ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் – ஒரு கிராமம்
ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதலர்களுக்கு புகலிடமும் பாதுகாப்பும் தரும் கிராமம் எஸ்.பட்டி. இளவரசனை ஜாதி வெறி பலி கொண்ட அதே தர்மபுரியில்தான் இந்த கிராமமும் இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பட்டிகள் உருவாக வேண்டும். தமிழ்நாட்டில் ஆச்சரியமான காதல் கிராமம் ஒன்று இருக்கிறது. 1500 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதைவிட அதிசயம் என்னவென்றால், பல்வேறு பகுதிகளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 200 ஜோடிகளின் உண்மைக் காதலை உணர்ந்து, அந்த கிராமத்தில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். இந்த அதிசய காதல் கிராமத்தின் பெயர் எஸ்.பட்டி. தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காதல் திருமணங்களுக்கும், கலப்புத் திருமணங்களுக்கும் அடையாள சின்னமாக விளங்கி வரும் எஸ்.பட்டியில் இதுவரை நூற்றுக்கணக்கான காதல் திருமணங்கள் நடந்துள்ளன. அந்த காதல் தம்பதிகள் சமூக இடர்பாடுகளை...