Author: admin

தலையங்கம் அண்ணா பல்கலைக் கழகத்தில்  எம்.டெக். வகுப்புகளை மூடுவதா?

தலையங்கம் அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.டெக். வகுப்புகளை மூடுவதா?

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடுவண் அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் ‘எம்.டெக்’ எனும் மேல் பட்டப் படிப்புக்கான இரண்டு வகுப்புகளை பா.ஜ.க. ஆட்சி மூடிவிட முடிவு செய்துவிட்டது. காரணம், நிதிப் பற்றாக் குறையல்ல; நிர்வாகக் காரணம் அல்ல; அல்லது இந்தப் பிரிவுகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற காரணம் அல்ல. இடஒதுக்கீடு என்ற கொள்கையைக் காரணம் காட்டி இந்த வகுப்புகளை நிறுத்தி வைத்திருப்பதுதான் கொடுமை. குழந்தை யாருக்கு சொந்தம் என்று இரண்டு பெண்களிடையே ஏற்பட்ட மோதலில் குழந்தையை வெட்டி இருவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுங்கள் என்று ஒரு பெண் கோரிக்கை வைத்ததாக ஒரு கதை உண்டு. உண்மையான தாயாக பெற்ற மகளின் மீது பாசம் கொண்டவராக இருந்திருந்தால் இப்படிக் கூறியிருக்க மாட்டார். குழந்தையை இரண்டாக வெட்டி பங்கு போடச் சொன்ன பெண்ணின் மனநிலைக்கும் நடுவண் பா.ஜ.க. ஆட்சியின் இந்த முடிவுக்கும் எந்த  வேறுபாடும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் கல்விச் சொத்து....

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம்

நிமிர்வோம் 17 ஆவது வாசகர் வட்டம்,  சென்னை தலைமை அலுவல கத்தில் 30.01.2021 அன்று மாலை 6 மணி யளவில் தொடங்கி நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் நாசர் புரூனோ, ‘சாதியின்  குடியரசு’ என்ற புத்தகத்தை திறனாய்வு செய்து உரையாற்றினார். இறுதியாக திராவிட இயக்க ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை, திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா. அன்பரசன் விளக்கி உரையாற்றி னார். நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கினார். பெரியார் முழக்கம் 04022021 இதழ்

மாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை

மாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை

பசுமாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் ‘சிப்’ கருவிகள், அணுக்கதிர் வீச்சு ஆபத்துகளைத் தடுக்கும் என்று கருநாடக அரசு அமைத்துள்ள ‘இராஷ்டிரிய காமதேனு ஆயோக்’ என்ற அமைப்பு அறிவித்திருந்தது. கருநாடக அரசு இந்த ‘சிப்’களை தயாரிக்கும் வேலைகளையும் தொடங்க திட்டமிட்டிருந்தது. இது விஞ்ஞானபூர்வமாக சோதனை நடத்தப்பட்டு உறுதியாகியுள்ளதாக மேற்குறிப்பிட்ட அமைப்பின் தலைவர் வல்லபாகாய் கத்திரியா, கடந்த அக். 2020இல் அறிவித்திருந்தார். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்தக் கூற்றுக்கு எந்த அறிவியல் சான்றும் கிடையாது என்று 600 விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கத்திரியாவுக்கு எழுதிய அந்த மறுப்பில் போலி அறிவியலைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்த கத்திரியா – விஞ்ஞானிகள் மறுப்பு நகைப்புக்குரியது என்று கூறி தமது கருத்துக்கு சவுராஷ்டிரா பல்கலைக்கழக பேராசிரியர் மிதிர்ஜோஷி சான்று வழங்கியிருக்கும் கடிதத்தையும் இணைத்திருந்தார். இந்தப் பரிசீலித்த விஞ்ஞானிகள் அறிவியல் நடைமுறைகள் அத்தனையும் மீறி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பசுமாட்டு சாணம்...

கரூரில் ஜாதி வெறிப் படுகொலை: கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

கரூரில் ஜாதி வெறிப் படுகொலை: கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

கரூரில் பொறியாளர் ஹரிஹரன் ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து 27.01.2021 அன்று  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர்  ப.பா. மோகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கரூரில் கடந்த 6ஆம்தேதி நடைபெற்ற ஜாதி ஆணவக் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், குரலற்ற விளிம்பு நிலையில் வாழக்கூடிய சமூக மக்களுக்கு பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண் டோருக்கும், திருமணம் புரிய இருப்போர் களுக்கும் பாதுகாப்பு வழங்க தனி ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்; சாதி மறுப்புத் திருமணம் புரிந்தோருக்கு அரசு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில்  வலியுறுத்தப்பட்டன....

“கோயில் புரட்சி”

“கோயில் புரட்சி”

மதுரை திருமங்கலம் அருகே டி. குன்னத்தூர் என்ற ஒரு கிராமம். இங்கே 12 ஏக்கர் நிலத்தில் புதிய இந்து கோயில் ஒன்று ‘எழுந்துள்ளது’; அதாவது கட்டப்பட்டிருக்கிறது. கோயிலை ‘எழுப்பியவர்’ உதயகுமார் என்ற அமைச்சர். சேர, சோழ, பாண்டியர்கள் தான் கோயில் கட்ட வேண்டுமா, என்ற  மரபை உடைத்திருக்கிறார். அந்த காலத்து மன்னர் களுக்கு நாங்கள் குறைவானவர்கள் அல்ல; அவர்களைப் போலவே மக்களைச் சுரண்டிய பணம், காசுகள் எங்களிடமும் இருக்கிறது என்று காட்டியிருக்கிறார். சபாஷ், சரியான வீரம்! கோயிலுக்குள் ‘பிரதிஷ்டை’ செய்யப்பட்ட தெய்வங்கள், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா! இந்த தெய்வங்களுக்கு உலகிலேயே எங்கும் இல்லாத ஒரு ‘மகிமை’ உண்டு. மக்கள் நேரிலேயே பார்த்த கடவுளும் பழகிய கடவுளும் குடியிருக்கும் கோயில் இது ஒன்று தான்! இது ஒன்று மட்டுமே தான் என்பது நிச்சயம் என்கிறார், ஒரு பெரியாரிஸ்ட். இன்னும் ஏராளமான சிறப்புகளும் உண்டு. கோயில் ‘பிரதிஷ்டை’ செய்யப்பட்ட ‘தெய்வச் சிலை’களுக்கு வேத பண்டிதர்கள்...

அறிவியலை ஏற்க மறுக்கும் மூடநம்பிக்கையாளர்கள்

அறிவியலை ஏற்க மறுக்கும் மூடநம்பிக்கையாளர்கள்

நாகரிகமடையும் மனிதன், நம்பிக்கைகளுடன் அறிவியல் கற்றுத்தந்த உண்மைகளையும் சேர்த்தெடுத்துக்கொண்டே பயணிக்கிறான். இயற்கையின் இருப்புக்கு மாறாக உருவாக்கப்பட்ட கதைகள், உலகின் அனைத்து இனங்களிலும் காணப்படுகின்றன. ஆதிகாலங்களில் சூரியனும் கோள்களும் பூமியைத்தான் சுற்றுகின்றன எனும் கருத்து பரவலாக நம்பப்பட்டது. அதற்கு எதிராகப் பேசியவர்கள்,  `கடவுளின் விரோதிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டு, மரணத்தைத் தழுவியதும் நடந்தது. கலீலியோ கலிலி, ‘சூரியனே மையமானது’ எனும் கருத்தைச் சொன்னபோது, ‘பூமியை ஏனைய கோள்கள் சுற்றுகின்றன’ என்று சொல்லும்படி மதபீடத்தால் வற்புறுத்தப்பட்டார். இதுபோல ‘பூமி தட்டையானது’ என்ற நம்பிக்கையும் இருந்தது. வேதப் புத்தகங்களில் பெரும்பாலானவை அதைக் குறிப்பிடுகின்றன. ஆனால், மெல்ல நாகரிகமடைந்து, அறிவியல் வளர்ச்சியின் பிறகு, பூமி கோளமானது தானென்று புரிந்து கொண்டோம். ஆனாலும், பூமி தட்டை என்பதை அடிப்படையாக வைத்து உருவான கதைகள் நம்மிடையே இப்போதும் மிச்சமிருக்கின்றன. ஆனால், இவ்வளவு முன்னேறிய நிலையிலும், ‘பூமி தட்டையானது’ என்று ஒரு பெருங்கூட்டமே சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர்கள், தனிப்பட்ட எந்த மதத்தையோ,...

சமூக நீதிக்காக உழைத்த மாமனிதர் லாலு பிரசாத் நலம் பெற வேண்டும்!

சமூக நீதிக்காக உழைத்த மாமனிதர் லாலு பிரசாத் நலம் பெற வேண்டும்!

