மலையாளச் சம்பிரதாயம் – சித்திரபுத்திரன்
“கேரளம் வானர வாசாரம்” என்றவோர் இழிச்சொல் இந்நாட்டின் வழக்கத்திலுண்டு. இக்கேரளத்தை நேரில் கண்டு பழகும் பாக்கியம் எனக்குச் சென்றவாண்டில் கிடைத்தது. ஆங்கு நான் கண்டும் கேட்டவைகளில் சில வற்றைக் கீழே குறிப்பிடுகிறேன். வவவ நீர் நில வளப்பமுள்ள நாடுகளில் மலையாளம் முதன்மையானது. தென்னை, கமுகு, மா, பலா, முந்திரி, வாழை முதலியனவும் மரவள்ளிக் கிழங்கும், நெல்லும் ஏராளமாயுண்டு. வருடத்தில் 6 மாதம் நல்ல மழை பெய் கிறது. இயற்கை தேவியின் வனப்பை அந்நாட்டில் தான் கண்டுகளிக்க வேண்டும். ஆண்களும், பெண்களும் அதி சௌந்திரியமுள்ளவர்கள். நகரங் களிலும் கிராமங்களிலும் வீடுகள் விட்டு விட்டு விசாலமாகவே இருக்கின்றன. வவவ மலையாளிகள் மிகச் சிக்கனமுள்ளவர்கள். ஆடம்பர வாழ்க்கை அவர்களிடமில்லை. ஆடவருக்கும், பெண்களுக்கும் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே ஆடையாகும். பெண்கள் தங்கள் மார்பை மூடுவதை நாகரிகமென்று கருதுவதில்லை. அவர்கள் உணவும் மிகச் சிக்கனமானதே. தமிழரைப்போல் பற்பல சாம்பார் தினுசுகளும், வெகு பல பொறியல்களும் அவர்களுக்குத்...