இராமன் சுவைத்த மாட்டுக்கறி

இவர் பிறப்பால் வேதியர்; ஒழுக்கம் குன்றி வேடருடன் கூடிக் களவு செய்து வாழ்ந்தவர். இவரே இராமாயணம் இயற்றிய வால்மீகி.

அயோத்தியா கண்டம்

அதில் தசரதர் ராமருக்கு முடி சூட்ட நினைத்தது; கைகேயி அதனை மறுத்தது; வரம் கேட்டது; இராமன் காடு சென்றது; அங்கு சித்திரக் கூடத்தில் தங்கியிருந்தது; பாரத்து வாசமுனிவரிடம் விருந்துண்டது போன்ற விவரங்களைத் தருவது அயோத்தியா கண்டமாகும்.

முல்லக்குடி எம்.ஆர். ஸ¨ந்தரேச சாஸ்திரி

பிரபல – ராமாயண பிரச்சாரர் முல்லக் குடி எம்.ஆர்.! ஸ¨ந்தரேச சாஸ்திரிகள் மொழிபெயர்த்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் நூல் தரும் செய்தி இதோ:

‘அஸ்தமனஸமயத்தில்கங்கையும், யமுனையும் சேருமிடத்தில் பரத்வாஜருடைய ஆசிரமத்திற்குச் சென்றார்கள். வேற்று மனிதர்களைக் கண்டு ஆசிரம மிருகங்களும் பசஷிகளும் (பறவைகளும்) ஓடின. மஹரிஷியை தரிசிக்க விரும்பி, ஸாயங்காலம் (மாலைநேரம்) அக்னிஹோத்ர வேளையானதால் அது முடியும் வரையில் ஆசிரமத்திற்குச் சற்று தூரத்தில் நின்றார்கள். பிறகு ஆசிரமத்திலிருந்து ஓர் சிஷ்யன் தீடீரென வெளியில் வர, அவன் வழியாய்த் தங்கள் வரவை மஹரிஷிக்குத் தெரிவித்து, அவருடைய அனுமதியால் ஆசிரமத்துட்சென்று, பரத்வாஜ் மஹரிஷி அக்னி ஹோத்திரத்தை முடித்துச் சிஷ்யர்களுடன் உட்கார்ந்திருக்கக் கண்டார்கள்.”

(எம்.ஆர். ஸ¨ந்தரேச சாஸ்திரிகள், ஸ்ரீமத் வால்மிகி ராமாயணம், அயோத்யா காண்டம், சென்னை, 1935, பக்.377)

இனி அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் இதோ:

 

பரத்துவாஜர்

 

 

கொடிய விரதத்தையுடையவரும் தியானத்தின் கருத்தூன்றிய வரும் தபோ பலத்தால் முக்காலத்து வரலாற்றினையறியும் உணர்ச்சியை உடையவரும் அக்கினி ஹோத்திரத்தை முடித்தவரும் மகாபாக்கியவானுமான பரத்துவாஜ முனிவரைக் கண்டவுடன் கூப்பிய கையராய் வணங்கினார்இராமர்.

‘உதத்தியனு’க்கும், ‘மமதை’க்கும் புதல்வராய் பிறந்த பரத்துவாச முனிவரைச் சந்தித்த ராமர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபின், தந்தையினால் கட்டளையிடப்பட்ட நாங்கள் இத்த பாவனத்தில் புகுந்துள்ளோம். இங்கு நாங்கள் தங்கியிருப்போம் என்ற செய்தியைத் தெரிவித்தார்.

அ.வி.நரணம் ஆச்சாரியார்

‘தார்மிகராகிய அம் முனிவர், புத்திமானாகிய அந்த ராஜகுமாரன் சொன்ன வார்த்தையைக் கேட்டு, பிறகு மது பர்க்கத்திற்கான (மதுவுக்குஏற்ற “சைட்டிஷ்”) எருதையும், பூஜா விதிக்காக அர்க்ய ஜலத்தையும் (பூஜைக்கு ஏற்ற புனித நீர்) கொண்டு வந்தனன்.”

(‘ஹோமய_ பர்க்கார் ஹோ வெஉயி யாயீ ஆசார்ய ருத்விக்ஸ் நாதகோ ராஜகா யர்மயுக்த 8” என்று எழுது மது பர்க்கத்திற்கு அங்கமென்று ஸ்மிருதியில் சொல்லப்பட்டது.)

