Tagged: தோழர் ஃபாரூக்

இஸ்லாம் குறித்து பெரியார் பார்வை

[இஸ்லாம் குறித்து பெரியார் நபிகள் விழாவிலே பேசிய கருத் துகளின் தொகுப்பு; இஸ்லாமிய மதத்தின் மீதான தனது விமர் சனங்களை இஸ்லாமியர்களிடையே பெரியார் பேசியதை இத் தொகுப்பிலிருந்து அறியலாம்] மதம் வாழ்க்கைக்கு தேவையா? மக்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்த காலத்தில்-கல்வி அறிவு உலக அனுபவம் ஞானம் இல்லாதிருந்த காலத்தில்மக்களை நல்வழிப்படுத்து வதற்கு என்று ஒரு சமயம் மதம் என்பதாக கற்பனை செய்து மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி அவர்களது ஞானமற்ற சுதந்திரத்தை அடக்க ஏற்பாடு செய்ததாக இருக்கலாம். ஆனாலும் இன்று உலகம் பொருள் தத்துவ ஞானமும் விஞ்ஞான ஞானமும் ஏற்பட வசதி ஏற்பட்டு பெருகிவரும் நாளில் காட்டு மிராண்டித்தன காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மதமும், மத உணர்ச்சியும் எதற்கு என்றுதான் கேட்கின்றோம். இந்தப்படி நாம் சொல்லும் போது இதற்கு வேறுவழியில் சமாதானம் சொல்லமுடியாத மக்கள் சிலரால் இரண்டு விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவையாவன, ஒன்று “மதத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகின்ற நீங்கள், அந்த இடத்தில்...

தோழர் ஃபாரூக் துணைவியார் கடை திறப்பு விழா கோவை 31052017

தோழர் பாரூக் துணைவியார் புதிதாக துவங்கவுள்ள   பா (faa) collection நாளை காலை 10 மணிக்கு  திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துறை அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வருக.. பேச 9677404315

தோழர் ஃபாரூக் நிதியளிப்பு புதுச்சேரி 08042017

08042017 அன்று புதுவை, அரியாங்குப்பம், கரும்புலி மில்லர் அரங்கத்தில், புதுவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தோழர் ஃபாரூக் குடும்பநிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு தோழர் லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். தோழர்கள் தந்தைபிரியன், வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் முன்னரே நிதி அளித்தவர்கள் அல்லாமல் ஏராளமான பேர் நேரில் நிதி வழங்கினர். நிதியினைப் பெற்றுக் கொண்ட கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஃபாரூக் படுகொலை, இசுலாமிய அமைப்புகளின் தொடர்வினை, வழக்கின் தன்மை போன்றவற்றை விளக்கிப் பேசினார். அந்நிகழ்வில் ரூ.1,84,100-00 வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் ரூ.15,900-00 அனுப்பி மொத்த நிதியை ரூ.2,00,000-00மாக முழுமைப் படுத்தினர்.

இப்படிக்கு ஃபாரூக் – தோழர் கண்மணி கவிதை

எரிபொருளு இல்லாம எங்கேயோ தவிக்கறன்னு, என்வீட்டப் பாக்காம, ஒன்னப்பாக்க வந்தேனே. பகுத்தறிவு அப்பாவோட பாசமாக வளர்ந்தபுள்ள, பாதியில தவிச்சுநிக்க என்னநீயும் கொன்னுபுட்ட. மதமெல்லாம் பொய்யுன்னு, மனிதம் மட்டும் மெய்யுன்னு, பகுத்தறிவு ஊட்டத்தானே பெரியாரின் பிள்ளையாக பூமியிலே வாழ்ந்தேனே. என் கழுத்த அறுக்கையிலே எங்கே என் அப்பான்னு, ஏங்கியழுமே புள்ளைங்கன்னு, ஏன்டா நீயும் மறந்துபுட்ட. கடவுள்தானே இல்லையின்ன, காதல் உண்டு எப்போதும். காவியமாய் வாழ்வதற்குள் காதல்செய்த துணைவியாளை., தவிக்கவிட்டு போறேனே. கடவுளிருக்குனு சொன்ன நீ, கருணைகூட இல்லாம., வயிற்றில்குத்தி துளையிட்டு கழுத்தறுத்து உயிரெடுத்த எந்தன் உயிர்நண்பனே!! இப்போதும் சொல்கிறேனே. மாண்டுபோய்விட்டாலும், மண்ணாகிச் சொல்கிறேனே. கடவுள் எங்கும் இல்லையே! மதத்தாலே நீயும்தா மிருகமாகிப்போனாயே, கடவுள்தா எல்லான்னு கருணையற்று கொன்னாயே. உனக்கும்இனி தோன்றுமே, உந்தன் சிறை வாழ்விலே, கடவுள் எங்கும் இல்லையே. சாவைக்கண்டு அஞ்சாமல், சாகநானும் தயாரானேன். தோள் கொடுக்க கூட்டம் உண்டு. தோழமை என்னும் உறவுண்டு. பகுத்தறிவு பால்குடுக்க, எம்புள்ளைக்கொரு பள்ளியுண்டு. தி.வி.க என்னுமொரு...

