Category: குடி அரசு 1931

கருங்கல் பாளையம் முனிசிபல்   பெண் பாடசாலை 0

கருங்கல் பாளையம் முனிசிபல் பெண் பாடசாலை

பெண்கள் யாவரும்படிக்கவேண்டும். தங்களுடைய சீர்திருத்தத்தின் படி அரசாங்க உத்தியோகங்கள் பெரும்பாலும் இனி பெண்களுக்கே வழங்கப்படுமாதலால் அவர்கள் படித்து தயாராயிருக்க வேண்டும். இனி மேல் சுயமரியாதை உள்ள எந்த ஆண்களும் படித்த பெண்ணைத்தான் கலியாணம் செய்துகொள்வார்கள். ஆதலால் பெண்கள் படித்திராவிட்டால் அவர்கள் “கன்னியா ஸ்திரிகள்” மடத்திற்குதான் இனி அனுப்பப்படுவார்கள். அனேக ஆண்கள் தாங்கள் கல்யாணம் செய்து கொண்ட பிறகுகூட இப்போது யோசித்துப்பார்த்து தங்களது சுயமரியாதையை உத்தேசித்து தாங்கள் முன்கலியானம்செய்து கொண்ட படிக்காத பெண்களை தள்ளிவிட்டு படித்த பெண்களாகப் பார்த்து மறு விவாகம் செய்துகொள்ளப் பார்க்கின்றார் கள். ஆதலால் பெரிய பெண்கள் கூட தங்களுக்கு ‘எப்படியோ ஒருவிதத்தில் கல்யாணமாகிவிட்டது. இனி பயமில்லை’ என்று குருட்டு நம்பிக்கையில் இருந்துவிடாமல் அவர்களும் கஷ்டப்பட்டு படித்து தங்கள் தங்கள் புருஷன் மார்களை வேறு கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படா மல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் படித்தால் கள்ளப் புருஷர் களுக்குக் கடிதம் எழுதுவார்கள் என்று மூடப்...

காந்தியும் நாகரீகமும் 0

காந்தியும் நாகரீகமும்

உயர்திரு. காந்தியவர்கள் தற்கால முற்போக்குக்கும், சீர்திருத்தத்திற்கும், நாகரீகத்திற்கும் பொருத்தமற்றவர் என்பதோடு அவர் பழைய கால நிலை மைக்கே மக்கள் போகவேண்டும் என்கின்ற அறிவு உள்ளவர் என்றும் மூட நம்பிக்கையிலும் மூடப்பழக்க வழக்கங்களிலும் மிகுதியும் ஈடுபட வேண்டு மென்றும் ஆகவே இந்தியா விடுதலைபெறவோ முற்போக்கடையவோ நாகரீகம் பெறவோ திரு.காந்தியிடத்தில் நம்பிக்கை வைக்க முடியா தென்றும் கொஞ்சகாலமாக எழுதிவருகின்றோம். அதுமாத்திரமல்லாமல் அவர் இந்தியர்களின் பிரதிநிதியாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கூட எழுதியிருந்தோம். இவைகளையெல்லாம் அனுசரித்தே திருநெல்வேலி ஜில்லா தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டிலும் பல காரணங்கள் காட்டி திரு. காந்தி இடம் நம்பிக்கை இல்லை என்று ஒரு தீர்மானமும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானமானது சிலருக்கு அதிருப்தியைக் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது. காங்கிரசிலும் காந்தீயத்திலும் புதிதாக ஞானஸ்நானம் பெற்று மதம் மாறின சில பக்தர்களுக்கு மேல் கண்ட நம்பிக்கையில்லாத தீர்மானத்தால் மிக்க மனவருத்தமேற்பட்டதாகவும் கேட்டு மிக வருந்தி னோம். பலர் துக்கம் விசாரித்ததாகவும் தெரிந்தோம். ஆனால் இவை...

கலைகள் 0

கலைகள்

சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள் தாங்கள் தப்பித்துக் கொள்ளு வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்துகொண்டு “சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்” என்று பழிசுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள். ஆகவே இது அவர்களுடைய நியாயமற்ற தன்மையையும் பயங்காளித்தன்மையையும் வேறு வழியில் சமாதானம் சொல்ல சக்தியற்ற தன்மையுமே காட்டுவதாகின்றது. கோவில்களைக் குற்றம்சொல்லி அதில் உள்ள விக்கிரகங்களின் ஆபாசங்களை எடுத்துக்காட்டி இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும் இந்த ஆபாசத்திற்காக இவ்வளவு பணச்செலவும் நேரச்செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்துகொண்டு “அவைகள் அவசியம் இருக்க வேண்டும்” என்றும் “அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்” என்றும் “சாமி பக்திக்காக தாங்கள் கோவில்களைக் காப்பாற்றுவதில்லை” என்றும் “ஓவியக்கலை அறிவுக்காக கோவில்கள்...

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!! 0

எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

காங்கிரஸ் தீர்மானங்களும் சட்டமறுப்பு சத்தியாக்கிரகங்களும் தென்னாட்டில் தேர்தலையே குறிக்கோளாகக் கொண்டது என்பதாக நாம் பலமுறை சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம். அதுமாத்திரமல்லாமல் சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டவுடன் இனி “தலைவர்களுக்கும்” (பார்ப்பனர்களுக்கும்) “தொண்டர்களுக்கும்” (பார்ப்பனரல்லாதார்க்கும்) தேர்தல் பிரசாரத்தைவிட வேறு பிரசாரம் இருக் காது என்றும் தேர்தலை உத்தேசித்தே ஆங்காங்கு கள்ளுக்கடை மறியல், ஜவுளிக்கடை மறியல் ஆகியவைகள் நடத்தப்படும் என்றும் எழுதியும் இருந்தோம் . இந்த விஷயங்கள் வாசகர்களுக்கு அப்போழுது சற்று அலட் சியமாகக் கருதப்படக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது நாம் எழுதியதுபோலவே தேர்தல் பிரசாரங்கள் “தலைவர்களால்” (பார்ப்பனர் களால்) தமிழ் நாட்டில் தொடங்கப்பட்டு விட்டது. அதற்கு அனுகூலமாகத் தொண்டர்கள் (பார்ப்பனரல்லாதவர்கள்) ஆங்காங்கு இந்தத் தலைவர் களுக்கு வரவேற்பு அளித்து கூட்டம் கூட்டி ஜே போட்டு ஓட்டர்களை அறிமுகப்படுத்தி அத்தலைவர்களின் உத்திரவுக்குக் கீழ்ப்படியும்படி செய்யும்படியான வேலையில் மும்மரமாய் ஈடுபட்டு இருக்கிறார்கள். சில இடங்களில் பார்ப்பனரல்லாதார் பணமுடிப்பும் அளிக்கின்றார்கள். சமீபத்தில் புதிய சட்டத்தின் படி ஸ்தல ஸ்தாபன...

தீண்டாமை 0

தீண்டாமை

இந்தியாவில் இந்து முஸ்லீம் ஒற்றுமையைவிட சுயராஜியத்தை விட – பூரண சுயேச்சையை விட – காந்தி – இர்வின் ஒப்பந்தத்தைவிட – தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டியது முக்கியமானது என்கின்ற விஷயம் கடுகளவு அறிவும் மனிதத் தன்மையும் உடையவர்களாகிய எவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதாகும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான விஷயம் இப்போது அழுவாரற்ற பிணமாய், கேள்வி கேட்பாடு அற்று அலக்ஷியப் படுத்தப்பட்டு கிடக்கின்றது. அதுமாத்திரமல்லாமல் அவர்கள் அதாவது தீண்டப்படாதார் என்பவர்கள் தாங்களாகவே ஏதாவது ஒரு முயற்சி செய்து தங்கள் இழிவுகளையும் கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முயற்சிப்ப தையும் இந்தப்பாழும் சுயராஜியமும் பூரண சுயேச்சையும் என்கின்ற வெறும் வாய் வார்த்தைகள் தோன்றி பழையவைகளையே புலப்படுத்திக் கொள்ள வும் புதியவைகளை தலைகாட்டாமல் இருக்கவும் முயற்சி செய்வதன் மூலம் தடுத்து அழுத்தி வைக்கப்பட்டும் வருகின்றது. இந்த நெறுக்கடியான சமயத் தில் இந்தமுக்கியமான விஷயம் (தீண்டாமைக் கொடுமை விஷயம்) இக் கதியானால் இனி எப்போது தலையெடுக்க முடியும் என்பது நமக்கு விளங்க வில்லை....

தென் இந்திய ரயில்வே கம்பெனி லிமிடெட் 0

தென் இந்திய ரயில்வே கம்பெனி லிமிடெட்

தென் இந்திய ரயில்வேயின் நிர்வாகம் முழுவதும் பிராமணமயமாக இருப்பது யாவரும் நன்கறிந்த விஷயம். பிராமணரல்லாதாருக்கு ஒரு வித சுதந்திரமுமில்லாமல், பிராமணர்களாலேயே கொள்ளையிடப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றது. பிராமண ரல்லாதாருக்கு ஏஜண்டு ஆபீசிலும், இன்னும் இதர நிர்வாக ஸ்தாபனங்களிலும் இடம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கின்றது. இந்த ரயில்வேயின் நிர்வாகத்தை ஓர் பிராமண அக்கிரகாரமென்று கூறுவது மிகையாகாது. இந்நிலைமைக்கு ரயில்வேக் கம்பெனியின் நிர்வாகஸ்தர்களும் இது வரையிலும் உடந்தையாகவேத்தான் இருந்துகொண்டு வந்திருக்கின்றார்கள். ஜனத்தொகையின் வீதாசாரப்படி ரயில்வேக்களில் உத்தியோகம் வழங்கப்பட வேண்டுமென சட்ட சபைகளில் போராடியதற்கு “அது கம்பெனிகாரர்களின் ஆதிக்கத்துள்ளடங்கியிருப்ப தால், அவர்களுடைய பிரியத்தைப் பொருத்தது” என இதுவரை கூறப்பட்டு வந்ததையும் சகலரும் அறிவார்கள். ஆனால், இப்பொழுது தென் இந்திய ரயில்வேயின் ஏஜண்டின் மனம் முற்றிலும் மாறுதலடைந்து, பிராமண ரல்லாதாருக்கும், அவர்களுடைய தொகையின் வீதாசாரம் உரிமைகளும், உத்தியோகங்களும் வழங்கப்படவேண்டுமென உறுதி கொண்டு, அதற்கேற்ற வாறு “ஸ்டாப் செலக்ஷன் போர்டு” என்னும் ஒரு போர்டை நியமித்திருப்பது மிகவும் போற்றக்கூடியதோர்...

