Category: குடி அரசு 1929

வட இந்தியாவிலும்  “நாஸ்திகம்” 0

வட இந்தியாவிலும் “நாஸ்திகம்”

இந்தியாவில் ஆங்கில அரசாட்சியை ஒழித்துவிட்டு ருஷிய தேச ஆட்சி முறையை நிறுவச் சதியாலோசனை செய்ததாக 31 பேர்கள் மீது கொண்டு வரப்பட்ட வழக்கு மீரத்தில் விசாரணையிலிருக்கிறது. இம்மாதம் 12ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது பப்ளிக் பிராஸிகியூட்டர் “போல்ஷ்விக்காரர்கள் (எதிரிகள்) கடவுள் நம்பிக்கையை ஒழிப்பவர்கள். இவர்கள் கிறிஸ்தவக் கடவுள், மகமதியக் கடவுள், பௌத்தக் கடவுள் ஆகிய கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையெல்லாம் ஒழித்துவிட்டு இறுதியில் இந்து மதக் கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையையும் தங்கள் ஆட்சிமுறைக் காலத்தில் அழிப்பது நிச்சயம். இவர்கள் கொள்கைப்படி உலகத்திலுள்ள எல்லா மதங்களும் அழிந்துபட வேண்டும். இதற்கென இவர்கள் சர்வ மதங்களிலுமுள்ள குருக்களைக் கொன்று கோயில்களை இடித்துத் தகர்க்கும் திட்டத்தையே உழைப்புத் திட்டமாகக் கொண்டுள்ளவர்கள். கடவுளுக்கு எதிர்ப்பிரசாரம் புரியும் திட்டத்தைப் படைத்தவர்கள்……… இக் கொள்கைக் காரர்கள் தங்கள் மனோபாவங்களை வாழ்க்கையில் அநுசரித்து அதற்கேற்ற வேலைத்திட்டங்களையும் செய்து வருகிறார்கள். இதற்கென இப்படித்தான் செய்தல் வேண்டும், லட்சியங்கள் இவைகள்தான் என்றும் இவர்கள் வரையறுத்துள்ளனர்”...

காங்கிரசு கட்டுப்பாடு 0

காங்கிரசு கட்டுப்பாடு

சட்டசபை தேர்தல் காலாவதியை சர்க்கார் ஒத்திப் போட்டு விட்டதி னால் காங்கிரசுக்காரர்கள் தங்களது சுயமரியாதையையும் அதிருப்தியையும் காட்டுவதற்கு அறிகுறியாய் இனிமேல் கூடப்படப் போகும் சட்டசபை மீட்டிங்குகளுக்கு மறு தேர்தல் வரை யாரும் போகக் கூடாது என்று எல்லா இந்திய காங்கிரசு கமிட்டியார் திரு.காந்தியவர்கள் யோசனைபடி தீர்மானம் செய்து எல்லா மாகாணங்களுக்கும் சார்வு செய்தாய் விட்டது. அதை எல்லோரும் ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டது. ஆனால், சென்னை மாகாண தமிழ் நாட்டு காங்கிரஸ்காரர்களான பார்ப்பனர்கள் அக்கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட முடியாதென்றும் தாங்கள் எல்லா இந்திய காங்கிரஸ் கட்டளையை மீறி சட்டசபைக்குப் போகப் போவதாகவும் இரகசியமாய் தீர்மானித்து இருக்கின்றார்கள். காங்கிரஸ் சட்டசபைக்கு போகும்படி கட்டளை இட்டால் வெகு பக்தியாய் அக்கட்ட ளையை நிறைவேற்றுவார்கள். வேண்டாமென்றால் கட்டுப்பாட்டை மீறுவார்கள். நமது பார்ப்பனர்களின் காங்கிரஸ் பக்தி நமது ஆஞ்சநேய ஆழ்வாருக்குக் கூட கிடையாதென்றே சொல்லலாம். குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு – 16.06.1929

திருக்கோவிலூரில் சுயமரியாதைப் பிரசாரம்  நமது முன்னேற்றம் 0

திருக்கோவிலூரில் சுயமரியாதைப் பிரசாரம் நமது முன்னேற்றம்

சகோதரர்களே! நான் உங்கள் ஊருக்கு இதற்கு முன் இரண்டொரு தடவைகள் வந்திருக்கின்றேன். ஒரு தடவை ஒத்துழையாமையின்போது உங்கள் ஜில்லாவாகிய தென் ஆற்காடு ஜில்லாவில் சுற்றுப்பிரயாணம் செய்த காலத்தில், இந்த மண்டபத்துக்கெதிரில் பேசியிருப்பதாக எனக்கு ஞாபகமிருக்கின்றது. இன்னொரு தடவை காலஞ்சென்ற நமது நண்பர் திரு.ம.ரா. குமாரசாமி பிள்ளையவர்கள் இருக்கின்ற போழ்து திரு.பிள்ளை யவர்களால் அழைக்கப்பட்டு உங்களூர்வாசிகளாகிய திரு.லட்சுமணசாமி முதலியார், திரு.கிருஷ்ணசாமி பிள்ளை முதலியவர்களாலும் கடைவீதிக் காரர்களாலும் பெரிய ஆடம்பரத்துடன் வரவேற்கப்பட்டு, இவ்வூருக்கு வந்து இதே இடத்தில் பேசியிருக்கிறேன். நான் இங்கு காலஞ்சென்ற எனது நண்பர் குமாரசாமியாரவர்களின் குடும்பத்தாரைக் கண்டு எனது அனுதாபத்தைத் தெரிவித்து விட்டுப் போகலாமென வந்த இடத்தில் ஞானியார் ஆசிரமக் காரியஸ்தர் திரு.வடிவேலு செட்டியாரும் அவரது நண்பர்களும் இன்று இங்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் நானும் சம்மதித்து ஏதோ சில வார்த்தைகள் இன்று இங்கு பேச வந்திருக்கின்றேன். நான் எடுத்துக் கொண்ட விஷயம் பேசத் தொடங்கு முன்...

இப்பொழுது மதம் எங்கே? 0

இப்பொழுது மதம் எங்கே?

திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருத பாடசாலையில் வியாகரணம் இலக்கணம் வகுப்புகளில் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுவது மதத்திற்கு விரோதமென்று ‘மகந்து’வும் பள்ளிக்கூட அதிகாரிகளும் சொல்லி பார்ப்பனரல்லாதார்களை விலக்கிவிட்டார்கள். இப்பொழுது மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் அப்பள்ளிக் கூடத்தில் எத்தகைய வகுப்பு வித்தியாசமும் இல்லாமல் எல்லா வகுப்பு பிள்ளைகளுக்கும் எல்லா பாடமும் போதிக்க வேண்டுமென்று உத்திரவு போட்டு விட்டார்கள். எனவே இப்போது அந்த மதம் இருக்கிறதா போய்விட்டதா? என்று கேட்கின்றோம். பழைய காலத்தில் சர்க்கார் சம்பந்தமான மரங்களில் “பேய்” இருக்குமானால் 3 நாள் வாய்தா போட்டு சர்க்கார் முத்திரை போட்ட ஒரு தாக்கீதை அந்த மரத்தில் கட்டி விட்டால் அந்த வாய்தாவுக்குள் பேய் ஓடிப் போகும் என் பார்கள். அதுபோல் இப்போது சுப்பராய மந்திரவாதி தாக்கீதைக் கண்டால் மதப்பேய் பறந்து விடுவதாகத் தெரிகிறது. குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு – 16.06.1929

காங்கிரசின் யோக்கியதை 0

காங்கிரசின் யோக்கியதை

காங்கிரசைப்பற்றி நாம் அது பார்ப்பனர்களுக்கும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் தங்கள் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுவதற்கு ஏற்பட்ட ஸ்தாபனமே ஒழிய ஏழைகளுக்கும் குடியானவர்களுக்கும் தொழிலாளிகளுக்கும் உபயோகப்படக் கூடியதல்ல வென்றும் இவர்களுக்கு, கெடுதியை தரத்தக்க தென்றும் 4, 5 ´ காலமாக விடாமல் சொல்லி வருகின்றோம். இதனால் நம்மை பலர் காங்கிரஸ் துரோகி, தேசத்துரோகி என்று சொல்லி விஷமப் பிரசாரமும் செய்து வருகின்றார்கள். ஆனால் வங்காளத்தில் எவ்விதத்திலும் சந்தேகப்பட முடியாத அமிர்த பஜார் பத்திரிகையானது தனது தலையங்கத்தில், “காங்கிரசு பணக்காரர்கள், உயர்ந்த ஜாதியார்கள் என்பவர்கள் இயக்கமாய்விட்டது. உயர்ந்த ஜாதிக்காரரும் படித்தவர்களுமே தலைவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால் தாழ்த்தப் பட்ட மக்கள் காங்கிரசை விட்டு விலகிவிட்டார்கள். காங்கிரசுக்கு எதிரி களாய்விட்டார்கள். முஸ்லீம்களும் அப்படியே விலகி விட்டார்கள்” என்று எழுதி இருக்கின்றது. இதிலிருந்து நாம் மாத்திரம் காங்கிரசை குற்றம் சொல்லுகின்றோமா? எல்லா மாகாணத்திலும் குற்றம் சொல்லுகின்றார்களா? என்பதை தெரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றோம். குடி அரசு – செய்தி...

சுயமரியாதைத் தொண்டர்கள்                 மகாநாடு 0

சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாடு

சகோதரி சகோதரர்களே! இந்த மகாநாட்டுக்கு திரு.குருசாமி அவர் களைத் தலைமை வகிக்க ஆதரிப்பதில் நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன். இப்பேர்ப்பட்ட தொண்டர் மகாநாட்டிற்கு அதுவும் முதன் முதலாகக் கூட்டப் பட்ட மகாநாட்டிற்கு திரு.குருசாமியாரை வரnவுற்புக் கமிட்டியார் தெரிந் தெடுத்ததற்கு நாம் அவர் களைப் பாராட்ட வேண்டும். ஏனெனில், நமது இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றி மிகத் தெளிவாக உணர்ந்தவர்களும் சிறிதும் சந்தேகம் இல்லாதவர் களுமாக உள்ளவர்களென்று நான் கருதிக் கொண்டிருக்கின்ற சிலர்களில் அதாவது நமது சங்கத் தலைவர் திரு.சௌந்திர பாண்டியனார், சொ. முரு கப்பர், எஸ். குருசாமி ஆகிய முக்கியமானவர்களில் ஒருவராவார். ஆகவே, அப்படிப்பட்டவரும் அதோடுகூடவே, செய்கையிலும் ஒவ்வொரு துறையிலும் அக்கொள்கையையே பின்பற்றுகிற வருமாவார். நமது இயக்கத்துக்காக நடைபெறும் ஆங்கிலப் பத்திரிகையாகிய “ரிவோல்ட்”க்கு பெயரளவில் நான் பத்திராதிபனே ஒழிய காரியத்தில் அவரேதான் சகல நடவடிக்கைகளையும் நடத்துகிறவர். அவரது எழுத்துக்களும், கருத்துக் களும் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் வெளிமாகாணங்களிலெல்லாம் சுயமரியாதை மகாநாடு நடத்தும்படி செய்துவிட்டது. இந்த மாதத்திலேயே...