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வந்திருக்கின்றன. அவர் நலம் பெற வேண்டும் என்று நாம் வாழ்த்துகிறோம். இந்த ஊழல் வழக்கில் லாலுவுக்கு முன்னாள் முதல்வர்களாக இருந்தவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் வந்தன. ஆனால் தண்டிக்கப்பட்டவர் லாலு மட்டுமே. மனுதர்மவாதிகளால் கடுமையாக எதிர்க்கப்படுகிற, வெறுக்கப்படுகிற அரசியல்வாதி ஒருவர் உண்டு என்று சொன்னால் அவர் லல்லு பிரசாத் என்று நாம் துணிச்சலாக கூறமுடியும்.எந்த ஒரு காலத்திலும் பாரதிய ஜனதா கட்சியுடனோ அதன் மதவாத அரசியலுடனோ சமரசம் செய்து கொண்டது இல்லை. இந்திராகாந்தியின் அவசர நிலை கால எதிர்ப்போடு, அவரது அரசியல் தொடங்கியது. ஜெயபிரகாஷ் நாராயணன் நடத்திய முழு புரட்சி இயக்கத்தில் ஒரு மாணவராக அவர் பங்கெடுத்து அவசர நிலையை எதிர்த்து களமாடினார். அதன் காரணமாக, மிசா...

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

திருப்பூரில் தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழா

திருப்பூர் மாநகர திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 24.01.2021 அன்று தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா திருப்பூர் மாஸ்கோ நகர், பெரியார் திடலில் 12 ஆவது ஆண்டாக சிறப்பாக நடைபெற்றது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற இந்த விழாவில் பறை இசை நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டிகள், மந்திரமா தந்திரமா அறிவியல் விளக்க நிகழ்ச்சி, சிறுவர் பாடல்கள், தமிழிசைக்கு நடனங்கள் ஆகியவை சிறப்புடன் நடைபெற்றன. அப்பகுதி வாழ் பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் என ஆர்வமுடன் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இரவு வரை பங்கேற்றனர். நிகழ்வுகள் காலை 9 மணி முதல் நிகர் பறை இசைக் குழுவின் பறை இசை நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. முதலில் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பின்பு அதனைத் தொடர்ந்து 10.00 மணியளவில் குழந்தைகள் பெண்களுக்கான பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் துவங்கி மாலை வரை நடைபெற்றது. மேடை நிகழ்வுகள் மாலை 6 மணி...

ஆங்கிலேயருக்கு சேவகம் செய்யத் தயார், என்றார் சாவர்க்கர் (2)

ஆங்கிலேயருக்கு சேவகம் செய்யத் தயார், என்றார் சாவர்க்கர் (2)

‘ஆனந்த விகடன்’ வார ஏடு, 2019, டிசம்பர் 18 இதழில் சாவர்க்கர் பற்றிய கட்டுரை இது. சாவர்க்கர் 1924-க்கு முன்பு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பதுதானே, நாம் அறிந்தது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார் சாவர்க்கர். 1911-லேயே அவர் ஒரு கடிதம் எழுதினார். அது இப்போது கிடைப்பதில்லை. ஆனால், 1913 அவர் அனுப்பிய மற்றொரு கடிதத்தில் அந்த முந்தைய கடிதத்தைக் குறிப்பிடுகிறார். கடிதத்தில்,  `அடிபணிதல்’ வாசகங்கள் பளிச்சென்று இருக்கின்றன. ‘கூடி : கூhந hடிஅந அநஅநெச டிக வாந படிஎநசnஅநவே டிக ஐனேயை’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், ‘சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடிய வில்லை. எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள். அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்கு சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன்....

பழையதை மாற்றக்கூடாதா ?

பழையதை மாற்றக்கூடாதா ?

பழையதை மாற்றக் கூடாது என்பதும், பழையவைகள் எல்லாம் தெய்வாம்சத்தால் ஏற்பட்டவை என்பதும் – பழைய செய்கைகளோ, பழைய தத்துவங்களோ, பழைய மாதிரிகளோ, பழைய உபதேசங்களோ முக் காலத்துக்கும், முடிவு காலம் வரைக்கும் இருப்பதற்கும், பின்பற்றுவதற்கும் தகுதியான தீர்க்கதரிசனத்துடன் தெய்வீகத் தன்மையில் ஏற்பட்டவை என்று சொல்லப்படுமானால் – அவைகளை மத வெறியர்களுக்கும், பழைமையில் பிழைக்கக் காத்து கொண் டிருக்கும் சோம்பேறிச் சுயநலக் கூட்டங்களுக்கும் விட்டு விட வேண்டுமே ஒழிய, அவற்றைப் பொதுஜன-சாதாரண நித்திய வாழ்க்கையில் கடைபிடிக்கிறவர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் மிக மிகக் கஷ்டமும் தொல்லையும் அனுபவிக்க வேண்டிவரும் என்பதில் மறுப்புக்கு இடம் இருக்காது.     ‘விடுதலை’ 03.03.1948 பெரியார் முழக்கம் 28012021 இதழ்

புனைவுகளை அறிவியலாக்கும் நாட்காட்டி

புனைவுகளை அறிவியலாக்கும் நாட்காட்டி

கோரக்பூர் அய்.அய்.டி. வெளியிட்டுள்ள நாட்காட்டி – போலி அறிவியலை அறிவியலோடு இணைத்து குழப்ப முயற் சிப்பதை படம் பிடிக்கிறது இக்கட்டுரை. ஒரு பிரபல தமிழ் நாளிதழில்  இந்திய அறிவுமுறை குறித்த  நாட்காட்டி பற்றிப் பாராட்டி  ஒரு கட்டுரை  வந்திருந்தது. ஐஐடி காரக்பூரில் இயங்கும் நேரு அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம் சார்பாக வெளியிடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திற்கும் பண்டைய அறிவு குறித்தும் அதனைப் பாராட்டும் விதமாக மேலைநாட்டு விஞ்ஞானிகளின் பாராட்டுக் கருத்துகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக சொல்ல முயற்சிப்பது, சமஸ்கிருதப் பெருமையும் சமஸ்கிருதம்  சார் அறிவு முறையும் இந்தியாவின் உன்னத வரலாறாகக் கூறப்படு கிறது.  இவை அனைத்தும் ஆதாரமற்ற புனைவு வகை அறிவு என்பதே   முதல் கட்டப் பார்வையாகும். ‘சப்த ரிஷிகள்’ : ஜனவரி மாதத்தை காஸ்யபர், ஜமதக்னி, கௌதமா, பரத்வாஜா, விசுவா மித்திரர், வஷிஷ்டர், அட்ரி உள்ளிட்ட ஏழு ரிஷிகளை சப்த ரிஷிகள் எனக் குறிப்பிடுகிறது. டிசம்பர் மாதத்தை கண் முன்னே...

தலையங்கம் மக்கள் உரிமைகளை மதிக்காத இந்தியக் குடியரசு

தலையங்கம் மக்கள் உரிமைகளை மதிக்காத இந்தியக் குடியரசு

ஜன. 26, குடியரசு நாளில் டெல்லியில் இரண்டு பேரணிகள் நடப்பது வரலாற்றில் இதுவே முதன்முறையாக இருக்கும். முப்படை அணி வகுப்போடு நடக்கும் அரசு பேரணி யோடு அரசுக்கு எதிரான விவசாயிகளின் டிராக்டர் பேரணியும் நடக்கப் போகிறது. டெல்லி நகரத்துக்குள் 100 கிலோ மீட்டர் தூரம் நுழைவதற்கும் பேரணி நடத்துவதற்கும் விவசாயிகளுக்கு காவல்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. உலக நாடுகள் இதை வியப்பாகவே பார்க்கும்! இப்படி குடியரசு நாளில் அரசுக்கு எதிராக விவசாயிகள் அணி வகுப்பும்  நடப்பதைப் பார்த்து இந்தியாவில் நடக்கும் ஆட்சி எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்யப் போகின்றனர். பெரும்பான்மை எண்ணிக்கையை சர்வாதிகாரப் பாதைக்குப் பயன்படுத்தும் மக்கள் விரோத செயல்பாடுகளை உலக நாடுகள் எள்ளி நகையாடும் என்பது பற்றி இந்த ஆட்சிக்கு எந்தக் கவலையும் இல்லை. மதவெறிக் கொள்கைகளை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்ட ஆட்சிகளின் பண்பு இப்படித் தான் இருக்கும்! விவசாயிகளின் போராட்டம் 60 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது....

தமிழ்நாட்டு தாளவாடியில் கன்னடர் வெறியாட்டத்தைக் கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டு தாளவாடியில் கன்னடர் வெறியாட்டத்தைக் கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவன் நடத்தும் கன்னட சலுவாலியா அமைப்பைச் சேர்ந்த வர்கள் தமிழ்நாட்டிற் குள் நுழைந்து தாளவாடி கன்னடர்களுக்கே சொந்தம் என்று முழக்க மிட்டுக் கொண்டே, ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கடந்த 10.01.2021 அன்று தமிழில் எழுதப்பட்ட தமிழக அரசின் நெடுஞ்சாலை தகவல் பெயர்ப் பலகைகளை அடித்து உடைத்தெறிந்து தமிழ் எழுத்துக்களைக் காலில் போட்டு மிதித்து வெறியாட்டம் நடத்தியுள்ளனர். இது தமிழ்நாட்டு அரசு சொத்துக்களைச் சேதப்படுத்தியதும், தமிழர் கன்னடரிடையே வன்முறை மோதலைத் தூண்டி சமூக அமைதியை சீர்குலைக்கும் வெறிச் செயல் ஆகும். அத்தோடு நின்றுவிடாமல் மீண்டும் இரண்டாவது  முறையாக தாளவாடி அருகே பைனாபுரம் எனும் இடத்தில் வாட்டாள் நாகராஜ் கும்பல் நுழைந்து  தமிழக அரசின் அறிவிப்புப் பலகைகளை அடித்து நொறுக்கி வெறியாட்டம் போட்டுள்ளது. தாளவாடி கன்னடர்க்கே சொந்தம் என்று அங்கும் கூச்சலிட்டுள்ளது. ஏற்கனவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டபோது இன்றைய கர்நாடக முதல்வரும் அன்றைய...

