காசில்லாமல் நடத்தலாம்                         – சித்திரபுத்திரன்

 

ஐயா! உங்கள் கலியாணத்திற்கு மந்திரம் வேண்டுமா? பார்ப்பான் வேண்டுமா? மந்திரம் பிரதானமானால் மந்திரத்தை ஒரு கிராமபோன் ரிகார்ட்டில் பிடித்து வைத்துக் கொண்டால் தாலி கட்டுகின்றபோது கிராம போன் வைத்து தாலிகட்டி விடலாம். பார்ப்பான் வேண்டுமானால் ஏதாவது ஒரு பார்ப்பானை பொட்டகிராப் பிடித்து அதை மணவரையில் வைத்து தாலிகட்டி விடலாம். இரண்டும் வேண்டுமானால் இரண்டையும் வைத்து தாலி கட்டி விடலாம். வாத்தியம் வேண்டுமானாலும் கிராமபோனிலேயே மதுரை பொன்னுச்சாமி வாத்தியம் வைக்கலாம். ஒன்றும்  வேண்டாம், பெண்டாட்டியும் புருஷனும் ஆனால் போதும் என்றால் விரலில் மோதி ரத்தை மாட்டி கழுத்தில் மாலை போட்டு கையைபிடித்து அழைத்துக் கொண்டு போகலாம்.

குடி அரசு – சிறு குறிப்பு – 20.09.1931

You may also like...