்லையானால் கண்ணிருந்தும் அவனைக் குருடனாகத்தான் இந்த சமூகம் பார்க்கும். கல்விக்கண் இல்லையானால் அவர் கண்ணுடையவராக இருந்தாலும் வெறும் புண்ணுடையவர் என்று வள்ளுவர் சொல்கிறார். இதேபோல் நான் என் பெற்றோர் மூலம் இந்த மண்ணுக்கு வந்தேன். என் மனம் எந்த இலக்கும் இல்லாமல் நோக்கமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அடுத்த மனிதன் வலி அறியாது எனக்கான வாழ்வை மட்டுமே ஒரு காலம் வரை வாழ்ந்தேன். மனிதன் என்பவன்...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குருவரெட்டியூர்

ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் திவிக, திக தோழர்கள் இணைந்து பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலமாக சென்று இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்ட நிகழ்வுகள்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஈரோடு வடக்கு

தி.வி க ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பாக கோபி சத்தி அந்தியூர் நம்பியூர் ஆகிய ஒன்றியங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது அய்யா தந்தை பெரியார் அவர்களின் 139 வது பிறந்த நாள் விழாவையொட்டி எதிர்வரும் 24.09.2017 அன்று கோபி ஒன்றியங்களில் உள்ள அனைத்து கிளைகளிலும் கொண்டாடப்படவுள்ளது அனைவரும் வருக வருக என வரவேற்கிறோம் இங்கனம் தி.வி.க ஈரோடு வடக்கு மாவட்டம் ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் அந்தியூர் ஓன்றியம் சார் பாக தந்தை பெரியார் அவர்களின் 139 ஆவது பிறந்தநாள்வினை முன்னிட்டு செப்டம்பர் 17 ந் தேதி காலை கீழ்வானி இந்திரா நகர பகுதியில் கழக கொடி கம்பத்தில் கழக கொடியினை மாவட்ட செயலாளர்  வேணுகோபால் ஏற்றி வைத்தார். அங்கு கூடியிருந்த பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் கழகத்தின் சார் பாக துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அறிவியல் மன்ற பொறுப்பாளர் சுந்தரம் மற்றும் கிளை கழகத்...

தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம் சேலம் கிழக்கு

சேலம் கிழக்கு மாவட்ட தி.வி.க சார்பில் மாவட்ட செயலாளர் தோழர் டேவிட் தலைமையில் சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட கழக தோழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தோழர்கள் இருசக்கர வாகன பேரணியாக சென்று சேலம் மாநகரை சுற்றி 8 இடங்களில் அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்து முழக்கமிட்டனர். கூடியிருந்த மக்களுக்கு துண்டறிக்கையும் இனிப்பும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரும்பாலை, தோப்பூர், இளம்பிள்ளை என 8 இடங்களில் கழக கொடி ஏற்றப்பட்டது. அடாத மழையிலும் தோழர்கள் தோய்விற்றி பேரணியில் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். காலையில் அம்மாப்பேட்டை தோழர் செந்தில் தோழர்கள் அனைவருக்கும் அவரது இல்லத்தில் தேனீர், பிஸ்கட் வழங்கினார். தோழர் பிரபு நெத்திமேடு பகுதியில் தோழர்களுக்கு அவரது இல்லத்தில் தயாரித்த கேசரி மற்றும் வடை வழங்கினார். மதியம் இளம்பிள்ளை பகுதி தோழர்கள் அனைவருக்கும் மாட்டிறைச்சி உணவு வழங்கினார்கள்....

தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மயிலை 26092017

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூர் பகுதியின்… தந்தை பெரியார் 139வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்…. நாள் : 26.09.2017,செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, இடம் : சென்மேரீஸ் பாலம், மயிலாப்பூர் சிறப்புரை : #தோழர்_கொளத்தூர்_மணி தலைவர் திவிக #நீதியரசர்_அரிபரந்தாமன் முன்னாள் நீதிபதி, உயர்நீதிமன்றம் சென்னை #தோழர்_விடுதலை_இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக #தோழர்_தபசி_குமரன் தலைமை நிலையச் செயலாளர், திவிக #தோழர்_அன்பு_தனசேகரன் தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக #வழக்கறிஞர்_திருமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றம், திவிக #வழக்கறிஞர்_தோழர்_துரை_அருண் சென்னை உயர்நீதிமன்றம், திவிக #தோழர்_இரா_உமாபதி தென் சென்னை மாவட்ட செயலாளர், திவிக #தோழர்_வேழவேந்தன் தென்சென்னை மாவட்ட தலைவர், திவிக #விரட்டு கலைக்குழுவின் பறையிசை மற்றும் வீதி நாடகம் நடைபெறும். #வாருங்க_தோழர்களே.! #சமூகநீதி_காத்த_தந்தை_பெரியாரின் #கொள்கையை_சூளுரைப்போம்.! #மற்றும்… #சுயமரியாதை_கால்பந்து_கழகத்தின் 5ஆம் ஆண்டு கால்பந்து போட்டி… நாள் : 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு இடம் : குருபுரம் விளையாட்டு திடல், மயிலாப்பூர். கால்பந்து போட்டியை தொடங்கி வைப்பவர் : #மயிலை_த_வேலு மயிலை...

