பெண்ணுரிமை; ஜாதி ஒழிப்பு; இந்துத்துவா எதிர்ப்பு; மாநில உரிமைகளுக்காக… 2017இல் கழகத்தின் செயல்பாடுகள்
2017ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் முக்கிய களப்பணிகள் பற்றிய ஒரு தொகுப்பு: ஜனவரி – தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திரு நாள் விழாக்கள், கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை, மயிலாப்பூர், கொளத்தூர், நங்க வள்ளி, கொளப் பலூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கழகத் தோழர்கள் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளுடன் மக்கள் விழாவாக நடத்தினர். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகாம்பூர் கிராமத்தில் நந்தினி என்ற தலித் மாணவி, இந்து முன்னணி கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நந்தினிக்கு நீதிகேட்டு கழக சார்பில் குடியாத்தம், திருச்செங்கோடு, அரியலூர், மதுரை, ஆத்தூர், நங்கவள்ளி, திருப்பூர், மேட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பிப்ரவரி: காதலர் நாளை பிப். 12ஆம் தேதி ஒரு நாள் விழாவாக மேட்டூரில் கலை நிகழ்வுகளுடன் கழகத் தோழர்கள் நடத்தினர். ஜாதிவெறிக்கு கணவரை பலி கொடுத்து ஜாதி ஒழிப்புக் களத்தில் நிற்கும்...