 

மேலும் அம்முனிவர் வனத்தில் விளைகின்ற காய் கிழங்குகளால் செய்யப்பட்டவைகளும் நானாவித ரஸம் அமைந்தவைகளுமாகிய அன்ன விசேஷங்களைக் கொடுத்து (சிறப்பு உணவு வகை) அவர்கள் படுக்கும் பொருட்டு வாஸஸ் தானத்தையும் (தங்குமிடம்) ஏற்படுத்திக் கொடுத்தனர்.

வால்மீகி ராமாயணத்திற்கிணங்க அ.பி.நரணம் ஆச்சாரியாரால் இயற்றப் பெற்ற நூலில் தரும் செய்தி இது,

(ஸ்ரீராமாயணம் அயோத்யா காண்டம், இரண்டாம்பாகம்தமிழ்வசனம்,சென்னைஆர். வெங்கடேச்வரர் அண்டு கம்பெனியவர்களால் ஆனந்த அச்சுக் கூடத்தில் அச்சிட்டு 1912-ல் வெளியிடப்பட்ட நூல், பக்.878)

பசுவும், மது குடித்தலும்

மிக்க தவஞ் செய்தவரும் மகாத்மாவு மான பரத்துவரஜர் இராஜபுத்திரரும் வெகுபுத்தி மானுமான இராமருடைய இவ்வார்த்தையைக் கேட்டு, மது குடித்தலுக்கு உகந்தது உறுப்பான பெரிய பசுவையும், பூஜைக்கு உரிய பொருட்களையும் ஜலத்தையும், பல வகை யாயுள்ளவைகளும் காட்டிலுண்டாகும் பழம், கிழங்கு இவைகளிருப் பனவுமான உண்ணத் தக்கவையும் கொணர்ந்து வந்து அவர்களுக்குக் கொடுத்தார்; தங்கியிருக்க ஒரு இடமும் ஏற்படுத்தினார்.

(அயோத்தியா காண்டம், 54-ம் சருக்கம் தலைப்புப் பக்கம் இல்லாத

பழைய நூல், பரத்துவாஜர் செய்த உபசாரம் எனும் தலைப்பில், பக்.232)

ஸ்ரீராமர் சதா வேட்டையாடிக் கொண்டிருப் பார். பெரும்பாலும் மான் வேட்டையில் அவருக்குப் பிரியம். (இப்போதுஉயிருடனிருந்தால்நடிகர்சஞ் சய்தத்போல்சிறையில்அடைப்பட்டிருப்பார்) அவரின் ஆயுதம் வில்லும் அம்புமாக இருந்தது. (ஆரிய முசாபிர்)

(முபா ஹிஸா கோஷ்துகுரிநூலில் பக். 116)

இராமரும் லட்சுமணரும் பட்சியை அடித்துக் கொண்டு வந்தார்கள். மாலையில் அதன் இறைச்சியைப் புசித்து (சாப்பிட்டு)ஒரு விருஷத்தின் (மரத்தின்) கீழ் தங்கியிருக்கச் சென்று விட்டார்கள்.

 

(ராமாயணம் அயோத்தியா காண்டம், சுருக்கம் 52, சுலோகம்102)

ராமர் லட்சுமணரை நோக்கி விரைவாக ஒரு மானை வதைத்துக் கொண்டு வா. ஏனெனில் சாஸ்திரத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி நாம் செய்த வேண்டுமென்றார். லட்சுமணர் இவ்வுத்தரவைப் பெற்று மானை வதைத்துக் கொண்டுவந்தார்.அதைக்கொண்டுநெருப்பிட்டு செய்து புசித்தார்கள்.

(ராமாயணம், அயோத்தியா காண்டம், சுருக்கம் 56, சுலோகம் 24-26)

இவ்வாறு வால்மீகி ராமாயணம் ஸ்ரீராமர் இறைச்சியினைப் புசித்ததைப் பறை சாற்றுகிறது. இராமர் பரத்வாஜருடைய ஆசிரமத்திற்குச் சென்ற போது அங்கு அக்னி ஹோத்திரம்

‘மனிதனுக்குப் பதில் குதிரையும், குதிரைக்குப் பதில் எருமை அல்லது பசுவும், பசுவுக்குப் பதில் ஆடும், பின்பு விலங்குகளுக்குப் பதில் பலகாரங்களும் பலியாகக் கொடுக்கப்படலாயின. வேதம் என்பது இவ்வகையான யாகங்களுக்காக மாத்திரம் எழுந்த நூலேயாகும்” என்பர் ந.சி. கந்தையா பிள்ளை.

