Author: admin

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு முற்றுகை சென்னை 25112017

ஆயிரம் விளக்கு பகுதிகளில் அமைந்துள்ள திடீர் நகர், மக்கீஸ் தோட்டம் பகுதி குடியிருப்பில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் தமிழக அரசை கண்டித்து….. இன்று (25.11.2017) காலை 11 மணிக்கு கீரின்வேஸ் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த தோழர்கள், தமிழ்நாடு இளைஞர்கள் இயக்கம், அம்பேத்கர் மக்கள் படை, இளந்தமிழகம் மற்றும் பல்வேறு இயக்கத்தை சார்ந்த தோழர்கள் ஒன்றிணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பினர். தமிழக அரசுக்கு எதிராக முழக்கத்தை எழுப்பி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

கொளத்தூரில் நவ.27 ”மாவீரர் நாள் !

கொளத்தூரில் நவ.27 ”மாவீரர் நாள் !” நாள் : 27.11.2017 திங்கட்கிழமை. நேரம் : மாலை 5.00 மணி. இடம் : தளபதி பன்னம்மான் நினைவு நிழற்கூடம்,புலியூர் பிரிவு,கொளத்தூர். சுடர் ஏற்றி வீரவணக்க உரை : பேராசிரியர் சரஸ்வதி, நாடாளுமன்ற உறுப்பினர்,நாடு கடந்த தமிழீழ அரசு. தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்திட அணி திரள்வோம் ! நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு, கொளத்தூர்,சேலம் மாவட்டம். தொடர்புக்கு : 9443519234, 9443565503, 9003677717, 9842445964.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) விதி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) விதி

“தலைமைக் கழக அறிவிப்பு !” தோழர்களுக்கு வணக்கம், வருகிற டிசம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை (01.12. 2017) அன்று மாவட்டத் தலைநகரங்களிலும், வாய்ப்புள்ள இடங்களிலும் பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (TNPSC) விதிகளில் செய்துள்ள மாற்றங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசுப் பணியாளர்களாக தமிழ்நாட்டினருக்கே வேலை வாய்ப்பை அளிக்கும் வகையில் கர்நாடகம்,குஜராத், மராட்டிய மாநிலங்களில் இருப்பதைப் போல புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தியும் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் வாய்ப்புள்ள தோழமை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம் ! சென்னை 25112017

தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம் ! சென்னை 25112017

தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம் ! நாள் : 25.11.2017 சனிக் கிழமை நேரம் : காலை 11 மணி இடம் : கிரீன்வேஸ் சாலை, சென்னை. ஆயிரம் விளக்கு, திடீர் நகர் போன்ற பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் ஏழை மக்களை கார்ப்ரெட் நலனுக்காக கட்டாய வெளியேற்றம் செய்யும் தமிழக அரசை கண்டித்து. அனைத்து இயக்க தோழர்களும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்களும் ஒன்றிணைந்து… நாளை 25.11.2017 காலை 11 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள தமிழக முதலமைச்சர் இல்லம் முற்றுகைப் போராட்டம். தொடர்புக்கு : தோழர்.இரா.உமாபதி 7299230363 மாவட்டத் தலைவர் திராவிடர் விடுதலைக்கழகம்.

TNPSC திருத்தத்தை இரத்து செய்யக்கோரி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் பொள்ளாச்சி 24112017

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார், அண்ணா, கலைஞர், MGR , ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த சமூக நீதி கொள்கையை குழி தோண்டி புதைக்கின்ற விதமாக தமிழக அரசு TNPSC தேர்வாணைய சட்டத்தை திருத்தி தமிழகத்தில் பல லட்சம்பேர் வேலைக்காக காத்திருக்கும்போது வெளி மாநிலத்தவருக்கு வேலைகளை அள்ளிக்கொடுக்கும் போக்கை கண்டித்து தமிழக அரசே! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை வழங்கு திருத்திய சட்டத்தை உடனே திரும்பப்பெறக்கோரி *திராவிடர் விடுதலைக் கழகம்* சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… நாள் :-24.11.17 மாலை 4மணி இடம் :-திருவள்ளுவர் திடல் ,பொள்ளாச்சி.

கவின் கல்லூரி மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 22112017

கவின் கல்லூரி மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் ! மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்…….. நாள் : 22.11.2017 புதன்கிழமை நேரம் : காலை 10.30 மணி. இடம் : புதூர் பேருந்து நிலையம், மதுரை கண்டன உரை : பால்.பிரபாகரன், பரப்புரைச் செயலாளர்,தி.வி.க. எபிடன்ஸ் கதிர். எவிடன்ஸ் அமைப்பு பிரதாப் (பிரகாஷின் சகோதரர்) மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.  

அதிகமில்லை கனவான்களே!  தமிழச்சி தங்க பாண்டியன்

அதிகமில்லை கனவான்களே! தமிழச்சி தங்க பாண்டியன்

அவர்கள் ஆதியிலிருந்தே ஐந்தடி தூரம் தள்ளி நின்றவர்கள்தான். எம் நிழல் பட்டால் ஆகாதென விலகிச் சென்றவர்கள் தான். எம் உப்பையும் வியர்வையையும் கண்ணீராக உண்டு கொழுத்தவர்கள் தான். அவர்கள் ஒரு நொடியில் எம் இடுப்பிற்கு இறக்கிய தோள் துண்டை மீண்டும் உயர்த்திப்போட பத்துத் தலைமுறைகளானது எமக்கு. அவர்களுக்குச் சரஸ்வதி கொடுத்த வீணையை விடச் சற்றும் இளைத்ததல்ல எம் பறை என மெய்ப்பிக்க எமது இந்தத் தலைமுறைக்கே வாய்த்திருக்கிறது. தலைமேல் தொங்கும் கத்தியாய் அவர்களது புனிதத்தை எம் இல்லங்களின் வரவேற்பறைகளில் நுழைத்தார்கள். பாத்திருந்தோம். மெதுவாக எமது புத்தகங்களின் பக்கங்களைத் திருடி அவர்களது வரலாற்றைச் சொருகினார்கள். படித்திருந்தோம். சத்தமில்லாமல் இப்போது எம் சமையலறைக்குள் வந்திருக்கிறார்கள். எமது நாக்கின் ருசியை கூர் மழுக்கிடப் புனித நெய்யிட்டு எம் அஞ்சறைப் பெட்டிகளைக் கழுவச் சொல்கிறார்கள். மாமிச ருசியின் குருதி படிந்த எமது ஏப்பத்தில் ‘விடுதலை’யின் வீச்சமடிப்பதாகப் புகார் சொல்கிறார்கள். கவனித்தபடியிருக்கிறோம். புகைபோக்கியின் மேலமர்ந்து மோப்பம் பிடிக்கின்ற அவர்கள்...

ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளா?  – பேரா. அ. மார்க்ஸ்

ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளா? – பேரா. அ. மார்க்ஸ்

“ஆகஸ்ட் 25லிருந்து தினசரி 15,000 முஸ்லிம்கள் மியான்மரிலிருந்து தப்பி ஓடி வரு கின்றனர்” என ஐ.நா. அவையின் மனித உரிமை கவுன்சில்; (UNHRC ) தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதல் பத்து நாள்களில் சுமார் 1,50,000 பேர் தப்பி ஓடி வந்துள்ளனர். சென்ற ஆகஸ்ட் 24 அன்று “அராக்கன் ரோஹிங்யா மீட்புப் படை” (Arakan Rohingya Salva- tion Army – ARSA ) என்னும் தீவிரவாத அமைப்பு மியான்மரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ராகைன் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் முப்பது காவல் நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கியதைச் சாக்காகக் கொண்டு அம்மக்கள் மீதான இன்றைய இராணுவத் தாக்குதல் தொடங்கியது. அராக்கன் படையின் தாக்குதல் மற்றும் எதிர்தாக்குதலில் சுமார் 12 காவலர்களும் 59 தீவிரவாதப் படையினரும்  கொல்லப் பட்டதாகச் சொல்லப்பட்டது. அதை ஒட்டி இராணுவம் ரோஹிங்யா மக்களின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியது. பெரியளவில் முஸ்லிம் கிராமங்கள் தரை மட்டமாக்கப்பட்டன. இராணுவத்தின் தாக்குதலின் விளைவாக...

