மகாத்மாவின் நிலை
காந்தி அடிகளின் திரேக நிலையும் மனப்பான்மை நிலையும் அசை வுற்றுப் போய்விட்டது என்பது அவருக்கு அடிக்கடி ஏற்படும் காயலா மூல மாகவும் அவர் அடிக்கடி வெளிப்படுத்தும் அபிப்ராயம் மூலமாகவும் நன்கு வெளியாகிறது. அவருக்கு மன உறுதியுள்ள காலத்தில் காயலாவே ஏற்படுவ தில்லை. ஏற்பட்டாலும் இயற்கை முறைகளிலேயே சவுக்கியப்படுத்திக் கொள்வார். இப்பொழுதோ அவருக்கு கொய்னாவும் இஞ்சக்ஷனும் தேவை யாய்ப் போய்விட்டது. ஆதலால் இயற்கை சிகிச்சையில் உள்ள உறுதி ஆட்டம் கொடுத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். அதுபோலவே ராஜீய விஷயத்தில் இருந்த உறுதிகளும் ஆட்டம் கொடுத்து விட்டதாகவே கருத வேண்டியதாய் விட்டது. மகாத்மா ஜெயிலில் இருந்து வந்தவுடன் இருந்த மனநிலையும், ஸ்ரீமான்கள் தாஸ், நேரு இவர்கள் கேட்டுக்கொண்ட பின் ஏற்பட்ட மனநிலையும், கல்கத்தா ஒப்பந்த மனநிலையும், பாட்னா ஒப்பந்த மனநிலையும், தான் ஓய்வு எடுத்துக் கொண்ட மனநிலையும், தனக்கு நம்பிக்கையில்லாத திட்டத்திற்கு தான் தன்னால் கூடிய உதவி செய்வதாகச் சொல்லும் மனநிலையும் பார்த்தால் தயவு தாக்ஷண்ணியம்,...