அமெரிக்க அதிபர் ஆலோசனைக் குழுவிலிருந்து ‘ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நீக்கம்

அமெரிக்க அதிபர் ஆலோசனைக் குழுவிலிருந்து ‘ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நீக்கம்

மோடியும் டிரம்பும் மிகவும் நெருக்கமாகவே இருந்தார்கள். மோடியின் ‘இந்துத்துவா’ கொள்கையை தான் நேசிப்பதாக டிரம்ப் கூறினார். மோடி அமெரிக்கா போனார். அங்கே இந்தியாவிலிருந்து குடியேறி அமெரிக்க குடியுரிமை பெற்ற பார்ப்பன ‘தேச பக்தர்கள்’, ‘இந்துத்துவாவாதிகள்’ – டிரம்பின் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட்டார்கள். இரண்டாம் முறையாக டிரம்ப் தான் அமெரிக்க அதிபர் என்று ஆதரவு திரட்டினார் மோடி. கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் உலகம் முழுதும் ‘கொரானா’ எச்சரிக்கைகள் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி நடந்து கொண் டிருந்த காலத்தில் மோடி, டிரம்பை குஜராத்துக்கு அழைத்தார். ஒரு இலட்சம் மக்களைத் திரட்டி, ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற வரவேற்பு விழாவை நடத்தினார். அதனால்தான் டிரம்ப் பதவி விலகு வதற்கு சில நாட்களுக்கு முன்பாக மோடிக்கு உயரிய விருதை வழங்கி மகிழ்ந்தார். இந்த விருது, அமெரிக்காவில் சாதனைப் படைத்த இராணு வத்தினருக்கு அதிபர் வழங்குவது வழக்கமாம். இங்கே பார்ப்பன உயர்ஜாதியை மோடி எப்படி ஆதரித்து நிற்கிறாரோ அதுபோல...

‘வேலு’ம் ‘முருகனு’ம் ஓட்டுக்குத் துணை!

‘வேலு’ம் ‘முருகனு’ம் ஓட்டுக்குத் துணை!

‘முருகன்’ தேர்தல் களத்துக்கு வந்து விட்டான்; ‘முருகன் வேல்’ இப்போது அரசியல் மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது; திருத்தணியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசிய மக்கள் கிராம சபையிலும் அவரது கட்சிக் காரர்கள் அவரிடம் ‘வேலை’ கொடுத்து விட்டார்கள். எல்லாம் ஓட்டு அரசியல் தான்; தி.மு.க.வையும் விட்டு வைக்கவில்லை. ஸ்டாலின் ‘வேல்’ ஆயுதத்தை எடுத்த பிறகு பழனிச்சாமி அலறுகிறார்; பா.ஜ.க. முருகன் துடிக்கிறார். “ஸ்டாலின் வேல் தூக்கியிருப்பது பா.ஜ.க. வேல் யாத்திரைக்குக் கிடைத்த வெற்றி” என்கிறார் முருகன். முருகக் கடவுளின் வேல் பா.ஜ.க.வுக்கு மட்டுமே ‘பேட்டன்ட்ரைட்’ மற்ற கட்சிகள் பயன்படுத்தினால் அது பா.ஜ.க. தயவால் கிடைத்தது, என்கிறார். முருகக் கடவுள் ‘மிஸ்டு கால்’ வழியாக பா.ஜ.க. உறுப்பினராகி விட்டார்  போலிருக்கிறது. “யாரெல்லாம் கடவுளை இழிவாகப் பேசினார்களோ, அவர்கள் கையிலேயே முருகன் வேல் ஆயுதத்தைக் கொடுத்து காட்சி அளிக்க வைத்திருக்கிறார்” என்கிறார் முதல்வர் பழனிச்சாமி முருகப் பெருமான் சக்தியைப் பக்திப் பரவசத்தோடு பேசியிருக்கிறார்....

பெரியார் அண்ணா சிலைகளின் கூண்டை அகற்ற திருப்பூர் கழகம் அரசுக்கு தொடர் அழுத்தம்

பெரியார் அண்ணா சிலைகளின் கூண்டை அகற்ற திருப்பூர் கழகம் அரசுக்கு தொடர் அழுத்தம்

  திருப்பூரில் தற்போது பெரியார், அண்ணா சிலைகளை அதிமுக அரசு கூண்டமைத்து மறைத்துள்ளது. பெரியாரும்  அண்ணாவும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு திருப்பூரில் நடந்தது என்பதனை நினைவூட்டும் வகையில் பெரியாரும் அண்ணாவும் ஒன்றாக இருக்கும்படியாக அமைக்கப்பட்டிருக் கும் இந்த சிலைகளை அதிமுக எடப்பாடி அரசு கூண்டு போட்டு மறைத்துள்ளது. எனவேதான் கூண்டு அமைக்கும் பணிகள் ஆரம்பித்த பொழுதே திராவிடர் விடுதலைக் கழகம் தன்னுடைய கடுமை யான கண்டனத்தைப் பதிவு செய்தது. காவல் துறை, வருவாய் துறையிடம் தங்களுடைய கண்டனத்தையும், கூண்டு அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கழகத்தின் கோரிக்கையும் பொது மக்களின் எதிர்ப்பையும் மீறி பெரியார், அண்ணா சிலைகளைப் பார்க்க முடியாமல் மறைத்து தமிழக அரசு கூண்டை முழுமையாக அமைத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் துரைசாமி, கழக...

பெரியார் சாக்ரடீஸ் தந்தையார் நினைவேந்தல் நிகழ்வு

பெரியார் சாக்ரடீஸ் தந்தையார் நினைவேந்தல் நிகழ்வு

விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் தந்தை கோவிந்தசாமி கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி முடி வெய்தினார். கோவிந்த சாமி  நினைவேந்தல் நிகழ்வு 09.01.2021 சனிக் கிழமை மாலை 6 மணியள வில், மேல்மலையனூர், அத்தியந்தல் அண்ணா நகர், கு.பச்சையம்மாள் பெரியசாமி திடலில் நடை பெற்றது. நிகழ்விற்கு கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். பெரியார் சாக்ரடீஸ் வரவேற்பு கூறினார். கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கோவிந்தசாமியின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். ஏ.கே.மணி – மதிமுக மாநில துணை செயலாளர், பா.செந்தமிழ்ச்செல்வன் –  திமுக, வெற்றிச்செல்வன் – விசிக மண்டல செயலாளர், சி.செல்வராஜி – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காத்தவராயன் – பகுத்தறிவு பாடகர் நெல்லிக்குப்பம், புதுவை கோகுல் காந்தி – தமிழக வாழ்வுரிமை கட்சி, பகுத்தறிவு விஜி – தமிழர் மாமன்றம், மருத்துவர் தன்மானம் ஆகியோர் கோவிந்தசாமியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பரிமளா...

சைதை அன்பரசு இல்ல மணவிழா

சைதை அன்பரசு இல்ல மணவிழா

தி.மு.க. பொதுக் குழு உறுப்பினரும் பெரியாரியலாளருமான சைதை மா. அன்பரசன்-காந்திமதி மகள் வின்னி எனும் அறிவு மதி-தமிழன்பன் இணை யேற்பு விழா ஜன.10, 2021 மாலை 6 மணி யளவில் சைதை புனித தோமையர் மண்ட பத்தில் தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் மா. சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி, மண விழாவை நடத்தி வைக்க, கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்துரை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வுக்கு ஏராளமான தி.மு.க., தி.வி.க., பெ.தி.க. தோழர்கள் வந்திருந்தனர். புத்தர் கலைக் குழுவினர் பறையிசை, ஆலிவர் வயலின் இசை நிகழ்வுகள் இடம் பெற்றன. பெரியார் முழக்கம் 21012021 இதழ்

கரூரில் ஜாதி ஆணவப் படுகொலை: மதுரை கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் ஜாதி ஆணவப் படுகொலை: மதுரை கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் ஜாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட மருத்துவர் சமூக இளைஞர் ஹரிஹரனுக்கு நீதி கேட்டு மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் 12.1.2021 அன்று மதுரையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மருத்துவர் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், அதிமமுக பொதுச் செயலாளர். பசும்பொன் பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் ஆரோக்கிய மேரி, தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி தலைவர் மணி பாபா, ஆதித்தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் கார்த்தி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் மாநில  கொள்கைப் பரப்புச் செயலாளர் அவுதா காதர் பாட்சா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகப் பேச்சாளர் அப்பாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் ராஜீவ், குறிஞ்சியர் மக்கள் ஜனநாயக இயக்க நிறுவனர் விடுதலை...