இந்து முஸ்லீம் 0

இந்து முஸ்லீம்

இந்தியாவின் உண்மை விடுதலைக்கு இந்து முஸ்லீம் ஒற்றுமை அவசிய மென்று அடிக்கடி கூறப்படுவதோடு சுமார் 20,30 வருஷகாலமாக அதற்காக பல பெரியார்களும் பாடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இப்போது திரு. காந்தியவர்களே இவ்வேலையில் முனைந்திருக்கிறார். இதே காந்தியவர்களால் கொஞ்ச காலத்திற்குமுன் இந்தியாவின் விடுதலைக்கு தீண்டாமை ஒழிய வேண்டியது முதன்மையானகாரியம் என்றும் தீண்டாமை ஒழியாவிட்டால் சுயராஜ்யமே வராது என்றும் சொல் லப்பட்டது. ஆனால் இப்போது அந்த பிரச்சினை வெகு சுலபத்தில் தீர்ந்து போய் விட்டது. அதாவது “சுயராஜ்யம் வந்தால் தீண்டாமை தானாகவே ஒழிந்து போகும்” என்று அவராலேயே சொல்லப்பட்டாய் விட்டது. ஏனெனில் சுயராஜ்யம் வந்தால் மதத்தில் யாரும் பிரவேசிக்கக்கூடாது என்கின்ற நிபந்தனை காந்தி சுயராஜ்யத்தில் முக்கியமான நிபந்தனை யாதலால் “மதத்தில் தீண்டாமை இருப்பதால் அதைப்பற்றி பேசுவது மத விரோதம்” என்று ஒரு உத்திரவு போட்டு விட்டால் தீண்டாமை விஷயம் ஒரே பேச்சில் தானாகவே முடிந்துவிடும் என்று அவர் எண்ணியிருக்கலாம். ஆகை யால் இப்போது தீண்டாமையைப் பற்றி...

* செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மகாநாடு – தீர்மானங்கள் 0

* செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மகாநாடு – தீர்மானங்கள்

1. புதிதாக கோயில்களும், சத்திரங்களும், வேதபாடசாலைகளும், பசு மடங்களும் அமைக்கக் கூடாது. இதுவரை ஏற்பட்டுள்ளவைகளை பொதுப் பள்ளிக்கூடங்களாகவும், மாணவர்களின் விடுதிகளாகவும், குழந்தைகளுக்கு பாலுதவும் ஸ்தாபனங்களாகவும், எல்லா மக்களுக்கும் சமமாய் பயன்படும்படி மாற்றிவிடவேண்டும். 2. கலப்பு மணம் செய்யப்பட வேண்டும். 3. விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும். 4. சாரதா சட்டம் அமுலுக்கு வர வேண்டும். 5. பெண்களுக்கு சொத்துரிமை ஏற்படுத்த ஒரு கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். அதற்காக சட்டசபையில் ஒரு மசோதா சீக்கிரத்தில் கொண்டு வரப்பட வேண்டும். 6. பெண்களுக்கு விலை கொடுக்கும் பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும். 7. கலியாணம் ஒரே நாளில் புரோகிதரின்றி சுறுக்கமாக நடைபெற வேண்டும். 8. பல்லாவரத்து தீர்மானங்கள் பண்டிதர்களின் மனமாறுதலை காண்பிப்பதால் அவைகளைப் போற்றுகின்றது. 9. ஜாதி வித்தியாசம், தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக, ஆர்.கே.ஷண்முகம் அவர்களால் இந்திய சட்டசபையில் கொண்டு வந்திருக் கும் மசோதாவை பாராட்டுவதுடன், கராச்சியில் எல்லா பொதுஸ்தலங்களிலும் எல்லா வகுப்பாருக்கும்...

செட்டிநாடு மகாநாடு 0

செட்டிநாடு மகாநாடு

செட்டிமார் நாட்டு மகாநாடு காரைக்குடியில் இம்மாதம் 7,8 தேதிகளில் இந்திய சட்டசபை அங்கத்தினரும் உபதலைவருமான கோவை உயர்திரு. ஆர்.கே.­ஷண்முகம் அவர்கள் தலைமையில் நடந்தது. மகாநாட்டின் நடவடிக் கைகள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. மகாநாட்டின் தீர்மானங்கள் பெரிதும் மிகவும் சாதாரணமான தீர்மானங்களேயாகும். ஏனெனில் செட்டிநாடு என்பது மிகுதியும் செல்வவான்கள் ஆதிக்கத்திலிருப் பதாகும். மேலும் அவர்கள் புராண மரியாதையில்மிகுதியும் ஈடுபட்ட வைதீகச் செல்வவான்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்களாவார்கள். அதுமாத்திர மேயல்லாமல் சமூக வாழ்வில் தங்களை வைசிய குலத்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதின் மூலம் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்து ஜாதிப் பெருமை அடைகின்றவர்களுமாவார்கள். இந்த நிலையில் அதாவது பணத்திமிர், மதத்திமிர், ஜாதித்திமிர் ஆகிய மூன்றிலும் சூழ்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் ஆதிக்கத்தில் உள்ள அந்த நாட்டில் இந்த அளவுக்காவது தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேற்ற முடிந்ததே என்கின்ற மகிழ்ச்சியின் மீதே பலர் திருப்தி அடைகின்றார்கள். ஆனாலும் பொதுமக்கள் முன்னிலையில் இந்த மகாநாட்டை ஒரு சுய மரியாதை மகாநாடு என்று...

செட்டிமார் நாட்டு முதலாவது             சுயமரியாதை மகாநாடு 0

செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மகாநாடு

சகோதரிகளே! சகோதரர்களே!! நான் திரு. சண்முகம் அவர்களைப் பற்றிப் பேசுவது எனக்கே கொஞ்சம் சங்கடமாகத்தானிருக்கின்றது. ஏனெனில், அவர் எனது ஜில்லாக் காரர். அத்தோடு, இவ்வியக்கத்தில் ஈடுபட்டு, ஒத்துழைக்கும் எனது நண்பரும் ஆவார். அப்படிப்பட்ட ஒருவருடைய பெருமையைப்பற்றி எடுத்துச் சொல்ல ஏற்பட்டது எனக்கும் சங்கடமான நிலைமை, எனது நண்பருக்கும் சங்கடமான நிலைமை ஏற்பட்டது தானென்று சொல்ல வேண்டும். ஆனபோதிலும், கடமை யைச் செலுத்தவேண்டிய அவசியம் நேர்ந்த காலத்தில் சொந்த அசௌகரி யத்தை உத்தேசித்து நழுவிக்கொள்ளப் பார்ப்பது நியாயமாகாது. ஆகவே, சில வார்த்தைகள் சொல்லவேண்டியவனாகயிருக்கின்றேன். ஏனெனில் இந்த நாட்டில், சுயமரியாதை பிரசாரம் நடை பெறக்கூடாதென்றும், இந்த மகாநாடு இங்கு நடத்தப்படக் கூடாதென்றும், பல சிவநேயர்களும், பண நேயர்களும் பெரிய முயற்சிகள் எடுத்து, எவ்வளவோ சூழ்ச்சிகளும் கஷ்டங்களும் செய்து பார்த்தார்களாம். ஒன்றும் பயன்படாமல்போய், பிரசாரமும் தாராளமாய் நடைபெற்று, மகாநாடும் இவ்வளவு ஆடம்பரத்தோடு இத்தனை ஆயிர ஜனங்களுடைய ஆதர வோடு ஆண் -பெண், மேல் ஜாதி –...

ஸ்ரீவில்லிப்புத்தூர் 0

ஸ்ரீவில்லிப்புத்தூர்

சகோதரர்களே! நாங்கள் இங்கு சுயமரியாதை இயக்கசம்மந்தமான பிரசாரம் செய்யவே அழைக்கப்பட்டோம். இங்குள்ள முனிசிபல் தகராறுகளைப்பற்றி எங்களுக் குக் கவலை இல்லை. யாருக்கும் ஓட்டுவாங்கிக் கொடுக்க நாங்கள் இங்கு வரவில்லை. உங்களில் சிலர் நாங்கள் யாரோசிலருக்கு ஜஸ்டிஸ் கக்ஷி பேரால் ஓட்டுவாங்கிக் கொடுக்க வந்திருப்பதாய்க் கருதிக்கொண்டு ஆத்திரப் பட்டதாய் தெரிகின்றது. நாங்கள் பணம் வசூல் செய்யவும் இங்கு வரவில்லை. சுயமரியாதை இயக்கத்தில் என்னைப் பொருத்தமட்டில் இரண்டு காரியங்கள் உறுதி. அதாவது இயக்கத்தின் பேரால் யாரையும் போய் நான் எனக்கு ஓட்டு கேட்பதில்லை. இயக்கத்தின் பெயரால் வயிரு வளர்க்கவோ அல்லது யாரையும் போய் பணம் கேட்கவோ போவதில்லை. இந்த இரண்டு காரியங் களைப் பொருத்தவரை நான் உறுதியாக இருக்கின்ற தாய் நான் என்னைக் கருதிக்கொண்டிருக்கும்வரை எப்படிப்பட்டவர்களுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் வராது என்றும் எனதுகொள்கை எதுவானாலும் அதை வெளியி லெடுத்துச் சொல்ல பயப்படவேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் கருதி இருக்கின்றேன். இந்த உறுதிதான் இந்த...

திருநெல்வேலி ஜில்லா                                              4-வது சுயமரியாதை மகாநாடு 0

திருநெல்வேலி ஜில்லா 4-வது சுயமரியாதை மகாநாடு

சகோதரர்களே! இன்று இந்த மகாநாட்டுக்குத் தலைமை வகிக்கும் திரு. எஸ். இராமநாதன் அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டியதில்லை. அவர் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு மிராசுதார் குமாரர். அவர் எம்.ஏ, பி.எல், படித்துப் பட்டமும் சன்னதும் பெற்று, சென்னையில் ஹைகோர்ட்டு வக்கீலாயிருந்தவர். ஒத்துழையாமையின் போது வக்கீல் வேலையையும், தனது சம்பாதனையையும் விட்டுவெளியேரி சிறை சென்ற வர். இவர் சிறைசென்ற காலம் எது என்றால் இப்போதைப்போல் சிறைக்குப் போகின்றவர்களுக்கு மாமியார் வீட்டுக்கு முதல் தவணை செல்லும் மரு மகனைப் போல் அளவுக்கும் தகுதிக்கும் மீறின உரிமைகளும், சுக போகங் களும் சிறையில் கிடைத்துக் கொண்டிருக்கும் காலம் அல்ல அது. திரு. இராம நாதன் அவர்கள் தலையில் கூடையும் கையில் மண்வெட்டியும் கொடுக்கப் பட்டு தெருவில் ரோட்டுபோடும் வேலைசெய்தவர். சிறை அதிகாரிகளால் பல நிர்பந்த தண்டனைகள் செய்யப்பட்டதல்லாமல் தனி அரையில் அதாவது “கூனு கொட்டடியில்” போட்டு மக்களைப் பார்ப்பதற்கும் பேசுவதற்கும் இல்லாமல்...

* தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள் பகத்சிங்

* தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள் பகத்சிங்

1. (ய) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம் மகாநாடு மனமாரப்பாராட்டுகின்றது. (b) பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக்கொள்கையும் கவர்ந்து கொள்ளும்படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத்தோடு வரவேற்கின்றது. (உ) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும் பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றது. விடுதலை சுதந்திரம் 2. இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வர்ணாசிரம மதவித்தியாசங்களை அடியோடுஅழித்து, கடவுள், மோட்சம், நரகம், கர்ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கைகளை ஒழித்து, தன்னம்பிக்கையும் தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி, பூமிக்குடையவன்- உழுகின்றவன், முதலாளி – தொழிலாளி, ஆண் – பெண், மேல்ஜாதி – கீழ்ஜாதி...

