13-வது நாடார் மகாநாடு கொடியேற்றுவிழாச் சொற்பொழிவு

“இந்தக் கொடியில் குறிக்கப்பட்டிருக்கும் பெரியோர்களினாலேதான் நீங்கள் முன்னுக்கு வந்தீர்கள். மகாநாட்டில் சுயமரியாதை அடையக் கூடிய பல தீர்மானங்களை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். நாடார் சமூகத் திற்குத் தனி மகாநாடு எதற்கு என்ற சந்தேகம் கிளம்பலாம், இருந்தாலும் நாம் இதற்குப் பயப்படாமல் நமது மகாநாடுகளை நடத்த வேண்டும். இம் மாதிரி மகாநாடுகளில் நாமும் கலந்து கொண்டு அவர்களுக்குள் உள்ள கெடுதிகளை களைந்தெறிந்து சுத்தப்படுத்தி தேசத்தாருடன் சேர்க்க வேண்டுமென்பது எங்கள் கொள்கை. மகாநாடு வெற்றியுடன் நடைபெற வேண்டுமென்று நம்பி இக்கொடியினை உயர்த்துகின்றேன்.”

குறிப்பு: 29.04.1929 ஆம் நாள் பிறையாற்றில் நடைபெற்ற 13-ஆவது நாடார் மாநாட்டில் மாநாட்டுக் கொடியை ஏற்றிவைத்து ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு – சொற்பொழிவு – 05.05.1929

You may also like...

Leave a Reply