தமிழக அரசை கண்டிக்கிறோம்
ஆசிரியர்கள் தேர்வில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வர்களுக்காக சமூக நீதியை புதை குழிக்கு அனுப்பிய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இப்போது புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் அமைக்க விருக்கும் உயர்தர மருத்துவமனை யின் மருத்துவருக்கான தேர்விலும் இட ஒதுக்கீட்டைப் புறக்கணித் துள்ளது வன்மையான கண்டனத் துக்கு உரியது.
இதற்காக வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில் மருத்துவர் தேர்வில் இடஒதுக்கீடு முறை மறுக்கப்பட் டுள்ளது. ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரில் மருத்துவமனை தொடங்கப்படுவதால் இடஒதுக் கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள் இதற்கு தகுதியானவர் களாக மாட்டார்கள் என்று அரசு கருதுவது பார்ப்பனியக் கண் ணோட்டமேயாகும்.
இடஒதுக்கீடு தகுதி திறமைக்கு எதிரானது என்று பார்ப்பனர்கள் கூறும் கருத்தை ஜெயலலிதா ஆட்சியும் வழி மொழிகிறது.
‘சமூக நீதிகாத்த வீராங்கனை’ என்ற விருது பெற்ற முதல்வர் ஜெயலலிதா, இப்போது சமூக நீதியைப் புறக்கணிக்கும் வீராங்கனையாகி வருகிறாரா என்று கேட்க விரும்புகிறோம்.
இடஒதுக்கீட்டுக் கொள்கையை படிப்படியாகக் கைவிடுவதற்கான முயற்சியின் தொடக்கப் புள்ளி யாகவே நாம் இதைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி இயக்கங்களால் ஒருமித்து ஏற்கப் பட்ட சமூக நீதிக் கொள்கையை கைவிடும் முயற்சி மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதேபோல்,
தில்லை நடராசன் கோயிலை மீண்டும் பார்ப்பன தீட்சதர்களிடம் ஒப்படைப்பதில் இந்த அரசு ஆர்வம் காட்டியதால் அது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் சிறப்பு வழக்கறிஞரை நியமித்து வாதாடாமல் தவிர்த்தது.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கோயில் முறைகேடுகள் நடந்ததைத் தொடர்ந்து நிர்வாகத்தைக் கவனிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்ட போது, தீட்சதப் பார்ப்பனர்கள் ஜெய லலிதாவிடம் முறையிட்டனர்.
அப்போது, தாம் ஆட்சிக்கு வந்த பிறகு, இதை சரி செய்வதாக ஜெயலலிதா உறுதி கூறினார். அதைத்தான் இப்போது சிறப்பு வழக்கறிஞரை வைத்து வாதாடாமல், ஒதுங்கியதன் மூலம் செய்து காட்டியுள்ளார். தீட்சதர்களுக்காக வாதாடிய சுப்ரமணியசாமி, தமிழக அரசைப் பாராட்டி யிருக்கிறார்.
மீண்டும் தில்லை நடராசன் கோயில் நிர்வாகம், தீட்சதப் பார்ப்பனர்களிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்துவிட்டது.
பார்ப்பனர்களின் பாராட்டுதல் களுக்காக ஆட்சியாளரின் பாதை திசை மாறுகிறது.
தமிழ்நாட்டின் பெரும் பான்மை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த ஆட்சி சமூகநீதியை புதைப்பதற்கு வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவிருப்பதை மறந்து விட வேண்டாம்.
பெரியார் முழக்கம் 09012014 இதழ்