தூத்துக்குடி மகாநாடு 0

தூத்துக்குடி மகாநாடு

சுயமரியாதை இயக்க சம்மந்தமான மகாநாடுகளும், பிரசாரக் கூட்டங் களும் தமிழ் நாட்டில் எவ்வளவு மும்மரமாக நடைபெற்று வருகின்றது என்பதோடு அதன் கொள்கைகள் நடைமுறையில் நடந்து எவ்வளவு பயன் அளித்து வருகின்றதென்பதைப்பற்றி நாம் யாருக்கும் எடுத்துக் காட்டவேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம். இவ்வியக்கப் பிரசாரத்தில் ஒரு பாகம் காங்கிரசையும், காந்தீயத் தையும், தாக்கியும், உப்புச் சத்தியாக்கிரகத்தை எதிர்த்தும் வந்ததாகும் என்பதை நாம் யாரும் எடுத்துக்காட்டவேண்டிய அவசியமில்லாமலே ஒப்புக் கொள்ளுகிறோம். அதோடு மாத்திரமல்லாமல் ( நாம் சென்ற வருஷ­ ஆரம்பத்தில் தெரிவித்தது போலவே ) இதன் பயனாய் நம்மீது பலருக்கு அதிருப்தியும், துவேஷமும், கோபமும் ஏற்பட்டு நமக்கும், நமது பத்திரிகைக் கும் விரோதமாகப் பலவித எதிர்ப் பிரசாரங்கள் செய்ய நேர்ந்ததும், அதனால் பல சில்லரைச் சங்கடங்கள் விளைந்ததும் பலர் அறிந்ததேயாகும். எப்படி யிருந்தபோதிலும் ஆரம்பத்தில் நாம் வெளிப்படுத்திய கொள்கைகளில் சிறிதும் விட்டுக் கொடுக்காமலும், அவை சம்மந்தமான நமது அபிப்பி ராயத்தை நாம் ஒண்டியாய் இருந்தபோதிலும்...

இந்தியாவின் ஜனத்தொகை 0

இந்தியாவின் ஜனத்தொகை

இந்தியாவின் மொத்த ஜனத்தொகை 1931ம் வருஷத்திய கணக்குப்படி 351500000 முப்பத்தைந்து கோடியே பதினைந்து லக்ஷம் 1921ம் வருஷத்தில் 320900000 முப்பத்திரண்டு கோடியே ஒன்பது லக்ஷம். ஆகவே இந்த பத்து வருஷத்தில் 3கோடிக்குமேல்பட்ட ஜனங்கள் பெருகி இருக்கிறார்கள். சராசரி நூற்றுக்குப் பத்துப் பேர்களுக்கு மேலாகவே அதிகரித்திருக்கின் றார்கள். ஒரு தேசம் அதிலும் கைத்தொழில் வளப்பமில்லாத தேசமாகிய அதாவது கைராட்டினத்தைக்கொண்டு பிழைக்கவேண்டிய நமது இந்தியா வானது, தனது ஜனத்தொகையை இப்படி ஏற்றிக்கொண்டே போனால் பிறகு வேலையில்லாத் திண்டாட்டமும், பஞ்சமும், நோயும் ஏற்படாமல் வேறு என்ன செய்யமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. அன்னிய ஆட்சி யை நம் நாட்டைவிட்டுத் துரத்தி விட்டதினாலேயே ஜன விருத்தி குறைந்து விடும் என்று சொல்லமுடியாது. ஆகையால் பஞ்சத்தை ஒழிக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், அன்னியநாட்டுச் சாமான் களை பஹிஷ்கரிப்பது என்பதைவிட மக்கள் அதிகமான பிள்ளைகளைப் பெறாமல் தடுப்பதற்கு ஆதாரமான கர்ப்பத்தடை முறையை கையாள வேண்டியதே முக்கியமான வேலையாகும். ஆகையால் உண்மையான...

ஓர் சம்பாஷணை எதார்த்த வாதியும், கிறிஸ்துமத போதகரும் பேசியது 0

ஓர் சம்பாஷணை எதார்த்த வாதியும், கிறிஸ்துமத போதகரும் பேசியது

எதார்த்தவாதி : ஐயா! தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால், எப்பொழுது எழுதப்பட்டது. போதகர் : பழய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீஷர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது. எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சில விடங்களில் தெய்வத்துக்குப் பயப்படாதவர்கள் தானே? போதகர் : இல்லை சார்; எப்பொழுதும் தெய்வத்துக்குப் பயப்படு கிறவர்கள்தான். எதா : நல்லது, அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே ? போத : ஆம், வாஸ்தவந்தான். ஆனால் அவனை (ரை) சில ஆராட் சியாளர் தன் தகப்பனின் மறுமனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்த தாகக் குறை கூறுவார்கள். எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகியிருக் கலாம். போத : அப்படியானால் (ஆபிராம்) ஆப்பிரகாமைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டிய தென்ன? எதா : உண்மையாக...

பாராட்டுதலும் வாழ்த்தும் 0

பாராட்டுதலும் வாழ்த்தும்

சென்ற வாரம் நாம் திருச்சி முனிசிபல் சபையார் மக்களுக்குப் புதிதாக சில லைசென்சு வரிகள் விதிக்கப்பட்டதில் பொது ஜனங்களுக்குள் இருந்த அதிருப்தியைக் குறிப்பிட்டு விட்டு, எதிரிகள் பரிகாசம் செய்வார்களே என்று சிறிதும் பயப்படாமல் முனிசிபல் சபையார் தைரியமாய் முன்வந்துப் புதிய வரிகளை குறைத்துவிடவேண்டும் என்று தெரிவித்துக்கொண்டோம். அதுபோலவே திருச்சி முனிசிபல் கவுன்சிலர் அவர்களும், சேர்மென் அவர்களும் தைரியமாய் முன்வந்து அதிகமாகப் போட்ட வரிகளைக் குறைத்து விட்டதாக சேதி எட்டி இருக்கின்றது. இது அவர்களுக்கு மிக்க பெருமையும் கௌரவமுமான காரியமாகும். இதற்காகத் திருச்சி பொது ஜனங் களைப் பாராட்டுவதுடன் கவுன்சிலர்களையும், சேர்மென் அவர்களை யும் நாம் மனமார வாழ்த்துகின்றோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 05.04.1931

கராச்சி 0

கராச்சி

கராச்சி நகரில் இவ்வாரம் நடந்த நடவடிக்கைகள் இந்திய மக்களை திடுக்கிடச் செய்திருக்கும் என்று சொல்லுவது மிகையாகாது. அன்றியும், சாதாரணமாகவே இந்த நான்கு, ஐந்து வருஷங்களாக குடி அரசுப் பத்திரி கையைத் தொடர்ந்து வாசித்து வந்த வாசகர்களுக்கும், சுயமரியாதை இயக்க பிரசாரங்களையும் அம்மகாநாட்டு தீர்மானங்களையும் தொடர்ந்து கேட்டு வந்த பொது ஐனங்களுக்கும், ஒரு பெரிய ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சி யையும் உண்டாக்கி இருக்குமென்பதில் சிறிது சந்தேகமில்லை. ஏனெனில், ‘குடி அரசு’ப் பத்திரிகை சென்ற நான்கு, ஐந்து வருஷங் களாய் எந்தெந்தக் கொள்கைகளை சுமந்து தமிழ்நாடெங்கும் முழக்கி வந்ததோ அந்தக் கொள்கைகளேதான் பெரிதும் இவ்வாரம் முழுவதும் கராச்சியில் உண்மை உணர்ச்சியுள்ள பதினாயிரக்கணக்கான- வாலிபர் களா லும், பெரியவர்களாலும் முழங்கச் செய்யப்பட்டதோடு பெரும் பெரும் தலை வர்கள் என்பவர்களையும் அம்முழக்கங்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு பின்பாட்டு பாடும் படியாக செய்துவிட்டது. அதுமாத்திரம் அல்லா மல் நாம் எந்த எந்தக் கொள்கைகளையும், ஸ்தாபனங்களையும், அதன் தலை வர்களையும் குறிப்பிட்டு...

ஸ்தல ஸ்தாபன அரசாங்கம் கவனிக்குமா? 0

ஸ்தல ஸ்தாபன அரசாங்கம் கவனிக்குமா?

ஸ்தல ஸ்தாபன புதிய சட்டப்படிக்கு தீண்டாதார், பெண்கள், சிறு வகுப்பார் முதலியவர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டிருந்தும் அநேக ஸ்தலஸ்தாபனத் தலைவர்கள் அச்சட்டத்திற்கு சரியானபடி மரியாதை கொடுக்காமல் தாங்கள் ஏகபோக ஆதிக்கத்தின் மனப்பான்மையையே காட்டி இருக்கின்றார்கள் என்பதாக தெரியவருகின்றது. ஆகையால் அரசாங்கத்தார் இதுவிஷயத்தில் சற்று கவலை எடுத்து ஒவ்வொரு ஸ்தல ஸ்தாபனங்களிலும் சரியானபடி பெண்களுக்கும், தீண்டப்படாதார் என்பவர்களுக்கும் சரியான படி ஸ்தானங்கள் ஒதுக்கியிருக்கின்றதா என்று பார்த்தே முடிவு செய்ய வேண்டுமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம். மற்றொரு விஷயம் லோக்கல் போர்டுகளில், தாலூக்கா போர்டுகள் பிரிக்கப்படுவதிலும் ஒவ்வொரு தாலூக்காவுக்கு ஒவ்வொரு போர்டு இருக்க வேண்டுமென்று சட்டத்தில் தெளிவாய் இருந்தும் சில இடங்களில் 2, 3 தாலூக்காக்கள் ஒரே போர்டாக இருந்து வருகின்றதாகத் தெரியவருகின்றது. ஆதலால் ஆங்காங் குள்ள பொதுஜனங்கள் இதைக் கவனித்துத் திருத்துப்பாடு செய்யாத வரை யில், கவர்ன்மெண்டாராவது கண்டிப்பாய் கவனித்து ஒவ்வொரு தாலூக்கா வுக்கு ஒவ்வொரு போர்டாக ஏற்படுத்துவதில் சற்று கண்டிப்பாய் இருக்க வேண்டுமென்பதைத் தெரிவித்துக்...

ஆதிதிராவிடர்கள் என்பவர் யார்? இந்திய அரசியலில் தொழிலாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் எங்கே? 0

ஆதிதிராவிடர்கள் என்பவர் யார்? இந்திய அரசியலில் தொழிலாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் எங்கே?