தோழர் கவுரி லங்கேஷ் அவர்களுக்கு நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு சென்னை 17092017

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கவுரி லங்கேஷ்அவர்களுக்கு நினைவேந்தல் படத் திறப்பு நிகழ்வு… திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக நேற்று (17.09.2017) மாலை 6 மணிக்கு தலைமை அலுவலகத்தில் தோழர்.பெரியார் யுவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.தோழர். எட்வின் பிரபாகரன் முன்னிலை வகித்தார். நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வை தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) அவர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். நினைவேந்தல் நிகழ்வின் தொடக்கமாக்க தோழர்.கார்த்திக் இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்வில் எழுத்தாளர்.கவுரி லங்கேஷ் அவர்களின் படத்தை கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தி, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நினைவேந்தல் நிகழ்வில் தோழர்.ஜெயநேசன், மனிதி இயக்கத்தின் தோழர்.செல்வி, இளந்தமிழகத்தின் தோழர்.செந்தில், மே17 இயக்கத்தின் தோழர். பிரவீன் மற்றும் கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுத்தாளர். கவுரி லங்கேஷ் அவர்களின் சமூக நோக்கத்தை குறித்தும், சமூகநீதிக்கான அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை...

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சென்னை

தந்தை பெரியாரின் 139வது பிறந்தநாளான 17.09.2017 காலை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் கழகப் பொதுச் செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் தி.நகர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து முழக்கத்தோடு மரியாதை செலுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக கிண்டி ஆலந்தூர், மந்தவெளி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்பு, மயிலாப்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட பெரியாரின் திருஉருவப் படத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் மாலை அணிவித்தார். அதை தொடர்ந்து இராயப்பேட்டை மற்றும் சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, சமூகநீதி முழக்கத்தோடு மரியாதை செலுத்தப்பட்டது. தண்டையார்பேட்டை பகுதியில் கழக கொடி ஏற்றி, தோழர்.அனிதாவிற்கு வீர வணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டது. கடைசியாக, திருவொற்றியூர் பகுதியில் கழக கொடியை ஏற்றி தோழர்.அனிதா மற்றும் எழுத்தாளர்.தோழர்.கவுரி லங்கேஷ் அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்க முழக்கமிட்டனர்.அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம் மதுரை

கலகக்காரனின் 139 பிறந்த நாளையொட்டி திராவிடர் விடுதலைக் கழகம் நீட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு இணைந்து பேரணியாக சென்று, பெரியார் சிலைக்கு மாலையிட்டு நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரைகளை தொடங்கினர்

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நாமக்கல்

கொட்டித்தீர்த்த மழையிலும் பெரியாரைக் கொண்டாடிய பள்ளிபாளையம் திவிக தோழர்கள் ஊர்வலமாக பிறந்தநாள் கொண்டாட்டம் குமாரபாளையத்தில் செய்தி – வைரவேல்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஈரோடு தெற்கு

தந்தை பெரியாரின் 139 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக,கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம்,திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த தோழர்கள் இருசக்கர வாகனங்களில் ஈரோடு மார்க்கெட் பகுதியில் ஊர்வலமாகச் சென்று, தந்தை பெரியாரின் நினைவிடத்தை அடைந்தனர். அங்கு தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.. அடுத்ததாக தோழர்கள் இருசக்கர வாகனங்களிலும் கழக ஆட்டோவிலும் ஊர்வலமாகச் சென்று ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த கழகக் கொடிக்கம்பங்களில் கொடியேற்றினர். மரப்பாலம் பகுதியில் சத்தியமூர்த்தி கொடியேற்றி வைத்து உரையாற்றினார். லோகநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் அப்பகுதி தோழர் சித்ரா சுரேஷ் கொடியேற்றினார். ஆசிரியர் சிவக்குமார் உரையாற்றினார். தோழர் சித்ரா அனைவருக்கும் நன்றி கூறினார். தோழர் சித்ரா அவர்களின் இல்லத்தில் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது....