ஜி.எஸ்.டி. சீரழிவின் துவக்கம் –  பேராசிரியர் ஜெயரஞ்சன்

ஜி.எஸ்.டி. சீரழிவின் துவக்கம் – பேராசிரியர் ஜெயரஞ்சன்

ஒரு பொருளாதார சிக்கலை நோக்கி இந்தியா  இப்போது வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதற்கு ஜி.எஸ்.டியின்  பல தவறான விதிமுறைகள் காரணம் என்பதை பலரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். சமீபத்தில் அதில் ஒரு காரணியை பற்றி மிக விரிவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை உங்களுக்கும் சொல்லலைன்னா எனக்கு தலையே வெடிச்சிரும் என்பதால்…. கடந்த ஜூலை மாத ஜி.எஸ்.டி ரிடர்ன் படி கிட்டத்தட்ட 94000 கோடி ரூபாய் வரியாக வசூலித்திருப்பதாக மார்தட்டிக் கொண்ட நிதி அமைச்சகத்துக்கு அடுத்த சில நாட்களிலேயே அதில் கிட்டத்தட்ட 65000 கோடி ரூபாய் ரீஃபண்ட் ஆக திரும்ப கொடுக்க வேண்டிய தொகை எனவும் அதை எப்போ தருவீர்கள் என வணிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்ததும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. அதனால் அந்த 65000 கோடி ரூபாய்க்கான கணக்குகளை விரிவாக தணிக்கை செய்ய சொல்லி துறை ரீதியான உத்தரவுகள் பறந்து அதன் அடிப்படையில் எல்லா வணிகர் களிடமும் ஆவண பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது....

நாட்டார்  இலக்கியங்களையும் திரிக்கிறது  ஜாதி வெறி பழனி  கோ. முத்துமாணிக்கம்

நாட்டார் இலக்கியங்களையும் திரிக்கிறது ஜாதி வெறி பழனி கோ. முத்துமாணிக்கம்

சாதிமத வெறியைத் தூண்டிவிடும் அரசுகளையும், பதவிக்காக மனிதநேயத்தைப் பலிகொடுப்போரையும் மீறி இனியாவது புதியதோர் உலகம் செய்யப் புறப்பட வேண்டும். சாதியின் பெயரால் மக்களைத் துண்டாடும் சதிகளை முறியடிக்கும் மகத்தான பணி, முற்போக்காளர்களின் முன் நிற்கிறது. “தொழிலாளிகள்லாம் வாங்கப்பா” …இடுகாட்டின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்தது அந்த முதியவரின் குரல். இறந்தவர் ஒருவருடைய உடலைப் புதைத்தபின், வந்த கூட்டம் அந்தக் கிராமத்துச் சலவையாளர் விரித்திருந்த ‘மாத்து’ மேல் (தன்னிடம் சலவைக்கு வந்த சேலைகளைத் திருமணம், பூப்பு நீராட்டு விழா, இறுதிச் சடங்குகளுக்கு வரும் மக்கள் அமர்வதற்காகப் பயன்படுத்தும்போது அவை மாத்தாக மாற்றம் பெறும்) உட்கார்ந்தது. “வேலை செஞ்ச தொழிலாளிகள்லாம் வரிசையா வாங்கப்பா. மயானக் காசை வாங்கிக்குங்க.” ஊருக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் எல்லோருக்கும் காசு வாங்கிக் கொடுப்பதற்காக பெரியவர் முன் நின்று கொண்டிருந்தார். “பாடை காட்டியவங்க வாங்க. இந்தா ஆளுக்கு ஒன்னேகால் ரூபா.  குழி தோண்டனவங்க வாங்க.. இந்தா நாலு பேருக்கு...

‘என்னுடைய வாழ்க்கையை என் பெற்றோர்கள் வாழ நினைத்தால் அது என் வாழ்க்கை அல்ல!” – உடுமலை கவுசல்யா

சங்கரை காதலிச்சு திருமணம் செய்த உடனே ஒரு கனவோட வாழ்க்கைய துவங்கீருப்பீங்க. ஆனா இந்த சமூகம் அந்தக் கனவை சிதைச்சிருச்சு. சங்கர் இல்லாத நாட்கள் எப்படி இருக்கு ? முதலில் அது நடக்கும் போது என்னால் கொஞ்சம் கூட ஏத்துக்க முடில. வாழ்க்கை முழுவதும் கூட இருப்பான் வேற எதுவுமே வேண்டாம்னுதான் எல்லாத்தையும் விட்டுட்டுத் தான் நான் சங்கர் கூட வந்தேன். அப்படி வரும் போது எதுவேணும்னு நெனச்சு வந்தேனோ, அது கடைசி வரைக்கும் கூட இல்லைனு தெரியும் போது சுத்தமா ஏத்துக்கவே முடியல. இதுக்கு முழுக்க முழுக்க காரணம் இந்த சாதீய சமூகம் மட்டும்தான். உங்க பார்வையிலும் பேச்சிலும் ஒரு தன்னம்பிக்கை தெரியுது, இனி வரும் காலத்தை எப்படி எதிர்கொள்ள விரும்பறீங்க? என்னோட நிலைமைக்கு முழுக்க முழுக்க காரணம் ஜாதியம்தான் அதனால் அதனை எதிர்த்து போராடனும் என்னோட நிலைமை வேற யாருக்கும் வரக்கூடாது. அதற்காக இந்த தலைமுறையில் இருக்கும் தாத்தா...

பெரியார் காந்தி நேரடி விவாதம் இந்து மதத்தை மாற்ற முயற்சித்தால் பார்ப்பனர்கள்  உங்களை விட்டு வைக்க மாட்டார்கள் என்று  பெரியார் காந்தியிடம் எச்சரித்தார்.

பெரியார் காந்தி நேரடி விவாதம் இந்து மதத்தை மாற்ற முயற்சித்தால் பார்ப்பனர்கள் உங்களை விட்டு வைக்க மாட்டார்கள் என்று பெரியார் காந்தியிடம் எச்சரித்தார்.

சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்த நேரத்திலும் பெரியாருக்கு காந்தி மீதிருந்த மரியாதையும், கதர் பிரச்சாரத்திலிருந்த நம்பிக்கையும் குறைய வில்லை. அவரைப் பொறுத்தவரை மனதளவில் காங்கிரஸ்காரராகவே இருந்தார். ஆனால் 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியான காந்தியின் உரை ஒன்று, பெரியாரை அதிர்ச்சியடையச் செய்து விட்டது. மைசூரில் காந்தி நிகழ்த்திய அந்த உரையானது பின்வருமாறு இருந்தது: “ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வர்ணத்தார் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்.” “பிராமணனுக்குச் சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறைவேற்றும்போது அவன் உயர்ந்தவனாகிறான். ஜனசேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம்.” “எளியவர்களைப் பாதுகாப்பது சத்திரியனுடைய முக்கிய தர்மம். அந்த தர்மத்தை அவன் செய்யும்போது அவன் மற்றெல் லோரிலும் மேம்பட்டவனாகிறான்.” “இம்மாதிரியே இதர வர்ணத்தார்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களைக் கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்.” “இப்படியிருக்கையில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வருகிறது?...

கடும் சரிவில் இந்திய பொருளாதாரம்: முதலீட்டாளர்கள் ஓட்டம்

கடும் சரிவில் இந்திய பொருளாதாரம்: முதலீட்டாளர்கள் ஓட்டம்

இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்றாண்டு களில் இல்லாத அளவிற்கு, 5.7 சதவிகிதம் என்று வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து  6ஆவது மாதமாக சரிவைக் கண்டுள்ளது. இந்திய பொருளாதாரம் சந்தித்து வரும் நெருக்கடிகளைத் தொடர்ந்து, பங்குச் சந்தை முதலீட்டா ளர்களின் டாலர் முதலீடுகளை திரும்ப எடுத்துக் கொண்டு ஓடுவதும், இறக்குமதி அதிகரிப்பு காரணமாக இந்திய சந்தையில் இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் டாலர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதும் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் வெறும் 5.7 சதவிகிதம் என்ற அளவிற்கு, 3 ஆண்டுகளில் இல்லாத மோசமான இடத்திற்கு சென்றது. இது இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய பதற்றமே, அவர்கள் தங்களின் முதலீடுகளை அவசர அவசரமாக திரும்பப் பெறுவதற்கான காரணமாக அமைந்துள்ளது. புதிய முதலீடுகள் வராத நிலையில், ஏற்கெனவே வந்த...