தேர்தல் சம்மந்தப்பட்ட காரியங்களில் ஆதிதிராவிடர்கள் என்பவர் களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதில் ஆதிதிராவிடர்கள் என்பதாக எந்தெந்த வகுப்பார்களை ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது என்பது இப்போது பொது ஜனங்களுக்குள் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. லோக்கல் போர்ட் சட்டப்படியும், முனிசிபல் சட்டப்படியும் ஆதி திராவிடர்கள் என்பதற்கு வியாக்கியானம் சொல்லி இருப்பதில் “இந்து மதத்தைத்தழுவிக்கொண்டிருக்கும் பறையர், பள்ளர், வள்ளுவர், சக்கிலியர், தோட்டிகள், மாலா (தெலுங்கு பாஷையில் பறையர்) மாதிகர் (தெலுங்கு, கன்னட பாஷையில் சக்கிலி) ஹொலையர் (கன்னட பாஷையில் பறையர்) செருமர்கள் (மலையாள பாஷையில் பறையர்) ஆகிய இந்த வகுப்பார்கள் மாத்திரமே ஆதிதிராவிடர்கள் என்கின்ற வகுப்பில் அடங்கி இருக்கின் றார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இந்திய அரசியல் பிரதிநிதித்துவத்திலோ, அல்லது ஸ்தல ஸ்தாபன பிரதிநிதித்துவத்திலோ மேற்கண்ட வகுப்பார்களாகிய பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகிய மூன்று வகுப்பாருக்கு மாத்திரமே பிரதிநிதித்துவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இதனால் இந்தியாவில் தீண்டா தார் என்கின்ற வகுப்பில் நடைமுறையில் சேர்க்கப்பட்டிருக்கின்ற வகுப்பார் களில் அரைவாசிப்...

பகத்சிங் 0

பகத்சிங்

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டாதார் கள் யாருமே இல்லை. அவரை தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்து விட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேச பக்தர் கள் என்பவர்களும், தேசீய வீரர்கள் என்பவர்களும் இப்போது வைகின்ற தையும் பார்க்கின்றோம். இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொரு புறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப்பிரதிநிதி திரு. இர்வின் பிரபுவைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல் அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறு கின்றன. இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும் படியாக தேச மகாஜனங்களுக்கும்...

புத்த மதமும் சுயமரியாதையும் 0

புத்த மதமும் சுயமரியாதையும்

சகோதரர்களே! சுயமரியாதையும், புத்தமதமும் என்ற விஷயத்தைப்பற்றி பேசும் இந்தக் கூட்டத்தில் நான் பேசவேண்டியிருக்கும் என்று இதற்கு முன் நினைக்கவேயில்லை. இன்று நான் ரயிலுக்குப் போக சற்று நேரமிருப்பதாலும், தங்கள் சங்க செக்கரட்டரி என்னை இங்கு அழைத்ததாலும், இவ்விடம் நடக்கும் உபன்யாசத்தைக் கேட்டுப் போக வந்தேன். இப்போது திடீரென்று என்னையே பேசும்படி கட்டளையிட்டு விட்டீர்கள். ஆனபோதிலும் தங்கள் கட்டளையை மறுக்காமல் சிறிது நேரம் சில வார்த்தைகள் சொல்லுகின்றேன். அவை தங்கள் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாக இல்லையே என்று யாரும் மனவருத்த மடையக்கூடாது என்று முதலில் தங்களைக் கேட்டுக்கொள்ளு கிறேன். ஏனெனில் இன்று பேசும் விஷயத்திற்கு, ‘சுயமரியாதையும், புத்தமதமும்’ என்று பெயரிட்டு இருப்பதால் அதைப்பற்றி பேசுகையில் என் மனதில் உள்ளதைப் பேசவேண்டியிருக்கும். பச்சை உண்மையானது எப்போதும் மக்களுக்கு கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். உண்மையை மறைத்துப் பேசுவது என்பது எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சுக் கேட்பவர்களுக்கும் திருப்தியைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும்; திருப்தி...

சைவ வைணவ போட்டி                                   ஒன்றுக்கொன்று பொருத்தம்                                -சித்திரபுத்திரன் 0

சைவ வைணவ போட்டி ஒன்றுக்கொன்று பொருத்தம் -சித்திரபுத்திரன்

இராமன் பிறப்பும் சுப்ரமணியன் பிறப்பும் ஒன்று போலவே கற்பிக்கப் பட்டிருக்கின்றது. இரண்டு பேர்களும் பூமி பாரம் தீர்க்கவும் ராக்ஷதர்கள் அசுரர்கள் அக்கிரமங்களை அழிக்கவும் தோன்றினவர்கள். இராமன் பிறப்பதற்காகவும் தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக்கொண்டார்கள். சுப்ர மணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டிக்கொண்டார்கள். இராமன் ஒரு மனிதன் விந்திலிருந்து பிறந்தான். ஆனால், சுப்ரமணி யன் சிவன் விந்திலிருந்து தோன்றினான். இராமன் ராக்ஷதர்களைக் கொன் றான் சுப்ரமணியன் அசுரர்களைக் கொன்றான். இராமன் செய்த சண்டையில் ராக்ஷதர்களைக் கொல்லக் கொல்ல மூலபலம் தானாக உற்பத்தி யாய்க் கொண்டே இருந்தது. அதுபோலவே சுப்ரமணியன் அசுரர்களைக் கொல்லக் கொல்ல சும்மா தானாகவே அசுரர்கள் உற்பத்தியாய்க் கொண்டிருப்பதும் தலையை வெட்ட வெட்ட மறுபடியும் முளைத்துக் கொண்டே இருந்தது. இன்னமும் பல விஷயங்களில் ஒற்றுமைகள் காணலாம். ஆகவே இரண்டும் ஒன்றுக் கொன்று போட்டிக்காக உண்டாக்கப்பட்டக் கற்பனைக் கதைகள் என்பது விளங்கும். மற்றும் பெரியபுராண 63 நாயன்மார்கள் கதையும் பக்த லீலாமிர்த ஹரி பக்தர்கள்...

கராச்சிக்குப் போகின்றவர்களே இந்தியாவுக்கு எது வேண்டும்? 0

கராச்சிக்குப் போகின்றவர்களே இந்தியாவுக்கு எது வேண்டும்?

இந்த வாரத்தில் இந்தியாவின் விடுதலையை முற்போக்கை முன்னிட்டு என்று தேசபக்தர்கள், தேசீய வாதிகள் என்பவர்கள் இந்தியாவுக்கு இனிச்செய்ய வேண்டிய வேலை என்ன? என்று நிர்ணயிப்பதற்காக கராச்சிக்குப் போகின்றார்கள். அங்கு இந்த மாதம் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காங்கிரஸ் நடைபெறப்போகின்றது. அங்கு சென்று இனிமேல் என்ன செய்ய வேண்டியது என்று தீர்மானிப்பதற்கு முன்பதாக இந்தியாவுக்கு வேண்டியது எது என்று தீர்மானிக்க வேண்டியது முக்கியமானதும், அறிவுடைமையானதுமான காரியமாகும். பொதுவாக இன்று உலக மக்களில் பெரும்பான்மையோருக்கும் சிறப்பாக இந்தியாவுக்கும் முக்கியமாய் வேண்டியதான காரியங்கள் என்பவை ஆட்சியில் மாறுதலல்லவென்பதையும், இந்திய மக்களின் மன உணர்ச்சியில் மாறுதல் வேண்டியது என்பதையும் நன்றாய் உணர வேண்டும். அவற்றுள், 1. மக்களுக்குள் பிறவியில் உயர்வு, தாழ்வு உணர்ச்சி மறைதல். 2. ஆண், பெண் வித்தியாச உணர்ச்சி ஒழிதல். 3. ஏழை பணக்காரன் என்ற தன்மை உணர்ச்சி அழித்தல். ஆகிய இவை மூன்றுமே முக்கியமாகும். தேசபக்தர்களே! தேசீய வாதிகளே!...

சீக்கிரத்தில் சட்டசபை கலையப் போகிறதாம் 0

சீக்கிரத்தில் சட்டசபை கலையப் போகிறதாம்

“சீக்கிரத்தில் இந்திய சட்டசபை கலையப் போகின்றது” என்று ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை எழுதியிருப்பதாகத் தமிழ் நாடு பத்திரிகையில் 10-ந் தேதி உபத்தலையங்கத்தில் காணப்படுகின்றது. அதாவது, “இந்தியா அரசியல் மகாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஒத்துழைக் கப் போகின்றார்களாதலால் அதை உத்தேசித்து டில்லி சட்டசபையைக் கலைத்து விட்டு புதிய தேர்தல்கள் நடக்கப்போகின்றது” என்று ஸ்டேட்ஸ் மென் பத்திரிகைக்கு அதன் டெல்லி நிரூபர் எழுதியிருப்பதாகக் காணப்படு கின்றது. இதைப் பற்றி ஏற்கனவே நாம் 1-2-31- ² குடி அரசு தலையங்கத்தில் எழுதி இருக்கின்றோம். அப்போது சிலருக்கு அது ஆச்சரியமாகவும், உண்மையற்றதாகவும் தோன்றி இருக்கலாம். எப்படி யிருந்தாலும் இது உண்மையானால் காங்கிரசுக்காரர்களுக்கு சமீபத்தில் நடந்த காந்தி – இர்வின் ஒப்பந்தத்தின் பலனாய் ஏதாவது பயன் உண்டு என்று சொல்வ தானால், சட்ட சபைகள் கலைக்கப்பட்டு, காங்கிரசுக்காரர்கள் வெற்றி பெற்று சட்டசபைகளில் நுழைய ஒரு அகால சந்தர்ப்பம் ஏற்படுவதை தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. ஆதலால், இந்த ஒப்பந்தமோ...

புதிய கொள்கை ஏன்? 0

புதிய கொள்கை ஏன்?

சகோதரர்களே! புதிய கொள்கைகள் ஏன் என்கின்ற விஷயத்தைப் பேசுவேன் என்பதாகத் தலைவரவர்கள் குறிப்பிட்டார்கள். புதிய கொள்கைகள் ஏன் என்பது ஒரு கேள்வியேயாகும். அதற்குப் பதில் என்னவென்றால் நமது முன்னேற்றத்திற்குப் பழைய கொள்கைகள் பயன்படவில்லை என்பதோடு, பழைய கொள்கைகளின் பயனாய் நாம் மிகுதியும் பின்னடைந்து விட்டோம். நம்மைப் போன்ற மற்ற நாடுகள் எல்லாம் புதிய கொள்கைகளாலேயே வெகு வேகமாக முற்போக்கடைந்து வருகின்றன. புதிய கொள்கைகளின் பயனாக மக்கள் எவ்வளவோ முற்போக்கடைந்து வருகின்றார்கள். நம்மிடம் வேறு எந்தவிதமான நல்ல காரியங்களில் உறுதியான குணம் இல்லாவிட்டாலும், பழைய கொள்கைகளைக் குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டிருப்பதிலும், புதிய கொள்கைகளிடம் துவேஷமும், வெறுப்பும் காட்டுவதிலும் உலகத்தில் தாமே தலைசிறந்து விளங்குபவர்களாய் இருக் கின்றோம். ஒரு காலத்தில் காட்டிமிராண்டிகளாய் இருந்ததாகச் சொல்லப்படும் ஐரோப்பிய வெள்ளைக்காரர்கள் இன்று உலக சமூகத்தில் தலைசிறந்து விளங்கி வருவதற்குக் காரணம் புதுக்கொள்கைகளை ஏற்கத் தாராளமாய் முன்வந்து பழையக் கொள்கைகளைக் கைவிடுவதில் சிறிதும் தயக்கங் காட்டாததேயாகும். எவ்வளவு கீழான...

