உள்ளாட்சியில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை: கழகத் தோழர்கள் நேரில் வாழ்த்து

தமிழகத்தில் முதன் முதலாக தேர்தலில் நின்று, தமிழகத்தின் முதல் திருநங்கை ஒன்றியக் (கருவேப்பம்பட்டி) கவுன்சிலராக திமுக சார்பில் வெற்றி பெற்ற ரியா அவர்களை அவரது இல்லத்தில், திராவிடர் விடுதலைக் கழகம் திருச் செங்கோடு நகரம் சார்பாக, நகரச் செயலாளர் பூபதி, சோம சுந்தரம், விஜய்குமார், பிரகாஷ், மனோஜ் ஆகியோர் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்ததுடன்,  கழகத்தின் வெளியீடுகளான இவர்தான் பெரியார், கருஞ்சட்டைக் கலைஞர் புத்தகங்கள் மற்றும் நிமிர்வோம் மாத இதழ்களை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

பெரியார் முழக்கம் 30012020 இதழ்

You may also like...