தோழர் பாரூக் படுகொலை – கண்டனமும் காலத்தின் தேவையும் கருத்தரங்கம் சென்னை 04042017

04042017 திங்கட்கிழமை மாலை 6-00 மணியளவில் சென்னை, கவிக்கோ மன்றத்தில், துவக்கு இலக்கிய அமைப்பின் ஒருங்கிணைப்பில், தோழர் பாரூக் படுகொலை – கண்டனமும் காலத்தின் தேவையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் வரவேற்று துவக்கு இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர் கவிஞர் இசாக் உரையாற்றி, நிகழ்வினை நெறிப்படுத்தினார். திராவிட இயக்கத் தமிழர்ப் பேரவையின் முத்தையா குமரன், விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்ட செயலாளர் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முதன்மைத் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் ஆகியோரைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உரையாற்றினார். அவரது உரையில் பெரியார் இயக்கத்துக்கும், முஸ்லிம் அமைப்புகளுக்கும் நிலவும் நல்லுறவு பெரியார் காலம் முதல் இன்றுவரை தொடர்ந்துவரும் பாங்கினையும், சிறுபான்மை மக்கள்மீது எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் முதலில் களத்துக்கு வருபவர்கள் திராவிடர் கழகங்களைச் சார்ந்தோரே என்றும்,...

ஃபாரூக் நினைவேந்தல்: குடும்ப நிதி வழங்கல்

நாள்    :              16.4.2017 ஞாயிறு மாலை 4 மணி இடம்                 :               கோவை அண்ணாமலை அரங்கு (தொடர் வண்டி நிலையம் எதிரில்) உரை :               கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருஷ்ணன், இரா. அதியமான், வழக்கறிஞர் ப.பா. மோகன், கேரளயுக்திவாதி (பகுத்தறிவாளர்கள்) தோழர்களும், பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள். ஏற்பாடு           :               கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்.                 அனைவரும் வருக! பெரியார் முழக்கம் 13042017 இதழ்

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான  பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

 ‘கொள்கைக்காகவே பலியான மகனுக்காகப் பெருமை அடைகிறேன்’ “பெரியார் என்ற தலைவர் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவரது கொள்கைகள் பற்றி தெரியாது. ஆனால் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகள்தான் இன்றைய தேவையாக இருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு (மார்ச் 31) அளித்த பேட்டியில் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் தந்தை ஆர் ஹமீது (54) கூறியிருக்கிறார். “தந்தை பெரியாரின் கொள்கைகளை நான் படிக்கத் தொடங்கி விட்டேன்” என்றும் அவர் கூறினார். கோவை உக்கடம் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பிலால் எஸ்டேட் எனும் குறுகிய வீதியில் அவரது சிறிய வீட்டில் அமர்ந்து பேசிய அவர், “நான் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைவது என்று முடிவு செய்துள்ளேன்” என்றார். “மூட நம்பிக்கை களுக்கு எதிராக நான் போராடப் போகிறேன். ஆனால் மதங்களுக்கு எதிராகப் பேசுவதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. நம்முடைய ‘ஆன்மா’தான் கடவுள் என்று நம்புகிறேன்” என்றார்...

