சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாடு
சகோதரி சகோதரர்களே!
இந்த மகாநாட்டுக்கு திரு.குருசாமி அவர் களைத் தலைமை வகிக்க ஆதரிப்பதில் நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன். இப்பேர்ப்பட்ட தொண்டர் மகாநாட்டிற்கு அதுவும் முதன் முதலாகக் கூட்டப் பட்ட மகாநாட்டிற்கு திரு.குருசாமியாரை வரnவுற்புக் கமிட்டியார் தெரிந் தெடுத்ததற்கு நாம் அவர் களைப் பாராட்ட வேண்டும். ஏனெனில், நமது இயக்கத்தின் தத்துவங்களைப் பற்றி மிகத் தெளிவாக உணர்ந்தவர்களும் சிறிதும் சந்தேகம் இல்லாதவர் களுமாக உள்ளவர்களென்று நான் கருதிக் கொண்டிருக்கின்ற சிலர்களில் அதாவது நமது சங்கத் தலைவர் திரு.சௌந்திர பாண்டியனார், சொ. முரு கப்பர், எஸ். குருசாமி ஆகிய முக்கியமானவர்களில் ஒருவராவார். ஆகவே, அப்படிப்பட்டவரும் அதோடுகூடவே, செய்கையிலும் ஒவ்வொரு துறையிலும் அக்கொள்கையையே பின்பற்றுகிற வருமாவார். நமது இயக்கத்துக்காக நடைபெறும் ஆங்கிலப் பத்திரிகையாகிய “ரிவோல்ட்”க்கு பெயரளவில் நான் பத்திராதிபனே ஒழிய காரியத்தில் அவரேதான் சகல நடவடிக்கைகளையும் நடத்துகிறவர். அவரது எழுத்துக்களும், கருத்துக் களும் தமிழ்நாடு மாத்திரமல்லாமல் வெளிமாகாணங்களிலெல்லாம் சுயமரியாதை மகாநாடு நடத்தும்படி செய்துவிட்டது. இந்த மாதத்திலேயே கேரள மாகாணத்தில் கோட்டயத்திலும், பம்பாய் மாகாணத் தில் நாசிக்கிலும், பஞ்சாப் மாகாணத்தில் லாகூரிலும் நடைபெறச் செய்திருக் கிறது. இந்தியா மாத்திரமல்லாமல் மேல் நாடுகளிலும், அமெரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களிலிருந்து பாராட்டுக் கடிதங்களும் சந்தாதாரர்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதைத் தவிர, திரு.குருசாமிக்கு நல்ல கல்வியும் அறிவும் இருப்பதின் நிமித்தம் அவருடைய வகுப்பில் பெரிய பிரபுக்களும் பதினாயிரக்கணக்கான பணத்துடன் பெண்கள் கொடுப்பதற்கு வலிய வந்தும் அவைகளையெல்லாம் லட்சியம் செய்யாமல் கலப்பு மணமே செய்து கொள்ளுவதென்றும், அதிலும் விதவையாயிருத்தலே மேலென்றும் தீர்மானித்துக் கொண்டிருப்பவர். எனவே இப்பேர்ப்பட்ட, அதாவது, எண்ணத்தில், எழுத்தில், பேச்சில், செய்கையில் எல்லாவற்றிலும் ஒரே மாதிரி யான கொள்கையுள்ள ஒரு பெரியார் நமக்குக் கிடைத்தது நமது இயக்கத்தின் முற்போக்கிற்கு ஒரு நல்ல அறிகுறியும் தொண்டர்களுக்கு வழிகாட்டியும் ஆகும்.
குறிப்பு : பட்டுக்கோட்டையில் 24.05.1929 இல் சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாட்டுத் தலைவரை வழிமொழிந்து ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு – சொற்பொழிவு – 02.06.1929