“குடி அரசு” வாசகர்களுக்கு  ஓர் வேண்டுகோள் 0

“குடி அரசு” வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்

இந்த இரண்டு மூன்று வாரமாய் தெரிவித்து வந்தபடி நமது பத்திரிகாலயத்தை சென்னையில் நிறுவவேண்டிய ஏற்பாடு செய்து வருகின்றோம். இதனால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் நமது பத்திரிகை தடைப்படலாம். பிறகு சென்னையிலிருந்து மேல்காகிதத்துடனும் 20 பக்கங்களு டனும் வெளிவரும். குறிப்பு :- “குடி அரசு” ஆரம்பித்த இந்த ஐந்து வருஷகாலத்தில், இரண்டாவது வருஷ முதலில் ஒரு தடவை ஒரே வாரமும், இப்போது ஒரு தடவையும் தான் அதுவும் அபி விர்த்தி காரணமாகவேதான் தவக்கப்பட்டிருப்பதால், வாசகர் கள் அவசியம் பொறுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கின் றோம். ( ப – ர் ) குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 02.06.1929

சைவப் பெரியார்  மகாநாடு 0

சைவப் பெரியார் மகாநாடு

திருநெல்வேலியிலும், திருப்பாப்புலியூரிலும் சமீபத்தில் கூட்டப்பட்ட சைவப் பெரியார்கள் மகாநாடு என்பதானது திருவாளர்கள் அண்ணாமலை பிள்ளை, சாமிநாதசெட்டியார், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், கிருஷ்ண சாமி பாவலர் என்பவர்களுக்கு மகாநாட்டில் கலந்து கொள்ளவும், மகாநாட்டு மேடைமேல் ஏறி அவர்கள் யோக்கியதைக்குத் தகுந்தபடி பேசவும் மகாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஓட்டுக் கொடுக்கவும் தாராளமாய் இடமளித்து திருவாளர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, பூவாளூர் செல்வக்கணபதியார் ஆகியவர்களுக்கும் மற்றும் சில சைவ சமாஜப் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க மறுத்ததிலிருந்தும், சைவப் பெரியார்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், அம்மகாநாடு எந்தப் பிரசாரத்திற்காகக் கூட்டப்பட்டது என்பதையும் அதைப்பற்றி நாம் முன் எழுதி வந்தவைகள் எல்லாம் உண்மையா அல்லவா? என்பதையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள அம்மகாநாடானது ஒரு அளவு கருவியாக பயன்பட்டமைக்கு நாம் மகிழ்ச்சியுடன் மகாநாட்டைக் கூட்டிய பிரமுகர்களுக்கும் நன்றி செலுத்துகின்றோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 02.06.1929

ஒத்திபோடுதல் 0

ஒத்திபோடுதல்

இந்திய சட்டசபை மாகாண சட்டசபை ஆகியவைகளின் காலாவதி ஒரு வருஷகாலம் ஒத்தி போடப்பட்டாய் விட்டதால், திரு. சீனிவாச அய்யங்கார் பிரசாரமும், அவர் ஓய்வெடுத்துக் கொள்வதன் மூலம் ஒத்தி போட்டாய்விட்டது. ஜஸ்டிஸ் கட்சியாரும் தங்களது நெல்லூர் மாகாண மகாநாட்டை ஒத்தி போட்டு விட்டார்கள். அதுபோலவே, திரு. கல்யாண சுந்தர முதலியாரது ஆஸ்திகப் பிரசாரமும், சைவப் பெரியார்கள் மகா நாடுகளும் அநேகமாக ஒத்திபோடப்பட்டுவிடும். திரு.வரதராஜுலுவின் உத்தியோகமேற்கும் பிரசாரமும் அவருக்கு அடிக்கடி காயலா வருவதன் மூலம் ஒத்திபோடப்பட்டாய்விட்டது. இதுமாத்திரமல்லாமல் திரு.சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் மதுவிலக்கு பிரசாரமும், திரு.ஜம்னாலால் பஜாஜின் தீண்டாமைப் பிரசாரமும், திரு.சங்கர்லால் பாங்கரின் அன்னியத் துணி பகிஷ்காரமும் கண்டிப்பாய் ஒத்தி போடப்படலாம். அன்றியும் “தேசமே பிரதான” மென்கின்ற உத்தியோகப் பிரதான கட்சியாரின் தேசாபிமானப் பிரசாரமும் கண்டிப்பாய் ஒத்தி போடப்பட்டுவிடும். இவற்றையெல்லாம் விட, 1929-ம் வருஷம் டிசம்பர் மாதம் 31-ம் தேதி இரவு 12 மணி 5 நிமிஷத்திற்குள் நேரு திட்டப்படி குடியேற்ற நாட்டு அந்தஸ்து கொடுக்கப்படாவிட்டால்...

வரதராஜுலுவின் விஷமப் பிரசாரம் 0

வரதராஜுலுவின் விஷமப் பிரசாரம்

“தமிழ்நாடு” பத்திரிகையில் திரு.வரதராஜுலு அவர்கள் ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியார் செய்திருந்த ஆலயப் பிரவேசத் தீர்மானத்தைத் திருப்பூரில் கூடிய தேவஸ்தானக் கமிட்டி மீட்டிங்கில் கேன்சில் செய்து விட்டதாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமியும் சம்மதித்ததாகவும் இதனால் ராமசாமி குட்டிக்கரணம் போட்டுவிட்டதாகவும் பொருள்பட அயோக்கியத் தனமாகவும், விஷமத் தனமாகவும் ஒரு செய்தியும் போட்டு அதற்காக உபதலையங்கமும் எழுதியிருக்கிறார். திருப்பூர் மீட்டிங்கில் அந்தத் தீர்மானம் ரத்து செய்யப்பட்டதாய் எழுதியிருப்பது பொய் என்றும் முதலாவது அம்மாதிரி ஒரு தீர்மானமே அன்றைய மீட்டிங்குக்கு வரவில்லை என்றும் நாம் உறுதி கூறுவதுடன், மேலும் அந்த மீட்டிங்கிற்கு திரு.ஈ.வெ.ராமசாமி போகவில்லை என்றும், அவர் அன்று பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தொண்டர் மகாநாட்டு விஷயமான வேலையில் ஈடுபட்டு இருந்தார் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். எனவே இதனால் ‘தமிழ்நாடு’ பத்திரிகையின் யோக்கியதையையும் அது இதுவரை நடந்துவந்த மாதிரி யையும் கோவில் பிரவேச விஷயத்தில் அதற்குள்ள பொறாமையையும், இழிகுணத்தையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதன் மூலம்...

இனிமேல்தான் மதத்தையும் சாஸ்திரத்தையும்  திருத்தப் போகின்றார்களாம் 0

இனிமேல்தான் மதத்தையும் சாஸ்திரத்தையும் திருத்தப் போகின்றார்களாம்

நல்லதனமாகவும், நயமாகவும், கெஞ்சியும் கேட்பவர்களைப் பற்றி சாதாரண மனிதர்கள் சற்றும் லக்ஷியம் செய்வதில்லை. எவ்வளவுக் கெவ் வளவு நயமும் கெஞ்சுதலும் ஏற்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு ஆணவமும் பிடிவாதமும் மிரட்டுதலும் ஏற்படுவது நடுத்தர மனிதர்களிடம் காணும் சுபாவம். சாதாரண நடுத்தர மக்களின் குணமே இப்படி இருக்கு மானால் மற்றபடி கீழ்த்தர மக்கள் அதாவது சமய சமூக வித்தியாச சேற்றில் உழன்று கொண்டு அதன் மூலம் ஆதிக்கமும் வயிற்றுப் பிழைப்பும், ஏற் படுத்திக் கொண்ட இழி மக்களிடம் கெஞ்சுதலுக்கும் நல்லதனத்திற்கும் செவிசாய்ப்புக்கும் எதிர்பார்ப்பது எங்ஙனம் கூடும்? உதாரணமாக, சமயக்கட்டுப்பாட்டுக் கொடுமைகளும், சமூகக் கட்டுப் பாட்டுக் கொடுமைகளும், நமது நாட்டைப் பாழாக்கி அன்னியர் வசம் ஒப்புவித்து மானமிழந்து நிற்கச் செய்கின்றது என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்ட பிறகும், நாடு மானத்துடன் அவைகளை ஒழித்தாலல்லது வாழ முடியாது என்பதை அறிந்தும் அவைகளை ஒழித்து, விடுதலையையும், சமத்துவத்தையும் ஏற்படுத்துவதுடன் மக்களின் வறுமையையும் எளிமை யையும் ஒழிக்க வேண்டும் என்னும் எண்ணத்தோடு...

உத்தியோக ஆசையும் தேசீயப் புரட்டும் 0

உத்தியோக ஆசையும் தேசீயப் புரட்டும்

திரு வரதராஜுலுக்கு கொஞ்சகாலமாய் உத்தியோகப் பைத்தியம் தலைக்கேறி விட்டது. தேசீயமெல்லாம் இப்போது உத்தியோகத்திற் குள்ளாகவே ஐக்கியமாய் விட்டது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் கூட சேருவதற்கு சுயேச்சையுள்ள பார்ப்பனரல்லாதார் ஒருவருமில்லாமல் போனதையும் தமது கக்ஷிக்கு எந்த விதத்திலும் கூலிகளையும் காலிகளையும் விட வேறு யாருடைய அனுதாபமும் இல்லாமல் போவதையும் பார்த்து நாங்கள் உத்தியோகங்கள் ஏற்றுக் கொள்ள சம்மதித்து உத்தியோகங்கள் சம்பாதிக்கப் போகின்றோம், யாராவது வருகின்றீர்களா? என்று கேட்டவுடன் திரு. வரதராஜுலுவைப் போன்ற ஆள்கள் கூட அப்படியானால் தமக்கும் ஏதாவது கிடைக்காதா என்ற எண்ணத்தின் மீது இப்போது அய்யங்காருடன் சேர்ந்து கொண்டு உத்தியோகம் ஒப்புக் கொள்ள வேண்டியது அவசிய மென்றும் “நான் வெகு காலமாக இதைச் சொல்லிவந்திருக்கிறேன்” என்றும் சொல்லிக் கொண்டு அய்யங்கார் பின்னால் கடற்கரைக்குச் சென்று கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டார். ஆனால் திரு. வரதராஜுலு உத்தியோகம் சம்பாதிப்பதற்கும் ஒப்புக் கொள்ளுவதற்கும் சொல்லும் காரணம் தான் நம்மை இந்த வியாசம் எழுதச் செய்கின்றது. அதாவது :-...