இனி என்ன? சட்டமறுப்பு இயக்கம் 0

இனி என்ன? சட்டமறுப்பு இயக்கம்

சட்ட மறுப்பு இயக்கம் சர்க்காருடன் ராஜிசெய்து கொண்டபடிக்குக் காங்கிரஸ் தனது நிபந்தனைகளை நாணையமாய் நிறைவேற்றக் கருத்துக் கொண்டு காரியக்கமிட்டி அறிக்கையின் மூலம் தன்னுடைய கடமையைச் செய்துவிட்டது. அது போலவே சர்க்காராரும் தங்களது நிபந்தனைகளை நிறைவேற்றும் விஷயத்தில் தங்கள் கடமையைச் செய்ய மாகாணக் கவர்ன் மெண்டுகளுக்கு அறிக்கை அனுப்பி சட்ட மறுப்பு இயக்கத்திற்காக சிறைப் படுத்தப் பட்டவர்களை விடுதலை செய்யும்படி செய்து இருக்கிறார்கள். ஆனாலும், இந்த ராஜியானது சட்ட மறுப்பு இயக்கம் தோல்வி அடைந்து விட்டது என்று பொதுமக்களால் கருதும்படியானதாக ஆகிவிட்டதே என்று பயப்பட்ட சிலர் தாங்கள் தோல்வியடையவில்லை என்பதைக் காட்டுவதற் காக அங்குமிங்கும் மறுபடியும் மறியல் செய்வதாகக் காட்டிக்கொள்ள அவசிய முடையவர்களாக ஆகி விட்டார்கள். அதுபோலவே சர்க்கார் தரப்பிலும், சர்க்காரார் சட்ட மறுப்பு இயக் கத்தைக் கண்டு பயந்து விட்டார்களென்று பாமரமக்கள் நினைத்துவிட்டால் என்ன செய்வது என்கின்ற சந்தேகத்தின் மீதும் போலீசாரைப் பற்றி ஏதாவது கேவலமாய் ஜனங்கள் மதித்துவிட்டால், என்ன செய்வது...

நிர்பந்தக் கல்யாணம் 0

நிர்பந்தக் கல்யாணம்

இவ்வாரம் வேறொரு பக்கத்தில் “எனது காதல்” என்பதாக சிவ கங்கை திருமதி. ஏ.எஸ். மணிபாய் என்னும் கன்னிகையின் கடிதம் ஒன்று பிரசுரித் திருக்கின்றோம். இதைப் பற்றி சென்ற வாரமும் பிரசுரித்து மிருந்தோம். இப்போது அந்தப்பெண்மணியின் கைப்படவே கடிதம் வந்ததால் பிரசுரித் திருக்கின்றோம். இது சம்மந்தமாக மற்றும் பல சொந்தக் கடிதங்களும் நமக்கு வந்திருக்கின்றன. அப்பெண்ணின் பெற்றோர்கள் அப்பெண் விரும்பும் நாயகனுக்கு மணம் செய்விக்காமல் வேறு யாரோ ஒருவருக்கு அதாவது அப் பெண்ணுக்குத் தெரியாத ஒருவருக்கு பெண்ணு டைய சம்மதமில்லாமலேயே விவாகம் செய்து கொடுக்கப் போவதாய் பெண்ணின் தாயாரும், சகோதரரும் ஒப்புக்கொண்டதாகவும், பெண் தான் அந்தக் கணவனை மணந்து கொள்ள மாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லியும் கேட்காமல் கல்யாணப் பேச்சுக் கள் நடப்பதாகவும் தெரிய வருகின்றது. இம்மாதிரியாக நிர்பந்தக் கலியாணம் செய்வது என்பது மிகவும் அனாகரீகமான செய்கை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றதற்கு வருந்து கின்றோம். ஆகையால், இவ்விஷயங்கள் உண்மையாக இருக்குமானால் பெற்றோர்கள் தயவு...

புதுச்சேரியில் சுயமரியாதை மகாநாடு 0

புதுச்சேரியில் சுயமரியாதை மகாநாடு

அக்கிராசனரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப்பத்திரங்கள் வாசித்துக் கொடுத்ததற்கு நன்றி செலுத்துகிறோமாயினும், எங்கள் வரவைப் பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய்திருப்ப தாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம் மகா நாட்டிற்கு அனுமதி பெற்றதாகவும் தெரிகின்றது. எந்த இயக்கமானாலும் எதிர்க்கிளர்ச்சி இருந்தால்தான் ஒழுங்காகவும், பலமான அமைப்பாகவும் விளக்கமாகவும் முன்னேற்றமடையும். உதாரணமாக, இவ்வளவு கிளர்ச்சியாவது இங்கு நடந்திருக்கா விட் டால் அதிசயமாகத்தகுந்த இவ்வளவு பெரிய கூட்டம் இங்குக் கூடியிருக்க முடியுமா? எங்கள் வரவில் இவ்வூர் பொது ஜனங்களுக்கு இவ்வளவு கவனம் ஏற்பட முடியுமா? என்று பாருங்கள். அநேகமாக நாங்கள் போகின்ற ஊர் களில் எல்லாம் எதிர்க்கிளர்ச்சியே எங்கள் பிரசாரத்திற்கு மெத்த அனுகூல மளித்து வருகின்றது. நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்கு எங்களுக் காகச் செய்யப்படும் மரியாதைகளில் முதலாவது அங்குள்ள கோவில்களை அடைத்துப் போலீஸ் காவல் போடுவதும், “நாஸ்திகர்கள் வருகிறார்கள்” என்று...

காரைக்குடியில் பார்ப்பனீயத் தாண்டவம் 144 0

காரைக்குடியில் பார்ப்பனீயத் தாண்டவம் 144

காரைக்குடியில் சுயமரியாதைப் பிரசாரத்திற்கு எப்படியாவது இடை யூறு செய்யவேண்டுமென்று சில பார்ப்பன அதிகாரிகளும், பல வைதீகப் பணக்கார நாட்டுக் கோட்டையாரும் முயற்சி செய்துகொண்டுவரும் விஷயமாய் கொஞ்சநாளாக நமக்கு அடிக்கடி சேதி வந்து கொண்டிருந்தது. “தோலைக் கடித்து, துருத்தியைக்கடித்து கடைசியாக வேட்டைக் குத் தயாராகிவிட்டது” என்ற பழமொழிபோல் எந்த எந்த விதத்திலோ தொல்லை விளைவித்தும், அது பயன் படாமல் போகவே இப்போது அதிகாரிகளின் மூலமாகவே ஏதோ ஒரு நொண்டிச்சாக்கை வைத்து உயர் திருவாளர்கள் சொ. முருகப்பா, அ. பொன்னம்பலனார், ப. சிவானந்தன் ஆகியவர்களுக்குக் காரைக்குடி முனிசிபல் எல்லைக்குள் எவ்விதக் கூட்டம் கூட்டவோ, பிரசங் கங்கள் புரியவோ கூடாதென்று 144 தடை உத்திரவு போட்டுத் தடுக்கப் பட்டி ருக்கின்றது. இது பின்னே வரப்போகும் இன்னும் கடினமான தொல்லைக்கு அரிகுறியென்றே கருதவேண்டியிருக்கின்றது. காரைக்குடியானது உண்மை யிலேயே பணக்கார ஆதிக்கமும், வைதீக ஆதிக்கமும் கொண்டது என்ப தற்கு அதன் முனிசிபாலிட்டியில் பெண்களுக்காவது மற்றும் தாழ்த்தப் பட்டவர்களுக்காவது, குறைந்த...

சுங்கக்கேட்டுகளின் தொல்லை ஒழிந்தது 0

சுங்கக்கேட்டுகளின் தொல்லை ஒழிந்தது

சுமார் இரண்டுவருஷ காலமாக பிரஸ்தாபத்திலிருந்து வந்த சுங்கக் கேட்டுகளின் மூலம் சுங்கவரி வசூல் செய்யும் தொல்லைகள் ஒழிந்தது. அதாவது இவ்வாரம் சென்னை சட்டசபையில் சுங்கக் கேட்டுகள் மூலம் சுங்கம் வசூலிக்காமல் இருக்க ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது. இதனால் ஜனங்கள் செலுத்தி வந்த வரி எந்த அளவிலும் குறைந்து விட்டதாகச் சொல்ல முடியாது. கவனித்துப் பார்ப்போமானால் முன்னிலும் அதிகமான வரியை கொடுக்கக்கூடியதாக வந்து சேரும். அன்றியும் இத னால் இவ்வரி வசூலினால் பிழைத்து வந்த ஆயிரக்கணக்கான பேர்களுக்கு ஜீவனத்திற்கு வழி இல்லாமல் போகும். ஜனங்களுக்கு இப்போது இருந்து வரும் மோட்டார் போக்குவரத்து பிரயாணக்காரருக்கு சற்று வாடகைத் தொல்லை அதிகமாகும். இன்னும்பல அசௌகரியங்களும் உண்டாகக் கூடும். என்றாலும் ஒரு முக்கியமான அனுகூலம் உண்டு என்பதை நாம் எடுத்துக் காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம். அதாவது சுங்கக்கேட்டுக்குப் பக்கத்தில் வண்டிகளை நிறுத்திக்கொண்டு சுங்கக்காரர்களுடன் தொல்லை கொடுக்கும் காரியம் ஒழிந்தது மிகவும் மகிழ்ச்சியடையத்தக்கதாகும். சுங்கக் குத்தகைதாரர்களில் 100க்கு 50...

ராஜி – ஓ – ஓ – ஓ ராஜி !                                    உப்பு சத்தியாக்கிரக ராஜி!! 0

ராஜி – ஓ – ஓ – ஓ ராஜி ! உப்பு சத்தியாக்கிரக ராஜி!!

இந்தியாவின் அரசியல் சரித்திரத்திலேயே இதுவரையும் யாரும் கேட்டிராத அளவுக்கு ராஜி மலிந்து போய் ராஜி – ஓ – ஓ – ஓ ராஜி! ராஜி-ஓ – ஓ – ஓ ராஜி!! என்று வெகு கவலையுடன் அலைந்து திரிந்து எப்படியோ ஒரு விதத்தில் உடும்பு கையைவிட்டால் போதுமென்ற காரியத்தில் வெற்றி பெற்றதைக் குறித்து தேசியவாதிகள் பாராட்டத்தக்கவர்களே யாவார்கள். பொதுவாகவே ராஜியின் தத்துவமானது இதுவரை வெளியாயிருக் கும் விஷயங்களைக்கொண்டு பார்த்ததில் எது போல இருக்கின்றது என்றால் தற்காலம் இந்திய ஜனங்கள் ஒரு விவகாரத்திற்கு செல்லும்போது அவர்க ளுடைய விவகாரத்திற்குக் காரணமான காரியங்களும் எண்ணங்களும் வேறு ஒன்றாக இருந்தாலும் வேறு பல அசௌகரியங்களும் பாத்தியங்களும் லட்சியமாகக் கருதப்பட்டிருந்தாலும் வியாஜ்யம் தொடர்ந்து விவகாரத்தை மும்மரமாய் நடத்தினபிறகு அது முடிவு பெறுவதற்குள் ஏற்பட்ட களைப்பும், சலிப்பும், கஷ்டமும், நஷ்டமும் மேலும் மேலும் தொடர்ந்து நடத்தப்போதிய சாதனங்களற்ற தன்மையும் ஆகிய எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கடைசியில் எப்படியாவது...

