தலையங்கம் பார்ப்பனர் எச்சில் இலையில் உருளுவது மதச் சுதந்திரமா?
சித்தராமய்யா கருநாடக முதல்வராக இருந்தபோது மூட நம்பிக்கைகளைத் தடை செய்யும் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். ‘பேய் ஓட்டுதல்’ ‘பில்லி சூன்யம்’ என்ற பெயரில் ஏமாற்றுதல், தண்டனைக்குரிய குற்றம் என்று அந்தச் சட்டம் கூறியது. ஆனால் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். இந்து மதத்துக்கு எதிரானது என்று கூச்சல் போட்டார்கள். இப்போது இரு நாட்களுக்கு முன் கருநாடகாவில் எடியூரப்பா தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கி அரசிதழிலும் வெளியிட்டிருக்கிறது. எதிர்கட்சியாக இருந்தபோது மூடநம்பிக்கை ஒழிப்பு இந்து விரோதமாக இருந்தது. இப்போது ஆளும் கட்சியான பிறகு இந்து ஆதரவாகி விட்டதுபோலும். எப்படி இருந்தாலும் பா.ஜ.க.வின் ஒப்புதலை நாம் வரவேற்கிறோம். இதே கருநாடக மாநிலத்தில் உள்ள குக்கி சுப்ரமணியசாமி கோயிலில் ‘மடேஸ் நானா’ என்ற ஒரு சடங்கு 500 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. பார்ப்பனர்கள் சாப்பிட்டுவிட்டு வீசி எறிந்த எச்சில் இலைகளில் மிச்சம் மீதியிருப்பதை, தலித்...