கழகம் துணை நிற்கும்

ஈரோடு மாநாட்டு மேடையில் மற்றொரு நிகழ்வும் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு முன் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து  கொண்ட ரவிக்குமார்-ஜோதி இணையரை குடும்பத்தினர் ஒதுக்கி வைத் திருந்தனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பெண்ணின் பெற்றோர்களான பாலசுப்பிரமணியன்-மீனாட்சி, திருமணத்தை அங்கீகரித்து இருவரையும் குடும்பத்தில் இணைத்துக் கொண்டனர். இதனால் பெண்ணின் பெற்றோரை அவரது ஜாதியினர் (பிற்படுத்தப்பட்ட ஜாதி) சமூகத்திலிருந்து விலக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் ஜாதி விலக்குக் குள்ளான பெற் றோர்களையும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணை யர்களையும் மேடையில் ஏற்றி “இங்கே திரண் டிருக்கும் கழகக் குடும்பங்கள் இவர்களுக்கு என்றும் துணை நிற்கும்” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.  வேறு மிரட்டல்கள் வந்தாலும் அதை கழகம் எதிர்கொள்ளும் என்றும் அறிவித்தார். பலத்த கரவொலி எழுப்பி கூட்டத்தினர் ஆதரவை வெளிப்படுத்தினர்.

2017-12-16-photo-00002074

பெரியார் முழக்கம் 21122017 இதழ்

You may also like...