மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் யார்?
மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழிலில் ஈடுபடும் மிகப் பெரும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் உயர்ஜாதி இந்துக்கள் தான். அது குறித்த சில விவரங்களைப் பார்ப்போம்:
- மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தக நிறுவனங்களை நடத்தும் பெரிய நிறுவனங்களின் பட்டியலைப் பார்த்தால் அவர்கள் இஸ்லாமியர்களோ, கிறிஸ்துவர்களோ, தலித்துகளோ அல்ல. அத்தனை பேரும் ‘இந்து’க்கள். கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அதிகமாக தேர்தல் நிதி கொடுத்தவர்களும் இவர்கள்தான்.
இதோ மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் பட்டியல்:
- ஆண்டுதோறும் 19,30,000 டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்து உலக மாட்டிறைச்சி ஏற்றுமதி சந்தையில்
16 சதவீத இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. உலகில் இந்தியா மூன்றாவது இடத்தில் நிற்கிறது.
அல்கபீர் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்: இந்தியாவிலேயே அதிக அளவு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் அந்த கம்பெனியின் பெயர் மட்டும்தான் முஸ்லிம் அடையாளம். இதை நடத்தும் முதலாளி சதீஷ்சபேர்வால் என்ற இந்து. தெலுங்கானா மாநிலத்தில் ருத்ராக் எனும் கிராமத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் இவரது இறைச்சி வெட்டும் வளாகம் அமைந்துள்ளது. பல உலகநாடுகளில் இதன கிளைகள் செயல்படுகின்றன.
அரேபியன் ஏற்றுமதி நிறுவனம் : உரிமையாளர் பெயர் சுனில் கபூர் என்ற இந்து. மும்பையில் தலைமை அலுவலகம் இயங்குகிறது.
எம்.கே.ஆர். ஃபுரோஸன் ஃபுட் பிரைவேட் லிமிடெட் : உரிமையாளர் மதன் அபோத் – டெல்லியைச் சார்ந்தவர்.
அல்நூர் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் : முஸ்லிம் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இதன் உரிமையாளர் சுனில் சூட் என்ற இந்து. இந்து சாமியார் ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ள உ.பி. – முசாஃபர் மாவட்டத்திலுள்ள ஷெர் நகர் கிராமத்தில் தான் இவரது மாட்டிறைச்சி வெட்டும் வளாகம் அமைந்துள்ளது.
உ.பி. உனானோ மாவட்டத்தில் ஏ.ஒ.பி. எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் என்ற மாட்டிறைச்சி நிறுவனம் செயல்படுகிறது. உரிமையாளர் ஒ.பி. சுராரா என்ற இந்து. இந்த உனானா கிராமத்தில் தான் மாட்டிறைச்சி வெட்டியதாக தலித்துகள் சங்கிகளால் கொல்லப்பட்டனர்.
ஸ்டான்டர்ட் ஃபுரோசன் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம்,
உ.பி. மாநிலம் சந்தப்பூர் கிராமத்தில் செயல்படுகிறது. உரிமையாளர் கர்னல் வர்மா என்ற இந்து.
மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி வணிகத்தில் முன்னணியில் நிற்கும் நிறுவனம், மகாராஷ்டிரா ஃபுட் பிராசசிங் லிமிடெட் என்று நிறுவனம். இதன் பங்குதாரர்களில் ஒருவரான சுனில்கத்தார் என்ற இந்து ‘தர்ம் அவுர் தந்தா’ என்ற தத்துவத்தைப் பேசுபவர். அதாவது மதம் என்பது வேறு; வணிகம் என்பது வேறு; இரண்டையும் ஒன்றாக்கக் கூடாது என்பது இவரது கொள்கை.
ஆனால் பசு மாட்டிறைச்சி சாப்பிடும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், தலித் மக்கள் – இந்துமத விரோதிகள், புனிதமற்றவர்கள் என்றும், இந்துக்கள் பசுவை புனிதமாகக் கருதுகிறவர்கள்; மாட்டிறைச்சிச் சாப்பிடாதவர்கள் என்றும் பொதுப் புத்தியில் சங் பரிவாரங்கள் தவறான கருத்தைத் திணித்து வைத்துவிட்டன.
வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்கள் மாட்டிறைச்சி உணவுக் கலாச்சாரத்தில் மூழ்கிப் போனவர்கள். அங்கெல்லாம் பா.ஜ.க. மாட்டிறைச்சிப் பிரச்சினைப் பற்றி வாய் திறப்பதே இல்லை.
நிமிர்வோம் ஏப்ரல் 2019 மாத இதழ்