‘இராமனை’ எரித்தத் தீயம்மா…!

அன்பின் அடைக்கலமே

தூய ஆற்றலின் பிறப்பிடமே

மாதர் போற்றும் மங்கையரான

மாசில்லாத மணியம்மையே

மங்கையர் உலகமே

நூற்றாண்டின் திலகமே

மதித்திடும் பெண்மையே

மணியான அம்மையே  – அன்பின்

சிறுவயதிலே தொண்டுகள் செய்யும்

தொண்டராகவே நீயானாய்

சிறுபிள்ளையாக ஈவேராவை

கண்போல் காத்துத் தாயானாய்

ஏச்சையும் பேச்சையும் ஏற்றுக் கொண்டு

எல்லோர் நலனும் நீ காத்தாய்

எளிய உடையில் பவனி வந்துநீ

பகுத்தறிவினிலே நீ பூத்தாய்

– மங்கையர் உலகமே

ஈவேராவின் ஆயுட்காலத்தை

நீட்டித்தவளும் நீயம்மா

நீடில்லாத தியாகச் சுடராய்

ஈகை அளித்த தாயம்மா

இராவணலீலா நிகழ்விலேயே

இராமனை எரித்தத் தீயம்மா

இராவும் பகலும் இயக்கப் பணியை

இணைந்து செய்த மணியம்மா

– மங்கையர் உலகமே

சுயமரியாதைப் பிரச்சாரத்தை

சுற்றிச் சுற்றி செய்தவளே

அனைவரும் அர்ச்சக ராகஎண்ணியே

மறியல் கிளர்ச்சி செய்தவளே

இயக்க நூல்களை சுமந்து சென்று

பல இதயத்தில் சேர்த்தவளே

இந்த சமூகம் ஏற்றம்பெறவே

எறும்பாய் உழைத்துக் காத்தவளே

– மங்கையர் உலகமே

 

– ‘விரட்டு’ கலைக்குழுவைச் சார்ந்த

பாடகர் சித்திரைச் சேனன் எழுதி

இசையமைத்துப் பாடிய பாடல்

நிமிர்வோம் மார்ச் 2019 மாத இதழ்

You may also like...