அருஞ்சொல் பொருள்
அங்குஸ்தான் – தையற்காரர்கள் விரலில் அணியும் பூண்
அசக்தர்கள் – இயலாதவர்கள், சக்தியற்றவர்கள்
அட்டாலி – பரண், மேல்மாடி
அதிக்கிரமம் – நெறி தவறல், வரம்பு மீறல்
அனுஷ்டானம் – வழக்கம், ஒழுக்கம்
ஆகர்ஷணை – ஈர்ப்பு, உள்வாங்குகை
ஆஸ்பதம் – இடம், பற்றுக்கோடு
இராஜிய துறை – அரசியல் துறை
ஒட்டிக்கிரட்டி – ஒன்றுக்கு இரண்டு, சரிமடங்கு அதிகமாக
கர்னகடூரம் – காதுகளால் கேட்க முடியாத
கலிதம் (ஸ்கலிதம்) – விந்து நழுவுகை, ஒழுகுதல்
காயமாகி – உறுதியாகி
கெம்பு – சிவப்பு இரத்தினக்கல்
சர்க்கா – இராட்டை, இராட்டையின் முன்னேறிய வடிவம்சித்தித்துவிடும் – கை கூடிவிடும், வெற்றி கிட்டிவிடும்
சிலேத்துமம் – சளிக்கவ்வம், கோளை
சிவாஜி நாமா – தீர்வை விதிக்கப்படாத தரிசு (யாருக்கும் உரிமையாக்கப்படாத அரசு நிலம்)
சுக்கிலம் – விந்து
சுரோணிதம் – கருமுட்டை
சூசனை – குறிப்பு, மறைமுகமாக சுட்டிக் காட்டுதல்
சூன்ய திசை – அழிவு
சேகண்டி – வட்ட வடிவமான உலோக மணி வகை
தட்டப்பிச்சை – தட்டேந்தி பிச்சை (கோவில்களில் தட்டுகாசு)
நிதம்பம் – அல்குல்
நியமுகம் – நியமனம்
நிர்த்தாரணம் – நிலையிடுகை
பத்ததி – ஒழுங்கு, வழிகாட்டும் நூல்
பர்த்தி – இட்டு நிரப்புதல், இணை, ஒப்பு
பிரக்யாதி – புகழ்பெற்ற
புனருத்தாரணம் – மீணிலை நிறுத்தம், மறு சீரமைப்பு
மனோராஜியம் – மன விருப்பெண்ணம்
முகாலோபணம் – முகம் பார்த்தல், முக தரிசனம்
லௌகீக ஞானம் – உலகியல் அறிவு
வாசஸ்தானம் – இருப்பிடம்
ஸ்பஷ்டமாக – தெளிவாக
க்ஷீணதிசை – நலிவு
ஹத்து – வரையறை, எல்லை, அத்து