மாளவியாவின் பித்தலாட்டம் 0

மாளவியாவின் பித்தலாட்டம்

திரு.பண்டிதர் மதன்மோகன மாளவியா சென்னை மாகாணத்திற்குள் கால் வைத்தது முதல் சமயத்திற்குத் தகுந்தபடி பேசி ஜனங்களை ஏமாற்றி வந்ததும் அந்த புரட்டுகளை பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களும் வெளிப்படுத்தியதும் “மித்திரனிலும்” “திராவிடனிலும்” பார்த்திருக்கலாம். அவர் சென்ற இடங்களிலெல்லாம் கோவிலுக்குள் தீண்டத்தகாதவர் என்கிறவர்கள் போவதற்கு இந்து சாஸ்திரங்கள் இடங்கொடுக்கிறதென்று சொல்லிக் கொண்டே வந்துவிட்டு தாம் அதிக சாஸ்திரம் பார்த்திருப்பதாயும் சொல்லிவிட்டு கடைசியாக சென்னையில் 22 தேதி கூடிய சாஸ்திரிகள் கூட்டமொன்றில் சிக்கி தீண்டத்தகாதவர்கள் என்பவர்கள் கோவிலுக்குள் பிரவேசிப்பதற்கு சாஸ்திரத்தில் இடமில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டாராம். எனவே திரு.மாளவியாவின் பித்தலாட்டம் பார்ப்பனர்களின் அசல் அயோக்கியத்தனத்திற்கு ஒரு உதாரணமாகும். குடி அரசு – கட்டுரை – 26.05.1929

பூரண சுயேச்சை இயக்கமும்  திரு. சீனிவாசையங்காரும் 0

பூரண சுயேச்சை இயக்கமும் திரு. சீனிவாசையங்காரும்

திரு.எஸ். சீனிவாசையங்கார் இந்த வருஷத்திய தேர்தலுக்கு ஒரு புதிய தந்திரம் கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தின் மீது எல்லா அரசியல் கொள்கைகளையும்விட தீவிரமாய் இருக்கவேண்டும் என்கின்ற ஆத்திரத் தின் மீது பூரண சுயேச்சையே தமது அரசியல் கொள்கை என்று வெளிப் படுத்திக் கொண்டார். கல்கத்தா புரட்சி இயக்க உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.சுபாஷ் சந்திரபோசும் சமீபத்தில் ருஷியாவில் சுற்றுப் பிரயாணம் செய்ததின் பயனாய் சமத்துவ உணர்ச்சி கொண்டால் செல்வாக்குப் பெறலாம் என்று கருதிய திரு.ஜவாரிலால் நேருவும் திரு.சீனிவாசய்யங்காரையும் அவரது பூரண சுயேச்சைக் கொள்கையையும் நம்பி இவருடன் சேர்ந்தார்கள். ஆனால் திரு.சீனிவாசையங்கார் பூரண சுயேச்சைக் கூப்பாட்டிற்கு தமிழ்நாட்டில் யோக்கியதை இல்லை என்பதையும் அரசாங்க அடக்குமுறையின் வேகத்தையும் தெரிந்துதான் பூரண சுயேச்சை இயக்கத் தலைமைப் பதவியை ராஜீனாமா செய்துவிட்டார். அதோடு கூடவே இனியும் ஒரு புதிய இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். இவர் தொட்டது துலங்காது, என்றிருந்தாலும் என்றைக்கிருந்தாலும் ஓட்டர்களை...

தேர்தல் கவலை  மூர்த்திக்கும் – வாசருக்கும் சம்பாஷணை – சித்திரபுத்திரன் 0

தேர்தல் கவலை மூர்த்திக்கும் – வாசருக்கும் சம்பாஷணை – சித்திரபுத்திரன்

வாசர் : என்ன மூர்த்தி, இந்த தடவை தேர்தலில் நமது ஜபம் செல்லாது போல் இருக்கின்றதே. மூர்த்தி : எதனால் இவ்வளவு சந்தேகப்படுகின்றீர்கள். வாசர் : எதனால் என்று கேட்கின்றாயே, ஒவ்வொன்றும் நீ நேரில் பார்க்கவில்லையா? நாம் போகின்ற இடங்களில் எல்லாம் மீட்டிங்கு போடக் கூட முடியாதபடி கலவரங்கள் நடக்கின்றதே; எவ்வளவோ கஷ்டப்பட்டு மிதவாதிகளிடம் இருந்த மேடைகளை நமது சுவாதீனம் செய்தோம். பிறகு அதை ஒத்துழையாமைக்காரர்கள் வந்து பிடுங்கிக் கொண்டார்கள். அதற்கும் எவ்வளவோ பாடுபட்டு அவர்களையும் விரட்டி அடித்து அவர்களிடமிருந்து சுவாதீனம் செய்து கொண்டோம். கடைசியாக அது ஜஸ்டிஸ்காரரிடம் கூட இல்லாமல் சுயமரியாதைக்காரரிடமல்லவா போய்விட்டது. மூர்த்தி: அதென்ன ஜஸ்டிஸ்காரரிடம் கூட இல்லாமல் என்று அவர்களுக்காக வருத்தப்படுகின்றவர் போல் பேசுகின்றீர்களே. வாசர் : ஜஸ்டிஸ்காரரிடம் போகாததால் எனக்கு வருத்தமில்லை. ஜஸ்டிஸ்காரரிடம் இருந்தால் நாம் அவர்களை சுலபத்தில் விரட்டியடித்து பிடுங்கிக் கொள்ளலாம். ஏனென்றால் அவர்களும் நம்மைப் போலவே ஓட்டர்களிடம் போய் பொய்யும் புளுகும் அடித்து...

உங்களுக்கு  எது வேண்டும் வகுப்பு வாதமா? சமூக வாதமா? 0

உங்களுக்கு எது வேண்டும் வகுப்பு வாதமா? சமூக வாதமா?

வகுப்பு வாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும் சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூக வாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது. காங்கிரசென்றும் தேசீயமென்றும் சுயராஜ்ஜியமென்றும் நமது பார்ப்பனர்களும், அவர்களது அடிமைகளும், கூலிகளும் போடும் கூச்சல் கள் எல்லாம் பார்ப்பன சமூக ஆதிக்கத்திற்கெனச் செய்யப்படும் சூழ்ச்சி என்றும், அவர்கள் உட்கருத்துக்கள் எல்லாம் எப்படியாவது பார்ப்பன ரல்லாதாரை வகுப்புவாதிகள் என்று சொல்லி அவர்களுடைய நிலைமை யைத் தாழ்த்தி அவர்கள் தலையெடுக்க ஒட்டாமல் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் அல்லவென்றும் பார்ப்பனரல்லாதார்களில் வேறுவழியில் அரை வயிற்றுக் கஞ்சிக்குக்கூட வழிதேடிக் கொள்வதற்கு முடியாதவர்களும் பார்ப்பனர்களுக்கு கூலிகளாயிருந்தும் அடிமைகளா யிருந்தும் சமூகத் துரோகம் செய்தாலொழிய பிழைக்கவும் பெருமை பெறவும் முடியாதவர்களுமே பெரிதும் அவர்கள்கூட இருக்கின்றார்களே ஒழிய மற்றபடி யோக்கியமும் பொறுப்பும் சுயமரியாதையும் சுயேச்சையும் உள்ளவர்களில் எவரும் பார்ப்பனர்கள்கூட இல்லை என்றும் நாம் பலதடவை களில் சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம்....

கேரளத்தில் சுயமரியாதைப் பிரசாரம் 0

கேரளத்தில் சுயமரியாதைப் பிரசாரம்

சகோதரர்களே! இங்கு கூடியிருக்கும் உங்களில் பெரும்பாலோர் எனக்குப் பழைய நண்பர்களாகவே காணப்படுகின்றீர்கள். வியாபார முறையில் இந்த ஊர் சுமார் 30 வருஷத்திய பழக்கமும் அதிகமான பரஸ்பர விஸ்வாசமும் உள்ள ஊராகும். நான் வியாபாரம் நிறுத்திய இந்த 10 வருஷ காலத்திற்குள்ளும் இந்த ஊருக்கு பல தடவை வந்து பல விஷயங்களைப் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கின்றேன். ஒத்துழையாமை பற்றியும் தீண்டாமை விலக்கு விஷயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை தெருவில் நடக்க விட வேண்டும் என்பது பற்றியும் இதே இடத்தில் பலதடவை பேசியிருப்பது உங்களுக்கு ஞாபகமிருக்கும். சுமார் இரண்டு வருஷத்திற்குள்ளாக இந்த ஊரில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. கல்பாத்தியில் பார்ப்பனர்கள் குடி இருக்கும் வீதிகளில் ஈழவர்கள் தீயர்கள் என்று சொல்லப்பட்ட சகோதரர்கள் நடக்க பாத்தியம் ஏற்பட்டிருப்பதும் கடைவீதியில் செரமாக்கள் என்னும் மக்கள் நடக்கவிடப்பட்டிருப்பதும் ஒரு பெரிய மாறுதல் என்று சொல்லக் கூடுமானாலும் இன்னமும் அநேகக் காரியங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றன. சில இடங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று...

வாழ்க! வாழ்க!! டாக்டர் சுப்பராயன் வாழ்க!!! 0

வாழ்க! வாழ்க!! டாக்டர் சுப்பராயன் வாழ்க!!!

முதல் மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் நாம் எதிர்பார்த்தது போலவே தமது ஆதிக்கத்தில் உள்ள இலாக்காக்கள் மூலம் நமது பெண்மணிகளுக்கு மூன்றாவது பாரம் வரையில் இலவசமாய்க் கல்வி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்து இருக்கிறார் என்ற செய்தியைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி அடைந்து போற்றுவதுடன் மனமார வாழ்த்துகின்றோம். மற்றும் தீண்டாதவர்கள் என்பவர்களுக்கும் விதவைகள் என்பவர்களுக்கும் கல்வி விஷயத்தில் ஏதாவது உதவி செய்வதுடன் பெண்கள் உபாத்தியாயர் களாவதற்குத் தகுந்தபடி ஏராளமான போதனாமுறைப் பாடசாலைகளையும் ஏற்பாடு செய்யவேண்டுமாய் விழைகின்றோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 12.05.1929

மலையாளமும் மாளவியாவும் 0

மலையாளமும் மாளவியாவும்

தென்னாட்டு பார்ப்பனர்கள் அரசியலிலாவது மத இயலிலாவது சமுதாய இயலிலாவது தங்களுடைய புரட்டுகள் எல்லாம் வெளியாய் விடுவதின் மூலம் செலவழிந்துவிட்டால் வடநாட்டிலிருந்து யாராவது ஒருவரைக் கொண்டு வந்து பித்தலாட்டப் பிரசாரம் செய்வது வழக்கம். அது மாத்திரமல்லாமல் தாங்களாக தனித்து வெளியில் புறப்பட்டு பிரசாரம் செய்ய முடியாத பட்சத்திலும் வெளிநாட்டிலிருந்து யாரையாவது பிடித்து வந்து அவர்கள் மதிப்பின் மறைவில் மேடை மேலேறிப் பேச இடம் சம்பாதித்துக் கொள்வதும் வழக்கம். இதுவும் சமீபகாலம்வரை பாமர மக்கள் முழு மோசமா யிருந்த காலம் வரையில்தான் செல்லாய்க் கொண்டு வந்தது. இப்போது அடியோடு இவர்கள் யோக்கியதை வெளியாய் விட்டதால் சிறிது கூட செலாவணி ஆவதற்கில்லாமல் செல்லுமிடங்களிலெல்லாம் சாயம் வெளுத்துப் போய் உண்மை நிறம் வெளியாய்க் கொண்டு வருகின்றது. அதாவது சென்ற வருஷத்திற்கு முன் திரு.காந்தியைக் கூட்டிக் கொண்டு வந்து அவரைத் தங்களிஷ்டப்படி ஆட்டி வைத்து ஊர் ஊராய் திரிந்ததில் இவர்கள் சாயம் வெளுத்ததல்லாமல் அவர் சாயமும் வெளுத்து “என்...

