தமிழ்நாட்டு தாளவாடியில் கன்னடர் வெறியாட்டத்தைக் கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
கன்னட வெறியன் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவன் நடத்தும் கன்னட சலுவாலியா அமைப்பைச் சேர்ந்த வர்கள் தமிழ்நாட்டிற் குள் நுழைந்து தாளவாடி கன்னடர்களுக்கே சொந்தம் என்று முழக்க மிட்டுக் கொண்டே, ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கடந்த 10.01.2021 அன்று தமிழில் எழுதப்பட்ட தமிழக அரசின் நெடுஞ்சாலை தகவல் பெயர்ப் பலகைகளை அடித்து உடைத்தெறிந்து தமிழ் எழுத்துக்களைக் காலில் போட்டு மிதித்து வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
இது தமிழ்நாட்டு அரசு சொத்துக்களைச் சேதப்படுத்தியதும், தமிழர் கன்னடரிடையே வன்முறை மோதலைத் தூண்டி சமூக அமைதியை சீர்குலைக்கும் வெறிச் செயல் ஆகும்.
அத்தோடு நின்றுவிடாமல் மீண்டும் இரண்டாவது முறையாக தாளவாடி அருகே பைனாபுரம் எனும் இடத்தில் வாட்டாள் நாகராஜ் கும்பல் நுழைந்து தமிழக அரசின் அறிவிப்புப் பலகைகளை அடித்து நொறுக்கி வெறியாட்டம் போட்டுள்ளது. தாளவாடி கன்னடர்க்கே சொந்தம் என்று அங்கும் கூச்சலிட்டுள்ளது.
ஏற்கனவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டபோது இன்றைய கர்நாடக முதல்வரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா ஒகேனக்கல்லுக்கே பெருங்கூட்டத் துடன் வந்து “ஒகேனக்கல் கர்நாடகாவுக்கே சொந்தம்; தமிழர்கள் அனைவரும் வெளியேற வேண்டும்” என்று ஆர்ப்பாட்டம் நடத்தியவர்தான். எனவே இதிலும் எடியூரப்பாவின் பங்கு உண்டா என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது.
கன்னட வெறியர்களின் இந்த வெறிச்செயல் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. நிலைமை விபரீதமாகிக் கட்டுக்கடங்காமல் போவதற்குள் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். வழக்கு பதிவது மட்டும் போதாது. அரசு சொத்துக்களை நாசமாக்கி, தமிழ்நாட்டரசின் தன்மானத்தையும் கேள்விக்குள்ளாக்கும் இன வெறியர்களை கைது செய்து தண்டிக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.
இதனையொட்டி ஈரோடு கருங்கல்பாளை யம் காந்தி சிலை அருகில் பெரியாரிய உணர் வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 20.01.2021 அன்று காலை நடைபெற்றது.
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தன்னுடைய கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவரும், மனித உரிமைப் போராளியுமான கண. குறிஞ்சி தலைமையில், திவிக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி முன்னிலையில், கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நிலவன் தொடக்க உரையுடன் ஆரம்பமானது.
முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர்.
தமிழர் கழகம் கட்சியின் சார்பாக மாவட்டச் செயலாளர் கு. குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் த.விஜய், இளந்தமிழர் கழகம் மாவட்டச் செயலாளர் அரங்க.ராஜ்குமார், மாவட்ட ஒருங் கிணைப்பாளர் கு.விமல்ராஜ், க.அரவிந்த், தமிழர் கழகம் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். ரவி நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 28012021 இதழ்