டெலிகிராப் இதழ் தோழர் ஃபாரூக் படுகொலை செய்தி

டெலிகிராப் இதழ் (Telegraph India) இசுலாமிய அடிப்படைவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்ட தோழர் பரூக் குறித்து எழுதியுள்ள கட்டுரை : https://www.telegraphindia.com/117…/…/7days/story_143977.jsp

தோழர் ஃபாரூக் குடும்ப நிதி – இனமுரசு சத்தியராஜ் ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்

இனமுரசு சத்தியராஜ் அவர்கள் தோழர் ஃபரூக் குடும்ப நிதியாக ௹பாய் ஒரு லட்சம் வழங்கினார். இனமுரசு சத்தியராஜ் அவர்கள், பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் இசுலாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் ஃபாருக் குடும்ப நிதியாக Rs 1,00,000/= (ரூபாய் ஒரு லட்சம்) வழங்கினார். அப்போது திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், மாவட்டச் செயலாளர் தோழர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், கழகத் தோழர் செந்தில் Fdl ஆகியோர் இருந்தனர்.

தோழர் ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள்  BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி

தோழர் ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள் BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி

ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள் BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி பாரூக் எப்படி கொல்லப்பட்டார்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? தமது அடுத்த கட்ட நகர்வு என்ன? ஃபாரூக் விட்டுச் சென்ற பணியை தொடர்வேன் என கூறினாரா? பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறார். ( 28.03.2017 BBC TAMIL)

தோழர் ஃபாரூக் குடும்ப நிதி திருப்பூர் இயற்கைக் கழகம் வழங்கியது

திருப்பூர் இயற்கைக் கழகம் (NATURE SOCIETY OF TIRUPUR) அமைப்பு கழகத் தோழர் ஃபாரூக் குடும்ப நிதி வழங்கியது. இசுலாமிய மத அடிப்படைவாதிகளால் பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட கழகத்தோழர் ஃபாரூக் அவர்கள் குடும்பத்திற்கு கழகம் நிதியை திரட்டி வருகிறது. அவ்வகையில் ஃபாரூக் குடும்பத்திற்கு நிதியாக திருப்பூர் இயற்கைக் கழகம் (NATURE SOCIETY OF TIRUPUR) அமைப்பின் தோழர்கள் 29.03.2016 அன்று மாலை Rs40,500/= (ரூபாய் நாற்பதினாயிரத்து ஐநூறு)ஐ கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்களிடம் வழங்கினார்கள். அப்போது திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் தோழர் முகில்ராசு,கழகத்தோழர் பரிமளராசன் ஆகியோர் உடனிருந்தனர்

தோழர் ஃபாரூக் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி 29032017

தோழர் ஃபாரூக் படுகொலையை கண்டித்து சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டம் 29032017 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 50 மேற்பட்ட தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மதவெறிக்கு எதிராய் முழக்கங்களை எழுப்பினர் செய்தி வைரவேல்

மதத்தை மறுக்கும் ‘இஸ்லாமிய’ நாத்திகர்கள் கடும் கண்டனம்

மதத்தை மறுக்கும் ‘இஸ்லாமிய’ நாத்திகர்கள் கடும் கண்டனம்

இஸ்லாமிய மதத்தை மறுத்து நாத்திகர் பண்பாட்டுக் கழகம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு சார்பாக சென்னை பாரூக் நினைவு கூட்டத்தில் அலாவுதீன் பதிவு செய்த கண்டனம்: பாரூக் பிறந்த சமூகம் சார்ந்த இஸ்லாம் சமயத்திலிருந்து வெளியேறி எம்மில் பெரும்பாலான நண்பர்களைப் போலவே தன்னையும் மதமற்றவராக இஸ்லாமிலிருந்து வெளியேறியவர் என்று அறிவித்துக் கொண்டார். அதோடு அல்லாமல் இஸ்லாம் என்பது அர்த்தமற்ற – அபத்தமானது. விமர்சனங்களுக்கும், விசாரணைகளுக்கும் அப்பாற்பட்டது அல்ல என்ற கருத்துகளையும் வலிமையாக வலியுறுத்தி வந்தார். பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் இந்து மதவெறியர்களுக்கு இணையாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பாமர இஸ்லாமிய மக்களை திட்டமிட்டு அரணாக்கிக் கொண்டு, தங்களது சொந்த இலாபத்திற்காக மதத்தின் பெயரால் மக்கள் அனைவரையும் பிளவுபடுத்தும் ஆபத்தான செயலில் ஈடுபடுவதையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். தந்தை பெரியார் உள்ளிட்ட பகுத்தறிவாளர்களின் அறிவார்ந்த கருத்துக்களை கேட்க, படிக்கக் கூடாத மக்களாக முஸ்லிம்களை கையாளும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளையும் பயங்கரவாதிகளையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவ...