(நெருப்பை வளர்த்து யாகம் செய்தல்) நடந்த செய்தி சொல்லப் படுகிறது. அதன்பின் அவருக்கு மது வழங்கப்பட்டது : பசு வழங்கப்பட்டது போன்ற செய்திகள் தெள்ளத் தெளிவாக அக்கால நிலையை நமக்கு அறிவிக்கிறது !

ஆநந்த ராமாயணம்

‘ஆனந்த ரூபியாகிய ஸ்ரீ இராம பிரானை அடைவிப்பது (அடைக்கலமாவது) ஆனந்தத்தைத் தரும் இராம சரிதம் ஆநந்த ராமாயணமாகும். இது ஸ்ரீவால்மீகி முனிவரால் அருளிச் செய்யப்பெற்றது. 24000 சுலோகங்களால் அமையப் பெற்றது. இராமாயணத்தில் காணப்படாத சில அபூர்வமாகிய விஷயங்கள் இதில் உண்டு என்பார் புகழ்பெற்ற இராமாயணஆராய்ச்சியாளரான தேவகோட்டை பிரஹ்மஸ்ரீ, உபயவேதாந்த வித்வான் சவுந்தர ராஜன்.

 

வரகவி அ. சுப்பரமணிய பாரதியார்

9 காண்டமும், 109 சருக்கமும், 12252 கிரந்தத்தைக் கொண்டும், 1917ல், கோ. வடிவேலு செட்டியார் (லோகோகாரி பத்திராதிபர்) முகவுரையுடனும் வெளிவந்த நூல் “ஆநந்த ராமாயணம்”. இதனை பலசிறந்தவித்வான்களின்உதவியைக்கொண்டு தமிழில் மொழி பெயர்த்தவர் ப்ரம்மஸ்ரீ வரகவி அ. சுப்பிரமணிய பாரதியார். அதில் மூன்றாவது வருவது யாக காண்டம். ஸ்ரீராம பிரான் அசுவமேத யாகஞ் செய்வது பற்றிய செய்திகள் அதில் விவரித்துச் சொல்லப்பட்டுள்ளது.

 

அசுவமேத யாகம்

 

 

அஸ்வமேத யாகத்தைப் பற்றிய விவரம் ரிக் வேத ஸம்ஹிதா இரண்டாம் அஷ்டகம் மூன்றாம் அத்தியாயம் ஏழு முதல் பதின்மூன்று வரையிலுள்ள வர்க்கங்களில் விளக்கிக் கூறப் பட்டுள்ளது.

 

தீர்க்கதமா

 

 

மஹா மஹா சிறப்புகொண்ட இந்த யாகத்தைக் கண்டு பிடித்தவர் ‘தீர்க்கதமா” என்னும் ரிஷியாவார். முன் ஒரு காலத்தில் துஷ்யந்தனுடைய புத்திரனான பரதன் (இவனது தாயார் சகுந்தலை) கங்கையாற்றின் கரையில் ஐம்பத்தைந்து அஸ்வமேத யாகங்களைச் செய்தான். அவனைப் போல் இதற்கு முன்னும் பின்னும் எந்த அரசனும் செய்யவில்லை.

 

அசுவமேதம்

 

 

நல்லசாதிக்குதிரையின்நெற்றியில்அசுவமேத யாகம் செய்யும் அரசனது வீரம் முதலியவற்றை வரைந்து பட்டத்தைக் கட்டி, பூப்பிரதட்சணம் செய்து பின் யாகம் செய்தல் அசுவமேதயாகும்.

 

குதிரையின் பெயர்

 

 

பரி, துரகம், பாடலம், கிள்ளை, பாய்மா, துரகதம், வாசி, உன்னி, தூசி, கந்தருவம், கற்கி, அரி,அயம்,இவுளி,மா,அச்சுவம், புரவி, கோரம், குரதகம், கோணம், கொக்கு, கொய்யுளை, சடிலம், கோடை ஆகியவை குதிரையின் பெயர்களாகும்.

(ஞா. கதிரைவேற்பிள்ளைபதிப்பு, சூடாமணி நிகண்டு, சென்னை, 1929, பக.61)

 

குதிரை இறைச்சி

 

 

குதிரையைக் கொன்று செய்யும் யாகம் அசுவ யாகம் எனப்பட்டது. மனிதனுக்குப் பதில் குதிரை பலியிடப்பட்டதாகத் தெரிகின்றது. யாகத்தில் மாத்திரமன்று,சாதாரணமாகக்குதிரைஇறைச்சி ஆரிய மக்களால் உண்ணப்பட்டது.