பெரியார் இயக்கத்தின் மீதான அவதூறுகளைத் தகர்க்கும்  ஆய்வு

பெரியார் இயக்கத்தின் மீதான அவதூறுகளைத் தகர்க்கும் ஆய்வு

“நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்” என்ற பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் எழுதியுள்ள வரலாற்று ஆய்வு நூல், திராவிட இயக்கம் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய வரலாற்றை ஆவணப்படுத்தியிருக்கிறது. 28.12.1937 அன்று அன்றைய தஞ்சை மாவட்ட நீடாமங்கலம் கிராமத்தில், “தென் தஞ்சை ஜில்லா காங்கிரசின் மூன்றாவது அரசியல் மாநாடு” ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் தலைமையில் நடந்த போது, ‘ஜாதி மதபேதமின்றி’ அனைவரும் விருந்துண்ண வரலாம் என்ற ‘சமபந்தி’ உணவுக்கான அழைப்பை ஏற்று மாநாட்டை வேடிக்கைப் பார்க்க வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த கூலித் தொழிலாளர்கள் பந்தியில் சாப்பிட அமர்ந்தனர். மாநாட்டு ஏற்பாட்டாளர்களின் தூண்டுதலின்பேரில் அவர்கள் உணவருந்திக் கொண்டு இருந்தபோதே கடுமையாகத் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். அடுத்த நாள் அவர்கள் வேலை பார்க்கும் பண்ணைகளுக்கும் தகவல் தரப்பட்டு அங்கும் அவர்கள் தாக்கப்பட்டனர். மரத்தில் கட்டி வைத்து அடித்து சாணிப் பாலை வாயில் ஊற்றி, மொட்டை அடித்து, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலமாக அழைத்துப் போய் அவமானப்படுத்தப்பட்டனர்....

நீட் மருத்துவக்  கல்வி  தரத்தை உயர்த்துமா? மருத்துவர் இரா. செந்தில்

நீட் மருத்துவக் கல்வி தரத்தை உயர்த்துமா? மருத்துவர் இரா. செந்தில்

நீட்  தேர்வை நியாயப்படுத்தும் வாதங்களை அழுத்தமாக மறுக்கிறது  இக்கட்டுரை   அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை நியாயப்படுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சி கூறுகின்ற நான்கு அடிப்படைக் காரணங்கள்:- இது தரமான மருத்துவக் கல்விக்கு வழி வகுக்கும். இது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வணிக மயத்தைத் தடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தும். இது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான, தரமான கல்வியை உருவாக்கும் என்பது தான். மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு சம நிலையை ஏற்படுத்தும் இந்த நான்குமே அபத்தமான, உண்மை யில்லாத பொய்ப் பிரச்சாரங்கள். இந்திய மருத்துவக் கல்வியின் தரம் குறைந்ததாக இருக்கிறது என்பதிலும், இந்தியா வில் மருத்துவக் கல்வி இந்தியா முழுமையும் ஒரே சீரானதாக இல்லை என்பதிலும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். உலகம் முழுவதும் மருத்துவக் கல்வி என்பது ‘’மருத்துவப் பயிற்சி’’ என்று அழைக்கப்படு...

பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்தும் பார்ப்பனியம்! – கார்த்திக் ராம் மனோகர்-எஸ். ஆனந்தி

பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்தும் பார்ப்பனியம்! – கார்த்திக் ராம் மனோகர்-எஸ். ஆனந்தி

‘தி ஒயர்’ ஆங்கில இணையதளத்தில் பெரியாரைக் கடுமையாக விமர்சித்து பி.ஏ. கிருஷ்ணன் என்பவர் (இவர் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரால் பெரியார் பார்ப்பனர்களை எதிர்த்த இனவாதி; பொருளாதாரக் கொள்கையில் அவருக்கு தெளிவான பார்வை கிடையாது; அம்பேத்கர் ஆழமான சிந்தனையாளர்; பெரியார் தெருச் சண்டைக்காரர் என்று பெரியாருக்கு எதிராக நஞ்சு கக்கியது அக்கட்டுரை. இதற்கு விரிவான பதிலளித்து ‘தி ஒயர்’ ஏட்டுக்கு பேராசிரியர்கள் ராம் கார்த்திக் மனோகர், பேரா. ஆனந்தி ஆகியோர் எழுதிய கட்டுரை இது. தமிழில் ‘இரா’.   இந்தியாவின் ‘சுதந்திரப்’ போராட் டத்தில் பெரியார் முழுமையான உடன்பாடு  கொள்ள வில்லை என்பதற்கான காரணம் இந்த சுதந்திரத்தால் பயனடையப் போவது யார்? சுதந்திரத்தின் பயன் கிடைக்காமல் விலக்கி வைக்கப்படுவோர் யார்? என்பதுதான். அந்த நிலைப்பாட்டை பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று முத்திரை குத்திவிட முடியாது. இந்து வலதுசாரி சிந்தனையாளர்கள் பெரியார் மீது வெறுப்பைக்...

பெண் போராளிகளின்அறைகூவல்

பெண் போராளிகளின்அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த அக்.7ஆம் தேதி சென்னையில் நடத்திய நிகழ்வு – ஜாதி ஒழிப்பு முயற்சிக்கான புதிய முன்னெடுப்பு என்றே கூற வேண்டும். ஜாதி ஒழிப்புக்கு முன்னுரிமை தந்து எழுதி வரும் பத்திரிகையாளர் ஜெயராணி, ‘கக்கூஸ்’ ஆவணப் படத்தைத் தயாரித்து கையால் மலம் எடுக்கும் அவலத்தை பொது வெளியில் விவாதத்துக்குள்ளாக்கிய திவ்யபாரதி, ஜாதி வெறியர்களின் கொலை வெறிக்கு காதலித்து கைப்பிடித்த காதலரை பறிகொடுத்தும், ஜாதி ஒழிப்புக் களத்தில் அர்ப்பணித்து நிற்கும் உடுமலை கவுசல்யா, கதிராமங்கலம், நெடுவாசலில் மக்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களை எதிர்த்து மக்களிடம் துண்டறிக்கை வழங்கியதற்காக குண்டர் சட்டத்தை சந்தித்த வளர்மதி, ஜாதி கடந்த பொது வாழ்வகத்தை உருவாக்கி ஒடுக்கப்பட்ட மக்களின்  வாழ்வுரிமை அவர்கள் மீதான ஜாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்து தீரத்துடன் போராடி வரும் மக்கள்  மன்றத் தோழர் மகேசு, பெண்கள் சந்திப்பு, குழந்தைகள் பழகு முகாம் என்று ஓயாது பெரியாரியலைப் பரப்பி வரும் ஆசிரியர் சிவகாமி...

புதிய இந்தியா…? – கவிதை பழநி பாரதி

புதிய இந்தியா…? – கவிதை பழநி பாரதி

  விவசாயிகளுக்கு வாய்க்கரிசி போடுவதுதான் புதிய இந்தியா   நெசவாளர்களுக்கு சவத்துணி நெய்வதுதான் புதிய இந்தியா   சில்லறை வணிகர்களுக்கு நெற்றிக்காசு வைப்பதுதான் புதிய இந்தியா   மாட்டுக்கறி உண்பவரை கொன்று கொன்று மனிதக்கறி உண்பதுதான் புதிய இந்தியா   இல்லாதவனின் கோவணத்தை பிடுங்கி இருக்கிறவனுக்கு கம்பளம் விரிப்பதுதான் புதிய இந்தியா   மருத்துவ மனைகளில் மழலைகளின் மூச்சறுத்து வீடுகளில் ‘கிருஷ்ண பாதம்’ வரைவதுதான் புதிய இந்தியா   மாநில கல்வி உரிமை பறித்து சமூகநீதி புத்தகம் கிழித்து உலக மூலதனத்துக்கு விசிறி விடுவதுதான் புதிய இந்தியா   பெண்களின் தீட்டுத்துணிக்கும் வரி விதித்து பத்து லட்சம் ரூபாய் ‘கோட்டு’ அணிந்து சுதந்திரக்கொடி ஏற்றுவதுதான் புதிய இந்தியா   செத்துச் செத்துப் பிறக்கிறது புதிய இந்தியா பிறந்து பிறந்து சாகிறது புதிய இந்தியா.   நிமிர்வோம் செப்டம்பர் 2017 இதழ்