‘வர்ணாஸ்ரம்’ என்ற பாகுபாட்டை ஆதரித்தார் சாவர்க்கர்

‘வர்ணாஸ்ரம்’ என்ற பாகுபாட்டை ஆதரித்தார் சாவர்க்கர்

சாவர்க்கர் கூறும் இந்துத்துவம் எது?‘ஆனந்த விகடன்’ வார ஏடு, 2019, டிசம்பர் 18 இதழில் சாவர்க்கர் பற்றிய கட்டுரை இது. அமித் ஷாவின் ‘சாவர்க்கர் பாசம்’ அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோ வுக்கு போஸே கொடுப்பார் மனிதர். ஆக, விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள் வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, ‘ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும். இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந்திருக் கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும்கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார், அவரது அரசியல் எப்படிப்பட்டது, அவர் பாடுபட்டது யாருக்காக என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது...

தேவர்கள் அய்ந்து கண்டங்களில் இல்லாதது ஏன்?

தேவர்கள் அய்ந்து கண்டங்களில் இல்லாதது ஏன்?

இராட்சதர்கள் தபசு செய்தார்கள்; வரம் பெற்றார்கள்; அந்த வரத்தைக் கொண்டு அக்கிரமம் செய்தார்கள் – என்பதெல்லாம் இந்நாட்டுப் பழங்குடி மக்களையும், அவர்கள் தலைவர்களையும் இராட்சதர்கள் என்று சொல்லிக் கொல்லுவதற்கு கடவுள்களும், தேவர்களும் என்ற பெயர் கொண்ட ஆரியர்கள் வழிதேடிக் கொண்ட ஒரு சாக்கே அல்லாமல், அவர்கள் வரம் ஏதும் பயன்பட்டதாகத் தெரியவில்லை. விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் யாவர்? எப்போது உண்டா னார்கள் ? எப்படி உண்டானார்கள் ? எங்கிருந்து வந்தார்கள்? ஏன் வந்தார்கள் ? என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது. அதுபோலவே, தேவர்கள் யார் ? எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந்தார்கள் ? ஏன் வந்தார்கள் ? உலகிற்கு அவர்களால் என்ன பயன் என்பதற்கு ஆதாரமும் கிடையாது. இவர்கள் எல்லாம் இமயமலைக்கு இப்புறம்தான் அதாவது, ‘இந்தியக் கண்டம்’ என்னும் பிரதேசத்தில் இருந்தார்களே ஒழிய, மற்றபடி இந்தியாவிற்கு அப்பாற்பட்ட மற்ற அய்ந்து கண்டங் களிலும் இருந்ததாகவோ, அந்தக் கண்டங்களைப் பற்றி ஏதாவது தெரிந்திருந்ததாகவோ...

வேளாண் சட்டம்: உச்சநீதிமன்றம் நியமித்த குழுவின் பின்னணி என்ன?

வேளாண் சட்டம்: உச்சநீதிமன்றம் நியமித்த குழுவின் பின்னணி என்ன?

நீதிமன்றம் வேளாண் சட்டங்கள் குறித்து தமக்கு ஆலோசனை வழங்க ஒரு குழு போட்டுள்ளது. இந்த குழுவிடம் விவசாயிகள் தமது கருத்துகளை கூற வேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஒரு ஆணையாக நீதிமன்றம் முன்வைத்துள்ளது. இந்த குழு அமைக்கப்பட்டதில்தான் நீதிமன்றத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து பலத்தசந்தேகம் எழுந்துள்ளது. பேச்சு வார்த்தைகளில் அரசு தரப்பிலும் குழுவை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தது. சட்டங்களை அகற்றாமல் எந்த குழுவையும் தாங்கள் ஏற்க இயலாது என தொடர்ந்து விவசாயிகள் கூறிவருகின்றனர். இந்த குழுவின் தலைமைப் பொறுப்புக்கு நீதிபதி லோதாவை நியமிக்கலாம் என 11.01.2021 அன்று துஷ்யந்த் தவே முன்மொழிந்தார். சில நாட்களுக்கு முன்பு இதே ஆலோசனையை முன்வைத்த நீதிமன்றம், கிராமப்புற பிரச்சனைகள் பற்றி ஆழமாக ஆய்வு செய்யும் பிரபல பத்திரிக்கை யாளர் சாய்நாத் போன்றோரை இந்தகுழுவில் இணைக்கலாம் என்று கூட கருத்து தெரிவித்தது. ஆனால் இப்பொழுது அறிவிக்கப்பட்ட குழு உறுப்பினர்களின் பெயர்கள் இமாலய அதிர்ச்சியை உருவாக்கி...

தலையங்கம் தமிழ்ப் புத்தாண்டை ஏற்க மறுக்கும் குழப்பவாதிகள்

தலையங்கம் தமிழ்ப் புத்தாண்டை ஏற்க மறுக்கும் குழப்பவாதிகள்

தி.மு.க. ஆட்சியில் கலைஞர் செய்த மகத்தான பண்பாட்டுப் புரட்சியாகக் குறிப்பிட வேண்டும் என்றால் அது தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்ததுதான். இதனால் திருவள்ளுவர் ஆண்டு தமிழ் ஆண்டுக்கணக்காக மாற்றப்பட்டது. ஒரு வார காலம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டை அரசு அலுவலகங்களில் விழாவாகக் கொண்டாட அரசாணை பிறப்பித்தார். ஜெயலலிதா முதல்வரான பிறகு இதை அகற்றி மீண்டும் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்து, ‘சமஸ்கிருதப் பண்பாட்டுக்கு’ உயிர் கொடுத்தார். இந்த நிலையில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்க முடியாது என்று இந்துத்துவம் பேசுவோர் கூறுகிறார்கள். பா.ஜ.க. அண்மையில்  கொண்டாடிய பொங்கல் விழாவில்கூட ‘தமிழ்ப் புத்தாண்டை’ கொண்டாடவில்லை. பா.ஜ.க.வைச் சார்ந்த எச்.ராஜா, தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கு மகா ஷங்கராந்தியில் உத்ராயண வாழ்த்து” என்று குறிப்பிட்டிருந்தார். இதே குரலில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம், “தை...

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

திருவல்லிக்கேணி : திராவிடர் விடுதலைக் கழகம் திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 21ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் தமிழர் திருநாள் 13.01.2021 அன்று மாலை 6 மணியளவில் வி.எம். சாலை, பெரியார் படிப்பகம், பத்ரிநாராயணன் நூலகம் வாயிலில் எழுச்சியுடன் நடைபெற்றது. பறையிசையுடன் தொடங்கியது. சமரன் கலைக் குழுவின் பறையிசை, சிலம்பாட்டம், ஓயிலாட்டம், கரகாட்டம், கிராமியப் பாடல்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் 3 மணி நேரம் நிகழ்ந்தன. நிகழ்வில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு, தமிழர் திருநாள், பொங்கல் தினம் குறித்து  உரையாற்றினார். தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டத் தலைவர் வேழவேந்தன், திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, திருவல்லிக்கேணி பகுதி அவைத் தலைவர் கா.வே. செழியன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் உமாபதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கொரோனா காலத்திலும் நிகழ்விற்கு, நிதி யுதவி...

கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயங்குவது ஏன்?

கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயங்குவது ஏன்?

அரசின் வெளிப்படைத் தன்மை இல்லாமை யும் மூன்றாம் கட்ட ஆய்வுகளை முடிக்காமல் அவசர அவசரமாக அனுமதித்ததுமே ‘கொரானா’ தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயங்குவதற்கான காரணம்; இது குறித்து பொதுநல மருத்துவர் கு. கணேசன், தமிழ் நாளேடு ஒன்றில் எழுதிய கட்டுரையின் சுருக்கம். உலகெங்கிலும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவிலும் கரோனா தடுப்பூசி செயல் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி சென்ற வாரம் தொடங்கிவைத்தார். அதில், சீரம் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி யும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியும் அவசரகாலப் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கூடவே, இந்தத் தடுப்பூசிகளின் மீதான விவாதங்களும் எழுந்துள்ளன. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்நிய நாட்டுத் தடுப்பூசிகள் அனைத்தும் முக்கியமான மூன்றாம் கட்ட ஆய்வை முடித்துவிட்டன. அதன் அடிப்படை யில் அவசர அனுமதியும் பெற்றுவிட்டன. ஆனால், இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்ஸின்’ இரண்டு தடுப்பூசிகளுமே மூன்றாம் கட்ட ஆய்வை முடிக்கவில்லை. ஆனாலும் அரசின் அனுமதியைப்...