The People ate both animal and vegetable food; horses, bulls, buffaloes, rams and goats were killed on slaughter benches(Suna) cooked in Cold rons and eaten என்று P.T.S அய்யங்கார் தெரிவித்துள்ளார். (Life in Ancident India, pp.49 )

‘மனிதனுக்குப் பதில் குதிரையும், குதிரைக்குப் பதில் எருமை அல்லது பசுவும், பசுவுக்குப் பதில் ஆடும், பின்பு விலங்குகளுக்குப் பதில் பலகாரங் களும் பலியாகக் கொடுக்கப்படலாயின. வேதம் என்பது இவ்வகையான யாகங்களுக்காக மாத்திரம் எழுந்த நூலேயாகும்” என்பர் ந.சி. கந்தையா பிள்ளை.

கொடூரமாகக் கொல்லப்படுதல்

பலி விலங்கு கயிற்றாற் கட்டப்பட்டது. விலங்கின் தலை, அரை, கால்கள் என்பன கட்டப்பட்டன. அதன்ஒன்பதுவாயில்களையும் அடைத்துப் பிடித்து அது சாகும் வரை இரகசிய உறுப்பின் மீது அடிக்கப்பட்டது. மிருகம், பட்டடையின் மீது வைத்துப் பக்குவமாக வெட்டப்பட்டது: வெட்டும்பொழுது ஒவ்வொரு உறுப்பின் பெயரும் சொல்லித் துதிக்கப் பட்டது. உறுப்புகளின் மூட்டுகள் திறமையோடு பிரிக்கப்பட்டன. இறைச்சி சமைத்துத் தெய்வங்களுக்குப்படைக்கப்பட்டது. பின்பு வழிபடுவோர் அதனை உண்டார்கள். பிற்கால அசுவமேத யாகங்கள் போல் அல்லாது முற்காலக் குதிரை யாகம் மிகவும் சாதாரணமாக இருந்தது.குதிரைக்குமுன்னால்புள்ளியுள்ளஆடு விடப்பட்டது. குதிரையும் பலிப் பொருள்களும் விலையுயர்ந்த போர்வையால் மூடப்பட்டன. ஆடும், குதிரையும் மூன்று முறை குண்டத்தைச் சுற்றிக் கொண்டு வரப்பட்டன.

குருமார்கள் யூபத்தையும், சமைக்கும் பாத்திரங் களையும் கொண்டு பின்னே சென்றார்கள். குதிரையைப் பலியிடும் இடத்தில் விட்டு அதற்குப் புல்கொடுக்கப்பட்டது.குதிரையைக்கம்பத்தோடு கட்டிபின் கொன்று, மற்ற மிருகங்களைப் போல உண்ணப்பட்டது. பலியிடப்பட்ட விலங்கு இறக்கவில்லை கடவுளிடம் சென்றுள்ளது என்று கருதப்பட்டது.

(ந.சி கந்தையாபிள்ளை, ஆரிய வேதங்கள், பக்33) அரசனின் தேவியின் அசிங்கம்

‘இப்பொழுது அரசனின் முதல் தேவி பிரகஸ்பதி எனக் கருதப்படும் யாகத்தில் கொல்லப்பட்ட குதிரையில் அண்மையிற் சென்று அதன் விதையைப் பெறுவதற்கு ஆவல் அடை கிறாள். பின்பு அவள் குதிரையின் பக்கத்தே படுக்கிறாள். மந்திரங்கள் சொல்லப்படும் போது அவள் குதிரையைச் சேருவதற்குப் பலவாறுமுயல்கின்றாள்.மோசமானஇந்நிகழ்ச்சி நடைபெறும்போது ‘அத்வாரு” என்னும் வேள்வி புரியும் தலைமைப் பார்ப்பனர் குதிரையையும் அரச பத்தினியையும் போர்வையால் மூடிவிடுகிறார். இடக்கான அச்செயலைப் புரிவதற்கு அரசனின் தேவி மூன்று முறை மறுத்திட மற்றவர்கள் அவளுக்கு சமாதானஞ் சொல்லி அவளை இணங்க வைக்கிறார்கள். எல்லா வகையான மோசமான ஒழுக்கக்கேடான செயலும் பேச்சும் ஒருமித்து நிகழ்கின்றன” என்று அசுவமேத யாகத்தின் போது நடைபெறும் செயல்களை ந.சி. கந்தையாபிள்ளை விளக்கியுள்ளார். Indian Hisotical Review, Vol.16, 1940, pp.86. . மேற்கோள், புரோகிதர் ஆட்சி, பக்.35,36)

