திரிகூட சுந்தரனார் திருமணம்

நண்பர் உயர்திரு. திரிகூட சுந்திரர் அவர்களுக்கு திருநெல்வேலி யில் சுயமரியாதை முறைப்படி திருமணம் நடந்த சங்கதி மற்றொறு பக்கம் பிரசுரித்திருக்கிறோம்.

அவர் ஒருநாளும் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு எதிராக இருந்த தில்லை. நமது இயக்கத்தை பாராட்டி எழுதி இருக்கும் வியாசங்கள் அநேகம் ‘குடி அரசி’லும், “ரிவோல்டி” லும் காணலாம்.

உடல் நலிவால் அவரது திருமண அழைப்பிற்குச் செல்ல நமக்கு வசதி ஏற்படவில்லையானாலும் அத்திருமணம் நடந்த முறையை அறிந்து நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைவதுடன் திரிகூட சுந்திரரை நாம் மிகுதியும் பாராட்டுகிறோம்.

மணமக்கள் சீர்திருத்தத் துறையில் தொண்டாற்றி மனித சமூகத்திற்கு விடுதலையையும், சுயமரியாதையையும் உண்டாக்க ஆசைப்படுகின்றோம்.

குடி அரசு – வாழ்த்துச் செய்தி – 01.11.1931

 

 

You may also like...