திருவாங்கூரில் ளு.சூ.னு.ஞ யோகம் சுயமரியாதை மகாநாடு  ஆலயப்பிரவேச மகாநாடு                 சுயமரியாதை கொள்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன 0

திருவாங்கூரில் ளு.சூ.னு.ஞ யோகம் சுயமரியாதை மகாநாடு ஆலயப்பிரவேச மகாநாடு சுயமரியாதை கொள்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன

இப்போது உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் தீண்டாமை என்பது ஆகாயத்திலிருந்தோ மக்கள் பிறக்கும்பொழுது தாய் வயிற்றிலிருந்தோ உண்டாய்விடவில்லை. மதத்தினாலும், கடவுளினாலும், கோவிலினாலும் வேத புராணங்களினாலுமே உண்டாயிற்று. தீண்டாமை ஒழிய வேண்டு மானால் அதை வலியுறுத்தும் மதங்களும் கடவுள்களும், கோவில்களும் அவற்றிற்கு ஆதாரமான வேத சாஸ்திர புராணங்களும் அடியோடு ஒழிந்தாக வேண்டும். இவைகளில் ஒரு சிறிது மீதி இருந்தாலும் மறுபடியும் அது வளர்ந்துவிடும். இதுவரையில் தீண்டாமையை ஒழிக்கப் பிரயத்தனப் பட்டவர்கள் யாரும் தீண்டாமைக்கு அஸ்திவாரமான காரியத்தை அறியாம லும், சிலர் அதைப் பற்றி அறிந்தும் கவலை கொள்ளாமலும், சிலர் வேண்டு மென்றே தெரிந்து மறைத்துவைத்தும் மக்களையும் ஏமாறச் செய்துவிட்டுப் போய் விட்டார்கள், இப்பொழுதும் சில போலித் தீண்டாமை விலக்கு பிரசாரக்காரர்கள் அதை வலியுறுத்தும் மதத்தையும் கோவிலையும் சாமி களையும் அது சம்பந்தமான ஆதார புராணங்களையும் வைத்துக் கொண்டே தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உங்களை ஏமாற்றுகின்றார்கள். உதாரணமாக பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன்...

மூன்றாவது                                                  நாடார் வாலிபர் மகாநாடு 0

மூன்றாவது நாடார் வாலிபர் மகாநாடு

சகோதரர்களே! நமது நாட்டினுடைய முன்னேற்றத்தைக் கருதிய விஷயங்களிலே வாலிப மகாநாடுகளைப் பற்றி ஒருவிதமான அபிப்பிராய பேதமும் கிடையாது. ஏனென்றால் உலக முன்னேற்றத்திற்கே காரணம் வாலிபர்கள் தான். அதை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவர். ஒவ்வொரு நாட்டிலும் பல வகையிலும் அடிக்கடி கஷ்டம் நிகழ்ந்திருக்கின்றது. அவை விடுதலைப் பெற சுயமரியாதை அல்லது விடுதலை உணர்ச்சி வாலிபர்களுக்கு ஏற்பட்டதின் மூலம் உலகத்தின் பெரும்பான்மையான நாடுகள் விடுதலை யடைந் திருக்கின்றன. இந்தியாவைத்தவிர மற்ற எல்லா நாடுகளும் முன்னேறி வருகின்றன. ஏன் நமது நாடுமட்டும் தூங்குகிறது? வாலிபர்கள் கவலை எடுக்காததினால்தான். நாம் இதுகாறும் பாடுபட்டும் பிரயோஜனமில்லாமல் முன்னிருந்த நிலையில்தான் இருக்கின்றோம். எப்படி மற்ற நாட்டு வாலிபர்கள் தத்தம் நாடு முன்னேற உயிர்விட்டுக்கூட உழைத்தார்களோ அதுபோல் நமது வாலிபர்களும் உழைக்க முன் வரவேண்டும். சுயமரியாதை உணர்ச்சியை வாயளவில் மறுக்கின்றார்களேதவிர சுய மரியாதைக் கொள்கைகளையும் திட்டத்தையும் எல்லோரும் ஒப்புக் கொள் கின்றார்கள். சுயமரியாதை உணர்ச்சி தப்பிதமானது என்று சொல்லுகின்ற வர்கள் எவரும்...

நமது பத்திரிகை   ஐந்தாவதாண்டு 0

நமது பத்திரிகை ஐந்தாவதாண்டு

“குடி அரசு” அபிமானிகளே! நமது “குடி அரசு” தோன்றி நான்காவதாண்டு கடந்து, ஐந்தாவதாண் டின் முதல் இதழ் வெளியாக்கும் பேறு பெற்றமைக்கு மகிழ்வெய்துகின்றோம். அது தோன்றிய நாள் தொட்டு இற்றைய நாள்வரை மக்கள் முன்னேற்றத் திற்கும், நாட்டின் விடுதலைக்கும் தன்னால் இயன்றதைச் சிறிதும் ஒளிக்காமல் தொண்டாற்றி வந்திருக்கும் விஷயம் நாம் எடுத்துக் காட்டாமலே அன்பர்கள் உணர்ந்திருக்கலாம். இதன் ஆசிரியராகிய யாம் சுமார் 30 ஆண்டு உலக வாழ்க்கை அனுபவம், அதாவது வியாபாரம், விவசாயம் அனுபவமும் சுமார் இருப தாண்டு பொது நலவுழைப்பு என்பதின் பேரால் அதாவது உள் ஊர் அக்கப்போர்கள், ஜில்லா பொதுநல சர்க்கார் சம்பந்தமில்லாத ஸ்தாபனங்கள், சர்க்கார் சம்பந்தமுள்ள ஸ்தல ஸ்தாபனம் முதலியவைகளில் நிர்வாக விஷய அனுபவமும் அரசர்கள், அதிகாரிகள் ஆகியவர்களின் கூட்டுறவு அனுபவ மும், ஜமீன்தார்கள், பிரபுக்கள், ஏழைகள், காலிகள் ஆகியவர்களின் நெருங் கிய நேச அனுபவமும், இவைகளெல்லாம் அல்லாமல் வீட்டையும் குடும்பத்தையும் விட்டு துறவறம் கொள்ள எண்ணம்...

13-வது நாடார் மகாநாடு கொடியேற்றுவிழாச் சொற்பொழிவு 0

13-வது நாடார் மகாநாடு கொடியேற்றுவிழாச் சொற்பொழிவு

“இந்தக் கொடியில் குறிக்கப்பட்டிருக்கும் பெரியோர்களினாலேதான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்கள். மகாநாட்டில் சுயமரியாதை அடையக் கூடிய பல தீர்மானங்களை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். நாடார் சமூகத் திற்குத் தனி மகாநாடு எதற்கு என்ற சந்தேகம் கிளம்பலாம், இருந்தாலும் நாம் இதற்குப் பயப்படாமல் நமது மகாநாடுகளை நடத்த வேண்டும். இம் மாதிரி மகாநாடுகளில் நாமும் கலந்து கொண்டு அவர்களுக்குள் உள்ள கெடுதிகளை களைந்தெறிந்து சுத்தப்படுத்தி தேசத்தாருடன் சேர்க்க வேண்டுமென்பது எங்கள் கொள்கை. மகாநாடு வெற்றியுடன் நடைபெற வேண்டுமென்று நம்பி இக்கொடியினை உயர்த்துகின்றேன்.” குறிப்பு: 29.04.1929 ஆம் நாள் பிறையாற்றில் நடைபெற்ற 13-ஆவது நாடார் மாநாட்டில் மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்து ஆற்றிய சொற்பொழிவு. குடி அரசு – சொற்பொழிவு – 05.05.1929

இந்திய சட்டசபை வர்த்தகத்                தொகுதிக்குத் தேர்தல் 0

இந்திய சட்டசபை வர்த்தகத் தொகுதிக்குத் தேர்தல்

இந்தியா சட்டசபைக்கு சென்னை வர்த்தகத் தொகுதிக்காக ஒதுக்கப் பட்ட ஸ்தானத்திற்கு கோவை வருணாச்சிரம ஐயங்கார் பார்ப்பனராகிய திரு. சி.வி. வெங்கிட்டரமண ஐயங்கார் அவர்களும் சென்னை பிரபல வியாபாரி யாகிய ஜனாப் ஜமால் மகமதுசாயபு அவர்களும் போட்டி போடுகின்றார்கள். திரு. அய்யங்காருக்கு அதிகமான பின்பலமும் ஆதரவும் ராஜா சர். அண்ணா மலைச் செட்டியார் அவர்களால் இருப்பதாகத் தெரியவருகின்றனது. இத் தொகுதியில் சுமார் 500 பேர் வரை நாட்டுக்கோட்டை நகரத்தார் கனவான்கள் ஓட்டர்களாயிருப்பதும் ராஜா சர். அவர்கள் வர்த்தக உலகத்தில் தக்க செல்வாக்குடையவராக இருப்பதுமே திரு.அய்யங்கார் அவரைப் போய் பிடித்ததற்கு முக்கிய காரணமாகும். திரு.ராஜா சர். அவர்களின் செல்வப் பெருக்கும் செல்வாக்கு வன்மையும் உலகத்தில் யாராலும் மறுக்கக்கூடிய தல்ல என்பதை நாம் வலியுறுத்திக் கூறுவோம். ஆனால் அதை மக்களுக்குப் பயன்படும் முறையில் உபயோகப்படுத்தாமல் எதேச்சாதிகார வழியில் உபயோகிக்கத் துணிந்து கொண்டே போனால் யாரால் தான் சங்கடப்படாமல் இருக்க முடியும்? அவர்களது சிதம்பரம் காலேஜ் பார்ப்பன...

பாராட்டுதல் 0

பாராட்டுதல்

திருவாளர் சென்னை பண்டிதர் எஸ்.எஸ்.ஆனந்தம் அவர்களை சென்னை கார்ப்பரேஷன் அங்கத்தினராக நியமித்த அரசாங்க ஸ்தல ஸ்தாபன மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களை நாம் மனமார பாராட்டுவதுடன் நமது வேண்டுகோளுக்கு செவி சாய்த்தமைக்கு நமது நன்றியறிதலையும் செலுத்துகின்றோம். வெகு காலத்திற்கு முன்னமேயே இந்நியமனம் பெற்றி ருக்க வேண்டிய பண்டிதர் ஆனந்தம் இப்பொழுதாவது நியமனம் பெற்றி ருப்பதற்கு மகிழ்ச்சி அடைவதுடன் மேலுக்கு மேலும் உயர்பதவி நியமனம் பெற்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உழைக்க வேண்டுமாய் ஆசைப்படு கின்றோம். குடி அரசு – குறிப்புரை – 28.04.1929

கடவுளும் மதமும்                        “காப்பாற்றப்பட்டால்”                           சுயராஜ்யம் வந்துவிடுமா? 0

கடவுளும் மதமும் “காப்பாற்றப்பட்டால்” சுயராஜ்யம் வந்துவிடுமா?

சென்னை சட்டசபை இவ்வருஷக் கோடியில் அனேகமாய் கலைக்கப் பட்டுவிடும் என்கின்ற விஷயம் வெளியானதும் பார்ப்பனர்கள் வழக்கம்போல் இப்போதிருந்தே தேர்தல் நாடகம் நடிக்கத் தீர்மானித்து, திருவாளர்கள் எஸ். சீனிவாசய்யங்காரும் சத்தியமூர்த்தி முதலிய அவரு டைய சிஷ்யர்களும் ஒருபுறமும் ஜனாப்கள் பஷீர் அகமது, அமீத்கான், ஷாபிமகமது ஆகியவர்கள் ஒருபுறமும் திருவாளர்கள் குழந்தை, ஜயவேலு, அண்ணாமலை, பாவலர், கல்யாணசுந்தரமுதலியார் ஆகியவர்கள் ஒரு புறமும் கிளம்பி இப்பொழுதிருந்தே ஊர் ஊராய்ச் சுற்றி தெருக்கூத்தாடிகள் போல தேர்தல் நாடகம் ஆடத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கூட்டத்தார் சென்ற தேர்தல்கள் வரையில் பாமர மக்களிடம் தாங்கள் சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுப்பதற்காகப் பாடுபடுவதாயும், பார்ப்பனரல்லாதார் கட்சியாய ஜஸ்டிஸ்கட்சியார் சுயராஜ்ஜியத்துக்கு விரோதமா யிருப்பதாகவும், ஆதலால் அவர்களுக்கு ஓட்டுக்கொடுக்காமல் காங்கிரஸ்காரர்களாகிய தங்களுக்கே ஓட்டுக் கொடுத்து தங்களையே சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்றும் சொல்லிவந்தார்கள். ஆனால் சுயராஜ்ஜிய புரட்டுகள் முழுவதும் இப்போது பொதுஜனங்களுக்கு வெட்ட வெளிச்சம்போல் வெளிப்பட்டுப் போனவுடன் இப்போது பரராஜ்ஜியம் அதாவது மோக்ஷ ராஜ்ஜியம் வாங்கிக்...

மகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி 0

மகமதிய வாலிபர்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி

வங்காள மாணவர்கள் தங்கள் சமூகத்திலும் புரோகிதக்கொடுமை இருப்பதையும், அதனால் தங்கள் சமூக முன்னேற்றமும் சுயமரியாதையும் உணர்ச்சியும் தடைபட்டுவருவதையும் உணர்ந்து முல்லா வர்க்கத்தையே அதாவது இப்பொழுது உள்ள புரோகித வர்க்கத்தையே அடியோடு ஒழிக்க வேண்டுமென்கின்ற எண்ணத்துடன் சமூக முன்னேற்றத்திற்கு அனுகூலமான சட்டங்களியற்றுவதற்கு எதிரிடையாயிருக்கும் எல்லா முல்லா வர்க்கத்தையும் ஒழிப்பதற்கு என்று புரோகித விலக்கு சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். சென்ற வருஷத்திலும் வங்காளம், பம்பாய், மத்திய மாகாணம் முதலிய இடங்களில் உள்ள வாலிபர்கள் இம்மாதிரியாக ஒரு கிளர்ச்சி செய்தது ஞாபகமிருக்கலாம். எனவே எந்த முற்போக்குக் கிளர்ச்சி களும் அவசியம் என்பது முதலில் வாலிபருக்குத்தான் படும் என்பதும், அவர்கள் தான் இம்மாதிரி சமூகத்திற்குள் நுழைந்து அழுகி நாறிப்போன பழைய பழக்க வழக்கங்களை தக்க தியாகத்தை கைம்மாறாகக் கொடுத்து ஒழிக்க சக்தியுடையவர்களாயிருப்பார்கள் என்பதும் நமது அபிப்பிராய மாகும். ஆதலால் நமது நாட்டு வாலிபர்களும் உலகமெல்லாம் கண் விழித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தை கைவிட்டுவிடாமல் முனைந்து...

கண்ணில்லையா?                                        இந்திய சட்டசபைக்கு இன்னும் எத்தனை ஐயங்கார்கள்? 0

கண்ணில்லையா? இந்திய சட்டசபைக்கு இன்னும் எத்தனை ஐயங்கார்கள்?

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் பார்ப்பனரல்லாதார் இயக்கமும், சுயமரியாதை இயக்கம் என்னும் சமரசமும் சன்மார்க்கமுங் கொண்ட இயக்கமும் தமிழ்நாட்டில் எவ்வளவோ பெரிய கிளர்ச்சியையும், புத்துணர்ச்சியும் உண்டாக்கியிருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவை முக்கியமாய்ச் செய்ய வேண்டிய காரியங்களில் முக்கியமானதான துறை களில் இன்னமும் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. மேற்கண்ட இரண்டு இயக்கங்களும் வெற்றிபெற வேண்டுமானால், அவற்றின் கொள்கைகளில் பெரும்பான்மையானவைகள் அரசாங்க சட்டத்தின் மூலமும், அரசாங்க நடுநிலைமை மூலமும், சில அரசாங்க உதவியின் மூலமுமே வெற்றிபெற வேண்டியிருக்கின்றதென்பது யாவரும் அறிந்ததாகும். அரசாங்க சட்டங்களில் முக்கியமானவைகள் பல இந்திய சட்டசபையில் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதும் இந்திய அரசாங்க நிர்வாக சபையின் ஆதரவு பெற வேண்டியிருப்பதும் யாரும் அறியாததல்ல. அப்படியிருக்க தென் இந்தியாவில் சிறப்பாக தமிழ்நாட்டின் சார்பாக இந்தியா சட்டசபைக்குள்ள பிரதிநிதிகள் 7 பேர்களில் 6 பேர்கள் நமது சமுதாயத்திற்கும், சமரசத்திற்கும், சன்மார்க்கத்திற்கும் பரம்பரை விரோதி களான பார்ப்பனர்களே – சிறப்பாக ஐயங்கார் பார்ப்பனர்களே, நமது...

எலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி  வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை  – சித்திரபுத்திரன் 0

எலக்ஷனுக்குப் புதிய சூழ்ச்சி வாசருக்கும் மூர்த்திக்கும் சம்பாஷணை – சித்திரபுத்திரன்

வாசர்:- என்ன மூர்த்தி! இந்தத் தடவை சட்டசபை எலக்ஷன் நிரம்பவும் மோசமாய் முடியும் போலிருக்கின்றதே என்ன செய்வது? மூர்த்தி :- ஏன் இந்த மாதிரி நினைக்கின்றீர்கள்? நமக்கென்ன குறைவு? காங்கிரசு இருக்கின்றது. காந்தி இருக்கின்றார். தவிர எல்லோரையும் விட வெகு தீவிரக்காரர்களாக வேஷம் போட்டுக் கொண்டு பூரண சுயேச்சை கேட்கின்றோம். இவைகள் தவிர சைமன் பகிஷ்காரத்தின் மூலம் நாம் பெரிய அமிதவாதிகளாகி இருக்கின்றோம். இவ்வளவு சங்கதிகள் நமக்கு அனுகூல மாயிருக்கும்போது நாம் ஏன் எலக்ஷன் விஷயத்தில் பயப்பட வேண்டும்? வாசர்:– இதெல்லாம் இனி நடவாது. காங்கிரஸ் சாயம் வெளுத்துப் போச்சுது. இனி யாரும் காங்கிரஸின் பேரால் ஏமாறுவார்கள் என்று எதிர்பார்ப் பது முதுகில் ஒரு கை முளைக்க வைத்தியம் செய்து கொள்ளுவது போல் தான் முடியும். உதாரணம் வேணுமானால் ஒரு இரகசியம் சொல்லுகின்றேன் கேள்! நமது மிஸ்டர் சி.வி. வெங்கட்டரமணய்யங்கார் அசம்பளிக்கி நிற்கிறார். அவர் காங்கிரஸ் பேரால் நிற்கமுடியாது என்று சொல்லிவிட்டு...

ஈரோட்டில்                                     ஆலயப்பிரவேசமும் அதிகாரிகள்பிரவேசமும் 0

ஈரோட்டில் ஆலயப்பிரவேசமும் அதிகாரிகள்பிரவேசமும்

ஈரோடு தேவஸ்தான கமிட்டியார் தங்கள் ஆதிக்கத்திற்குள் உள்ள தேவாலயங்களில் இந்துமதம் என்பதைச் சேர்ந்தவர்களுள் சுவாமியை வணங்க வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவர்கள் எல்லோரும் சுத்தமாகவும் ஆசாரமாகவும் ஆலயத்திற்குட் சென்று கடவுளை வணங்கலாம் என்று தீர்மானித்த தீர்மானத்திற்கிணங்க இந்துக்கள் என்பவர்களில் சிலர் கடவுளை வணங்க ஆலயம் சென்றதற்கு ஆலயக் குருக்கள் உட்கதவைப் பூட்டி விட்டுப் போய்விட்டதும், பிறகு வெகுநேரம் குருக்கள் வராததால் கோவி லுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கென்று சென்றவர்கள் திரும்பிவிட்டதும் பிறகு குருக்கள் கோவில் வெளிக்கதவையும் பூட்டிவிட்டதும், சுமார் 15 நாட்களாக கதவு பூட்டி இருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கலாம். இப்போது அதிகாரிகள் பிரவேசித்து போலீசாரை நடவடிக்கை எடுக்கச் செய்து இ.பி.கோ. 295, 297, 109 பிரிவுகளின்படி குற்றம்சாட்டி திடீரென்று வாரண்டு பிறப்பித்து மூன்று பேர்களை அதாவது திருவாளர்கள் ஈஸ்வரன், கருப்பன், பசுபதி ஆகியவர்களை மாத்திரம் அரஸ்டு செய்து அன்றைய பகலிலேயே விசாரணைக்கு வரும்படி ஜாமீனில் விடப்பட்டது. பகலில் மூன்று பேர்களும் மாஜிஸ்ரேட் கோர்ட்டுக்குப்...

இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்திருக்கின்றது? 0

இந்தியாவில் எப்படி பார்ப்பனீயம் நிலைத்திருக்கின்றது?

உலகம் முழுவதும் விழிப்படைந்து முன்னேறிக் கொண்டிருக்கிற காலத்தில், குறிப்பாக எல்லா சமூகத்தைவிட மதசம்பந்தமான பிடிவாதத்தில் இணையற்ற மகமதிய அரசர்கள் ஆக்ஷி செய்யும் நாடுகளும் கூட அரசுரி மையை இழந்தாவது சீர்திருத்தத்தைப் பரப்பவேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கும் அரசர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்துவரும் இக்காலத்தில் இந்தியா மாத்திரம் ஒரு கடுகளவுகூட தன் நிலையைவிட்டு அசையாமல் இருக்கக் காரணம் என்னவென்பதை மக்கள் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. நிற்க, பொதுவாக உலக மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சகோதர பாவம் கொள்ளுவதற்கு உலகத்தில் முதல் தடையாயிருந்தது – இருப்பது – மதங்கள் என்று சொல்லப்படுபவைகளேயாகும். இரண்டாவது, அதன் உட்பிரிவுகள் ஆகும். மூன்றாவது பாஷைகள் ஆகும். இதை அனுசரித்து இடவித்தியாசங்களுமாகும். உதாரணமாக பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள் இந்துக்கள் என்பன போன்ற மதப்பிரிவுகள் உலகத்தில் இல்லாமலிருந்தால் மக்கள் சமூகத்தை பெரும்பெரும் பிரிவுகளாகப் பிரித்துக்காட்டவும் ஒரு நாட்டாருடைய சுகதுக்கங்கள் மற்ற நாட்டார்களுக்கு சம்மந்தமில்லாமலிருக்கவுமுள்ளதான நிலை உலகத்தில் இருக்கவே முடியாது எனலாம்....

வருணாசிரம மகாநாடு 0

வருணாசிரம மகாநாடு

சென்ற வாரம் ‘இரண்டு மகாநாடுகள்’ என்னும் தலைப்பின் கீழ் நமது முன்னேற்றத்திற்கு விரோதமான கிளர்ச்சிகளைப் பற்றி எழுதி முதலாவதாக சைவப் பெரியார் மகாநாட்டைப் பற்றி குறிப்பிட்டுவிட்டு இந்த வாரம் வருணாசிரம மகாநாடு, பார்ப்பனர்கள் மகாநாடு ஆகியவைகளைப்பற்றி எழுதுவதாகக் குறிக்கப்பட்டிருந்தோம். அதோடு இந்த வாரம் சென்னையில் திரு.எ.ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் காங்கிரஸ் கக்ஷியைச் சேர்ந்த முக்கியத் தலைவரான திரு.சாமி வெங்கடாசலம் செட்டியார் சீர்திருத்த சம்மந்தமாகவும் சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கள் சம்மந்தமாகவும் தமது அப்பிப்பிராயத்தை ஒரு உபன்யாசம் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார். அதுவும் ஏறக்குறைய பார்ப்பனர்கள் மகாநாடு, வருணாசிரம மகாநாடு, சைவப் பெரியார் மகாநாடுகள் போன்றவைகளின் அபிப்பிராயத் தையே வர்த்தக யுத்தி முறையில் பேசியிருக்கின்றார். அதன் சாரமும் அதற்கு திரு. எ.ராமசாமி முதலியார் அவர்களின் விளக்கமான சமாதானமும் வேறு பக்கத்தில் பிரசுரித்திருக்கின்றோம். திரு.சாமி வெங்கிடாசலமவர்கள் வவ்வாலைப்போல் பார்ப்பனர் களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்ள வேண்டும் என்னும் முறையில் எவ்வளவோ சாமர்த்தியமாகப் பேசியிருந்தாலும்...

