Category: தஞ்சாவூர்
ஜாதிய வன்கொடுமைகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் தோழர். கொளத்தூர்மணி தஞ்சாவூர் உத்மதானி 18102016
தஞ்சை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தொடரும் ஜாதிய வன்கொடுமைகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் தோழர். கொளத்தூர்மணி உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜாதிய கட்டமைப்பு ஜாதிய வன்கொடுமைகள். ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்யும் தம்பதியினரை ஆணவப்படுகொலைகள் செய்வது, இரட்டை சுடுகாடு, இரட்டைக் குவளை முறை போன்ற பல்வேறு வடிவங்களில் விளிம்பு நிலை மக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இடைநிலை ஜாதியினரால் இழைக்கப்படும் வன்கொடுமைகள் பார்;ப்பன மதமான இந்து மதத்தில் மலிந்து கிடக்கிறது. ஒரு மனிதனை பிறப்பின் அடிப்படையில் அவனை பல்வேறு ஜாதிகளாக பிரித்து சூத்திரர்களாக, பஞ்சமர்களாக அம்மக்களை சிறுமைப்படுத்தி பார்பனர்கள் தங்கள் மேலாண்மையை காலம் காலமாக கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். பார்;;ப்பனர்களால் வேசிமகன்கள் என இன்றும் இழிவுப்படுத்தப்படும் சூத்திர இடைநிலை ஜாதியை சேர்ந்தவர்கள் தங்களது சூத்திர இழிவு நிலைக்கு எதிராக போராடாமல், தங்களை இழிவுப்படுத்தும் பார்பனர்களையும், அவர்கள் தூக்கி பிடிக்கும் பார்பன...
”இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல, வகுப்புவாரி உரிமை என்பது நமது பிறப்புரிமை”
”இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல, வகுப்புவாரி உரிமை என்பது நமது பிறப்புரிமை” – நாச்சியார்கோவிலில் தோழர் கொளத்தூர்மணி பேச்சு. தஞ்சைமாவட்டம் திருவிடைமருதூர்ஒன்றிய திராவிடர்விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் 17.10.2016 அன்று மாலை 6மணியளவில் நாச்சியார்கோவில் வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட சுயமரியாதைச்சுடரொளி குடந்தைஆர்பிஎஸ்ஸ்டாலின் நினைவு மேடையில் தலைமை கழக பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்றது. துவக்கத்தில், மக்கள்பாடகர் பள்ளத்தூர்நாவலரசன் குழுவினரின் பகுத்தறிவு பண்பாடும் இசை நிகழ்;ச்சி நடைபெற்றது. கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு, நாகை மாவட்ட செயலாளர் தெ. மகேசு, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். பின்னர், பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று கழகபேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை உரையாற்றினார். இறுதியாக, கழகத்தலைவர் தோழர்கொளத்தூர்மணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், ஜாதி ஒழிப்பிற்கு ஒரு இடைக்கால நிவாரணம்...
காவிரி உரிமைக்கு பேராவூரணியில் கழகம் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், கர்நாடக தமிழர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கன்னட வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பேராவூரணி-சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். கழகப் பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன், தமிழக மக்கள் புரட்சி கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஆயர் த.ஜேம்ஸ், தி.வி.க காளிதாஸ், சிபிஐ ராஜமாணிக்கம், சித்திரவேல், சிபிஎம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தா.கலைச்செல்வன், த.ம.பு.க மூர்த்தி, சம்பத், ஆயில் மதி, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், கு.பாரி, திருக்குறள் பேரவை கொன்றை சண்முகம், மதிமுக பாலசுப்பிரமணியன், குமார், கண்ணன், தேமுதிக சீனிவாசன், பழனிவேல், த.ம.மு.க ஆசீர்வாதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 29092016 இதழ்
தமிழர் மீதான வன்முறையைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் பேராவூரணி 20092016
கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான வன்முறையைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள் 20092016 மாலை 4 மணி இடம் பேராவூரணி அண்ணா சிலை அருகில் தலைமை தோழர் சித. திருவேங்கடம், தஞ்சை மாவட்ட அமைப்பாளர் திவிக கண்டன உரை தோழர் பால் பிரபாகரன் பரப்புரை ச் செயலாளர், தவிக தோழர் ஆறு. நீலகண்டன் கொள்கை பரப்புச் செயலாளர், தமபுக மற்றும் சனநாயக முற்போக்கு இயக்கத் தோழர்கள் தொடர்புக்கு 9865621895 9524428253
மன்னார்குடி பரப்புரை பயண காட்சிகள் !