 

குதிரை கொல்லப்படுதல்

அஸ்வமேதக் குதிரைக்கு முன் நிறுத்தியிருக்கிற ஆடு, பூஷா என்னும் தேவனுக்காகக் கொண்டு வரப்பட்டது. இந்தக் குதிரையின் இறைச்சியில் சிறிது ஈக்கள் தின்று விடும். சிறிது கத்தியில் ஒட்டும்.சிறிதுகுதிரையைக்கொன்றுமாமிசத்தை எடுப்பவனுடைய கை நகங்களுக்கிடையில் புகுந்து விடும். ஆதலால் ஈக்களும், கத்தியும், குதிரையைக் கொல்பவனும் சுவர்க்கத்தை அடைவார்கள். குதிரையும் ஸ்வர்க்கத்தை அடையும். குதிரையின் வயிற்றைக் கீறி குடலுக்குள் ஜீரணமாகாது கிடக்கும் பச்சைப் புல்லை எடுத்து மாமிசத்தை நன்றாகக் கழுவி சுத்தமாய் சமைக்க வேண்டும். குதிரையின் உடம்பில்; முப்பத்து நான்கு மாமிசப் பகுதிகள் இருக்கின்றன. அவைகள் கேடுறா வண்ணம் கத்தியினால் சுத்தமாக எடுக்க வேண்டும். உறுப்புகள் தனித்தனியாக எடுத்து வைக்கவேண்டும்.இந்த அஸ்வமேத யாகத்தினால் நமக்கு ஆடு, மாடு, குதிரை, நல்ல மனைவி, புத்திரர்கள், சரீர வன்மை முதலியன உண்டாகும் என்ற நம்பிக்கையின் அடிப் படையில் இந்த யாகம் செய்யப்படும்.

(மத விசாரணை நூல் பக்.92).

இராமர் செய்த அசுவமேத யாகம்

வால்மீகி இராமாயணம் பாலகாண்டம் பதினாறாவது சருக்கத்துள் அசுவமேத யாகம் விரித்துக் கூறப்பட்டுள்ளது. அதனுள் யாகக் குதிரை தானாக ஒரு வருடம் சஞ்சரித்து வந்த பின் சரயு நதியின் வடகரையில் கட்டிய யாக சாலையிலேஅசுவமேதயாகம்ஆரம்பித்ததையும் பின்பு உரிய காலத்திலே அசுவமேதக் குதிரை கௌசலியைப் பூசை செய்து வாளால் வெட்டி வீழ்த்தியமையும் கூறப்பட்டுள்ளது.

 

(கா. சுப்பிரமணிய பிள்ளை, வேள்வி ஆராய்ச்சி, செந்தமிழ்ச்செல்வி, 1923, அக்டோபர்-நவம்பர், பக்.364-365).

முனிவர் கூட்டம்

இராமபிரான் அசுவமேத யாகஞ் செய்வது கேட்டு யாக சாலையை நோக்கி முனிவர்கள் குவிந்தனர். கசியபர், அத்திரி, பரத்துவாஜர், விசுவாமித்திரர், கொளதமர், மார்க்கண்டேயர், மிருகண்டர், சியவனர், முத்கலர், அசிதர், ஜாமதக்கநியேர்,தேவலர், வியாஸர், நாராயணர், கிரது, விபண்டகர், நாரதர், தும்புரு, காவலர், சிவதாஸர், பானுதாஸர், ஹரிதாஸர், மகாதபஸ், சிவவர்மா,ருத்ரவர்மா,ஏகசிருங்கர்,சதுரசிருங்கர், திரிசிருங்கர், திலபாண்டர் பிருகு, பார்க்கவர், வாக்பதி, சௌம்மியர், கண்வர், ஏகபாதர், திரிபாதர், ஊர்த் பாகு, ஊர்த்வ பாதர், ஊர்த்வ நேத்திரர், ஊர்த்துவமுகர், திரிசிரஸ், விருந்த கௌதமர், பர்ணாதர், நிசாசுரர், ருசிய சிங்கர், மதங்கர்,ஜாபாலி,கும்பசம்பவர்,ததீசி,சௌநகர், சூதர், சுதீஷிணர், லோமவர், வால்மீகி, துர்வாசஸ், வேதநிதி போன்ற ரிஷிகள் இராமரது யாக சாலையில் குழுமியிருந்தனர்.

