சன் தொலைக்காட்சி வீரபாண்டியனுக்கு பா.ஜ.க. மிரட்டல்
மதவாத அரசியல் குறித்துக் கருத்துக் கூறிய ஊடகவியலாளர் சன் தொலைக்காட்சி வீர பாண்டியன் மீது பா.ஜ.க. தொடுத்துள்ள தாக்குதல் தொடர்பாக அரசியல் தலைவர்களும் ஊடகவிய லாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் கண்டித்து ஜன. 7 அன்று வெளியிட்ட கூட்டறிக்கை:
மதவாதத்திற்கு எதிராகப் பேசியதால் சன் தொலைக்காட்சியின் அரசியல் விமர்சகர் வீரபாண்டியனை பணியிலிருந்து நீக்க வேண்டு மென மதவாத சக்திகள் வலியுறுத்தியுள்ளதை மதச் சார்பின்னைம மீது நம்பிக்கைக் கொண்டுள்ள இந்த கூட்டறிக்கையில் கையொப்பம் ஈட்டுள்ள நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு மனித உரிமை அமைப்பு ஒன்றின் சார்பில், முசாபர் நகரில் சிறுபான்மையினர் மீதான வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்று வெளி யிட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீரபாண்டியன் பா.ஜ.க. மீது சில விமர்சனங்களை முன் வைத்துப் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. வின் மாநில அலுவலகச் செயலாளர் கி.சர்வோத்தமன், சன் தொலைக்காட்சிக் குழும மேலாண் இயக்குநருக்கு டிசம்பர் 23 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் வீரபாண்டியன் பேச்சு இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்துவதாகவும், வீரபாண்டியன் தொலைக்காட்சியில் நடத்தும் நிகழ்ச்சிகள் நடுநிலையோடு இருக்காது எனவும் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளார்.
‘அவர் முன்னின்று நடத்தும் விவாத நிகழ்ச்சி களில் பா.ஜ.க. சார்பில் யாரும் கலந்து கொள்ள மாட்டோம்’ என்றும் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல் ஆணையரிடமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்துள்ளதாக தெரிய வருகிறது.
இதன் பின்னர், கடந்த வாரம் சனிக்கிழமை முதல் அவர் நடத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட வில்லை. இந்த அணுகுமுறை ஜனநாயகத்தின் மீது அக்கறைக் கொண்டோராகிய எங்களுக்கு மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது.
ஊடகங்களில் ஒரு ஊடகவியலாளர் நடு நிலையாக இருந்து கருத்துரைக்க வேண்டுமென் பதுதான் அறம். அதனாலேயே அவருக்குச் சொந்த கருத்தோ அல்லது அரசியல் பார்வையோ இருக்கக் கூடாது என்பது தவறானது. இதர குடிமக்களுக் குள்ள அனைத்து அரசியல் உரிமைகளும் ஊடக வியலாளர்களுக்கும் உண்டு.
பல்வேறு வகையில் அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துக்களுக்கும் இடமளித்து வரும் சன் தொலைக்காட்சி நிர்வாகம், வீரபாண்டியன் நடத்தும் அரசியல் விவாத நிகழ்ச்சி தொடர ஆவன செய்து, கருத்துரிமை, பேச்சுரிமைக்கு தொடர்ந்து மதிப்பளித்திட வேண்டும் என கேட்டுக் கொள் கிறோம்.
இந்திய அரசியல் சட்டம் வகுத்துள்ள மதச் சார்பின்மைக்கு அச்சுறுத்தல் விடுத்து செயல்பட்டு வரும் மதவாதக் கட்சிகள் இதுபோன்ற ஊடக வியலாளர்களுக்கு நேரடி அச்சுறுத்தல்கள் விடுப்பதை அனைத்து அச்சு மற்றும் காட்சி ஊடகத்தினர் கண்டிக்க முன்வர வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த கூட்டறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் கழக சார்பில் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் கையெழுத்திட் டுள்ளார். மேலும், ஞான தேசிகன், எம்.பி., (காங்.), மத்திய அமைச்சர் இ.எம். சுதர்சன் நாச்சியப்பன், தா.பாண்டியன் (சி.பி.ஐ.), தொல். திருமாவளவன் (விசிக), கி.வீரமணி (தி.க.), எம்.எச். ஜவாஹி ருல்லா, எம்.எல்.ஏ. (மமக), கே.எம். காதர் முகைதீன், எம்.பி. (முஸ்லிம் லீக்), சீமான் (நாம் தமிழர்), சுப. வீரபாண்டியன், தமுஎக மாநிலத் தலைவர்
ச. தமிழ்ச் செல்வன், கவிக்கோ அப்துல் ரஹ்மான், பேராசிரியர் அ. மார்க்ஸ், கவிஞர் மனுஷ்ய புத்திரன், ஜே.எஸ். ரிபாயி (தமுமுக), பேராயர்கள் எஸ்றா. சற்குணம், தேவ சகாயம், பத்திரிகை யாளர்கள் அ. குமரேசன், ஞாநி, டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்ட பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.
பெரியார் முழக்கம் 16012014 இதழ்