பசு மாட்டுத் தோலில் தயாரிக்கும் ‘மிருதங்கத்தை’ பார்ப்பனர்கள் பயன்படுத்தலாமா?
டி.எம். கிருஷ்ணா, பார்ப்பனராகப் பிறந்தாலும் பார்ப்பனர்களை எதிர்க்கும் அதிசயமான கருநாடக இசைப் போராளி. கருநாடக இசையை குடிசைப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர். கானா பாடல்களையும், இஸ்லாமிய கிறிஸ்துவ மதப் பாடல்களையும் கருநாடக இசையில் அவர் இணைத்துப் பாடுகிறார். பார்ப்பனர்கள் பதறு கிறார்கள். ‘கருநாடக இசையில் ஜாதி’ என்ற நூலை அவர் ஏற்கனவே எழுதினார். பார்ப்பனர்கள் கொந்தளித்தார்கள். இப்போது கருநாடக இசையில் பயன்படுத்தப்படும் மிருதங்கம் குறித்து ஒரு ஆங்கில நூலை எழுதியிருக்கிறார். ‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ், மிருதங்கம் தயாரிப்போரின் சுருக்கமான வரலாறு’ என்பது நூலின் பெயர். இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு கலாnக்ஷத்திராவில் உள்ள அரங்கம் தேர்வு செய்யப்பட்டது. நிர்வாகமும் அனுமதி வழங்கியது. மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் கலாnக்ஷத்திரா, சென்னை அடையாறு பகுதியில் பல நூறு ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருக் கிறது. நாட்டியக் கலை-இசைக் கலையை வளர்ப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம். பார்ப்பனர் ஆதிக்கப் பிடியில் செயல்படும் இந்த...