நடிகவேளின் நாடகப் புரட்சி சரோன்

நடிகவேளின் நாடகப் புரட்சி சரோன்

ஒரு ஒத்த மாட்டு கூண்டு வண்டி சலங்கை ஒலி கலகலக்க தெருக்களெங்கும் ஊர்ந்தது. பம்பை முடி வளர்த்த மீசை மழித்த நாடகக் கலைஞர்கள் வண்ண துண்டறிக்கைகளை மக்களின் கைகளிலும் வீடுகளிலும் கொடுத்து அன்று மாலையில் நடைபெற இருந்த எம்.ஆர்.ராதாவின் நாடகத்திற்கு அழைத்தபடி சுற்றி திரிந்துவிட்டு நாடகக் கொட்டகைக்கு திரும்பினார்கள். இது நடந்து கொஞ்ச நேரத்திற்கெல்லாம்… “பொதுமக்களுக்கு காவல் துறையின் ஒரு முக்கிய அறிவிப்பு.. இன்று மாலையில் நடைபெறவிருந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகம் நடைப்பெறாது. ஆகவே யாரும் நாடகம் பார்க்க செல்ல வேண்டாம் என்று காவல்துறையின் சார்பில் தெரிவிக்கிறோம். காவல்துறை வாகனங்கள் கும்பகோணம் ஊரின் தெருக்களிலும் சுற்று வட்டார கிராமங்களிலும் புழுதியைக் கிளப்பி குறுக்கும் நெடுக்குமாக ஓடி கிராமபோன் ஒலிப் பெருக்கியில் அறிவித்தபடி இருந்தது. அதே நேரத்தில் மூப்பனார் தோட்டம் எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நாடகக் கொட்டகையில் வழக்கத்திற்கு மாறாக முற்பகல் முதலே பாடல்கள் ஒலித்தன. இரண்டு மூன்று பாடல்களுக்கு ஒருமுறை இடைஇடையே...

நீதிமன்றத்திலும் தமிழ்’ வேண்டும் –  பெரியார்

நீதிமன்றத்திலும் தமிழ்’ வேண்டும் – பெரியார்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடக்கும் சூழலில் இந்த கருத்தை ஆதரித்து பெரியார் 1956இல் எழுதிய தலையங்கம். முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள் நேற்று மாலை சட்டக் கல்லூரித் தமிழ் இலக்கிய சங்கத்தை திறந்து வைத்துப் பேசுகையில், தமிழ்நாட்டின் நீதி மன்றங்களிலும் தமிழிலேயே நடவடிக்கை நடக்கப் போகிறது, இக்கல்லூரி மாணவர்கள் இப்போதே தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார். மகிழ்ச்சிக்குரிய செய்தி இது. வைத்தியம், எஞ்சினியரிங் போன்ற விஞ்ஞானத் துறைகளில் தமிழ் உடனடியாக நுழைய முடியாவிட்டாலும் சட்டத்துறையிலாவது நுழைவது எளிதும், அவசரமும் ஆகும். ஏனெனில், சட்டமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடக்குமானால், ஏழை எளியவர்களில் பலர் இன்றைய பட்டதாரி வக்கீல்களைக் காட்டிலும் பல மடங்கு திறமையாக சட்ட நுணுக்கங்களை எடுத்துக்காட்டி வாதிடுவர் என்பதில் அய்யமில்லை. இன்றைய வக்கீல் உலகம் கொழுத்த பணம் சம்பாதிப்பதற்குக் காரணம், சட்டப் புத்தகங்கள் இங்கிலீஷில் இருக்கின்ற ஒரே காரணம் தவிர வேறல்ல. இவைகளைத் தமிழில்...

‘பராசக்தி’க்கு எதிராக வந்த ‘அவ்வையார்’ கலைஞரின் ‘பராசக்தி’ உருவாக்கிய புயல்-3 எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழில் : சுப. குணராஜன்

‘பராசக்தி’க்கு எதிராக வந்த ‘அவ்வையார்’ கலைஞரின் ‘பராசக்தி’ உருவாக்கிய புயல்-3 எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழில் : சுப. குணராஜன்

பராசக்தி திரைப்படம் வெளியாகிப் பத்து நாள்களுக்குள், சென்னை மாகாண அரசின் உள்துறை, இத்திரைபடத்தைச் சிக்கலுக்கு உள்ளாக்கும் வழிமுறையைத் தேடத் தொடங்கியது. இதனைக் கட்டுப்பாட்டுடன் தொடர்ந்த மனிதர் உள்துறைச் செயலாளராகிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஓ. புல்லாரெட்டி ஆவார். அக்டோபர் 27ஆம் தேதியன்று. சென்னைக் காவல்துறை ஆணையர் ஜெ.தேவசகாயம் அவர்களிடம், ஒரு உள்துறை அதிகாரியைத் திரைப்படத்தைப் பார்க்கும்படி செய்து, அதன் உள்ளடக்கத்தையும், அதில் ஏதேனும் ஆட்சேபகரமானதாக உள்ளதா என்று அறிந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்கச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பராசக்தி திரைப்படத்தைப் பார்த்த சென்னை காவல்துறை உளவுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரியின் விரிவான அறிக்கை, அப்படத்திற்கு ஆதரவாக இருந்தது. அவரது அரசியல் நிலைப்பாடு தி.மு.க. சார்பானதாக இருந்திருந்தால்கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. திரைப்படம் குறித்த தன்னுடைய கருத்துகளை மறைக்காது பதிவு செய்திருந்தார். அவரது அறிக்கையில், ‘திரைப்படத்திற்கான வசனங்கள், திராவிட முன்னேற்றக்கழகத்தின் பிரபல தலைவர்களில் ஒருவராக மு.கருணாநிதி அவர்களால், வலிமையாக எழுதப்பட்டுள்ளது. இப்படம் கையில் குழந்தையுடன் இருக்கும் ஒரு இளம்விதவை...

தமிழ்நாடு பெயர்  சூட்டிய வரலாறு

தமிழ்நாடு பெயர் சூட்டிய வரலாறு

சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ் நாடு’ என்று பெயர் சூட்டப்பட்ட சுருக்கமான வரலாற்றுப் பதிவு இது. அண்ணாவின் பிறந்த நாளையொட்டி (செப்.15) அவரது வரலாற்றுச் சாதனையை ‘நிமிர்வோம்’ பதிவு  செய்கிறது. ‘திராவிட கட்சிகள்’ தமிழருக்கு துரோகம் இழைத்து விட்டதாகப் பேசுவோரும் இந்த வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.   அண்ணா தலைமையில் 15 பேர் தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் களாக மக்களால் தேர்வு செய்யப்பட்டு, முதன் முறையாக 1957 இல் தி.மு.க. சட்டமன்றம் சென்றது. சட்டமன்ற திமுக தலைவராக அண்ணா அவர்களும், துணைத் தலைவராக க.அன்பழகன், கொறாடாவாக கலைஞர் மு.கருணாநிதி நியமிக்கப்பட்டனர். பேரவையின் முதல் கூட்டத்திலேயே ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு க.அன்பழகன்அவர்கள் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அத்திருத்தத்தில் “இம்மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’என்ற பெயர் மாற்றம் செய்யப் படாதது வருத்தத்திற்குரியது” என மொழிந்தார். விவாதத்தில் பல உறுப்பினர்கள் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயரிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அண்ணா அவர்கள் பேசும்போது, “திராவிட...

கருநாடகம் -தென்னகத்தின் குஜராத் கவுரி லங்கேஷ்

கருநாடகம் -தென்னகத்தின் குஜராத் கவுரி லங்கேஷ்

மதவெறியின் துப்பாக்கிக் குண்டுக்கு பெங்களூருவில் பலியான கவுரி லங்கேஷ் (இராவணன்) இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக 2008இல் எழுதிய கட்டுரை: சமீபத்தில் ஹூப்ளி, ஹொன்னள்ளி ஆகிய இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டதாக மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் இஸ்லாமியர்களாக இருந்ததால், அடுத்த நாளே, காவல்துறை வட்டாரங்கள் அவர்களைப் பற்றிய செய்தியைக் கசியவிட்டது. அதாவது அவர்கள் மூவரும் நாட்டின் வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறை சந்தேகிப்பதாக அந்த செய்தி சொன்னது. இந்த ஒரு துணுக்கு போதுமானதாக இருந்தது, ஊடகங்கள் தங்களுடைய சந்தேகக் கதைகளை புனைய. அனைத்து அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் விதிவிலக்கு இல்லாமல் தாங்கள்தான் முதல்முதலாக இந்த அதிர்ச்சிக்குரிய செய்தியை வெளியிடுவதாக பறைசாற்றிக்கொண்டன. அனைத்து செய்தியாளர்களும் தங்களுடைய கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் விதமாக, பெயர் சொல்ல விரும்பாத நபர் சொன்னதாகவோ, காவல்துறையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்னதாகவோ, காவல்துறையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் சொன்னதாகவோ, கர்நாடகத்தின் அரசு செயலகம்...