இரண்டு வகை மகாநாடுகள் 0

இரண்டு வகை மகாநாடுகள்

சுயமரியாதை இயக்கம் தோன்றியபிறகு நமது நாட்டில் ஒருவிதக் கிளர்ச்சி உண்டாயிருப்பதோடு அவ்வியக்கத்திற்கு சில எதிர்ப்புகள் தோன்றியிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது. இவ்வெதிர்ப்புகளில் காங்கிரசின் பேரால் வயிறு வளர்க்கும் சில கூலிகளுடையவும், வயிற்றுப் பிழைப்புக் காலிகளுடையவும், சமய புராண வியாபாரிகள், வயிற்றுப் பிழைப்புப் பிரசங்கிகள், பண்டிதர்கள் ஆகியவர் களுடையவும், எதிர்ப்புக் கூச்சல்களை லட்சியம் செய்து எவரும் பதில் சொல்ல வேண்டியதில்லையானாலும், வருணாசிரமத்தின் பேரால் பார்ப் பனர்களும், சைவசமயத்தின் பேரால் சில சைவர்கள் என்பவர்களும் வருணாசிரம மகாநாடுகளும், சைவ சமயக் கூட்டங்களும் கூட்டி அதில் செய்யப்பட்டிருக்கும் தீர்மானங்களைப் பற்றிக் கவனித்துத் தீர வேண்டிய வர்களாக இருக்கின்றோம். ஜாதி வித்தியாசம், தீண்டாமை ஆகியவற்றை விலக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சி நமது நாட்டில் ஏற்பட்ட காலம் முதல் பார்ப்பனர்கள் வருணாசிரம மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு கூட்டி, தீண்டாமை இருக்க வேண்டும்; அது கடவுளால் ஏற்பட்டது என்று சொல்லிக் கொண்டுதான் வந்திருக்கின்றார்கள். அதுபோலவே, பால்ய விவாக விலக்குக்கும்,...

மதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு 0

மதுவிலக்கின் பேரால் காங்கிரஸ் புரட்டு

சட்டசபைத் தேர்தல் சமீபிக்கும் போதெல்லாம் காங்கிரஸ் பேய்க்கு திரு.ராஜகோபாலாச்சாரியாரால், திரு.காந்தியின் மூலம் உச்சாடனம் செய்யப் பட்டு, அது கண் கொண்டபடி நமது நாட்டில் தலைவிரித்து ஆடுவது வழக்கம். இதை நாம் கொஞ்சகாலம் கூடவே இருந்து பார்த்தவர்களில் ஒருவராதலால் இந்தப் பேயாட்ட உபத்திரவத்தை எப்படி ஒழிப்பது என்பது நமக்கு அதிக கஷ்டமான வேலையல்ல. இந்தப் பேய் உச்சாடனத்திற்காக 27-3-29 தேதியில் டில்லியில் காங்கிரஸ் காரியக்கமிட்டி என்பது கூடி சில தீர்மானங்கள் செய்திருப்பதாகப் பத்திரிகைகளில் தெரிய வருகிறது. அதாவது, மறுபடியும் முன்போல் (ஒத்துழையாமைக் காலம்) போல கள்ளுக்கடை மறியலும் மரத்தின் பாளைகளை வெட்டுதல் போன்ற காலித்தனத்திற்கு மக்களைத் தூண்டும் படியான தன்மையுடையதான தென்னை மரத்துக்காரர்களை மரம் கள்ளுக்கு விடாமல் செய்யும் பிரசாரமும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் உண்டாக்கும்படியானதாகிய குத்தகைக் காரர்களை ஏலத்தில் கோராமல் இருக்கும்படி செய்யும் பிரசாரமும் செய்வ தற்குத் தீர்மானங்கள் நிறைவேற்றி அவற்றை நடத்துவதற்கும் திரு.ராஜ கோபாலாச்சாரியார் தம்மையே நியமித்து கொண்டும், அதற்காகச்...

“நாஸ்திகத்”திற்கு முதல் வெற்றி 0

“நாஸ்திகத்”திற்கு முதல் வெற்றி

நமது மாகாணச் சுயமரியாதை மகாநாடு செங்கற்பட்டில் நடந்த பிறகு நமது பார்ப்பனர்கள் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைத் திரித்துக் கூறியும், பல கூலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்யச் செய்தும் வருவதோடு அதையே இவ்வருஷத்திய தேர்தல் பிரசாரமாக வைத்துக் கொள்ளலாம் எனவும் கருதி சில காலிகளுக்குப் பணஉதவி செய்து உசுப்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது யாவரும் அறிந்ததாகும். இந்தப்படி காலிகள் மூலம் செய்யப்படும் விஷமப் பிரசாரம் இப்பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்பெறும் என்பதற்குச் சமீபத்தில் ஒரு சரியான பரீiக்ஷ நடத்திப் பார்த்தாகிவிட்டது. அதாவது, சென்னைப் பச்சையப்பன் தர்ம ட்ரஸ்டிகளில் ஒரு பார்ப்பன ட்ரஸ்டியின் ஸ்தானம், அதாவது ‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ ஆகிய பத்திரிகைகளில் பத்திராதிபரான திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் என்கின்ற ஒரு பார்ப்பனரின் ஸ்தானம் காலாவதி ஆனதும் அந்த ஸ்தானத்திற்கு மறுபடியும் திரு.ஏ.ரங்கசாமி அய்யங்கார் போட்டி போட தைரியமில்லாமல் விட்டுவிட்ட தால் மற்றொரு பார்ப்பனராகிய அதாவது காலித்தனத்திலும், திரு.ரங்கசாமி அய்யங்காரை விட பார்ப்பனத் திமிரிலும், சூழ்ச்சியிலும் தலைசிறந்து விளங்கும்...

சென்னையில் சுயமரியாதைத் திருமணம் 0

சென்னையில் சுயமரியாதைத் திருமணம்

நான் மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று விரும்பு கின்றார்கள். ஆசீர்வாதம் செய்யும் வழக்கம் என்ன என்பதைப் பற்றி யோசித் ததில் இப்பொழுது வழக்கத்தில் ஆசீர்வாதம் செய்கின்ற மாதிரியானது, சிறிதும் பொருளற்றது என்பதோடு, நம்மிடம் பிச்சை வாங்கி உண்பவர்கள் தங்கள் வயிறு வளர்ப்பதற்காகச் செய்யும் காரியமாக இருக்கிறபடியால், இம்முறையில் ஆசீர்வாதம் செய்வது என்பது எனக்கு இஷ்டமில்லாத காரியமாகும். ஏனெனில் ஆசீர்வாதம் செய்யும்படி விரும்புகின்றவர்களும் எதிர்பார்க்கின்றவர்களும் இவ்வாசீர்வாதத்தால் உண்மையான பலனை எதிர்பார்க் கின்றார்கள். ஆனால் ஆசீர்வாதம் செய்கின்றவர் ஆசீர்வாதம் செய்யப் படுகின்றவர்களைப் பற்றி ஒரு கவலையுமில்லாமல் ஆசீர்வாதம் செய்வது என்பதை ஒரு பெருமையாக நினைத்து, தமக்கும் மற்றவர் களுக்கும் பொருள் விளங்காத ஏதோ ஒன்றின் மீது பழியைப் போட்டு அது உன்னைக் காப்பாற்றட்டும் இது உங்களைக் காப்பாற்றட்டும் என்று கை காட்டிவிட்டுப் போவதில் யாதொரு பலனும் இல்லை. அதுவும் இதுவும் மணமக்களை காப்பாற்ற ஆசீர்வாதம் செய்பவருடைய தயவு வேண்டிய தில்லை. அப்படிக் காப்பாற்றும் ஒரு வஸ்துவோ,...

பரோடா சமஸ்தானத்தில்  கல்யாண ரத்து மசோதா 0

பரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா

செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களுக்குப் பிறகு உலகமே முழுகிப் போய்விட்டதாக தமிழ்நாட்டில் சில அழுக்கு மூட்டைகள் போடும் கூச்சல்களையும் இதைப் பார்ப்பனர்கள் தங்கள் தேர்தலுக்கு ஒரு ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூலிகளையும் காலிகளையும் விட்டு கூப்பாடு போடச் சொல்வதையும் பொது ஜனங்கள் கவனித்திருக்கலாம். அத் தீர்மானங்களில் மிகவும் ஆபத்து என்று சிலரால் கருதப்பட்ட கல்யாண ஒப்பந்த ரத்து தீர்மானத்தைப் பற்றி வெளிப்படையாய் பேசுவதற்கு தைரிய மில்லாத சில பயங்கொள்ளிகள் இரகசியமாக விஷமப் பிரசாரம் செய்வதும் பலர் அறிந்திருக்கலாம். ஆனால், செங்கல்பட்டு தீர்மானத்தை அமுலுக்கு கொண்டுவர பரோடா அரசாங்கத்தார் முந்திவிட்டார்கள் என்பதாக 29-3-29 -ந் தேதி ‘இந்து’ ‘சுதேசமித்திரன்’ ‘சுயராஜ்யா’ ‘ஜஸ்டிஸ்’ முதலிய பத்திரிகைகளில் காணப்படுகின்றது. அதாவது பரோடா சமஸ்தானத்தில் நடந்த- இனி நடக்கப் போகும் கல்யாணங்கள் எவையாயினும் அவற்றை தம்பதிகள் இஷ்டப்பட்ட போது ரத்து செய்து கொள்ளலாம் என்பதாக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அதை கொண்டுவந்தவர்கள் அம் மசோதாவின் ஒவ்வொரு...

இனியாவது புத்திவருமா? இந்திய சட்டசபையில்  பார்பனர்களின் விஷமம் 0

இனியாவது புத்திவருமா? இந்திய சட்டசபையில் பார்பனர்களின் விஷமம்

‘சுதேசமித்திரன்’ ‘இந்து’ பத்திரிகைகளின் பத்திராதிபரும், தஞ்சாவூர் திருச்சினாப்பள்ளி ஜில்லா மக்களுக்கு இந்திய சட்டசபை பிரதிநிதி மெம்பரும், காங்கிரஸ் காரியதரிசியாயிருந்தவரும் இந்தியாவின் 33 கோடி பொது மக்களுக்கு சுயராஜியம் வாங்கிக் கொடுக்க “உயிர் விட்டுக் கொண்டு” பத்திராதிபராயிருப்பதில் மாதம் 2000 ரூபாய் சம்பாதிப்பவருமான திரு. எ. ரங்கசாமி அய்யங்கார் என்னும் பார்ப்பனர் இந்திய சட்டசபையில் சென்னை மந்திரி திரு.முத்தையா முதலியார் விஷயமாக சில கேள்விகள் கேட்டாராம். அதாவது சென்னை சுகாதார மந்திரி ரிஜிஸ்ட்ரேஷன் இலாகாவில் உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்துவதில் வகுப்பு வாரி உரிமை ஏற்படுத்தியிருப்பது இந்திய அரசாங்கத்திற்கு தெரியுமா? அது சட்ட விரோதமல்லவா? அதனால் அரசாங்கத்தார் மீது மக்களுக்கு பெரிய அதிருப்தி ஏற்பட்டிருப்பது தெரியுமா? அதைப்பற்றி இந்திய அரசாங்கத்தார் விசாரித்து அந்த உத்திரவை ரத்து செய்ய முடியுமா? என்பது பொருளாக பல கேள்விகள் கேட்டாராம், இதற்கு பதில் சொல்லும் சமயத்தில் சென்னை மாகாண பார்ப்பன ரல்லாத ஒரே ஒரு பிரதிநிதி (திரு.ஆர்.கே. ஷண்முகம்) தவிர...