பாரூக்கின் தந்தை அளித்த பேட்டி

கத்தியால் வெட்டிய போதும் கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறார் என் மகன். பாரூக்கின் தந்தை ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டி: கோவை உக்கடம் லாரிப்பேட்டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டியதால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற்றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க்கத்துக்கு விரோதிகள் அல்ல. தினமும் 5 வேளை நமாஸ் செய்பவர்கள். தவறாது நோன்பு மேற்கொள்பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்களிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் நாங்கள் எதிராக நிற்கவில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமையாகப் படித்து, புரிந்துகொள்ளாதவர்களாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். கடவுள் எதையும் மன்னிக்கக் கூடியவர்....

சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு ‘தமிழ் இந்து’ தலையங்கம்

‘தமிழ் இந்து’ நாளேடு மார்ச் 24ஆம் தேதி பாரூக் படுகொலைக் குறித்து எழுதிய தலையங்கம். கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்கு கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செய லாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடு களையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில்...

இதுவே கழகத்தின் நிலைப்பாடு “இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!”

பெரியார் இயக்கத்துடனான தோழமையை முடிவு செய்ய வேண்டியது, இஸ்லாமியர் அமைப்புகள்தான் – இதுவே கழகத்தின் நிலைப்பாடு என்று சென்னையில் பாரூக் படத்திறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளராக இருந்த ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் படுகொலைக்கு கண்டனக் கூட்டம் கருத்தரங்கமாக சென்னையில் மார்ச் 26 மாலை இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் கழக சார்பில் நிகழ்ந்தது. ‘பாரூக் படுகொலையும் நமது நிலையும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகரன், ‘சேவ் தமிழ்’ செந்தில், திருமுருகன் காந்தி (மே 17) வழக்கறிஞர் திருமூர்த்தி, இஸ்லாமியராக பிறந்தாலும், இஸ்லாமிய மதக் கருத்தியலை மறுக்கும் தோழர்கள் நடத்தும் நாத்திகர் பண்பாட்டுக் கழகம் சார்பில் அலாவுதின் ஆகியோர்...

பாரூக் படுகொலை: இஸ்லாமிய எழுத்தாளர்கள் – ஜனநாயக சக்திகள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தலைதூக்குவது மோசமான விளைவுகளை உருவாக்கி விடும் என்று இஸ்லாமிய எழுத்தாளர்கள், ஜனநாயக சக்திகள் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் பாரூக்கின் படுகொலை – பல இஸ்லாமிய சிந்தனை யாளர்கள், முற்போக்கு இஸ்லாமிய குழுவினரிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியிருப்ப தோடு, அரை நூற்றாண்டுக்கு மேலாக திராவிடர் இயக்கத்துக்கும் இஸ்லாமியர்களுக்கிடையே நிலவிய நட்பு உறவையும் சிக்கலாக்கி இருக்கிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு  (மார்ச் 24, 2017) எழுதியிருக்கிறது. கீரனூர் ஜாகிர் ராஜா, நாவல் சிறுகதைகளை எழுதி வரும் இலக்கியவாதி. தன்னுடைய நாவல்களில் பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகளை எழுதி வருகிறார். ‘மீன்காரத் தெரு’  என்ற அவரது நாவலில் திண்டுக்கல் கீரனூர் இஸ்லாமியர்களிடையே நிலவும் வர்க்க குழு பாகுபாடுகளை சித்தரித்திருந்தார். தொழில் வணிகத்தில் வசதியுடன் வாழும் ‘இராவுத்தர்’ பிரிவினர், மசூதிகளில் சேவை பணி செய்யும் வசதி யற்ற ‘லப்பை’ பிரிவினருடன் திருமண உறவுகளை தடை...