இந்தியாவில் ஒரே ஒருவர் தான் பெரியார்  பேராசிரியர் ந. முத்துமோகன்

இந்தியாவில் ஒரே ஒருவர் தான் பெரியார் பேராசிரியர் ந. முத்துமோகன்

“இந்த சந்தர்ப்பத்திற்காகத்தான் நாம் இத்தனை காலம் காத்துக் கொண் டிருந்தோம் என்று தோன்றுகிறது. இந்தப் போரில் நாம் அழிக்கப்படுவோம் அல்லது விடுதலை பெறுவோம். இரண்டுக்கும் தயாராகுவோம். வேறு குறுக்கு வழி இருப்பதாகத் தெரியவில்லை.” மீண்டும் பெரியார் குறித்து பேசத் தொடங்கியுள்ளோம், யோசிக்கத் தொடங்கி யுள்ளோம். இந்துத்துவத்தின் மீள் வருகை பெரியாரின் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. இடதுசாரி, சனநாயக மற்றும் சமயச் சார்பற்ற சக்திகள் பலவீனமடைந்தால் இந்தியாவில் மீண்டும் ‘பிராமணிய’ ஒழுங்கு முன்னுக்கு வந்துவிடும் என்று பெரியார் திரும்ப திரும்ப எச்சரித்து வந்தார். அவர் சொல்லி வந்ததைவிட இன்னும் அதிகளவு அபாயத்துடன் இந்துத்துவம் இப்போது மீண்டு வந்துள்ளது. இந்துத்துவ சக்திகள் சர்வதேச அரசியலில் கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கும் வேலைத் திட்டத்துடன் இப்போது தொழில்பட்டு வருகிறது. இந்துத்துவம் அதற்கே உரிய முறையில் உலகமயமாகி வருகிறது. முன்பு ஒருமுறை அது உலகமயமாகிய போது பாசிசத்தைப் பிறப்பித்தது. இது இரண்டாவது முறை. பெரியார் இந்தியாவில் ஒரே ஒருவர்தான். நமது...

“பெரியார் பங்களிப்பை எந்த விமர்சனத்தாலும் பிடுங்க முடியாது”   பேராசிரியர் தொ. பரமசிவன்

“பெரியார் பங்களிப்பை எந்த விமர்சனத்தாலும் பிடுங்க முடியாது” பேராசிரியர் தொ. பரமசிவன்

தமிழ் தேசியம் என்று நாம் இன்றைக்குச் சொல்ல விரும்புகிறோம், சனநாயக நாடுகளிலே ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தின் விளைவாக தேசிய இனம் என்ற எண்ணம் பிறந்தது. தேசிய இன சிந்தனையே 200 ஆண்டுகளுக்குள் என்று சொல்கிறார்கள். இல்லை அதற்கு முன்னாலேயே அதற்கான குறுவித்துக்கள் தமிழ் மண்ணிலே புதைந்து கிடந்தது. மூன்று நாள் மழை பெய்தால் நான்காம் நாள் புல் தலை நீட்டுகிறது. ஏனென்றால் வித்து மண்ணில் கிடந்திருக்கிறது. தமிழ் மரபில் அந்த குறுவித்துக்கள் உண்டு. ஏனென்றால் இங்கு சேரநாடு, சோழ நாடு, பாண்டிய நாடு இப்படி இருந்தது. திருநெல்வேலி கீழ் வேம்பநாடு. அந்தப்  பக்கம் போனால் வல்லநாடு. சுத்தமல்லி பக்கம் போனால் மேல் வேம்பநாடு. பாளையம்கோட்டை கீழ் களகொற்றம். இப்படி நாடுகள்  நாடுகளா  இருந்ததினால் இளங்கோவடிகள் தமிழ்நாடு என்ற சொல்லை முதன்முதலில் பயன் படுத்தினார். சேர நாடு இல்ல, சோழ நாடு இல்ல, பாண்டிய நாடு இல்ல, தமிழ்நாடுன்னு சொல்லு. இதுதான் முதல்...

‘பெரியார் மண்’

‘பெரியார் மண்’

தமிழ்நாட்டின் அரசியல் சமுதாயக் களம் பெரியார் பாதையை நோக்கி குவிந்து வருகிறது. ஊடக விவாதங்கள் ஆனாலும், பொது மேடைகள் ஆனாலும் உச்சரிக்கப்படும் சொற்றொடர் “இது பெரியார் மண்” என்பதாக மாறி விட்டது. ‘பெரியார் மண்’ என்று பெருமையோடு சமுதாய எதிரிகளிடம் மார்தட்டி தன்மானத் தமிழர்கள் கூறும் நிலையை உருவாக்கியதற்கு பெரியார் தந்த விலை சாதாரணமானதல்ல. தமிழகத்தின் ‘தனித்துவத்தை’ உருவாக்குவதற்கு பெரியாரின் தனித்துவமான போராட்டப் பாதைகளையும் தனித்துவமான சிந்தனைகளையும் இனமானத்துக்காக தன்மானத்தையே பலியிட்ட தியாகங்களையும் இந்த மண்ணின் உரமாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார். ‘மக்கள் மனம் புண்படுமே; ஏற்க மாட்டார்களே” என்பது பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் தனக்கு சரியென்றுபட்டதை மக்களிடம் கூறியே தீரவேண்டும் என்ற மனத் திடம் அவரது முதல் வலிமை. எதைச் சொன்னால் மக்களை தன் பக்கம் ஈர்க்க முடியும் என்பதை அறவே ஒதுக்கி விட்டு, அதனால் கிடைக்கும் புகழ் மயக்கத்திலிருந்து முழுமையாக தன்னை விடுவித்துக் கொண்டது. பெரியாரின் இரண்டாவது மிகப் பெரும் வலிமை...

கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷின் இல்லத்தில் கழகத் தலைவர் 09112017

சில நாட்களுக்கு முன்னர், தனது துறைத் தலைவரின் ஜாதி, மத வெறுப்புப் பாகுபாட்டு நடவடிக்கைகளால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட சென்னை கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷின் இல்லத்துக்கு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எவிடென்ஸ் கதிர், வேலூர் ஆவணப்பட இயக்குநர் பாலா, குடியாத்தம் சிவா,கழகத்  தோழர்கள் ஆகியோருடன் சென்று, மாணவரின் குடும்பத்தினரை சந்தித்தார். கல்லூரியில் துறைத் தலைவராய் இருந்த இரவிக்குமார் என்பவர், சிறந்த களைஞனாயும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாய் சிறந்த மாணவருக்கான விருதினைப் பெற்றுவந்த மாணவர் பிரகாஷை, அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்பதையும், பிறப்பால் இந்துவான மாணவர் கிருத்துவ மாதா கோவிலூக்கு சென்று வழிபடுகிறார் என்பதையும் அறிந்தவுடன் தொடர்ச்சியாக கேவலமாக வகுப்பறையில் மிகவும் இழிவுபடுத்திவந்துள்ளார். இதனைப் பலமுறை கல்லூரி முதலவரிம் தனியேயும், மாணவர்களுடனும், பெற்றோரை உடன் அழைத்துசென்றும் புகார் கூஊரியும் கல்லூரி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொடுமைப்படுத்துதல் தான் அதிகரித்துள்ளது. அதனால் மனமுடைந்த மாணவர் பிரகாஷ், வீடியோவிலுய்ம், கடிதத்திலும், வாட்ஸ் அப்...