ஸ்ரீராமபிரானுடைய அசுவமேத யாக வைபவத்தைப் பார்க்க ஆவல் கொண்டு பத்து திசைகளிலிருந்தும் நாள்தோறும் கோடிக் கணக்கான முனிவர்கள் யக்ஞ மண்டபத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீராமபிரான் எழுந்திருந்து அவர்களுக்கு ஆசனமளித்து அவர்களுக்கு மதுவார்க்கம் முதலியவற்றால் (மதுபோதைகளைவழங்கி) பக்தியோடு பூசித்து சந்தோஷப்படுத்தினார்.

(ஆநந்த ராமாயணம், சென்னை, 1929, பக்.294295).

இராமர் நடத்திய அஸ்வ மேத யாகத்தின்போது குதிரைகள் கொல்லப்பட்டதும், அங்கு வந்திருந்த எண்ணற்ற முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் மது பர்க்கமெனும் புலால் உணவு வழங்கப்பட்டது (மதுவும் -அதற்கு உகந்த புலால் உணவும்) என்பதும் தெள்ளத் தெளிவாக ஆநந்தராமாயணம் தரும் செய்திகளாகும்.

ஒட்டக் கூத்தர்

செங்குந்தமரபிற் பிறந்தவர்: கூத்தர் என்னும் பெயருடன் வளர்ந்தவர். இவர் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இராசராசன்ஆகிய மூவர் மீதும் தனித்தனி உலா பாடியுள்ளார். இரண்டாம் குலோத்துங்கன் மீது பிள்ளைத் தமிழ் மாலையும் பாடியவர். தக்கயாகப்பரணி, அரும்பைத் தொள்ளாயிரம், ஈட்டி எழுபது எழுப்பெழுவது என்னும் நூலையும் பாடியவர். அத்தோட இவர் இராமாயணத்தின் ஏழாவது காண்டமாகிய ‘உத்திர காண்டம்” பாடியவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளி யிட்ட அந்த நூல் முதற்பகுதி 1312 பக்கங் களைக் கொண்டது. இரண்டாவது பகுதி 1325 பக்கங் களைக் கொண்டது. அதில் இரண்டாவது பகுதியில் 384வது பக்கத்தில் இராமர் செய்த அசுவமேத யாகம் பற்றிச் சொல்லியுள்ளார்.

வேங்கடராமச் செட்டியார்

இதோ வேங்கடராமச் செட்டியார் தந்துள்ள வாசகங்கள்…

…ஓமஞ் செய்தமையால் வலிமை பெற்றஅந்தப் பதினாறு குதிரைகளும் உலகம் முழுமையும் நடந்து சுற்றி வந்து மீண்ட பின்பு, இராமன் மகிழுமாறு பதினாறு வேள்வித் தூண்களில் அந்தப் பச்சைக் குதிரைகளைக் கட்டினார்கள். பின்பு முனிவர்கள் அக்குதிரைகளில் காதுகளில் மந்திரங்களைச் சொல்லி நின்று அவற்றை அரிந்தார்கள். அரிந்தவுடன் குதிரைகள் பூமி சிவக்குமாறு இரத்தத்தைச் சொரிந்தன. குதிரைகளின் தசையை அரிந்து வேள்வித் தீயில் அன்போடு அவியாகச் சொரிந்து தேவர்கள் அருந்தினார்கள். இதோஒட்டக்கூத்தர்இயற்றிய பாடல். . .

வரிந்த பைங்கழலினான் மகிழ மாதவர்

தெரிந்த மந்திரத்தினைச் செவியில் செப்பி நின்று

அரிந்தனர் அரிதலால் அவனி சேப்புறச்

சொரிந்தன திசை எலாம் துனைந்த சோரியே.

(உத்தரகாண்டம், அசுவமேதயாகப் படலம், பாடல் 139)

ஒட்டக்கூத்தரின்பாடலுக்குஉரையாக‘காலிற் கட்டிய பசுமையான வீரக்கழலினையுடைய இராமன் மகிழுமாறு பெரிய தவமுனிவர்கள் தாங்கள் தெரிந்து வைத்துள்ள மந்திரத்தினை அக் குதிரைகளின் செவியில் சொல்லி நின்று அவற்றை அரிந்தார்கள். அவ்வாறு அரிதலால் பூமி செந்நிறம், அடையுமாறு அக்குதிரைகள் திசை யெல்லாம் விரைந்து பரவும் இரத்தத்தைச் சொரிந்தன என்று செ.வேங்கடராமச் செட்டியர் உரை எழுதியுள்ளார்.