‘கங்கையும் சாக்கடையும்’

‘கங்கையும் சாக்கடையும்’

‘பகவான் நாராயணமூர்த்தி மீண்டும் தமிழ்நாட்டுக்கு ‘அவதாரம்’ எடுத்து வந்திருப்பதாக மயிலாப்பூரில், ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளர்கள் சங்கத்தில் கார்ப்பரேட் டைரக்டர்கள் கூட்டத்தில் டி.வி.எஸ். அலுவலகங்களில் பிராமணர் சங்கத்தில் எல்லாம் பலமான பேச்சு அடிபட்டு வந்ததாக கூறுகிறார்கள். எதற்கு ‘அவதாரம்’ எடுத்திருக்கிறார் தெரியுமோ? தமிழ்நாட்டில் திராவிட இயக்கமான தி.மு.க.வை அழித்து, ‘பிராமண’ தேசமாக்க அவதாரம் எடுத்திருக்கிறாராம். நாராயணமூர்த்தி – குருமூர்த்தி என்று பெயர் சூட்டிக் கொண்டு வந்திருக்கிறாராம்! அவா, பல தொழில் அதிபர்களுக்கு கார்ப்பரேட்டுகளுக்கு ‘கணக்குப் பிள்ளை’யாக (ஆடிட்டர் என்றும் சொல்வார்கள்) இருந்து ‘சேவை’ செய்த ‘பிராமண’ குல உத்தமராம்! ‘அசுரர்’கள் என்ற திராவிடர்களை அழிக்க ‘அவதாரங்கள்’ – பல்வேறு ‘மேக்-அப்’களோடு போட்டுக் கொண்டு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. மீன் வேடம், ஆமை வேடம், பன்றி வேடம், பாதி மிருகம்-பாதி மனிதன் வேடம் என்று பல்வேறு வேடம். இப்போது அவையெல்லாம் எதற்கு? எப்போதுமே வேடம் போடுவதையே தொழிலாளாகக் கொண்ட ஒரு நடிகரையே இழுத்து வந்தால்...

வினா விடை

வினா விடை

பசுவின் சாணியிலிருந்து தயாரிக்கும் சோப்பு மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்.                    – கருநாடக அமைச்சர் பிரபு சவுகான் அவுங்க மட்டுமே, இனி பாஜக-வில் சேர முடியும்னு அறிவிச்சிருங்க; கட்சி ‘பொத பொதன்னு’ வளரும் ! உ.பி அரசு நடத்திய ‘கோ சாலையில்’ மின் விபத்து ; 12 பசுக்கள் பரிதாப சாவு.              – செய்தி பரவாயில்லை; யாகம் நடத்தி வேதம் ஓதி, மோட்சத்துக்கு அனுப்பினால் சரியாகிடும். அஞ்சல் துறை பணியாளர் தேர்வு : மீண்டும் தமிழ் புறக்கணிப்பு. – செய்தி அடுத்து அஞ்சல் முகவரிகளிலேயே தமிழ் எழுத்துக்களுக்குத் தடை வந்துடும் போலிருக்கு ! உலகின் கலாச்சாரத் தலைமைப் பொறுப்பை இந்தியாவே ஏற்க வேண்டும். – செய்தி ஆமாம், உலகத் தலைமைப் பதவியை நாங்களே எடுத்துக்குவோம் ; இதுவே எங்களின் உயர்ந்த கலாச்சாரம். வதந்திகளை நம்ப வேண்டாம்.     – பிரதமர் மோடி நியாயமான பேச்சு ஜீ; அதுதான் நீங்க...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா: தோழர்களின் பாராட்டத்தக்க செயல்பாடு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா: தோழர்களின் பாராட்டத்தக்க செயல்பாடு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு பெயர் சொல்ல விரும்பாத ஒரு வாசகர் ரூ. 5,000/- நன்கொடையாக வழங்கியுள்ளார். முகநூல் வழியாக வெளிநாட்டிலிருந்து கழக ஏட்டைப் படித்து வரும் அவர், ‘வாட்ஸ்-அப்’ வழியாகக் கழகம் விடுத்த வேண்டுகோளைப் பார்த்து இந்த நன்கொடையை அனுப்பியுள்ளார். அவருக்கு நன்றி செலுத்துகிறோம். திருச்செங்கோடு தம்பி தேனீர் விடுதி உரிமையாளரும் கழகத் தோழருமான மு. சோமசுந்தரம், மாதம் ரூ.1000/- நன்கொடை யாக கழக ஏட்டுக்கு 2019 ஜனவரியிலிருந்து அனுப்பி வருகிறார். கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு கொரானா பாதிப்பு காரணமாக நன்கொடை அனுப்ப இயலாத நிலையில் இப்போது விடுபட்ட நிதியோடு மேலும் ரூ.4000/- சேர்த்து, ரூ.10,000/- நன்கொடையாக அனுப்பியுள்ளார். தோழரின் நன்கொடைக்கு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சார்பில் நன்றி கூறுகிறோம். கள்ளக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தோழர்கள் 32 இதழ்களுக்கு சந்தா சேர்த்து முகவரிகள் பட்டிய லுடன் ரூ.5,800 அனுப்பியுள்ளனர். கள்ளக்குறிச்சி கழகத் தோழர்களுக்கு நன்றி....

பேராசிரியர் ஜவாஹிருல்லா பேட்டி மனித நேய மக்கள் கட்சி – திராவிட முஸ்லிம் கட்சி

பேராசிரியர் ஜவாஹிருல்லா பேட்டி மனித நேய மக்கள் கட்சி – திராவிட முஸ்லிம் கட்சி

பீகார் சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கானாவைச் சேர்ந்த முஸ்லிம் மஜ்லிஸ்(எம்ஐஎம்) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை பிரித்ததால் அங்கு தேஜஸ்வி தலைமையிலான மகா கூட்டணி வெற்றிவாய்ப்பை இழந்தது. பாஜக-நிதிஷ்குமார் கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஒவைசியின் கட்சி போட்டியிடக்கூடும் என்று ஊடகங்கள் மூலமாக செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் தமிழகத் தின் நிலைமை வடமாநிலங்களி லிருந்து முற்றாக வேறுபட்டது என்றும், தமிழகத்தில் முஸ்லிம்களை ஒன்றுதிரட்ட ஒவைசி என்ற வெளி மாநில நபர் தேவையில்லை என்றும் அப்படி ஒருவர் வந்துதான் தமிழகத் தில் முஸ்லிம்களின் உரிமைகளை மீட்டுத் தரவேண்டிய நிலைமை இல்லை என்றும் விவரிக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா. ஸ்க்ரால் இணைய இதழுக்கு பேராசிரியர் ஜவஹிருல்லா பேட்டி ஒன்றை அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் – வட இந்திய மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகத்தில் மிக அதிகமான அளவில் மத...

அம்பலப்படுத்துகிறார், பேராசிரியர் கருணானந்தம் (4) ராகுல சாங்கிருத்தியாயனின் பார்ப்பனியம்

அம்பலப்படுத்துகிறார், பேராசிரியர் கருணானந்தம் (4) ராகுல சாங்கிருத்தியாயனின் பார்ப்பனியம்

  ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’  என்ற புதினம் ஆரியர்களை உயர்த்திப் பேசுகிறது. அதை வைத்து தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் பேராசிரியர் கருணானந்தம். (சென்ற இதழ் தொடர்ச்சி) ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலில் பார்ப்பன கதாப்பாத்திரங்களின் வழியாக, இராகுல சாங்கிருத்தியாயன் கதைகளை கூறுகிறார். இந்த கதாபாத்திரங்களில் ஒருவர் கூட சூத்திரர் கிடையாது. கதாபாத்திரங்களில் ஒருவர்கூட இராட்சஷனோ, அசுரனோ கிடை யாது. அதாவது பார்ப்பனர்களை தலைவர் களாகக் கொண்டு நூலில் கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். இன்னும் கூற வேண்டு மானால் 3ஆவது அத்தியாயத்தில் ‘அமிர்தாஷ்வன்’ என்ற ஒரு பார்ப்பனன் வழியாக கதையை கூறுகிறார். அவரும் சத்ரியர்கள் செய்வது தவறு என்று கூறுகிறார். நான்காவது அத்தியாயத்தில் ‘புரூகிதன்’, அய்ந்தாவது அத்தியாயத்தில் ‘பிரதானன்’, ஆறாவது கதையில் ‘அங்கீரா’ இவரை மிகவும் முக்கியமான வராக கூறுகிறார். இவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள். குரு ஏழாவது, எட்டாவது அத்தியாயத்தில் தான் மாறுபட்டு கருத்தைக் கூறுகிறார். ‘சுதர்ஷ்’...