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்து மார்ச் 25 மாலை 5 மணியளவில் பெரம்பலூர் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. என். செல்லத்துரை (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ் முத்து, குணராசு, வீ. ஞான சேகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கிருட்டிணசாமி (அம்பேத்கர் அறக்கட்டளை), அக்ரி. ஆறுமுகம் (தி.க.), சித்தார்த்தன் (தி.க.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாரூக் குடும்பத்துக்கு தோழர்கள் ரூ.13,000 நிதியை மாவட்ட தலைவர் தாமோதரனிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

இஸ்லாம் அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை தி.வி.க. தோழர்  பரூக் ,  ஈரோடு மாவட்டம் (தெற்கு) சார்பாக 19.03.2017 அன்று மாலை 7 மணிக்கு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ப.குமார் தலைமை ஏற்க, மறைந்த தோழருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காவை இளவரசன், கோபி வேலுச்சாமி ஆகியோர் இரங்கலுரையாற்றினர். தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

தோழர் ஃபாரூக் படுகொலை கணடித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 27032017

திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் கழகத்  தோழர் கோவை பாரூக் படுகொலையைக் கண்டித்தும், வழக்கை சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்ற வலியுறுத்தியும் கண்டன  ஆர்ப்பாட்டம் மேட்டூர் பேருந்து நிலையம் எதிரில் 27.3.2017 மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு தலைமை தாங்கினார். தி.வி.க. தோழர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, K.A. சந்திரசேகரன் திராவிடர் கழகம் மேட்டூர் நகரம், மா.சிவக்குமார் மேட்டூர் சட்ட மன்றத் தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீரசிவா மாநில இளைஞரணித் துணை செயலாளர் ஆதிதமிழர் பேரவை, கி.முல்லைவேந்தன் திராவிடர் பண்பாட்டு நடுவம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். படுகொலையை கண்டித்து வழக்கை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்ற வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. கழக தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

தோழர் ஃபாரூக் படுகொலை கண்டன ஆர்ப்பாட்டம் தக்கலை 26032017

26-03-2017 ஞாயிறு மாலை 4.00மணிக்கு 16-03-17 அன்று இசுலாமிய மத வெறியர்களால் கொல்லப்பட்ட தோழர்,பாரூக் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிர்புறம் தோழர் சூசையப்பா தலைமையில் நடைபெற்றது. தோழர்கள் தமிழ் மதி,ஜாண் மதி,நீதி அரசர்,மஞ்சு குமார்,இராஜேஸ் குமார்,இரமேஸ் பாபு,சுனில்,இராஜன் ,சாந்தா,சமூக ஆர்வலர் போஸ்,அருள்ராஜ்,பேரின்ப தாஸ்,இளங்கோ,ஆன்றன் தமிழ்செல்வன்,ஆர்மல் வீரவணக்க முழக்கங்கள் எழுப்பியும் இசுலாமிய மத வெறியர்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி எதிர்ப்பை பதிவுச் செய்தனர். பின்பு பெரியார் தொழிலாளர் கழக அலுவலகத்தில் வைத்து இரங்கல் உரை தோழர் தமிழ் மதி நிகழ்த்தினார் செய்தி தமிழ்மதி  

தோழர் ஃபாரூக் படுகொலையும் நமது நிலையும்…. கருத்தரங்கம் சென்னை 26032017

மனிதநேயப் போராளி … தோழர் ஃபாரூக் படுகொலையும் நமது நிலையும் …. கருத்தரங்கு சென்னை இராயப்பேட்டையில் 26032017 நடைபெற்றது. கருத்தரங்கம் தோழர் ஃபாரூக்கின் படத்திறப்போடு துவங்கியது. கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் … நாத்திகர்கள் மேடைகளில் நமது தோழமை இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு அவர்களது உரையை துவங்கும் போது ” உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்று பிரார்த்தித்தவனாக .. உங்கள் முன் பேச துவங்குகிறேன் ” என்றே துவங்குவர். அது நாத்திகர்களின் மேடை மற்றும் நம் கொள்கைக்கு மாறானது என்ற போதும், அது தோழர்களின் கருத்துரிமை என்றும், அதற்கு முழு சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது என்றும் ., தோழமை அமைப்புகளின் கொள்கை உணர்விற்கு நாத்திகர்கள் மேடை எவ்வாறு கருத்துச் சுதந்திரத்தோடு நடந்துக் கொண்டிருந்ததை சுட்டிக் காட்டினார் … இந்த கருத்தை கருத்தரங்கிற்கு வந்திருந்த...

