நம்மாழ்வார் முடிவெய்தினார்
வேளாண் துறையில் பன்னாட்டு ஊடுருவலை எதிர்த்தும், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் அரசுப் பதவிகளை உதறிவிட்டு, மக்களோடு மக்களாக இணைந்து போராடிய நம்மாழ்வார் (75) 30.12.2013 திங்கள் கிழமை அன்று முடிவெய்தினார்.
செயற்கை உரங்களற்ற இயற்கை விவசாயத்தை மக்களிடையே பரவச் செய்வதில் அவர் முனைப்புடன் செயல்பட்டார். கிராமப் புத்துருவாக்கம், கிராம வாழ்க்கை போன்ற கருத்துகளில் நமக்கு மாறுபாடு உண்டு என்றாலும், அவரது எளிமையும், அர்ப்பணிப்பு உணர்வும் போற்றத் தகுந்தது. வேளாண் துறைகளையும் கடந்து ஈழத் தமிழர்களுக்கும் மனித உரிமைக்கும் குரல் கொடுத்து வந்தவர் நம்மாழ்வார்.
திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது
பெரியார் முழக்கம் 02012014 இதழ்