பொங்கல் ஒன்றே தமிழர் விழா

பொங்கல் ஒன்றே தமிழர் விழா

நான் 35 வருடங்களுக்கு முன் இந்தப் பொங்கல்தான் அறிவுக்கு ஒத்தது, தமிழர்களுக்கான பண்டிகை; தமிழர்கள் இதைத்தான் தங்களின் விழாவாகக் கொண்டாட வேண்டும். இதைத்தவிர்த்துப் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்பட்டுவரும் மதப் பண்டிகைகள் எல்லாம் முட்டாள்தனமான காட்டுமிராண்டித் தன்மையோடு மூட நம்பிக்கை நிறைந்தவைகளே ஆகும்; இது ஒன்றுதான் மூட நம்பிக்கை; முட்டாள் தனமற்ற அறிவிற்குப் பொருத்தமான விழாவாகும் என்று சொல்லி வருகின்றேன்.                                                    – ‘விடுதலை’ 28.01.1968 பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாக, தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். – ‘விடுதலை’ 13.01.1970 பெரியார் முழக்கம் 14012021 இதழ்

மாட்டுச் சாணி ‘சோப்’ : கருநாடக அமைச்சர் உறுதி

மாட்டுச் சாணி ‘சோப்’ : கருநாடக அமைச்சர் உறுதி

மாட்டுச்சாணம் மற்றும் சிறுநீரில் தயாரிக்கப்பட்ட சோப்புகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவுகான் பேசியுள்ளார். உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் வரிசையில், கர்நாடக மாநில பாஜக அரசும் மிகத் தீவிரமான முறையில் பசுமாடுகள் மீதுஅக்கறை செலுத்தத் துவங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ள பாஜக அரசு, பசுவதையில் ஈடுபடுவோருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப் படும் என்று பயமுறுத்தியுள்ளது. இந்நிலையில்தான், பசுக்களை பாதுகாக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பிரபு சவுகான், மாட்டுச்சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பு, வாசனைபத்திகள் உள்ளிட்ட பொருட்களையே பொதுமக்கள் உபயோகிக்க வேண்டும் என்று...

உ.பி. பாஜக அரசு அமைத்த கோ சாலையில்  12 பசுக்கள் எரிந்து பலி

உ.பி. பாஜக அரசு அமைத்த கோ சாலையில் 12 பசுக்கள் எரிந்து பலி

உத்தரப்பிரதேசத்தில் பசுமாடுகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில், அம்மாநில பாஜக அரசு, ஏராளமான கோ சாலைகளை அமைத்துள்ளது. இந்த கோ சாலைகளில் பசுக் களின் பராமரிப்பு, தீவனங்களுக்காக ஒரு பெரும் தொகையையும் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், கோ சாலைகளில் நடக்கும் ஊழல் நடவடிக்கைகள் காரணமாக, பசு மாடுகள் தீவனமின்றி பட்டினியால் இறந்து போவதும், போதிய பராமரிப்பின்மைக் காரணமாக கொத்துக் கொத்தாக நோயால் செத்து மடிவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்நிலையில்தான், செவ்வாயன்று பாக்பத் மாவட்டம் நக்லா பாடி கிராமத்திலுள்ள கோ சாலையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பசுமாடுகள் பரிதாபமான முறையில் இறந்துள்ளன. 18 பசு மாடுகள் கடுமையான தீக்காயம் அடைந்துள்ளன. கோ சாலையில் இணைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் திடீரென உயர் மின்அழுத்தம் பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், மேலும், இந்த சம்பவம் தொடர்பாக துணைஆட்சியர் அஜய் குமார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பெரியார் முழக்கம் 14012021 இதழ்

‘பிராமணப்’ பெண்கள் சொந்த ஜாதிக்குள் திருமணம் செய்தால் கருநாடக அரசு 3 இலட்சம் உதவி

‘பிராமணப்’ பெண்கள் சொந்த ஜாதிக்குள் திருமணம் செய்தால் கருநாடக அரசு 3 இலட்சம் உதவி

சாதியக் கட்டமைப்பு இப்போதும் உடைபடாமல் நீடிப்பதற்கு, சொந்த சாதிக்குள்ளேயே திருமணம் எனப்படும் ‘அகமண முறை’, ஒரு முக்கியக் காரணம் என்பதைக் கண்டறிந்தனர். அந்த அடிப் படையில், அகமண முறை உடைபட்டு, சாதி கடந்த காதல் திருமணங்கள் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினர். அதனடிப்படையிலேயே சாதி கடந்த திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகள் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கி வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநில பாஜகஅரசு விதிவிலக்காக, ‘பிராமணப்’ பெண்கள் சொந்த சாதிக்கு உள்ளேயே திருமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு ரூ. 3 இலட்சம் நிதியுதவி அறிவித் துள்ளது. அதாவது, ‘பிராமண’ சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சொந்த ஜாதி அர்ச்சகர்கள் மற்றும் புரோகிதர்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ரூ.3 இலட்சம் வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘மைத்ரேயி திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமூக,  பொருளாதார ரீதியாக முன்னேறி...

தலையங்கம் கோத்தபயே மிரட்டுகிறார்!

தலையங்கம் கோத்தபயே மிரட்டுகிறார்!

இந்திய பிரதமர் ஒருவருக்கும் (ராஜீவ் காந்தி) இலங்கை அதிபருக்கும் (ஜெயவர்த்தனா) இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசு பதின் மூன்றாவது சட்டத்திருத்தத்தை ஒப்புக் கொண்டது. மிகக் குறைந்த  அதிகாரங்களை மட்டுமே வழங்கக் கூடிய அந்த ஒப்பந்தத்தைக்கூட நிறைவேற்ற இப்போது கோத்தபயே தலைமையிலான இலங்கை அரசு தயாராக இல்லை. குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்தது என்று சொல்வதைப் போல, ‘மாகாண சுயாட்சி’ என்ற அதிகாரத்தைப் பகிர முன் வராத இலங்கை அரசு, இப்போது அந்தத் தீவில் மாகாணங்களையே முற்றாக ஒழித்து ஒற்றை ஆட்சியை உருவாக்கப் போவதாக கூறிக் கொண்டிருக்கிறது. அண்மையில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசினார். அவர் பேசி விட்டு இந்தியா திரும்பிய உடனேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குள்ளான மக்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னத்தை இடித்துத் தள்ள இலங்கை அரசு உத்தரவிட்டது. கடும்...

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு கூறுகிறது மனுசாஸ்திரத்தை அமுல்படுத்தும் உ.பி. – கர்நாடக பா.ஜ.க. ஆட்சிகள்

‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு கூறுகிறது மனுசாஸ்திரத்தை அமுல்படுத்தும் உ.பி. – கர்நாடக பா.ஜ.க. ஆட்சிகள்

  ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜன. 9, 2021) தீட்டியுள்ள தலையங்கத்தின் தமிழாக்கம். ஏழ்மையில் உழலும் ‘பிராமணப்’ பெண் களுக்கு உதவி செய்ய விரும்புவதாக கருநாடக அரசு கூறுகிறது. இப்படி அந்த அரசு கூறுவதால், அந்தப் பெண்களின் உண்மையான வாழ்க்கை நெருக்கடிகளுக்கும், பெண்கள் என்ற அடிப்படையிலான பாதிப்புகளுக்கும் உதவிட முன் வந்திருக்கிறது என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அப்படி கருநாடக அரசு கருதிப் பார்க்கவில்லை. மாறாக உண்மையான பாதிப்பு என்ற பார்வையிலிருந்து விலகி அவர்களுக்கு சமூகத்தில் மிகவும் பயன்களைக் கொண்டு வந்து சேர்க்கும் பிரச்சினைக்காக கவலை எடுத்துக் கொண்டிருக்கிறது. ‘பிராமணர்’களாகவே பிறந்த அவர்கள் காலம் முழுதும் ‘பிராமணர்’ களாகவே வாழ வேண்டும் என்பதே அரசின் கவலை. இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது. ஒன்று பிராமணப் ‘பெண்கள்’ திருமணத்துக்கான உதவித் திட்டம்; மற்றொன்று அவர்கள் ‘பிராமண அர்ச்சகர்’களையே திருமணம் செய்து கொள்ள உதவிடும் திட்டம். ஜாதி அமைப்பு, ஜாதிகளுக்குள்ளே நடத்தப் படும் திருமணங்கள்...

500க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது: இலங்கை தூதரகம் முற்றுகை இலங்கை தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற 500 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

500க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது: இலங்கை தூதரகம் முற்றுகை இலங்கை தூதரகத்தை முற்றுகையிடச் சென்ற 500 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலையை நடத்தி முடித்த இலங்கை அரசு, உயிர்நீத்த பொது மக்கள் – மாணவர்கள் நினைவாக யாழ் பல்கலை வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த நினைவிடத்தை புல்டோசர் வைத்து இடிக்க உத்தரவிட்டது. இந்த நினைவுச் சின்னம் சட்டவிரோதம் என்று அரசு அறிவித்தது. கடும் எதிர்ப்புக்குப் பிறகு மீண்டும் நினைவுச் சின்னம் அமைக்க அரசு ஒப்புதல் வழங்கியதாக செய்திகள் வந்துள்ளன. நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை யிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் இந்த நிலையில் ஏராளமான அளவில் இராணு வத்தை பல்கலை வளாகத்தில் இலங்கை அரசு குவித்து வருகிறது. மாணவர்கள் இதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை அனைத்துக் கட்சித் தலைவர் களின் ஆலோசனையோடு ம.தி.மு.க. சார்பில் வைகோ அறிவித்தார். இந்தப் போராட்டத்தையொட்டி 11.1.2021 அன்று காலை 10.30 மணியளவில் இலயோலா கல்லூரி அருகே 500க்கும் மேற்பட்ட தோழர்கள் கட்சிக் கொடிகளுடன் திரண்டிருந்தனர். தூதரகம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அனைத்துத் கட்சி...

