நடராசன் ‘நர்த்தன தாண்டவத்தின்’ கதை
தில்லை நடராசன் கோயில் நிர்வாக உரிமையை தீட்சதப் பார்ப்பனர்களிடம் மீண்டும் ஒப்படைத்து விட்டது உயர்நீதிமன்றம். தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியும் இதற்கு மறைமுகமாக உதவியிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் அனைத்துக் கோயில் களும் கொண்டு வரப்பட்டாலும், தில்லை நடராசன் கோயில் நிர்வாகம், வழிபாடு இரண்டையும் பார்ப்பனர்களிடமிருந்து பறி போய்விடக் கூடாது என்று துடிக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டிலேயே இந்த நிலை என்றால், கடந்த நூற்றாண்டுகளில் பார்ப்பனர்களின் ‘கோரத் தாண்டவம்’ எப்படி இருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இந்த நிலையில் தில்லை நடராசன் கோயில், பெண்ணடிமை – வர்ணாஸ்ரமத் திமிரின் கோட்டையாகவும், சைவ வைணவ மோதல் களமாகவும் இருந்து வந்துள்ளதற்கான வரலாற்றுத் தகவல்களை இங்கு வெளியிடுகிறோம்.
சைவத்தின் பெருமை பேசும் தில்லை நடராசன், தன்னுடன் போட்டிக்கு வந்த பெண் தெய்வத்தை எப்படி சூழ்ச்சியில் வெற்றி பெற்றான் என்பதைக் கூறுகிறார் அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி.
சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சில பேர் அவரது ஆலயத்துக்கு சென்று தரிசனமும் செய்திருப்பீர்கள். இந்த ஸ்தலத்துக்கு விசேஷமே சிவபெருமானான நடராஜ பெருமானின் நர்த்தனம்தான்.
ஒருநாள்… மிகப் பழைய காலத்தின் அழகான நாள்… சிதம்பரத்தில் ஒரு போட்டி நடனப் போட்டி… கலந்து கொள்பவர்கள் யார், யார்? பரமசிவன், தில்லை காளி.
யாரிந்த தில்லை காளி? சிவபெருமானுடன் நடனப் போட்டி போட வந்தவள். மிகச் சிறந்த நர்த்தன நாட்டியக்காரி. இயற்கையிலேயே ஆண்களைவிட பெண்கள்தான் நடன அசைவுகளிலும், இசைத் துடிப்புகளிலும் அழகாக இழைவார்கள்.
புருஷர்கள் ஆடும்போது ஏற்படும் ரசனையைவிட ஸ்தீரிகள் நர்த்தனமாடும்போது அதிகபட்ச அழகு மிளிரும். இது இயற்கையின் ஏற்பாடு. அதிலும்… தில்லை காளி நடனப் பயிற்சி பெற்றவள். பின் சொல்ல வேண்டுமா? அவளது சலங்கை ஒலி கேட்டு காற்றே ஆடிப் போகும். அவளது நடனத்துக்குப் போட்டியாக ஆட வருபவர்களே ஆடிப் போய்விடுவார்கள்.
இப்படிப்பட்ட தில்லை காளிதான் சிவபெரு மானின் நடனப்போட்டிக்கு வந்தாள். ஏற்பாடுகள் நடந்தன. இரண்டு மேடைகள் எதிரெதிரே. அதில் தான் சிவபெருமானும் காளியும் நடனமாட வேண்டும். கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்டம் தொடங்க இருக்கிறது. போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என கூடியிருந்தவர்களிடையே ஒரு கிசுகிசு பேச்சு நுழைந்து நெளிந்து கொண்டிருந்தது. தொடங்கியாகிவிட்டது. தனது ஆர்ப்பாட்டமான அசைவுகளோடு ஆட ஆரம்பித்தாள் காளி. அவளது பாதங்கள் சலங்கைகளை ஒலியாடு சுருதி சேர்த்தன. காளியின் கை விரல்கள் காற்றில் நடனச் சித்திரங்கள் தீட்டின.
மறுபக்கம் சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித் தார். சிவனின் தாண்டவத்தை ஐந்து வகையாக அவரது அடியார்கள் போற்றுவர். அற்புத தாண்டவம், அநவாத தாண்டவம், ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், சங்கார தாண்டவம். இங்கே சிவன் ஆடியது, ஆனந்த தாண்டவம்.
காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங் களும் பார்ப்பவர்களை வசீகரித்தன. சிவனின் தாண்ட வம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை… பார்த்தார் சிவபெருமான். ஒரு பெண்ணிடம் நான் தோற்பதா? அவள் கால்கள் செய்யும் நடனம் அவருக் குள் கலவரம் செய்தது. ‘ஆஹா… சிவபெருமானை தில்லை காளி ஜெயித்து விட்டாளே’ என குரல்கள் கிளம்பப் போகிற நேரம்… இனியும் இவளை ஆடவிடக் கூடாது என முடிவு கட்டிய சிவன்… தன் இடதுகாலை சற்றே தூக்கினார். நடனத்தின் ஒரு வகைதான் என நினைத்து ஈடு கொடுத்து ஆடிக் கொண்டிருந்தாள் காளி. சிவனின் இடதுகால் இன்னும் எழும்பியது. ஆமாம்… இன்னும் உயரமானது. கொஞ்சம் கொஞ்சமாக இடது காலை விலக்கி எடுத்துச் சென்ற சிவபெருமானின் திட்டம் பலித்தது. வலதுகாலை ஊன்றி இடதுகாலை உயர விலக்கிக் கொண்டே போக… சபையே ஒரு கணம் அதிர்ந்தது. ஏன்? வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காகத்தான் இடதுகாலை விலக்கி தூக்கி யிருக்கிறார் சிவன்.
வெற்றியின் விளிம்பில் நடனமாடிக் கொண் டிருந்த தில்லை காளி, இக்காட்சியை பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது. தலைகுனிந்தாள். தனக்கு முன் ஒரு ஆண் இப்படிப்பட்ட கோலத்தில் நிற்பதை எந்தவொரு பெண் பார்த்துக் கொண்டே தன் வேலையை தொடருவாள்? காளியின் நர்த்தனம் நின்றதா? நிறுத்தப்பட்டது. ஆனால், சிவபெருமான்… தொடர்ந்து தாண்டவ மாடிக் கொண்டே இருந்தார். ஆக… சிவன் ஜெயித்தார் என்றாகிவிட்டது.
வலதுகாலை ஊன்றி இடது காலை தூக்கி சிஷ்டத்தை வெளிக்கொண்டுவந்து… ஜெயித்து விட்டார். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? ‘இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது. இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம். இதை நானாக சொல்ல வில்லை. “நடராஜ மகாத்மியம்” என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக் கிறது. அதாவது சிதம்பரம் சொல்லும் செய்தி என்ன?
ஆணிடம் பெண் போட்டி போடக் கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும் ஜெயித்துவிடக் கூடாது. அவளை தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
தோற்றவள் காளி. காளி… ஆகமத்துக்கு அப்பாற்பட்ட காவல் தெய்வம். இங்கேதான் முக்கியமான இன்னொன்றை கவனிக்க வேண்டும். “ளுiஎய ளை ய hiபா ஊடயளள ழுடின. ரெவ முயடi ளை ய டடிற உடயளள சரசயட ழுடின” என்று காளி ஒதுக்கப்பட்டாள். எங்கே?
இன்னமும் நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய் தில்லை காளி எங்கே என்று கேளுங்கள். கோயிலுக்கு வெளியே வடக்கு நோக்கி கை காட்டுவார்கள். கிட்டத்தட்ட 1 கிலோ மீட்டர் தூரத்தில் சிதம்பரத்தின் எல்லையில் ஒரு சின்ன கோயிலுக்குள் கோபமாக உட்கார்ந்திருப்பாள் காளி.
‘அதாவது ஆணுக்கு பெண் போட்டி போட முடியாது. போட்டியிட்டால் இப்படித்தான் விரட்டப்படுவாள்’ என்று நமக்கு நடராஜர் மூலம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள் காளி. இன்னும் சிதம்பரம் கோயிலில் அர்ச்சனையில் ஈடுபடும் தீட்சிதர்கள் அக்காளியை திரும்பிக்கூட பார்ப்பதில்லை. இவ்வாறு தெய்வங்களுக்கிடை யிலேயே ஆண்-பெண் பேதம் போற்றி வளர்க்கப்பட் டிருக்கிறது. அதோடு வர்க்க பேதமும் பின்பற்றப்பட் டிருக்கின்றன – என்று எழுதியுள்ளார் அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரி.
(நன்றி: ‘இந்து மதம் எங்கே போகிறது?’ நக்கீரன் வெளியீடு)
பெரியார் முழக்கம் 16012014 இதழ்