கர்ப்பத்தடை குழந்தைகள் பெறுவதை குறைக்க அவசியம் 0

கர்ப்பத்தடை குழந்தைகள் பெறுவதை குறைக்க அவசியம்

ஒரு தேசத்து ஜனங்கள் திரேக ஆரோக்கியமும், புஷ்டியும், பலமும், வீரமும், சுயமரியாதையும், அறிவுமுள்ளவர்களாக இருக்க வேண்டுமானால், அவர்கள் குழந்தைப் பருவம் முதற்கொண்டே தங்கள் பெற்றோர்களால் நன்றாய் போஷிக்கப்பட்டும், கல்வி கற்பிக்கப்பட்டும், விசாரமில்லாமல் மன உல்லாசமாகவும்வளர்க்கப்படவேண்டும். அவ்விதம் பெற்றோர்களால் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டுமானால், பெற்றோர்கள் தங்கள் சக்திக் கும் தகுதிக்கும் போதுமான அளவே குழந்தைகளைப் பெறுவதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அப்படியில்லாமல், சக்திக்கும், அளவுக்கும் மீறி பெற்றோர்கள் அதிகமாகக் குழந்தைகளைப் பெறுவதால் பெற்றோர்கள் கஷ்டத் திற்குள்ளாவதுடன், குழந்தைகளும் பலவீனர்களாகவும், சௌகரிய மற்றவர்களுமாகி, அவர்களைக் கொண்டதேசமும் தரித்திரத்தில் மூழ்கி மற்ற மக்களுக்கும் துன்பத்தை விளைவிக்க வேண்டியவர்களாகி விடுகின்றார்கள். உதாரணமாக. நமது நாட்டையே எடுத்துக்கொள்ளுவோமேயானால், நாளுக்கு நாள் ஜனங்களின் எண்ணிக்கை அதிகமாகி, பெரும்பான்மை யோர்கள் தொழிலில்லாமல், வாழ்வதற்கே வகையில்லாமல் மேலும் மேலும் பிள்ளைகளைப்பெற்றுக்கொண்டு, அவைகளை காப்பாற்றவும், படிப்பிக் கவும் சத்தியில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு துக்கத்தில் ஆழ்ந்து கிடப் பதும் நாம் அனுபவித்தும், பார்த்தும் வருவதுமான சம்பவங்களாகும். சில குழந்தைகளைக்...

துணுக்குகள் 0

துணுக்குகள்

“நாம் அதிகம் துன்பமடைவதற்கு, நமது அறியாமையே முக்கிய காரணமாகும். ஏனெனில், நாம் எக்காரியத்தையும் கொஞ்சமேனும் முதலில் ஆலோசியாமல் செய்வதுமன்றி, நமது அறிவையும் உபயோகிப்பதில்லை” யென ஓர் பெரியார் உரைத்திருக்கின்றார். ஆனால், நமது மதமோ, நம்மு டைய அறிவை உபயோகித்து, ஆலோசனை புரிய இடங்கொடுக்க மறுக் கின்றதுடனல்லாமல் புரோகிதர்களும், மடாதிபதிகளும், குருக்களும் கூறு பவைகளை அப்படியே கண்மூடித்தனமாகவும், சுலபமாகவும் நம்பிக் கொள்ளும்படி நம்மை வற்புறுத்தியும், அப்படி நம்பினவர்களுக்குத் தான் மோட்சலோகம் சித்திக்குமெனவும் கட்டளையிடுகின்றது. இதனால், அறிவை உபயோகித்து ஆலோசிக்கின்றவர்களுக்கும், அவர்கள் உரைக்கும் மோட்ச லோகத்திற்கும் அதிக தூரம் ஏற்பட்டுவிடுகின்றது. இக்காரணத்தா லேயே மடாதிபதிகளும், குருக்களும், புரோகித கூட்டங்களும் அறிவுள்ள மானிடர் களை அபாயக்காரர்களென நினைத்து, எப்பொழுதும் அத்தகை யோரை கருவருக்க வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டே வந்திருக் கின்றார்கள். அறிவில்லாதவர்களையும், யோசியாமல் கண்மூடித்தனமாக உரைப்பனவெல் லாம் உண்மையேயென நம்பிக்கொள்ளுகின்றவர்களையும், சுலபமாகவே அடக்கி, ஆண்டு வரமுடியுமென அம்மடாதிபதி முதலியவர்கள் நாளா வட்டத்தில் அறிந்துகொண்டுமிருக்கின்றார்கள். ஏனெனில், அம்மடாதிபதி...

தைப்பிங் கடிதம் 0

தைப்பிங் கடிதம்

லேவாதேவி கடையில் அடுத்தாள் என்ற முறையில், பெட்டியடியில் வேலைபார்க்கும் கணக்கப்பிள்ளைகளும், செட்டிப்பிள்ளைகளும் காலை 7மணி முதல் இரவு10மணி வரை சதா கடைவேலைகளிலேயே ஈடுபட்டு சற்றேனும் ஆருதலில்லாமலும் உலக நடவடிக்கை மற்ற இதர காரியங்களை கலந்து பேசவோ, கொஞ்சமும் நேரமில்லாமலிருப்பதை முன்னிட்டு நாளது வருஷம் கார்த்திகை மாதம் 15 தேதி இரவு தைப்பிங் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் சுவாமி புறப்பாடன்று மேல்கண்ட எல்லோரும் ஒன்று கூடி இது விஷயமாகத் தினசரி காலை 6-30 முதல் 7-30 வரையிலாவது அல்லது மாலை 4 மணி முதல் 5.30 வரையிலாவது ஓய்வு வேண்டுமென்பதைப்பற்றி ஆலோ சித்து தீர்மானப்படுத்திக்கொண்டு கோவில் திண்ணையில் கூடி உட்கார்ந்தி ருந்த அவர்களின் மேலாள் என்று சொல்லும் பெரிய செட்டியார்களிடத்தில் இவர்களுடைய அனுதாபத்தைத் தெரியப்படுத்தினார்கள். என்ன சொல்வது கடைசியில், “ உடும்பு வேண்டாம் கைய விடுங்க” ளென்று சொன்ன முறையில் வந்து விட்டது. என்ன பரிதாபம்! மேலாள்கள் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக்கொண்டு “...

தேசீய வியாபாரம் 0

தேசீய வியாபாரம்

உலகத்தில் மக்கள் தங்கள் தங்கள் வாழ்க்கைக்கு விதாயங்கள் ஏற்படுத்திக்கொள்ளுவதில், பலர் பொது நல சேவை என்பதையும் ஒரு மார்க்கமாக உபயோகப் படுத்திக் கொண்டு வருகின்றார்கள் என்பது யாவரு மறிந்த விஷயமாகும். அந்த முறையிலேதான், இன்று எல்லா விதமான பொது நல சேவைகள் என்பவைகளும், ஒரு தனித்தனி மனிதனின் சுய நல வாழ்க்கையை முக்கிய நோக்கமாகவும், அடிப்படையாகவும் கொண்ட தாகவே இருந்து வருகின்றன. இந்த நிலைமையானது, இந்நாட்டின் மக்களின் உண்மையான பொது நலம் என்பதை அடியோடு கெடுத்து விட்டதுமல்லாமல், இம்மாதிரி தன்மை களால் பொது நல வாழ்வானது உண்மை, ஒழுக்கம், நாணயம் என்பவைகள் சிறிதும் இல்லாத புரட்டுக்கும், பொய்யுக்கும், வஞ்சகத்திற்கும், நிலையா யுள்ள ஒரு வியாபார சாலை போல் ஏற்பட்டு விட்டது. இதன் பயனாகவே மக்கள் மிகவும் ஏமாற்றப்பட்டு, கஷ்டத்திற்கும், கொடுமைக்கும் ஆளாகி முற்போக்கடைய சிறிதும் இடமில்லாமல் போய் விடுகின்றார்கள். இந்த மாதிரியான காரியங்கள், சமீப காலம் வரை மதம், கடவுள், மோக்ஷம்,...

இந்தியாவில் அறிவு இயக்கம் 0

இந்தியாவில் அறிவு இயக்கம்

மேல்நாடுகளில் இது சமயம் வெகு தீவிரமாய் நடைபெற்று வரும் அறிவு இயக்கப்பிரசுரங்கள் பல என்பதும் அதுவே இந்தக்காலத்திய முக்கியமான காரியமாய் எங்கும் கருதப்படுகின்றது என்பதும் யாவரு மறிந்த விஷயங்களாகும். அவற்றுள் ருஷியாவிலும், சைனாவிலும், ஜெர்ம னியிலும், துருக்கியிலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடப்ப வைகள் மிகவும் தீவிரமாகவும், வேகமாகவும் நடைபெறுபவைகளாகும். நிற்க, இவ்வியக்கங்கள் முழுவதும் மிகுதியும் மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சியிலும் சமரசத்திலுமே கவலை வைத்து நடத்தப்பட்டு வருகின்றவைகளாகும் என்பதில் யாருக்கும் ஆnக்ஷபனை இல்லை. இதில் கலந்து முக்கிய பங்கெடுத்து வேலை செய்து வருபவர்களும் பெரிதும் உலகினோரால் வீரர்கள் என்றும், அறிவாளிகள் என்றும் உண்மையாளர்கள் என்றும், மதிக்கப்படக் கூடியவர்களாகவே இருந்து வருவதும் யாவரும் அறிந்த விஷயமாகும். ஆகவே இவ்வறிஞர்களான பெரியோர்கள் மக்களுக்கு அறிவையும், சமத்துவ உணர்ச்சியையும் ஊட்டுவதற்காக முயற்சி செய்து வரப்படும் பிரசாரங்கள் பெரிதும் மனித சமூகத்தின் எல்லாவித கெட்ட காரியங்களுக் கும் ஆதாரமாய் முதலில் மதமும் மதத்தலைவர்கள் உபதேசமும் பிறகு கடவுளும்...

