வட ஆற்காட்டை மற்ற ஜில்லா போர்டுகள் பின்பற்றுமா?

வடஆற்காடு ஜில்லா போர்டின் 27-3-29 ஆம் தேதி மீட்டிங்கில் ஜில்லா போர்டின் ஆதிக்கத்தில் உள்ள பள்ளிக்கூட உபாத்தியாயர்களில் 100-க்கு 80 உபாத்தியாயர்களைப் பார்ப்பனரல்லாதார்களாகப் பார்த்து நியமிக்க வேண் டும் என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பெற்றிருக்கின்றது. அந்த மீட்டிங்கில் நான்கு பார்ப்பன கனவான் மெம்பர்கள் இருந்து விவாதத்தில் கலந்து எதிர்த்துப் பேசி கடைசியாக தீர்மானத்திற்கு சாதகமாகவே தங்கள் ஓட்டுகளையும் கொடுத்தது பாராட்டத்தக்கதாகும்.

வடஆற்காடு ஜில்லாபோர்டு பிரசிடெண்டவர்கள் பார்ப்பனர்களுக்கு வேண்டியவர் என்று சிலர் சொல்லுவதுண்டு. இந்தத் தீர்மானத்தில் நாலு பார்ப்பன மெம்பர்களும் தீர்மானத்திற்கு அனுகூலமாய் ஓட்டு செய்திருப் பதாகத் தெரிவதிலிருந்து பிரசிடெண்டு திரு.நாயுடுகாரு அவர்கள் பார்ப்பனர் களுக்கு வேண்டியவராயிருந்ததின் உண்மையை வெளிப்படுத்திவிட்டார் போலும், இதிலிருந்து திரு. நாயுடுகாரு பார்ப்பனர்களுக்கு வேண்டியவரா? பார்ப்பனர்கள் திரு. நாயுடுகாருக்கு வேண்டியவர்களா? என்பதையும் பொது ஜனங்கள் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.

நிற்க, வட ஆற்காடு ஜில்லா போர்டை மற்ற ஜில்லா போர்டு பின் பற்றுமா என்று அறிய ஆசையுடையவர்களாயிருக்கின்றோம்.

குடி அரசு – வேண்டுகோள் – 31.03.1929

You may also like...

Leave a Reply