முள்ளிவாய்க்கால் நினைவகம் இடிப்பு:  கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவகம் இடிப்பு: கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட் டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக ஆணையிட்டு இரவோடு இரவாக இடித்துத் தள்ளியதை  திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இது குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பல்லாயிரம் தமிழர்களை இலங்கை இராணுவம் இனப்படுகொலை செய்து முடித்தது. போராளிகள் மட்டுமல்ல பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் படுகொலைக்கு உள்ளானார்கள். சொந்த மக்களை பலி கொடுத்ததன் நினைவாக தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தைக் கூட சட்ட விரோதமானது என்று அறிவிக்கிறது இலங்கை அரசு. தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, தாயக உரிமை, தமிழ்தேச உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி 2008இல் மாபெரும் நிகழ்வாய் நடந்த  பொங்கு தமிழ் பிரகடன நினைவு கல்வெட்டு 2018இல் நினைவுத் தூணாக மாற்றி அமைக்கப்பட்டு அன்றைய துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது....

நன்கொடை

நன்கொடை

மேட்டுப்பாளையம் நிகழ்வு களில் பா. ராமச்சந்திரன், 77ஆவது பிறந்த நாள் விழாவில் அவரது மகள் தென்றல்-பார்த்தசாரதி சார்பில் ஆயிரமும், மற்றொரு  மகள் அறிவுக் கொடி-வெங்கடேஷ் இணையர் சார்பில் ஆயிரமும் பாராட்டுரை வழங்கிய டி.டி. ரங்கசாமி (ம.தி.மு.க.) ரூ.500-ம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சிக்கு நன்கொடையாக வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 07012021 இதழ்

வினா விடை

வினா விடை

அய்தராபாத்தில் ‘பிராமணர்கள்’ மட்டுமே பங்கேற்ற கிரிக்கெட் போட்டி, டிசம். 25, 26 தேதிகளில் பி.எஸ்.ஆர். மைதானத்தில் நடந்தது.   – செய்தி பிராமணர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஜல்லிக்கட்டு’வைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம், ‘சுவாமி’! ஒரு இந்துவாக இருப்பவன், இந்தியாவுக்கு எதிராக இருக்கவே முடியாது. – ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் ஆனால், சக இந்தியனுக்கு எதிராக இருக்கலாம்; எந்தத் தடையும் இல்லை. உ.பி.யில் முராத் நகரில் சுடுகாட்டுக்கு சடலத்தை எரிக்க வந்தவர்கள் மீது மயான சுடுகாடு கூரை விழுந்தது; 23 பேர் பலி. – செய்தி உ.பி. மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 83 குழந்தைகள் பிராண வாயு சிலிண்டர் இல்லாமல் இறப்பார்கள்; பிணத்தை எரியூட்ட வந்தவர்களே பிணமாவார்கள்; இதற்குப் பெயர்தான் ‘இராமராஜ்யம்’. இரஷ்ய, அமெரிக்க ஜனாதிபதிகளைப்போல முதல் கொரானா தடுப்பு ஊசியை மோடி போட்டுக் கொள்ள வேண்டும். – பீகார் காங். தலைவர் அஜீத் அதெல்லாம் முடியாது சார்! முதல் தடுப்பு ஊசி...

கோவை மாவட்டக் கழக சார்பில் சிறப்புடன் நடந்தது  பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம்  பா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா

கோவை மாவட்டக் கழக சார்பில் சிறப்புடன் நடந்தது பெரியார் தொண்டர் மேட்டுப்பாளையம் பா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா

பெரியார் பெருந் தொண்டர் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் மேட்டுப் பாளையம் பா. ராமச்சந்திரன் 77ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா, கோவை மாவட்டக் கழக சார்பில் ஜன. 4, 2021 மாலை 5 மணியளவில் மேட்டுப் பாளையம் ஈஸ்வரியம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடை பெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை யில் நடந்த விழாவில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர் களும் பா. ராமச்சந்திரன் அவர்களின் உறுதியான பெரியார் கொள்கைப் பற்றையும் செயல்பாடுகளையும் பாராட்டி உரையாற்றினர். குட்டையூர் மா. கந்தசாமி, விழாவின் நோக்கத்தை யும், பா. ராமச்சந்திரனின் தீவிர செயல் பாடுகளையும் அவரோடு இணைந்து செயல்பட்ட நினைவுகளையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார். மேட்டுப்பாளையத்தில், பா. ராமச் சந்திரன் முன்முயற்சி எடுத்து நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் உருவாக்கிய தாக்கத்தைப் பலரும் குறிப்பிட்டனர். ம.தி.மு.க. தணிக்கைக் குழு உறுப்பினரும், பவானி நதி நீர் மற்றும்...

பேராசிரியர் கருணானந்தம் விளக்குகிறார் (3) ராகுல சாங்கிருத்தியாயன் இரட்டை வேடம் ஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா?

பேராசிரியர் கருணானந்தம் விளக்குகிறார் (3) ராகுல சாங்கிருத்தியாயன் இரட்டை வேடம் ஆரியர்கள் பெண்களிடம் கருணை காட்டினார்களா?

உலக வரலாற்றிலேயே அன்று முதல் இன்று வரை ஒரு சிறு சமூகத்திலேயே புரோகிதம் நிலையாக இருப்பது இந்தியாவில் மட்டும் தான். வேறு எந்த நாட்டிலும் கிடையாது, வேறு எந்த மதத்திலும் கிடையாது.   ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’  என்ற புதினம் ஆரியர்களை உயர்த்திப் பேசுகிறது. அதை வைத்து தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார் பேராசிரியர் கருணானந்தம். (சென்ற இதழ் தொடர்ச்சி) ‘ரிக் வேத கால ஆரியர்கள்’ என்ற நூலில், அசுரர்களிடத்தில் போர் நடைபெற்றதாக குறிப்பிடப் பட்டுள்ளது. சம்பாரன், விருத்தினன், நமூஷி போன்ற பல அசுர மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட் டுள்ளது. அசுரர்கள் எப்படி கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடப்பட் டுள்ளது. நூலின் ஓரிடத்தில், “திவோதஸ் என்ற மன்னன் சம்பாரன் என்ற அசுர  மன்னனுடன் 40 ஆண்டுகால போரில் ஈடுபடுகிறான். மிகக் கடுமையாக நடைபெற்ற போரின்  இறுதியில்  அந்த அசுர மன்னனை கொல்வதாக கூறப்பட்டுள்ளது.   வெற்றி பெற முடியாததற்கு...

இலட்சியமற்ற வாழ்க்கை

இலட்சியமற்ற வாழ்க்கை

“பிறப்பும் இறப்பும் இயற்கையே; மனிதன் ஏன் பிறக்கிறான் என்று யாராவது கூற முடியுமா? பிறந்து எதற்காக வாழ்கிறான்; எதற்காக இறந்து போகிறான் என்று யார் கூற முடியும்? இதைக் கேட்டால் அது கடவுள் செயல்; கடவுள் பிறப்பிக்கிறார்; கடவுள் காப்பாற்றுகிறார்; சாகடிக்கிறார் என்று தான் கூற முடியுமே தவிர வேறு சரியான காரணம் கூற முடியுமா? அவன் எந்தக் குறிப்பிட்ட இலட்சியத்தின் மீது தனக்குப் பிள்ளை வேண்டுமென்று பிள்ளையைப் பெறுகிறான் என்றால், எதற்காகப் பிள்ளை வேண்டும் என்பதைக் கூற முடியுமா? அவனைக் கேட்டால் கூடத் தெரியாது. குழந்தையை அடைந்ததும் அதை ஏன் காப்பாற்ற வேண்டும்; அதற்கு ஏன் கல்வி புகட்ட வேண்டும் என்ற இலட்சியத்தைக் கூற முடியாது. ஏதோ தம் பிள்ளை படிக்க வேண்டும் என்பார்களே தவிர, எதற்காகக் கல்வி கற்க வேண்டும் என்றே தெரியாது… இவ்விதமே எல்லாம் ஒரு இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் இருக்கின்றன. வாழ்க்கை என்ற ஏணிப்படியில் கால்...

தமிழர்கள் இந்துக்கள் அல்ல சைவ நெறியாளர் கலையரசியின் ஆரிய எதிர்ப்பு முழக்கம்

தமிழர்கள் இந்துக்கள் அல்ல சைவ நெறியாளர் கலையரசியின் ஆரிய எதிர்ப்பு முழக்கம்

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, ‘ஒன்றிணைக்கும் கிறிஸ்துமஸ்’ என்ற தலைப்பில் கிறிஸ்துவ மத நல்லிணக்க அமைப்பு சென்னையில் டிசம்பர் 20, 2021இல் ஒன்றை நடத்தியது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். விழாவில் இஸ்லாம், முஸ்லிம், சைவ மதப் பிரிவினர் பங்கேற்றுப் பேசினர். சைவ நெறியாளரும் பரப்புரையாளருமான கலையரசி நடராசர் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி. இந்து மதம் என்ற ஒன்றை, இங்கே பேசும் போது அருமை நண்பர் இனிகோ கூறினார். இந்து என்ற சொல்லையே குறிப்பிடாதீர்கள். அது உருவாகி 200 ஆண்டுகள் தான் ஆகிறது. நாங்களெல்லாம் சைவர்கள். எப்படி, ‘கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய தமிழ்’ என்னுடையது. என்னுடையது என்று கூறியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி கிருத்துவர்களாக இருந்தாலும் சரி தொப்புள்கொடி உறவுகள். அவர்கள் எங்களுடைய சகோதரர்கள். யார் என்ன செய்தாலும் நாங்கள் அவர்களை பிரிய மாட்டோம், எங்களையும் அவர்கள் பிரிய மாட்டார்கள். இனிகோ பேசும்போது இந்துக்கள் என்று குறிப்பிட்டார்....