“எனது காதல்” 0

“எனது காதல்”

மேற்கண்ட தலைப்பின்படி ‘எனது காதல்’ என்பதாக தலைப் பெயரிட்டு கலப்பு மணம் செய்து கொள்ள முடிவுசெய்திருப்பதாகக்கண்டு ஒரு கடிதம் ராமநாதபுரம் ஜில்லாவில் இருந்து ஒரு பெண்மணி எழுதியதாக எழுதப்பட்டு பிரசுரிப்பதற்காக நமக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. அதில் கையெழுத்தில்லாததாலும், எழுத்துக்கள் பெண் எழுத்துத் தானா என்று சந்தேகிக்கப்படக்கூடியதாகவும் இருப்பதால் அதை பிரசுரிக் கக்கூடவில்லை. ஆனால் அக்கடிதக் கொள்கைக்கு நாம் சார்பளிக்க வேண்டி யது அவசியமாயிருப்பதால் அதை பிரசுரிக்க வேண்டியது அவசியமெனவும் தோன்றுகின்றது. ஆகவே கையெழுத்துடனும், அது எழுதப்பட்ட பெண்ணின் படம் அல்லது கைரேகையுடனும் நமக்கு வேறு கடிதம் எழுதி அனுப்பப்பட்டால் பிரசுரிக்கத் தயாராயிருக்கிறோம். அதில் கண்டகாரியம் நடைபெறவும் நம் மால் ஆன அனுகூலம் செய்யத்தயாராயிருக்கின்றோம். (ப-ர்.) குடி அரசு – பத்திராபர் குறிப்பு – 15.02.1931

சுயமரியாதை மகாநாடு –               முன்னேற்பாடு கூட்டம் 0

சுயமரியாதை மகாநாடு – முன்னேற்பாடு கூட்டம்

வரவேற்புத் தலைவர்களே, நண்பர்களே இன்று இங்கு கூடியிருப்பது 3-வது சுயமரியாதை மகாநாட்டை விருதுநகரில் நடத்தும் விஷய மாய் யோசிப்பதற்காகவேயாகும். மகாநாட்டை ராமனாதபுரம் ஜில்லாவில் நடத்துவதென்பது சென்ற வருஷம் ஈரோட்டில் நடந்த இரண்டாவது மகா நாட்டின் போதே இச்சில்லாவாசிகள் அழைக்கப்பட்டு தீர்மானித்த விசய மாகும். இராமநாதபுரம் ஜில்லாவில் எங்கு நடத்துவது என்பது சமீபத்தில் ஈரோட்டில் நடந்த நிர்வாக சபை கூட்டத்தில் விருதுநகர் பிரமுகர்களில் சிலர் முன்னிலையில் அவர்களது சம்மதத்தின் மீது முடிவு செய்ததாகும். ஆகவே இங்கு நடைபெறும் விஷயத்தில் எல்லாவற்றையும் விட இவ்வூர் பிரமுகர்களுடையவும், வாலிபர்களுடையவும் ஒத்துழைப்பும் ஊக்கமுமே அதிகமாக வேண்டியதாகும். நமது இயக்கத்தின் முக்கியத்தைப் பற்றியும் அதன் பயனைப் பற்றியும் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய தில்லை. இதற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பிரசாரமும் இதற்கு ஏற்பட்டிருக்கும் எதிரிகளின் தன்மையும் கவனித்தாலே விளங்கிவிடும். எப்படி எப்படியோ மூன்று நான்கு வருஷங்களை இயக்கப் பிரசாரம் நடைபெற்றதுடன் இரண்டு பெரிய மகாநாடுகள் நடந்து மூன்றாவது மகாநாடு நடக்கப்...

முஸ்லீம் வாலிபர்களுக்கு 0

முஸ்லீம் வாலிபர்களுக்கு

சமீப காலமாக, அதாவது சுமார் ஒரு வருஷகாலமாக அநேக இஸ்லாம் வாலிபர்களுடனும், பல மௌல்விகளுடனும், இரண்டொரு மௌலானாக்களுடனும் நெருங்கிக் கலந்து பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் பல கிடைத்தன. அதிலிருந்து சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் பலர் முழுவதையும், சிலர் ஒன்றிரண்டு தவிர மற்றதையும் ஒப்புக்கொள்ளு பவர்களாகவே அறியமுடிந்தது. ஆனால் கடவுள் என்பதைப்பற்றி மாத்திரம் அவர்களில் அநேகர் தங்கள் அபிப்பிராயத்தை வெளியில் எடுத்துச் சொல்லவே பயப்படு வதையும் சிலர் அப்புறம்இப்புறம் திரும்பிப்பார்த்துப் பேசுவதையும், பார்க்கும்போது நமக்கு மிக்க பரிதாபமாகவே இருந்தது. அதில் ஒருவர் நம்மிடம் பேசுகையில் “நீங்கள் கடவுள் என்பதைப் பற்றி பேசும், எழுதும் எழுத்துக்கள் எல்லாம் இந்துமதக் கடவுள்களைப் பற்றி மாத்திரம் பேசுகின்றீர்களா? அல்லது மற்ற மதக்கடவுள்களையும் பற்றி பேசுகின்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு நாம் விடையளிக்கையில் “நீங்கள் கடவுள் என்பதற்கு என்ன பொருள் கொண்டு கேட்டிருந்தாலும் நான் கடவுள் என்று பேசுவதில், சர்வ சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், உலகில் நடைபெறும்...

பண்டித மோதிலால் முடிவெய்தினார் 0

பண்டித மோதிலால் முடிவெய்தினார்

பண்டித மோதிலால் நேரு அவர்கள் இந்தியாவில் கீர்த்திபெற்ற மனிதருள் ஒருவராவர். அதோடு பெருந்தியாகிகளுள் ஒருவராவர். அவர் ஐக்கிய மாகாணத்தில் ஒரு பேர் பெற்ற வக்கீலாயிருந்தவர். கல்கத்தாவுக்கு திரு. தாஸ் போலவும், பம்பாயிக்கு திரு. ஜெயக்கர் போலவும், மத்திய மாகாணத்திற்கு திரு.சாப்ரு போலவும், சென்னை மாகாணத்திற்கு திரு. சீனி வாச ஐயங்கார் போலவும், பெரும் பெரும் வரும்படியுள்ள வக்கீலாகவும் வக்கீல் தொழிலில் கெட்டிக்காரர் என்று பிரமாதிக்கும்படியாகவும் வாழ்க்கை யில் எல்லோரைப் பார்க்கிலும் பெருமையாகவும் வாழ்ந்து வந்தவர். அவரது வீடும் வாழ்க்கைத் திட்டமும் அரண்மனைபோலவே இருக்கும். இந்திய பொதுவாழ்க்கையை என்றைய தினம் படித்தவர்கள் மூலமும் படித்தவர்களுக்குள்ளாகவுமே ஆரம்பிக்கப்பட்டதோ அன்று முதலே வக்கீல்களே பொது வாழ்வில் இறங்கி வேலை செய்யும் கீர்த்தி பெறவும் முடிந்து வந்தது. அந்த முறையில்தான் திரு. திலகர் முதல் திரு. சத்தியமூர்த்தி ஈராக அநேகர் அநேகமாக பொது வாழ்க்கையில் பிரசித்தி பெற்றவர்களாக நேர்ந்தது. திரு. காந்தியவர்களும் இந்த முறையிலேயே பொதுவாழ்வுக்கு வரவேண்டியவரானாலும்...

பல்லாவரப் பொது நிலைக்கழகக் கூட்டம் 0

பல்லாவரப் பொது நிலைக்கழகக் கூட்டம்

சென்ற வாரம் பல்லாவரத்தில் கூடிய பொது நிலைக் கழக ஆண்டு விழாவில் பல தீர்மானங்கள் செய்ததாக நமக்குத் தகவல்கள் கிடைத்திருக் கின்றன. அவை ஒரு அளவில் பண்டிதர்களின் மனமாறுதலைக் காட்டக் கூடியதாகவும், சைவத்தின் புதிய போக்கைச் சிறிதாவது காட்டக்கூடியதாக வுமிருப்பதால் அதைப்பற்றி சில குறிப்பிடுகின்றோம். இம்மன மாறுதலும், இப்புதிய போக்கும் நமக்கும் சிறிது பயனளிக் கலாம் என்று நம்ப அத்தீர்மானங்கள் இடம்கொடுக்கின்றன. பல்லாவரத் தீர்மானங்களில் முக்கியமானவை திருவாடுதுரை திருபனந்தாள் மடாதிபதிகளின் நன்கொடைக ளுக்கும் வாக்குறுதிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளும் தீர்மானங் களும், தமிழுக்கும், சைவத்திற்கும், மடாதிபதிகள் பொருளுதவி செய்ய வேண்டு மென்னும் வேண்டுகோள் தீர்மானமும், மற்றும் தமிழைப் பற்றிய சில தீர்மானங்களும் செய்யப்பட்டிருப்பதுடன் சீர்திருத்த சம்மந்தமான பல தீர்மானங்கள் செய்யப்பட்டிருப்பதுவே நாம் குறிப்பிடத்தக்கதாகும். அவை யாவன:- கோவிலுக்குள் யெல்லா ஜாதியாருக்கும் எல்லா விஷயங்களிலும் சமத்துவ உரிமை இருக்கவேண்டும், ஆதிதிராவிடர்களுக்கு கோவில் பிரவேசமளிக்க வேண்டும், கோவில்களில் தேவதாசி முறை கூடாது, அனாவசியமானதும் அதிக செலவானதும்...

ஜனநாயகம் 0

ஜனநாயகம்

சின்னா பின்னப்பட்டு சீரழிந்து கிடக்கும் ஒரு நாடோ சமூகமோ முன்னேற்றமடைய வேண்டுமானால், கண்டிப்பாய் அந்த நாட்டிற்கு ஜன நாயகம் என்பது அதாவது அந்த ஜனங்களாலேயே அந்த சமூகத்தை ஆட்சி செய்து, முற்போக்கடையச் செய்வது என்பது முடியவே முடியாது. இன்னும் விளக்கமாய்ச் சொல்வதானால், அதாவது, பல மதமாய், பல ஜாதி யாய், பல வகுப்பாய், பல லக்ஷியமாய் பிரிந்து சராசரி 100க்கு 10 பேருக்கு கூட கல்வியறிவில்லாமல் இருக்கும் இந்தியாவுக்கு, இன்று ஜனநாயக ஆட்சி என்பது சிறிதும் பயன்படாது என்பதேயாகும். இந்த அபிப்பிராயம், நாம் மாத்திரம் சொல்வதாக மக்கள் கருதினாலும் நமக்கு ஆnக்ஷபணையில்லை. ஆனாலும் அறிஞர்களும், அனுபவ சாலிகளுமான அநேகர் இதே அபிப்பிராயம் கொண்டிருப்பதை நாம் கேட்டு மிருக்கின்றோம். அன்றியும் இந்த நமது மேல் கண்ட அபிப்பிராயத்தை நிரூபிக்க இதற்கு முன் பல ஆதாரங்களை நாம் எடுத்து காட்டியும் இருக்கின்றோம். ஆனாலும், இப்போது கிடைத்த இரண்டொன்றையும் எடுத்துக்காட்டு வோம். அதாவது:- இந்திய நாட்டிலுள்ள...

கிரேநகரில் ஆதிதிராவிடர் ஆண்டுவிழா ‘சமரச சன்மார்க்கம்’ 0

கிரேநகரில் ஆதிதிராவிடர் ஆண்டுவிழா ‘சமரச சன்மார்க்கம்’

சகோதரிகளே! சகோதரர்களே!! சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர காரியத் தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம் என் கிறோமோ எது எது உண்மையான – இயற்கையான சமரச சன்மார்க்க மென்று கருதுகின்றோமா அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக் கப்பட்டிருக்கின்றது. இது நமதுநாட்டில் மட்டும் அல்ல உலக முழுவதிலுமே அப்படித்தான் அமைக்கப்பட்டுப்போயிற்று. ஆனால் நமது நாட்டில் மற்ற நாடுகளைவிட வெகு தூரம் அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப் பட்டு விட்டது. முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவைகள் இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்க மல்லாமல் நியாய பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டி ருக்கின்றது. இந்த நிலையில் ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றி பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்படவேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களா லோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில் அவை ஒன்றுக்...

