சோமசுந்திரம் செட்டியார்

கோயமுத்தூர் காளிஸ்வர மில்லை ஏற்படுத்தினவரும், மற்றும் பல பெரிய மில்லுகளையும் நிர்வாகம் செய்து வந்தவருமான திருவாளர் தேவ கோட்டை திவான் பகதூர் பி.சோமசுந்திரம் செட்டியார் அவர்கள் திடீரென்று மரண மடைந்ததைக் கேட்டு நாம் மிகுதியும் துயர் உறுகின்றோம். திரு.சோம சுந்தரம் அவர்கள் தென் இந்தியாவில் ஒரு ஒப்பற்ற மனிதராவார். அவருக் குள்ள நிருவாக சக்தி வேறு ஒருவரிடமும் காணமுடியாது. மேல்நாட்டு நிருவாக நிபுணர்களை விட சிறந்தவர் என்றே சொல்லலாம். ஒரு இந்தியர் எவ்வளவு பெரிய தொழில் வேண்டுமானாலும் செய்ய சக்தி உள்ளவர் என்பதை தென்னிந் தியாவுக்கு அவரே வெளிப்படுத்தினார். ஆகவே, அவரது பிரிவால் தென் இந்தியா ஒரு பெரிய வியாபார நிர்வாக நிபுணரை இழந்ததென்றே சொல்ல வேண்டும். அவரது குமாரரான திரு.சாத்தப்ப செட்டியாருக்கு நமது ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குடி அரசு – இரங்கல் செய்தி – 08.12.1929

You may also like...

Leave a Reply