‘கொரானா’ இடைவெளிக்குப் பிறகு தோழர்களின் முதல் சந்திப்பு மேட்டுப்பாளையத்தில் நடந்த இரு நாள் பயிற்சி முகாம்

‘கொரானா’ இடைவெளிக்குப் பிறகு தோழர்களின் முதல் சந்திப்பு மேட்டுப்பாளையத்தில் நடந்த இரு நாள் பயிற்சி முகாம்

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், பெரியாரியல் பயிலரங்கம் மேட்டுப்பாளையம், பேருந்து நிலையம் அருகில் ஈஸ்வரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 03.01.2021 ஞாயிறு, 04.01.2021திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் நடந்த இப்பயிலரங்கில், முதல் நிகழ்வாக தோழர்கள் சுய அறிமுகத்துடன் பயிலரங்கில் கலந்து கொள்ளும் புதிய தோழர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தொடர்ந்து பெண் தோழர்கள் கொள்கைப் பாடல்களைப் பாடினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பயிலரங்கின் அவசியம் குறித்தும் பெரியாரியலை, ‘வாழ்க்கை-சமூகம்-மாற்றம்’ என்ற மூன்று தளங்களில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்றும் விளக்கிப் பேசினார். தொடர்ந்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் “செயல்பாடுகள், கட்டுப்பாட்டு நெறி முறைகள்” ஆகியவை குறித்து பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் உரையாற்றினர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, இணையதள செயல்பாடுகள் குறித்து இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் உரையாற்றினார். இரண்டாம் நிகழ் வாக ‘பெரியாரின் மொழிக்...

கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள் தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்

கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள் தமிழ்நாட்டை வட நாடாக்கும் பா.ஜ.க. சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்

தமிழ்நாட்டை உ.பி., ம.பி., இராஜஸ்தான் போன்ற மற்றொரு மாநிலமாக்க பா.ஜ.க. சூழ்ச்சிகரமான திட்டங்களை தேர்தல் களத்தில் உருவாக்கி வருவதை கழகத் தலைமைக் குழு கவலையுடன் பரிசீலித்தது. உள்ளூர் மட்டத்தில் மக்களை நேரடியாக சந்தித்தும் துண்டறிக்கை வெளியீடுகள் வழியாக கருத்துகளைப் பரப்புவதுமான பரப்புரைத் திட்டங்களை வகுப்பது குறித்தும் தலைமைக்குழு பரிசீலித்தது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழக தலைமைக் குழுக்கூட்டம் 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ஈஸ்வரி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர்  கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். இயக்கத்தின் ஏடுகள், போராட்ட திட்டங்கள், அரசியல் நிலவரங்கள், துணை அமைப்புகளின் செயல் பாடுகள், மாவட்ட நிர்வாக அமைப்புகளில மாறுதல்கள், கழகத் தோழர்களை சந்திக்கும் நிகழ்வுகள், சமூக வலைத் தளங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப் பட்டது. 1)    கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் காரணமாக வேறு வழியின்றி இடைநிறுத்தம்...

‘சரியான பெயர்’

‘சரியான பெயர்’

“முருகா, இந்த சங்கிகளை அடக்க வர மாட்டாயா?” என்று உண்மையான சைவர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள். “நீ இந்துவாக இருந்தால் மட்டும் போதாது; நீ விபூதியணிந்து சைவக் கோலம் பூண்டால் மட்டும் நாங்கள் மதிக்க மாட்டோம்; இந்த பக்தி கோலத்தோடு மோடிஜிக்கு ‘ஜே’ போட வேண்டும்; ஆர்.எஸ்.எஸ்.யை ஆதரிக்க வேண்டும்; தி.மு.க. ஒழிக என்று கூற வேண்டும்; அப்போதுதான் நீ இந்து; இல்லையேல் இந்து துரோகி” என்று சங்கிகள் பேசும்போது, உண்மை பக்தர் கள் வேறு என்னதான் செய்வார்கள்? கலையரசி நடராசன், சைவத்தில் ஊறி நிற்பவர். நெற்றியில் விபூதி கோலத்துடன் காட்சியளிப்பவர். சைவம் – இந்து மதம் அல்ல என்று ஓங்கி முழங்கு கிறார். என்னுடைய ‘தமிழ்’ மொழி யோடு ‘இந்து’வையும் சமஸ்கிருதத்தை யும் இணைக்கவே கூடாது என்கிறார். ஆரியத்துக்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்கிறார். கலையரசியைப் போல் எத்தனையோ சைவர்கள் – தமிழர் என்ற உணர்வோடு களத்துக்கு...

தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன்,மற்றும் தோழர் கோ.சீனிவாசன் ஆகியோர் ஊபா (UAPA) வழக்கில் கைது !  கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன்,மற்றும் தோழர் கோ.சீனிவாசன் ஆகியோர் ஊபா (UAPA) வழக்கில் கைது ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் *பாலன்*,மற்றும் தோழர் *கோ.சீனிவாசன்* ஆகியோர் *ஊபா (UAPA) வழக்கில் கைது !* கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்!* பாஜக – அதிமுக அரசுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து ஆள்தூக்கி சட்டங்களை கொண்டு பொய் வழக்குகளை புனைந்து கைது செய்து சிறையில் அடைக்கும் அதே வேளையில், சமூக விரோதச் செயல்களில், பெரும் வன்முறைகள், கொலைக் குற்றங்களில தொடர்ந்து ஈடுபட்டுவரும் சங்பரிவார தீவிரவாதிகளைக் கண்டும் காணாமலும் இருந்து வருவதாக குற்றச்சாட்டு ! கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே வனப்பகுதியில் கேரள போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்ப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகம் என்பவர் கொல்லப்பட்டார். அவரது உடல் சொந்த ஊரான கணவாய்புதூரில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தகனம் செய்யப்பட்டது அந்த...

ஆதிக்கத்தின் எதிரி பெரியார்

ஆதிக்கத்தின் எதிரி பெரியார்

  *ஆதிக்கத்தின் எதிரி பெரியார்* ஒரு பெரிய நாடு இன்னொரு சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தினால் நான் சிறிய நாட்டின் பக்கம் நிற்பேன். அந்த சிறிய நாட்டில் ஒரு பெரிய மதம் இருந்து மற்ற சிறுபான்மை மதத்தை ஒடுக்கினால் நான் சிறுபான்மை மதத்தின் பக்கமே நிற்பேன். அந்த சிறுபான்மை மதத்தில் சாதி இருந்து, இன்னொரு சாதியின் மீது தாக்குதல் நடத்தினால் நான் தாக்குதலுக்குள்ளான அந்த சாதியின் பக்கமே நிற்பேன். அந்த ஒடுக்கப்பட்ட சாதியிலிருக்கும் ஒரு முதலாளி இன்னொரு தொழிலாளியை வஞ்சிப்பானேயானால் நான் தொழிலாளியின் பக்கமே நிற்பேன். அந்த தொழிலாளி வீட்டிற்கு போய் அவன் மனைவியிடம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த பெண்ணிற்க்காக நான் நிற்பேன்.மொத்தத்தில் ஆதிக்கம்தான் என் எதிரி

தோழர் பொழிலன் நூலுக்குத் தடை ! கிரிமினல் வழக்குகள் பதிவு ! திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம்

தோழர் பொழிலன் நூலுக்குத் தடை ! கிரிமினல் வழக்குகள் பதிவு ! திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம்

*தோழர் பொழிலன் நூலுக்குத் தடை !* கிரிமினல் வழக்குகள் பதிவு ! *திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !* நூலின் மீதான தடையை நீக்கவும், தோழர் பொழிலன் மீதான வழக்குகளை திரும்ப பெற தமிழக அரசை வலியுறுத்தி கழக *பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அறிக்கை !* தோழர் பொழிலன் அவர்கள் எழுதிய வேத வெறி இந்தியா எனும் நூலுக்கு தமிழக அரசு தடை விதித்து பொழிலன் மீது பல வேறு கிரிமினல் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அஇஅதிமுக ஆட்சியா? அல்லது ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்களின் வேத ஆட்சியா ?என்று சொல்லுகிற அளவிற்கு மிக மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது.இது மிகச்சிறந்த ஒரு ஆய்வு நூல். வேதங்களின் காலம், வேதங்களின் உள்ளடக்கம், பழந்தமிழ் இலக்கியங்களில் வேதங்கள், சைவர்கள் வேதத்தை எதிர்த்தது ஏன் ?, ஆரியச் சார்பு ஆய்வாளர்களாக இருந்த பரிமேலழகர்,பாரதியார் சித்பவானந்தர் போன்றவர்கள் வேதம்...