மக்கள் தளபதி பள்ளீகொண்டா கிருஷ்ணசாமி இல்லத்திற்கு கழக தலைவர் சந்திப்பு 09112017

9-11-2017 அன்று காலை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வேலூர் மாவட்ட கழகச் செயலர் குடியாத்தம் சிவா, கழகத் தோழர்களுடன், வீரியமிக்க தலித் விடுதலை போராளியாய் விளங்கியவரும் , மக்களால் தளபதி என அன்போடு அழைக்கப்பட்டவருமான பள்ளீகொண்டா  கிருஷ்ணசாமி அவர்கள் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அடுத்து அவரால் நிறுவப்பட்டதும், அவர் நடத்திய 150 இரவுப் பாடசாலைகளில் ஒன்றானதும், தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசுத் தேர்வாணையத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிப் பள்ளீயாய் அவரது பெயரன் தோழர் மகேஷ் அவர்களால் தொடர்ந்து இயங்கிவரும்  பவுத்த ஆராய்ச்சி மையத்துக்கும் சென்று பார்த்ததோடு, சமூக அக்கறையோடு இயங்கிவரும் பாங்கினை வியந்து பாராட்டினார். மேலும் படங்களுக்கு 

தோழர் சுகுமார் படத்திறப்பு விழா 27112017 மேட்டூர்

மேட்டூர் R.S. பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் சுகுமார் அவர்கள் 13.11.2017 மாலை 05.30 மணிக்கு உடல் நலக்குறைவின் காரணமாக முடிவெய்தினார் தோழரின் இறுதி நிகழ்வு 14.11.2017 மாலை 3.00 மணிக்கு மேட்டூர் R.S.பகுதியில் உள்ள N.S.K நகரில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது. தோழரின் படத்திறப்பு 27112017 அன்று அவரின் இல்லத்தில் கழகத் தலைவரால் திறந்து வைக்கப்படும்

இணையதள பயன்பாட்டாளர்கள் கலந்துரையாடல்

இணையதள பயன்பாட்டாளர்கள் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்டத்தின் இணையதள பயன் பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 14.10.2017மாலை 6 மணியளவில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கழக இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், தோழர்களிடம் இணைய தளத்தின் பயன்கள்,  தோழர்களின் சந்தேகங்களுக்கு விரிவான விளக்கத்தை யும், திவிக இணையதளத்தின் முழு பயன் பாடுகள் குறித்தும் விளக்கி கூறினார். பெரியார் முழக்கம் 16112017 இதழ்

சித்தோட்டில் பெரியார் பிறந்த நாள் கூட்டம்

சித்தோட்டில் பெரியார் பிறந்த நாள் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்டம், சித்தோடு கிளை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 01.10.2017 மாலை 6 மணிக்கு சித்தோடு சாணார்பாளையத்தில் பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் விழா. பிரபாகரன் தலைமையில், யாழ் எழிலன் முன்னிலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே நிகழ்வைத் தொடர்ந்து சித்தோடு முருகேசன் பகுத்தறிவு பாடல்கள் பாடினார். இறுதியாக தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரை நிகழ்த்தினார். கமலக் கண்ணன் நன்றி கூறினார். சித்தோடு பிரபு, கதிர், நடராஜன், சத்தியராஜ், ராஜேஷ், சவுந்தர், ஆசீர்வாதம், ரங்கம்பாளையம் விஜயரத்தினம், கிருஷ்ணன், மணி மேகலை, மகிழன், மதி , காவலாண்டியூர் சந்தோஷ், சதீஸ், ரமேஸ்,  மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியன், கோபி தியாகு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெரியார் முழக்கம் 16112017 இதழ்

தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பொறியாளர் அம்புரோஸ் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பொறியாளர்.அம்புரோஸ், சாலை விபத்தில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மரணம் அடைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரின் உடல் அடக்கம் அக்டோபர் 27ஆம் தேதி காலை புதுக்கோட்டையிலுள்ள அவர் இல்லம் அருகில் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் தலைமைக் கழக சார்பில் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், சூலூர் பன்னீர் செல்வம், குமரி மாவட்ட செயலாளர் தமிழ்மதி, மாவட்ட அமைப்பாளர் நீதியரசர், முன்னாள் மாவட்ட தலைவர் சூசையப்பா, திருநெல்வேலி மாவட்ட தலைவர் பால்வண்ணன், மாவட்ட அமைப்பாளர் அன்பரசு, தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப் பாளர் தமிழ்செல்வம், கீழப்பாவூர் ஒன்றியத் தலைவர் மாசிலாமணி, செயலாளர் சுப்பையா, பொருளாளர் சங்கர், ஆதி தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி செயலாளர் அருந்ததியராசு, நெல்லை கலைக் கண்ணன், விடுதலை சிறுத்தைகள் தென்மண்டல செயலாளர் சே.சு.தமிழ் இனியன்,...

பேரா. நன்னன் ‘நிமிர்வோம்’ இதழுக்கு வழங்கிய இறுதி பேட்டி

பேரா. நன்னன் ‘நிமிர்வோம்’ இதழுக்கு வழங்கிய இறுதி பேட்டி

“முதுமை தளர்வுடன் இருந்தாலும் மூளை 24 மணி நேரமும் பெரியாரையும் மொழியையும் அசை போட்டே இருக்கிறது”   பெரியார் பேருரையாளர் பேராசிரியர் நன்னன் தனது 94ஆம்அகவையில் கடந்த 7.11.2017 அன்று சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். அவரது உடலில் கருஞ்சட்டை அணிவிக்கப்பட்டிருந்தது. கழக சார்பில் கழகப் பொறுப்பாளர்கள் தபசி குமரன், அன்பு தனசேகர், வேழவேந்தன், உமாபதி, அய்யனார், செந்தில்குமார், துரைராசு, ராஜூ, குகன் உள்ளிட்ட தோழர்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். கழகத்தின் ‘நிமிர்வோம்’ மாத இதழ் கடந்த பிப்ரவரி மாதம் அவரது நேர்காணலை பதிவு செய்தது. இதுவே அவரது இறுதி நேர்காணலாகவும் அமைந்துவிட்டது. பேராசிரியர் நன்னன் அவர்களின் முழுமையான ‘தன் வரலாறாக’ வெளி வந்திருந்த நேர்காணலிலிருந்து சில பகுதிகளை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இங்கே பதிவு செய்கிறது. பெரியாருடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது? அன்றைக்கு மாயவரம் (மயிலாடுதுறை) அருகே உள்ள வடகரை எனும் முஸ்லிம்கள் அதிகம்...

ஆதித் தமிழர் பேரவை நடத்திய தீபாவளி எதிர்ப்பு கருத்தரங்கம்

தீபாவளி பண்டிகை என்பது தமிழர்களின் துக்கநாள் என்று அறிவித்த துணிவு , தந்தை பெரியார் ஒருவருக்கே இருந்தது, அதை பின்பற்றி ஆதித்தமிழர் பேரவை கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளியை புறக்கணித்து மக்களிடையே தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஆதரவாகக் குரல் தந்த ஒத்த கருத்துடைய ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து கருத்தரங்கம் ஒன்றை ஆதித் தமிழர் பேரவை ஈரோட்டில் அக்.18ஆம் தேதி ‘தீபாவளி’ நாளில் நடத்தியது. ‘தீபாவளி’யை தமிழர்கள் புறக்கணிக்க இந்த கருத்தரங்கம் வேண்டுகோள் விடுத்தது. சாதிவெறி, மதவெறி, ஆதிக்க தலித் வெறி, அடிப்படை மதவெறி, ஆணவப் படுகொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள், கருத்துரிமை பறிப்பு, கல்வி உரிமை சிதைவு, மாநில உரிமை மறுப்பு என நீளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தால் நாட்டை மீண்டும் மனுவின் கொடுங்கோலுக்கு அழைத்துச் சென்று, ஒரே நாடு, ஒரே மொழி, ஒற்றை கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை நடைமுறைப்படுத்தி, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய ஒன்றியத்தின் அரசியல்...

இந்து மக்கள் கட்சியின் ‘நேர்மை’

இந்து மக்கள் கட்சியின் ‘நேர்மை’

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). தொழில் அதிபரான இவர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், “ இந்து மக்கள் கட்சி (அர்ஜூன் சம்பத் பிரிவு) மாநில இளைஞர் அணி செயலாளர் பாலச்சந்தர் (27) என்பவர் தன்னை மிரட்டி அடிக்கடி பணம் கேட்டு தொல்லைக் கொடுப்பதாகவும், தனது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய அதிகாரி சகாதேவன் வழக்குப் பதிவுசெய்து விசாரித்தார். பாலசந்தர் கைது செய்யப்பட்டார். காவல் நிலைய விசாரணை யில், பாலசந்தர் ஏற்கனவே பல பொய் புகார்கள் கொடுத்து காவல் நிலையத்துக்கு தொல்லை கொடுத்தாக தெரிய வந்தது. இந்து மக்கள் மக்கள் கட்சி அலுவலகம் முன்பு மாட்டு தலையைப் போட்டு நாடகம் ஆடி யதும் இவர்தான் என்று கண்டுபிடிக்கப் பட்டது. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பாலசந்தர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல்...