 

உத்தர ராமசரிதம்

மகாகவி பவபூதி என்னும் பேராசிரியன் சமஸ்கிருதத்தில் எழுதிய நாடகநூல் உத்தர ராமசரிதம். இதனை தமிழில் க.சந்தானம் மொழி பெயர்ந்துள்ளார். சக்ரவர்த்தி ராஜகோபாலாச் சாரியார் முன்னுரை எழுதியுள்ளார். சென்னை அல்லயன்ஸ் கம்பெனி 1942ல் இதனை வெளி யிட்டது. ஏழு அங்கங்களைக் கொண்ட இந்த நாடகத்தில் நான்காவது அங்கத்தில் வரும் செய்தி இதோ:

சமஸ்கிருத ராமாயணங்கள்

சமஸ்கிருதத்தில் வால்மீகி ராமாயணம், ஸம் சேஷப ராமாயணம், அத்யாத்ம (ஞான) ராமாயணம், அற்புத ராமாயணம், காளிதாஸ ரகுவம்சம், காயத்ரீ ராமாயணம், மந்திர ராமாயணம், வமல ராமாயணம் (ஞானவாசிஷ்டம்),சதகோடிஆனந்தராமாயணம், சதஸ்லோகி ராமாயணம், ஏகஸ்லோகி ராமா யணம், ஷட்ஸ்லோகி ராமாயணம், சமர்த்த ராமதாஸர் ராமாயணம், ஸ்ரீரகு வீர கத்யம் (தேசிகன்) ராமாயணம், ஜைன பௌத்த ராமாயணம், நாடகங்களில் ராமாயணம் ஆகிய ராமாயணங்கள் இருக்கின்றன.

பிறமொழி ராமாயணங்கள்

மராத்தி ராமாயணம், ஆங்கில மொழிபெயர்ப்பு ராமாயணம், ஹிந்தியில் ராமசரிதமானஸம் (துளசிதாஸ்)ராமாயணம்,வங்காளத்தில்கிருத்தி வாஸ் ராமாயணம், மலையாளத்தில் எழுத்தச்சன் ராமாயணம், கன்னடத்தில் பம்ப ராமாயணம், தெலுங்கில் மொல்ல ராமாயணம் உள்ளது.

கம்பராமாயணம்

குகப்படலம்

தந்தை தசரதன்ஆணையேற்றுராமன்காடு செல்கிறான்.தம்பிஇலட்சுமண ரோடும் துணை வியார் சீதையோடும் கங்கையைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார். அப்போது குகன் இராமனைக் கண்டு பணிந்து நிற்கிறார். அப்போது இராமனிடம்தான் கொண்டு வந்த பொருட்களைக் கொடுக்க முயற்சிக்கிறார்.

“… தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்

திருத்தினென் கொணர்ந்தேன்.எங்கோல், திருஉளம்?”

என்று குகன் இராமரிடம் கேட்கிறான்.

 

(அயோத்யாகாண்டம், குகப்படலம், 14வது பாடல்)

இராமர் குகனது அன்பைப் பாராட்டி, நாளை விடியலில் (கங்கையைக்கடந்துசெல்வதற்கு) நாவாயுடன் வருக என்று கூறுகிறார். இரவு கழிகிறது. பொழுது புலர்கிறது. காலையில் ராமரைச் சந்தித்த குகன் தன் ஊரிலேயே இராமனைத் தங்குமாறு பணிக்கிறான். அப்போது கூறுகிறான்: தேன்உள; தினை உண்டால் தேவரும் நுகர்தற்கு ஆம் ஊன்உள; துணைநாயேம்உயிர்உள; விளையாடக் கான்உள; புனல் ஆடக்கங்கையும் உளது அன்றோ? நான்உளதனையும்நீஇனிதுஇரு; நட; எம்பால்;

(குகப்படலம், பாடல் 29)

 

“தேவரீர்! நீங்கள் உண்பதற்கு இங்கு ஊன் (இறைச்சி) உள்ளது” என்கிறான் குகன். அதற்கு மறுமொழியாக இராமர் கூறுகிறார்.