“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!”

“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!”

“தமிழகத்தின் தாராளச் சூழலை நாம் இழந்திடலாகாது!” (நன்றி : தமிழ் இந்து நாளிதழ், தலையங்கம். 24.03.2017) கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்குகிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயலாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில் கருத்துத் தளத்திலேயே...

தோழர் ஃபரூக் குறித்தும், அவரின் இறுதி நிமிடங்கள் குறித்தும் ஃபரூக்கின் துணைவியார், தந்தை பேட்டி – தி இந்து 25032017

‘கடவுள் மன்னிக்கக் கூடியவர்; தண்டிக்கச் சொல்பவர் அல்ல’: கொலை செய்யப்பட்ட ஃபாரூக் குடும்பத்தினர் வேதனை கோவை உக்கடம் லாரிப்பேட் டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டிய தால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற் றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க் கத்துக்கு விரோதிகள் அல்ல. தின மும் 5 வேளை நமாஸ் செய்பவர் கள். தவறாது நோன்பு மேற்கொள் பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்க ளிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள் கைக்கும் நாங்கள் எதிராக நிற்க வில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமை யாகப் படித்து, புரிந்துகொள்ளாத...

கடவுள் இல்லை என்று சொன்னால்… கோவை கொடூரம்

கடவுள் மறுப்பு, மத – சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளைத் தீவிரமாகப் பேசிவந்த காரணத்தால், கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மத அடிப்படைவாதிகள் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். கோவையில் உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர், ஃபாரூக். இவர், திராவிடர் விடுதலைக் கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். கடவுள் மறுப்பாளராக இயங்கி வந்த ஃபாரூக், முற்போக்குச் சிந்தனையுடன், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசிவந்தார். மார்ச் 16-ம் தேதி இரவு வீட்டில் இருந்தபோது அவரது செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. பேசி முடித்தவுடன், ‘என் நண்பன் கூப்பிடறான். என்னன்னு கேட்டுட்டு வந்திடறேன்’ எனக் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு, மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றுள்ளார். உக்கடம் பகுதியில் மாநகராட்சிக் கழிவுநீர் பண்ணை அருகே சென்றபோது, அங்கு காத்திருந்த சிலர் திடீரென ஃபாரூக்கை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த ஃபாரூக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் இஸ்லாமியர் என்பதால், கொலையாளிகள் இந்துக்களாக இருக்கலாம் என்ற...

கேரளாவில் யுக்திவாதிகள் கண்டன ஆர்ப்பாட்டம் எர்ணாகுளம் 22032017

கேரளாவில் 22032017 அன்று காலை 10 மணிக்க யுக்திவாதிகள்(பகுத்தறிவாதிகள்) சார்பில் எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோட்டில் தோழர் பாரூக் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

இஸ்லாமிய அமைப்புகள்-இயக்கங்கள்-கடும் கண்டனம்

ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள், தோழர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில பகுதிகள்: கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு கடந்த 16ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கோவை, உக்கடம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் பாரூக், சில நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்தார். இச்செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமிய வழிகாட்டுதலை மீறி யாரேனும் சில முஸ்லிம்கள் இந்தக் கொடூரத்தை செய்திருப்பார் களேயானால் அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கை இஸ்லாமிய வழிமுறையும் இல்லை என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தோழர் பாரூக் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிக்கிறோம். இக்கூட்டமைப்பு சார்பில் அனைத்து உண்மை குற்றவாளிகளையும் கைது  செய்து...