பெரியார் தொண்டரின் நேர்மை

தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியில் உள்ள 5.75 இலட்சம் பணத்தை இரயில்வே நிர்வாகத் திடம் பொய்யாமொழி என்ற கூலித் தொழிலாளி ஒப்படைத்தார். அவரின் செயலை இரயில்வே நிர்வாகம் பாராட்டியிருக்கிறது. சேலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிக்குமார். இவர் கடந்த 1ஆம் தேதி சேலம் விரைவு இரயிலில் சென்னை வந்தபோது அவர் கொண்டுவந்த பையில் 10.75 இலட்சம் ரூபாயை பையுடன் தவறவிட்டார். சென்னை எழும்பூர் சென்றதும் கொண்டுவந்த பெட்டியில் பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து எழும்பூர் இரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் இரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் உள்ள பணத்தை எடுத்த பொய்யாமொழி போலீஸில் ஒப்படைத்தார். 10.75 இலட்சரூபாயில் 5.75 இலட்சம் மட்டுமே இருந்த காரணத்தால், இரயில்வே போலீஸார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அப்போது வேறு ஒரு மர்மநபர் ஒருவர்...

தலையங்கம் உச்சநீதிமன்றத்தின் ‘அதிகார நீதி’

தலையங்கம் உச்சநீதிமன்றத்தின் ‘அதிகார நீதி’

இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையாக உச்சநீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்ட சூழல் அண்மைக் காலமாக உருவாகியுள்ளது. அதனால் உச்சநீதிமன்றம் விவாதங்களுக்கு அப்பாற்பட்டநேர்மையான அமைப்பாக செயல்பட வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. ஆனால் என்ன நடக்கிறது? இப்போது உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள்மீது இலஞ்சப் புகார் குற்றச் சாட்டுகள் வரத் தொடங்கியிருக்கின்றன. ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த ஒரு கல்வி அறக்கட்டளை – மருத்துவக் கல்லூரி தொடங்க மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கேட்டது. மருத்துவக் கவுன்சில் மறுக்கவே நீதிமன்றத்தை நாடியது அந்த அறக்கட்டளை. நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற நீதிபதிகளுக்கு இலஞ்சம் பெற்றுத் தரும் விஸ்வநாத் அகர்வால் என்ற இடைத்தரகரை நாடியது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தருவதாக உறுதி கூறிய அந்த தரகர், அதற்கு நீதிபதிகளுக்கு கொடுப்பதாகக் கூறி பெரும் தொகையை இலஞ்சமாகப் பெற்றார். இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி பெரும் தொகை இலஞ்சமாக பெற்றதை உறுதி...

ஒரு முதல்வருக்கான எல்லைக்குள் கலைஞர் போராடினார்

தமிழகத்தில் சாதி – மதப் பதற்றமற்ற சமூகச் சூழலை, சமூக அமைதியை உருவாக்குவதில் தொடர்ந்து பங்காற்றி வரும் பெரியாரிய அமைப்புகளைத் தேவைப்படும்போதெல்லாம் நேரடியாகவே பயன்படுத்திக் கொள்வது கலைஞரின் இயல்பு. இந்த உறவு தமிழகத்தின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் எப்படிப் பங்களிக்கிறது என்று விவரித்தார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. ‘தமிழ் இந்து’வின் ‘தமிழ் திசை’ குழுமம் வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மலருக்கு அளித்த பேட்டி. பெரியாரிய அமைப்புகளைத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்கள் எப்படி பயன்படுத்திக் கொண்டார்கள்? நேரடியான உறவு என்பதைக் காட்டிலும், கொள்கை அடிப்படையிலான பரஸ்பரமரியாதை சார்ந்த உறவு என்று இதைக் குறிப்பிடலாம். ஒரு இடத்தில் பொருளாதார முன்னேற்றம் நடக்க வேண்டும், தொழில் வளர்ச்சி வேண்டும் என்றால், முதலில் அங்கு சமூக நல்லிணக்கம் வேண்டும். அதேபோல், சமூகத்தில் புரட்சிகரமான செயல் திட்டங்களை அரசாங்கம் கொண்டுவர முனையும்போது அதற்கேற்ற கருத்துச் சூழல் சமூகத்தில் உருவாகியிருக்க வேண்டும். திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்கள்...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி பெரியார் கனவை நினைவாக்கினோம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதம்

கேரள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் பெரியாரின் கனவு நிறைவேறியிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமையுடன் கூறினார். மதுரையில் 3 நாட்கள் நடந்த தலித் ஒடுக்குமுறை எதிர்ப்பு முன்னணியின் அகில இந்திய மாநாட்டின் நிறைவாக நவம்பர் 6ஆம் தேதி எழுச்சிமிகு பேரணி – பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற கேரள முதல்வர் பேசியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதிய ரீதியிலான ஒடுக்கு முறை தலித்துகளுக்கு எதிராக நடந்து வருகிறது. பண்டைக்காலம் முதல் பல்வேறு வடிவங்களில் நடந்துவரும் ஒடுக்குமுறையை சகித்துக் கொண்டிருக்க முடியாது. சாதியத்தை தூக்கிப் பிடிக்கும் ஆர்எஸ்எஸ் தலைமையின் கீழ் உள்ள பாஜக அரசு இந்தஒடுக்குமுறை நீடிக்க வேண்டும் என விரும்புகிறது. அதன் காரணமாக நாடு முழுவதும் இந்தஒடுக்குமுறை தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தலித் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்பியவர்கள் உண்டு. ஆனால் அவர்களால் தலித்மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற முடியவில்லை. ஆர்எஸ்எஸ் தலைமை...

எச்சரிக்கின்றன ஆய்வுகள் மரபணு நோய்களை உருவாக்குகின்றன ஒரே ஜாதித் திருமணங்கள்

எச்சரிக்கின்றன ஆய்வுகள் மரபணு நோய்களை உருவாக்குகின்றன ஒரே ஜாதித் திருமணங்கள்

சமீபத்தில் இந்திய மற்றும் அமெரிக்க மரபணு ஆய்வாளர்கள் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகச் சொந்த சாதிக்குள்ளே திருமணம் செய்யும் போக்கின் விளைவாகப் பல சமூகங்களிடையே பல்வேறு மரபணு பரம்பரை நோய்கள் பல்கிப் பெருகியுள்ளன என்று அந்த ஆய்வு எச்சரிக்கை செய்கிறது. குறிப்பிட்ட சாதிச் சமூகத்தில் மரபணு சார்ந்த பரம்பரை நோய்கள் இயல்பைவிட கூடுதலாக இருக்கின்றன எனவும் உள்ளபடியே அகமண உறவு காரணமாகவே இவை உரு வாயின எனவும் ஹைதராபாதில் உள்ள சி.சி.எம்.பி. ஆய்வு நிறுவனத்தைச் சார்ந்த ஆய்வளர்கள் நிறுவியுள்ளனர். சாதி என்பது சமூக நோய் மட்டுமல்ல சமூகத்தில் மரபணு நோயையும் கூடுதலாக்கிப் பொதுச் சுகாதார ஆபத்தையும் ஏற்படுத்துகிறது என்று சுட்டு கிறது இந்த ஆய்வு. நெருங்கிய உறவு முறைக்குள் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் மரபியல் நோய் ஆபத்து குறித்து நாம் ஏற்கெனவே அறிவோம். இந்த ஆய்வு, சாதிக்குள் நடக்கும் அகமண திருமணமும் இவ்வாறே மரபியல் நோய்களை...

‘செயற்கை அறிவூட்டல்’ எனும் அறிவியல் புரட்சி

‘செயற்கை அறிவூட்டல்’ எனும் அறிவியல் புரட்சி

இயந்திரங்களுக்கு ஊட்டப்படும் செயற்கையான அறிவானது, மனிதர்களே இனி இந்த வேலைகளுக்குத் தேவையில்லை என்ற அளவுக்குச் செயல்படும் நிலையை ‘சூப்பர்-இன்டலிஜென்ஸ்’ எனலாம். பல ஆண்டுகளாக விவாதிக்கப்படும் இந்தக் கருப்பொருள், சமீபத்தில் சமூக வலைதளத்தில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க், ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் இடையில் சச்சரவை ஏற்படுத்தி விட்டது. “செயற்கை அறிவாற்றலை உருவாக்குவதில் முன்னேற்றம் ஏற்படுவது நல்லது, அது கார் விபத்துகளையும், நோய் ஏற்படுவதையும் தடுத்துவிடும்” என்றார் ஸக்கர்பெர்க். “செயற்கை அறிவாற்றலை முறைப்படுத்தத் தவறினால் பூமியை இயந்திரங்களே தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளக்கூடிய அழிவுக் காலம் ஆரம்பித்து விடலாம்” என்று மஸ்க் எச்சரித்தார். செயற்கை அறிவு தொடர்பாக அறிவியல் புனை கதைகளில் சாத்தியம் இருப்பதாக எழுதப்பட்டதைத் தவிர, இந்த விவாதத்துக்கு முன்னோடியாக வரலாறு ஏதும் உண்டா? சிலிக்கான் பள்ளத்தாக்கு ஜாம்பவான்களான மஸ்க் முதல் பில் கேட்ஸ் மற்றும் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் தத்துவ...