 

இராஜகோபாலாச்சாரியார்

‘குகனே ! நீ விரும்பியபடி உன் ராஜ்யத்தில் நான் சந்தோஷமாக இருந்து கொண்டு பதினான்கு வருஷங்கள் கழிக்கலாம். ஆனால் அது நான் பிரதிக்ஞை செய்த வனவாசம் ஆகுமா? தகப்பனார் கொடுத்த வாக்கைச் சத்திய மாக்க நான் அயோத்தியை விட்டு வந்திருக் கிறேன். ஆனபடியால் தவ வாழ்க்கை வாழ வேண்டும். ருசியாகச் சமைக்கத் தெரிந்தவர்கள் பக்குவப் படுத்திய பதார்த்தங்களை நான் தொடக்கூடாது. பழம், கிழங்கு, காய் அல்லது விலக்கப்படாத மாமிசத்தை நாங்களே சம்பாதித்து, வேள்வித் தீயில் சுட்டு ஆகாரம் செய்ய வேண்டும்.”

இது குகனுக்கு இராமர் அளித்த பதில். சக்கர வர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அளித்த உரையாகும் இது.

(இராமாயணம், சென்னை, 1987, பக்.150)

 

“We have to live only on fruits, roots and permissible kinds of Meat such as we offer in the sacrificial fire ”என்று ஆங்கிலத்தில் தான் எழுதிய ராமாயண நூலிலும் ராஜாஜி இதனைத் தெரிவித்திருக்கிறார்.

(C.RajaGopalachari, Ramayana, 1977, pp.88 )

 

 

தொடர்ந்து அதே நூலில் ராஜாஜி சொல்கிறார்:

 

Here and in other places, Vaalmeeki describes how Raama and Lakshmana secured food by hunting. He make it quite plain that they had to subsist largely on meat. Some good men are troubled by this. But Meat was not prohibited for Kshatriyas. Indeed, it has always been the rule in india to permit any food legitimately obtained and consecrated as a sacrifice. Raama was a Kashtriya and he lived in the forest in the Kshatriya way, though abstemiously.

(Ibid pp.90)

பாரததேசத்து பொது தர்மம்

“சித்ரகூடத்து பகுதியிலும், இன்னும் பல இடங்களிலும் ராமலட்சுமணர்கள் வேட்டையாடி பூஜைக்குத் தகுந்த அதாவது வழக்கப்படி சாப்பிடத் தகுந்த வெட்டையாகாரம் சம்பாதித்து உண்டார்கள் என்று வால்மீகி முனிவர் பாடியிருக்கிறார். சந்தேகத்துக்கு இடமில்லாமல் வியக்தமாகப் (வெளிப்படையாக) பாடி யிருக்கிறார். இதைப் பற்றி நாம் குழப்பமடைய வேண்டியதில்லை.

சத்திரியர்களின் ஆசாரப்படி மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை. காலத்துக்கும் குல வழக்கத்துக்கும் ஏற்றபடி உடலைப் பாதுகாப் பதற்கும்எந்தஉணவும்தக்கவழியில்சம்பாதித்து, பூஜையில் வைத்து, அளவுக்கு மிஞ்சாமல் உண்பதில் யாதொரு தவறுமில்லை என்பது பாரத தேசத்துக்குப் பொது தர்மம்” என்று இராஜாஜி எழுதிய இராமாயண உரைநூலில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

(இராமாயணம், பக்.153,154)

மேல்நாட்டு அறிஞர்கள்

பாரத நாட்டின் பெருமையை மேன்மையை வெளிப்படுத்தும்பெருங்காப்பியம்இராமாயணம், எனவேஅது மேல்நாட்டு அறிஞர்களின்ஆய்வுத் திறனுக்கு விருந்தளித்தது.

வேபர், மியுவக், ஃப்ரெடரிக், மோனியர் வில்லியம்ஸ், யாகோபி, விரிட்ஸ், பாம்பார்ட்நர், லெவி மெக்டானல், விண்டர் நித்ஸ், கீத், பார்ஜிடர், போன்ற மேல்நாட்டு அறிஞர்கள் வால்மீகி ராமாயணத்தைத் துருவித் துருவி ஆராய்ந்திருக்கிறார்கள்.

செ.திவான் எழுதிய ‘பசுவதை-ஒரு வரலாற்றுப் பார்வை – நூலிலிருந்து

நிமிர்வோம் ஜுன் 2017 இதழ்

You may also like...