கழகத் தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

கழகத் தோழர் ஃபாரூக் கடந்த 16.03.2017 அன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது. பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும்கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் சமூகம் குறித்த கவலையோடு சிந்தித்து அதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர். தோழர் ஃபாரூக்கின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக்  குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் துரைசாமி  வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம். K.S.Duraisamy – Savings A/c No : 10235169636. IFSC Code : SBIN0009314.  State bank of india, Veerapandi...

கொள்கைத் தோழர் – கோவை ஃபாரூக் உயிரைப் பறித்தது – இஸ்லாமிய அடிப்படைவாதம்

கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாருக், பெரியார் கொள்கையை ஏற்று கடவுள்- மத மறுப்பாளராக வாழ்ந்ததோடு தனது முகநூலிலும் தனது மதத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு வந்தார். இறை மறுப்பாளராக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய அடிப்படைவாத வெறியில் ஊறிப்போன ஒரு கும்பல் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது. கடந்த 16ஆம் தேதி இரவு உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இந்த கொடூர சம்பவம் இரவு 11.15 மணியளவில் நடந்தது. பழைய இரும்புப் பொருள்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார் ஃபாரூக். தொழில் தொடர்பாக பேச விரும்புவதாக தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று, பேசிய நபர் வரச் சொன்ன இடத்துக்கு தனது மோட்டார் பைக்கில் புறப்பட்டார். சுத்திகரிப்பு நிலையம் அருகே பின்னாலிருந்து வந்த ஒரு கும்பல் தாக்கி கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. வழியில் சென்றவர்கள் அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு...

தோழர் ஃபாரூக்கை யாராலும் கொல்ல முடியாது!

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஃபாரூக்கை துடிதுடிக்க கொன்று போட்டிருக்கின்றார்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள். தோழர் ஃபாரூக் ஒரு இஸ்லாமியராகப் பிறந்தும் தன்னுடைய கொள்கையாக குரானைத் துறந்து, பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டவர். பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் தொடர்ச்சியாக கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவும், மத நம்பிக்கைக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தவர். அவருடைய வாட்ஸ்அப் குரூப்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேர்வரை இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர்களாய் இருந்துள்ளனர். இது இஸ்லாமிய மத வெறியர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் தனது குழந்தைகள் கையில் ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என்ற முழக்கம் இருக்கும் பதாகைகளைக் கொடுத்து அதைப் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருக்கின்றார். தன்னுடைய குழந்தைகளை வருங்காலத்தில் நாத்திகர்களாக வளர்க்கப் போவதாகவும் சபதம் செய்திருக்கின்றார் தோழர் ஃபாரூக் அவர்கள். அதனால் இஸ்லாமிய மத வெறியர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கின்றார். ஆனால்...

தோழர் ஃபாரூக் படுகொலை

இசுலாமிய சமுதாயத்திற்கும் எமக்குமான உறவு தொப்பூள் கொடி உறவு.அதனை யாராலும் பிரிக்க முடியாது. மறைந்த பழனிபாபா அவர்கள்‘’நான் இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், மார்க்கத்தால் இசுலாமியன்’’ என பிரகடனப்படுத்தினார். சிறுபான்மை மக்களுக்கும், பெரும்பான்மையான எண்ணிக்கையில் இருக்கும் இந்து மத நம்பிக்கையுள்ள பார்ப்பனர் அல்லாத எம் உறவுகளுக்கும் எதிரான காவி மதவெறி பாசிசமே எமது முதன்மை எதிரி. பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வுகளைக் கற்பிக்கும் பார்ப்பன சனாதன வேத மதமே முதலில் ஒழிக்கப்பட வேண்டிய மதம். பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் உழைத்தது சம உரிமையை மறுக்கும் வேதமதத்திற்கு எதிராகத் தான். தீண்டாமையை ஒழிக்க இசுலாம் மார்க்கத்தை பெரியார் பரிந்துரைத்தார். 5.00 மணிக்கு இசுலாமியனாக மாறினால் 5.05க்கு உன் தீண்டாமை போய் விடும் இவ்வளவு விரைவில் தீண்டாமையை போக்கும் வேறு வழியில்லை எனக் கூறினார். பெரியாரின் நாத்திகத்தின் முதன்மை நோக்கம் “ஜாதி ஒழிப்பே”. பெரியார் அறிவியல் நோக்கில் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்தவர் அல்லர்....