நமது மந்திரிகள் 0

நமது மந்திரிகள்

சென்னை அரசாங்க மந்திரிகளின் பெருமைகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் சுருக்கமாக ஒரு வார்த்தையில் விளங்கவைத்துவிடலாம். அதென்னவென்றால், மந்திரிகள் மூவரும் பொதுஜன நன்மைக்கு விரோதிகளான பார்ப்பனர்களால் வெறுக்கப்பட்டவர்கள். எனவே இவர்கள் பார்ப்பனரல்லார்களுக்கு எப்படிபட்டவர் களாய் இருக்கின்றார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். ஏனெனில், பொது ஜனங்களின் நன்மைக்கு நடுநிலையில் இருந்து பாடுபடுபவர்களோ வேலை செய்கின்றவர்களோ அவர்களுக்கு உதவி செய் கின்றவர்களோ ஆகிய எவரும் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாய் இருக்க முடியவே முடியாது. அதுபோலவே பார்ப்பனர்களால் மதிக்கப்பட்ட- புகழப்பட்ட- எவரும் பொது மக்களுக்கு ‘துரோகம்’ செய்யாதவர்களாக இருக்க முடியவே முடியாது. இது இன்றைய அனுபவமாக மாத்திரம் இல்லாமல் சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் கண்ட முடிவும் இதுவாகவேதான் விளங்குகின்றது. இன்றைய தினம் யார் யார் பார்ப்பனர்களால் வையவும் தூற்றவும் படுகின்றார்களோ அவர்களில் அநேகமாய் எல்லோருமே பொதுஜனங்களின் நன்றியறிதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்களாக இருப்பதை அனுபவத்தில் காண்கின்றோம். அதிகாரிகளில் கூட ஏறக்குறைய யோக்கியப் பொறுப்பும் நாணயப் பொறுப்பும் ஒழுக்கப் பொறுப்பும் இல்லாத...

வட ஆற்காட்டை மற்ற ஜில்லா போர்டுகள் பின்பற்றுமா? 0

வட ஆற்காட்டை மற்ற ஜில்லா போர்டுகள் பின்பற்றுமா?

வடஆற்காடு ஜில்லா போர்டின் 27-3-29 ஆம் தேதி மீட்டிங்கில் ஜில்லா போர்டின் ஆதிக்கத்தில் உள்ள பள்ளிக்கூட உபாத்தியாயர்களில் 100-க்கு 80 உபாத்தியாயர்களைப் பார்ப்பனரல்லாதார்களாகப் பார்த்து நியமிக்க வேண் டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பெற்றிருக்கின்றது. அந்த மீட்டிங்கில் நான்கு பார்ப்பன கனவான் மெம்பர்கள் இருந்து விவாதத்தில் கலந்து எதிர்த்துப் பேசி கடைசியாக தீர்மானத்திற்கு சாதகமாகவே தங்கள் ஓட்டுகளையும் கொடுத்தது பாராட்டத்தக்கதாகும். வடஆற்காடு ஜில்லாபோர்டு பிரசிடெண்டவர்கள் பார்ப்பனர்களுக்கு வேண்டியவர் என்று சிலர் சொல்லுவதுண்டு. இந்தத் தீர்மானத்தில் நாலு பார்ப்பன மெம்பர்களும் தீர்மானத்திற்கு அனுகூலமாய் ஓட்டு செய்திருப் பதாகத் தெரிவதிலிருந்து பிரசிடெண்டு திரு.நாயுடுகாரு அவர்கள் பார்ப்பனர் களுக்கு வேண்டியவராயிருந்ததின் உண்மையை வெளிப்படுத்திவிட்டார் போலும், இதிலிருந்து திரு. நாயுடுகாரு பார்ப்பனர்களுக்கு வேண்டியவரா? பார்ப்பனர்கள் திரு. நாயுடுகாருக்கு வேண்டியவர்களா? என்பதையும் பொது ஜனங்கள் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். நிற்க, வட ஆற்காடு ஜில்லா போர்டை மற்ற ஜில்லா போர்டு பின் பற்றுமா என்று அறிய...

‘மித்திரன்’ புரட்டு நிருபர்களின் அயோக்கியத்தனம் 0

‘மித்திரன்’ புரட்டு நிருபர்களின் அயோக்கியத்தனம்

தஞ்சைக்கு அடுத்த திருவையாற்றில் 28-2-29 தேதியில் நடந்த பனகால் வாசகசாலைத் திறப்பு விழாவின்போது தஞ்சை உயர்திருவாளர். டி.வி. உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திய காலை யில் சுயமரியாதை இயக்கத்தைத் தாக்கிப் பேசியதாகவும் ‘குடி அரசையும்’ ‘திராவிடனை’யும் படித்துப் பிள்ளைகள் கெட்டுபோகக் கூடாது என்று சொன்னதாகவும் இந்த ஊருக்குச் சுயமரியாதை இயக்கத்தார் வந்தால் அவர் களுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்று சொன்னதாகவும், மற்றும் பல விபரீதமான விஷயங்கள் பேசியதாக சுதேசமித்திரன் ‘நிருபர்’ பெயரால் 4-3-29 தேதி ‘மித்திரனில்’ வெளியாயிருந்ததற்கு திரு.உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் மறுத்து தான் பேசாத விஷயங்களையும் நினைக்காத விஷயங்களையும் ‘மித்திரனில்’ எழுதி இருப்பதாகக் குறித்து ‘மித்திரன்’ யோக்கியதையை வெளியிட்டிருப்பதுடன் அன்று தான் பேசிய விஷயம் இன்னது என்பதையும் சென்ற மலரில் வெளியிட்டிருக்கின்றோம். எனவே சுயமரியாதை இயக்க விஷயத்தில் பார்ப்பனப் பத்திரிகை களும் அதன் நிருபர்களும் அவர்களை நத்தித் திரியும் பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் நிருபர்களும் எவ்வளவு இழிவாய் நடந்து கொள்ளு கிறார்கள்...

எதிர்ப்பிரசாரங்கள் 0

எதிர்ப்பிரசாரங்கள்

தமிழ்நாட்டில் பார்ப்பனர்களில் திரு.சத்தியமூர்த்தியும் பார்ப்பனரல்லா தார்களில் திரு.வரதராஜுலுவும் இரண்டிற்கும் நடுவில் அதாவது பண்டிதக் கூட்டத்தில் திரு.கலியாணசுந்தர முதலியாரும் ஆக மூவர்கள் எப்படியாவது ஒரு வழியில் தினம் தங்களை விளம்பரம் செய்து கொண்டும் எப்படியாவது ஒரு வழியில் நாடோறும் சூரிய உதயமும் அஸ்தமனமுமாகி இன்றைய நாள் கழிந்ததா என்கின்றதுமான கவலையே வாழ்க்கையாகக் கொண்டவர்களே யல்லாமல் மற்றபடி ‘நேற்று என்ன சொன்னோம், என்ன எழுதினோம், எப்படி நடந்தோம், இன்று என்ன சொல்லுகின்றோம், எப்படி நடக்கப் போகின்றோம், நாளை நமது கதி என்ன’ என்கின்ற கவலையே அணுவளவும் இல்லாதவர் களாய் அவ்வளவு பெரிய ‘துறவிகள்’ முற்றும் துறந்த ‘ஞானிகள்’ என்று சொல்லத்தக்கவண்ணம் நடந்து வருகின்றார்கள். இம் மூவருக்கும் கொஞ்ச காலமாய் தமிழ்நாட்டில் ஒன்று போலவே நாணயம் குறைந்து வெளியில் தலைநீட்ட யோக்கியதை இல்லாத அளவு செல்வாக்கு ஏறிவிட்டது. இவர் களில் திரு.சத்தியமூர்த்தியோ வெளிப்படையாய் காலித்தனத்தில் இறங்கி விட்டார். இவர் கொஞ்சநாளைக்கு முன் சென்னை கார்ப்பரேஷன் பிரசி...

சீர்காழியில்  சுயமரியாதை முழக்கம் 0

சீர்காழியில் சுயமரியாதை முழக்கம்

சகோதரர்களே! பெரியோர்களே! சில வருஷங்களுக்கு முன் ஒத்துழையாமைக் காங்கிரஸ் பிரசாரத்தின் போது இவ்வூருக்கு வந்திருக்கிறேன். ஆனால், இன்றோ சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி உங்களுக்கு எடுத்துக்கூற வந்திருக்கிறேன். சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் எதிரிகளும் அவர்களது ஆள்களும், தப்பும் தவறுமாகத் திரித்துக் கூறி வருகின்றார்கள். உங்கள் ஊரிலும் அதே காரியம் சற்று அளவுக்கு மீறிச் செய்து விட்டதால் வெகுபேர் ஆச்சரியப்பட்டு பார்க்கலாம் என்றே நான் எதிர்பார்த்ததற்கு மேலாகவே இங்கு கூடியிருக் கின்றீர்கள். இது நமது இயக்க எதிரிகள் தங்களுக்குத் தெரியாமலே நமக்குச் செய்த உதவியாகும். மற்றும் என்றுமே இப்படிப்பட்ட பொதுக் கூட்டங் களுக்கு வராத அரும்பெரும் கனவான்களும் விஜயம் செய்திருப்பதும் எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது. என்னை அன்னிய மதப் பிரசாரகன் என்றும், சர்க்கார் பிரசாரகன் என்றும் எழுதப் பட்டிருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நான் இந்து மதம் என்று சொல்லப்படும் மதத்தைத் துவேஷம் செய்து, அன்னிய மதங்கள் என்று அழைக்கப்படும் மதங்களை...

காங்கிரசும் மதுவிலக்கு பிரசாரமும் 0

காங்கிரசும் மதுவிலக்கு பிரசாரமும்

நமது இலாக்கா மந்திரி கனம் முத்தையா அவர்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய சிறிது பணம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தபோது காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியின் உபதலைவரும் கோவை ஜில்லா பிரதிநிதியும் கள்ளு உற்பத்தி செய்யக் கூடிய சுமார் ஆயிரம் தென்னை மரங்களை உடையவரும் வருஷம் கள்ளில் 5000, 10000 சம்பாதிப்பவரும் அய்யங்கார் பார்ப்பனருமான திரு.சி.வி.வெங்கட்டரமண அய்யங்கார் அவர்கள் எழுந்து சர்க்கார் மது விலக்குப் பிரசாரம் செய்யக் கூடாது என்றும், மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் குடிக்காத மனிதனுக்குக் கூட இவர்கள் ஏன் குடிக்க வேண்டாம் என்று சொல்லுகின்றார்கள் என்று பரீட்சை செய்து பார்ப்பதற்காக குடித்துப் பார்க்க வேண்டுமென்று ஆசை உண்டாக்கிவிடும் என்றும் சொல்லி அதை ஆட்சேபித்தார். (இவர்தான் சென்ற தேர்தலில் திரு.ஊ. ராஜகோபாலாச்சாரியாரால் மதுவிலக்குப் பிரசாரத் தின் பேரால் ஓட்டுவாங்கிக் கொடுக்கப்பட்டு சட்டசபை மெம்பர் ஆவார்.) உடனே கோவை திரு.சி.எஸ்.இரத்தினசபாபதியார் எழுந்து திரு. அய்யங்கார் அவர்கள் சொல்லுகின்ற கொள்கைப்படி...

