அருஞ்சொல் பொருள்
அதிக்கிரம – நெறி தவறிய, வரம்பு மீறிய
அவிபக்தம் – பிரியாதது ( கூட்டுக்குடும்பம் )
அனந்தம் – அளவற்றது, எல்லையற்றது
அனுஷ்டானம் – நடைமுறை, ஒழுக்கம், வழக்கம்
ஆப்புக்கடாவின – ஆப்பு வைத்தல், ஆப்பு அடித்தல்
இஷ்ட சித்தி – விரும்பியது கைகூடல், எண்ணிய வண்ணம் நடைபெறல்
ஓதா ( ஹோதா ) – அமைவு, இருப்பு, நிலைமை
குமரி இருட்டு – கன்னி இருட்டு, விடியற்கு முன் உள்ள இருள்
கெம்பு – சிவப்பு இரத்தினக்கல்
சங்காத்தம் – தோழமை, இணக்கம்
சிட்சை – தண்டனை
சிஷ்ட பரிபாலனம் – நல்லோரைக் காத்தல்
சீதோஷ்ண ஸ்திதி – தட்பவெப்ப நிலை
சுவாதந்திரியம் – சுதந்திரம், தன்விருப்பம்,
விடுதலை, விடுபாடு
தங்கடங்கள் – தங்கள் தங்கள்
தர்க்காஸ்து – தரிசு
தாரதம்மியம் – ஏற்றத் தாழ்வு
தர்ப்பீத் – பயிற்சி
துராக்கிருதம் – வல்லாந்த கற்பழிப்பு, பலாத்கார கற்பழிப்பு
துவஜ ஸ்தம்பம் – கொடி மரம்
துரந்தரர் – பொறுப்பாளி, தாளாளர்
துஷ்ட நிக்கிரகம் – தீயோரை அழித்தல்
தேசவர்த்தமானம் – நாட்டு நடப்பு
நிர்பயமாய் – பயமில்லாமல்
நிஷ்டூரம் – கொடுமை, வெறுப்பு
பட்டாபிஷேகம் – முடிசூட்டுதல்
பரியந்தம் – எல்லை
பிரவிடை – பூப்படைதல்
பிரஸ்தாபித்தல் – சொல்லுதல், தெரியப்படுத்துதல்
போஷகர் – புரவலர், காப்பாளர்
விருத்தாப்பியம் – முதுமைக்காலம்
விபக்தம் – மிகுந்தது ( தனிக்குடும்பம் )
ஜதை – இணை, ஜோடி
ஹானி – ஊறு, கேடு
ஸ்தம்பம் – தூண்