பெரியார் பிறந்தநாள் பரப்புரைக் கூட்டம் குமரி 17092017

திராவிடர் விடுதலைக் கழகம்,குமரி மாவட்டம் தந்தை பெரியார்-ன் 139-வது பிறந்த நாளை முன்னிட்டு மூவோட்டுக் கோணம் சந்திப்பில் தெருமுனைப் பரப்புரைக் கூட்டம் நடைப் பெற்றது. மாவட்டப் பொருளாளர், தோழர்.மஞ்சுகுமார் தலைமைத் தாங்கினார். தோழர்கள்.நீதி அரசர்,தமிழ் மதி ஆகியோர் பெரியார் பற்றிய கருத்துரையாற்றினர். தோழர்கள்.இராஜேஸ் குமார்,அணில் குமார்,ஜெயன்,பெரியார் பிஞ்சு.ஆர்மல்,சஜிக்குமார்,றசல் ராஜ்,சிக்கு,சரத் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குமரி

திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம் நடத்திய தந்தை பெரியார்-ன் 139-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 16-09-2017 சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு  நாகர்கோவில் அம்பேத்கர் சிலை அருகில் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர்.தோழர்.வழக்கறிஞர்.வே.சதா தலைமைத்தாங்கினார்.கழகத் தோழர்.விஸ்ணு வரவேற்புரையாற்றினார்.தோழர்கள் நீதி அரசர்,தமிழ் மதி,சூசையப்பா சிறப்புரையாற்றினர். கழகப் பரப்புரைச் செயலாளர் தோழர்.பால் பிரபாகரன் “வஞ்சிக்கப்பட்டத் தமிழர்கள்” என்றத் தலைப்பில் பார்ப்பனீய பாரதீய சனதா அரசின் துரோகங்களைப் பட்டியலிட்டு பொதுமக்களுக்குப் புரியும் வகையில் நீண்டதொரு உரையாற்றினார்.முடிவில் கழகத்தோழர் அனீஸ் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்டத் தலைவர். தோழர்.ச.ச.மணிமேகலை தொகுத்து வழங்கினார். கழகத் தோழர்கள்.மஞ்சு குமார்,இராஜேஸ் குமார்,தமிழ் அரசன்,றசல் ராஜ்ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் பேராவூரணி

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா தந்தைப் பெரியாரின் 139 வது பிறந்தநாளையொட்டி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பேராவூரணியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில், திவிக பொறுப்பாளர் சீனி. கண்ணன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். மேலும் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் முனியன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், உழைக்கும் மக்கள் கட்சியின் வீர.மாரிமுத்து, நாகூரான், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் அனல் இரவீந்திரன், பெரியார் பிஞ்சுகள் அறிவுச்செல்வன், அரும்புச் செல்வன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்வில் ஆறு.நீலகண்டன், ஆயில் மதியழகன், பைங்கால் இரா.மதியழகன், தா.கலைச்செல்வன் உள்ளிட்ட பெரியாரிய தொண்டர்கள் கலந்துகொண்டனர். பெண் விடுதலை, சாதி மறுப்பு, வகுப்புவாரி இடஒதுக்கீடு, மநுநீதி எதிர்ப்பு, திருக்குறள் மீட்பு, மாநில சுயாட்சி உள்ளிட்ட பெரியாரின் கருத்துக்கள் ஒலிபெருக்கிமூலம் முழக்கம் செய்யப்பட்டது.

பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் திருப்பூர்

திருப்பூரில் 17/09 காலை 10 மணிக்கு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம் பெரியாரியல் கூட்டமைப்பு சார்பாக மிக சிறப்பாகவும் எழுச்சியோடும் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தோடு திக, தபெதிக ஒருங்கிணைப்பாய் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து இரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை வரை பெரியார் பிறந்தநாள் வாழ்த்தோடும் கொள்கை முழக்கங்களோடும் பேரணியாய் நடைபெற்றது. பெரியார் படையை வலுப்படுத்த தோழர்களோடு பெரியாரிய பிஞ்சுகளும் ஒன்று கூடினர்; கொட்டும் மழையிலும் பெரியார் கொள்கை முழங்கினர்; காரிருள் மண்ணில் இறங்கியதோ என வியக்கும் வண்ணம் கருஞ்சட்டையாய் அணிவகுத்து முழக்கங்களை எழுப்பி சென்றனர் வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே சாதி ஒழிப்பு போராளி தந்தை பெரியார் வாழ்கவே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வாழ்கவே இடஒதுக்கீடு பெற்றுத்தந்த தந்தை பெரியார் வாழ்கவே சட்ட எரிப்பு போராளி தந்தை பெரியார் வாழ்கவே இந்துத்துவ எதிர்ப்பு போராளி தந்தை பெரியார் வாழ்கவே...

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு சென்னை 17092017

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு நாள் : 17.09.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு. இடம் : திராவிடர் விடுதலைக் கழகம், தலைமை அலுவலகம், மயிலாப்பூர், சென்னை – 04 கண்டன உரை : #தோழர் விடுதலை க இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக தோழர் செந்தில் இளந்தமிழகம் தோழர் பிரவீன் மே 17 இயக்கம் தோழர் செல்வி மனிதி கோழையே உன்னிடம் தோட்டாக்கள்… என்னிடம் அழியா வார்த்தைகள்… எதற்கும் அஞ்ச மாட்டேன்…நான் #கவுரி_லங்கேஷ் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363