“ஆஸ்திக சங்கம்” சுயமரியாதைக்கு எதிர்பிரசாரம் 0

“ஆஸ்திக சங்கம்” சுயமரியாதைக்கு எதிர்பிரசாரம்

சமீப காலத்தில் சென்னையில் ஆஸ்திக சங்கம் என்பதாக ஒரு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாய் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது. இதன் தத்துவம் சுயமரியாதை இயக்கத்திற்கு எதிர்பிரசாரம் செய்வது என்பதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இச்சங்கத் தலைவர்களும் சூத்திரதாரர்களும் யார் என்று பார்ப்போமானால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு உபயோகப் படுத்தப்பட்டு வரும் காங்கிரசின் பேரால் வயறு வளர்த்து வந்த நபர்களே யாவார்கள். எனவே பிழைப்புக்கு ஆபத்து வந்த ஒரு கூட்டம் தானாகவே ஒன்று சேர நேர்ந்தது ஒரு அதிசயமல்ல, ஆனாலும் அப்படிச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கைக்கு அனுகூலமாக புத்திசாலித்தனமாய் ஒருவழி கண்டுபிடிக்காமல் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொரிந்து கொள்வது போல சுயமரியாதை இயக்கத்திற்கு எதிர்பிரசாரம் செய்ய ஒரு சங்கம் ஏற்படுத்து வதாகவும் அதற்கு ‘ஆஸ்திக சங்கம்’ என்று பெயர் வைத்துக் கொண் டதாகவும் வெளிப்படுத்திக் கொண்டது ஒன்றே போதுமானது இவர்களது முட்டாள்தனத்தை விளக்குவதற்கு. சுயமரியாதை சங்கத்தில் எந்த பாகத்தை அல்லது எந்த கொள்கையை இவர்கள் எதிர்க்கப் போகின்றார்கள் என்று...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் 0

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தென்னாற்காடு ஜில்லா போர்டு பிரிசிடெண்ட் திருவாளர் ராவ்பகதூர் சீதாராம ரெட்டியார் அவர்கள் மீது அவரது சகோதர அங்கத்தினர்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பெருமித ஓட்டுகளால் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகத் தெரிய வருகின்றது. திரு.ரெட்டியார் பார்ப்பனர்களுக்கு ரொம்பவும் பயந்தவர். ஜஸ்டிஸ் கட்சி கூட்டமோ, சுயமரியாதைப் பிரசாரமோ, பார்ப்பனர் அல்லாதார் கூட்டமோ தனது ஜில்லாவுக்குள் கண்டிப்பாய் வரக்கூடாது என்று வெகு கவலையுடன் தனது ஜில்லாவைப் பாதுகாத்து வந்தவர். கடலூரில் பார்ப்பனர் அல்லாதார் மகாநாடு கூட்டுவதாக பல பார்ப்பனரல்லாத அபிமானிகள் முன்வந்து தேதி முதலானவைகள் குறித்து வேலை தொடங்கியும் அதை திரு. ரெட்டியார் அவர்கள் அங்கு கூட வொட்டாமல் செய்தவர். முயற்சி செய்தவர்களையும், பொறுப்பற்றவர்கள் என்று சொன்னவர். பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமான திரு.சூணாம்பேட்டை கோஷ்டியார்களுக்கும் சுயமரியாதை கொள்கைக்கு துவேஷமான திரு.முத்துரங்க கூட்டத்தாருக்கும் ஆப்த நண்பராகவும் இருந்தவர். மந்திரி கட்சியாருக்கும் வேண்டியவர். ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு வலக் கையாய் இருந்தவர். ஜில்லா கலெக்டர் ஒரு பார்ப்பனர். அவரையும் சுவாதீனப்...

மதுவிலக்கு பிரசாரத்திற்கு   400000 ரூ. 0

மதுவிலக்கு பிரசாரத்திற்கு 400000 ரூ.

நமது மாகாணத்தில் உள்ள சுமார் 4 கோடி பார்ப்பனரல்லாத மக்களும் ஏறக்குறைய ஏகமனதாய் இருந்து பல நாட்களாகக் கிளர்ச்சி செய்து வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை சென்னை அரசாங்க உத்தியோகத்தில் ஒருவாறு அமுலுக்கு கொண்டுவர முயற்சித்து தைரியமாய் வாதாடி வெற்றி பெற்ற நமது சுகாதார மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் மதுபானத்தில் பெரிதும் கஷ்டமும் நஷ்டமும் அடையும் பார்ப்பனரல்லாத ஏழை மக்களின் நன்மையை உத்தேசித்து மது விலக்கு பிரசாரம் செய்வதற்கு என்று இவ்வருஷத்திய வரவு செலவு திட்டத்தில் நான்கு லட்சம் (4,00,000) ரூபாய் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இதைக்கண்ட நமது எதிரிகளான கன்மனப் பார்ப்பனர்கள் மதுபானம் நின்றுவிட்டால் தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமே எனக் கருதி சட்டசபையில் அத்தீர்மானம் நிறைவேறாமல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களான கனவான்கள் இப்பார்ப்பனர் களின் சூட்சிக்கும் விஷமத்திற்கும் பயந்து ஏமாந்து போகாமல் தைரியமாய் உறத்து நின்று பிரசாரத் துகையை அனுமதித்து நிறைவேற்றி...

தேர்தல் தந்திரம்  அன்னிய ஆடை பகிஷ்காரப் புரட்டு 0

தேர்தல் தந்திரம் அன்னிய ஆடை பகிஷ்காரப் புரட்டு

சூக்ஷிகளிலும் வஞ்சகத்திலும் சிறந்த ஒரு கூட்டத்தார் சமுதாய வாழ்க்கையில் தங்களது சுயநலத்திற்கென்று எப்படி மதம், சமயம், வேதம், சாஸ்திரம், கோவில், பல சாமிகள், அவைகளுக்குப் புராணங்கள், குளங்கள், தீர்த்தங்கள், சடங்குகள், பூசைகள், உற்சவங்கள், பிராயச்சித்தங்கள், மோக்ஷம் நரகம், மேல் ஜாதி, கீழ் ஜாதி முதலியவைகளைக் கற்பித்து, தங்களையும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக் கொண்டு இவைகளுக்கு சமயத்திற்குத் தகுந்தபடி வியாக்கியானம் (அர்த்தம்) சொல்லிப் பாமர மக்களை ஏமாற்றி அவர்களைப் படிக்கவிடாமலும் செய்ததோடு, மற்றவர்கள் உழைப்பில் தாங்கள் நோகாமல் பிழைக்கவும் வழி செய்து கொண்டது போலவே நமது நாட்டில் படித்தவர்கள் என்கின்ற ஒரு கூட்டத்தார் சிறிது காலமாய் அதாவது 40,50 வருஷ காலமாய் தங்கள் சுயநலத்திற்கென்று அரசியலிலும் தேசியக் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசீயம் என்பதாகப் பல பெயர்களை உற்பத்தி செய்து அதன் மூலமாகவும் அரசாங்கத்தில் உத்தியோகங்களும் அதிகாரங்களும் பெற எண்ணம் கொண்டு பாமர மக்களைக் கூட்டி, ஏமாற்றி, பல தீர்மானங்கள் செய்து, ஒன்றுக்கு...

பஹிஷ்காரத்தின் இரகசியமும் “தலைவர்களின்” யோக்கியதையும் 0

பஹிஷ்காரத்தின் இரகசியமும் “தலைவர்களின்” யோக்கியதையும்

சென்ற வருஷம் சென்னையில் சைமன் கமிஷன் வந்திறங்கிய போது சில பார்ப்பனர்களின் பகிஷ்காரப் புரட்டு வெளியாய் விட்டதின் பலனாய் சென்னையில் சும்மாயிருந்த பார்ப்பனர்களுக்கு எல்லாம் அடிவிழும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டதாலும், அதனால் சில பார்ப்பனர்கள் ஊரைவிட்டே ஓடவேண்டியதாய் ஏற்பட்டு விட்டதாலும், சென்னைப் பார்ப்பனர்களில் பலர் பார்ப்பன சமூகத்தின் பேரால் தாங்கள் சைமன் கமிஷனை வரவேற்கின்றோம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டதோடு, சில அரசியல் பார்ப்பனத் தலைவர்களான திருவாளர்கள் எஸ்.சீனிவா சய்யங்கார் முதலியவர்களிடமும் சண்டைக்குப் போய் விட்டார்கள். அதாவது “பஹிஷ்காரம் என்று வாயில் சொல்லிவிட்டு நீங்கள் டெல்லிக்குப் போய் பங்களா நிழலில் உட்கார்ந்து கொள்ளுகின்றீர்கள்! நாங்கள் அடிபட வேண்டியிருக்கின்றது” என்றும் “இந்தப் பட்டணத்திலேயே இருந்து பஹிஷ்காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுகின்றீர்களா? அல்லது நாங்கள் ஊரைவிட்டுப் போய்விடுவதா” என்று கோபத்துடன் கேட்டார்கள். அதற்கு ஆகவே, திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் நாங்கள் கடை அடைக்கப் போவதில்லை என்றும் கூட்டம் போடுவதில்லை என்றும் சர்க்கார் உத்திரவில்லாமல்...

திரு. ராஜகோபாலாச்சாரியாரின்  பஞ்ச நிவாரணப்புரட்டு 0

திரு. ராஜகோபாலாச்சாரியாரின் பஞ்ச நிவாரணப்புரட்டு

சேலம் ஜில்லா திருச்சங்கோட்டிற்க்கு பக்கத்தில் புதுப்பாளையம் என்கின்ற கிராமத்தில் திரு.ராஜகோபாலாச்சாரியார் கதரின் பெயரால் ஒரு ஆசிரமம் வைத்துக் கொண்டு மதுவிலக்கு பிரசாரம் செய்வதாகவும், பஞ்ச நிவாரண வேலை செய்வதாகவும் அங்குள்ள ஏழை மக்களுக்கு கூலி கொடுப்பதாகவும் தானியம் கொடுப்பதாகவும் அடிக்கடி பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும் திரு.காந்தியைவிட்டு தன்னை விளம்பரம் செய்யச் செய்தும் இதன் பலனாய் திரு.காந்தி சிபார்சின் மீது வெளி இடங்களி லேயிருந்து பணம் வரும்படியாகச் செய்து கொண்டும் சூழ்ச்சிகள் செய்து பெரிய ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார். இந்த சூழ்ச்சியும் ஆர்ப்பாட்டமும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் சேலம் ஜில்லா மக்கள் பூராவையுமே ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுக்கள் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் வைத்தே செய்து வருகின்றார்கள். இவர் சென்ற தேர்தலின்போதும் இதே மாதிரி மதுவிலக்கின் பெயரால் செய்த பிரசாரங்களும் அவற்றின் மூலம் திரு.சி.வி.வெங்கிட்டரமணய்யங்கார் போன்ற பல பார்ப்பனர்களுக்கு வாங்கிக் கொடுத்த ஓட்டுகளும் மற்றும் திரு.காந்தியைவிட்டு திரு. ராஜகோபாலாச்சாரியார் சொல்லுகின்ற நபர்...