சட்டசபையில் எனது அநுபவம் 0

சட்டசபையில் எனது அநுபவம்

சென்ற சில ஆண்டுகளில் மாதர் முற்போக்கு எவ்வளவு முன்னேறி யிருக்கிற தென்பதும் தங்கள் தற்கால நிலையறிந்து தங்கள் உரிமைகளைப் பெற எவ்வாறு முனைந்து நிற்கின்றனரென்பதற்கும் சமீபத்தில் நடைபெற்ற மாதர் மகாநாடுகளும், அவைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுமே போதிய சான்று கூறும். இந்தியாவிலேயே முதன் முதல் சட்டசபையில் ஸ்தானம் பெற்ற பெண் அங்கத்தினர் ஸ்ரீமதி முத்துலட்சுமி அம்மையாரே யாகும். அதிலும் உபதலைவர் பதவி பெற்றது போற்றற்குறியதேயாகும். அம்மையார் அவர்கள் தனது சட்டசபை அநுபவத்தை ( ஆங்கிலத் தில் ) எழுதி பிரசுரித்துள்ள பிரதி ஒன்று வரப்பெற்றோம். இதில் தான் பதவி வகித்து வந்த காலத்தில் தான் கொண்டுபோன தீர்மானங்களின் விபரமும் அதையொட்டிய விவாதங்களும் சர்க்கார் தரப்பு பதிலும் அவை அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட விபரமும் செவ்வனே விளக்கப்பட்டுள்ளது. தேவதாசி மசோதாவுக்கும் விபசார விடுதியொழிப்பு சட்டத்திற்கும் இருந்த எதிர்ப்புப் பல. அதன் முழு விபரங்கள் இதில் காணப்படுகின்றன. இதை முற்றும் படித்த வர்களுக்கு பெண்கள் தங்கள் உரிமைகளைப்...

மேல்நாட்டின் ஜோதியும்  கீழ்நாட்டின் பீதியும் 0

மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும்

தலைவரவர்களே! நண்பர்களே!! மேல்நாட்டின் ஜோதியும், கீழ் நாட்டின் பீதியும் என்னும் விஷயமாய் இன்று மறுபடியும் நான் பேச வேண்டு மென்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த தலைப்பைக் குறிப்பிட்டவர்கள் என்ன கருத்தைக்கொண்டு – நான் இத்தலைப்பில் என்ன பேசவேண்டுமென்று கருதி ஏற்பாடு செய்தார்களென்பது எனக்குத் தெரியாது. ஒருசமயம் மேல் நாட்டின் பெருமையையும் கீழ் நாட்டின் சிறுமையையும் பற்றி நான் பேசவேண்டு மென்று கருதினார்களோ என்னமோ தெரியவில்லை. ஆன போதிலும் இந்தத் தலைப்பை நான் காலையில் பார்த்தவுடன் சில விஷயங்கள் சொல்ல லாமென்பதாகக் கருதி சில குறிப்பு வைத்திருந்தேன். ஆனால் இப்போது எனக்கு முன் பேசிய மன்னார்குடி ஜனாப் யூசுப் பாவலர் அவர்கள் சமாதி வணக்கம், கொடி, பஞ்சா முதலிய உற்சவங்கள் இஸ்லாமார்க்க ஆதாரங்களில் கிடையாதென்றும், அவையெல்லாம் புரோகிதக் கூட்டத்தாரால் புகுத்தப்பட்டு மக்கள் மூட நம்பிக்கையால் பின்பற்றுவதாகுமென்றும் சொன்னபோது இங்குகூட்டத்திலிருந்த இரண்டொருவர் ஏதோ பிரமாதமாய் முழுகிப் போய் விட்டது போல் கருதி கூக்குரலிட்டதையும், கோபத்துடன் ஆnக்ஷபித்த...

திரு. சி. ராஜகோபாலாச்சாரி                          ஈ.வெ. இராமசாமி சந்திப்பு 0

திரு. சி. ராஜகோபாலாச்சாரி ஈ.வெ. இராமசாமி சந்திப்பு

திருவாளர் சி. ராஜகோபாலாச்சாரியார் 29 தேதி காலையில் சென்னை யிலிருந்து ஆமதாபாத் செல்வதற்காக சென்னை சென்டிரல் ஸ்டேஷனில் கிரான்ட் டிரன்க் எக்ஸ்பிரஸில் ஏறி வண்டியின் முகப்பில் நின்று கொண்டி ருந்தார் ; பல கனவான்கள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். திரு. ஈ.வெ. இராமசாமி 29 ² காலை மங்களூர் மெயிலில் சென்னைக்கு வேறு காரியமாக வந்தார். திரு. ராஜகோபாலாச்சாரியார் நின்ற வண்டிக்கு நேராகவே திரு. ஈ.வெ. இராமசாமி வந்த வண்டியும் வந்து நின்றது. வண்டியை விட்டு இறங்கும் போது எதிரிலிருந்த கூட்டத்தை கவனிக்கும் போது திரு. ஆச்சாரியாரை பார்த்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டார்கள். ஆச்சாரியாரின் வண்டியினருகில் சென்று பொதுவாக இரண் டொரு வார்த்தைகள் பேசிக்கொண்டார்கள். அங்கு பக்கத்தில் உட்கார்ந் திருந்த திரு. பட்டாபி சீதாராமையரையும் கண்டு மரியாதை செய்தார். அந்த சந்திப்பு 5 வருஷத்திற்கு முன்னிருந்த ஒற்றுமையையும் கூட்டு வேலையை யும் எல்லோருக்குமே ஞாபகப் படுத்தியது என்பதில் ஆnக்ஷபணை இல்லை....

ருஷ்யாவைப் பற்றி சர். டாகூர் அபிப்பிராயம் 0

ருஷ்யாவைப் பற்றி சர். டாகூர் அபிப்பிராயம்

உயர்திரு. சர். ரவீந்திரநாத் டாகூர் அவர்கள் ருஷியா மாஸ்கோ வுக்குச் சென்றிருந்த சமயம் அங்கு ஒரு பத்திராதிபருக்குப் பேட்டி அளித்துப் பேசியதில், “நீங்கள் குடியானவர்கள் விஷயத்தில் மிக்க சிரத்தை எடுத்து, அவர் களுக்கு கல்வி பரவும்படி நல்ல வேலை செய்திருக்கிறீர்கள். எங்கள் தேசத் தில் கல்வி, கோடிக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. உங்களி டமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொண்டேன். தேகபலம், கல்வி இவை யில்லாத வர்களையும் உபயோகித்துக்கொள்ளும் விஷயம் மிக்க சாமர்த் தியமானது. இங்குள்ள தாய் தகப்பனற்ற சிறுவர்கள், புது உலக வாழ்வுக்குத் தகுந்த சக்தி யையும், நம்பிக்கையையும் உடையவர்களா யிருக்கிறார்கள். விவசாயிகள் கஷ்டத்தைப் போக்க நீங்கள் போட்டிருக்கும் திட்டம் திருப்தியாயிருக் கின்றது. வைத்தியம், சுகாதாரம் நல்ல நிலையில் இருக்கின்ற தென்று வைத்தி யர்கள் சொல்லுகிறார்கள்” என்று சொன்னார். இதிலிருந்து ருஷியாவின் மேன்மை யாவருக்கும் நன்றாக விளங்கும். இவைதவிர, மற்றொரு விஷயமும் சொன்னார். அதாவது, “மதம், செல்வ நிலை, சமூகவாழ்வு ஆகிய விஷயங்களில் உங்க...

சட்ட மறுப்புக்கு சர்க்கார் உதவி 0

சட்ட மறுப்புக்கு சர்க்கார் உதவி

சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அது அற்ப ஆயுளாய் முடியுமென்றே முடிவுகட்டி இருந்தோம். அந்தப்படி ஒழிந்து விடுமென்று எதிர்பார்த்த காலத்திற்கு மேலாக சற்று காலம் கடத்திவரப் படுகின்றது. சட்டமறுப்புத் தன்மையை தைரியமாய் வெளியிலெடுத்துச் சொல்ல முடியாதவர்களும் அதில் கலந்து கொள்ள சிறிதும் தைரியமில்லாத வர்களுமாய் இருந்த சில கூட்டாத்தாருக்கு சட்டமறுப்பு இயக்கம் நீடித்து இருப்பதால் வாயில் பேசி பெருமையும் திருப்தியும் அடைய ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இந்த மாதிரி இனியும் கொஞ்சம் காலம் கடத்தும் நிலைமைக்கு சட்டமறுப்புக்காரர்களாவது வாய்ப்பேச்சு வீரர்களாவது சிறிதும் பொறுப்பாளிகளல்ல என்பதே நமது முடிவு. மற்றுயார் என்றால் சர்க்காராரே முக்கிய காரணஸ்தர்களா வார்கள். இந்தக்கிளர்ச்சி ஆரம்பித்த காலத்தில் அனேகமாய் இந்தியாதேசம் முழுவதும் அதற்கு எதிரிடையாய் இருந்த காலத்தில் பேசாமல் விட்டுவிட்டு பிறகும் கிரமமான முறையில் நடவடிக்கை எடுத்துக்கொள்ளாமல் அனாகரீகமான முறையில் முறட்டு பலத்தை பிரயோகித்ததால் இப்போது பாமர மக்களை மயங்கச்செய்து அதில் கவனம் செலுத்தும்படி செய்து வருகின்றது-நியாய, அனியாயங்களை...

பாலர் பரிபாலனம் 0

பாலர் பரிபாலனம்

சென்னை பண்டிதர் திரு.எஸ். ஆனந்தமவர்களால் எழுதப்பட்ட “பாலர் பரிபாலனம்” என்னும் புஸ்தகம் வரப்பெற்றோம். நமது நாட்டில் குழந்தை வளர்ப்பிலோ அல்லது அதன் போஷணையிலோ போதிய சிரத்தையும், கவனமும் காட்டப்படுவதில்லை யென்பதோடு அனேகருக்கு அதன் விபரமே தெரியாதென்று சொல்லவேண்டி இருக்கிறது. இதனா லேயே சிசு மரணமும், அகால மரணமும், பலவீனமும், ஊக்கமின்மையுமாகிய வைகள் மலிந்து அன்னிய நாட்டார் முன்னிலையில் இந்தியர்களை மாக் களாகக் கருதப்படும் படியாகச் செய்து வருகின்றது. இவை மாத்திரமல் லாமல் மக்களுக்கு நல்லொழுக்கமும் பகுத்தறிவும் கூட அடைவதற்கில் லாமல் இருந்துவரப் படுகின்றது. இவற்றிற்கெல்லாம் காரணம் பிள்ளை களை எப்படி பரிபாலிப்பதென்கிற விஷயத்தில் சிறிதும் அறிவும், ஆராய்ச் சியும் இல்லாததே காரணமென்பதைத் திரும்பவும் வலியுறுத்திச் சொல்ல வேண்டி யிருக்கின்றது. இத்தகைய பெருங்குறையை போக்க திரு. ஆனந்தமவர்கள் முயற்சித்து இப்புத்தகம் எழுத முன்வந்தது பேருதவியேயாகும். இதில் குழந்தை பிறப்பு, குழந்தைப் பருவத்துன்பங்களும், காயலாவும், ஸ்நானம், உடை, ஆகாரம், தாதி, தொத்து வியாதியிலிருந்து காப்பாற்றுதல்,...