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் ஆரம்பித்து கிராமங்கள்,ஊர்கள், நகரங்கள் வழியாக பயணித்து மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது
வேளாண் கடனையும்,கல்விக்கடனையும் விலக்கிக்கொள்ள வலியுறுத்தி தெருமுனைக் கூட்டம்.
பேராவூரணி ஜூலை 26. பேராவூரணி அருகில் ரெட்டவயல் கடைத்தெருவில் வேளாண் கடனையும்,கல்விக்கடனையும் விலக்கிக்கொள்ள வலியுறுத்தி தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. வீரக்குடி ராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக மற்றும் இந்திய அரசுகள் மாணவர்களின் கல்விக் கடனை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும், வங்கிகள் அளித்த கடனை வசூலிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும், வியாபார நோக்கில் செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை இலவயமாகக் கல்வியை வழங்க வேண்டும், கல்விக் கடன் என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனங்களை வளர்க்கும் போக்கை அரசு கைவிட வேண்டும், தனியார் பன்னாட்டு நிறுவனங்களின் வேளாண் வாகனங்களை விற்பனை செய்திட வேளாண் கடன்களைக் கொடுத்துவிட்டு உழவர்களைக் கடனாளியாக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும், வேளாண் உற்பத்திக்குத் தேவையான அனைத்துச் செலவினங்களையும் அரசே மானியமாக வழங்கி வேளாண் உற்பத்தியைப் பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...
சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
மத்திய மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும்,மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் 08-.07.2016 அன்று மாலை 4 மணிக்கு ,மயிலாடுதுறை.,சின்னக்கடை வீதி,நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. நகர அமைப்பாளர் G.R..செந்தில் குமார் தலைமை தாங்கினார்.மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டியக்கம் பேராசியர் ஜெயராமன் அவர்கள் கண்டன உரையாற்றினார். மேலும் சபீக் அகமது SDPI கட்சி, அப்துல் கபூர்,மனித நேய மக்கள் கட்சி.சுப்பு.மகேஷ்,தமிழர் உரிமை இயக்கம். வழக்குறைஞர் சங்கர்,கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம்.வேலு.குணவேந்தன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு தனி சட்டம் இயற்றவேண்டும்” தலைவர் கொளத்தூர் மணி பேச்சு மன்னார்குடி அம்பேத்கர் பிறந்த நாள் 18042016
”ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு தனி சட்டம் இயற்றவேண்டும்” அம்பேத்கர் 125வது பிறந்த நாள் விழாவில்’கழக தலைவர் கொளத்தூர் மணி பேச்சு மன்னார்குடி ஏப். 20. தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு உடனடியாக தனி சட்டத்தை இயற்ற வேண்டுமென அம்பேத்கர் 125வது பிறந்த நாள் விழா கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர்மணி பேசினார். புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி சிட்டி ஹாலில் கருத்தரங்கம் திருவாரூர் மாவட்ட செயலாளர் காளிதாசு தலைமையில் நடைபெற்றது. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நாகை மாவட்ட செயலாளர் மகேசு, மாவட்ட அமைப்பாளர் அன்பசரன், மாவட்ட பொருளாளர் விஜயராகவன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பூபதி கார்த்திகேயன், தஞ்சை மாவட்ட செயலாளர் சித.திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில் தலைவர்களின்...
மன்னார்குடியில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !
மன்னார்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, விடுதலைசிறுத்தைகள் திருவாரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திருமண விவகார தலையீட்டு தடுப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல் படுத்தவேண்டும் அம்பேத்கர் 125வது பிறந்த நாளில் திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை. மன்னார்குடி ஏப். 15. புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, விடுதலைசிறுத்தைகள் திருவாரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதுகுறித்து திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்டசெயலாளர் இரா.காளிதாசு கூறியது, புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அரசு சார்பில் முழுஉருவ வெண்கல...
புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாள் கருத்தரங்கம் மன்னார்குடி 18042016
புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாள் கருத்தரங்கம். நாள் : 18.04.2016 திங்கள் மாலை 6 மணிக்கு இடம் : சிட்டி ஹால்,மன்னார்குடி. ”ஜாதி மறுப்பு திருமணங்களும்,ஆணவ படுகொலைகளும்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் உரையாற்றுகிறார்.
” ஜாதிய வறட்டு வன்மமே ஆணவ படுகொலைகளுக்கு அடிப்படை காரணம் ” – பேராவூரணி ஆர்ப்பாட்டத்தில் தோழர் எவிடென்ஸ் கதிர்
” ஜாதிய வறட்டு வன்மமே ஆணவ படுகொலைகளுக்கு அடிப்படை காரணம் ” பேராவூரணியில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக்கழக ஆர்பாட்டத்தில் தோழர் எவிடென்ஸ் கதிர் பேச்சு பேராவூரணி ஜாதி மறுப்பு திருமணம்செய்த சங்கர் உடுமலைப்பேட்டையில் ஜாதிய வெறியர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் பேராவூரணி அண்ணா சிலை அருகில் திராவிடர் விடுதலைக் கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம் தலைமையில் மார்ச் 25ம் தேதி மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் எவிடென்ஸ் கதிர் பங்கேற்று கன்டன உரையாற்றினார், அவர் தனது உரையில், ”ஜாதி மறுப்பு திருமணம் செய்த தோழர் சங்கர் தனக்கும் தன் மனைவியாகிய கௌசல்யாவிற்கும் கௌசல்யா உறவினர்களால் பலமுறை கொலை மிரட்டல் விடப்பட்டபோது இதுகுறித்து மடத்துக்குளம், குமரலிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு, புகார் மனு அளித்திருந்தார். ஆனால் புகாரை பெற்றுககொண்ட மேற்கண்ட...
‘ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் பெரியாரின் லட்சிய நோக்கமாக இருந்தது’ தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் கருத்தரங்கில் மன்னார்குடியில் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு
20.09.2015 அன்று திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் தஞ்சை பசு.கௌதமன் எழுதிய இந்து மதத்தில் அம்பேத்கரும் பெரியாரும் என்ற புத்தகத்தின் நூல் திறனாய்வு மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், முன்னாள் அமைப்பாளர் பாரி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில், இந்துத்துவ மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுதிதறிவு எழுத்தாளர்கள் நரேந்திரதபோல்கர், பேராசிரியர் கல்பர்கி ஆகியோரின் படத்தினை திறந்து வைத்து அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் உரையாற்றினர். அதனை தொடர்ந்த தஞ்சை பசுகௌதமன் எழுதிய இந்து...
தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல்
கழகத்தின் தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 12-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு பட்டுக்கோட்டை, அரசு பிளாசா அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாண்டொழிக மரணதண்டனை – பொதுக்கூட்டத்திற்கு திடீர் அனுமதி மறுப்பு
திராவிடர் விடுதலைக்கழக பிரச்சாரப் பொதுக்கூட்டத்திற்கு தடை மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழக பிரச்சாரப்பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்திய தண்டனை சட்டத்திலிருந்து மரண தண்டனை பிரிவை நீக்க வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் இன்று மாலை பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூடத்தில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் காளிதாசு, மதிமுக தலைமை கழக பேச்சாளர் விடுதலை வேந்தன் ஆகியோர் பேசுவதாக இருந்தது. இந்த கூட்டத்திற்கு ஏற்கனவே காவல்துறையில் முறையாக அனுமதி பெற்றதன் அடிப்படையில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிலையில் திடீரென மன்னார்குடி காவல்துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும் இக்கூட்டம் நடைபெற்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி நேற்று (2ம் தேதி) நள்ளிரவு 11 மணிக்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தனர். இதுபற்றி திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் காளிதாசு கூறுகையில் மன்னார்குடியில்...