சென்னை தோழர்களின் இரண்டாம் கட்ட பரப்புரை: மக்கள் பேராதரவு

சென்னை தோழர்களின் இரண்டாம் கட்ட பரப்புரை: மக்கள் பேராதரவு

இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித் தன்மை காப்போம்; சமூக நீதி சமத்துவப் பரப்புரைப் பயணம், சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 23.9.2017 முதல் 28.9.2017 வரை நடைபெற்றது. ஒரு நாளைக்கு நான்கு இடங்களில் என்று நான்கு நாள் இந்த பரப்புரை நடைபெற்றது. 23.9.2017 அன்று காலை 10 மணியளவில் குமணன்சாவடி நிறுத்தம் அருகில் துவக்கப்பட்ட பரப்புரைப் பயணத்தில் பயண துண்டறிக்கை வழங்கிய தோழர்களிடம் சிறீதர் என்பவர் இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கிக் கொடுத்தார். சென்னை மொபைல் நிறுவனம் சார்பில் தண்ணீர் பாட்டில்கள் தோழர்களுக்கு வழங்கினர். பிரகாசு என்பவர் ரூ.500 நன்கொடை வழங்கியதோடு, தங்கள் பகுதியில் பரப்புரை செய்தால் அதற்கான செலவை நானே ஏற்றுக் கொள்வதாக கூறினார். இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணியளவில் போரூர் நான்கு முனை சாலையில் பரப்புரை  நடைபெற்றது. அங்கு நடைபெற்ற பரப்புரையைப் பார்த்தப் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் ரூ.500 நன்...

நீதிமன்றங்கள் கொசுக்களையும் ஒழிக்குமா?

நீதிமன்றங்கள் கொசுக்களையும் ஒழிக்குமா?

நீதிமன்றத்தில் வந்த கொசு வழக்கு!உச்சநீதிமன்றம் என்றாலே ‘உச்சிக்குடுமி’ மன்றம் தான் என்று தமிழ்நாட்டில் பாமர மக்கள் கூட கூறுவது வழக்கம். அந்த உச்சநீதிமன்றம் தலையிடாத பிரச்சினையே இல்லை என்ற நிலை வந்து விட்டது.  நாடாளுமன்றத்தையே கலைத்துவிட்டு நீதிபதிகளை மட்டும் தேர்தலில் போட்டியிட வைத்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர்களே நீதிபதி களாகலாம் என்ற முறை வந்து தொலைந்தால்கூட வரவேற்கலாம் போலிருக்கிறது. ‘உச்சிக் குடுமி’ மன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தலித் நீதிபதிகூட இல்லை. ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டும் இருக்கிறார். அவரும் தமிழ்நாட்டிலிருந்து சென்ற பானுமதி என்பவர் தான், இப்போது தலைமை நீதிபதியாக இருக்கும் ஒரிசா பார்ப் பனர். அவரது குடும்பத்திலிருந்து வந்துள்ள மூன்றாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. ‘அவாளின்’ குடும்ப சொத்தாகி விட்டது. அண்மையில் இந்த உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு வந்தது; நீதிபதிகளை கடும் ஆத்திர மடையச் செய்த அந்த வழக்கை  எத்தனை பேர்...

தலையங்கம் அறிவியல் ‘கடவுள்’ தயாராகி விட்டார்!

தலையங்கம் அறிவியல் ‘கடவுள்’ தயாராகி விட்டார்!

மனிதர்கள் மூளை சிந்திக்கிறது; அந்த சிந்தனை தான் மனிதர்களையும் வாழ்க்கையையும் வழி நடத்தி வருகிறது. இந்த ‘மூளை’க்குள் மனித சமூகத்தை முன்னேற்றும் கருத்துகளும் மனித சமூகத்தை சீரழித்து பின்னுக்கு இழுத்துச் செல்லும் கருத்துகளும் பதிகின்றன. ஒரு மனிதன் சமூக வெளியிலிருந்து கண்களால், காதுகளால், பேச்சுகளால் பெறப்படும் கருத்துகளே மூளைக்குள் பதிவாகி அந்த மூளை அதன் வழியாக சிந்திக்கும் செயல்பாட்டை நிகழ்த்துகிறது. ‘வேதங்களை’ப் படித்து தங்களது மூளைக்குள் ஏற்றிக் கொண்டு அதை பிற மக்கள் கற்றுக் கொள்ளக் கூடாது என்று ‘எழுத்து வடிவத்தை’ நீண்டகாலத்துக்குத் தராமல் இருந்தார்கள் பார்ப்பனர்கள். ஏனைய மனிதப் பிறவிகளின் ‘மூளை’யை விட தங்கள் ‘மூளை’யே மேலானது; உயர்வானது. இது கடவுளால் தங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்று இன்று வரை கூறி வருகிறார்கள். அந்த ‘மூளை’யின் கற்பனையிலேயே கடவுள் உருவாக்கப் பட்டது; மதம் உருவாக்கப்பட்டது; மதத்தின் தத்துவங்கள் உருவாக்கப்பட்டன. ‘மனுதர்மம்’ என்ற மனித விரோத சட்டத்தை உருவாக்கியதும், ஹிட்லர், முசோலினி,...

இரயில்வே துறையை தனியார் மயமாக்க சதி!

இரயில்வே துறையை தனியார் மயமாக்க சதி!

இரயில்வே துறையை மத்திய அரசாங்கம் படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதனைக் கண்டிக்கின்றோம். தனியாருக்குத் தாரை வார்க்கும் செயல்களை மத்தியஅரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளருமான தபன் சென் கூறினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் தபன் சென் பேசியதாவது: ‘‘இந்தியாவின் பிரதானப் போக்குவரத்து அமைப்பாகச் செயல்படும் ரயில்வே துறையை கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாகத் தனியாரிடம் தாரை வார்த்திட அரசாங்கம்எடுத்துவரும் நாசகாரக் கொள்கைகளுக்கு எதிராக என்னுடைய எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வேயில் துப்புரவுப் பணிகள், உணவு வழங்கும் பணிகள், நிர்வாகப் பணிகள் முதலானவை – அவுட்சோர்சிங் மூலமாகத் தனியாரிடம் தரப்பட்டு விட்டன. ஒவ்வோராண்டும் 150 இரயில் என்ஜின்கள் (லோகோமோடிவ்ஸ்) வாங்குவதற்கான உத்தரவாதத் துடன் அமெரிக்க நிறுவனமானஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடனும், பிரான்ஸ் நிறுவனமான அல்ஸ்டாம் நிறுவனத்துடனும்...

வேத பார்ப்பனியம் கட்டமைத்த ‘தேவதாசி’ முறை தொடரும் அவலம்

வேத பார்ப்பனியம் கட்டமைத்த ‘தேவதாசி’ முறை தொடரும் அவலம்

பெண்களை கோயில்களுக்கு அர்ப் பணிக்கும் தேவதாசி முறை இப்போதும் நீடிக்கிறது. இளம் பெண்களை கோயில் களுக்கு காணிக்கையாக்கி அவர்கள் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் அர்ச்சகர்கள், கோயிலுக்கு உரிமையாளர் களால் பாலியல் தேவைக்குப் பயன்படுத்தும் சமூகக் கொடுமையை பார்ப்பனியம் மதச் சடங்காக சமூகத்தில் திணித்திருந்தது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி இந்த இழிவை ஒழிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அவர் மேலவை உறுப்பினரானபோது இந்த இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். பெரியார், முத்துலட்சுமியின் முயற்சிக்கு தீவிர ஆதரவு அளித்தார். இந்த மசோதா விவாதத்துக்கு வந்தபோது காங்கிரசிலிருந்த சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள், இந்துமத சடங்குகளில் அரசு குறிக்கிடக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெ ரிவித்தனர். இப்படி ‘தேவதாசி’களாக்கப்படு கிறவர்கள், ‘தேவதாசி’ குடும்பப் பெண்களாகவே இருந்தனர். சட்டத்தால் தடை செய்யப்பட்ட பிறகும் பெண்கள் மீது சுமத்தப்பட்ட இந்த கொடுமை ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்திலும் தமிழ்நாட்டில்...