ஆர்.எஸ்.எஸ்.சின் சதி : மு.க. ஸ்டாலின் விளக்கம்
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, கிருஷ்ணன் குறித்துப் பேசியதாக வன்முறையில் இறங்கியிருப்பது ஆர்.எஸ்.எஸ். சதி என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி: கேள்வி: திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கி.வீரமணி அவர்கள் கிருஷ்ணனைப்பற்றி தவறாகப் பேசியதாக சொல்கிறார்களே, அதை தி.மு.க. ஏற்றுக்கொள்ளுமா? மு.க.ஸ்டாலின்: அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சல்ல அது. ஏற்கெனவே அவர் திராவிடர் கழகத் தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய பெரியார் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பேச்சாகும். யாரையும் கொச்சைப்படுத்தியோ, கேவலப்படுத்தியோ பேச வேண்டும் என்கிற நோக்கத்தோடு பேசவில்லை. அவர் சில உதாரணங்களைச் சொல்லி பேசியிருக்கிறார். அதை இன்றைக்கு சில ஊடகங்கள், ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகள் தேர்தல் நேரத்தில், அதனை தவறாகத் திரித்து, மக்களிடத்தில் தவறான பிரச்சாரத்தினைக் கொண்டு போக வேண்டும் என்கிற நோக்கில் திட்டமிட்டு செய்திருக்கின்ற சதி இது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், பேரறிஞர் அண்ணாவின்...
